Sunday, March 31, 2024

Vaiko-வின் சறுக்கலுக்கு அவர் மகன்தான் காரணம் - *கணேசமூர்த்தி*

Vaiko-வின் சறுக்கலுக்கு அவர் மகன்தான் காரணம் - 
*கணேசமூர்த்தி*
K.S.Radhakrishnan Opens up | MDMK
#MDMK #Vaiko #DuraiVaiko #Election2024 #Trichy #GaneshaMoorthy #DMK #KNNehru #MKStalin #KalaignarKarunanithi #DMKAlliance #BJP #Annamalai #Admk #EPS #AMMK #KSRadhakrishnan #LokSabhaElection2024 #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia

https://youtu.be/6pw21yEYR6o?si=D-xkxvVCemRzSlD_

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
31-3-2024,

#*அண்ணாவுக்கு நெருக்கமான; அறியப்படாத மனிதரோடு இன்று ஒரு நல்ல சந்திப்பு*….

#*அண்ணாவுக்கு
நெருக்கமான; அறியப்படாத மனிதரோடு இன்று ஒரு நல்ல சந்திப்பு*….
————————————
“Some rise by sin and some by virtue fall.”
-Shakespeare 
•••
இன்று (31-3-2024)காலை 7.30 மணியளவில் ஒரு வயோதிக அன்பர் என் இல்லம் தேடி வந்தார்.

அவரை வரவேற்று அவரது பெயரை கேட்டேன் அவர் தனது பெயர் வேதகிரி என்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து  என்னைப் பார்க்க வந்திருப்பதாகவும் சொன்னார்.

தனது சொந்த ஊர் திருக்கோவிலூர் அருகே உள்ள சி. மெய்யூர் என்று சொன்னார். ஆனால் அவரது பெற்றோர்களின் பூர்வீகம் பெண்ணாத்தூர் அருகே உள்ள சோமாஸ் வாடி என்றவர் அங்கு தான் அவருக்கு சொத்துக்களும் நிலங்களும் இருக்கிறது என்றும் சொன்னார்.

1960களில் அண்ணாவிற்கு மிக நெருக்கமாக இருந்தவர் தனது மூத்த மகளுக்கு பூங்கொடி என்று அண்ணா தான் பெயர் வைத்தார் என்று கூறினார். அப்போது அண்ணா முதலமைச்சர் கிடையாது.

பெரியவர் வேதகிரி சொன்னார் 1950 -60களில் திமுக நடத்திய போராட்டங்களில் எல்லாம் அக்காலத்தில் கலந்து கொண்டவன்‌ குறிப்பாக 1965 இல் தமிழகத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு வேலூர் சிறைக்குச் சென்று திரும்பிய மொழிப்போர்த் தியாகி நான் என்றும் சொன்னார்.

நான் ப உ சண்முகம் அவர்களுடன் அரசியல்ப் பூர்வமாக உடனிருந்தவன். சேலத்தைச் சேர்ந்த முன்னாள்  சட்டமன்ற அமைச்சர்,சபாநாயகராக என இருந்த க. ராசாசாரம் அவர்கள் மற்றும் கே ஏ மதியழகன்
முதல் நாடாளுமன்றத்தில் திரு சம்பத் அவர்களுடன் உடன் சென்ற அன்பில் தர்மலிங்கம் அதை ஒட்டி பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன முருகையனுக்கு வேதகிரி நெருங்கியவர் கூட!

ஒரு வகையில் பார்த்தால் கா பொன்முடிக்கும் கூட அவர் தூரத்து சொந்தம்.

அவர் மேலும் சொன்னார் அண்ணாமலையார் ட்ரான்ஸ்போர்ட் என்ற பெயரில்சென்னை கொருக்குப் பேட்டையில் ஒரு ஒரு நிறுவனம் நடத்தி வந்ததாகவும்சொன்னார் அவர் மேலும் சொன்னது தான் வேடிக்கையானது.

இன்றைக்கு அமைச்சராக இருக்கக்கூடிய எ. வ .வேலு திருவண்ணாமலை டு  மலையனூர் டி பி எல் பேருந்தில் கண்டக்டராகப் பணிபுரிந்தவர் அந்தப் பேருந்து பாஷ்யம் ரெட்டியாருக்குச்  சொந்தமானது.  வேதகிரி மேலும் சொன்னார் எ வ வேலு என்னைப் பார்க்கும் போதெல்லாம் நீங்கள் திராவிடமுன்னேற்றக் கழகத்தின் மூத்த  வரிசை சார்ந்த   முன்னத்தி ஏர்  என்று சந்திக்கும் இடங்களில் எல்லாம் என்னைப் பார்த்து சொல்வார் என்றார்….. 

என்று சொல்லி நிறுத்தியவர் என்னிடம் உங்களை நீண்ட நாளாக பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. உங்களது வாகன ஓட்டுநரிடம் அடிக்கடி  உங்களை விசாரிப்பேன்.
இப்போது வயது ஏறக்குறைய 90 ஆகிறது. அதற்குள் உங்களைப் பார்த்துவிட வேண்டும் என்று தான் உங்கள் இல்லத்திற்கு வந்தேன் ‌ என்றார்.  உங்களை ஏன் சட்டசபைக்கு, டில்லி பார்லிமெண்டுக்கு
திமுக அனுப்பல  என நினைப்பேன் என வேதகிரி சொன்ன உடன் நாம் நல்லவர்களால்அங்கீகரிக்கப்பட்
டுள்ளோம் என மகிழ்ச்சியம் ஆறுதலும் வழங்கின,

எவ்வளவு பெரிய மகத்தான திராவிட இயக்கத்தின் உண்மையான தியாகபூர்வமான ஒருவரை சந்தித்ததில் அன்று நான் மிகவும் மகிழ்ந்தேன். இப்படியான மனிதர்களால் தான் தொடக்க கால திராவிட இயக்கங்கள் வலிமை பெற்றன.

இப்படியான தியாகிகளால் வளர்க்கப்பட்ட இயக்கம் இன்று யார் யார் கையிலோ கேவலமாக இருக்கிறது.

அண்ணாவை மறந்து விட்டார்கள்.

அன்றைக்கு இருந்த மூத்த தலைவர்களின் பெயரைச் செல்லக்கூட இன்று யாரும் இல்லை!

இப்படியான நிலையை பார்ப்பது தனக்கு வருத்தமாக இருக்கிறது சொன்ன வேதகிரித் தொண்டர் தன் வாழ்நாள் முழுக்க திராவிட இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் இருந்தவன் என்கிற முறையில் மேலும் சொல்கிறார் எனக்கும் 90 வயதாக போகிறது உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்கிற ஆசை  இருந்தது அதனால்தான் கிளம்பி வந்தேன் என்றும் சொன்னார்.

வேதகிரி மூலம் எனது மனதில் பட்டது; இப்படியாக அவர் அன்று வந்து போனதும் என்னை சந்தித்ததும் அவருக்குத் திருப்தியானதாகவும் எனக்கும் ஒரு மனநிறைவையும் தந்தது.

இப்படிப்பட்ட மனிதர்களின் வேள்விப் போராட்டங்களால்  வளர்ந்தது தான் திராவிட முன்னேற்ற கழகம். ஆனால் இன்றைய திமுக யாரிடம் இருக்கிறது.

 திராவிட முன்னேற்றக்கழகம் பதவிக்கு வராத காலத்திற்கு முன்பு அதாவது 1960 களில் அண்ணாவிற்கும்  கலைஞருக்கும் நெடுஞ்செழியனுக்கும் அவர்களது போராட்டத்திற்கு இடையே பசிக்குமே என தனது வீட்டில் சமைத்த உணவை கொண்டு வந்து கொண்டு வந்து கொடுத்தவர்தான் இந்த வேதகிரி என்னும் மாமனிதர்.

என்றைக்காவது இந்த திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இவரைப் போன்ற ஒருவருக்கு ஏதேனும் ஒரு பதவியோ ஏதேனும் அவரின் முக்கியத்துவம் கருதி கழகத்திற்கான அவரது  அடிப்படையான உழைப்பைக் கருதிக் கூட எந்த ஒரு பதவியையோ ஏன் ஒரு வாரியப் பதவிகளைக் கூட   ஏன் வழங்கவில்லை?.

அவருடைய உழைப்பும் நம்பிக்கையும் இத்தனை வயதிலும் கழகச் செயல்பாட்டில் அதன் கடந்த கால மகிழ்ச்சியில் நான் ஈடுபட்டு வந்தேன் என அவர்ப் பெருமிதப் படும்போது எனக்குள் யோசித்தேன்.
இவர்களை மிதித்துக் கொண்டுதான் திராவிட முன்னேற்ற கழகம் இன்று அரசியல் சார்ந்து தனிச் சொத்தாக வளர்ந்து இருக்கிறது என்பதை நான் சட்டென புரிந்து கொண்டேன்.

மனதில் ஏதோ துக்கமாக பட. அவரை வீட்டில் உணவு அருந்திச் செல்லுமாறு சொன்னேன். எனக்கு உணவு வேண்டியதில்லை அதிகம் நீர் ஆகாரங்கள் தான் உணவு என்று சொல்லிவிட்டு  நான் கிளம்புகிறேன் என்று  சொல்லிப் போய்க் கொண்டிருந்தார். அவர் போகும் போது அவர் செல்லும் திசையை பார்த்துக் கொண்டு நிற்கிறேன். இப்படித்தானே நாமும் இருந்து வந்தோம்  என்கிற எதார்த்தம் மனதில் உறைத்தது.நல்ல சந்திப்பு இன்றைய பொழுது……
இதில் பல உணர்வுகள், சங்கதிகள், செய்திகள் உள்ளன.

அவமானங்களை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். சேர்த்து வையுங்கள். நேரமும், தகுதியும் வருகையில் பாடம் கற்பிப்போம்..

#திமுகஅன்று
#dmkyesteryears

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
31-3-2024.

(படம் - அண்ணா, திமுக பொதுச்செயலாளர்  1950களில் கையொப்பம்யிட்ட இவரின் உறுப்பினர் அட்டை)


*நல்ல தலைவன் என்பவன் ஆயிரம் தாய்க்கு சமம். ஆனால் அப்படி யாரும் இங்கு இல்லை*..




பல நேர்மையான களப் போராளிகளை இங்குள்ள பதவி அரசியல் பலி கொண்டதுள்ளது.

*இங்கு அரசியல் வாரிசுகள் மற்றும் பணம்தான் எல்லாத்தையும் தீர்மானிக்கும் சக்தியா*? அப்போது நேர்மையான ஆட்களுக்கு வாய்ப்பு கிடைக்காதா..?

*இங்கு யார் ஜெயிக்க வேண்டுமானாலும் ஓட்டுக்கு காசு கொடுத்தால் தான் முடியும் போல*.

*நல்லது செய்வதற்கு கூட பிரபலமாக இருக்க வேண்டியதிருக்கிறது இங்கு*.

இப்போ கூட்டத்துக்கு ஆள் சேர்க்க ரூபாய் 300 பட்டுவாடா ஆரம்பித்து விட்டது.

தேர்தல் கமிஷன் என்ன செய்து கொண்டுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்டி யானை வண்டியில் கொத்து கொத்தாக மக்களை ஏற்றி, வேட்பாளர்கள் பிரச்சார மையத்தில் நிறுத்தி ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

*போனமுறை 38 MPகள் ஜெயிச்சும்*
*திமுக சாதித்த சாதனைகளை குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும்*

எண்ணங்களில் புரிதல் இல்லை என்றால்?
வண்ணங்களாய் பல வருடங்கள் பேசி, பேசி வளர்ந்த  அரசியல் உறவுகள் கூட…
சில நிமிடங்களில் யோசிக்காமல் இனி பிரிந்துவிடும் காலம் வரும்...

#வாரிசுகள்திமுக
#தமிழகஅரசியல்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
31-3-2024.

#*முதல்வர ஸ்டாலின் அவர்களே,* •••

#*முதல்வர ஸ்டாலின்
அவர்களே,*
•••
இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரும் தலைவலியாக இருக்கப் போகும்  பிரச்சனை எதுவாக இருக்கும் எனில் மாதம் தோறும் மகளிர்க்கான உரிமை தொகை  1000 ரூபாய் கொடுப்பதில் உண்டாகி இருக்கக்கூடிய குழப்பங்கள் தான்.

அனைத்துப் பெண்களுக்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகை தகுதிவாய்ந்த என மாறும்போது இப்படித்தான் கேள்வி எழும். உதயநிதி தேர்தலுக்குப்பின் மேலும் 55 லட்சம் பேருக்கு உரிமைத்தொகைன்னு வாக்கு கொடுத்திருக்காரு என்ன ஆகப்போகுதோ...

ஒரு வீட்டாருக்கு ஆயிரம் ரூபாய் என்றால் பக்கத்து வீட்டாருக்கு இல்லை ஒரு தெருவில் 10 பேருக்கு கொடுக்கப்படுகிறது என்றால் மற்றொரு தெருவில் 10 பேருக்கு இல்லை.

தோல்வியில் முடிந்த மகளிர் உரிமை திட்டம்..
முதல்வரிடம் இன்று 31-3-2024இல் ஈரோட்டில் சரமாரி கேள்விக்கேட்ட பெண்..

  பெண்களின் பகை சாதாரணமானது அல்ல குழாயடியில் நின்று புரணி பேசும் பெண்களின்  பேச்சு தான் தமிழ்நாடு முழுக்கப் பிரச்சாரமாக மாறும்.
அந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைக்காத  பலரின் அங்கலாய்ப்புகள்  திமுகவிற்கு இந்த தேர்தலில் கேடாய் முடியும் என்று தோன்றுகிறது.

பொதுவாக முதல்வர் ஸ்டாலினின் போக்குகளும் அரசியல் சரி தன்மையைப் பொறுத்து திருப்திகரமாக இல்லை. மாற்றுக் கட்சிகளான அண்ணா திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வருபவர்களுக்கு முன்னுரிமை தந்து  கட்சியில்  இணைத்துக் கொண்டு இன்று தேர்தல் களத்தில் பயணிக்கிறார்.

கலைஞர் எமர்ஜென்சி காலத்தில் ஆகட்டும் ராஜீவ் படுகொலை காலத்தில் ஆகட்டும் கட்சியில் இருந்து பாடுபட்டு அதற்காக உழைத்தவர்களைக் குறிப்பாக திமுகவின் நாற்றாங்காலில் விளைந்தவர்களை கொண்டு தான் அன்று கட்சிக்கு வந்த  அனைத்து நெருக்கடி நிலைமைகளையும் சமாளித்தார். அன்று மாற்றுக் கட்சியில் இருந்து எவரும் வரவில்லை அப்படியே வந்தாலும் அவர்களை கலைஞர் கண்டு கொள்வதுமில்லை. இப்படித்தான் அவர் அனைத்திலும் வெற்றி பெற்றார்.

ஆனால் ஸ்டாலினை பொறுத்தவரையில் அதிமுக போன்ற மாற்றுக் கட்சியில் இருந்து வந்தால் முதல் மரியாதை. அதுவும் மதிமுகவிலிருந்து வந்தால் எதுவும் இல்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவர்களுக்கு எதிர்க்கட்சி  இல்லாத நிலையில் தான் சுலபமாக இவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். உண்மையில் எடப்பாடி பன்னீர்செல்வம்  தினகரன் எல்லோரும் ஊர் அணியாக அதிமுகவில் வலிமையாக நின்று இருந்தால் திமுக வெற்றி அடைந்திருக்க முடியாது. 

 அது ஒரு புறம் இருக்க இந்த நாடாளுமன்றத் தேர்தல் அவ்வளவு முக்கியமானது ஒன்றும் அல்ல. ஆனால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கு மிகுந்த சோதனை காலமாக இருக்கும்.
அந்தத் தேர்தல் தான் பாரதப்போரில் நடந்த குருச்சேத்திரத்திற்கு ஒப்பான பல விளைவுகளை  பாடங்களை திமுகவிற்குத் தரும்.

இன்றைய நாடாளுமன்றத் தேர்தலுக்கென இணைந்திருக்கும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் உள்ள தோழமைகள் யாரும் திருப்தியாக இல்லை.

எடப்பாடி பழனிச்சாமி மிக தைரியமாக தன் வேட்பாளர்களை முடிவு செய்து அறிவித்துவிட்டு தேர்தல் களத்தில் நிற்கிறார்.

