Monday, November 4, 2024

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo. 

A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; used by Europeans as their main residence. British visitors of the 17th century  recognised it as a 'garden cottage' with one difference, a bungalow was quite spacious and comfortable.  

 Prosperous Indians lived in houses that were variously identified as ath-chala, chau-chala and Bangalā. These classifications were common in Bengal. Ath chala referred to an eight roofed house, chau chala was a four roofed house and Bangala, was a common hut. Eight roofs meant a roof with eight distinct sides. Similarly four roofed meant a roof with four distinct sides. A Bangala was with a sloping roof on two sides and two gable end. Residential structures of this sort were found all over India, used by prosperous commoners. In north India, especially in the region of Bihar and Awadh, in the 1600s, the Bangalā was known as being of design common in the province of Bengal. Early European traders of the 17th century were often noted to have constructed Bangalās for themselves near their factories and trading stations. 










  By the 18th century, most European traders came to reside in Bungalows. By 1781, descriptions from travelling Europeans tells us that Bungalows were buildings typical of India. Generally these were raised on a base of brick, one to three feet from the ground. They were mostly of a single story, with a large room in the centre to be used as a dining room and a sitting room, with rooms at each corner for sleeping. The most interesting feature of a bungalow was that it had a sloped roof, made of thatch; unlike other houses that had pucca roofs. Ample space was left  between the end of the slope and the wall of the room. This space was called a 'virandah',  'barāmdā', verandah. 

In Tamilnadu such a residence had multiple layers of roof, each serving the purpose of ensuring better circulation of air inside the house (see pic.). Also, it would typically have a largish open space inside, around which the rooms would be constructed. The kitchen would be a little away from the main house. Ditto the outhouses. A little further off would be quarters for the servants. punkah pullars were there.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
4-11-2024.
Photos/ Now travelers buglow, #Kovilpatti…
Where my father studied high school final form (ie SSLC)in 1924- 100years back


Friday, November 1, 2024

#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் (பெற்ற -பிறந்த நாள்)உதயமான நாள் வேறு. பெயர் மாற்றம் நாள் வேறு…. #காமராஜர், #எம்ஜிஆர், #கலைஞர், #நெடுமாறன், #வைகோவைத்து2006இல்நான்எடுத்தவிழா.இங்கு புரிதல் இல்லை என்ன சொல்ல⁉️

#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, 
#சென்னை ராஜதானி, 
#பின்சென்னை மாகாணம்
என்றும்;  #இன்றைய தமிழ்நாடு 68*

தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1
தமிழ்நாடு நாள்  (பெற்ற -பிறந்த நாள்)உதயமான நாள் வேறு. பெயர் மாற்றம் நாள் வேறு…. #காமராஜர், #எம்ஜிஆர், #கலைஞர், #நெடுமாறன், #வைகோவைத்து2006இல்நான்எடுத்தவிழா.இங்கு புரிதல் இல்லை என்ன சொல்ல⁉️





















——————————————————-
இன்றைய தமிழ்நாடு அமைந்து நவம்பர் 1ம் தேதி (இன்று) 68 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இது நமக்கு மகிழ்ச்சியா? துக்கமா? என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளைப் பெற்றுள்ளோம். இதனால் நமக்கு நதிநீர் மற்றும் வன வளங்களின் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
சென்னை இராஜதானி என்று அழைக்கப்பட்ட ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்ததை 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக சென்னை மாகாணம் என்று பிரிந்த பின்பு அறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது. தமிழர்க்கு சொந்தமான பல பகுதிகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. இந்த ஆண்டு கடந்த காலத்தில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்திற்கு பொன்விழா ஆண்டு ஆகும். கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தோன்றிய நாளை யொட்டி ஆண்டுதோறும் அந்த மாநில அரசுகள் விழாக்கள் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழகத் தில் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை.

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்’
என்று தொல்காப்பியம் தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து கூறுகிறது. ஆங்கிலேயரின் தவறான நிர்வாகத்தால் ஒவ்வொரு தேசிய இனம் மற்றும் மொழிவாரியாக மாநிலங்கள் அமையா மல் இருந்த நிலை ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் வங்கத்தை சூழ்ச்சியால் இரண்டாகப் பிரித்தனர். அன்றைக்கு காங்கிரஸ் கடுமையாக இச்சூழ்நிலையை எதிர்த்தது. இந்நிலையில், அய்க்கிய தமிழகம், விசாலா ஆந்திரம், நவக் கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா குஜராத் என மொழிவாரியான மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி 1952இல் அக்டோபர் 13ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம் டிசம்பர் 15இல் அவருடைய மரணத்தில் முடிந்தது. இப்போராட்டம் ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பி, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதன் விளைவாக கர்நூலை தலைமையகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. இருப்பினும் ஆந்திரர்கள் தமிழகத்திற்குச் சொந்தமான வேங்கடமலையையும் தன் வசப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் மெட்ராஸ் மனதே என்ற கோஷம் வைத்து அர்த்தமற்ற முறையில் போராடினார்கள்.
சென்னை மாகாணம், தமிழகம் உருவாகியதற்கு பலரின் தியாகங்கள் அளப்பரியவை.

