Monday, November 30, 2020

 


*#காவடிச்_சிந்து*
#அண்ணாமலை_ரெட்டியாரி
#கழுகுமலை
————————————————-




காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியாரின் பெரும் பணிகளை வெளிக்கொணர்வதற்கு காரணமாக இருந்தவர்களில் அருட்கவி. அரங்க சீனிவாசன்(இவர்ஊர்ஆலமநாயக்கன்பட்டி கரிசல்குளம், அருகே சென்னி குளம்)பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் (திருப்பதி திருவேங்கடத்தான் பல்கலைக்கழகம்) போன்ற பலரும் உண்டு. இதில் கழுத்தில் துண்டோடு தலையில் சும்மாடு இருக்கும் அண்ணாமலைச் ரெட்டியாருடைய புகைப்படத்தை வீரகேரளம் புதூர்-ஊற்றுமலை ஜமீனில் தேடிக் கொண்டு வந்தது அரங்க சீனிவாசன் ஆவார். இதைக் குறித்தான பதிவை பின்னால் பதிவிடுகிறேன்.

சென்னி குளநகர் வாசன்
சென்னி குளநகர் வாசன், - தமிழ்
தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
தீரன்; அயில் வீரன்

வன்ன மயில்முரு கேசன், - குற
வள்ளி பதம்பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
வாதே சொல்வன் மாதே!

கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர்
கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
குலவும் புவி பலவும்

நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத
நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே
நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என
நோக்கும் படி தாக்கும்

சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் - எனும்
சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே
தாங்கும்; உயர்ந் தோங்கும்.

உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு
உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக
உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும்
உறங்கும்; மின்னிக் கறங்கும்

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
அடைக்கும்; அண்டம் உடைக்கும்.

கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும்
கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி
காண்பார்; இன்பம் பூண்பார்.
- சென்னிகுளம் அண்ணாமலை

தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச் சிந்து எனலாம். முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு செல்வோர், ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வர். அவர்களின் வழிநடைப்பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து உருவானது.

*சொல்லும் பொருளும்*

புயம் - தோள்
வரை - மலை
வன்னம் - அழகு
கழுகாசலம் - கழுகு மலை
துஜஸ் தம்பம் - கொடி மரம்
சலராசி - கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்
விலாசம் - அழகு
நூபுரம் - சிலம்பு
மாசுணம் - பாம்பு
இஞ்சி - மதில்
புயல் - மேகம்
கறங்கும் - சுழலும்

*பாடலின் பொருள்*

சென்னிகுளம் வாழ்கின்ற அண்னாமலைதாசன் ஆகிய நான் பாடிய உலகம் போற்றும் காவடிச்சிந்து என்னும் மதுரமான கவிமாலையைத் தன் மலைபோன்ற அகன்ற தோளில் சார்த்திக்கொள்கிறான் முருகன். அந்தக் கழுகுமலைத் தலைவன் முருகனின் கோவில் வளத்தை நான் சொல்கிறேன். கோவில் கோபுரத்தின் தங்கக் கலசம் தேவர் உலகை விட உயர்ந்து ஒளி வீசுகிறது. அவ்வொளி உலகங்கள் பலவற்றிலும் கண்கல் கூசும்படி பரவுகிறது. பெண்ணே! கடலில் வாழும் மீன், மகரம் போன்ற உருவ அமைப்புகள் கொண்ட கொடிகள் எல்லாம் சிறக்க, முருகன் கோவில் திகழ்கிறது. காவடி எடுக்கும் அடியார்கள் பாடும் திருப்புகழ் முழக்கமானது, அமராவதிப்பட்டினத்தில் உள்ள தேவர்களின் செவியைச் சென்று அடைக்கிறது. கழுகுமலை நகரின் கோட்டை உயரமானது. அதில் மேகங்கள் படிகின்றன. அவற்றிலிருந்து உருவாகும் மின்னல்கள் இருளைக் கிழிக்கின்றன. நெஞ்சம் நெகிழ்ந்திருக, தங்கத்தினும் மேலான காவடியைத் தோளின் தூக்கிக் கண்கள் உருகிய மெழுகென முருகனை நோக்கிப் போகும் பக்தர்கள் அருளைப் பெறுவார்; இன்பம் அடைவார்.

