Saturday, April 30, 2016

உ.வே.சா. நினைவு நாள்

இன்றைக்கு (ஏப்ரல் 28) உ.வே.சா. நினைவு நாள். அவருடைய என் சரித்திரத்தின் சில பக்கங்களை படிக்கவேண்டும் என்று விரும்பி பக்கங்களை புரட்டினேன். ஏற்கனவே உ.வே.சா.வுக்கும் திருநெல்வேலி மண்ணுக்கும் உள்ள தொடர்புகளை என்னுடைய நிமிர வைக்கும் நெல்லை என்ற நூலில் பதிவு செய்துள்ளேன். உ.வே.சா. சுவடிகளைத் தேடி நெல்லை மாவட்டத்தில் கரிவலம்வந்தநல்லூர், தென்காசி அருகே மேலகரம், திருக்குற்றலாம், கடையம் என பல நெல்லை மாவட்டப் பகுதிகளுக்கு சுவடிகளைத் தேடி அலைந்துள்ளார். மற்றொரு செய்தியை கேள்விப்பட்டேன். நெல்லையில் அவர் இப்போது ஷிபா மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். இந்த வீட்டின் பக்கத்தில்தான் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கிருந்துதான் உ.வே.சா. திருநெல்வேலியின் தென்பகுதிகளுக்கு ஓலைகளைத் தேடி, திருக்....., ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர் நாங்குநேரி என்று சென்று வருவதுண்டு. வில்வண்டி கட்டிக்கொண்டு விடியற்காலையிலேயே ஓலைச்சுவடிகளை எங்கிருக்கிறது என்று அறிந்து அங்கெல்லாம் செல்வார். சில நேரங்களில் இருட்டியப் பின்புதான் திருநெல்வேலியில் தங்குவார். இன்றைக்கு அந்த வீட்டில் வாரிசுகள் சாமிநாதன் தங்கியிருக்கின்றார். அந்த வீட்டின் அருகேதான் ஆரம்பத்தில் தினமலர் ஏட்டில் நிறுவன ஆசிரியர் ராமசுப்பய்யர் வீடும் இருந்தது. இந்தப் பகுதியில்தான் நெல்லை சங்கீத சபாவும் உள்ளது. அத்தோடு திருவாடுதுரை ஆதினத்துக்கான சொத்துக்களும் சைவமும், தமிழும் திருநெல்வேலியில் வளர்ந்தது ஒரு தனி வரலாறு. உ.வே.சா. காலடிப் படாத இடமே திருநெல்வேலியிலும், பாளையங்கோட்டையிலும் இல்லை. கல்வியின் கேந்திரப் பகுதியான பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு அல்லவா.

Friday, April 29, 2016

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு!

ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு மனத்திரையில் தமிழகத்தின் வரைபடத்தை ஒரு பாயைப் போல விரித்துப் போடுங்கள். 

ஒருபக்கம் பச்சைப் பசேல் என மேற்குத் தொடர்ச்சி மலைகள். எதிர்ப்பக்கம் 1,100 கிலோ மீட்டர் தொலைவுக்கு மிக நீண்ட கடற்கரை. இடையே அகண்ட சமவெளி.  

சமவெளியில் இடையூறாக பெரிய மலைகள் எதுவுமில்லை.  மேற்குப் பக்க மலைகளில் இருந்து வழிந்தோடும் #தண்ணீர், சமவெளியில் தடையின்றி ஓடி கிழக்குப் பக்கம் இருக்கும் கடலில் சென்று கலக்கிறது. 

அருகில் உள்ள ஆந்திரா, கர்நாடகாவில் இப்படியான அகண்ட சமவெளி அமைப்பைப் பார்க்கவே முடியாது.

ஆனாலும், அறிவியல்பூர்வமாக தமிழகம் ஒரு வறட்சிப் பிரதேசம்!  நமது புவியியல் அமைப்பு அப்படி. 

மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, விந்திய மலைத் தொடர் இவற்றுக்கு நடுவே முக்கோண வடிவில் இருக்கும் பகுதி தக்காண பீடபூமி(Deccan plateau). 

இதன் தெற்கே இருக்கிறது தமிழகம். அதன்படி தமிழகம் ஒரு மழை மறைவுப் பிரதேசம். 

ஏன்? என்று பார்ப்போம்....

ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நாடு முழுவதும் தென்மேற்குப் பருவ மழை சீராக பெய்கிறது. 

ஆனால், தமிழகம் மட்டும் விதிவிலக்கு. சொட்டு மழைப் பெய்யாது. வெக் கையில் வெந்து   சுண்ணாம்பாகிப் போவோம். 

மேற்குத் தொடர்ச்சி மலை உயரமாக இருப்பதால் அது தென்மேற்குப் பருவக் காற்று மூலம் தமிழகத்துக்கு வரும் ஈரப்பதத்தை தடுத்துவிடுகிறது. 

இதனால், தமிழகத்துக்கு தென்மேற்குப் பருவமழை குறைவு (307 மி. மீட்டர்).  நமக்குப் பிரதானமாக கிடைப்பது அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை பொழியும் வடகிழக்குப் பருவ மழைதான் (439 மி.மீட்டர்).

ஆனால், தென் மேற்குப் பருவ மழையைப் போன்ற இயல்பை கொண்டதல்ல வடகிழக்குப் பருவ மழை. முரட்டுப் பிள்ளை அது!  

அழிச் சாட்டியம் பிடிக்கும். நம்பவே முடியாது. பெய்தால் வானமே வெடித்ததுபோல கொட்டித் தீர்க்கும். பொய்த்தால் பூமியே வெடித்ததுபோல பாளம் பாளமாகப் பிளக்கும். 

நமது வரமும் அதுதான்;  துயரமும் அதுதான்! ஆனால், அதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.

இந்த அறிவியல் உண்மையை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். இயற்கையின் இயல்புக்கு ஏற்ப நீர் மேலாண்மை செய்தால்தான் பிழைக்க முடியும் என்று அறிந்து வைத்திருந்தார்கள். 

எனவேதான், அவர்கள் அணைக்கட்டு காலத்துக்கும் முன்னதாகவே ஏரியின் தொழில்நுட்பத்தில் தேர்ந்திருந்தார்கள்.  ஏராளமான ஏரிகளையும் குளங்களையும் வெட்டி னார்கள். 

வரத்துக் கால்வாய், வடி கால்வாய், பாசன வாய்க்கால், கலுங்கு, மடை, மறுகால் ஓடை என விதவிதமான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தார்கள். 

வீட்டுக்கு ஒருவர் என வரிசை வைத்து அவற்றை தினசரி பராமரித்தார்கள். உண்மையில், தமிழகத்தின் பாரம்பரிய பாசனம் என்றால் அது ஏரிப் பாசனம்தான்.

பழம் பெருமை பேசவில்லை. ஆதாரங்களுடன் கூடிய உண்மை இவை. கடந்த காலங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் மதுரையில் மட்டும் 50 சங்க கால ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இன்றைக்கும், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் கருங்குளம், பகடைக்குளம், புல்வெட்டிக்குளம் என்று மூன்றடுக்கு குளங்கள் இருக்கின்றன. 

உண்மையில் இது ஒரே கண்மாய்தான். நம் முன்னோர்கள் ஏரியின் குறுக்கே கரைகள் அமைத்து அதனை மூன்றாகப் பிரித்தார்கள். 

ஒவ்வொரு அடுக்கையும் மேலிருந்து கீழாக ஒன்றைவிட ஒன்று உயரம் குறைவாக அமைத்தார்கள். பாசனம் பெறும் நிலங்களின் மட்டங்களுக்கு ஏற்ப குளங்களின் உயரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. 

இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் எல்லாம்கூட அதன் அருகில் நெருங்க முடியாது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு இதன் அருகில் ஒரு முதுமக்கள் தாழி கிடைத்தது. அதை வைத்து குளத்தை ஆய்வு செய்த தொல்லியல் நிபுணர்கள், இவை 2100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

சங்க காலத்தில் நம் முன்னோர்கள் பொக்லைனும் புல்டோசரும் கொண்டா இப்படியொரு நுட்பமான ஏரியை உருவாக்கினார்கள்? 

வெறும் கடப்பாரையையும் மண்வெட்டியையும் கொண்டு இவ்வளவு பெரிய ஏரியை உருவாக்க அவர்கள் எத்தனை பாடுபட்டிருப்பார்கள்? வெட்டி முடிக்க எத்தனை காலம் ஆகியிருக்கும்? எத்தனை பேர் உழைத்திருப்பார்கள்? எத்தனை பேர் உயிரிழந் திருப்பார்கள்? 

எந்த அளவுக்கு தொலைநோக்குப் பார்வையும் தியாக உள்ளமும் இருந்தால் எதிர்கால தலைமுறையினருக்காக இப்படி ஓர் ஏரியை அவர்கள் உருவாக்கியிருப்பார்கள்?

ஆனால், நாம் என்ன செய்தோம்? முன்னோருக்கு நன்றி மறந்தவர்களானோம். வரும் தலைமுறையினருக்கு துரோகம் செய்தோம். முன்னோர்களின் உழைப்பை எல்லாம் உருத்தெரியாமல் அழித்துவிட்டோம்.  

அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்ந்த பொக்கிஷங்களை எல்லாம் பொக்லைன் கொண்டு இடித்துத் தள்ளி கான்கிரீட் கட்டிடங்களாக்கிவிட்டோம். 