தமிழகத்தின் வட எல்லையன திருத்தணியும், திருப்பதியும் தமிழகத்திற்குப் பெற சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் போராட்டங்கள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன. வடக்கு எல்லைப் போராட்டத் தில் ம.பொ.சி. அவர்கள், கொ.மோ.ஜனார்த்தனம், சோமா. சுவாமிநாதன், ஆ.தாமோதரன், கிருஷ்ண மூர்த்தி, அ.லூயிஸ், மு.வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் ஆகியோருடன் திருப்பதி மீது படையெடுப்பு என்ற போராட்டத்தையும் பிரச்சார பணியையும் மேற்கொண்டார். மங்களம் கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று வடஎல்லைப் பகுதிக்கு புகைவண்டி மூலமாக திருப்பதி வரை செல்ல பயணப்பட்டார்.
ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தும் கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரை கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்பொழுது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். அதைப் பொருட்படுத்தாமல் வேங்கடத்தை விட மாட்டோம் என்று ஒருமணி நேரம் கர்ஜித்தார். ம.பொ.சி. நடத்திய மொழிவாரி மாநிலப் பிரச்சினை வேகமடைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. ஆனால், திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திகுப்பம் போன்ற பகுதிகள் நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.

09.04.1953இல் 24.4.1953 வரை கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் தொடர்ந்து 15 நாள்கள் (மறியல், போராட்டம்) நடைபெற்றது. புத்தூர் கலவரத் தில் ம.பொ.சி.யை தாக்க சதிகளும் தீட்டப் பட்டன. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றிய தாகவும் இவரை நெல்லை தமிழன் என்று ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப் பட்டு உள்ளது. 1953ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி எல்லை தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப் பட்டு 6 மாத சிறைத்தண்டனை ம.பொ.சி. பெற்றார்.
திருத்தணி எல்லைப் போராட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தமிழக – ஆந்திர முதல்வர்கள் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசி வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. 

ஒரு காலத்தில் வடஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகிய வற்றை ஆந்திரர் எடுத்துக் கொண்டனர். இப்பிரச்சினை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசியதன் விளைவாக தமிழக ஆந்திர சட்டமன்றங்களில் ஒரே நாளில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ம.பொ.சி. அவர்கள் திருத்தணி எல்லைப் போராட்டம் மட்டுமல்லாமல் நாஞ்சில் நாடான கன்னியா குமரி மாவட்டத்தையும், செங்கோட்டை, கூடலூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் என்ற போராட்டங்களுக்கும் துணை நின்றார்.
கன்னியாகுமரி, செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ்.மணி ஆவார். சாம் நதானியெல், நேசமணி போன்ற போர்குணம் கொண்டோரின் தலைமை யில் இக்கோரிக்கை பிறப்பெடுத்தது. பி.எஸ்.மணி – அழைப்பு இருந்தாலும், அழைப்பு இல்லை என்றாலும் தமிழகத்தில் நடக்கும் அனைத்து மாநாட்டுக்கும் சென்று குமரியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானங்களை முன்மொழிய வேண்டிக் கொள்வது அவரது சலியாத நடவடிக்கை ஆகும். பலர் மணியினுடைய கோரிக்கையை காதில் போடாமல் அவரை தவிர்த்த பொழுதும் கூட சற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து போராடினார். மணிக்கு ம.பொ.சி. அவர்களு டைய ஆதரவு கிடைக்கப்பெற்றது. 1954இல் ஜூனில் நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். அச் சமயத்தில் திருவிதாங்கூரில் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.

1948ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் ஏற்பட்ட எல்லை சிக்கலில் சிரோதி பகுதியை குஜராத்துக்கு அன்றைய துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மாற்றம் செய்ததை தினமணி கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அந்தக் கார்ட்டூனை 1000 தாள்களில் அச்சிட்டு ஏன் திருவிதாங்கூரை தமிழகத்தில் சேர்க்கக் கூடாது என்று நியாயம் கேட்டார் மணி.
1950இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து கொச்சி முதல்-அமைச்சரும் அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக் கொள்ளாமல் கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும் எந்த சமசர திட்டத்திற்கும் தயார் இல்லை எனத் தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்ட தளபதிகள் இப்பிரச்சினையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்கள் முன்னால் மறியல், பொதுக் கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீசாரால் சுடப்பட்டு மாண்டனர்.
நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும் குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீசாரின் குண்டர் தடியால் அடித்து உதைக்கப்பட்டனர். அச்சமயம் தலைமறைவாக இருந்த போராட்டத்தை நடத்தி வந்த மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் வைத்தனர். இதுபோன்று செங்கோட்டையிலும் போராட்டங்கள் நடத்தி கரையாளர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்டார்.
இறுதியாக காமராஜரும் திருவிதாங்கூர் – கொச்சி உள்ளடக்கிய கேரள முதல்-அமைச்சர் மனம்பள்ளி கோவிந்தமேனன் ஆகியோர் பேசியபின் தேவிக்குளம் – பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக்கொண்டது. தேவிகுளம் – பீர்மேடு கேரளத்திற்கு சென்றதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. கன்னியாகுமரி – செங்கோட்டை தமிழகத்தில் இணைந்தது. இருப்பினும் கேரளம் பெரியாறு அணையை கையகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இருந்தபொழுது காமராஜர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மாநில புனரமைப்புக் குழு பசலிக் கமிஷன் உறுப்பினராக இருந்த பணிக்கரால் தேவிகுளம் – பீர்மேடு தமிழகத்தை விட்டுப் போய்விட்டது என்ற குற்றச்சாட்டும் அப்பொழுது எழுந்தது.

நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு விழாவில் 1956 நவம்பர் 1ஆம் தேதி காமராசர் கலந்து கொண்டார். அதே நாளில் செங்கோட்டை இணைப்பு விழாவிற்கு செங்கோட்டையில் சி.சுப்பிரமணியன் பங்கேற்றார். நாகர்கோவிலில் நடந்த விழாவிற்கு தியாகி பி.எஸ்.மணி அவர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மணி இரண்டு நாள் கழித்து நாகர்கோவிலில் ம.பொ.சி., என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்டு குமரி மாவட்டம் இணைப்பு விழாவை சிறப்பாக நடத்தினார்.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பொது உடைமைக் கட்சியைச் சார்ந்த ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தியாகி சங்கரலிங்கனார் 77 நாள்கள் உண்ணாநோன்பு இருந்து தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தார். தனது கோரிக்கையை கம்யூனிஸ்ட் தலைவரான ஐ.மாயாண்டி பாரதிக்கு கடிதம் மூலமாகத் தெரியப்படுத்தினார். தமிழ்நாடு என்ற பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை அண்ணா முதல்வராகி நிறை வேற்றினார். தமிழ்நாடு என்ற பெயரிடக் கோரி நாடாளுமன்ற மக்கள் அவையில் பேரறிஞர் அண்ணாவின் கோரிக்கையை ஆதரித்து பூபேஷ் குப்தா குரல் கொடுத்தார்.

தட்சணப்பிரதேசம் என்று தக்கண பீடபூமி மாநிலங்கள் ஒன்றிணைக்க பண்டித நேரு நடவடிக்கைகள் எடுத்தபொழுது முதல் கண்டனக் குரல் அன்றைய முதல் காமராஜரிடம் இருந்து எழுந்தது. மொழி வாரியாக மாநிலங்கள் அமைய வேண்டும் என்று காமராஜர் விரும்பினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் குரல் காமராஜரின் எதிர்ப்புக்கு வலு சேர்த்தது.
தமிழகத்திற்கும் கேரள மாநிலத்திற்கும் இடையே உள்ள எல்லை 830 கி.மீ. ஆகும். கோவை மாவட்டம் முதுமலை தொடங்கி தெற்கே நெய்யாற்றங்கரை – கொல்லங்ககோடு வரை நீண்டுள்ளது. தமிழக கேரள மாநிலங்கள் எல்லை தூரம் 203 கி.மீ. அளவில்தான் இதுவரை நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 627 கி.மீ. தூரம் எல்லைகள் நிர்ணயிக்கப்படாமலே இருக்கின்றது. இதற்கு கேரளா அரசு ஒத்துழைப்புத் தரவில்லை. 

இதனால் தமிழகத்தில் இருந்தாலும் தமிழகப் பயணிகள் சித்ரா பௌர்ணமியில் கண்ணகியை வணங்கச் செல்லும்போது கேரள காவல் துறையினரால் அத்துமீறி தாக்கப்படுகின்றனர். அண்டை மாநிலங்களோடு நதிநீர்ப் பிரச்சினை யிலும், சமீபத்தில் கர்நாடகத்தோடு ஒக்கனேக்கல் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயங்களை வெளிப்படுத்தினாலும் கர்நாடகத்தின் எல்லை அத்துமீறல் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
கடந்த காலங்களில் தமிழர் இழந்த நிலங்கள் ஆந்திரத்திலும், கேரளத்திலும், கர்நாடகாவிலும் உள்ளன. தமிழகத்தில் உள்ள தாளவாடி கர்நாடகத்தில் சேர்க்க வாட்டள் நாகராஜ் தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறார். ஏற்கனவே கொள்ளேகால், பெங்களூர், கோலார் ஆகிய பகுதிகளை கர்நாடகத்திடம் இழந்து உள்ளோம். 

1956இல் தமிழகத்தின் விருப்பத்திற்கு மாறாக நெய்யாற்றங்கரை, நெடுமாங்கரை, தேவிகுளம் – பீர்மேடு கேரளத்தில் முறைகேடாக சேர்த்து விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையின் தெற்கேயிருந்து தமிழகத்தோடு இணைந்தது. நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு இழந்ததால் இன்றைக்கு காமராஜர் ஆட்சியில் நாம் கட்டிய நெய்யாறு அணையை கேரளா மூடிவிட்டது. தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இழந்ததால் முல்லைப் பெரியாறில் கேரளா முரண்டு பிடிக்கின்றது. அது மட்டுமல்லாமல் நெல்லை மாவட்டத்தின் அடவி நயனாறு, உள்ளாறு, செண்பகவல்லி, விருதுநகர் மாவட்டம் அழகர் அணை திட்டம், பாலக்காடு பகுதிகளை இழந்ததால் கொங்கு மண்டலத்தில் சிறுவாணி, பம்பாறு, பாண்டியாறு-புன்னம்புழா, பரம்பிக்குளம்-ஆழியாறு பிரச்சினைகள் இன்றைக்கும் கேரளாவோடு தலைதூக்கி நிற்கின்றது.