“காவடிச்சிந்து " அண்ணாமலை ரெட்டியார்:
நெல்லை மாவட்டத்தில் தற்போது (தென்காசி மாவட்டம்)இருக்கும் சென்னிக்குளம் என்ற சிற்றூரில் 1865ஆம் ஆண்டு சென்னவ ரெட்டியார் - ஓவு அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அக்கால முறைப்படி திண்ணைப் பள்ளியில் படிக்கும் வாய்ப்புத்தான் அண்ணாமலை ரெட்டியாருக்குக் கிட்டியது. அவருக்கு, சிவகிரி முத்துசாமிப் பிள்ளை என்பவர் ஆசிரியராக அமைந்தார். அவ்வாசிரியர் பல்வேறு நூல்களையும் அண்ணாமலையாருக்குக் கற்றுக் கொடுத்தார். ஒருநாள், அண்ணாமலையார் பாடத்தைக் கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறார் எனக் கருதிய ஆசிரியர், அவரைக் கண்டிக்கக் கருதினார். தாம் நடத்திய பாடத்தைத் திருப்பிக் கூறுமாறு ஆசிரியர் கேட்டார். விளையாடிக் கொண்டிருந்த அண்ணாமலையார், தங்கு தடையின்றி ஒப்பித்துவிட்டார். அதைக்கண்டு வியந்த ஆசிரியர் அவரைப் பாராட்டினாராம். ஒரு முறை அண்ணாமலையார், வீட்டுப்பாடம் எழுதி, அதன் கீழ் "தமைய பருவதம்" என்று கையெழுத்திட்டு ஆசிரியரிடம் தந்தார். தமைய பருவதம் என்பதன் பொருள் ஆசிரியருக்குப் புரியவில்லை. ஆசிரியர் அண்ணாமலையை அழைத்து, "அண்ணாமலை! தமைய பருவதம் என்று இதன் கீழே கையெழுத்திட்டுள்ளாயே! அதன் பொருள் என்ன?" என்று வினவினார். அதற்கு அண்ணாமலையார், "தமையன் என்றால் அண்ணா; பருவதம் என்றால் மலை. அண்ணாமலை என்ற பெயரைத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன் ஐயா" என்று பணிவுடன் கூறினார். அதைக் கேட்ட ஆசிரியர், "அப்பா அண்ணாமலை! உன் புலமைப் பசிக்கு நான் தீனிபோட முடியாது. நீ வேறு எங்கேனும் சென்று பயில்க" என்று ஊக்கப்படுத்தி, அவருக்கு விடைகொடுத்து அனுப்பினாராம். சென்னிக்குளத்தில் உள்ள மடத்திற்குச் சென்று அங்கு மேற்பார்வைப் பணியைச் செய்து கொண்டிருந்த சுந்தர அடிகளுடன் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து பல்வேறு நூல்களை வாங்கிப் படித்தார். அண்ணாமலையின் தமிழ் ஆர்வத்தைக் கண்ட அடிகளார், தாம் கற்றிருந்த நூல்களை எல்லாம் அவருக்குக் கற்பித்தார். விவசாயத்தில் விருப்பமில்லாத அண்ணாமலையார், தந்தையின் வற்புறுத்தலால் தோட்டத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சினார். கவிதைக் கன்னி அவரைக் கட்டித் தழுவலானாள். கடமையை மறந்தார். ஒரு மர நிழலில் கற்பனையில் ஆழ்ந்தார். வாய்க்காலில் வந்த தண்ணீர் தோட்டப் பாத்திகளில் பாயவில்லை. தரிசில் பாய்ந்தது. அதைக் கண்டு சீற்றம் கொண்ட அவரது தந்தை, அவரைக் கடிந்து கொண்டு, வீட்டுக்கு அவர் வந்தால் சாப்பாடு கிடையாது என்று கூறிவிட்டார். தந்தையாரின் சினத்துக்கு ஆளான அண்ணாமலை, சுந்தர அடிகளின் மடத்திற்கு வந்தார். அவரைக் கண்ட அடிகளார், அவருக்கு இரங்கி உணவும் தந்தார். தம் மகன் பிச்சைக்காரனைப் போல மடத்தில் சாப்பிடுவதா? எனக் கோபமுற்று அங்கு வந்து அண்ணாமலையை அடித்தார் தந்தை. இதனைக் கண்ட சுந்தர அடிகளார், "இவனை ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதாதீர்கள். இவன் புகழின் உச்சியைத் தொடப்போகிறான். நான் இவனை அறிஞனாக்கிக் காட்டுகிறேன்" என்று கூறி அண்ணாமலையின் தந்தையைச் சமாதானப்படுத்தினார்.
அண்ணாமலையை சேற்றூர் அரசர் வடமலைத் திருவநாத சுந்தரதாசுத்துரையிடம் அழைத்துச் சென்று அவரைப் பற்றி பாடல்கள் பாடுமாறு அண்ணாமலையைப் பணித்தார். அண்ணாமலையார் பாடிய பாடல்களைக் கேட்ட அரசர், "இந்தச் சிறுவன் இவ்வளவு சிறந்த பாடல்களை எங்ஙனம் இயற்ற இயலும்! இவன் பாடிய பாடல்கள் இவனுடையது அல்ல என்று கருதுகிறேன்" என்றார். அரசரின் உரையைக் கேட்ட அடிகள் மனம் வருந்தினார். எவ்வாறேனும் அண்ணாமலையின் திறமையை அரசர் உணரும் வண்ணம் செய்ய வேண்டும் என்று கருதினார். அரசரைப் பார்த்து, "இவன் செய்யுள் இயற்ற வல்லவனா? ஆற்றல் இல்லாதவனா என்பதைத் தாங்கள் பரிசோதித்து உணரலாமே" என்றார். அரசரும் அண்ணாமலையைப் பார்த்து, "காரிகை என்னும் சொல் ஒரே செய்யுளில் ஏழு இடங்களில் வெவ்வேறு பொருள்பட வருமாறு அகப்பொருள் துறை அமைய ஒரு கட்டளைக் கலிப்பா இயற்றுக" என்றார். அண்ணாமலை உடனே பாடினார். பாடலைக் கேட்டு மன்னர் அயர்ந்து போனார். அண்ணாமலையின் திறமை கண்டு வியந்தார். அவரது கவித்திறமை கண்ட அரசர், அவரை முகவூர் இராமசாமிப் புலவரிடம் இலக்கணம் கற்பதற்கு அனுப்பினார். அண்ணாமலையும் நாள்தோறும் அரண்மனையில் உணவருந்தி முகவூர் சென்று இலக்கணம் கற்று வந்தார். பல்வேறு இலக்கண, இலக்கிய அறிவும், இசைப் பயிற்சியும் பெறவேண்டும் என்று கருதிய அண்ணாமலையார், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று, அதன் தலைவராயிருந்த சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டார். மேலும், அப்போது ஆதீனத்தில் இருந்த உ.