உலக அதிச யங்களிலும் யுனெஸ்கோவின் புராதன சின்னங்களிலும் பதிக்க வேண்டிய வரலாற்று அதிசயங்களை எல்லாம் வெளியுலகுக்கே தெரியவிடாமல்,   ‘சென்னைக்கு மிக அருகில்’, ‘திருச்சிக்கு மிக அருகில்’,  ‘மதுரைக்கு மிக அருகில்…’ என்று கூறு போட்டு விற்றுவிட்டோம். 

இப்போது வெள்ளத் திலும் வறட்சியிலும் தவித்து நிற்கிறோம். தவறு யார் மீது?

சென்னை - போரூர் ஏரியின் உண்மையான பரப்பளவு 800 ஏக்கர். 29 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஏரியின் பெரும் பகுதி தனியார் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. 

ஏரியைத் தானம் செய்ய அரசுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? அதன் நீட்சியாக தொடர் ஆக்கிரமிப்புகளால் அந்த ஏரி, இன்று வெறும் 330 ஏக்கராக சுருங்கி நிற்கிறது.

சேலம் பேருந்து நிலையம், காந்தி விளையாட்டு மைதானம், விழுப்புரம் பேருந்து நிலையம், நீதிமன்றம், அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை உயர் நீதிமன்றம், வள்ளுவர் கோட்டம், தியாகராய நகர்.... இவை எல்லாம் ஏரியை அழித்து எழுப்பட்டவைதானே. 

சென்னையில் 36 ஏரிகள் இன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டன. சென்னைப் புறநகரில் தற்போது இருக்கும் 15 ஏரிகளின் மொத்தப் பரப்பளவான 2,416.51 ஹெக்டேரில் 589.2 ஹெக்டேர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் 37 கண்மாய்களில் 30 கண்மாய்களின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. காலம் காலமாக ஏரிகளைப் பராமரிக்க நம் முன்னோர்கள் செய்து வந்த குடிமராமத்துப் பணியை இன்று அறிவார் யாருமில்லை.

மக்கள் பெருக்கத்தால் நகரமயமாக்கம் தவிர்க்க முடியாததுதான். ஆனால், அது திட்டமிடப்பட வேண்டியது; கட்டுப்படுத்தப்பட வேண்டியது. இரண்டையும் நாம் செய்யவில்லை. 

#நீர் நிலைகளை எல்லாம் அழித்துவிட்டு அண்டை மாநிலங்களிடம் சண்டைப்  போட்டுக் கொண்டிருக்கிறோம்.

-- The Hindu

Freedom of speech

Freedom of speech.                       -----------------------------------David Marsters, a retired police officer, was fed up with Barack Obama. 'One man ruined the whole country,' Marsters declared by phone a few days after being interrogated by the Secret Service. 'I voted for him the first time. He’s conned everybody in the nation that he’s gonna change this or change that'.”
--from FREEDOM OF SPEECH: Mightier Than the Sword by David K. Shipler
 
Here David K. Shipler turns his incisive reporting to a critical American ideal: freedom of speech. Anchored in personal stories—sometimes shocking, sometimes absurd, sometimes dishearteningly familiar—Shipler’s investigations of the cultural limits on both expression and the willingness to listen build to expose troubling instabilities in the very foundations of our democracy. Focusing on recent free speech controversies across the nation, Shipler maps a rapidly shifting topography of political and cultural norms: parents in Michigan rallying to teachers vilified for their reading lists; conservative ministers risking their churches’ tax-exempt status to preach politics from the pulpit; national security reporters using techniques more common in dictatorships to avoid leak prosecution; a Washington, D.C., Jewish theater’s struggle for creative control in the face of protests targeting productions critical of Israel; history teachers in Texas quietly bypassing a reactionary curriculum to give students access to unapproved perspectives; the mixed blessings of the Internet as a forum for dialogue about race.

Thursday, April 28, 2016

கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி சிறையிலிருந்தே சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார்

இது தேர்தல் நேரம். தியாக தழும்புகளோடு சிறையிலிருந்தே தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவர் பி. ராமமூர்த்தி ஆவார். சிறையில் விசாரணை கைதிகள் வாக்களிக்கவேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கையும் தாக்கல் செய்தவன் என்ற முறையில் இந்த செய்தியை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் தொழிற்சங்கத்தையும் தமிழகத்தில் வழிநடத்திய பி. ராமமூர்த்தி 1952 ஆம் வருடம் சிறையில் அடைக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட செல்ல முடியாமல் மதுரை சிறையிலிருந்து வெற்றி பெற்றார்.  அப்போது தலைமறைவு வாழ்க்கை நடத்திய பி. ராமமூர்த்தி உடல்நலம் கெட்டு இரவில்தான் வெளியே வருவார். 1951ல் இவர் பம்பாய் செல்லும்போது கைது செய்யப்பட்டார். மாறுவேடத்தில் சென்ற இவரை எப்படியோ காவல்துறையினர் பிடித்துவிட்டனர். வழியில் அமலாபுரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு கொண்டுவரப்பட்டார். அப்போது 1952 தேர்தல் நேரம். மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கினார் பி. ராமமூர்த்தி. மதுரையில் ஜவுளித் தொழிலாளர் பிரச்சினையிலும், மக்கள் பிரச்சினையிலும் ஈடுபட்டு மக்களிடம் செல்வாக்கை பெற்றார். 1952 தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் பிரமுகர் சிதம்பர பாரதியை காட்டிலும் 3332 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.  பிரச்சாரத்திற்கு கூட போகாமல் சிறையிலிருந்தே வெற்றி பெற்ற இந்தியாவில் முதல் சட்டமன்ற உறுப்பினர். இந்தப் படத்தில், அம்பாசமுத்திரத்தில் தொழிற்சங்கப் பணியை துவங்கி பல்வேறு தியாகங்களை செய்து தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த தோழர் என். நல்லசிவம். இவர் எங்கள் நெல்லை மாவட்டத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி. என்னுடைய நூலுக்கு அணிந்துரையும் வழங்கியுள்ளார். இவரை திருவல்லிக்கேணி தேரடித் தெருவில் இருந்த கட்சி அலுவலகத்திலும், பின்பு தி.நகர் வைத்தியராம ஐயர் தெருவில் உள்ள அலுவலகத்திலும் பலமுறை சந்தித்து பேசியது உண்டு. அவர் அருகே அன்புக்கும், பாசத்துக்கும் உரிய அண்ணன் எஸ்.ஏ. பெருமாள், செம்மலர் ஆசிரியர், என் மீது அன்பு பாராட்டக்கூடியவர், சிந்தனையாளர், தமிழகத்தில் பல இலக்கிய படைப்பாளிகளை உருவாக்கியவர். இந்தப் படம் மொத்தத்தில் தியாகங்களின் அடையாளம்.

யாழ்ப்பாணம் அருகே கொற்குவில்

ஈழத்தில், யாழ்ப்பாணம் அருகே கொற்குவில் அருகே உள்ள கிராமிய காட்சி. இன்று காலை சரோஜா சிவச்சந்திரன் அனுப்பிய படம். சரோஜா சிவச்சந்திரன் நீண்டகாலமாக சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள ஸ்டேட் பாங்க் ஆபிசர்ஸ் அசோசியேஷன் இன்ஸ்டியூட்டில் அமைப்பாளர் என்ற பொறுப்பில் இருந்தார். ஈழப் பிரச்சினையையும், சர்வதேச அரசியலையும் நன்கு தெரிந்தவர். இவர் கணவர் சிவச்சந்திரன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியர். 1982-83 காலகட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து போராளிகள் குழு அமைப்புகளுக்கும் மிக நெருக்கமாக இருந்தவர்.

ஜனநாயகத்தின் பிறப்பிடம்

ஜனநாயகத்தின் பிறப்பிடம் கிரேக்க ஏதென்ஸில் கண்ணில் படுகின்ற உயர்ந்த தூண்கள் தாங்கியிருந்த அரங்கத்தில்தான் ஜனநாயக தொட்டில்கள் ஊஞ்சல் ஆடின.  நகர அரசுகள் என்பவை இங்கிருந்துதான் விவாவதிக்கப்பட்டு பரிபாலனம் செய்யப்பட்டது.


ஆர்ப்பரிக்கும் தாமிரபரணி, பாபநாசம் படித்துறை


Wednesday, April 27, 2016

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி

கடந்த 19.4.2016 அன்று "காராச்சேவும் - கடலைமுட்டாயும் - ஹாக்கிப்பட்டியும்" என்ற தலைப்பில் கோவில்பட்டி மற்றும் அதன் வட்டார கிராமங்கள், அங்கு நிலவிய கடந்த கால அரசியல், சமூகப் பார்வை என பல விஷயங்களை பதிவு செய்யலாம் என்று விரும்பினேன். இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில் இப்போது அது தேவையில்லை என்று சில நண்பர்கள் சொன்னார்கள். இருப்பினும் 1996 வரை வேட்பாளராகவும், வேட்பாளரின் முகவராகவும், இன்று வரை களப்பணியாளராகவும் இருந்துள்ளேன்.

இத்தோடு இணைக்கப்பட்டுள்ள தேர்தல் கால 1996க்கு முந்தைய கால புகைப்படங்கள் கண்ணில் பட்டபோது பல தேர்தல் சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

1952லிருந்து யார் யாருக்கு இடையே தேர்தல் களத்தில் போட்டி நடந்தது என்பதை வேட்பாளர்களின் பெயர்களோடு பட்டியல் இதோ.