கர்நாடகத்தோடு கொள்ளேகால், மாண்டியா, கோலாறு இழந்ததால் காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் பிரச்சினை, ஆந்திரத்தில் சித்தூர், நெல்லூர், திருப்பதி இழந்ததால் பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி பிரச்சினை. கணேசபுரத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது. 

இவ்வளவு நதிநீர் ஆதாரங்களும், இயற்கை ஆதாரங்களும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம் இழந்த மண்ணால். இந்தத் தருணம் கொண்டாட்டமா? சிந்திக்கவா? என்று தெரியவில்லை. ஆனால் தென் மாவட்டங்களில் தமிழகத்தின் கலாச்சார பண்டைய தலைநகரம் ஏதென்ஸ், ரோம் நகர்களைப் போன்ற மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் ஏன் அமையக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்து வருகின்றது.
தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், இன்னொரு மாநிலம் அமைந்தால் பல சலுகைகளும், கிடைக்கும் என்று சிலர் வலியுறுத்துகின்றனர். மத்திய அரசின் பகுதியான புதுச்சேரிக்கே சிறப்புச் சலுகை இருக்கும்போது, தமிழ் பேசும் இன்னொரு மாநிலம் அமைந்தால் சில உரிமைகள் கிடைக்கும் என்று வாதிடுகின்றனர். இந்த வகையில் தென் தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையும் விவாதத்துக்கு உரிய பொருளாகும். தென் தமிழகம் அமைந்தால் நிர்வாகம், மக்கள் நலப் பணிகள் என பல நன்மைகளும் உள்ளன.

காலப் போக்கில் அரங்கன் பள்ளிகொண்ட காவிரியின் தென்கரை திருவரங்கரத்திலிருந்து குமரி முனையில் ஐயன் வள்ளுவன் சிலை வரை தென் தமிழகம் அமைய வேண்டும் என்ற சிலரின் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று நீர்பூத்த நெருப்பாக உள்ளன. 1998லிருந்து மத்திய அரசு சிறு மாநிலங்கள் அமைய வேண்டும் என்று வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது திட்டங்கள் தீட்டப்பட்டது. உள்துறை அமைச்சர் அதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு உத்தராஞ்சல், ஜார்கண்ட், சட்டீஸ்கர் வரை பல மாநிலங்கள் அமைந்தன. தற்போது தெலுங்கானாவும் தனி மாநிலமாகிவிட்டது. ஒரே மொழி பேசும் மாநிலத்தை நிர்வாக ரீதியாக பிரிக்கலாம் என்று மத்திய அரசும் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.
தியாகங்கள் செய்து மீட்டுத் தந்த தணிகை, குமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளோடு தமிழகத்தோடு இணைக்க போராடிய தியாகச் செம்மல்களின் கீர்த்தியை நினைவில் கொள்வோம். நாம் இழந்த மண்ணை எப்படி மீட்பது என்பதும் இப்போது சிந்திக்கப்படவேண்டிய விடயமாகும்.

விதியே விதியே என் தமிழச் சாதியை
என்செயக் கருதியிருக்கின் றாயடா?
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் 
பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவயிவ்வெளி்ய
தமிழச் சாதி, தடியுதை யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்தில…

விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செயக் கருதி யிருக்கின் றாயடா?
என்று ஒரு நூற்றாண்டுக்க முன்னர் மகாகவி பாரதி பாடியது இன்றும் சரியாகவே இருக்கிறது!
****
தமிழ்நாடே வாழ்க- 
எம்தாய்நா டே வாழ்க.
அமிழ் தா கியஇய லிசைகூத் தென்னும்
தமிழா கிய உயிர் தழையும் விழுமிய.
தாய்நாடே வாழ்க!
இலங்கை சிலம்பும் குமரித் திருவடி தென்பால்
எழிலார் விந்தக் குழலார் வேங்கடம் வடபால்
கலங்கொள் முத்துக் கடலும் பவழக்
கடலும் கிழக்கு மேற்கில் உடுக்க
தமிழ்நாடே வாழ்க!
குன்றுகள் வான்தொறும் எரிமலை அறியாய்!
பெருநில முடையாய் நடுக்க மறியாய்!தென்றற் குளிரும் செங்கதிர்ச் செல்வமும்
தண்ணீர் வளவயல் செந்நெலும் கொழிக்கும்
தமிழ்நாடே வாழ்க!
-பாவேந்தர் பாரதிதாசன்-