வே.சாமிநாதய்யரிடம் நன்னூலும், மாயூர புராணமும் பாடம் கேட்டார். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வருகை புரிந்த பல கலைஞர்களிடம் இருந்து பல இசை நுட்பங்களையும் அறிந்து கொண்டார். அத்துடன் இசையுடன் பாடல்களைப் பாடும் பழக்கமும் அண்ணாமலையாருக்குக் கைவரப் பெற்றது. ஆதீனத்தில் இருந்தபோது அண்ணாமலையார் சுப்பிரமணிய தேசிகர் மீது நூற்றுக்கணக்கான பாடல்கள் புனைந்தார்.திருவாவடுதுறையிலிருந்து சென்னிக்குளம் வந்து சேர்ந்த அண்ணாமலை, மீண்டும் சுந்தர அடிகளின் உதவியினால் ஊற்றுமலைக்குச் சென்று அங்கு அரசராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராக அமர்ந்தார்.
ஊற்றுமலையரசரின் குலதெய்வமாகிய வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணர் மீது வீரையந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ் முதலிய சில பிரபந்தங்களைப் பாடினார்.மேலும், சங்கரன்கோவில் கோமதியம்மன் மீது சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் அண்ணாமலையார் படைத்தளித்தார். வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், வீரகேரளம்புதூர் சுப்பிரமணிய சாஸ்திரியார், கரிவலம் வந்த நல்லூர் உத்தண்டம்பிள்ளை, பாண்டித்துரைத்தேவர் முதலியோர் அண்ணாமலையாருடன் பழகிய சம காலத்தவர் ஆவர்.
"சீர்வளர் பசுந்தோகை மயிலான் - வள்ளி
செவ்விதழ்அல் லாதினிய
தெள்ளமுதும் அயிலான்
போர்வளர் தடங்கையுறும் அயிலான் - அவன்
பொன்னடியை இன்னலற
உன்னுதல்செய் வாமே."
என்று தொடங்கிய பாடலை, ஒரு முறை கழுகுமலைக்குக் காவடி எடுத்தபோது வழிநெடுகத் தொடர்ந்து பாடிக்கொண்டே சென்றார்.
பாடல் கேட்ட அனைவரும் "முருகா முருகா" என்று கூறி மெய் மறந்தனர்.
எத்தனையோ பாடல்கள்! ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு சந்தம்! வெவ்வேறு மெட்டு, வெவ்வேறு துறை. எல்லாம் புதுமை, எதுகை, மோனைகள் வந்து ஏவல் கேட்டன.
இயைபுத்தொடை அடிதோறும் அணி வகுத்து நின்றது. அன்றிலிருந்து, "வாக்கிற்கு அருணகிரி" என்ற வாசகம், "வாக்கிற்கு அண்ணாமலை" என்று விரிந்தது. பழைய பாடல்களின் சாயல் அறவே இல்லாத புதுவகை நாட்டுப் பாடலாகக் காவடிச்சிந்து மலர்ந்தது.
அண்ணாமலையார் பல்வேறு நூல்களை இயற்றி இருப்பினும் அவருக்குப் புகழ் சேர்த்தது காவடிச்சிந்துப் பாடல்களே ஆகும். காவடிச்சிந்து மட்டும் அவர் காலத்திலேயே அச்சாகிவிட்டது.
வழிநடையில் பாடப்பட்ட காவடிச்சிந்துப் பாடல்களை எல்லாம் ஊற்றுமலையரசர் திரட்ட முயன்றார். இருபத்து நான்கு பாடல்களே முழுமையாகக் கிடைத்தன. மற்றவை ஆசுகவியாகப் பாடப்பட்டமையால் காற்றோடு கலந்து மறைந்து போயின. ஊற்றுமலையரசர் கிடைத்தவற்றை மட்டும் காவடிச்சிந்து எனப்பெயரிட்டு, ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு நாடெங்கும் இலவசமாக வழங்கினார். காவடிச்சிந்து நூல் அச்சானதற்கு மகிழ்ந்த அண்ணாமலையார், ஊற்றுமலையரசரையும், அச்சிட்ட நெல்லையப்பக் கவிராயரையும் பாராட்டி, ஐந்து கவிகள் பாடியுள்ளார். காவடிச்சிந்தின் இனிமையும் பெருமையும் நாடெங்கும் பரவின. அண்ணாமலையார் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.
அண்ணாமலையாருக்கு அவரது தந்தையார், காலம் தாழ்த்தாது அவரது இருபத்து நான்காம் வயதில், குருவம்மா என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தார். புதுமனைவியுடன் ஊற்றுமலைக்கு வந்த அண்ணாமலை, நெடுநாள் இன்பமாக வாழ இயலவில்லை. அருந்தமிழ் பாடிய பெருந்தகையாளரை தீராத நோய் கவ்வியது. அப்போது அவருக்கு வயது இருபத்து ஆறு. தம் அவைக்கவிஞர் பிணியுற்றதறிந்த ஊற்றுமலையரசர், பலவித மருத்துவங்கள் செய்தும் நோய் நீங்கவில்லை.
1891ஆம் ஆண்டு தை மாதம் அமாவாசையன்று தமது 26 வது வயதில் கழுகுமலைக் கந்தனைக் கருத்தில் கொண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். பொன்னுடம்பு நீங்கிப் புகழுடம்பு எய்தினார். காவடிச்சிந்து புகழ் அண்ணாமலையார் மறைந்தாலும், கழுகுமலைக் கந்தன் மீது அவர் பாடிய காவடிச்சிந்து என்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
03.08.2020
#ksrposts

