Tuesday, July 12, 2016

முல்லைப் பெரியாறு - Mullai Periyar

கடந்த 7.7.2016 அன்று முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை சோதிக்க மத்திய அணைப் பாதுகாப்பு முதன்மை பொறியாளர் பி.ஆர்.கே. பிள்ளை தலைமையில் குழு முல்லைப் பெரியாறு அணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற பரிந்துரையின்படி மூவர் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் தலைவர் நாதன் ஓய்வு பெற்றதால், பி.ஆர்.கே. பிள்ளை அந்த குழுவின் தலைவராக பொறுப்புக்கு வந்தார். எட்டு மாதங்களுக்குப் பின் தென்மேற்கு பருவ மழையால் நீர் வரத்து அணைக்கு அதிகமாக வருவதால் திரும்பவும் அணையின் பலத்தை ஆய்வு செய்ய இந்தக் குழு வந்திருந்தது. கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள், தமிழக அதிகாரிகள், தமிழகப் பொதுப்பணித் துறையின் படகில் சென்று ஆய்வு நடத்தினர். "அனைத்துவிதமான ஆய்வுகள் மற்றும் சோதனைக்குப் பின் முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ளது. இதனால் கேரளாவுக்கு எந்தவிதமான சேதாரமும் ஏற்படாது. அணையை ஒட்டியுள்ள 13 சட்டங்களும் சரியாக பராமரிக்கப்படுகின்றன. இது குறித்து மாதம் ஒரு முறை ஆய்வும் நடத்தப்படுகிறது" என்று ஆய்வுக்குப் பின் உறுதிபட திரு. பிள்ளை அவர்கள் குறிப்பிட்டது தமிழகத்துக்கு ஆறுதலான செய்தி.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...