                        (2)
(தமிழகம் இழந்தது அதிகம். எல்லைகள் வரையறுக்கப்பட்டு 66 ஆண்டுகள் ஆகிறது).�தமிழக எல்லைகள் அமைந்த மொழிவாரி மாநிலமாக இன்றைய தமிழகம் அமைக்கப்பட்டு இன்றோடு 66 ஆண்டுகள் ( நவம்பர் 1, 2018 ) முடிகிறது. நவம்பர் 1, 1956ம் ஆண்டு இன்றைய தமிழகம் அதன் எல்லைகளோடு பிரிக்கப்பட்டு அமைந்தது.
‘தமிழகம் 50’ விழாவை 12 ஆண்டுகளுக்கு முன் மயிலை பாரதிய வித்யா பவனில் விழா எடுத்தேன். ‘தமிழ்நாடு 50’ என்ற எனது நூலும் வெளியிடப்பட்டது.
அந்த விழாவில் வடக்கு எல்லை போராட்ட தியாகிகளான சிலம்புச் செல்வர் ம.பொ.சி, விநாயகம், மங்கலங்கிழார், கொ. மோ. ஜனார்த்தனம், சோமா.சுவாமிநாதன், ஆ. தாமோதரன், சி.வேங்கடசாமி, ஆ.வை. கிருஷ்ணமூர்த்தி, அம்மையப்பன், விசுவநாதன், அ. லூயிஸ், மு. வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் போன்றோரும், தெற்கெல்லை குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க பாடுபட்ட பி.எஸ்.மணி, மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், ஏ.அப்துல் ரசாக், தாணுலிங்க நாடார், டாக்டர். மத்தியாஸ், பொன்னப்ப நாடார், சிதம்பர நாதன் நாடார், போன்றவர்களையும், நெல்லை மாவட்ட செங்கோட்டையை தமிழகத்தோடு இணைய போரிட்ட செங்கோட்டை கரையாளர் அவர்களையும், தமிழ்நாடு என்று பெயர் வேண்டும் என்று உண்ணா நோன்பிருந்த தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் சிலரது படங்களையும், அவர்களின் தியாகத்தையும் இநத நிகழ்ச்சியில் நினைவு கூறப்பட்டது.
இதே நாளை ஆந்திரம் விசால ஆந்திரம் என்றும், கேரளம் நவகேரளம் என்றும், கர்நாடகா சம்யுக்த கர்நாடகம் என்றும், மகாராஷ்டிரம் சம்யுக்த மகாராஷ்டிரம் என்றும், குஜராத் மகா குஜராத் என்றும் கொண்டாடுகின்றன.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்த நாள் அமைந்தது குறித்து இதுவரை கவனிக்கப்பட வில்லை. 2005ல் ஆனந்த விகடனில் இதுகுறித்து நான் எழுதிய கட்டுரையும் வெளியானபின்; நான் எடுத்த விழாவிற்கு பிறகே இதுகுறித்து தமிழக மக்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்த நிகழ்வினை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியும் கலந்து கொண்டும் வருகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலை பாலு தலைமையில் ‘மொழிவழி மாநிலம் அமைந்த நாள்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
தெற்கே கன்னியாகுமரி அருகே நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு பகுதிகளை இழந்து அந்த பகுதி கேரளத்திற்கு சென்றதால் நெய்யாறு அணையில் தமிழகத்தின் உரிமை கேள்விக்குறியாக உள்ளது. நெல்லை மாவட்டம் அடவிநயினார், உள்ளாறு, செண்பகவல்லி அணை பிரச்சனை, அழகர் அணை பிரச்சனை (ஸ்ரீவில்லிப்புத்தூர்), தேவிகுளம், பீர்மேடு இழந்ததால் முல்லை-பெரியாறு பிரச்சனை, கொங்கு மண்டலத்தில் பாலக்காட்டு பகுதியில் உள்ள தமிழர்களுடைய கிராமங்களின் இழப்பால் பம்பாறு, சிறுவாணி, ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – புன்னம்பழா போன்ற நதிதீரப் பிரச்சனைகள், கர்நாடகத்திடம் கொள்ளேகால் போன்ற தமிழர்கள் பகுதிகளை இழந்த்தால் காவிரி, ஒகேனக்கல், தென்பென்னையாறு பிரச்சனை, ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லுர் பகுதிகளை இழந்த்தால், பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரிப் பிச்சனைகள் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் அட்டப்பாடி பிரச்சனை, கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோர பிரச்சனையில் கேரள அரசு குடிமைப் பொருள் வழங்கும் அட்டை (ரேசன் அட்டை) வழங்கியது. இப்படியாக நாம் இழந்த பகுதிகளால் பல சிக்கல்களை கடந்த 66 ஆண்டுகால் சந்தித்து வருகிறோம். பலர் போராடவில்லை என்றால் திருத்தணி நம்மைவிட்டு ஆந்திரத்ற்கு செல்கிறோன். நமது எல்லைப் போராட்ட தலைவர்களையும், தியாகிகளையும் நினைவுகூற வேண்டிய நாள் இன்று.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய பல்வேறு போராட்டங்களில் துப்பாக்கிச் சூடும் நடந்ததுண்டு. அந்த தியாக வரலாறையெல்லாம் நாம் நினைவு கூறவேண்டும்.