திமுகவில் வேட்பாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றால் கோயம்புத்தூரின் பழைய அதிமுக மேயர் அவர் எதோ ஜெயலலிதா அம்மையார்  பற்றி phd ஆய்வு செய்து பட்டம் பெற்று இருக்கிறாராம் கணபதி ராஜ்குமார் என்பவர்.அவர் இப்போது திமுகவுக்கு வந்துள்ளாராம் அவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்கள்.
எப்படி இருக்கிறது என்று பாருங்கள் இவர்களுடைய தேர்வு .

திமுகவில் எத்தனையோ திறமை மிக்க வேட்பாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் விட்டுவிட்டு மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு முதல்ல் உரிமை என்றால் என்ன அர்த்தம்.

செந்தில் பாலாஜி சேகர் பாபு
 எ வ வேலு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இப்படி மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தான் திமுகவில் பதவியும் தொகுதியும் கிடைக்கின்றன.

அதிமுகவிலிருந்த போதும் அமைச்சர் பதவி திமுகவுக்கு வந்தாலும் அமைச்சர் பதவி. இதன் உள்ளர்த்தங்கள் என்ன. இதை ஆட்கள் கலைஞரைப் பற்றி என்ன எல்லாம் மோசமாக பேசினார்கள் என்பது கூட மறந்து விடுகிறதா?

இவர்களை வைத்துக்கொண்டு தான் ஸ்டாலின் கட்சியை வழிநடத்துகிறார்.

வருகிற 2026 தேர்தல் இப்படி இருக்காது முதல்வர் ஸ்டாலின் அவர்களே!

அந்த 2026 தேர்தல் இன்றைய கூட்டணி கட்சிகளின் நிலைமை  இப்படியே இருக்கப்போவதில்லை.  ஒருபுறம் பாரதிய ஜனதா வளர்ந்து காலூன்றி விட்டது. அதிமுகவும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். மற்றொருபுறம் நடிகர் விஜய் 50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு அந்த தேர்தலை எதிர் கொள்ளவிருக்கிறார். புதிய தலைமுறை ஓட்டுகள் தொடர்ந்து விஜயின் கட்சியில் 20 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் ஒரு தேர்தலை தீர்மானிக்கும் அளவிற்கு பெருகி இருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களே நாங்களெல்லாம் உங்களுடன் பயணித்தவர்கள். கட்சியின் ஆதாரப்பூர்வமான காலங்களில் இருந்து இன்று வரை அதன் அரசியல் மாற்றங்களில் வேலை செய்தவர்கள். நான் சொல்வதை நீங்கள் கேட்டாலும் சரி கேட்க விட்டாலும் சரி.ஏன் எனில்
நீங்கள் எல்லாம் கலைஞரின் ஆட்சிக் கட்டிலில் இருந்து வசதியாக வந்தவர்கள். கலைஞரின் மகன் மகள் பேரன் என நீங்களும் கனிமொழி போன்றோர்கள் எல்லாம் லிப்டில் ஏறி சென்று திமுக என்ற மூன்றாம் தளத்தை எட்டி விட்டீர்கள். என்னை போல எங்களைப் போல உழைத்தவர்கள் எல்லாம் இன்னும் படிகளிலும் ஏணிகளிலும் ஏறித்தான் அதை ஒட்டி மூன்றாம் தளத்துக்கு வர வேண்டி இருக்கிறது. கலைஞர் அறியவர்களுக்கு உங்கள் குடும்ப பரிவார விருப்படி மந்திரிகள், எம்பிகள் என கட்சியில் சீனியார்டியை அங்கிகாரம் செய்யாமால் , யார் யாருக்கோ தகுதியற்றவர்க்கு அள்ளி தங்கள் சொத்தை  போல அள்ளி தந்து; திமுகவுக்கு உழைத்தவர்களை புறக்கணித்தேர்கள். அந்த பாவம் சாதாரணமாக விடாது உங்களை….

வெற்றிகள் வரலாம் சில காலம்  தமிழக ஆட்சியில் இருந்தோம் என்கிற பெயர் கூட கிடைக்கலாம்.
அதுவா முக்கியம். அண்ணா போல கலைஞர் போல காமராஜர் போல வரலாற்றில் நீடித்த நிலைத்த பேர் எடுக்க வேண்டும். அதற்கு உதவுபவர்கள் அதற்கு அச்சாரம் இடுபவர்கள் அதற்கு அறிவுரை சொல்பவர்களை அருகில் வைத்துக் கொண்டிருந்தால் நலன் பயக்கும்.

அதை விட்டுவிட்டு உங்கள் குடும்பம் சந்தர்ப்பம் என்று போய்க்கொண்டிருந்தால் வரலாறு உங்கள் பெயரை எழுதாது.

அரசியல் அவ்வளவு எளிதானது அல்ல அதேபோல் வருகிற 2026 தேர்தலும் உங்களுக்கு  உங்களின் கீழ் உள்ள திமுகவிற்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
#வாரிசுகள்திமுக
#தமிழகஅரசியல்
#சட்டமன்றதேர்தல்2026
#dyanaspolticsdmk

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
31-3-2024.


மாட்டுத்தொழுவம்..

அந்த காலத்தில் பால் மாடுகள் பசு, எருமை மற்றும் ஐந்து ஜோடி உழவு மாடுகள் என 1970 வரை கட்டிய மாட்டுத்தொழுவம்..
கிராமத்தில்….அப்படி பரபரப்பான ஒட்டு கட்டடம் .
அன்றைய கிராமிய விழுமியங்கள்….. இன்றைக்கு நினைவுகள். இன்றைய போக்கு இதை எல்லாம் விழுங்கி விட்டது.
#கரிசல்மண்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
31-3-2024.


won and achieved success...

You know the strongest factor for success is self-esteem is believing you can do it, believing you deserve it, believing you will get it, believing difficult roads often lead to beautiful destinations.Magic is believing in yourself, if you can do that, you can make anything happen. If you are thinking positive during negative times, and distance yourself from negativity great things will happen and it means that you've already won and achieved success...

#ksrpost
31-3-2024.

Saturday, March 30, 2024

1979 இல் கலைஞருடன் அடியேன்…. உடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகி தி.சு. கிள்ளிவளவன் மற்றும் அகிலன் கண்ணன். பழ. நெடுமாறன் அவர்களின் புத்தக வெளியிட்டு விழாவில். KSR- கேஎஸ்ஆர்போஸ்ட்

1979 இல் கலைஞருடன் அடியேன்….
உடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகி தி.சு. கிள்ளிவளவன் மற்றும் அகிலன் கண்ணன். பழ. நெடுமாறன் அவர்களின் புத்தக வெளியிட்டு விழாவில்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-3-2024.


#*கணேசமூர்த்தி*…. #*வைகோ*? #*மதிமுக* #*பம்பரம்*

#*கணேசமூர்த்தி*…. #*வைகோ*? 
#*மதிமுக* #*பம்பரம்*
| KS Radhakrishnan Interview | MDMK | Trichy https://youtu.be/ykyMsk2W8iA?feature=shared

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-3-2024.

#*நான் பார்த்த அரசியல்*…. #*எனதுசுவடுகள்*…. #மதிமுக., #கணேசமூர்த்தி கடைசியாக சொன்னது! | தவறு எங்கே எல்லோருக்கும் தெரியும்

#*நான் பார்த்த அரசியல்*….
#*எனதுசுவடுகள்*….

#மதிமுக., #கணேசமூர்த்தி கடைசியாக சொன்னது! | தவறு எங்கே எல்லோருக்கும் தெரியும் 
https://youtu.be/DlAcNvSedTY?si=3kE7lJhja0LVzcYD

#தமிழகஅரசியல்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-3-2024.

*Your WORDS will either give you joy or give you sorrow, but peace if they were spoken without regret*

*Your WORDS will either give you joy or give you sorrow, but peace if they were spoken without regret*. Words spoken has invincible power, because  the words you speak can either build a jail around you with only see limitations, or  set you free to live your life without any limits. It is like keys if you choose them right, they can open any heart and shut any mouth. Understand don't waste words on people who deserve your silence. Sometimes the most powerful thing you can say is nothing at all. Make others feel your silence isn't empty, it's full of answers....

Friday, March 29, 2024

BBC - MDMK மதிமுக பழைய சங்கதிகள்

https://www.bbc.com/tamil/articles/cpekp475v48o?fbclid=IwAR0AbwO3Tm8L7Jq2sNptv5Gz1mw9yjqMROo_gxGls02hTHu51CtQBCW3uPs

*Start from where you stand, work whatever ideas and tools you may have at your command

*Start from where you stand, work whatever ideas and tools you may have at your command* then better tools and ideas will be found as you go along. Ideas are the beginning points of all fortunes. Believe you  have the power to transform your ideas into physical reality. Understand by doing so you can be sure of maintaining that state of mind known as a burning desire to win.Yes when you are able to maintain your own highest standards of integrity regardless of what others may do you are destined for greatness... 

Thursday, March 28, 2024

கணேச மூர்த்திகள் ….. பெண்கள் பொது வெளியில் தேவையற்று சிரிக்க கூடாது .ஆண்கள் பொது வெளியில் அழக்கூடாது.

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்!  பெண்கள் பொது வெளியில் 

தேவையற்று சிரிக்க கூடாது .ஆண்கள் பொது வெளியில் அழக்கூடாது.

இது ஒரு மரபு இந்த மரபு ஏன் பாதுகாக்கப்படுகிறது என்றால் இந்த இரண்டிலுமே சமூகம் சந்தித்த கோளாறுகள் அதிகம்.

மிகுந்த அனுபவங்களுக்கு பிறகு தான் இத்தகைய முடிவுகள் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன.

  மதிமுகவின் ஈரோடு கணேச மூர்த்தி அவர்களின் மறைவிற்கு வைகோ குலுங்கி அழுகிறார். சரிதான் … துயரம்

எதற்கு இந்த அழுகை ?என்ன அப்படி துக்கம் பற்றிப் பரவுகிறது. உங்கள் ஏற்பாட்டின் படி தேர்வின் படி அவரை மூன்று முறை நாடாளுமன்றத்திற்கும் ஒருமுறை  1989இல் திமுக சட்டசபைக்கும் பரிந்துரைத்து ஜெயித்தார்.

பிறகு என்ன தான் அவருக்கு குறை ஏன் இறந்துவிட்டார். உங்களுக்கு ஏன் துக்கம்.

அப்படி அவர் உங்களுக்கு கொடுத்த விசுவாசத்திற்கு நீங்கள் கொடுத்த கொடுப்பினைகளுக்கு நாங்கள் சங்கடப்பட ஏதுமில்லை.

1996 சட்டமன்றத் தேர்தலில் மதிமுக சார்பில் நூற்றி என்பது பேர் போட்டியிட்டு நான்கு பேர் தான் அதில் வெற்றி பெற முடிந்தது.
கோவில்பட்டி தொகுதியில் அதிக வாக்கு பெற்று கூட நான் அதில் தோல்வி அடைந்தேன் என் போன்றோர் தவிர.
பல இடங்களில் மதிமுக டெபாசிட்டைக் கூட காப்பாற்ற முடியவில்லை. பம்பர சின்னம் பெற பாடுகள்.

எத்தனை பாடுகள் எத்தனை சிரமங்கள் எத்தனை விதமான பிரச்சாரங்கள்  அலப்பறைகள் மதிமுக நிலைத்து ஒரு நதியைப் போல ஓடிக் கொண்டிருக்கும் என்று நம்பி அதில் உழைத்த திமுகவை விட்டு வெளியே வந்த எங்களை போல எத்தனை பேருடைய கனவு  தமிழ்நாட்டின் அரசியல் வாழ்க்கையில் வீணாகப் போய்விட்டது .

வைகோ குலுங்கி குலுங்கி அழுகிறார். யாருக்காக அழுகிறார்? அவருடைய வாரிசுகளுக்காக அவர் அரசியல் பங்கு பற்றலின் சுயநலத்திற்காக மதிமுகவின் உன்னதமான மிகச்சிறந்த தனித்துவமான மாற்று அரசியல் நிலைப்பாட்டை தமிழகத்தில் கொண்டுவர வேண்டிய வந்திருக்க வேண்டிய வலிமைகளை இழந்து போய்  ஏன் அழுகிறார்.

நடந்தது என்ன அரசியல்வாதிகளின் பல பேருடைய மரணம் கிரிமினல் மரணமாக தமிழக வரலாற்றில் முடிந்து இருக்கிறது. ஆனால்  

மதிமுகவை நம்பி வாழ்ந்தவர்கள்  எங்களை போன்ற பலரின் இருப்பு என்பது ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தவிர  இன்றளவில் துக்கரமான சிவில் மரணங்களாக மாறிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் உண்மையில் எதற்காக அழுகிறீர்கள் வைகோ.

வாரிசு அரசியல் கூடாது என்பதற்காக கம்பு சுழற்றினீர்கள் இன்று திமுகவில் உங்கள் அரசியல் வாரிசு ஆன துரை வைகோவை பாராளுமன்றத்தில் நிப்பாட்டுவதற்கு கடின முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
  கணேச மூர்த்திகள் முடிந்து விட்டார்கள். வாரிசு எதிரி என சொன்னது நீங்கள்…. ஆனால்,இப்பொழுது உங்கள் மகன்  தந்தைக்காகத்தான் அரசியலுக்குள்  வந்தேன் என்கிறார் . நீங்கள் வேறு பாவம் ஏன்அழுது கொண்டிருக்கிறீர்கள்.

கண்ணீரைத் துடையுங்கள். எங்களுக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது.

#வைகோ
#வாரிசுஅரசியல்
#கணேசமூர்த்தி
#மதிமுக


#கேரளாவில் இந்தியா கூட்டணி நிலை CPMvsCongress -தமிழகத்தில்⁉️

#கேரளாவில்இந்தியா கூட்டணி நிலை

ராகுல் - காவேரி

*சரி , தமிழகம் தங்களுக்கு பிடிக்கும்… அப்படியே அந்த #காவேரி தண்ணீயை  தமிழகத்துக்கு உங்க கர்நாடக முதல்வர் சித்தராமையா விட சொல்லுங்க*…




காவேரி, கபினி, கிருஷ்ணா, துங்கபத்திரா.. என பத்து பெரிய நதிகள் பாயும் கர்நாடகாவின் பெங்களுரில் தண்ணீர் பஞ்சம் என்கிறார் சித்தராமையா…
ஆனால் நமக்கு காவேரி முக்கிய நதி தீரம். 

தட்டோடு வீசுனதுக்கு அப்புறம் 
தண்ணியே இல்லை காவிரியில்.. 
இன்றைய நிலை…

#*காவேரி*
#cauvery

அனபு நண்பர் ஈரோடுகணேசமூர்த்தி

*அனபு நண்பர் ஈரோடுகணேசமூர்த்தி காலமானார்*…. 
*வேதனை*.. 
*ஆழ்ந்த இரங்கல்*.

*இரவில்  கடந்த நாட்களில் தன் நிலைமையை  சொல்லி என்னிடம் பேசுவார். அவரிடம் மதிமுக ஆரம்பகட்ட   முக்கியமாக இருந்த இன்னும் ஒன்றும் பெறா சிலர் பொன் முத்தராமலிங்கம், அடியேன்,மாமீ,தங்கவேலு  போன்றோர் பல ரணங்களை ஏற்று இருக்கிறோம்.  நீங்களாவது ஒரு முறை எம்எல்ஏ, மூன்று முறை எம்பி சில தேர்தலகளில் வாய்ப்பை பெறமுடிந்தது . உங்களுக்கு என்ன விவசாயம், நல்ல குடும்பம் உள்ளது என சொல்லி அவரை ஆறுதல் படுத்துவேன்*. 

ஐயையோ மதிமுகவில் பயணித்த உணர்வுள்ள ஒரு மனிதர்  மதிமுகவுக்காக  உழைத்த தன் உயிரையே இழந்திருக்கிறார்.

தொண்டர்களின் தற்கொலையில் உருவான 
ஒரு கட்சி 
ஒரு எம்பியின் தற்கொலையில் முடிவுக்கு வந்திருக்கிறது.


#ksrpost
28-3-2024.