 


#வேலுப்பிள்ளை_பிரபாகரன்_சொல்ல #கண்களில்_கண்ணீர்_வந்தது.
————————————————-


பழைய டைரியை நினைவுகளை குறித்த நூல் எழுதுவதற்காக புரட்டிப் பார்த்த போது விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்கள் 15-11-1984 காலகட்டத்தில் என்னிடம் சொன்ன கருத்து இன்னமும் என் செவிகளில் இருக்கின்றன. மேலும் நம் பணிகளுக்கு இதைவிட என்ன அங்கீகாரம் கிடைத்துவிடப் போகிறது என தோன்றுகிறது. அவர் சொன்னது என்னவென்றால், "அண்ணே எப்படியும் தமிழீழம் ஒருநாள் மலரும். எங்களுக்கு ஆதரவாக இருந்த இந்திய தலைவர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் என அனைவரையும் யாழ்ப்பாணம் பாலாலி விமான நிலையத்தில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பேன். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அம்மாதான் தமிழீழத்தை துவக்கி வைப்பார் என்று நினைத்திருந்தேன், ஆனால் அதற்குள் அவர் படு கொடுமையாக கொல்லப்பட்டு விட்டார்.(இந்திரா காந்தி 31-10-1984 கொல்லப்பட்டார்)


இந்த பட்டியலில் அண்ணன் நெடுமாறன், நீங்கள், எங்களுக்கு ஆதரவாக இருந்த பத்திரிக்கையாளர் உங்கள் தோழிஅனிதா பிரதாப் போன்றவர்கள் பலர் எந்தப் பதவியில் இல்லை என்றாலும் உங்களையும் சிகப்பு கம்பளத்தில் தான் வரவேற்பேன், கட்டித் தழுவுவேன். இது என்னுடைய அவா’’

என்று அவர் சொன்னதை படித்த போது கண்களில் கண்ணீர் வந்தது. இதைவிடவா கிடைத்தும் கிடைக்கமால் சில புன்னியவான்களால் தடுக்கப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிகள் வேண்டும். சிலர் இன்று நம்மை எளிதாக துச்சமாக நினைத்தாலும் 35 ஆண்டுகள் முன்பு ஒரு தேசிய தலைவர் சொன்னதை விட வேறு அங்கீகாரம் என்ன வேண்டும். இது போதும். எனக்கு எந்த இழப்பும் இல்லை.இதை என் நேர்மையான உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாய் நினைக்கின்றேன்.

#இந்திரா_காந்தி

#ksrposts
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
3.08.2020 

 



#ஆடிப்பெருக்கு (18ம்பெருக்கு)முன்னிட்டு பலர் காவிரி மற்றும் ஆற்றங்கரைகளில் சென்று நீராடி வழிபட்டுக் கொண்டாடும் இடங்களில் காவல் துறையினர் சென்று மக்களை விரட்டல் என செய்திகள்.....

பொன்னியின் செல்வனை கல்கி இந்நாளில் ஆரம்பித்தார்.

காவிரி வந்ததடி காற்சிலம் பணிந்தவளே
பொன்னி வந்ததடி பொன்வளை யணிந்தவளே
இனி பூசநீர் பொழியுமடி பூச்சதங்கை புனைந்தவளே
வாசநீர் வழியுமடி உன் வாசல்வரை வானவளே.

#ksrposts
2-8-2020




தமிழர்களும் இஸ்லாமியர்களும் வாழும் மட்டக்களப்பு , திருகோணமலை, அம்பாறை உள்ளடக்கிய கிழக்கு இலங்கை பகுதியில் தொல்பொருள் மரபுரிமைகளை செய்திட இலங்கை அதிபரால் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்தர்கள் மட்டுமே இதன் உறுப்பினர்கள்.
தவறாக வரலாற்றை காரணம் காட்டி கிழக்கிலங்கையில் இந்துக்கோயில் உட்பட அவர்களின் வரலாற்று நினைவிடங்களை அகற்றி பௌத்த விகாரைகள் அமைப்பதற்கான திட்டமே இது என கூறப்படுகிறது.
பாஜக தலைமை இதனை கருத்தில் கொள்ளுமா ?

உலக இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் கிழக்கிலங்கை தமிழ் இந்து மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம்....?
@Jayasingh thozher 

 


#திருநெல்வேலி_இருட்டுக்கடை
(#அல்லவா)லாலாவின் கரோணா மரணம் பலருக்கு கவலை தந்தது. வசதிக்கோ புகழுக்கோ நட்புக்கோ குறைவில்லா நல்ல மனிதர்.

அவருடைய மறைவுக்கு பின்.....
கரோணாவின் தாக்கம்...
அதன் வீரியம்....
அதன் பாதிப்பு.....
நமக்கு வேதனை....

#ksrposts
1-8-2020.