1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதியில் மூன்று பேர் பலியாயினர்.�1. ஏ. தேவசகாயம், மங்காடு,�2. தி. செல்லையா, கீழ்க்குளம்,�3. கத்திக்குத்தில், பாகோடுவை சார்ந்த ஒருவரும் பலியானார்.�1950-ல் குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் வேகமெடுத்தன. இதற்கிடையில் தமிழக அமைச்சர் பக்தவச்சலமும், கொச்சி முதலமைச்சர் பாளையங்கோட்டையில் சந்தித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டபோது, குமரி மாவட்ட போராட்டக் குழுவினருக்கு அது உடன்பாடாக இல்லை. இதை எதிர்த்து 11/08/1954இல் குமரி மாவட்டத்தில் மறியல்களும், பொதுக் கூட்டங்களும் நடந்தது. அன்று காவல் துறையினர் 16 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்.
1. புதுக்கடை ஏ. அருளப்பன் நாடார்�2. கிள்ளியூர் எம். முத்துசாமி நாடார்�3.. தோட்டவாரம் எம். குமரன் நாடார்,�4. புதுக்கடை எம். செல்லப்ப பணிக்கர்,�5. தேங்காய்ப்பட்டணம் ஏ. பீர்முகமது,�6. தொடுவட்டி சி. பப்புப் பணிக்கர்,�7. நட்டாலம் எஸ். இராமையன் நாடார்,�8. மணலி, தோட்டவிளை ஏ. பொன்னப்பன் நாடார்�9. தோட்டவிளை, மணலி எம். பாலையன் நாடார்.
மேலும் இப்போராட்டத்தில் சங்கரன்நாடார் என்பவர் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்டார். வண்டி ஏற்றி ஒருவர் கொல்லப்பட்டார். பனை உச்சியிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார். மொத்தம் 36 பேர் பலியானதாக தகவல்கள். பலர் கை, கால்களை இழந்தனர். குமரி மாவட்டமே அப்போது பதட்டமாக இருந்தது.
குமரி மாவட்டம் இரணியல் காவல் ஆய்வாளர் திரு. வி.எம். ஜார்ஜின் உத்தரவின் பேரில் இயங்கிய சிறப்பு தனி காவல் படை, காட்டுமிரான்டித் தனமாக நடந்து கொண்டது.
ஒரே நாளில், மாங்கரை, கொட்டேத்தி, பாலப்பள்ளம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் தெருக்களில் சென்று கொண்டிருந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது லத்தியால் அடித்தனர். திக்கணம்கோட்டை வரும்போது பள்ளியை விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவர்களிடம் அச்சத்தை உருவாக்கியது.
வடிவேல் என்ற மாணவன் சவரிமுத்து என்பவரின் வீட்டில் புகுந்து ஒளிந்துகொண்டார். போலீஸ் படை வீட்டுகுள் புகுந்துவிட்டதை கண்ட மாணவன் உயிருக்குப்பயந்து வெளியே சாடி ஓடிவிட்டான். அந்த பையன் யார் என்று சவரிமுத்துவிடம் போலீஸ் ஆய்வாளர் கேட்டார். தனக்குத் தெரியாது என்று சவரிமுத்துக் கூறியதால் தனி போலீஸ் படையினராலும், ஆய்வாளராலும் லத்தியால் அடித்து உதைக்கபட்டார் சவரிமுத்து. குறுக்கிட்ட அவன் சகோதரனும் தாயும் அதேபோன்று தாக்கப்பட்டனர். இச்செயலை கண்டித்த, திருமண வயதுக்கு வந்த, அவனது இளைய மகள் கன்னத்தில் அறையப்பட்டாள்.
அவளது காதில் கிடந்த அணிகலன் துண்டுதுண்டாக நொறுங்கியது. மூன்று பற்களும் ஆட்டம் கொடுத்தன. 10 தினங்களுக்கு முன் தனது 11-வது குழந்தையைப் பெற்றெடுத்த அவன் மனைவி இரக்கம் காட்டும்படி கெஞ்சினாள். அவள், பூட்ஸ் காலால் நெஞ்சில் உதைக்கப்பட்டாள். முடிவில், சவரிமுத்து போலீஸ்வேனில் கொண்டுசெல்லப்பட்டார். கொட்டேத்திச் சந்தையில் போலீசார் புகுந்து கலகம் விளைவித்தனர். அன்றாட பொருட்களை வாங்கவும் விற்கவும் அங்கு கூடியிருந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்களை துரத்தி அடித்தனர். பெண்கள் அலங்கோலமான முறையில் உயிருக்குப்பயந்து அங்குமிங்குமாக ஓடினர். இப்படியான ரணங்களும், அவலங்களும் அன்றைக்கு குமரி மண்ணில் நடந்தன.
கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையில் சரிபாதி என நாலரைத் தாலுகாக்கள் திருவிதாங்கூர் பகுதிகளில் தமிழகத்தோடு இணைந்தன. குமரி மாவட்ட எல்லைப் போராட்டத்தில் பி.எஸ்.மணி, நேசமணி போன்றோர் செய்த தியாகங்களை எல்லாம் மறக்க முடியாது.
விடுதலைப் போரில் போராடினோம். விடுதலை பெற்றோம். தமிழர் மண்ணை மீட்க போராடிய போது, தமிழகத்தின் குரலை மத்திய அரசு புறந்தள்ளியது. நம்முடைய நியாயங்கள் மறுக்கப்பட்டன. நம்முடைய தமிழ் மண்ணை கேரளம், கர்நாடகம், ஆந்திரத்துடன் இழந்தோம். இறுதியாக கச்சத்தீவையும் இழந்தோம். இப்படியெல்லாம் மண்ணை இழந்து  66 ஆண்டுகள் கடந்துவிட்டன.