Wednesday, March 27, 2024

*மெல்ல மெல்ல அரசியல் அடையாளத்தை நீக்கத்தை இடதுசாரியம் பேசுகின்ற கட்சிகளே செய்கின்றன. நான் இடதுசாரி அல்ல. ஆனால் எனது பார்வையில்*….

*மெல்ல மெல்ல அரசியல் அடையாளத்தை நீக்கத்தை இடதுசாரியம் பேசுகின்ற கட்சிகளே செய்கின்றன. நான் இடதுசாரி அல்ல. ஆனால் எனது பார்வையில்*….

இடதுசாரியம் என்பது இராண்டாம் அகில அரசியலே இன்றுமுன்னிறுத்தப்படுகின்றது, ஒப்பிக்கப்படுகின்றது.  ஆனால் லெனின், ஸ்டாலின், மாவோ தமக்கான கோட்பாட்டை படைத்தார்கள். 

ஆனால் தமக்கான கோட்பாட்டை வகுக்காமல்  அகிலத்தில் காலத்தைய திரிபைமுன்னிறுத்துகின்றார்
கள்.  இது சமூகத்திற்கு எவ்வித பயனும் தரப் போவதில்லை,

 இன்றைய நிலையில் போலி  முழக்கங்களையும்
விளங்கிக் கொள்ள முடியும்.

#ksrpost
27-3-2024.
*விசித்திரமானது நமது வாழ்க்கை பயணம்*. இங்கே யாரும் யாரையுமே, எதையுமே புரிஞ்சுக்கறதே இல்லை. அப்படிப் புரிஞ்சுக்காமலும் தெரிஞ்சுக்காமலும் வாழ்கிறோம் வழி தெரியாமல்.பொய்யாச் சிரிச்சு, பொய்யா வாழ்த்துகள் சொல்லி,பொய்யாப் பழகி, பொய்யாவே வாழ்ந்துட்டுப் போற வாழ்க்கை தான் வாழ்கிறோம் வேறு வழியின்றி.
உறவுங்கறதையும் நட்புங்கறதையும் சும்மாப் பேச்சுத் துணைக்கு தேவையென்றால் பயன்படுத்திக்
கொள்கிறோம்.

யாரோடும் யாரும் உண்மையாய்இருப்பதில்லை. அவரவர் வாழ்க்கை அவரவருக்கு
இது இனி மாறுமா என்பதும் சந்தேகமே.

சந்தேகத்திற்குரியதை காரியங்களை,அற்ப நபர்களை பார்க்காதே.
சந்தேகத்திற்குரியதை சேதிகளை கேட்காதே.

It is only because of commissions and omissions of Mr Vaiko from 1998….. மதிமுக பம்பரம்

*"பம்பரம் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது”*

ஒரு தொகுதிக்காக பொது பட்டியலில் உள்ள பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு வழங்க சட்டவிதிகள் இல்லை என தேர்தல் ஆணையம் வாதம்.

வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இந்த வழக்கிற்கு தீர்வு காண இயலாது.

2010ஆம் ஆண்டு மதிமுக அங்கீகாரத்தை இழந்துவிட்டது- நீதிபதிகள்.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. It is only because of commissions and omissions of Mr Vaiko from 1998…..

இன்றைய அரசியல்…

முக நூலில் இந்த பதிவை வாசித்த பின்…
வேட்பாளர்  பட்டியல்  வந்ததிலிருந்து என் மன ஓட்டத்தில்  இருந்ததை பிரதிபலிக்கிறது . சுமார்  80 % இடங்களில்  ஒவ்வொரு  கட்சிக்கும் பங்கீடு செய்து  வெற்றி  நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
•••••••
Muru Theivasegamani

நேற்று முந்தினம் ஊட்டியில் வேட்புமனு தாக்கலின்போது போலீஸ் தடியடியில் தலையில் அடிபட்ட பாஜக தொண்டர், மூளையில் ரத்த கசிவின் காரணமாக உயிரிழந்தார். உடனே நாம் போலீஸின் மீதும் ஆட்சியாளரின் மீதும் கோபப்படுவோம்! தொண்டர்கள் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு சாவோம். ஆனால் தமிழகத்தில் தேர்தலில் யார் ஜெய்க்க வேண்டும், யார் தோற்க வேண்ட என்று முடிவுகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. கனிமொழி முதல் கார்த்திக் சிதம்பரம் வரை பாஜக அவர்களுக்கான வெற்றியை ஏற்கனவே கிஃப்டாக கொடுத்துவிட்டரு, அதை எடுத்துக்கொள்வது மட்டுமே அவர்கள் திறமை. இதை விரிவாக எழுதுகிறேன்..

பாஜக 15 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும். அடுத்த நிலையில் திமுக, அதற்கடுத்து அதிமுக. கிட்டத்தட்ட எந்த தொகுதியில் யார் ஜெய்ப்பார்கள் என்பதை திட்டவட்டமாக நம்மால் சொல்ல முடியும்..

இன்று நான் சொல்வதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்த தேர்தலுக்கு பின்பு தமிழகத்தை கொள்ளை அடித்த திமுகவின் கோலமால்புர குடும்பத்தின் வீழ்ச்சி தொடங்கும். கோல்மால்புர குடும்பம் முதல், காந்தி குடும்பம் வரை யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள். ஆனால் அவர்கள் பேருக்கு அரசியல் செய்துவிட்டு, மோடியிடம் சத்தமில்லாமல் சரண்டர் ஆகிவிட்டு போவார்கள்.

இதில் ஒருசில தலைவர்கள் கட்டுக்குள் வராதபோது, அவர்கள் மீது சட்டம் பாயும்! அவர்கள் செய்த ஊழல்களால், சுற்றிவளைக்கப்பட்டு சூழ் நிலை கைதிகள் ஆவார்கள். 

என்வே அரசியலில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தேர்தலுக்கு நாம்தான், நம் உழைப்புத்தான் வெற்றியை தீர்மானித்தது என்று உங்கள் உழைப்பை, பணத்தை, நேரத்தை செலவிடாதீர்கள்.

மோடி நல்ல தலைவர், ஊழல் செய்யாதவர், நாடுக்கு பல முன்னேற்றங்களை கொடுப்பார். ஆனால் அவர் சொல்லியது போல ஊழல் தலைவர்களை தண்டிப்பார் என்றெல்லாம் எதெபார்க்க வேண்டாம். ஆனால் வருங்காலத்தில் ஊழல்கள் குறைந்து, வளர்ச்சி பெருகி நல்லாட்சி மலரும். 

எனவே தவறாமல் ஊழலற்ற, நல்ல கட்சிக்கு, நல்ல தலைவர்க்கு, நல்ல வேட்பாளர்க்கு தவறாமல் வாக்களியுங்கள்!

நாம் உழைக்காவிட்டால் நம் குடும்பம் கரைசேராது என்பதை புரிந்துகொண்டு, தேவையில்லாமல் அடிபட்டு சாகாதீர்கள். 

இந்த நேரத்தில் ஊட்டியில் இறந்த பாஜக தொண்டனுக்கு மட்டுமல்ல அர்சியலில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் அப்பாவி ரொண்டனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்பது அதை புரிந்துகொண்டு தவறு செய்யாமல்.தவிர்ப்பதே! 

விரிவாக எழுதுகிறேன் ✍🏼🔗👇🏽
facebook.com/share/p/PZziTR…
🐶
#Indhea

அரசியல் தலைவர்கள் ரகசிய தேர்தல் உடன்பாடு!  தொண்டர்களே, அடிபட்டு சாகாதீர்கள், முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள்!

Tuesday, March 26, 2024

#*மதிமுகவின் பம்பரச்சின்னம் வரலாறு*

#*மதிமுகவின்
பம்பரச்சின்னம் வரலாறு*
————————————
மதிமுக துவங்கப்பட்ட உடனே 
மயிலாப்பூர் மற்றும் பெருந்துறைக்கான இடைத்தேர்தல் நடந்தது. அதில் மயிலாப்பூருக்கு பஸ் சின்னமும் பெருந்துறைக்குப்  பம்பரச் சின்னமும்  ஒதுகப்பட்டது.

 கடந்த   1996  நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற  பொதுத் தேர்தலில் 180 இடங்களில போட்டியிட்டு மதிமுக, வைகோ ( விளாத்திகுளம்), அடியேன் (கோவில்பட்டி) தங்கவேலு (சங்கரன்கோவில்) சட்ட பேரவை முன்னாள் துணை தலைவர் வேடசந்தூர் பாலசுப்பிரமணியம் என நான்கு பேரும் மட்டும் டெபாசிட் வாங்கினோம். இதில் எனக்கு அதிக பட்சமாக வாக்குகள் கிடைத்தன. அந்த தேர்தலில் மதிமுகவுக்கு என குடைச்சின்னம் அணைத்து தொகுதிகளும் வழங்கப்பட்டிருந்தது

பின் தேர்தல் முடிவுகள் படி தேர்தல் ஆணையம் மதிமுக அங்கிகாரம் ரத்து செய்து குடைச்சின்னமும் முடக்கப்பட்டு விட்டது.  1998 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே வைகோவும் நானும் டெல்லிக்குச் சென்று அங்கேயே  தங்கி இருந்து தேர்தல் கமிஷனரிடம் முட்டி மோதி பேசிப் இந்தப் பம்பரச் சின்னத்தை வாங்கினோம்.

கிட்டத்தட்ட இரண்டு வாரம் நான் 1998 டெல்லியிலேயே அசோகா யாத்திரா நிவாஸில் தங்கி இருந்தேன். வைகோ புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி (அன்று அவர் எம்பி) வீட்டில் தங்கினார்.

தேர்தல் ஆணையரின் எம்.எஸ்.கில் அலுவலகத்திற்கு தினமும் போய் அவருடன் அமர்ந்து பேசிவிட்டு தேநீர் அருந்தி வருவேன். பிறகு ஒரு கட்சி  இரண்டு மூன்று தொகுதிகளுக்குமேல்தனது  தனது வேட்பாளர்களை நிறுத்தினால் ஒரு குறிப்பிட்ட சின்னத்தை அவர்களுக்கு வழங்கலாம் என்று ஒரு சிறப்பு உத்தரவை  ஆணையர் பிறப்பித்தார். இதுதான் பம்பரச் சின்னத்திற்கான வரலாறு. இதற்கு வழக்கறிஞர்கள் முன்னள் மத்திய சட்ட அமைச்சர் சாந்திபூஷன், பிரசாந் பூஷன்
ஆலோசனையும் வழங்கினர்.

பெருந்துறை இடைத்
தேர்தலில் பெற்ற சின்னம் கிடைத்தால் நல்லது மு. கண்ணப்பன் என சொன்னார்

அப்படி அரும்பாடு பட்டு வாங்கி வந்த பம்பரச் சின்னத்தில் வட சென்னை வேட்பாளராக நான் நிற்கவும்  வாய்ப்பு  இருந்தும் எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. இப்போது அந்த சின்னமே பிரச்சனை.

ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுபவர்களுக்கு தனி சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில், பம்பரம் சின்னம் கோரி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

••••

*"பம்பரம் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது”*

ஒரு தொகுதிக்காக பொது பட்டியலில் உள்ள பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு வழங்க சட்டவிதிகள் இல்லை என தேர்தல் ஆணையம் வாதம்.

வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இந்த வழக்கிற்கு தீர்வு காண இயலாது.

2010ஆம் ஆண்டு மதிமுக அங்கீகாரத்தை இழந்துவிட்டது- நீதிபதிகள்.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. It is only because of commissions and omissions of Mr Vaiko from 1998…..

போகட்டும் ஊழ்வினைகள் வந்து உறுத்து ஊட்டத் தானே செய்யும்.

#மதிமுகவின்_பம்பரச்சின்னம்
#mdmktopsymbol #mdmk
#ksrpost
#கேஎஸ்ஆர்post
25-3-2024.


சாதித்த ஆளுமை பிரபலர்களை தேவையில்லாமல் சிக்கலை கொடுத்து இன்சல்ட் செய்யும்போது

சாதித்த ஆளுமை பிரபலர்களை தேவையில்லாமல் சிக்கலை கொடுத்து இன்சல்ட் செய்யும்போது...

அந்த பிரபலருக்கு சமமாக நாமும் என திறமையற்ற, ஆற்றல்அற்றவர்களும் வளர்ந்ததுபோல சிலருக்கு மாயத்தோற்றம் வரும்தான். அவர்களின் சுய இன்பம். அவ்வளதான்….

Life is a drama full of tragedy and comedy. You should learn to enjoy the comic episodes a little more.

(இன்று திமுகவின் முக்கியனவர் என்னிடம் சொன்னது. முகநூல் பகுதி இதே கருத்தும் வேறு வகையாக தென் பட்டது)

#தகுதியேதடை 
#இன்றையஅரசியல்
#வாரிசுஅரசியல்
#ksrpost
26-3-2024.

Monday, March 25, 2024

கனிமொழி எந்த விதத்தில் நாடார்*? என விவாதம்

*தூத்துக்குடி, விருதுநகர் பகுதிகளுக்கு இன்று சென்ற பொழுது,  கனிமொழி எந்த விதத்தில் நாடார்*?  என சொல்ல முடியும் எனவும்….விருதுநகரில் போட்டியிடும் ராதிகா எந்த விதத்தில் தன்னை நாயுடு  என்று சொல்லிக் கொள்கிறார்?    என்று அங்கு உள்ள  பொதுமக்கள் இது குறித்து பேசியும் விவாதித்து  வருகிறார்கள். *இந்த சர்ச்சைகளுக்கு
(*controversies*)
காலதான் பதில்
சொல்லனும்*

இதற்கு இடையே இந்த சாதி ஒழிப்பு வீரர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை?

https://x.com/ksradhakrish/status/1772218933229261257?s=48&t=mJ-Q4yLvZG2SDXSXi7-7ow

*Life is too short to wait. If you're unhappy with your Life, it’s your responsibility to change It*.

*Life is too short to wait. If you're unhappy with your Life, it’s your responsibility to change It*. 
Yes if you are not happy about something, change it. If you're not where you want to be move.If you are not happy with your situation, don’t wait for the “perfect” moment and change it!. If you're discontentment outweighs your contentment, center yourself and get clarity. Life won't always hand you what you desire, it's up to you to take ownership and create your destiny and your own world..


Sunday, March 24, 2024

#மதுரைதலைநகராக_தென்தமிழகம்_எனமாநிலவேண்டும்..! திரு மோகன் குருசுவாமியின் பத்தி.. Mohan Guruswamy MOHAN GURUSWAMY’s column Small States: A Must for Better Governance.

#மதுரைதலைநகராக_தென்தமிழகம்_எனமாநிலவேண்டும்..! திரு மோகன் குருசுவாமியின் பத்தி..

Mohan Guruswamy
MOHAN GURUSWAMY’s column 
 Small States: A Must for Better Governance.
 
The creation of Telangana, almost sixty years after the people of the region first voiced their misgivings about being co-opted into Andhra Pradesh is yet another step in rationalizing and restructuring the Union of States that India is meant to be. India was never meant to be a union of linguistic states, but a union of well governed and manged states. This creation in 2014 has fully justified itself when Telangana, once among the poorer agro-climatic zones in the country, posted the fastest SGDP growth and gained a place for itself among the high per capita income states.
 
Thus, the demand for newer administrative units will be a continuous one, one that seeks to bring distant provincial governments in remote capitals closer to the people. The BJP has from time to time stated that it was in favour of a Vidharba. Maywati has several times expressed a view that UP needs to be broken into three or four states. Even in Tamil nadu Dr.S.Ramadoss of the Pattal Makkali Katchi (PMK), a very regional political party had mooted a bifurcation of Tamil Nadu, with the northern districts being carved out to form a separate state.
 
Historically also there is some basis to this as the Tamil speaking region in the past comprised of kingdoms centered around Kanchipuram and Tanjore/Madurai. The late Jayalalithaa then shrilly denounced this demand as “secession” when the PMK only wanted a smaller state within the Indian Union. The Madras centered Tamil Nadu State we now know was the creation of the British. Similarly Andhra Pradesh, Karnataka, Maharashtra, Gujarat and other linguistic states have no historical basis. The yearning for linguistic sub-nationalism is a post-independence phenomenon.
 