 


#Meghnada was the eldest son of Ravana and Mandodari. On completion of his training in use of weapons and art of warfare, his Guru Shukracharya advised him to worship Lord Shiva for mighty celestial weapons. Meghnada did so and received most dangerous weapons from Lord Shiva. To please his father Ravana, Meghnada decided to conquer Indralok. Indra and the resident Devtas of Indralok got afraid of Meghnada and his army as they approached Indralok, so they fled away. As Meghnada entered Indralok Shachi, the wife of Indra scolded him. So she was captured. Meghnada challenged Indra to fight him and rescue her. Indra returned and after a fierce duel he was defeated. Meghanada tied and brought him to Ravana in Lanka. Ravana and Meghanada decided to kill Indra. At this juncture, Lord Brahma intervened and asked Meghanada to free Indra. Meghanada obliged and was granted a chance to ask for a boon from Brahma. Meghanada asked for immortality, but Brahma remarked that absolute immortality is against the law of the nature. Instead, he was then granted another boon that after the completion of the Yagna (fire-worship) of his native goddess Prathyangira or the "Nikumbhila yagna" would be completed, he will get a celestial chariot, mounting on which, any enemy can't kill him in a war and become invulnerable. But Brahma also cautioned him that whosoever would destroy this yagna, would also kill him. Brahma was highly impressed by Meghanada's valor in this war and it was Brahma who coined him the name Indrajit - "the conqueror of Indra"

This oleograph by Ravi Varma Press is based on painting by Raja Ravi Varma. 




தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் எஸ்.செல்வராஜ் அவர்கள் இன்று (31.07.2020 வெள்ளிக்கிழமை) இரவு 8:30 மணியளவில் மாரடைப்பு காரணமாக தூத்துக்குடி ஏவிஎம் மருத்துவ மனையில் காலமானார்.
எனது well wisher. நான் பொது வாழ்வில்
வெற்றி பெற விரும்பியவரகளில் இவரும்
ஒருவர்.
ஆழ்ந்த இரங்கல்......

 

“Without debate, without criticism, no administration and no country can succeed — and no republic can survive. That is why the Athenian lawmaker Solon decreed it a crime for any citizen to shrink from controversy. And that is why our press was protected by the First Amendment — the only business in America specifically protected by the Constitution — not primarily to amuse and entertain, not to emphasize the trivial and the sentimental, not to simply ‘give the public what it wants’ — but to inform, to arouse, to reflect, to state our dangers and our opportunities, to indicate our crises and our choices, to lead, mold, educate and sometimes even anger public opinion."

President John F. Kennedy

"விவாதம் இல்லாமல், விமர்சனம் இல்லாமல், எந்த நிர்வாகமும் எந்த நாடும் வெற்றிபெற முடியாது - எந்த குடியரசும் வாழ முடியாது. அதனால்தான் ஏதெனிய சட்டங்களை உருவாக்கும் சோலன் எந்தவொரு குடிமகனும் சர்ச்சையிலிருந்து சுருங்குவது ஒரு குற்றமாக அறிவித்தார். அதனால்தான், நமது பத்திரிகைகள் முதல் திருத்தத்தினால் பாதுகாக்கப்பட்டன - குறிப்பாக அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட அமெரிக்காவின் ஒரே வணிகம் - முதன்மையாக கேலி செய்வதற்கும், மகிழ்விப்பதற்கும் அல்ல, அற்பமான மற்றும் உணர்ச்சிகளை வலியுறுத்துவதற்கும் அல்ல, வெறுமனே 'பொதுமக்களுக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கக்கூடாது '- ஆனால் தெரிவிக்க, எழுப்ப, பிரதிபலிக்க, நமது ஆபத்துக்களையும் வாய்ப்புகளையும் குறிப்பிடுவதற்கும், நமது நெருக்கடிகளையும், தேர்வுகளையும் குறிக்க, வழிநடத்தவும், வடிவமைக்கவும், கல்வி கற்பிக்கவும், சில சமயங்களில் கோபமாகவும் இருக்கலாம். "

 

#கல்கி#ஒரு_சகாப்தம்!

கல்கியின் அச்சு இதழ் நிறுத்தப்பட்டது குறித்த என்னுடைய ஆதங்கத்தை, வேதனை.....
கல்கி மின்னிதழாக பீடு நடை போட கல்கி இதழுக்கு என் வாழ்த்துகள்!