1952 - ராமசாமி (காங்கிரஸ்) -  vs  - சண்முகம்
1957 - சுப்பய்யா நாயக்கர் (காங்கிரஸ்) -  vs  - செல்வராஜ்
1962 - என்.வி. வேணுகோபால் கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) -  vs  - ஆர்.எஸ். அப்பாசாமி (எஸ்.டபுள்யூ.ஏ)
1967 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - வி.ஓ.சி. ஆறுமுகம் பிள்ளை (காங்கிரஸ்)
1971 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - எல். சுப்பா நாயக்கர் (காங்கிரஸ்)
1977 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - பி. சீனிராஜ் (அ.தி.மு.க.)
1980 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - வி. ஜெயலட்சுமி (காங்கிரஸ்)
1984 - ரங்கசாமி (காங்கிரஸ்) -  vs  - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.)
1989 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - கே.எஸ். இராதாகிருஷ்ணன் (தி.மு.க.)
1991 - ஆர். ஷியாமளா (அ.தி.மு.க.) -  vs  - எல். அய்யாலுசாமி (சி.பி.ஐ.)
1996 - எல். அய்யாலுசாமி (சி.பி.ஐ.) -  vs  - கே.எஸ். இராதாகிருஷ்ணன் (ம.தி.மு.க.)
2001 - எஸ். ராஜேந்திரன் (சி.பி.ஐ.) -  vs  - கே. ராஜாராம் (தி.மு.க.)
2006 - எல். ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.) -  vs  -  எஸ். ராஜேந்திரன் (சி.பி.ஐ.)
2011 - கடம்பூர் சே.ராஜூ (அ.தி.மு.க.) -  vs  -  கோ.ராமச்சந்திரன்

இந்த தேர்தல் களங்களில் கிட்டத்தட்ட மங்கலான நினைவுகளோடு 1957ல் இருந்து சற்று நினைவுக்கு வருகிறது.

1952 பொதுத் தேர்தலில் கட்சிகளுக்கு சின்னங்கள் இல்லாமல் வர்ணங்களை அடையாளப்படுத்திய வாக்குப் பெட்டிகள் மூலமாக தேர்தல் நடந்தது. சுயேச்சைகளுக்கு தனி வர்ணமாக ஒரு பெட்டி என்று ஒதுக்கப்பட்டது. அன்றைய தேர்தல் ஆணையர் சுகுமார் சென் நாட்டில் எப்படி தேர்தல் நடத்துவது என்று முறைப்படுத்தினார்.

மஞ்சள், கறுப்பு வர்ணமடித்த அம்பாசிடர் காரில் மைக் செட்டைக் கட்டிக்கொண்டு, வேட்பாளரும், கட்சி நிர்வாகிகளும் ஒருவர் மீது ஒருவர் நெருக்கடியில் அமர்ந்துகொண்டு அப்போது கிராமங்களுக்கு சென்று வாக்குகள் கேட்பது உண்டு.  ஒரு வேட்பாளருக்கு ஒரு கார்தான் இருக்கும். அதிகபட்சம் இரண்டு கார்கள். அன்றைக்கு ஒரு காருக்கு வாடகை வெறும் 80 ரூபாய். வேட்பாளர்கள் இப்போது போல இல்லாமல் கிராமங்களில் நிர்வாகிகள் வீட்டில் என்ன கிடைக்கிறதோ, அதை உண்டுவிட்டு கிராம பம்புசெட்டு கிணறுகளில் குளித்ததெல்லாம் பார்த்துள்ளேன். அழகர்சாமி அவர்கள் 1977ல் போட்டியிடும்போது நல்லகண்ணுவும், கோடங்கால் கிருஷ்ணசாமியும், நானும் இந்த மஞ்சள் கறுப்பு வண்டியில்தான் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட திருவேங்கடம், குருவிகுளம் கிராமங்களில் வேகாத வெயிலில் பயணிப்பது உண்டு. சேவு, கருப்பட்டி மிட்டாய், வடை இவையெல்லாம் வண்டியில் வாங்கி வைத்துக்கொண்டு எங்காவது மோட்டார் கிணறில் தாகத்துக்கு தண்ணீர் குடிப்பது உண்டு. ஒரு சில இடங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை என்றால், காடுகளைத் தாண்டி போகும்போது செருப்பு போட்டிருந்தாலும் காலில் முள் தைத்துவிடும். அந்த காலத்தில் கலைநிகழ்ச்சி இளையராஜா சகோதரர் பாவலர் வரதராஜன் நடத்துவார். அதேபோல தி.மு.க.வுக்கு சிவகங்கை சேதுராமன் நடத்துவார். ஒரு சில இடங்களுக்கு இரவில் செல்லவேண்டும் என்றால் வெள்ளி முலாம் பூசிய டார்ச் லைட்டும், பெட்ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக்கொண்டு மைக் இல்லாமல் கிராமங்களில் எல்லாம் பேசியது உண்டு. 1959, 1962 வரை எங்கள் பகுதியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சுதந்திரா, பிரஜா சோசலிஸ்ட் பார்ட்டி, சம்யுக்த சோசலிஸ்ட் பார்ட்டி என்பவை களத்தில் இருந்தன. இரட்டை மாடு பூட்டிய ஏர் (காங்கிரஸ்), நட்சத்திர சின்னம் (சுதந்திரா), கதிர் அரிவாள் (கம்யூனிஸ்ட்), மற்ற கட்சிகளுக்கு ஆலமரம், தீபம், குடிசை சின்னங்கள் எல்லாம் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சி 1964ல் பிளவுபட்டபின், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சி.பி.எம். சின்னமாக அமைந்தது. அப்போது காங்கிரஸ் வட்ட வடிவில் காளைமாட்டு சின்னத்தையும், கம்யூனிஸ்ட் சிகப்பு அட்டையில் கதிர் அரிவாளும், சுதந்திரா கட்சி நீல வண்ணத்தில் சட்டையில் குத்திக்கொள்ளும் பேட்ஜ்களை கொடுப்பார்கள். அவற்றை தபால் தலைகள், அயல்நாட்டு நாணயங்களை சேர்ப்பது போல விருப்பத்தோடு சேர்ப்பது ஒரு வாடிக்கை.

பிரச்சாரத்துக்கு காங்கிரசில் காமராஜர், செல்லப்பாண்டியன்; கம்யூனிஸ்ட் கட்சிக்கு எம்.கல்யாணசுந்தரம்; சுதந்திரா கட்சிக்கு லட்சுமி மில் ஆலை அதிபர் ஜி.கே. சுந்தரம், என்.ஜி. ரங்கா, எஸ்.எஸ். மாரிசாமி ஆகியோர் வருவார்கள்.

1957 தேர்தலில் தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் கோவில்பட்டியில் போட்டியிடவில்லை. அந்தத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தை அனைத்துப் பகுதியினரும் அறியக்கூடிய வகையில் முதல் முதலாக 1989ல் போட்டியிட்டது அடியேன்தான்.

இத்துடன் இணைத்துள்ள எனக்கு முன்னாள் பிரதமர் வி.பி. சிங், வைகோ உரையாற்றும் புகைப்படம் எடுத்த கோவில்பட்டி காந்தி மைதானத்துக்கு ஒரு வரலாறு உண்டு. இந்த காந்தி மைதானத்தில் அண்ணல் காந்தி அவர்கள் உரையாற்றியுள்ளார். வ.உ.சிதம்பரனாரும் உரையாற்றியுள்ளார். பாரதிக்கும் தொடர்பு உண்டு. இதே மைதானத்தை ஒட்டிய ஒரு வாடகை வீட்டில் வ.உ.சி. ஏழ்மையில் வாடி, கோவில்பட்டி கோர்ட்டில் வக்கீலாக இருந்தார். இதே இடத்தில்தான் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் 1950ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா ஆரம்பித்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் நெல்லை மாவட்ட தி.மு.க.வை இதே இடத்தில் கொடியேற்றி துவக்கி வைத்து உரையாற்றினார் என்பதெல்லாம் வரலாற்று செய்திகள்.  இந்த காந்தி மைதானத்தில்தான் மூதறிஞர் ராஜாஜி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், அப்போதைய காங்கிரஸ் தலைவர் தாரகேஸ்வர் சின்ஹா, இவர்கள் மட்டுமல்லாமல் பேரறிஞர் அண்ணா, உரையை கேட்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.  இந்த மேடையில் காமராஜர், நெடுமாறனோடு அமரவும், பிற்காலத்தில் விவசாய சங்கத்தில் பணியாற்றியபோது நாராயணசாமி நாயுடு முதல் முதலாக உரையாற்றியதும் இன்றும் மனதில் உள்ளது. கலைஞர் அவர்களின் உரையை இந்த மேடையில் பார்வையாளராக கேட்டது மட்டுமல்லாமல் அதே மேடையில் தலைவர் கலைஞரோடு அமர்ந்து உரையாற்றக் கூடிய சூழ்நிலையும் பிற்காலத்தில் உருவாகின.  வைகோ அவர்களுடன் இந்த மேடையில் பல கூட்டங்களில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் அவருக்கு பிடித்த இந்த காந்தி மைதானம் சிமெண்ட்டால் கட்டப்பட்ட மேடையாகும். கலைஞர் அவர்கள் இந்த மைதானத்தில் பேசிய "இளைஞர் குரல் அன்று போலவே என்றும் ஒலித்திட.... " என்ற பேச்சை நூல் வடிவமாக என்னை 2003ல் தயாரித்து தளபதி ஸ்டாலின் அவர்களுடைய 26.10.2003 தேதியிட்ட வாழ்த்துச் செய்தியோடு வெளியிட்டபோது கலைஞர் அவர்கள் என்னை பாராட்டினார். அது இந்த மேடையில் பேசிய பேச்சுதான்.