The biggest states of India, Bihar, Madhya Pradesh, Rajasthan and Uttar Pradesh are also its worst off states and hence the acronym BIMARU for them is most appropriate. They are also predominantly Hindi speaking states and hence quite clearly there is no linguistic or historical basis for their creation and existence as they are. Yet within their blanket linguistic conformity these states cover a vast diversity of distinct regions, with characteristic commonly spoken languages, culture and historical traditions. Each of these states either in terms of landmass or population still would larger than most countries in the world. UP is larger in terms of population than Brazil, Japan or Bangladesh.
 
The late Dr. Rasheeduddin Khan most eloquently made out this case; of Hyderabad I would like to add, way back in April 1973 in the Seminar, at that time edited by the late Romesh Thapar. He had India divided according to its 56 socio-cultural sub-regions and a map showing these was the centerpiece of the article. That picture still remains embedded in my mind, and whenever I think of better public administration that map would always appears.
 
The Seminar map is a veritable blueprint for the structuring of India. Out of UP and Bihar eight distinct sub-regions are identified. These are Uttaranchal, Rohelkhand, Braj, Oudh, Bhojpur, Mithila, Magadh and Jharkhand. The first and last of these have now become constitutional and administrative realities. But each one of the other unhappily wedded regions is very clearly a distinct region with its own predominant dialect and history. For instance Maithili spoken in the area around Darbhanga in northern Bihar is very different from Bhojpuri spoken in the adjacent Bhojpur area. Similarly Brajbhasha in western UP is quite different from Avadhi spoken in central UP. India’s largest state in terms of area, MP, is broken into five distinct regions, Rajasthan, Gujarat and Maharashtra into four each, AP, West Bengal and Karnataka into three each, Tamil Nadu, Kerala and Orissa into two each, and so on.
 
Since 1971, India’s population has doubled to cross 1.3 billion. Even at constant prices (1980-81) the GNP has grown by ten times to the equivalent of $2.62 trillion. In 1971 the total money supply (M3) was Rs.11,019 crores, whereas it has now grown to over Rs. 2400,000 crores (twenty four lakh crores).. Naturally the size and scope of government has also changed. The 1980-81 budget of the Government of India was a mere Rs. 19,579 crores. It is now about Rs. 2000,000 crores. The annual budgets of state governments too have grown likewise.
 
The total population of India in 1947 was about 320 million. Today, we have about that number of people who are below the poverty line. In the meantime India has become a very youthful country with 70% of its people below the age of 30 of whom about 350 million are below the age of 14. Clearly the task of government is not only much more enormous, but also much more complex when the rising expectations, impact of new technologies and demographic changes are factored in. Our record so far is cause for great concern and is a severe indictment of the failure of the system of governance in India.
 
That “the nature of the regime determines the nature of the outcome” is a well-known adage in public administration and public policy studies. The nature of a regime is not only influenced by its constitution, guiding philosophy, and the consequent system of government, but also by the structure of the system. We know from experience, both in the corporate world and in public administration, that monolithic and centralized structures fail when the size and scope of the organization grows. In public administration this is called de-centralization. De-centralization not only implies the downward flow of decision-making but also greater closeness of the reviewing authority to the decision-making level.
 
Thus, if more decision-making flows to the districts and sub-districts, the state government, which is the reviewing authority, must also have fewer units to supervise. I have always held that the real concentration of power is not with the Central Government but with the State Governments. From the perspective of good governance, this is clearly unacceptable.
 
The “Report of the States Reorganization Commission, 1955” states: “Unlike the United States of America, the Indian Union is not an indestructible union composed of indestructible states. But on the contrary the Union alone is indestructible but the individual states are not.” It would be unfortunate if demands for the restructuring of India by creating more states are seen only as mere political contests, where the just causes of individual socio-cultural and agro-climatic regions is just a weapon of in the hands of out of work politicians deprived of a share of the benefits of office.
 
#மதுரைதலைநகர்
#தென்தமிழகம்


வைகோவின்வாரிசு.. *எத்தனை பேரின் பாவம்*…. *வைகோவுக்காக ஆறு தீக்குளித்தவர்கள் குடும்பம் என்ன நிலை*⁉️….

*எத்தனை பேரின் பாவம்*….
*வைகோவுக்காக ஆறு தீக்குளித்தவர்கள் குடும்பம் என்ன நிலை*⁉️…. 
*தி.மு.க-வின் வாரிசு அரசியல் காரணமாக வைகோ கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டபோது அதைக் கண்டித்து நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர், தீக்குளித்து மடிந்தனர். அதன் பின்னர் தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ 1994 மே 6-ம் தேதி ம.தி.மு.க-வைத் தொடங்கினார். அப்போது அவருடன் தி.மு.க-வின் ஒன்பது மாவட்டச் செயலாளர்களும், 400 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் வந்தார்கள். எங்கள் பணிகள் மட்டுமல்ல இளமை, வாழ்க்கை, பொருள் என இழந்த எங்களை எளிதாக எடுத்து வைகோ கடந்தார். எங்கள் பாவம் உழைப்பு என்று அவர் பதில் சொல்லனும்*… 

*வைகோ 1998 முதல் இப்படி நிலைக்கு  தள்ளப்பட இந்த பையனின் (வைகோ மகன்)  ஆலோசனைகளும் ஒரு காரணம் (Reason) காரணிகள் என்பது விடயம்,ஏரணம்…. பிரயோகித்தலாகவும் மதிமுக இருந்த வைகோவின் வாரிசு*…

எங்க அப்பாவுக்கு தலைக்குனிவு வந்துவிடக் கூடாது என்பதற்காக அரசியலுக்கு வந்தேன் - -திருச்சியில் வைகோ மகன்,  என்ன? அப்பா மாதிரி நடிப்பு 

 தென்காசியில் ஐடிசி சிகரெட் கம்பெனி ஏஜெண்டா இதுதான் கேள்வி 

 ஆமான்னு சொல்லு ஒன்னு இல்லன்னு சொல்லு 

 பின்னாடி இருக்கிறவங்க சும்மா நின்னு இருக்குறானுங்க அவனுங்கள பார்த்து ஒன்னும் பதட்ட பதட்டப்படாதீங்க அப்படின்னா  என்ன அவங்களை தூண்டி விடுறுது

•••

*அ. கணேசமூர்த்தி, இவருக்கு
வைகோபல முறை எம்பி ஆக்கினார். உழைத்த எங்களை அழித்தார் வைகோ*.. *நாங்கதான் தற்கொலை செய்யனும்*.. *இவர்
*வைகோ மகனுக்கு நெருக்க மாச்சே*? *என்னை 1998 அந்த பையன் ஆலோசனையில் ஒழித்தார்*… *வைகோஅவர்களே*, *ஏகபட்ட*
*பாவ சுமைகள்* *உங்களிடம் உள்ளது*.

*நம் பாவத்தின் சம்பளம் அவர்  அனுபவித்துக் கொண்டிருப்பது. ஒரு பாராளுமன்ற சீட்டுக்காக அத்தனை தியாகிகளையும் அடமானம் வைத்து விட்டார். அவர்கள் ஆவி மன்னிக்காது*.

#vaiko #mdmk 
#வைகோ #மதிமுக

#*தமிழகஅரசியல்* 
https://x.com/ksradhakrish/status/1771837030722662661?s=48&t=mJ-Q4yLvZG2SDXSXi7-7ow



//நீலம் பூத்த கூந்தலோடு ஊதக்காற்று தழுவும்போது துள்ளும் அன்று அந்த பெண்ணின் உள்ளம் நூறு கவிதை சொல்லும்.//

//நீலம் பூத்த கூந்தலோடு ஊதக்காற்று தழுவும்போது
துள்ளும் அன்று அந்த பெண்ணின் உள்ளம் நூறு
கவிதை சொல்லும்.//

அத்தனை  எளிதாக  இந்த  அழகை  மட்டும்  பெற்றுவிட முடியாது.. இது  ஒரு  ஆன்ம பயணம்  என  அந்த  கண்களை பார்த்த  மாத்திரமே உரைத்து விடலாம். 
அன்றைய நினைவுகள்.. 1970கள்…


*You are never alone when you're reading a book*.

*Be brave* enough to take off the masks you wear and get to know who you are and to accept your flaws. Don't hide them.Understand it has made you human and  really who you are. Be confident enough to accept and value your strengths. They are beautiful gifts to share with the world. Be brave enough to say, who you are. And bravely say "I have made so many mistakes. I can be forgetful. But I am doing my best with what I’ve got. And I am so proud of that. I am so proud of me. And I am proud of who I am becoming" and keep moving. ..
•••

*You're never alone when you're reading a book*.



House of books- Paradise. 
My own pride 

#ksrpost
24-3-2023.

Be brave……

Be brave enough to take off the masks you wear and get to know who you are and to accept your flaws. Don't hide them.Understand it has made you human and  really who you are. Be confident enough to accept and value your strengths. They are beautiful gifts to share with the world. Be brave enough to say, who you are. And bravely say "I have made so many mistakes. I can be forgetful. But I am doing my best with what I’ve got. And I am so proud of that. I am so proud of me. And I am proud of who I am becoming" and keep moving. ..

Saturday, March 23, 2024

தோல்விகள் வலிதரும். அழுகை தரும். ஆனால் கூடவே அதை ஓங்கி மிதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தரும். தோல்வி சுவாரஸ்யமானது.

தோல்விகள் வலிதரும். அழுகை தரும். ஆனால் கூடவே அதை ஓங்கி மிதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தரும். 

தோல்வி சுவாரஸ்யமானது. 

சாதாரண வாழ்க்கையிலிருந்து கொஞ்சமாவது நகர்த்தத்தான் அது நம்மைத் தேடி வரும். 

வாடி ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என்று தன்னார்வமாக வந்து மோதும். அப்போதைக்கு வீழ்ந்தாலும் வலித்தாலும் பதிலுக்கு எழுந்து நின்று மோத வேண்டும். 

நம் வலியே பெரிதென நினைத்தால் அதே இடத்தில் தான் வீழ்ந்துகிடப்போம். 

யாராவது தூக்கிவிடுவார்கள் என்று நினைத்தால் அது இன்னும் மோசம். தூக்கும்போதே பாதியில் விட்டுவிடுவார்கள். அப்போது அடிக்குமேல் அடியாகும். வீழ்ச்சிக்கு மேல் வீழ்ச்சியாகும். எனவே நாமேதான் எழ வேண்டும். 

எத்தனை முறை வேண்டுமானாலும் வீழ்வோம். அத்தனை முறையும் எழுகிறோமா என்பதில்தான் வாழ்வில் சவாலே இருக்கிறது. 

புலன்களை இழந்தவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கை சவாலானது. போராடித்தான் வாழ்கிறார்கள். 

நமக்கு ஐம்புலன்களும் இருக்கின்றன. தோல்வி, வலி, வீழ்ச்சி, அது என்னை மட்டுமே தாக்கும் என்றெல்லாம் அழாமல் சமத்தாக எழுந்து நின்று ஓங்கி உதைப்போம் தோல்வியை.


இங்குள்ள நிம்மதி மதிப்பற்றது… எங்கள் குலத்தொழில்…. விவசாயம்…

இங்குள்ள நிம்மதி மதிப்பற்றது…
எங்கள் குலத்தொழில்….
விவசாயம்…

தொல்காப்பியம் பொருளதிகாரம் 112ஆம் சூத்திரத்தில் "வேளாண் பெரு நெறி" என்ற வரி வருகிறது. இதற்கும் இளம்பூரணர் வேளாண் என்பது உபகாரம், பெரு நெறி என்பது உபகாரமாகிய பெரு நெறி என்றே விளக்கம் அளித்துள்ளார். அதாவது இந்த இரண்டு சூத்திரங்கள் மூலம் நாம் அறிவது என்னவெனில், வேளாண் என்ற சொல்லுக்கு விவசாயம் என்ற பொருள் தமிழர் வழக்கில் கொடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. அதாவது இது உபகாரம் என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது. 

எட்டுத் தொகை நூல்களில் தலையாய நூலான கலித்தொகையில் ஒரு பாடலில் (101) வேளாண்மை செய்தன கண் என்று வருகிறது. அதாவது கண்கள் உபசாரம் செய்தன. கண்கள் உபசாரமாக செய்கை செய்தது என்ற பொருளே உரையாசிரிய மரபில் கூறப்பட்டுள்ளது. மேலும் நிகண்டுகள் என்ற சொல்லியல் தொகுதிகளிலும் வேளாண்மை என்ற சொல்லுக்கு விருந்தோம்பல் உபசரித்தல் என்ற பொருளையே வழங்குகிறது. 

#விவசாயம்_தமிழ்இலக்கியம்
#ksrpost
#23-3-2024.


*சுய உழைப்பு*, *சுய கௌரவம்*, *நடத்தையில் கண்ணியம்*, *அறம் தவறாமை. *இவையே ஒழுக்கம்*.



தனக்குத்தானே ஒளியாய் இருப்பதும், எந்த ஒருவரையும் சார்ந்திராமல் இருப்பதும் நமக்குச் சாத்தியம் தானா? 

தனக்குத்தானே ஒளியாய் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் பொருள், தன்னம்பிக்கை, தற்சார்பு, தன்னம்பிக்கை என்பது, தன்னலத்தின் ஒரு பகுதி, 'தான்' என்ற எண்ணத்தின் ஒரு பகுதி. 

ஆனால், தனக்கே ஒளியாய் இருப்பதற்கு, முழுமையான சுதந்திரம் மற்றும் மிகவும்
தெளிவான, பாரம்பரியம் மற்றும் பிறவற்றால் தளைபடாத, மூளை அவசியம் தேவை. மேலும், மிகுந்த
துடிப்பும், சுறுசுறுப்பும் வேண்டும்.

தன் சொந்தக் கருத்துகளில் துடிப்புடனும், தீவிரத்துடன் இருப்பதையோ, இருப்பதையோ மேன்மை….அது ஒரு நேர்ப்பார்வை. 

பிறரை/பிறவற்றை நீங்கள்
சார்ந்திருக்கும்போது, அந்த சக்தியை இழக்கின்றீர்கள்.

#தன்னம்பிக்கை, #தற்சார்பு

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
23-3-2024.

Trust yourself,

*Trust yourself,  what's meant for you will never pass you, it will happen for you in a way you never expected.. Nothing can get in the way of it or how it will enter your life. Believe wonderful changes  will take place in your life. The road ahead will be smoother for you, so do not fear moving ahead in your intended direction. The key is focus your mindset on your vision, and truly believe it will happen. Do not allow fears, mistakes from the past to effect or manipulate your mood or energies. Simply allow the experience to happen, and learn from it. Enjoy your life no matter what happens*
#KSR Post 
23-3-2024.


Friday, March 22, 2024

தொகுதிக்கு ஆற்றலார் இவர் என்று தேர்வு செய்யாமல் இவர்தான் இந்தத் தொகுதிக்கு என்று நிர்ணயப்பது எந்த வகையில் சரி*

*ஒரு தொகுதிக்கு ஆற்றலார் இவர் என்று தேர்வு செய்யாமல் இவர்தான் இந்தத் தொகுதிக்கு என்று நிர்ணயப்பது எந்த வகையில் சரி*? தமிழ்நாட்டில் அமைந்துள்ள மூன்று கூட்டணிகளின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தேன்.

இடம் பெற்ற இவர்கள் யாருக்கும் தமிழ்நாட்டின் பிரச்சனைகள், ந்தி நீர் ஆதாரங்கள் மற்றும் தமிழ்நாட்டுக்கு தேவையான பல்வேறு  திட்ட நலன்களை பற்றிய எந்த அறிவும் அதன் வரலாறும் தெரியாத யாரோ புதியவர்களாக இருக்கிறார்கள். 

இவர்கள் எல்லாம் யார் என்றே தெரியவில்லை? நாடாளுமன்றத்திற்கு போய் என்ன செய்யப் போகிறார்கள்?

#தமிழகதேர்தல்கள்2024
#TamilNaduElections
#தகுதியேதடை
#தமிழகஅரசியல்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-3-2024.

#சிலகசப்பான உண்மைகள்-கோபப் படும் நேரத்தில் கோபப் படவில்லை …. அந்த நிலையில் பேசவில்லை என்றால் கோமாளிகளாக ஆக்கிவிடுவார்கள் நம்மை..