Pon Murthy 
பதிவு

கல்கி வார இதழ் கடந்த 79 ஆண்டுகளாகத் தமிழ்ப் பத்திரிகை உலகில் தனக்கென தனிப் பாதை அமைத்து பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடித்து தமக்கென வாசகர்கள் குழாமை குறிப்பிட்ட அளவு வைத்துக்கொண்டு நடை போட்டு வந்தது. ஆனால் கல்கி இதழ் 16/ 8 / 2020 முதல் அச்சிதழ் கால நிர்ணயம் குறிப்பிடப்படாமல் நிறுத்தப்படுவதாக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே.
கல்கி தம் பயணத்தில் ஒரு ஆண்டு இதழ் வராமல் நின்று பின் தன் நடையைத் தொடங்கி தற்போது 79 ஆண்டுகள் நடந்துவந்தது என்பதும் நீங்கள் அறிந்ததே. அது தன் அச்சிதழ் பயணத்தை முடித்துக்கொண்டு ஆன்லைனில் மின்னிதழாக அதே புத்தக வடிவில் புரட்டிப் படிக்கும் வகையில் அதே அழகுடன் பயணப்பட இருக்கிறது. கல்கியின், கல்கி இதழின் வாசகர்கள், நேசர்கள், இலக்கியவாதிகள். படைப்பாளிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அச்சிதழுக்கு அளித்துவந்த அதே ஆதரவை மின்னிதழுக்கும் www.kalkionline.com வழங்கவேண்டுகிறோம். இது தன் பயணத்தை வேகமாகத் தொடங்கிவிட்டது.
கல்கி என்கிற பத்திரிகையுலக சாம்பவானின் குழந்தை கல்கி வார இதழ் பிறந்து வளர்ந்து செழித்து வாழ்ந்த வளர்ச்சியில் முதல் பதின்மூன்று ஆண்டுகளின் கதையை ‘பொன்னியின் புதல்வர்’ நூலில் திரு. சுந்தா எழுதிய குறிப்பு இது.
கல்கி என்ற பத்திரிகை கல்கி என்ற மனிதரின் தனிப்பட்ட ஆளுமையையும் அந்த ஆளுமையின் விதவிதப் பான்மைகளையும் பதித்துப் பரப்பும் சாதனமாய் விளங்கலாயிற்று. அரசியலில் ஒரு சக்தியாகவும் கலைகளில் ஒரு செல்வாக்காகவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு பண்ணையாகவும் கல்கிப் பத்திரிகை உருவாகி நிலை பெறுவதற்கு வேண்டிய அடிப்படையை ஆரம்ப இதழ்களிலேயே அதன் ஆசிரியர் அமைத்தார். கல்கிப் பத்திரிகை பற்றிய இரண்டு சிறு குறிப்புகள், திருச்சி சிறையிலிருந்து தமது குடும்பத்தாருக்கு ராஜாஜி எழுதிய கடிதங்கள் கிடைத்துள்ளன. அதில் ஒன்று கல்கி பத்திரிகை தொடங்கி கஷ்டப்பட வேண்டாம் என்பது. பத்திரிகை வந்தபின் எழுதிய கடிதம் இங்கே.

(12 / 8 / 41) புதுப் பத்திரிகை ‘கல்கி’ பார்த்தேன். நான் எதிர்பார்த்ததைவிட நன்றாக இருக்கிறது. நடைத் தமிழ் சுத்தப்பட்டு அழுகும் ஓட்டமும் கொண்டு எல்லோரும் அனுபவிக்கும் தன்மை அடையச் செய்வது இந்தப் பத்திரிகை யின் சிறப்பான சேவையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ண மூர்த்திக்கு சொல்ல வேண்டும்.

ராஜாஜி போலவே டி.கே.சி.யும் சொந்தப் பத்திரிகை போடுவதன் மூலம் கஷ்ட நஷ்டங்களுக்குக் கல்கி உள்ளாகக் கூடும் என்று கவலைப் பட்டார். அந்த எண்ணத்தை விடுத்து ஏதாவது ஒரு பத்திரிகையில் சம்பளத்துக்கு ஆசிரியராய் அமர்வதற்கு முயலும்படி கல்கிக்கு யோசனை கூறினார். ஆனால் “கஷ்டமோ நஷ்டமோ சுயேச்சையாய் எழுதுவதற்கு வாய்ப்பாக சொந்தப் பத்திரிகை தொடங்கத்தான் போகிறேன்” என்று ஒரே மனஉறுதியுடன் கல்கி நிற்கவே அந்த உறுதியை ரசிகமணி மெச்சி அதற்கு ஊக்கம் ஊட்டினார்.
கல்கிப் பத்திரிகை எடுத்த எடுப்பிலேயே அடைந்த வெற்றி கண்டு மகிழ்ச்சி அடைந்த டி.கே.சி. நாலாவது இதழ் வெளியானதும் அது பற்றி உற்சாகமாய் (அப்போது சிறையிலிருந்த) ராஜாஜிக்கு 19.9.41 அன்று ஒரு கடிதம் எழுதினார்.

சந்தோஷமான சமாசாரம் ஒன்று. எதிர்பாராதபடி கல்கிப் பத்திரிகைக்கு தமிழ் உலகில் தேவை ஏற்பட்டு 21,000 பிரதிகள் வெளியிட்டாலும் போது மானதாக இல்லை. ஐந்து நிமிஷத்தில் ஏஜெண்டுகளிடமிருந்த பிரதிகள் காலி யாகிப் போய்விடுகின்றன. படங்களும் கட்டுரைகளும் ரொம்ப வாய்ப்பாய் இருக்கின்றன. எல்லாம் எளிமையாய் நளினமாய் இருக்கின்றன. (நான் எழுதும்) கம்பராமாயணம்கூட ஒன்றாகச் சேர்ந்து ஒப்பேறி விடுகிறது. தமிழ்நாட்டில் புகார் எல்லாம், பிரதிகள் போதவில்லை, ஏன் இன்னும் வாரப் பத்திரிகையாய் ஆகவில்லை என்பதுதான். தமிழர்களுக்குத் திடீரென்று உணர்ச்சியும் அறிவும் திருந்திவிட்டது.