நான் 1989ல் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ். அழகர்சாமி அவர்களை எதிர்த்து களத்தில் நின்றேன். அப்போதெல்லாம் ஆரோக்கியமான போட்டியாக இருந்தது. எட்டயபுரத்தில் அவர் வீட்டிற்கே வாக்கு சேகரிக்க சென்றபோது, என்னை வரவேற்று தேனீர் கூட அருந்திவிட்டுதான் செல்லவேண்டும் என்றார்கள்.  தேர்தல் பிரச்சாரத்தில் கீழஈரால் கிராமத்தில் திரு. அழகர்சாமி அவர்களை சந்திக்கும்போது "என்னப்பா, கடுமையான உழைப்பு போலிருக்கே. முகமெல்லாம் கருப்பாய் போய்டுச்சே" என்று என்னிடம் விசாரித்து, சற்றுநேரம் தூத்துக்குடி சாலையில் உள்ள காப்பி கடையில் காப்பி சாப்பிட்டுவிட்டு, பிரச்சாரத்தில் இறங்கும்போதெல்லாம் ஒன்றும் வித்தியாசங்கள் இல்லை. அழகர்சாமி அவர்களோடு கிட்டத்தட்ட 1970களில் இருந்து நல்ல அறிமுகம். சட்டக் கல்லூரியில் சேர்வதற்கு எனக்கு பரிந்துரை செய்தவர்களில் அவரும் ஒருவர். அதையெல்லாம் நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டும். அன்றைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க. வுடன் கூட்டணியில் இல்லை. வைகோ அவர்கள் பரிந்துரை செய்து, தலைவர் கலைஞர் அவர்கள் அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பை வழங்கினார்.

அப்போது கோவில்பட்டி நகரத்திலும், குருவிகுளம் ஒன்றியத்திலும் தி.மு.க. கிளைக் கழகங்கள் முழுமையாக இருந்தன. கோவில்பட்டி ஒன்றியத்தில் வெறும் 35 கிளைகளாக இருந்ததை தேர்தல் பணியோடு 140 கிளைகளாக அன்றைய ஒன்றிய செயலாளர் பா. முத்துவோடு இணைந்து கூடுதலாக்கி அமைத்தோம். அச்சமயத்தில் தேர்தல் களத்தில் பா. முத்து, எம்.டி.ஏ. காளியப்பன், ஈ.ச. நாராயணன், நகர்மன்றத் தலைவர் தம்பி பாலசுப்ரமணியம் போன்ற நிர்வாகிகள் என்னோடு வாக்கு சேகரிக்கும் பணியில் இருந்தனர்.

அப்போதெல்லாம் பிரச்சாரம் காலையும், மாலையும் உண்டு. ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று வாக்குகள் கேட்பது உண்டு. நள்ளிரவு தாண்டி 2 மணி வரை கூட பிரச்சாரங்கள் செய்வது உண்டு. ஒரு கிராமத்திற்கு சென்றால் வேட்பாளர் வந்துவிட்டார் என்று வரவேற்பும், விருந்து உபசரிப்பும் நடக்கும். கிராமத்தில் வாக்குகள் கேட்டு திரும்பும்போது என்னிடம் ஒரு கவரில் வைத்து "இந்தாங்க, இது எங்க ஊர் உங்கள் தேர்தல் நன்கொடை" என்று 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று தருவதுண்டு. தேர்தல் காலத்தில் பூத் செலவுக்கு பணம் கொடுத்தாலே, வாங்க கிராமத்தில் மறுத்துவிடுவார்கள். களத்தில் சுவரொட்டிகளும், பிரச்சார சாதனங்களை பிற்காலத்தில் அமைச்சரான மைதீன்கான், ஸ்ரீவைகுண்டத்தில் எம்.எல்.ஏ.வான டேவிட் செல்வின் எடுத்துக்கொண்டு வந்து கோவில்பட்டியில் ஒப்படைப்பார்கள். அப்போது கோவில்பட்டியில் அழகர்சாமி அவர்களுக்கும், எனக்கும் கடுமையான போட்டி. தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு பிரச்சாரத்திற்கு வந்த பொதுக்கூட்டம் மாநாடு போல கோவில்பட்டி நெடுஞ்சாலையில் ஸ்டேட் பாங்க் அருகில் சாலையை மறித்து போடப்பட்ட மேடையில் பேசும்போது, அவ்வளவு ஆர்ப்பரித்த கூட்டம். அந்தக் கூட்டத்தில் வைகோ, ஆற்காடு வீராசாமி அவர்கள் கலந்துகொண்டனர். வைகோ அவர்களிடம் கலைஞர் அவர்கள் ராதா ஜெயித்துவிடுவார் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.  அப்போது குருவிகுளம் ஒன்றியம், கோவில்பட்டி ஒன்றியம், எட்டயபுரம் பேரூராட்சி, கோவில்பட்டி நகரம் என உள்ளடங்கி 1 லட்சத்து 43 ஆயிரத்து 671 வாக்குகள். ஆனால் பதிவானதோ 1 லட்சத்து 58 ஆயிரம் வாக்குகள். இந்த நிலையில் நான் 31,724 வாக்குகளை பெற்றேன். என்னுடைய தொகுதியில் கதிர் அரிவாள், உதய சூரியன் களத்தில் இருந்தது. மற்றத் தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ், அ.தி.மு.க.வில் ஜா, ஜெ. அணிகள் என்று பிரிவு பெற்று நின்றார்கள். கோவில்பட்டித் தொகுதியில் கைச் சின்னம் நின்றிருந்தால் அல்லது ஜா, ஜெ அணி நின்றிருந்தால் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். அரசியல் சூழல் வேறு விதமாகியிருக்கும். வைகோ அவர்களும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அன்றைக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் என்னை விட குறைவாக வாக்குகளைப் பெற்ற குமரி அனந்தன், சாத்தான்குளத்திலும், டேனியல்ராஜ் ஸ்ரீவைகுண்டத்திலும், ஓட்டப்பிடாரத்தில் முத்தையாவும் வெற்றி பெற்றனர். அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆர். ஆறுமுகம் "என்ன பிரதர், நீங்கள் எல்லாம் ஜெயிச்சிருவீங்க என்று நினைச்சேன்" என்று வருத்தப்பட்டு சொன்னதெல்லாம் நினைவில் உள்ளது.  அப்போதெல்லாம் வாக்கு சீட்டுகள்தான். வாக்கு எண்ணிக்கை முடிய கிட்டத்தட்ட 30 மணி நேரம் ஆகும். அந்த தேர்தலில் பாரதி பிறந்த எட்டயபுரம் வரை 3000 வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தேன். எட்டயபுரத்துக்கு தென்பகுதியில் இருந்த கிராமங்களில் வாக்குகள் கிடைக்காமல் அப்போது வெற்றி வாய்ப்பு இல்லாமல் ஆகிவிட்டது.

நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் அப்போது தி.மு.க. வில் முக்கிய களப்பணியில் வைகோ இருப்பார். அப்போது இந்த இரண்டு மாவட்டத்தில் முக்கிய நிர்வாகிகளாக கருதப்பட்டவர்கள் தினகரன் கே.பி. கந்தசாமி, ஏ.எல். சுப்ரமணியம், மஸ்தான், டி.ஏ.கே. லக்குமணன், கா.மு. கதிரவன், தூத்துக்குடி இரா. கிருஷ்ணன், சுப. சீதாராமன், புளியங்குடி பழனிச்சாமி, தூத்துக்குடி பெரியசாமி, தங்கவேலு, அடியேன் போன்றவர்கள் முக்கியமாக நிர்வாகத்தில் இருந்தோம். அன்றைக்கு ஒரு பாசப்பிணைப்பு இருந்தது.

பின் நாட்களில் 1996ல் மதிமுக சார்பில் களத்தில் இறங்கினேன். அப்போது குடைச் சின்னம். அப்போது 1,75,222 மொத்த வாக்காளர்கள். பதிவானவை 1,15,456. இதில் கம்யூனிஸ்ட் கட்சி அய்யலுசாமியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தேன். அப்போதும் வாக்காளர்களை சந்திக்கும்போது, பணத்தை எதிர்பார்க்காமல் அவர்களே தேர்தல் செலவை பார்த்துக்கொள்வார்கள் கிராமப்புறத்தில். அப்போது வேட்பாளருக்கு ஒரு தனி மரியாதையும் கௌரவமும் உண்டு.  எந்தவிதமான பிடுங்கலும், சிக்கலும் இல்லாமல் வீடு வீடாக, தெருத் தெருவாக வாக்குகள் கேட்பது உண்டு. தேர்தலில் வெற்றி வாய்ப்பிழந்த பின்னும், பலர் "நீங்கள் எல்லாம் இந்தத் தொகுதியில் ஜெயிலக்கலையே. எங்களுக்கு கொடுத்து வைக்கல" என்பார்கள்.  1996 தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்ட வைகோ அவர்கள் விளாத்திகுளத்திலும், தங்கவேலு சங்கரன்கோவிலும், நான் கோவில்பட்டியிலும் டெபாசிட்டை பெற்றோம். அப்போது களத்தில் இருந்த கண்ணப்பன் சிங்காநல்லூரில், எல். கணேசன் ஒரத்தநாட்டில், பொன்.முத்துராமலிங்கம் சேடப்பட்டியில், செஞ்சி ராமச்சந்திரன் செஞ்சியில், திருச்சி செல்வராஜ் போன்றவர்கள் எல்லாம் 10 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றார்கள். பிற்காலத்தில் இதில் ஒரு சிலர் நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர்களும் ஆனார்கள். இதுதான் நான் சந்தித்த கடைசித் தேர்தல்.