#சிலகசப்பான உண்மைகள்-கோபப் படும் நேரத்தில் கோபப் படவில்லை …. அந்த நிலையில் பேசவில்லை என்றால் கோமாளிகளாக ஆக்கிவிடுவார்கள் நம்மை.. ———————————————————



#மனதிலுறுதிவேண்டும்,
#வாக்கினிலேயினிமைவேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்-#பாரதி 
••••
கோபப் படும் நேரத்தில் கோபப் படவில்லை …. அந்த நிலையில் பேசவில்லை என்றால் கோமாளிகளாக ஆக்கிவிடுவார்கள் நம்மை.. 

இந்த பதிவு ஆதங்கத்தில் எழுதப்பட்டது அல்ல 
ஒவ்வொருவரும் சுயநல வாழ்கையில் எதையோ நோக்கி ஓடுராங்க....... தொடங்கிய இடமும் தெரியல சேர போர இடமும் தெரியல.. 

இது உண்மைகளை சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவு. 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடனான மதிமுகவின் கூட்டணியில் வடசென்னை தொகுதியை எனக்கு என்று ஒதுக்கினார்கள். அப்போது அதிமுக சார்பாக வட சென்னை தொகுதிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரை மாற்றி அந்த இடத்தை எனக்கு தருவதாகப்பேச்சு.
ஜெயலலிதா அவர்களும் வட சென்னைத் தொகுதியை கே எஸ் ராதாகிருஷ்ணனுக்கு  கொடுத்துவிடுங்கள் என்று சொல்லித்தான் வைகோவிடம் தொகுதிப் பங்கீட்டை ஒப்படைக்கிறார்.

அதன்பின்தான் வைகோவின் கோளாறு மனம் வேலை செய்கிறது. முடிவில்  ஒரே சாதியைச் சார்ந்த நாயுடுகள் இருவருக்கு எப்படி வாய்ப்பு கொடுக்க முடியும் என்று கேட்டு எனக்கான அந்த வாய்ப்பை வைகோ மறுத்தும்  ஒத்தியும் வைத்தார். ஒரே சாதி என என்னை ஒதுக்கிய வைகோ தன் மகனையே கொண்டு வந்து விட்டார். இதில் உள்ள logic - அவரின் நேர்மை புரியல⁉️

தகுதியும் திறமையும் முக்கியமா? சாதி முக்கியமா? ஒரே சாதி என்று ஒருவரை தள்ளி வைக்க முடியுமா?  இப்படியான அற்பத்தனமான முடிவுகள் என சிலர் அப்போது இது குறித்து கேட்டதுண்டு. மதிமுகவிலிருந்ததை நான் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.
இது உண்மையில் நடந்தது. மிக சத்தியமாக என் தாய் மீது ஆணையாக  நடந்தது. 

 இதற்கு சாட்சியாக வெறும் சாட்சியாக மட்டும் இல்லாமல் மனசாட்சியாக இருந்தவர்கள் இருக்க வேண்டியவர்கள்
 மதுராந்தகம் ஆறுமுகம்,எல்  கணேசன் முன்னாள் அமைச்சர்கள்  கண்ணப்பன் செஞ்சி ராமச்சந்திரன்
பத்திரிகையாளர்கள் பி டி ஐ ராமசாமி அன்றைய இந்து ஆங்கில பத்திரிக்கையின்  கணபதி, தினமணி இன்றைய ஆசிரியர் கே. வைத்தியநாதன், கல்கிப் பிரியன் மை பா நாராயணன் போன்றவர்கள் பலரும்தான்.

அதற்குப் பின் வைகோ   நடந்தது கொண்டதெல்லாம் மறக்கவோ முடியாத செயல்பாடுகள். நான் கேட்கிறேன் அதே நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களை இருவரை வேட்பாளர்களாக திண்டிவனத்திலும் என்னிடம் பறித்த வடசென்னையிலும் போட்டியிட எப்படி வாய்ப்புத் தந்ததாராம் அந்த நல்ல வைகோ.

அதேபோல் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே சாதியைச் சேர்ந்த இருவரைப் பழனியிலும் திருச்செங்கோட்டிலும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட வாய்ப்பு தந்ததும்தான் வைகோவின் அடிப்படை நேர்மையா?
ஒரு கண்ணுக்கு  வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு. அப்படிப்பட்டவர் தான் வைகோ.

1998 இல் நாடாளுமன்ன வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்தவுடன் ஜெயலலிதா அவர்கள் என்னை அழைத்து வடசென்னை தொகுதியை உங்களுக்குத்தானே கொடுக்கச் சொல்லி வைகோவிடம் சொன்னேன். அதற்காகத்தானே ஜெயக்குமாரை கூட வேறு தொகுதிக்கு மாற்றினோம். ஏன் உங்கள் பெயர் இல்லை.
எனக்கு உங்களைத் தானே நன்றாக தெரியும் . ஈழ விவகாரத்தில் பிரபாகரனை  என்னிடம் அழைத்து வந்து சந்திக்க வைத்தீர்கள் ! உங்களுக்கு அந்த தொகுதியை ஒதுக்குவார் என்று தான் நான் கூட்டணி பேச்சு வார்த்தையில்  குறிப்பிட்டு இருந்தேன்! ஏன்அவர் உங்களுக்கு கொடுக்கவில்லை? என்று கோபமாக் கேட்டார் நான் வேறு ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்  என்று சொன்னேன். 

இதுகுறித்து  அதிமுக தொகுதி பேச்சு வார்த்தை குழு தலைவர்,தமிழக சட்டப்பேரவை தலைவராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா அப்போது அதிமுகவில்  பொருளராக இருந்தார் பிறகு திமுகவிற்கு வந்தார் .  அவர் என்னிடம்  “அம்மா தனிப்பட்ட முறையில் மிகவும் சங்கடப்பட்டார்” நீங்கள் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்று தானே விருப்பப்பட்டு அந்த தொகுதியை விட்டுக் கொடுத்ததாக சொன்னார்! பிறகு ஏன் இப்படி ஆகிவிட்டது உங்களுக்கு ஏன் அந்த சீட் கொடுக்கப்படவில்லை எனக் கேட்டார்.

அப்போது சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள ப்ரீஸ் ஹோட்டலில் ரம்ஜான் விருந்துக்கு வந்த ஜெயலலிதா அங்கே வந்திருந்த வைகோவுடன் முகம் கொடுத்து கூடப் பேசாமல் கொண்டு போய்விட்டார்.
 
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பிரச்சாரத்திற்கு சென்ற ஜெயலலிதா அவர்கள் வடசென்னை பிரச்சாரத்திற்கு மட்டும் வரவே இல்லை.

இதற்கும் பிறகு 2001 இல் திமுக மதிமுக கூட்டணி அமைய வைகோவை கலைஞருடன் பல பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் நான் சந்திக்க வைத்தேன். அச்சந்திப்பு நிறைவேறிய போது நடந்த ஒப்பந்த அளவுகள் என்ன அதன் பின் வைகோ தன்னிச்சையாக வெட்டிய மர்மம்தான் என்ன. இன்றைக்கு வரைக்கும் அந்த மர்மத்திற்கு விடை இல்லை. இணைத்து வைத்தவன் இங்கிருக்க கூட்டணியில் தவறாமல் மதிமுக எப்படியும் இடம் பெற்றுவிடுகிறது. . இந்தக் கூட்டணியை 2001 இல் நான் சந்திக்க வைத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த போது இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கு சுத்தமாக அது பிடிக்கவில்லை. அன்று மதிமுகவுக்கு 21 சட்டமன்ற தொகுதிகள் என கலைஞர் வைகோ ஒப்பந்தம் கையெழுத்தானது . தீடிர் என வைகோ சங்கரன்கோவில், சங்கிரி, சேரன்மாதேவி தொகுதிகளை பிரச்சனைகளை சொல்லி தேவையில்லாமல் ஏதோ தவறான நோக்கில் ஒப்பந்த்தை முறித்தார்.

பின், திண்டுக்கல் மண்டல திமுக மாநாட்டில் கலைஞரை பார்த்து வைகோ
அழுத்து ஏன் என தெரியல. இப்படி பல சம்பவங்கள் உண்டு. இப்படி அழுவம் கலைஞர் மீதுபாசம் என்ற நவரசமான நிகழ்வுகள்….பின கலைஞரின் கோபாலபுரத்துக்கு எங்கள் சாம்பல கூட 
போகாது என வைகோ சொன்னார். இப்படி பல எதிர் மறை வேடிக்கை காட்சிகள்.

பின்பு, என் முயற்சில் கலைஞரை வைகோவிடம் பேச வைத்து 2016 சட்ட மன்ற தேர்தலில் திமுக- மதிமுக கூட்டணி என்ற நிலையில் இருந்த போதும் தீடிர் என மக்கள் நல கூட்டணி என்று வைகோ 2001 மாதிரி திரும்பவும் வெட்டி விட்டு சென்றார். இன்றைய முதல்வர் ஸ்டாலினை வைகோவின் அண்ணா நகர் வீட்டிற்க்கும் கலைஞரின் விருப்படி அழைத்தும் சென்றேன்.  இருந்தும 2009 ஈழப்பிரச்சனை, வாரிசு அரசியலுக்கு எதிரான நான் திமுக கூட்டணியில் இருக்க முடியது என்று கூறி தன் லாபத்துக்கு வெளியேறினார். அப்போது நான்தான் வைகோவின் தப்பு தாளங்களுக்கு  கலைஞரின் கோப பார்வைக்கு ஆள் ஆனேன். ஸ்டாலினும் என்னை குத்தி காட்டியதும் உண்டு.

வாரிசு அரசியல் கூடாது. கட்சியின் முடிவுகளுக்கும் வாரிசுகளுக்கும் சம்பந்தமில்லை.
 கட்சிக் கொள்கையின் அடிப்படையிலான ஆட்சி முறை வேண்டும் என்றெல்லாம் உரக்கப் பேசி மேடைகளில் முழங்கிய வைகோ இன்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து  கூட்டணியில் எப்படி  மகனுக்கு மட்டும் இடம் கேட்டு அதைப் பெற்றுவிடுகிறார். மாமனிதர் வைகோ அந்த மாமனிதர் படத்தில் எனக்கு இடமில்லை.

ராமாயணம் பேசுவார் மகாபாரதம் பேசுவார் கிரேக்க தத்துவங்களை எல்லாம் பேசுவார். பேசியவர் இன்று அந்தப் பங்காளிகளுக்கு அருகில் போய் வசதியாக அமர்ந்துகொண்டார்.

வளரட்டும் வாழட்டும் வைகோவின் குடும்பங்களும் வாரிசுகளும் பிள்ளைகளும் குட்டிகளும். அன்று வாரிசு அரசியல் எதிர்ப்பு இன்று வாரிசு அரசியல் ஆதரவு

“தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்”

இப்படி எனக்கு பல வாழ்க்கை பாடங்கள

வாழ்க்கையில் எதுக்கும் கவலைப்படாதீங்க.

இழந்தது ஏதாவது ஒரு ரூபத்தில் இன்னும் அழகாக உங்களுக்கு திரும்பி வரும்.

இப்படி; நமது களங்கள் - தளங்கள் இழந்த உழைப்புகள், சொத்து, பணம், உறவுகள், வசதிகள் இழந்தது  எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக திரும்பி வரும்என்று உறுதியோடு நம்புங்கள்.

நிம்மதி கூட திரும்பி வரும். Most precious.

இழந்ததை நினைத்து வருந்தி கொண்டே இருந்தால், சிந்தனைகள் தெளிவாக இருக்காது. இலக்கு புரியாது. மேலும் மேலும் இழப்புதான்.

நடந்தது எல்லாம் நன்மைக்கே என்று கூறுவார்களே. அது உண்மையான கூற்று

போனது போச்சு. இனி நடக்கறதை நல்லதா இருக்கட்டும் என்று மனதை திருப்பி விட்டால், நிறைய சந்தர்ப்பங்கள் நமக்கு தென்படும்.

ஆழ்மனதிலே இந்த Knot ஐ நன்றாக 
பதிய வையுங்கள்.

எதை இழந்தோமே, அதைவிட பல மடங்கு அழகாக சிறப்பாக திரும்பி நமக்கு வரும்.

இது பலர் அனுபவம். நம் வாழ்க்கையையே திரும்பி பார்த்தால், இது போன்ற நிகழ்வுகள் கண்டிப்பாகஇருக்கும்.விட்டதை விட சிறப்பாக பிடித்து இருப்போம்.

திரும்ப திரும்ப எண்ணும் எண்ணங்கள் செயலாக கண்டிப்பாக மலரும்.

#தகுதியேதடை

#தகுதியேதடை
#திமுக #dmk
#கலைஞர் #Kalaignar
#Stalin #ஸ்டாலின்
#அதிமுக #ஜெயலலிதா
#admk #Jayalalitha
#mdmk #vaiko
#மதிமுக #வைகோ
#TamilNaduElections
#tamilnadupoltics
#தமிழகதேர்தல்கள்
#தமிழகஅரசியல்
#சிலகசப்பான_அரசியல்உண்மைகள் 

#கேஎஸ்ஆர்போஸ்ட்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-3-2024


Thursday, March 21, 2024

முதல் தேர்தல் சின்னங்கள்.. 1951-52 இந்தியப் பொதுத் தேர்தல் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 25 அக்டோபர் 1951 முதல் 21 பிப்ரவரி 1952 வரை இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

*சில்லறைக்குத்தான்*
*எத்தனை இரைச்சல்*         -*லாசரா*

அரசியல் கொள்கை-சாதியம் பற்றிய புரிதல் இல்லாத சில்வண்டுகள் இரைச்சல் அதிகமாகவும், அரசியல்  மரபுகளை புரிதல் அற்றும் உள்ளது.
•••
முதல் தேர்தல் சின்னங்கள்..
1951-52 இந்தியப் பொதுத் தேர்தல் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 25 அக்டோபர் 1951 முதல் 21 பிப்ரவரி 1952 வரை இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான முதல் மக்களவையின் 489 உறுப்பினர்களைவாக்காளர்கள் தேர்ந்தெடுத்தனர்.
அன்று திமுகவுக்கு உதயசூரியன் இல்லை. பின்தான் கிடைத்தது.
#ParliamentaryElection2024
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
21-3-2024.


Wednesday, March 20, 2024

தமிழக ஊடகங்கள்..

#தமிழகஊடகம் சார்ந்த பெரும் முதலாளிகள் முதல் கீழ் நிலை பணியாளர்கள் வரை ஆளுங்கட்சி கண் அசைவுக்கு காத்து கொண்டுள்ளார்கள். இதில் ஊடகம் சார்ந்த  அறம் எங்கே உள்ளது.

ஊடகம் அறம் சார்ந்து நடுநிலையோடு இயங்காது. நாட்டின் விடுதலைக்கு போராடிய பத்திரிகைகள் இன்றைக்கு தரம் தாழ்ந்து, விளம்பரத்துக்கும் இன்னும் இத்தியாதிகளுக்கும், ஆளுங்கட்சி கண் அசைவுக்கு காத்து கொண்டு உள்ளது.

இந்த ஊடகத்தால் ஏழைகளுக்கும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் என்ன லாபம்...

ஊடகங்கள் இன்றைக்கு ஆளும் கட்சியின் விளம்பர பிரிவாக இயங்கி கொண்டு உள்ளது.

தேர்தல் என்று வந்துவிட்டால் மக்கள் சார்ந்த பிரச்சனைகள் பின்னுக்கு தள்ளி, ஆளும் வர்க்கத்தின் அடி வருடிகளாக மாறிப்போச்சு.

#தமிழகஅரசியல்
#tamilnadupoltics
#dmkfails

Tuesday, March 19, 2024

There is a will there is a way.. தப்பிக்காதீர்கள், தேடாதீர்கள். ஆனால் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்ற உண்மையை எதிர்கொள்ளுங்கள்.

There is a will there is a way..

தப்பிக்காதீர்கள், தேடாதீர்கள்.
ஆனால் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்ற உண்மையை எதிர்கொள்ளுங்கள். 

நம்மிடம் ஒரு கோட்பாடு உள்ளது; ஒரு நம்பிக்கை, ஒரு கருத்து, ஒரு சூத்திரம் உள்ளது - ஒரு உண்மை இருக்கிறது, பேரின்பம் இருக்கிறது, சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒன்று இருக்கிறது என்று. நாம் அதை ஒரு இலக்காக, ஒரு இலட்சியமாக, ஒரு திசையாக நிர்ணயித்துக்கொண்டு, அந்த திசையில் நடக்கிறோம்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட திசையில் நடக்கும்போது அல்லது சிந்திக்கும்போது, உங்கள் மனதில் இடம் இருக்காது. ஏனென்றால் உங்கள் மனம் பற்றுதல்களாலும், அச்சங்களாலும், இன்பங்களைத் தேடுவதாலும், பதவி, அதிகாரம் என்ற ஆசைகளாலும் நிரம்பி வழிகிறது.