••••••

#
    (1)

#இன்று_நவம்பர்1, இதே நாள்…..
1956 இல் #இன்றையதமிழகம் எல்லைகள்,நில பரப்பு #அமைந்தநாள்.  தெற்கே கன்னியாகுமரி, வடக்கே திருத்தணி ( ஆனால் திருத்தணி தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டது ஏப்ரல் 1, 1960-அன்று).பெற்று அமைந்தது. தென்காசி மாவட்ட செங்கோட்டையும் இணைந்த நாள் என முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கவனத்தில் ஏன் வரவில்லை. வரலாற்று பிழைகள் கூடாது.
இன்றைய தமிழகம் எல்லைகள் அமைந்த நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுகிறோம்.
தமிழ்நாடு நாள் உருவாகி 68 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் என்று பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 
அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருத்தணியையும் கன்னியாகுமரி மாவட்டத்தையும் இணைத்ததை மட்டும் சொல்லியுள்ளார். ஆனால், இதே அளவுக்குப்  கரையாளர் தலைமையில் போராடிப் பெற்ற செங்கோட்டையை ஏன் சொல்லவில்லை? பூகோள ரீதியான விஷயங்களை கவனித்து தென்காசி மாவட்டம் செங்கோட்டையையும் சொல்லியிருக்க வேண்டும் அல்லவா?
இற்றைத் தமிழ்நாடு உருவான நாளில் எல்லை மீட்டுப் போராட்டத்தில் பங்கெடுத்த தலைவர்களை நினைவுகூர்வோம்!
வடக்கெல்லைப் போராளிகள்:  ம.பொ.சிவஞானம், கே.விநாயகம்,  மங்கலங்கிழார், சித்தூர் சி.வி.சீனிவாசன், தணிகை என்.சுப்பிரமணியம், பொதட்டூர்பேட்டை ஏ.ச.தியாகராஜன், ஏ.ச.சுப்பிரமணியம், சித்தூர் வழக்கறிஞர் என்.அரங்கநாத முதலியார், திருவாலங்காடு திருமலைப் பிள்ளை, தணிகை காந்தி, ஜோதிடர் சடகோபாச்சாரியார்.
தெற்கெல்லைப் போராளிகள்:
குமரித் தந்தை மார்‌ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், அப்துல் ரசாக், சிதம்பரநாதன் நாடார், எம்.வில்லியம், டி.டி. டேனியல், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பரம் பிள்ளை, சிவதாணு பிள்ளை, ராமசாமி பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.  
தமிழ்நாடு பெயர் வேண்டி உயிர் நீத்த சங்கரலிங்கனார். 
‪சித்தூர்‬
‪திருப்பதி‬
‪காஹஸ்தி ‬
‪கொள்ளேகால்‬
‪மாண்டியா‬
‪கொல்லங்கோடு வனப்பகுதி‬
‪பெங்களூர் தண்டுப்பகுதி ‬
‪கோலார் தங்கவயல் பகுதி ‬
‪தேவிகுளம்‬
‪பீர்மேடு‬
‪நெய்யாற்றின்கரை‬
‪செங்கோட்டை வனப்பகுதி‬
‪பாலக்காடு வனப்பகுதி‬
‪நெடுமாங்காடு‬
‪வண்டி பெரியார், பாலக்காடு,திருப்பதி, குடகு இவை அனைத்தும் தமிழகத்துடன் சேர்க்கப்பட வேண்டும். ‬
‪முடியுமா ‬
‪நதிநீர் சிக்கல் மூன்று மாநிலங்களிடமும் இன்றளவும் உள்ளது.‬
•••••
   (2)
ஜூலை 18: தமிழ்நாடு பெயர் வைத்த நாள். சரி , மகிழ்ச்சி.
ஆனா;
’’நவம்பர் 1, தமிழ்நாடு நாள் என்ற (பெற்ற -பிறந்த நாள்)
பெயரில் கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின அறிவித்து உள்ளது மிக்க மகிழ்ச்சிதான். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைய எல்லை களோடு அமைந்த தமிழகம் 1956 நவம்பர் 1 ஆம் தேதி சென்னை மாகாணமாக என்று அமைந்தது. மெட்ராஸ் ராஜ்தானி (madras presidency) துவக்கத்தில் அழைக்கப்பட்டது. ஆந்திரா, ஒரிசா எல்லை வரை தெற்கே திருநெல்வேலி மாவட்டம் வரை அமைந்தத்து அன்றைக்கு அமைந்திருந்தது மெட்ராஸ் ராஜ்தானி. மொழிவாரியாக மாநிலங்கள் அதன் எல்லைகளை வரையறுக்க அன்றைய பிரதமர் நேரு குழு ஒன்றை அமைத்தார். அதன் அறிக்கைகளை பெற்று கேரளத்தில் தேவிகுளம், பீர்மேடு போன்ற சில பகுதிகளும், இன்றைய கர்நாடகத்தில் கொல்லேகால் போன்ற சில பகுதிகளும், ஆந்திரா வில் திருப்பதி, சித்தூர், நெல்லூர், காளஹஸ்தி போன்ற பகுதிகளும் நாம் இழந்து இன்றைய எல்லைகள் அமைந்த தமிழகம் நவம்பர் 1 1956ல் அமைந்தது.
தியாகசீலர் ம.பொ.சி., மங்களக்கிழார், விநாயகம் போன்றோர் பலரின் போராட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம். தென்முனை குமரியை பி.எஸ்.மணி, நேசமணி, குஞ்சன் நாடார், ரசாக் போன்றோருடைய தியாகமும், மார்த்தாண்டம் புதுக்கடையில் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 11 தியாகிகளின் ரத்தத்தில் தமிழகத்தோடு இணைந்ததுதான் குமரி மாவட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் தியாகி கரையாளருடைய மாசற்ற தியாகத் தால் செங்கோட்டை கிடைத்தது. ஆனால் நம்மோடு இணையவேண்டிய தென்மலை,நெடு மாங்காடு, நெய்யாற்றங்கரை ஆகியப் பகுதிகளை தர மறுத்தனர். தமிழர்கள் வாழும் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்கு சென்றுவிட்டன. 1956 நவம்பர் 1ம் தேதி உதயமான கேரளம் “நவ கேரளம்” என்று கொண்டாடுகிறது.
கர்நாடகம் “அகண்ட கர்நாடகம்” என்று விழா எடுக்கிறது. ஆந்திரம் “விசால ஆந்திரம்” என்று ராஜ்ய விழாவாக கொண்டாடுகின்றது. மகாராஷ்டிரம் “சம்யுக்த மகாராஷ்டிரம்”, குஜராத் “மகா குஜராத்” என்று நவம்பர் 1ம் தேதியை மகிழ்ச்சிப் பெறுக்கோடு வரவேற்கின்றது. ஆனால் நாம் இந்நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதா? அல்லது இழந்த பகுதிகளுக்காக வருந்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதா? என்று சொல்ல முடியவில்லை.
•••••
(3)
#கன்னியாகுமரிமாவட்டம்
தமிழ்நாடு நாள், நவம்பர் 1, 1956