என்னுடைய தேர்தல் களத்தில் கலைஞர், வி.பி.சிங், வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் நம்பூதிரிபாட், தளபதி மு.க. ஸ்டாலின் எனப் பல முக்கியப் புள்ளிகள் எல்லாம் தேர்தல் களப் பரப்புரையை செய்தனர்.

அன்றைக்கு இருந்த தேர்தலும் இன்றைய தேர்தலும் பார்க்கும்பொழுது பல விதத்திலும் மாறுபட்டுவிட்டது. இப்போது வேட்பாளர்களும் அதிகம். கட்சிகளும் அதிகம். அப்போது சுயேச்சைகள் இரண்டு மூன்று பேர் களத்தில் இருப்பார்கள். தேர்தல் என்றால் பிரச்சாரம் ஒரு மாதம் நடக்கும். எனவே வாக்காளரை வீடு வீடாக சந்திக்க வேண்டும். அப்போது சுவரொட்டிகள்தான் பிரதான விளம்பரம் ஆகும். அதே போல் சின்னங்கள் பொறித்த டோர் ஸ்லிப் என்பது தவிர்க்க முடியாதது. இப்போதெல்லாம் சுவர் எழுத்துக்கள், பிளக்ஸ் போர்டுகள் என வந்துவிட்டன. வாக்காளர்களை கூட்டங்களுக்கு பணம் கொடுத்து அழைத்துவரவேண்டிய கட்டாயம். அப்போது கோவில்பட்டியில் கூட்டம் என்றால் கிராமங்களில் இருந்து அவர்களே பேருந்திலோ, சைக்கிளிலோ முன்கூட்டியே வந்து காந்தி மைதானத்திலோ, கிருஷ்ணன் கோவில் தெருவிலோ, சரஸ்வதி தியேட்டர் அருகிலோ கூடி விடுவார்கள். அன்றைக்கு வேட்பாளர் தங்கள் வீட்டு பிள்ளை என்று அந்தந்த கட்சியைச் சார்ந்தவர்கள் கொண்டாடுவதெல்லாம் உண்டு. கட்சி நிர்வாகிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டால் முழு ஒத்துழைப்பும், தேர்தல் முடியும் வரை வேறு எந்த பணியிலும் கவனம் செலுத்த மாட்டார்கள். என்ன செய்ய... அது ஒரு காலம். இது ஒரு காலம். அரசியல் இன்றைக்கு ஜாதி, மதம், பணபலம், குண்டர்பலம் என்று ஆகிவிட்டது.

ஒரு காலத்தில் சென்னையைச் சேர்ந்த ஐயங்கார் குலத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியர் திருச்செந்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். தினமணி நிறுவனர் ராம்நாத் கோயங்கா திண்டிவனத்தில் போட்டியிட்டார். சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி.ஆர். தாமோதரன் பொள்ளாச்சியில் போட்டியிட்டார். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற மாநிலங்களிலும் போட்டியிட்டது உண்டு. கிருஷ்ண மேனன் கேரளாவை விட்டுவிட்டு பம்பாயில் போட்டியிட்டார். திருநெல்வேலி பேட்டையில் பிறந்த காயிதே மில்லத் கேரளா மலப்புரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். இப்போதெல்லாம் இதை நினைத்துப் பார்க்க முடியுமா? காயிதே மில்லத் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு திருநெல்வேலிக்கு வந்துவிடுவார். இறுதி பிரச்சார நாளுக்கு மட்டும்தான் மலப்புரத்திற்கு போவார். அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற பின், மலப்புரத்தில் சாதாரண கயிற்று கட்டிலில் அமர்ந்திருப்பவரிடம், யார் வேண்டுமானாலும் தங்களுடைய குறைகளை சொல்லலாம்.  இப்படியான புனிதமான பொது வாழ்வு இப்போது புரையோடிவிட்டது. இதற்கு காரணம் யார்? இந்த சூழல் ஏன்?  நல்ல கனவுகள் மெய்ப்படாமல், சீரழிவுகள் கண்முன் தெரிகின்றன. இதற்கு தீர்வு எட்டுமா என்பதுதான் நம்முடைய ஏக்கமும் சமுதாயத்தின் தாக்கமும் கூட.

அன்றைய கோவில்பட்டி தொகுதி தேர்தல்களின் மலரும் நினைவுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்.






 









Tuesday, April 26, 2016

Chernobyl

30 years ago this day the world witnessed one of the worst accidents, that man kind has seen, in Chernobyl. 1000's of kms of land is still contaminated with radiation and 100' of sqkms still kept away from any habitation and lakhs of ppl have lost their lives and many more still fighting various diseases. The starting point for USSR breaking down is Chernobyl accident according to Michael Gorbachev, has the humanity learnt any lessons from this catastrophe?ஏப்ரல் 26 1986இதே நாளில் மிகப்பெரிய விபத்து ரஷ்யாவில்  செர்நோபில்  அணு உலையில் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு கதிர்வீச்சு பரவியது, 

உடனடியாக 28 பேர் உயிர் இழந்தார்கள், கடந்த 30 வருடங்களில் 10 லட்சம் மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார்கள். இன்றைக்கும் பல நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டர் நிலம் ஆள் அரவமே இல்லாமல் இருக்கின்றன. சோவியத் ரஷ்யா உடைவதற்கு முக்கிய காரணியாக செர்நோபில் விபத்தை சுட்டி காட்டுகிறார் மைக்கேல் கோர்பசேவ், செர்நோபில் நமக்கு உணர்த்தும் பாடங்களை நாம் கற்று கொண்டோமா?

நம்ம கூடங்குளமும்அணு உலையும் ரஷிய அணு உலை தொழில்நுட்பம் என்பத்தை மறக்கவேண்டாம்.

சங்கரன்கோவில் சுல்தான் பிரியாணி

சங்கரன்கோவில் என்றால் ஆடித் தபசு, நவநீத கிருஷ்ணன் லாலா கடை அல்வா, குல்குந்து, விடியற்காலையில் அசைவ ஆட்டுக் கால் சூப்பு, சுல்தான் ஹோட்டல் பிரியாணி, நெல்லை சாலையில் உள்ள பழைய தாலுகா ஆபிஸ், தற்போதைய பள்ளி வாசலில் அருகில் உள்ள பஸ் ஸ்டாண்ட், கோமதி சங்கர் திரையரங்கம், உயர்நிலைப்பள்ளி, அக்காலத்தில் அம்பலவாணன் பிள்ளை தாளாளராக இருந்து நடத்திய மடத்துப்பட்டி கோபாலநாயக்கர் கலைக் கல்லூரி, டாக்டர் சீனிவாசன் மருத்துவமனை நினைவுக்கு வரும் அடையாளங்களும், குறியீடுகளும். இதில் சுல்தான் ஹோட்டல் பிரியாணியைப் பற்றி சொல்ல வேண்டும். என்னுடைய மாமனார் பெரும்பத்தூர் கிராமத்தைச் சார்ந்த சங்கரப்பன், ஊராட்சி ஒன்றிய சேர்மன் சண்முகசாமி, மேலநீலிதநல்லூர் சேர்மன் முத்துப்பாண்டியனோடு இந்த பிரியாணி கடைக்கு பள்ளிக் காலங்களில் அழைத்துச் செல்வார்கள்.  அங்குள் பென்ச்சில் உட்கார்ந்துகொண்டு, அன்றைய அரசியல் பேசிக்கொண்டே இந்த பிரியாணி சாப்பிடுவது வாடிக்கை.  மறைந்த சுல்தான் அவர்கள் என் மீது பாசமாக "என்ன மாமா" என்று சிறுவனாக இருக்கும்போது அழைப்பார். எனக்கு அப்போது அர்த்தம் என்னவென்றே தெரியாமல் இருக்கும். என்னுடைய மாமா சங்கரப்ப நாயக்கர், மாவட்ட சுதந்திரக் கட்சித் தலைவராக இருந்த ராமானுஜ நாயக்கருடன் அந்த வட்டாரத்தில் பணிகளை செய்வார். இந்தியாவின் மூத்த அரசியல்வாதியாக இருந்த என்.ஜி. ரங்கா, ராஜாஜிக்கு மிகவும் நெருங்கியவர்.  அவர் ஒரு முறை இந்த பிரியாணிக் கடையில் சாப்பிட்டுவிட்டு ஹைதராபாத் பிரியாணியைவிட சுவையாக இருக்கின்றது என்று பாராட்டியது இன்றைக்கும் நினைவில் உள்ளது. வேறொரு சமயம் டெல்லியில் அவரை சந்திக்கும்போது இதை நினைவுபடுத்தும்போது மகிழ்ச்சியோடு அவர் சொல்லிய பாராட்டு வார்த்தைகள் இன்றைக்கும் நினைவில் உள்ளது.