விவாதப் புயல்கள் போட்டிகள், பொறாமைகள், யுத்த கால அபாயங்கள், தணிக்கை இடையூறுகள், தட்டுப்பாடுகள், விலை ஏற்றங்கள் - இவற்றை எல்லாம் சமாளித்துக்கொண்ட கல்கிப் பத்திரிகை முன்னேறியது. முதல் இதழில் வெளியான வெண்பா ஒன்றில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வாழ்த்தியபடியே பசுந்தமிழ்ச் சோலையாம் கல்கி நித்தமும் பல்கி வளர்ந்தது.
மாதம் இருமுறை சஞ்சிகையாகத் தொடங்கிய கல்கி, 13ஆம் மாதத்திலி ருந்து மாதம் மூம்முறையாகவும், 33ஆம் மாதத்திலிருந்து அதாவது 1944 ஏப்ரலிலிருந்து வாரம் ஒரு முறையாகவும் வெளிவரலாயிற்று.

முதல் இரண்டு இதழ்களையும் பன்னிரண்டு ஆயிரம் பிரதிகள் வீதம் அச்சடித்து வெளியிட்டார்கள். இரண்டணா விலை கொண்ட அந்த இதழ்கள், நாலணா, எட்டணா என்றெல்லாம் பல ஊர்களில் கறுப்புச் சந்தைச் சரக்கைப் போல் விற்பனை ஆயிற்று. மூன்றாவது இதழ் 20 ஆயிரம், நாலாவது 21 ஆயிரம், அவைகளும் பற்றாக்குறை நிலையில் அவ்வாறே விலை போயின. ஐந்தாவது இதழிலிருந்து 35 ஆயிரம் வெளியானபோது, ஓரளவு பற்றாக்குறை தீர்ந்தது. அப்போதும் அநேக ஊர்களில் க்யூ நின்று கல்கியை வாங்க வேண்டியதாய் இருந்தது.

பிறகு காகித நிலைமை திருந்தியதும் ஆயிரம் ஆயிரமாய்ச் செலா வணி கூடிக்கொண்டே போய், ‘பொன்னியின் செல்வன்’ தொடர் கதை வெளி யான சமயத்தில் 71 ஆயிரம் என்ற உச்சத்தை எட்டிற்று. பத்திரிகைகளில் விளம்பரம் செய்வோரின் தகவலுக்காக அவற்றின் விற்பனைக் கணக்கைத் தணிக்கை செய்யும் ஏ.பி.சி. நிறுவனம் 1953ல் கல்கி இதழ் ஒன்றின் சராசரிச் செலாவணி 71,366 பிரதிகள் என்பதாகச் சான்றிதழ் வழங்கிற்று.

இந்தியாவில் ஆங்கிலத்திலும் சரி, நாட்டு மொழிகளிலும் சரி, வேறெந்த வாரப் பத்திரிகையோ, நாளிதழோ, அந்தக் காலத்தில் எட்டியிராத விற்பனைத் தொகை அது.

பந்தயப் பரிசுகள், அதிர்ஷ்ட எண் வெகுமதிகள், சோதிடப் பலன்கள், காமக் கதைகள், கவர்ச்சிப் படங்கள் ஏதுமின்றி அவ்வளவு பெரிய செலா வணியை கல்கி அடைந்தது சிறப்பாய்க் குறிப்பிடத்தக்கது. 1956ல் ஒரு லட்சத்துக்கும் மேல் அதன் விற்பனைத் தொகை பெருகிற்று.

இதுதான் கல்கி பத்திரிகையின் வளர்ச்சியில் முதல் பதின்மூன்று ஆண்டுகளின் கதை. அதன் ஆசிரியரின் உயிருடனும் உணர்வுடனும் இணைந்த கதை. அவருடைய எழுத்தும் புகழும் ஓங்கிய கதை. வாழ்க கல்கி. அதன் வாசகர்கள் வாழ்க. 

 


#The_Politics_of_Corruption #Accusations_in_India#1959version:
-------------------------------------



Once Sardar Partap Singh Kairon had been able to marginalise his political opponents effectively he discovered that the greatest challenge to his public life would come from the accusations against his family. Kairon’s political opponents had begun to force on the public quite an unflattering picture of the family. As we saw in the previous chapter, the attacks began soon after Kairon was elected to the office of chief minister. Many newspapers carried all sorts of salacious news about the wrong doings of various family members. A particular target was Sardar Partap Singh’s elder son, Surinder. Most of the accusations were in the form of mere insinuations, made mostly in public speeches or in the Vidhan Sabha. Mr. Virendra’s speech in the Punjab Legislative Council on 16th February, was typical. In the course of the discussion on the Governor’s address, Virendra accused the state administration of corruption and nepotism and said that nothing tangible could be achieved in rooting out these evils unless action was taken against the top men in the bureaucracy. He went on to inform the house that smuggling was rampant across the Punjab border and accused ‘influential’ persons of backing this anti-national racket. Many from the opposition then insisted on an enquiry into the alleged accumulation of wealth by ministers and their relatives during the past four years.

