Monday, June 27, 2022

#எட்டயபுரம் #எட்டப்பர்_சம்பிரதாயம்

#எட்டயபுரம் #எட்டப்பர்_சம்பிரதாயம்
——————————————————-
நேற்று, எங்கள் வட்டாரம், மா கவி பாரதியின் எட்டயபுரத்திற்கு சென்ற பொழுது; எட்டையபுரத்தில் எட்டப்பருடைய மாளிகை புதுப்பிக்கப்பட்டுள்ளது. பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்ததது.
நானும் கடந்த 50 ஆண்டுகளாக மேலாக அங்கே சென்று வந்துள்ளேன். அந்த மாளிகையின் மஞ்ச கலர் மங்கி கருப்பு அழுக்குகளும், முறையான பராமரிப்பு இல்லாமலும் மாளிகை இது வரை இருந்தது. 

ஆனால், இப்போது புதிய ஒருவர் பட்டத்துக்கு வந்திருப்பதால் அந்த மாளிகையை புதுப்பித்து முறையான பராமரிப்பில் வைத்துள்ளனர். எட்டையபுரம் சமஸ்தானம் ஸ்ரீமான் தங்கச்சாமி ராஜா மறைவையடுத்து 42வது புதிய மகாராஜாவிற்கு பட்டம் சூட்டப்பட்டது. எட்டையபுரம் சமஸ்தானம் 42வதுபட்டத்து மகாராஜாவாக மோகன்ராம் ராஜா அவர்களின் குமாரர் ஸ்ரீராஜாதிராஜா ஜெகவீரமுத்து தங்ககுமார ராமவெங்கடேஷ்வர எட்டப்பநாயக்கர் அவர்களின் திருநாமத்துடன்  பட்டம் ஏற்றார். 




சுமார் 400 ஆண்டுகளுக்குமுன்னர் கட்டப்பட்ட கலைநயமிக்க அரண்மனையை சீர் செய்துள்ளனர். அங்கு பழங்காலத்து வில்வண்டி ,  தேக்குமரத்திலான அழகிய அந்த கால நாற்காலி, இளவட்டக்கல், ஊஞ்சல்,சப்பரம் போன்ற எங்கும் காணக் கிடைக்காத அரிதான பொருட்கள் அங்குள்ளது. 




எட்டையபுரத்தை சுற்றியுள்ள 23 கிராம சில்லவார் சமுதாய இளைஞர்கள் சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி
களான தேவராட்டம் என…..… 
இது அங்குள்ள நடை முறை சம்பிரதாயம். எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். 

இருப்பினும்,அது எங்கள் கரிசல்காட்டு அடையாளம். இப்போதாவது அந்த மாளிகைக்கு விடிவு காலம் வந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

#எட்டப்பர்_சம்பிரதாயம் #எட்டயபுரம்
#Ettayapuram #Ettappar

#ksrpost
27-6-2022.

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...