தலைப்பாக்கட்டு பிரியாணி (திண்டுக்கல்), ஆம்பூர் பிரியாணி,ஹைதராபாத் பிரியாணி,மலபார் பிரியாணி,பெங்கால் பிரியாணி, சிந்தி பிரியாணி என பல ஊர்களின் பெயர்களில் புகழ்பெற்ற பிரியாணிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் ஒரு ருசி என்றாலும் சங்கரன்கோவில் பிரியாணி தனித்தன்மை வாய்ந்தது.  சங்கரன்கோவில் சுல்தான் ஹோட்டலில் செய்யப்படும் ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பிரபலம். இந்த பிரியாணி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

பயன்படுத்தும் அரிசியும், எண்ணெய்யும், மற்ற மூலப்பொருட்களை கவனமாக பதப்படுத்தி, வித்தியாசமான முறையில் செய்யப்படுகின்றது. இன்றைக்கும் பிரியாணிகள் பல இடங்களுக்கு செல்லும்போது அவ்வளவு விருப்பத்தோடு உண்ண மனம் வருவதில்லை. ஏனெனில் சங்கரன்கோவில் பிரியாணியை உண்டுவிட்டு, ஏனைய பிரியாணிகள் உண்ண மனம் வரவில்லை. இது ஒவ்வொருவருடைய விருப்பத்தைப் பொறுத்தது.  ஆனால் சங்கரன்கோவில் சுல்தான் பிரியாணியை உண்டால், திரும்பவும் அந்த பக்கம் போகும்போது பிரியாணியை சாப்பிட்டுவிட்டு போவோம் என்றுதான் மனம் உத்தரவு போடும்.  பாரம்பரியமாக தொடர்ந்து அதே சுவையை நிலைநாட்டி வருகின்ற சுல்தான் ஹோட்டலுக்கு பாராட்டுக்கள்.

நதி நீர் இணைப்பு


உச்சநீதிமன்றத்தில் இந்திய நதிகள் தேசியமயமாக்கப்பட்டு, கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி நெய்யாற்றோடு இணைக்க வேண்டும். கங்கை குமரியை தொடுவதோடு, கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரையும், அங்குள்ள அச்சன்கோவில்-பம்பை-தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கவேண்டும் என்ற வழக்கை தொடுத்து, 30 ஆண்டுகாலம் அதற்கெல்லாம் போராடியது நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். வழக்கின் மனுக்களில் குறிப்பிட்ட பிரச்சினைகள், தரவுகள், செய்திகள், புள்ளி விவரங்கள் அனைத்தும் இந்தியா டுடே ஆங்கில இதழில் (ஏப்ரல் 25, 2016) ஒரு முக்கிய பத்தியாக வெளியாகியுள்ளது. நதிநீர் இணைப்புக்கு சிறு அணிலாக என்னால் முடிந்த முயற்சி இந்த அளவு நதிநீர் இணைப்பு பிரச்சினைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ஆறுதலோடு மகிழ்ச்சியை தருகிறது. இன்றைக்கு இல்லை என்றாலும், என்றோ ஒரு நாள் கங்கை குமரி வழியாக இந்தியப் பெருங்கடலை தொட வேண்டும். அது பாரதியின் கனவு கூட.

Why linking rivers won't work

Deep inside India's most celebrated big cat haven-the Panna Tiger Reserve-a red line, freshly painted over the khaki outcrops of ancient Vindhyan sandstone, marks the alignment of the proposed 77-metre-high, 2.03 km-long Dhaudan dam on Madhya Pradesh's Ken river. It will be the first of some 3,000 big dams and storage structures that Prime Minister Narendra Modi's government wants to build as part of a grand plan to interlink and redesign the natural flow of 37 major rivers. The aim is to end water scarcity, while booting up for the country's future water needs.

It's an audacious, some say "hubristic", venture. Touted as the world's largest irrigation infrastructure project, the Interlinking of Rivers (ILR) programme proposes 30 river links. ILR will see the excavation of 15,000 km of new canals to relocate 174 cubic km of water-enough to annually supply over 100 mega-metropolises the size of Delhi or Mumbai. The National Water Development Agency (NWDA), which has designed the projects-14 for Himalayan rivers and 16 in peninsular India-as part of the National Perspective Plan (NPP) for Water Resources Development since 1982 is already listing the "benefits".

Ultimate idea

NWDA director-general S. Masood Hussain, 56, who has over three decades' experience in designing mega dam projects, including the Indira (Narmada) Sagar, says the ILR will double India's current 42,200 megawatt hydropower generation (from medium and major projects), adding 34 additional gigawatts to the capacity. Also designed to irrigate 35 million monsoon-dependent hectares, Masood says ILR is the only realistic means to raise the country's irrigation potential from 140 million to 175 million hectares by 2050, when the population is projected to touch 1.6 billion.

But 'unofficial' estimates published by the Delhi-based South Asia Network on Dams, Rivers and People (SANDRP) say the project will displace nearly 1.5 million people from their homes. This caused by the submergence of at least 27.66 lakh hectares of land needed for the storage structures and the network of planned canals. And it's not just the human cost. The overall land area going under includes 104,000 hectares currently under natural forest cover, including reserves and sanctuaries.

It will also be an astronomically expensive adventure. Initially pegged at Rs 5.6 lakh crore at 2002-03 prices, Union water resources, river development and Ganga rejuvenation minister Uma Bharti tells india today that "ILR will now cost Rs 11 lakh crore". This includes cost of land acquisition, compensation and construction. Hussain says final cost outlays for individual links will only be known after the "detailed project reports (DPRs) have been techno-economically approved" in each case.

An old dream

Dreams of bending river courses aren't anything new. In 1858, Arthur Thomas Cotton, a British military engineer, proposed navigable canal links between major rivers to serve the East India Company ports and deal with recurrent droughts in the southeastern provinces. In 1972, Kanuri Lakshmana Rao, India's irrigation and power minister in three successive regimes, mooted an ambitious 2,640 km-long canal that would transfer monsoon floodwaters from the Ganga near Patna to the Cauvery in the south. Two years later, Dinshaw J. Dastur, a commercial pilot-turned-water management expert, advocated long-distance irrigation through a network of 'garland canals' in the Himalayas and the Western Ghats.

Grand notions of interconnecting rivers continued to exercise the country's water bureaucracy, and a decade after Dastur's proposal was discarded as economically unviable, the NWDA was established as an autonomous society under the water resources ministry to examine ILR proposals mooted in the 1980 NPP. The NWDA has completed reports for 14 peninsular and nine of 14 Himalayan river-linking projects. DPRs are currently in place for four 'priority' links in peninsular India. Successive governments, significantly, chose to ignore the NWDA proposals for years. This went on until October 2002 when a Supreme Court bench asked for action. Avidly pushed by then PM A.B. Vajpayee, a national task force was put together amid grand proclamations. Little, however, happened.

Dream coming true

After a full decade of considered disdain under UPA-I and UPA-II, during which then environment minister Jairam Ramesh described the proposal as "disastrous", the ILR programme has got a strong second wind under NDA-II. "Atalji's dream of linking rivers is our dream as well. This can strengthen the efforts of our hard-working farmers," Modi tweeted after a poll rally in Bihar in April 2014, signalling his intent more than a month before moving from Gandhinagar to Delhi.

The Centre's confidence flowed from a second judgement in February 2012, wherein an SC bench including then chief justice S.H. Kapadia and National Green Tribunal (NGT) chairman Swatantra Kumar, said the programme was "in the national interest". They ordered the creation of a "special committee for inter-linking of rivers".

Acting with predictable alacrity, Modi's administration constituted a special committee under the water resources ministry on September 23, 2014. An independent task force too was established in April 2015 under the ministry's chief advisor, B.N. Navalawala, to identify means of fast-tracking projects and to bring on board many of the reluctant states. Now, 22 months after Modi took office, construction is ready to begin on the first project-a link canal that will annually transfer 1,074 million cubic metres (MCM) from the Ken river at Dhaudan (inside Panna Tiger Reserve) in Madhya Pradesh to the Betwa river, 221 km to the south in Uttar Pradesh.

The first among five "priority links", there's a palpable sense of urgency about Ken-Betwa. Bharti calls it a "model project" which plans to allocate a third of projected outlay-Rs 6,323 crore of Rs 15,000 crore-to environment management and rehabilitation. Hussain talks about the payoffs-"irrigation to 6.35 lakh hectares across Chhatarpur, Tikamgarh and Panna in MP, and Mahoba, Jhansi and Banda in UP; domestic drinking water for 13.42 lakh people in both states; and 78 MW of power from two hydropower stations". It all sounds too good to be true.

Bad science, good science

"It is," says Himanshu Thakkar, 53, SANDRP's convenor, who has spent most of his life battling big dam lobbies. He calls the SC's February 27, 2012 judgement "judicial overreach". Focusing on the Ken-Betwa project, Thakkar questions the very wisdom of the ILR programme. "There's simply no scientific evidence to justify what the government wants to attempt," he says. He says the NWDA's simplistic identification of 'water surplus' and 'water deficit' river basins is premised on "flimsy and dubious scientific data".

Thakkar believes many of NWDA's water balance studies (for 137 basins and sub-basins) have been "deliberately manipulated", while most feasibility reports since 1982 "are outdated because water use patterns since then have far outstripped availability in almost all basins". Thakkar also points to the fact that the NWDA has "deliberately overlooked examining the complete water resource management options before decreeing a particular river basin as 'surplus' or 'deficit'".

Water balance studies, their basis for showing the Ken is surplus and the Betwa dry, are prejudiced, he says. "Both rivers are in the same situation." On the ground too there is scant evidence of any "surplus". By October, the Gangau, an old weir 2.5 km downstream from where the 77-metre-high Dhaudan dam is to be built, is almost out of water. The predominantly Adivasi residents of Dhaudan, like nine other villages inside the Panna Reserve, are back to using contaminated old wells for their needs. The Ken, shrivelled in the wake of another failed monsoon (2015), is too distant. Things are worse downstream in Panna district.
"Betwa mein paani zyada hai (the Betwa has more water)," Mohan Lal Gautam, a guard at the famous temples of Khajuraho located nearby, is visibly surprised by the plan to transfer water from the Ken to the Betwa. Then resignation sets in: "Sahib, ye government ke kaam hai, kuchh bhi ho sakta hai (Sir, this is the government's work, anything can happen)."