Such charges would then be reported in the newspapers widely and tend to gain a life of their own. The frequent insinuations, each feeding on the others, seemed to suggest that there was some truth in the accusations against the Kairon family. It has always been difficult to ward off insinuations. Then, Sardar Partap Singh Kairon decided to escalate matters. The chief minister challenged the accusers formally. On July 22nd, 1957, a press release was issued on his behalf asking those who were making such accusations to come forth with details or face consequences.
The only person who rose to the challenge was Harbhajan Singh, the Chairman of the Punjab Praja Socialist Party. For long the PSP had hoped, as the reports about their annual meetings would suggest, to ‘finish off’ Kairon. Political rivalry and Kairon’s unbending attitude towards his rivals seemed to be the only visible reasons for the strong hatred against Kairon that Harbhajan Singh harboured. Harbhajan Singh now made public his opinion that it was Surinder Kairon from the Kairon family who was in league with smugglers. Surinder (b. 1930) was currently a professor of political science at Ludhiana.
Harbhajan Singh’s press statement was quite explicit in naming Surinder Singh Kairon. “As one of those who have been naming that son of the minister as one of the leaders of the smugglers… I hereby name … Surinder Singh Kairon son of S. Partap Singh Kairon, Chief Minister”, Harbhajan Singh’s statement read. “And I do so determined to face consequences of the charge being openly levied by me. I further allege that the son of our Chief Minister is not only a leader of smugglers but is responsible for a large number of crimes being committed in the Punjab. But because the culprit happens to be Chief Minister’s son the cases are always shelved up.”
The charges by Harbhajan Singh could not have been clearer. Newspapers, fed on stories being constantly released by Kairon’s political opponents, had a field day. The Blitz, a left wing weekly, made much of it. Other newspapers quickly began to repeat the charges and add their own bits of salacious details, suggesting that the smuggling racket run by Surinder had been busted with the arrest of his henchmen by the Amritsar police.

The only small detail worthy of note at this distance removed is that everyone was eagerly repeating the charges, quoting each other, without providing any further detail. There were stories galore, of phone calls having been made to Pakistan, of people having been murdered by or at the behest of Surinder.
Eager to prove that there was nothing to hide, Sardar Partap Singh Kairon had all the charges investigated by the police.
The police repeatedly came to the conclusion that there was no substance to the charges, they were completely false. But that would not stop the spreading stories. For, somehow, it was widely believed in India of those times, that Sardar Partap Singh Kairon’s family was hand in glove with all sorts of wrong doers and that he would have been removed from his post had it not been for the particular support coming from Jawaharlal Nehru himself. Even S. Gopal said so in his biography of Nehru. Gopal’s words needed to be taken with some seriousness considering that he was one of the most respected of historians of India, close to the Nehru family, employed by the Ministry of External Affairs and the son of Dr. Radhakrishnan, the Vice President of India in the late 50s who later became the President of India.
Harbhajan Singh was so sure of the charges that he was making against Surinder Kairon that he went on to create an open challenge. If nothing else, the fact that he was putting himself at stake, Harbhajan Singh must have thought, would convince people of the correctness of the charges. “If the Punjab Government accepts this challenge”, he would write in his press statement, “it should (appoint) an independent committee of impartial judges from outside the Punjab and then let us see who has to face the consequences. If the Punjab Government dare not do so, I would not mind serving a term in jail for having had the courage to come out with the truth. May I bring it to the notice of Punjab government that Chief Minister’s son is being discussed in almost every Punjabi house, but people are afraid of talking about him in public lest they be punished for that”.

As the accusations acquired a life of their own, Surinder Kairon decided to challenge the accuser in court by filing a criminal defamation case. He filed a defamation case in the court of the magistrate at Tarn Taran. Harbhajan Singh responded by insisting that the case would be unduly influenced by the Kairon family and requested for a transfer of the case to Delhi. The Supreme Court ordered a transfer of the case to Delhi.

In Delhi, the Additional Sessions Judge, P D Sharma heard out the details, looked at all the evidence produced and concluded that Harbhajan Singh was being economical with the truth in describing Surinder Kairon as a leader of a gang of smugglers or even as someone close to the smugglers. Harbhajan Singh had summoned the who’s who of the government to testify in his defence: a total of 350 persons. The judge allowed 35, in the end Harbhajan managed to get only 20 to testify in his favour. Effectively Harbhajan Singh wanted the entire top leadership of the Congress to attend court and testify in his favour. The judge concluded that Harbhajan’s performance in court showed that he was more of a sensation monger than a devotee of truth and that he made wild accusations for which he had no basis. Considering all circumstances, the judge, on the 27th of August 1959, ordered a year in jail for Harbhajan Singh. It was already two years since the case had been originally filed. Lasting harm had been done to the image of the chief minister. So much so that the normally judicious S. Gopal, an eminent historian, son of the Vice President of India S Radhakrishnan, in his biography of Nehru could make the bland statement that Kairon’s sons in Punjab
With matters reaching a conclusion that he had not hoped for, Harbhajan Singh approached the with a request that the decision of the lower court be overturned. The High Court observed that even though Harbhajan Singh had produced a humungous mass of evidence before the court, none of it had any bearing on the matter of proving that Surinder Kairon was a leader of smugglers or was involved in any of the activities of which he was being charged.
Harbhajan now approached the Supreme Court and argued that he should be spared the sentence since the charges that he had been making were made in good faith, with the objective of preserving the integrity of public life, that many more had been making a similar charge against Surinder Kairon but that he, Harbhajan alone, had been ‘reckless’ enough to name Surinder. The Supreme Court took note of the drama that Harbhajan had been creating to tarnish the image of Sardar Partap Singh Kairon and his family but then accepted his plea that whatever he was saying was done in good faith. The basis for good faith, the Court said, lay in the fact that there was ample evidence on record to show that Surinder Kairon did use his influence over government servants, time and again, to expedite things in favour of certain people or to promote certain people, even though he had no official standing in this regard. The Supreme Court’s observations had failed to exonerate Surinder Kairon entirely. That would give hope to Kairon’s detractors that they still had a weapon to be used to harm the chief minister.
Pic. shows Rajagopalachari, Vallabh Bhai Patel, S. Partap Singh Kairon, S. Sohan Singh Josh, Sant Nidhan Singh Alam

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...