இடம் அவசியம்.
முழு கவனம் இருக்கும் இடத்தில் திசை இல்லை. எனவே, இடம் உள்ளது.

நீங்கள் இந்த உண்மையைப் பார்த்தால் - அதன் வாய்மொழி விளக்கத்தை அல்ல - ஆனால் விவரிக்க முடியாத உண்மையை பார்த்தால் - பிறகு மனம் அசைவற்று இருக்கும்; அமைதியாக இருக்கும்.

அமைதியான மனம் என்பது அவசியம்.
அங்கிருந்து நீங்கள் தொடங்க முடியும்.

வாழ்க்கையில் சில பாடங் கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும். சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்கள் தரும். இங்கேயும் ஒரு சாதாரணமான மனிதனையும் ஏற்படும் சூழல் மாற்றி மாற்றி வைக்கிறது. 
நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வேறு ஒன்றாக இருக்கிறது. எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபட தவிக்கிறோம். இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே அது தான் தன் நம்பிக்கை வாழ்க்கை.


During 1970s our student politics days*….. #*Sharad Yadav*, #*Mulayam Sing Yadav*, #*Lalloo Yadav*, #*Ram Vilas Paswan* -KSR

*During 1970s our student politics days*…..

#*Sharad Yadav*, #*Mulayam Sing Yadav*,
#*Lalloo Yadav*, 
#*Ram Vilas Paswan*. The four who were at the front of removing the  Congress from power for the first time.  All four started challenging the hegemony of political leaders whilst students. Sharad studied at the Robertson College and then the Engineering College at Jabalpur and was quite a headache for the authorities.  Mulayam studied at Etawah and then Agra, did a MA, obtained the necessary qualifications to become a school teacher and joined a school to teach. Lalloo Yadav studied in his village school and then came to Patna, then a centre of learning, to become a lawyer. He then worked as a clerk in a local veterinary college where his brother worked as a peon. The most memorable act on his part was his refusal to receive an honorary doctorate from Patna University in 2004. 'Give it to those who have earned it', he told the Vice Chancellor. Ram Vilas Paswan too studied at the Patna University. It is said that after his graduation he was selected as a Deputy Superintendent of Police in Bihar Police but preferred to contest elections and become an MLA. In the absence of a plan to create a new India, all four, despite their considerable political achievements, eventually dissolved into the Congress eco-system once the Congress eco-system regained the trust of the  people. #NitishKumar was Patna engineering college student.

#ksrpost
19-4-2024.


#இன்றைய குடும்ப அரசியல் #தமிழகம்.

யார் எப்படி போனா என்ன,
நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்.. இன்றைய அரசியல் பேரங்கள்… அரசியல் வியாபாரிகள் -கட்சிகளின் காட்சி பிழைகள். அறம், தர்மம்,வாய்மை எதுவும் கூடவே கூடாது. இதுவே இவர்களின் தன் நல அரசியல் தத்துவம்.

#இன்றைய அரசியல்
#தமிழகம்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
19-3-2024.

அதையும் பின்நவீனத்துவம், இருத்தல் நிமித்தம் என்போம்.

பொய்களை,  புனைவுகளைக்
கட்டமைப்பது எளிது.
உண்மைகளை நிஜங்களை நெருங்குவது
நெருப்பில் நடப்பது போல!

புனைவுகள் சுகமானவை.
அதைப் போர்த்திக் கொள்வதும்
கிழித்து எறிவதும்
எரிப்பதுமாக.
எப்படியும்
புனைவுகள் புதிதாகப் பிறந்துக் கொண்டே இருக்கின்றன.
நிஜங்களை விழுங்கி
ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.
இனி நிஜங்களை தொடாதீர்கள்.
விட்டுவிடுங்கள் என சொல்லி விட்டு போலியாக வாழ்வோம்.
அதையும் பின்நவீனத்துவம், இருத்தல் நிமித்தம் என்போம்.


நிறைவாகும் வரை மறைவாக இரு! - சகா சொல்வார்.

நிறைவாகும் வரை மறைவாக இரு! - 
சகா சொல்வார்.

இது முழு உண்மை உளவியல் ரீதியாக எப்பொழுதும் துணிச்சலை இழக்காதீர்கள் பயம் உங்கள் அடைக்கும் பொழுதும் கூட துணிச்சலுடன் இருங்கள் இருப்பது போல் நடிப்பை காட்டுங்கள்.

பூட்டுகளும் சாவிகளோடு தான் தயாரிக்கப்படுகின்றன அது போலவே எல்லா  ரணமான சூழ்நிலைகளும் மாறி அதற்கான தீர்வுகளோடு வரும்.


முக்கூடற்பள்ளு!

முக்கூடற் பள்ளு!!!

முக்கூடற்பள்ளு பள்ளு இலக்கியத்தில் சிறந்தது முக்கூடற்பள்ளு என்கிறார்கள். முக்கூடல் தலத்தில் கோயில் கொண்ட அழகர் மீது பாடப் பெற்றது, ஆனால் வைணவ இலக்கியம் என்று கூறி விட இயலாது.
மூன்று நதிகள் கூடும் இடம் முக்கூடல். கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்பது போல் தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு எனும் ஆறுகள் கூடும் இடம் முக்கூடல்.
இந்த நூலின் காலம் கி.பி. 1680 என குறிப்பிடப்படுகின்றது.
பள்ளு இலக்கியம் இசைப்பாடல் தன்மை உடையது. இந்த நூலில் பந்துவராளி, பைரவி, காம்போதி, சங்கராபரணம், ஆனந்த பைரவி, புன்னாகவராளி, கேதார கௌளம், காம்போதி, மத்யமாவதி, மோகனம், நாட்டை, சுருட்டி போன்ற ராகங்களில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.



நீர்வளம், நிலவளம் பேசும் இலக்கியம். வளை மேழி, நோக்கால், பரம்பு, மேழி, வடம், வள்ளக்கை, குத்தி, கொழு, கலப்பை, நுகம், கயமரம், கழுந்தேர்க்கால், கைக்கோல், கொட்டு, உழவுகோல், ஏர்க்கால் எனும் உழவு கருவிகள் பலவும் பேசப்படுகின்றன.
மீன்கள் பற்றிய பட்டியல் உண்டு- அயிந்தி, அயிரை, ஆரால், உய்யம், உழுவை, எண்ணெய் மீன், ஓரா மீன், கசலி, கடந்தாய், கருங்கண்ணி, கெண்டை, கெளிறு, கெளுத்தி, குறவை, கூனி, கோளை, சாம்பன், மணலி, மத்தி, மயிந்தி, மலங்கு, வரால், வாளை, சள்ளை, சாளை, திருக்கை, துதிக்கைமூக்கன், தேளி, நொறுக்கி, பசலி, பஞ்சலை, பண்ணாக்கு, பறவை, பாசிமீன், பொத்தி, மகரம், மடந்தை என.
இலக்கியங்கள் பதிவு செய்யாமற் போனால் பல தகவல்கள் நமக்குத் தெரிய வராமலேயே போயிருக்கும்.
பள்ளன் அழகர் அபிமானி. அழகர் அபிமானிகளாக இல்லாதவரை எவ்விதம் தண்டிப்பேன் என்பதற்குப் பாட்டுச் சொல்கிறான்.
ஒரு போது அழகர் தாளைக்
கருதார் மனத்தை வன்பால்
உழப்பார்க்கும் தரிசு என்று
கொழுப் பாய்ச்சுவேன்
சுருதி எண்ணெழுத்து உண்மை
பெரிய நம்பியைக் கேளாத்
துட்டர் செவி புற்றெனவே
கொட்டால் வெட்டுவேன்
பெருமாள் பதி நூற்றெட்டும்
மருவி வலம் செய்யாரைப்
பேய்க்காலில் வடம் பூட்டி
ஏர்க்கால் செய்வேன்
திருவாய் மொழி கல்லாரை
இருகால் மாடுகளாக்கித்
தீத்தீயென்று உழக்கோலால்
சாத்துவேன் ஆண்டே!

மாணிக்கவாசகர் திருவெம்பாவையில், “எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க” என்பதன் தீவிர வடிவமாயுள்ளது இந்த பக்தி.
பள்ளன் தன் பெருமை கூறுவது, மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் தத்தம் குடித்தரம் கூறும் பாடல்கள் தமிழ் மணப்பது.
மைக்கடல் முத்துக்கு ஈடாய்
மிக்க நெல் முத்து உண்டாக்கும்
வடிவழகக் குடும்பன் நானே
எனத் தான் விளைவிக்கும் நெல்லின் செருக்கு பேசும் பள்ளனை அறிமுகம் ஆகிறோம். மூத்த குடியாள், பெருமாள் பக்தையாகிய முக்கூடற்பள்ளியும், இளைய குடியாள், சிவனடியாளாகிய மருதூர்ப்பள்ளியும் போட்டிக்குப் பாடும் பாடல்கள் மிகவும் சுவையானவை.

வடகரையில் உள்ள, வளம் மிக்க ஆசூர் நாடு பற்றி மூத்த பள்ளி புகழ்கிறாள். அவள் நாடு அது, பெருமை பெற்றது. அந்த நாட்டில் கறை என்பதைத் திங்களில் மட்டுமே காணலாம். கடம் பட்டிருப்பது- கட்டப்பட்டிருப்பது மதங் கொண்ட யானை மட்டுமே. சிறைப்பட்டவை பறவைகள் மட்டுமே. திரிக்கப்பட்டிருப்பது நெய் விளக்கு ஏற்றுவதற்காகத் திரிக்கப்பட்ட திரி மட்டுமே, குறைப்பட்டிருப்பது கொத்தப்படுவதால் குறைபட்ட கம்மாளர்களின் அம்மி மட்டுமே. குழைத்திருப்பது பூங்கொடிகளும் பூங்கொத்துக்களும் மட்டுமே, மறைக்கப் பட்டிருப்பது உயர் செய்யுள்களின் பொருள் மட்டுமே. இவையல்லால், பிற குறைகள் ஏதுமில்லா நாடு எங்கள் நாடு என்கிறாள் மூத்த பள்ளி. பாடலைப் பாருங்கள்.
கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள்
கடம்பட்டுள்ளது கம்பத்து வேழம்
சிறைபட்டுள்ளது விண்ணெழும் புள்ளு
திரிபட்டுள்ளது நெய்படும் தீபம்
குறைபட்டுள்ளது கம்மியர் அம்மி
குழைபட்டுள்ளது வல்லியம் கொம்பு
மறைபட்டுள்ளது அரும்பொருட் செய்யுள்
வளமை அரசூர் வடகரை நாடே
பொறுக்குமா இளைய பள்ளிக்கு? தனது நாடான சீவல மங்கைத் தென்கரை நாட்டைப் போற்றுகிறாள். தனது நாட்டில் சூரியன் மட்டுமே காய்வான், கட்டித் தயிர் மட்டுமே மத்தால் கடையப்பட்டுக் கலங்கும். அழிந்து போவது நாழிகைகளும் கிழமைகளுமே, சுழன்று வருவது வான்மழை பொழிந்த வெள்ளம் மட்டுமே, சுமை தாங்காமல் சாய்ந்தது நெற்கதிர் மட்டுமே, தவம் செய்வோர் மனம் மாட்டுமே ஆசைகள் ஒடுங்கி இருப்பது, தேய்ந்து போவது உரைக்கப்படும் சந்தனம் மட்டுமே என்கிறாள். பாடலைப் பாருங்கள்:
காயக் கண்டது சூரிய காந்தி
கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்க்குலைச் செந்நெல்
தணிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்
சீவல மங்கைத் தென்கரை நாடே
இங்கு காய்க்குலை என்பதற்கு வாழைக்குலை என்றும் பொருள் கொள்ளலாம். மலையாளத்தில் இன்றும் வாழைக்குலையைக் காய்க்குலை என்கிறார்கள்.
இவ்வாறே தமிழ் பாடிச் செழிக்கிறார்கள் மூத்த பள்ளியும் இளைய பள்ளியும்.
மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை
மிடைந்த பூகம் சுமந்து தன் காயை
சூதம் ஒன்றிச் சுமக்கக் கொடுக்கும்
சூதம் தன்கனி தூக்கும் பலாவில்
ஓதும் அந்த பலாக்கனி வாழை
உறுக்கவே சுமந்து ஒண்குலை சாய்க்கும்
மாதுளம் கொம்பு வாழை தாங்கும்
வளமை ஆசூர் வடகரை நாடே
என்பாள் மூத்த பள்ளி.

தெங்கின் இளநீரை, நெருங்கி வளர்ந்திருக்கும் கமுகு தாங்கும். கமுகு, தன் குலையை அருகில் வளர்ந்திருக்கும் மாமரங்களைச் சுமக்கச் செய்யும். மாமரங்கள் தன் கனிகளை அருகில் வளர்ந்திருக்கும் பலா மரங்களில் சாரச் செய்யும். பலாக்கனிகளை வாழை மரங்கள் சுமக்கும். வாழைக் குலைகளை மாதுளங் கொம்பு தாங்கும் ஆசூர் வடகரை நாடே என்பாள் மூத்தாள்.
பங்கயம் தலை நீட்டிக் குரம்பினில்
பச்சை இஞ்சியின் பாசடை தீண்டும்
தங்கும் இஞ்சியும் மஞ்சட் கழுத்தைத்
தடவி மெள்ளத் தொடும் அந்த மஞ்சள்
அங்கு அசைந்திடும் காய்க்கதிர் செந்நெல்
அளாவி நிற்கும் அச்செந்நெலும் அப்பால்
செங்கரும்புக்குக் கைதரும் போல் வளர்
சீவல மங்கை தென்கரை நாடே
என்பாள் இளையாள்.

மூத்த பள்ளி தன் கிராமத் தெய்வம் போற்றுவாள்:
திங்கள் மும்மாரி உலகெங்கும் பெய்யவே
தெய்வத்தைப் போற்றி வந்து கைதொழும் காண்
பொங்கலும் இட்டுத் தேங்காயும் கரும்பும்
பூலா வுடையாருக்குச் சாலவே கொடும்
குங்குமத்தோடு சந்தனம் கலந்து
குமுக்காவுடையாரயர் தமக்குச் சாத்தும்
கங்கணம் கட்டி ஏழு செங்கிடாயும்
கரையடிச் சாத்தா முன்னே விரைய வெட்டும்
என்று. இளைய பள்ளியோ:
பூத்தலைச் செஞ்சேவல் சாத்திரத்தாலே
புலியூர் உடையார் கொள்ளப் பலிதான் இடும்
வாய்த்த சாராயமும் பனை ஊற்றுக் கள்ளும்
வடக்குவாய்ச் செல்லி உண்ணக் குடத்தில் வையும்
என்கிறாள்.

என் வயதுக்காரர் அனைவரும் நினைவில் வைத்திருக்கும் சிந்து ஒன்றுண்டு. முக்கூடற்பள்ளு நூலில், அட தாளம், ஆனந்த பைரவி ராகம்.
ஆற்று வெள்ளம் நாளைவரத்
தோற்றுதே குறி – மலை
யாள மின்னல் ஈழ மின்னல்
சூழ மின்னு தே
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்
காற்றடிக்குதே – கேணி
நீர்ப்படு சொறித் தவளை
கூப்பிடு குதே
சேற்று நண்டு சேற்றைக் குழைத்து
ஏற்றடைக்குதே – மழை
தேடியொரு கோடி வானம்
பாடி ஆடுதே
போற்று திரு மாலழகர்க்கு
ஏற்றமாம் பண்ணைச் – சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித்
துள்ளிக் கொள்வோமே
என்பது அந்த மழைக்குறிப் பாடல்.