பி. எஸ். மணி, ஆர். கே.ராம், காந்திராமன் ஆகியோர் முயற்சியால், வழக்கறிஞர் சாம் நத்தானியலை தலைவராக கொண்டு, 1945 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டது தான், திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ், பின்னர் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என பெயர் மாற்றம் கண்டது. முதலில் இதற்கு தலைமை ஏற்க அப்போதைய முனிசிபல் தலைவராகவும் வழக்கறிஞர் ஆகவும் புகழ் பெற்ற நேசமணியை அணுகிய போது அதை மறுத்து விட்டார். இரண்டு வருடங்களுக்கு பிறகு அந்த இயக்கத்திற்கு கிடைத்த மக்கள் ஆதரவை கண்டு, 1947 இல் தன் ஆதரவாளர்களோடு வந்து இணைந்து கொண்டார். 

தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெயாத்தங்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய தாலுகாக்கள் தமிழ் சிறுபான்மையாக இருக்கும் மலையாள பகுதிகளில் இருந்து விலகி சென்னை மாகாணத்தில் இணைக்க வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தில் செயற்பட்ட அரசியல் இயக்கமாக இருந்த திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை தீவிரமாக எதிர்த்தது திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் மற்றும் சென்னை காங்கிரஸ். ஆதரித்தது ம.பொ.சியும் இங்கிருந்த திராவிடத் தலைவர்களுமே. 

பாளையங்கோட்டை தீர்மானம் என்கிற ஒன்றை வைத்து இந்த இயக்கத்தை உடைக்க காங்கிரஸ் தலைவர் பக்தவச்சலம் எடுத்த முயற்சி கைகூடியது. தாணுலிங்க நாடார், குஞ்சன் நாடார் என தீவிர மாக இயங்கிய போராட்டக் களம் இரண்டு ஆனது. இராமசாமி பிள்ளையை தலைவராக கொண்டு இயக்கத்தை நேசமணியும், தாணுலிங்க நாடாரை தலைவராக கொண்டு போட்டி இயக்கமும் பிரிந்தன. குடமும் வண்டிச் சக்கரம் சின்னமும் மோதிக் கொண்டன. இரண்டையும் இணைக்க உண்ணாவிரதம் இருந்த காந்திராமன் ஒன்பது நாட்களுக்கு பிறகு உடல்நிலை காரணமாக வாபஸ் வாங்கினார். பி.எஸ். மணியோ பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் போட்டியிட்டார்.

காந்திராமனை, பி.எஸ். மணியை, சாம் நத்தானியலை எல்லாம் இருட்டடிப்புச் செய்தாகியது. தாணுலிங்க நாடாரை சங்கி முத்திரையோடு சுருக்கி விட்டார்கள். ஏன் மாணவர் பருவத்தில் இந்த போராட்டங்களில் சிறந்த மேடை பேச்சுகள் வழங்கிய சங்கரலிங்கம் என்பவரை நாம் திமுகவினர் என்றே அறிவோம். அனைவரும் கூடி இழுத்த போராட்ட வரலாறு சிதம்பர நாடார், அப்துல் ரசாக், மனுவேல் சைமன்,
நூர் முகம்மது,
இராமசாமி பிள்ளை,
பொன்னப்ப நாடார்,
ஏ. கே. செல்லையா
என இன்னும் விரிவாக கொண்டு செல்லப்பட வேண்டும். 

இப்போராட்டத்தின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 

எம். முத்துச்சாமி

எ. அருளப்பநாடார்

எ. பீர்முகம்மது

என். செல்லப்பாபிள்ளை

எ. பொன்னையன்

எஸ். இராமையன்

என். குமரன் நாடார்

எம்.பாலையன் நாடார்

ஜி. பப்பு பணிக்கர் 

ஆகியோர் தியாகத்தை போற்றி புகழ்வோம்.

#TamilNaduDay | #TamilNadu
#தமிழகம்
#KSR_Post
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்.
1-11-2024

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 

#KSR_Post.
1-11-2022.

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...