Outside the dense teak forests too, the farmlands are decidedly desiccated. Shyamendra Singh, 52, who runs the popular Ken River Lodge adjoining the tiger reserve, is still taking stock of the drought situation. He says scores of distressed small farmers and farm workers have migrated in search of work. The Ken catchment has witnessed many monsoons of alternating flood and drought. Water activists point to "concomitant floods and droughts in both Ken and Betwa basins", to challenge the NWDA's assertions of the Ken as a surplus river.

Hussain argues that the criticisms "are based on apprehensions, fears and preconceived notions without scientific basis". Seated at an expansive writing table inside the NWDA's well-appointed chambers in south Delhi, he makes a compelling case for big dams: "The development debate in India has been very unfair-activists oppose projects to serve vested interests and the press plays along," he says, a trifle impatiently, asserting that "the reality is, India needs more big dams".

There are some statistics to support this view. A 2015 Food & Agriculture Organisation's water development and management unit report ranks India below Mexico, China and South Africa in per capita water storage (from large and small dams). With an annual storage capacity of 250 BCM (billion cubic metres), the average Indian has access to just 225 cubic metres of water (from storage reservoirs) annually. This is "minuscule" compared to, say, Russia's 6,130 cubic metres or even China's 1,111 cubic metres. Per capita water availability (1,545 cubic metres from all sources) is precariously close to 'stress' levels. Over 220 million Indians make do with under 1,000 cubic metres, the minimum level.

Those pushing the ILR programme insist it's the "only way forward". They point to India's projected 2050 population of 1.6 billion. "We need to boost foodgrains production from the 265 million tonnes now to 450 million tonnes, which is impossible without unconventional mechanisms like ILR," Hussain says.

Dangerous delusion

But could the Modi government be chasing a dangerous dream? Consider this: M&M (major and medium) irrigation projects or big dams account for 16 million hectares which is a fourth of the total irrigated area (66-68 million hectares) in the country. "The maximum coverage ever achieved (17.7 million hectares) from M&M projects was in 1991-92," Thakkar says, pointing to the largely ignored fact that over 60 per cent of India's current irrigation needs are met from groundwater and small irrigation projects. And this is going up with every passing year.

Not just that. The November 2000 report by the World Commission on Dams concluded that a mere 10-12 per cent of India's foodgrains production comes from big dams. But it is groundwater that has been India's real lifeline,Thakkar says. It is estimated to be 70 per cent more productive than canal irrigation, it needs to be sustained by protecting traditional recharge systems. If implemented, the ILR programme, he says, would seriously jeopardise the very resource that sustains India's food security.

Former water resources secretary and a determined ILR opponent, the late Ramaswamy Iyer had dismissed it as "technological hubris", famously saying that a river wasn't "a bundle of pipes which can be cut, turned and welded at will". Equally vehement, Thakkar says the gargantuan scale would play havoc with groundwater recharge "because river courses-the most important recharge areas-completely lose their capacity to replenish aquifers because of being denied flows downstream of the dams".

The ILR's detractors say the programme entails environmental tinkering on an epic scale-destruction of natural rivers, aquatic and terrestrial biodiversity, salinity ingress and a significant increase in methane emissions from storage reservoirs. Activists say "the cumulative devastation from 30 ILR projects will be irreversible".

And that's not the half of it. Mihir Shah, 59, Planning Commission member from 2009-14, points to the evidence that "the (ILR) scheme will deeply compromise the very integrity of the monsoon cycle". Inflows from rivers help maintain high sea-surface temperatures in the Bay of Bengal, critical for creating low-pressure areas and intensification of the monsoon. Shah says reducing the flow of river waters into the sea could bear "serious long-term consequences for climate and rainfall in the subcontinent".

Interestingly, there are dissenters to ILR even within the BJP. Women & child development minister Maneka Gandhi, a former environment minister herself, openly criticised river-linking projects on TV while speaking on India's role in climate change and global warming on December 4 last year. In May 2014 too, days before she found a place in Modi's cabinet, she had declared linking two rivers was "extremely dangerous".
Meanwhile, Maharashtra CM Devendra Fadnavis, whose consent is critical for the ILR projects on Damanganga-Pinjal and Par-Tapi-Narmada-two other projects Delhi hopes to fast-track-also seems sceptical. During an assembly debate last July, the CM stated that despite having 40 per cent of India's big dams, 82 per cent of the state remains rain-fed. Fadnavis called for a return to watershed management and conservation instead of pushing big dams for irrigation.

Many states have opposed the ILR programme questioning the NWDA's water balance assessments. Odisha turned down a proposal on the ambitious Mahanadi-Godavari link project days after a central team briefed CM Naveen Patnaik in June 2015. Responding to concerns over extensive submergence from the big dam at Manibhadra, the Navalawala task force is drafting alternative strategies. The Mahanadi-Godavari link is critical to the construction of eight other downstream river links.

Refusing to cut any slack, Bharti is promising (if she doesn't "face any hurdles") to complete the first three priority river links in the next seven years. But the start date for the Ken-Betwa (Phase One) has already been missed twice, last in March 2016. Hussain told india today on April 12 that a fresh date for implementation could only be set after clearances from the National Wildlife Board and the water resources ministry's Environment Appraisal committee. At the end of the day, Ken-Betwa will also need to be cleared by the Supreme Court since it involves interventions in a protected wildlife reserve.

In March 2012, Centre for Science & Environment director-general Sunita Narain said, "The idea of interlinking rivers is appealing as it is so grand. But this is also why it is nothing more than a distraction that will take away from the business at hand-to provide clean drinking water to all." So is that what it is, just a grand distraction?

http://indiatoday.intoday.in/story/river-linking-narendra-modi-national-green-tribunal/1/642498.html

The Solitary Reaper


இந்த புகைப்படத்தை பார்க்கும்போது அமைதி எழுகின்றது. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் சாலிடரி ரீப்பர் என்ற கவிதையில் கவலையோடு கிராமப்புறத்தில் கதிரை அறுவடை செய்யும் உணர்ச்சிவசப்பட்ட பெண்ணைக் குறித்த நினைவுதான் வருகிறது.

The Solitary Reaper


BY WILLIAM WORDSWORTH

Behold her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain,
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound.
No Nightingale did ever chaunt
More welcome notes to weary bands
Of travellers in some shady haunt,
Among Arabian sands:
A voice so thrilling ne'er was heard
In spring-time from the Cuckoo-bird,
Breaking the silence of the seas
Among the farthest Hebrides.
Will no one tell me what she sings?—
Perhaps the plaintive numbers flow
For old, unhappy, far-off things,
And battles long ago:
Or is it some more humble lay,
Familiar matter of to-day?
Some natural sorrow, loss, or pain,
That has been, and may be again?
Whate'er the theme, the Maiden sang
As if her song could have no ending;
I saw her singing at her work,
And o'er the sickle bending;—
I listened, motionless and still;
And, as I mounted up the hill,
The music in my heart I bore,
Long after it was heard no more.

Sunday, April 24, 2016

தாடிகள் எல்லாம் தாகூரா, மீசைகள் எல்லாம் பாரதியா?

இன்று (24.4.2016) காலை வீட்டின் அருகே உள்ள பாலவாக்கம் கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு சென்றபோது, பல செய்திகளை மனதில் போட்டு சிந்தித்துக்கொண்டு மணிரத்னம் இயக்கி மோகன்லால் நடித்த 'இருவர்' திரைப்படத்தின் பாடலை ரசித்து கேட்டுக்கொண்டு நடந்தபோது எடுத்த காட்சிதான் இந்த புகைப்படம்.  இந்த காட்சியும், இந்த பாடலிலும் ஆயிரம் அர்த்தங்களும், ஆறுதல்களும் உள்ளது.

கண்ணை கட்டி கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கணம் இல்லையே பயம் இல்லையே
மனம் தனில் கறை இல்லையே குறை இல்லையே
நினைத்தது முடியும் வரை ஹே ஹே ஹே ஹே ஹேய்

கண்ணை கட்டி கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
வி டு த லை விடுதலை வி டு த லை விடுதலை
வி டு த லை விடுதலை வி டு த லை விடுதலை
தோழா தோழா லாலாலலலாலா
வி டு த லை விடுதலை வி டு த லை விடுதலை
வி டு த லை விடுதலை வி டு த லை விடுதலை
தோழா தோழா லாலாலாலாலாலா

மக்கள் மக்கள் என் பக்கம்
மாலை தென்றல் என் பக்கம்
சிட்டு குருவிகள் என் பக்கம்
செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழை தமிழர் என் பக்கம்
என்றும் தாய்குலம் என் பக்கம்
எட்டு திசையும் என் பக்கம் அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தி ஏடுப்பான்
வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கம் தான் இணைந்து விட்டால்
கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்

கண்ணை கட்டி கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷத்தில் நீ ஏமாறாதே தோழா
வெளியே போ சொல்லாதே
நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்க காசை வீசுவதால்
தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம்
விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு வளையாது அட பணியாது
விடிவெள்ளி தான் முளைக்கும் வரை
இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்கு முகம் வெளுத்து விட்டால்
இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு

கண்ணை கட்டி கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷத்தில் நீ ஏமாறாதே தோழா
நம் மடியினில் கணம் இல்லையே பயம் இல்லையே
மனம் தனில் கறை இல்லையே குறை இல்லையே
நினைத்தது முடியும் வரை ஹே ஹே ஹே ஹே ஹேய்

தேர்தல் சீர்திருத்தங்கள்


ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லவர்கள், வல்லவர்கள் இருத்தல் வேண்டும். அப்போதுதான் நல்லாட்சி அமையும். அரசியலுக்கு அச்சாணி தேர்தல். தற்போதைய தேர்தலில் பணபலமும், குண்டர் பலமும் முக்கியமான அங்கங்களாக இருக்கின்றன. இவை ஒழிய வேண்டும். உச்சநீதிமன்றத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்றும், 1998ல் இந்திரஜித் குப்தா தலைமையில் அமைந்த குழு பரிந்துரைத்த வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்கவேண்டும் போன்ற சீர்திருத்தங்களை செயல்படுத்த வழக்கு தொடுத்துள்ளேன். இந்த வழக்கு ஆவணங்களை படித்துக்கொண்டிருக்கும்போது இதுவரை இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தத்திற்காக பல குழுக்கள் அமைத்துள்ளன.