நெல்விதைகளின் வகைகளைச் சொல்கிறான் பள்ளன் ஒரு பாட்டில். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வகை நெல் இனங்களின் பெயர்களைக் காண எனக்குப் பரவசம் ஏற்படுகிறது.
சித்திரக் காலி வாளாண் சிறை மீட்டான் மணல்வாரி
செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா
முத்து விளங்கி மலை முண்டன் பொற்பாளை நெடு
மூக்கன் அரிக்கிராவி மூங்கிற் சம்பா
கத்தூரி வாணன் கடைக கழுத்தன் இரங்கல் மீட்டான்
கல்லுண்டை பூம்பாளை பார்கடுக்கன் வெள்ளை
புத்தன் கருங்குறுவை புனுகுச் சம்பா
என, மத்தியானம் சாப்பிட்ட நெல்லரிசிச் சோற்றின் பெயர் தெரியாமற் போய் விட்டோமே நாம் இன்று? எங்கே போயின இந்த நெல்லினங்கள்? விதையாவது எங்கேயும் கருதப் பட்டிருக்குமா? நெல்வகை போக, மாட்டு வகை சொல்கிறான் பள்ளன்.
குடைக் கொம்பன் செம்மறையன் குத்துக் குளம்பன் மேழை
குடைச் செவியன் குற்றாலன் கூடு கொம்பன்
வடர்ப் புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக் கண்ணன்
மட்டைக் கொம்பன் கருப்பன் மஞ்சள் வாலன்
படப்புப் புடுங்கி கொட்டைப் பாக்கன் கருமறையன்
பசுக்காலன் அணிற்காலன் படலைக் கொம்பன்
விடர்த்தலைப் பூ நிறத்தான் வெள்ளைக் காளையும் இந்த
உண்டு ஆயிரமே!

பசுவையும் காளையையும் எருமையையும் எருமைக் கடாவையும் மாடு என்றழைக்கும் பருவத்துக்கு வந்து விட்டோம் நாம். இந்த யோக்கியதையில் மாட்டின் சுழிகள் பற்றியும் அவற்றுள் யோகச் சுழிகள் எவை, யோகமற்ற சுழிகள் எவை என்றும் சொன்னால் நமக்கு என்ன விளங்கும்? தாமணிச் சுழி, இரட்டைக் கவம், பாஷிகம் சுழி, கோபுரச் சுழி, நீர்ச் சுழி, ஏறு பூரான், லக்ஷ்மிச் சுழி, பட்டிச் சுழி, வீபூதிச் சுழி, ஏறு நாகம் என்பன நல்ல சுழிகள் என்றும் முக்கண் அல்லது அக்னிச் சுழி, குடைமேல் குடை, ஒத்தைக் கவம், விளங்குச் சுழி, பாடைச் சுழி, பெண்டிழந்தான் சுழி, இறங்கு பூரான், நாகபடம், அவற்றுள் முன்னாகம், பின்னாகம், தட்டுச் சுழி, துடப்பச் சுழி, விறிக்கட்டு அல்லது புட்டாணிச் சுழி, ஏழு கட்டுப் பாடைக் கட்டு, வால் முடங்கி, இறங்கு நாகம் என்பன தீய சுழிகள் என்றும் பள்ளனால் அடையாளம் கண்டிருக்க இயலும்.

 பள்ளன் மனைவிகள் மூத்த பள்ளி, இளைய பள்ளி ஏசல் சுவாரசியமானது. ஏசி, ஏசி, தத்தம் எதிரிகளின் கடவுளரை வசை பாடுவதில் வந்து சேர்கிறது. ஒரு நினைவூட்டலுக்காக- மூத்த பள்ளி வைணவம், இளைய பள்ளி சைவம். கவி காளமேகம் பாடல் போல், ஏசலுகுள்ளே ஏழெட்டு புராணங்கள் பொதிந்து கிடக்கின்றன. புராணம் தெரியாதார், ஆர்வமிலாதார், தாண்டிப் போய் விடலாம். ஏனெனில் எனக்கு உரை சொல்லும் உத்தேசம் இல்லை.
மூத்தாள் : தான் பசுப் போல் நின்று கன்றைத்
தேர்க்காலில் விட்டுச்- சோழன்
தன் மகனைக் கொன்றான் உங்கள்
தாணு அல்லோடி
இளையாள்: வான் பழிக்கு உள்ளாய்த் தவசி
போல மறைந்தே- நின்று
வாலியைக் கொன்றான் உங்கள்
மாயன் அல்லோடி
மூத்தாள்: வலிய வழக்குப் பேசி
சுந்தரன் வாயால் அன்று
வையக் கேட்டு நின்றான் உங்கள்
ஐயன் அல்லோடி
இளையாள்: புலி போல் எழுந்து சிசு
பாலன் வையவே- ஏழைப்
பூனைபோல் நின்றான் உங்கள்
நீலன் அல்லோடி
மூத்தாள்: அடியனும் நாயனுமாய்க்
கோயில் புறகே – தொண்டன்
அன்று தள்ளப் போனான் உங்கள்
ஆதி அல்லோடி
இளையாள்: முடியும் சூடாமலே கை
கேசி தள்ளவே- காட்டில்
முன்பு தள்ளிப் போனான் உங்கள்
மூர்த்தி அல்லோடி
மூத்தாள்: சுற்றிக் கட்ட நாலு முழத்
துண்டும் இல்லாமல் – புலித்
தோலை உடுத்தான் உங்கள்
சோதி அல்லோடி
இளையாள்: கற்றைச் சடை கட்டி மர
உரியும் சேலைதான்- பண்டு
கட்டிக் கொண்டான் உங்கள் சங்குக்
கையன் அல்லோடி
மூத்தாள்: நாட்டுக்குள் இரந்தும் பசிக்கு
ஆற்ற மாட்டாமல் – வாரி
நஞ்சை எல்லாம் உண்டான் உங்கள்
நாதன் அல்லோடி
இளையாள்: மாட்டுப் பிறகே திரிந்தும்
சோற்றுக் கில்லாமல் – வெறும்
மண்ணை உண்டான் உங்கள் முகில்
வண்ணன் அல்லோடி
மூத்தாள்: ஏற ஒரு வாகனமும்
இல்லாமையினால்- மாட்டில்
ஏறியே திரிந்தான் உங்கள்
ஈசன் அல்லோடி
இளையாள்: வீறு சொன்ன தென்ன மாடு
தானும் இல்லாமல் – பட்சி
மீதில் ஏறிக் கொண்டான் உங்கள்
கீதன் அல்லோடி.

பள்ளுப் பாடல் இசைப்பாடல் என்று முன்பே சொன்னோம். ஒரு ஏசலில் பேசப்படும் புராணங்கள் எத்தனை? மேலும் நிந்தாஸ்துதி வகையிலான இந்த ஏசல் பாடல்கள் வாசிக்க சுகம் தருபவை.

Monday, March 18, 2024

வாழ்க்கையில் எல்லாமே நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டுமென எண்ணாதீர்கள் வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் அடுத்த நொடி மர்மம் தான்....⁉️

பசிக்காத நேரம் இல்லை. பிரச்சனை இல்லாத நாளும் இல்லை. நிதான மனது, அதை முழுமையாய் அவதானிக்கிறதில், வாழ்வின் அர்த்தம் ஊடாடுகிறது. 

வாழ்க்கையில் எல்லாமே நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டுமென எண்ணாதீர்கள் வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் அடுத்த நொடி மர்மம் தான்....⁉️

வெறுமையான காலங்களைப்போல மனிதனை வெறுக்கச்செய்வது வேறொன்றுமில்லை. சோகங்களின் படைசூழ பேய் துரத்தும் நாட்களில் கூட செலுத்தப்பட்டவனை போல ஓடி ஓடி அலைந்து நின்றுகொண்டே சோறு தின்று அப்போது கூட இப்படி ஒரு வெறுமை ஏற்பட்டதில்லை. 

வயது 30க்கும் மேல் இடைப்பட்ட காலங்கள்தான் எத்தனை மேடுபள்ளங்கள். நம்மை நாமென கருதமுடியா வளைகோடுகள். நாம்இவ்வளவுதான்  எனப் புரட்டிப்போட்டுவிட்ட சுயதரிசனங்கள். எதன்பின்னோ இத்தனை வருடங்கள் ஓடிவிட்டு இனி ஓடுவதற்கு ஒன்றுமில்லை வேண்டுமானால் படுத்து உறங்கு எனக்கூறும் காலத்தின் எள்ளலை எதிர்க்க வீர்யத்துடன் திரட்டும் மனத்திண்மைகள். 

ஓடியே கடந்த நதி தேங்கி நின்றால் குப்பைகள் சேர்ந்து போகாதோ? இளவயது அறியாமையேனும் கையில் இருந்திருக்கப்படாதோ?

சுயம் தேடும் முயற்சியில் இழந்து போன அறியாமை சிலசமயம் நானாவது உன்னுடன் இருந்திருப்பேனல்லவா என சிரிக்கிறது...  எவ்வளவு பணிகள் செயது கடந்துள்ளோம்.இன்றைக்கு இதை நினைத்துக்கொண்டால் வியப்பாக இருக்கிறது. எந்த நம்பிக்கையின் பால் இதெல்லாம் என்னை வழிநடத்தியது என திகைப்பாகவும்.. இதெல்லாம் என்னைப்பொறுத்தவரை அர்த்தமிழந்து போயின. 

இதை ஒரு அன்றாட அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்கான மனநிலையாகவே பலரிடம் பார்க்கிறேன். நானும் அதுபோலவே பலமுறை செய்ததுண்டு. என்ன.. அது என்பதை உணரமுடியாது.. அவ்வளவுதான்.. 

நிறைய நட்புகளும் திரும்ப திரும்ப  ஏன் வாய்புக்கள் வரவில்லை? அதை பெற்று விடுங்கள் என நம் மீது உள்ள அன்பில் வலியுறுத்திக்கொண்
டிருந்தார்கள்.இது கடை சரக்கு அல்ல… வாங்க.

 தன் சுய அறிதலும் சமுதாயத்தில் நமக்கான நிலையும் வாழ்க்கைப்பாதை இதுதான் எனத்தெரிந்த ஆயாசமும் வெறுமையை உண்டாக்கி விடுகின்றன.

ஓடியதன் அலுப்புதான் இந்த புலம்பலா? 
ஆனால் இலக்கினை உண்டாக்கியிருக்கும் தேங்கியிராமல் பாயும் இடம் எதுவென தேர்ந்தெடுத்தும் இருக்கும் மனிதர்கள் இந்த வெறுமையில் மாட்டிக்கொள்வதில்லை போல. அல்லது காலை முதல் மாலைவரை ஒரு கட்டாயத்தின் பேரில் ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கு இது தோன்றுவதில்லையா? 

கட்டாயங்களும் சிலசமயம் தேவைதான். Commitment களும் தான் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். முடிந்த மட்டும் விரைவில் அதை புதுப்பிப்பது நல்லது. இல்லையெனில் நாம் இகழ்ந்த நம்மூத்ததலைமுறையினரை
விடஅதிகம்பாதிக்கப்பட்டுவிடுவோமென்ற பயம் எனக்கு வந்துவிட்டது... 52 ஆண்டு கால அரசியல் களம் -தளம் என காலசக்கரம் ஓட விட்டது.

செய்வதற்கு ஏதுமற்ற ஓர்பொழுதினில்...

என்றென்றும் நிலைத்திருக்கும் ஒன்றை, நம்மை திருப்திப்படுத்தும் ஒன்றை நாம் விரும்புகிறோம்.

நிலையான மகிழ்ச்சியை, நிலையான திருப்தியை, நிலையான உறுதியை நாம் தேடுகிறோமல்லவா?

நாம் நிரந்தரம் என்று எதை அழைக்கிறோம்?

நாம் உண்மையில் எதைத் தேடுகிறோம்?

எது நமக்கு நிரந்தரத்தைத் தரும்?





#வாழ்வியல் #life 
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
18-3-2023

வைகோவின் குடும்ப மதிமுக நிலை MDMK Vaiko

*தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ? சர்வேசா ! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் ; கருகத் திருவுளமோ* ?-#*பாரதி*. 

*வாரிசு அரசியலை எதிர்த்து தனிக்கட்சி*⁉️

தீக்குளித்த
இடிமழை உதயன், நொச்சிப்பட்டி தண்டபாணி, கோவை மேலப்பளையம் ஜஹாங்கீர், காமராசபுரம் பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோரை பலரும் வசதியாக
மறந்திருப்பார்கள்..

இவர்களின் தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் வாழியவே…

இந்த படம் பார்வையில் பட்டது. 

#தமிழகஅரசியல்
#tamilnadupoltics 
#vaiko

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
18-3-2024.


டீ கடை , பாய்லர்,டீ கடை பெஞ்ச் என இருந்த பின் லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS மார்ட்டின்

#*embarassment
forDMK*.  #*Lottery Santiago Martin*, 

டீ கடை , பாய்லர்,டீ கடை பெஞ்ச் என இருந்த பின் லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS மார்ட்டின் கிட்ட ஏது இவ்வளோ பணம் ?  இந்த பணம் drug பணம் சார்.  Round tripping இருக்குமா என தெரியல ⁉️சற்று சந்தேகம்…2011 இல் இவரின் திரைப்படம் கலைஞரி வசனங்கள் வேறு….

*Hon’ble Chief Minister Thiru M. Stalin*,

You know about perjury in due process law…❓It is serious one.(files wrong info before Courts - regarding Junior Viktan matter- LotterySantiagoMartin)
Who is your legal team? Just giving your heavy money and upper house MP to them. Nothing will happen…. So pity 
Kalignar trust us…
But you don’t understand us…reality..
*Don Quixote activities* 

#ksrpost
18-3-2024.

#DMK #ElectoralBondScam

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
18-3-2023.


Sunday, March 17, 2024

தமிழக அரசியல் நல்ல விதமாக உண்மையான விடியலாக அமைந்திருக்கும் .

கடந்த 1998 முதல் எங்களை போன்றவர்களை சங்கடத்தில்நிறுத்தமால்  அன்றைய திரு வை. கோபால்சாமி அவர்கள் இருந்து இருந்தால்; நல்ல அரசியல் சூழல் தமிழகத்தில் வந்து  இன்றைய தமிழக அரசியல் நல்ல விதமாக  உண்மையான விடியலாக அமைந்திருக்கும் . திரு வைகோ ஆன பின்பு அவருடைய மறுதலால் ஏமாற்றம்  ஏற்பட்டு  பின் தமிழக பொது வாழ்வு கெட்டு விட்டது. இது ஏதார்த்தம். இதற்கு விபரம் அற்ற அரைவட்டு சிறிசுகள்  பின்னோட்டம் என  வர வேண்டாம். It is fact…. True true….

விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? 

#tamilnadupoltics
#தமிழகஅரசியல்


இதுதான், திமுக என்றால் ஒரே குடும்பம்.. உடன்பிறப்பு என்பது..⁉️ இவர்களின் நன்றி காட்டும் பண்பு….❓ DMK fails

#திமுகவுக்கு  கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் 
#லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் கேமிங் )


அடேங்கப்பா.. 
மார்டின் வீட்டு நிகழ்ச்சிகளில் முதல்வர் குடும்பத்துடன் ஆர்வமாக கலந்து கொண்ட விதம்…அந்த சமயத்தில், என் தாய் 99 வயதில்  மறைவு  குறித்து திமுகவுக்கு உழைத்த என்னிடம் ஸ்டாலினுக்கு விசாரிக்க கூட மனது வர வில்லை. இதுதான், திமுக என்றால் ஒரே குடும்பம்..



உடன்பிறப்பு என்பது..⁉️  இவர்களின் நன்றி காட்டும் பண்பு….❓
வாழிய திமுக…?


Tailpiece….
தமிழ்நாட்டு மக்களை மோசமாக பாதிக்கும் ஆன் லைன் சூதாட்டத்தை தடுக்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு திமுக கட்சியும்  ஆட்சியும் இரண்டு கட்ட  நடவடிக்கைகளை முன்னெடுத்தது. 

முதல் நடவடிக்கை அதை தடுக்கும் சட்டத்தை கொண்டுவந்தது. இரண்டாவதாக அந்த ஆன்லைன் சூதாட்டத்தை நடத்தும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்தின் நிதியாதாரத்தை அந்த நிறுவனத்திடம் இருந்து கட்சி நிதியாக வாங்கி ஆன் லைன் சூதாட்ட நிறுவனத்தின் பொருளாதார பலத்தை அழித்தது. மார்டின் நிறுவனத்துக்காக பலவீனமான ரம்மி சட்டத்தை கொண்டு வந்ததா திமுக?

•••

அன்றே சொன்ன 
ஜீனியர் விகடன்..

கடந்த 2019ம் வருடம் 

"500 கோடி தேர்தல் நிதி!!
"சிக்கிய மார்டின் சிக்கலில் திமுக" 

என்று ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டது.

அதற்கு திரு. ஸ்டாலின் விகடன் குழுமம் மீது 1 கோடியே 10 லட்சம் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விவரங்கள் அதற்கு பிறகு
வெளியான தகவல்கள் இல்லை.


தமிழ்நாட்டின் மிகவும் அதிர்ஷ்டக்கார இரண்டு மருமகன்கள்.

1. ஆதவ் அர்ஜுன் ரெட்டி, லாட்டரி மார்ட்டின் அவர்களின் மகளின் ஜிம் அசிஸ்டெண்டாக சேர்ந்து கடைசியில் மருமகனாக மாறியவர்..

2. சபரீசன் வேதமூர்த்தி, சாதாரண குடும்பத்தில் பிறந்து ஸ்டாலின் அவர்களின் மருமகனாக மாறியவர்....

ஆதவ் அர்ஜுன் மற்றும் சபரீசன் இருவரும் இணை பிரியாத நண்பர்கள்... இருவரும் தேர்தல் வியூகம் வகுக்கும் பெண் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்..
•••

2019 இல்:ஸ்டாலின் சொன்னது,நான் திமுக கட்சிக்காக மார்ட்டினிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, 500 கோடி வாங்கியதாக விகடன் நிரூபிக்கவில்லை என்றால் அவர்கள் மீது ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு போடுவேன்..




2024:
திமுக மார்ட்டின் அவர்களிடம் தேர்தல் செலவுக்காக 500 கோடி ரூபாய் பணம் வாங்கினார்கள்...

‪#ElectoralBond திமுக பெற்ற வரவுகள், நிதியளித்த நிறுவனங்கள்,  ஆண்டுவாரியாக...‬
‪1. Lottery Martin Future Gamin & Hotel service Pvt Ltd Rs.509 Crores‬
‪2. Mega Infrastructure Rs.105 Crores‬
‪3. India Cements Rs.14 Crores‬
‪4. Sun network Rs.10 Crores‬
‪5. TIRIVENI Rs.8 Crores‬
‪6. Ramco Cements Rs.5 Crores‬
‪7. IRB Rs.2 Crores‬
‪8. LMW Rs.1.5 Crores‬
‪9. Appollo Rs.1 Crores‬
‪10. BIRLA Rs.1 Crore‬

‪2019-20 Rs.45.5 Crores‬
‪2020-21 Rs.80 Crores‬
‪2021-22 Rs 306 Crores‬
‪2022-23 Rs.185 Crores‬
‪2023 Apr -2024 Feb Rs.40 Crores.‬
‪Total. Rs.656.5 Crores‬
‪ #ElectoralBondsScam #ElectrolBondcase #DMK‬

@mkstalin @CMOTamilnadu 

@arivalayam @mkstalin #DMK #ElectoralBondScam

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-3-2023.


#மதுரையை தலைமை இடமாக தனி மாநிலம் தென்தமிழகம் வேண்டும்.

#மதுரையை தலைமை இடமாக  தனி மாநிலம் தென்தமிழகம் வேண்டும்.
———————————
தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து வரும் அரசுகள் புறக்கணித்து வரும் சூழ்நிலையில் தென் மாவட்டங்கள் பின் தங்கி உள்ளது.
அதேபோல் மேற்கு மாவட்டங்கள் தொடர்ந்து அதிக வருவாய் ஈட்டி கொடுத்தாலும் மேற்கு மாவட்டங்கள் தமிழக அரசால் புறக்கணித்து வரும் நிலையில்…

வடக்கு(சென்னை) வாழ்கிறது..மத்திய (கொங்கு)தென் (மதுரை,விருதுநகர்,தூத்துக்குடி.குமரி)மாவட்டங்கள் தேய்கிறது.வேண்டும் கொங்கு பாண்டிய மாநிலம்

மதுரையை தலைமை இடமாக கொண்டு  வடக்கே காவேரி தென் கரை -திருவரங்கத்தில் அரங்கன் சயனித்தல் 
தெற்கே தென் குமரி வள்ளுவர் சிலை வரை தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.

ஏற்கனவே, மத்திய அரசு கடந்த 1998 முதல் சிறு மாநிலங்கள் மூலம் தான் நிறைய வளர்ச்சி பணிகள் செய்யமுடியும். நிர்வாக வசதியும், தேச ஒற்றுமைக்கும் அது வலுசேர்க்கும் என்கிற கொள்கை நிலைப்பாடு கொண்டுள்ளது என்பதால் மதுரையை தலைநகராக கொண்டு மாநிலம் அமைவது தென் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதில் மாற்றமில்லை.

#மதுரையைதலைமைஇடமாகதென்தமிழகம்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-4-2024

நம்பிக்கை கொண்ட அவனது குரல், பிறரை உருவாக்கும் போது அவன், அவனாகவே உருப்பெற்று உயர்கிறான். ஆனால் இங்கு எல்லாம் பிம்பங்களின் பின்னால்….

அவன் , அவனுக்குள்
வெவ்வேறு வகையில் அவன் சங்கடங்களை, ஒவ்வாமைகளை, கனவுகளை விழைவுகளை முன் வைக்கும் 
அவன் தனக்குத் தானே நெறி செய்து கொண்டிருக்கிறான்.

எல்லா அவன்களும் தற்புகழ்ச்சிக்காரர்களே.

ஆற்றல்.நம்பிக்கை கொண்ட அவனது குரல், பிறரை உருவாக்கும் போது அவன், அவனாகவே உருப்பெற்று உயர்கிறான். ஆனால் இங்கு எல்லாம் பிம்பங்களின் பின்னால்….

இங்கு பொது வாழ்வு என்பது தன்மானம் இல்லா தன் சுய வாழ்வே….. வாரிசு அரசியல், எதிலும் ஊழல், ஓட்டுக்கள் விற்பனை, தன் தமிழ் மாநிலம் என்ற நிலை அற்று தன் குடும்பம்- உற்றார் உறவினர் என்ற அதிகார மய்யங்கள் என்ற மாநிலம்.

விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை..

"All that glisters is not gold—
Often have you heard that told.
Many a man his life hath sold
But my outside to behold.
Gilded tombs do worms enfold.
Had you been as wise as bold,
Young in limbs, in judgment old,
Your answer had not been inscrolled
Fare you well. Your suit is cold—"

— William Shakespeare, Merchant of Venice, Act II Scene 7

#தமிழகஅரசியல்
#tamilnadupolitics

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்17-3-2024.



Saturday, March 16, 2024

வாழ்க்கை மிகவும் வளமையானதாகும், மிகப்பலப் பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது.

வாழ்க்கை மிகவும் வளமையானதாகும், மிகப்பலப் பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது. 

நாம் அதை வெற்று மனத்துடன் அணுகுகிறோம்.

நாம் மனதின் உட்புறமாக செழுமையற்று இருக்கிறோம், ஆகவே வளங்கள் நமக்கு அளிக்கப்படும் போது நாம் அதை மறுக்கிறோம்.

அன்பு ஒரு ஆபத்தான விஷயமாகும்; 

ஆகவே நம்மில் வெகு சிலரே அன்பு காட்டும் தகுதியுடையவர்களாக இருக்கிறோம், ஆகவே சிலரே அன்பை வேண்டுகிறார்கள்.

நாம் நம்முடைய வரையறையின்படி நேசிக்கிறோம்.

நமக்கு ஒரு வியாபார மனோபாவம் இருக்கிறது, மேலும் அன்பு வியாபாரத்திற்கானது அல்ல, ஒரு கொடுத்து வாங்கும் விஷயமல்ல.

அது நம்முடைய அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்படுகின்ற ஒருவித இருப்புநிலை ஆகும்.


*தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது*. *இனி பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பு*….⁉️ *சில விடயங்கள்*…

*தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது*.
*இனி பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பு*….⁉️ *சில விடயங்கள்*…
••••
பொன்முடி வழக்கு விவகாரத்தில் திமுக மீண்டும் மீண்டும் இடியாப்பச் சிக்களுக்குள்ளே சென்று கொண்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் அவரை குற்றவாளி இல்லை என்று சொல்லி  விடுதலை எதையும் தீர்ப்பாக அறிவிக்கவில்லை. ஏற்கனவே அளித்த தீர்ப்பில்  மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கியிருக்கிறது.  மேல் முறையீடுகள் வழியாக அவர் இப்போதைக்கு சிறைக்குச் செல்வதை மட்டுமே உச்சநீதிமன்றம் தடுத்து வைத்திருக்கிறது.  Pending appeal and suspension of sentence till final disposal of the said appeal… that is the status in the Supreme court.
It is normal practice. 

ஆக வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது! அதை மீறி அவர் எம்எல்ஏ ஆவார் அமைச்சராவார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு திரிந்தால் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு  இறுதி தீர்ப்பு   எதிராக வரும் போது உள்ளவார்கள் என்பது கூட அந்த திமுக அதி புத்திசாலி வழக்கறிஞர்களுக்குத் தெரியாதா. கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்ற பெயரில் கண்டபடி ஆலோசனைகள் வேண்டாம்.

இப்படியானவர்களுக்குத்தான் திமுகவால் லாபம் கிடைக்கிறது.
அவர்களால் திமுக விற்கு ஒருபலனும் இல்லை.  அதை திமுக தலைமை உணர்கிறதோ என்னவோ தெரியவில்லை .  காலுக்கும் கீழ் குழையடித்து தெண்டனிட்டு நிற்கிறவர்கள் எல்லாம் எம்பி எம்எல்ஏ என்று பதவிகளை  வாங்கிக்கொண்டு இஷ்டத்துக்கு சொத்து சேர்த்துக் கொண்டு கூத்தடிக்கிறார்கள். போதும் போதாதுக்கு இப்படிக்குழப்பத்தை உண்டாக்கி மேலும் பிரச்சினைகளையும் உண்டாக்குகிறார்கள்.

மனக்கசப்பில் தான் சொல்கிறேன் நான் திமுகவிலிருந்த போது அவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்டான வழக்குகள் பலவற்றை சரி செய்து தீர்த்து கொடுத்து இருக்கிறேன். 
உதாரணங்களைச் சொல்வதென்றால் பலவற்றையும் நான் இங்கு சொல்ல முடியும்.

 ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் 2014 கலைஞர் கைது விவகாரத்தில்
கவர்னர் மாளிகையிலும் சரி! நீதிமன்றங்களிலும் சரி! நான் அங்கு இங்குமாக அலைந்து  இந்தக்கைது  எவ்வளவு தவறானது என்று வாதாடி
நியாயம் பெற்று தந்தேன். ஜெயலலிதாவின் நடவடிக்கை மீது பல வகையான குறுக்கு விசாரணைகளை உண்டாக்கி  வழக்கை நீர்த்துப் போக செய்தேன்

கனிமொழி அதிபன் போஸ் விவாகரத்து வழக்கில் ஈடுபட்டு சட்டப்படி சட்டபூர்வமாக அதையும் தீர்த்துக் கொடுத்தேன்.

ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு தமிழ்நாட்டில் நடந்தால் சரியாக வராது என்பதனால் அதை கர்நாடக நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்பதை மனுவாகக் கொடுத்து அதை அங்கே மாற்றி  விசாரணைக்கு உட்படுத்தியதில் முதன்மையான பங்கு என்னுடையதுதான்.

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் நள்ளிரவு நடந்த கைது விவகாரத்தில் தலையிட்டு இனிமேல் இது மாதிரியான வழக்குகளை  எப்போதும் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் கொண்டுவரக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடையும் வாங்கினேன்.
தக்கார் யார் தகவிலார் யார் என்று அறியாமல் அல்லது கடைசி வரை பாடுபட்ட என்னைப் போன்றவர்களை ஒரு காரணமும் இல்லாமல் வெளியே வைத்துவிட்டு அதாவது அறிவாளிகள் யாரும் எங்களுக்குத் தேவை இல்லை முட்டுக் கொடுக்கும் முட்டாள்களும் துட்டு சம்பாதிக்க தெரிந்தவர்களுமே எங்களுக்குப்போதும் எனச் செயல்படும்  இன்றைய திமுக தலைமைக்கு எதைச் சொல்லி புரிய வைப்பது அல்லது ஒருவர் என்ன நன்மையைத்தான் செய்ய முடியும். . பொன்முடி விவகாரத்தில் மேலும் ஆழ்ந்த சிக்கலைத் தான் இவர்கள் உருவாக்குவார்கள்.

இப்படியான ஜால்ராக்களை
 
என்னைப் போன்றவர்கள் எல்லாம்  மதிக்கத் தேவையில்லை போங்கடா  போக்கற்ற பயல்களா என்று சொல்லிவிட்டு நமது வேலையை பார்க்க வேண்டியது தான்.
ஒன்றும் நான் குறைந்தும் போய்விடவில்லையே❓

#DMKFails

#ksrpost
16-3-2024.

மறந்து விடுங்கள் சிலரின் அறிவற்றப் பேச்சுகளை…

பழகுவதில் நான்குவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள்.......

1.எதிர்பார்த்தது எதுவோ அதற்காகவே பழகுவார்கள். கிடைத்ததும் சென்றுவிடுபவர்கள்.மீண்டும் தேவைப்படும்போது வருவார்கள்.
100 % சுயநல வாதிகள் இவர்கள்.

2.பலனை அடைவதற்காக சில நன்மையைச் செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் சரியாக இருக்கும்.
அவரின் காரியத்தை நிறைவேற்ற நமக்கும் சில காரியம் செய்வார்கள். இப்படிப்பட்டவர்களிடம் தாராளமாக பழகலாம். 
ஆனால் இவர்கள் அனைவரிடமும் 
இப்படி பழக மாட்டார்கள்.

3.பலனை எதிர்பார்க்கவே மாட்டார்கள். அவர்களாகவே அனைத்தையும் செய்வார்கள். "எதற்க்காக செய்கிறீர்கள்?" என்றால் "நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்?" என்பார்கள். அவர்கள் அன்பால் உங்களை தினறடிப்பார்கள். இப்படிப்பட்டவர்களால் தான் நம் சமுதாயம் செழிக்கிறது இப்படிப்பட்டவர்களை உறவினராக நண்பனாக வைத்திருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

4.யாருடனும் பழக்கம் அதிகம் இருக்காது. ஆனால் அன்பு மிகுதியாக இருக்கும். அறிவும் அப்படியே. அல்லது அன்பு செலுத்த தெரியாது. இவர்களிடம் நாம் கேட்டால் பலன் அடையலாம். (உதாராணமாக தாத்தா பாட்டிகளை சொல்லலாம்). 
இவர்களிடம் பழகுவதற்கு தவம் 
செய்திருக்க வேண்டும்.

மேலே உள்ள முதல் பட்டியலில் இருப்பவர்களால் தான் அதிகம் ஏமாற்றம் வருகிறது.இப்படி போலித்தன்மை வாய்ந்த மனிதர்களிடம் உங்களை எச்சரிக்கையாக இருந்து காத்துக் கொள்ளுங்கள். அவர்களை ஆராய்ந்து இனம் கண்டுகொள்ளுங்கள்.மாற்றம் ஆரோக்கியமானதாக இருக்கலாம்.
ஆனால் ஏமாற்றம் என்றுமே ஆரோக்கியமற்றது.

மனிதனின் மாற்றத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

வீணாக நம்பிக்கை வைத்து ஏமாறாதீர்கள்.

ஏமாற்றத்திலிருந்து மாற்றத்திற்க்கு வாருங்கள்...!

மறந்து விடுங்கள் சிலரின் அறிவற்றப் பேச்சுகளை,மறுத்து விடுங்கள்உங்களை உதாசீனப்படுத்தும் உறவுகளை...இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை.இன்று நீ..
நாளை யாரோ..

நீ ஏன் இப்டி இருக்க ? 
என்று கேட்காத ஆத்மாக்கள், 
அவ்வாறு கேட்காமல் நம்மை 
நோக்கி ஒரு புன்னகை 
அளிப்பதன் மூலம் 
நம் மாற்றத்திற்கான 
முதல் முத்தம் இடுபவர்கள்.

 

படம்- என் மண்….


*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...