அவை

1. கூட்டு நாடாமன்ற குழுவில் தேர்தல் சீர்திருத்த அறிக்கை - 1971 (இது ஜெகநாத ராவ் தலைமையில் இயங்கியது). இந்த அறிக்கை 18.1.72ல் வழங்கப்பட்டது.
2. தார்குண்டே கமிட்டி
3. தினேஷ் கோஸ்சாமி கமிட்டி - 1990
4. ஓரா கமிட்டி - 1993
5. இந்திரஜித் குப்தா கமிட்டி - 1998
6. லா கமிஷன் அளித்த தேர்தல் சீர்திருத்த சட்டங்கள் குறித்த அறிக்கை - 1999
7. அரசியலமைப்புச் சட்ட திருத்த தேசியக் குழு - 2000
8. தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சீர்திருத்தம் குறித்த அறிக்கை - 2004
9. இரண்டாவது நிர்வாக சீர்திருத்த அறிக்கை - 2008
மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகள்

என பரிந்துரைகளும், அறிக்கைகளும்தான் உள்ளன. செயல்பாடுகள் இல்லை. இன்றைக்கு Election fo Sale என்றே வெளிப்படையாக தயக்கமில்லாமல் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். Vote Buying, Policy, Electoral Market, Public or Private Goods Selections? Vote buying trust-worthy brokers, Budget for Vote buying என்ற வார்த்தைப் பதங்களை ஒரு தத்துவம் மாதிரி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். Frederic Charles Schaffer தொகுத்த Elections for Sale என்ற நூலில் வாக்குக்கு பணம் கொடுப்பதை முறைப்படுத்தி எழுதியதையெல்லாம் பார்க்கும்பொழுது மிகவும் அபத்தமாகவும் கவலையாகவும் இருந்தது. இப்படி நிலைமைகள் நீடித்தால் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்டிப் படிப்பதைப் போன்று, எம்.எல்.ஏ., எம்.பி. பதவியையும் பணம் கட்டி எந்தவித தியாகமும் இல்லாமல் பிடித்துவிடலாம்.  அரசியல் வியாபாரம், தொழில் என்ற நிலைக்கு வந்துவிடும்.

ஒரு கட்டத்தில் நல்லவர்கள், நேர்மையாளர்கள் அரசியலில் களம் இல்லை என்ற நிலை சிறுக சிறுக வந்துகொண்டிருக்கும். இந்த கேடுகெட்ட பரிணாமம் எதில் போய் முடியுமோ?

அகத்தியர் மலையும் யுனெஸ்கோவும்

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அகஸ்தியர் மலை புராதனமானது. மொத்தத்தில் இந்திய வனத்துறை இந்தப் பகுதியை சுற்றுச்சூழல் அமைச்சகம் பாதுகாப்பான பகுதி என்று அறிவித்துள்ளது. மொத்தப் பரப்பளவு 3500 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் தமிழகம் 1672 சதுர கிலோ மீட்டர் கொண்டுள்ளது. கேரளா 1828 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இங்கே பல்வேறு விலங்கினங்கள், தாவரங்கள் என்ற நிலையில் அமைதியான பகுதியாகும். கைபேசி கூட தொடர்புக்கு அப்பால் உள்ள இடம். களக்காடு, முண்டந்துறை புலி காப்பகங்கள், கன்னியாகுமரி காட்டு விலங்குகள் காப்பகங்கள் இதில் உள்ளடக்கியது. இங்கு குறிப்பாக யானைக் கூட்டங்களும், புலிகளும், சிறுத்தைகள் போன்ற விலங்கினங்கள் உள்ளன. கேரள பகுதியில் நெய்யாறு, பெப்பரா, செந்தூரணி என்ற விலங்கின காப்பகங்களும் இந்த இடத்தில் அமைந்துள்ளன. சுற்றுலா மையமும், அமைதியான வனச்சூழலும் நிறைந்த இப்பகுதியை யுனெஸ்கோ அங்கீகரித்து உலகத்தின் கவனத்தை ஈர்க்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. இதை வரவேற்போம். நிமிர வைக்கும் நெல்லைக்கு இது ஒரு கீர்த்தி.

டான் குயிக்ஸாட்

ஐரோப்பா துணைக்கண்டத்தில் முதல் முதலாக ஸ்பானிய மொழியில் வெளிவந்த படைப்பு டான் குயிக்ஸாட் ஆகும்.

மிக்யூயெல் டீ செர்வாண்டீஸ் (MIGUEL DE CERVANTES SAAVENDRA) படைத்த இந்த புதினத்தை தாமஸ் ஷெல்டன் (THOMAS SHELDON) ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். ஸ்பெயினில் நிலவிய அரசியலை (குறிப்பாக அரசு பிரபுக்களின் வாழ்க்கையை) கேலி செய்யும், ஒரு "நையாண்டி இலக்கியம்" (SATIRE LITERATURE) ஆகும். இதை தழுவி பல நாடோடி இலக்கியங்களும் வந்துள்ளன. சின்ன அண்ணாமலை இதை சிலேகித்து பேசுவார். ஸ்தாபன காங்கிரஸ் கூட்டங்களில் இந்த நையாண்டிகளை சொல்லி அவர் பேசுவதும் உண்டு. அன்றைக்கு வந்த காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையான நவசக்தி டான் குயிக்ஸாட் நாவலை தழுவி வத்தல் குதிரையில் தொத்தல் வீரன் என்ற தொடர் படக்கதையையும் 60களில் வெளிவந்தது உண்டு.

உலகிலேயே அதிகமாக மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்பும் இதுதான். ஷேக்ஸ் பியரை எப்படி கொண்டாடுகின்றார்களோ, அதேப் போல டான் குயிக்ஸாட்டையும் அனைவரும் விரும்புகின்ற புதினமாகும். ஷேக்ஸ்பியர் மறைந்து 400 வருடங்கள் ஆகின்றன. இதேப் போல இதனுடைய ஆசிரியர் செர்வாண்டீஸ் மறைந்தும் 400 வருடங்கள் ஆகிவிட்டன. அது குறித்து விரிவான பத்தியை ஆங்கில இந்து ஏடு (18.4.2016) வெளியிட்டுள்ளது.


The timeless tales of cervantes

He is best known for "Don Quixote", but the eventful life of Spain's revered author Miguel de Cervantes was just as intriguing as any adventures of the delusional wanna-be knight of his famous novel.

Cervantes -- whose death on April 22, 1616 will be commemorated in Spain this week just as Britain marks the passing of Shakespeare 400 years ago -- survived a sea battle, capture by pirates, five years of captivity in Algiers and stints in prison.

Many questions surround the life of the soldier turned captive turned tax collector, whose writings largely took a back bench until he achieved overnight success with "Don Quixote" in his late fifties.

Using official archives, scant witness accounts and autobiographical prefaces to his books, academics have for decades tried to decipher the myth of the man known as the father of the modern novel.

Adventures abroad

Born in 1547 in Alcala de Henares near Madrid, his family struggled financially.

They settled in Madrid when the future superstar author was close to 20, and he wrote his first known poetry there.

But a few years later in 1569, Cervantes moved to Rome. In Italy, he enlisted as a soldier and fought in the 1571 Battle of Lepanto. Cervantes continued to participate in military campaigns until deciding to return to Spain in 1575.

But his ship was captured by pirates and Cervantes was taken to Algiers. He remained there for five years, despite several attempts to escape, waiting to be freed in exchange for a ransom.

Eventually, his family and a religious order raised money for the ransom and he returned to Spain.

Then in 1584, settled with family in a tiny village in the central region of Castilla-la-Mancha, where "Don Quixote" would later be based.

When the novel was finally published in 1605, it was an overnight success. The years after saw Cervantes move to Madrid and devote his time to writing -- including the second part of "Don Quixote" -- before dying of illness in 1616.AFP



ஈழப் பேச்சுக்கள்

ஈழம் மலரும் என்று தேர்தல் களத்தில் ஊறுகாய்த் துண்டைப் போல அவ்வப்போது சொல்லிக்கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது. ஈழத்தைத் தெரியாதவர்கள் எல்லாம் சினிமா பாணியில் வசனங்கள் பேசுவதை நிறுத்திக்கொள்வது நல்லது. ஈழம் என்பது தியாகம், அர்ப்பணிப்பு, போர்க்களம் என்ற நிலையில் ஏற்படுவது. பொதுக்கூட்ட மேடைகளில் வெற்றுப் பேச்சால் ஏற்படுவதில்லை. எதார்த்தத்தை பேசுங்கள். ஈழம் ஒன்றும் உடம்பில் அரிப்பு எடுக்கும்போது சொறிந்துகொள்ளும் நீண்ட சீப்பை போன்றதல்ல. அரசியலில் எல்லாமே வேஷம் என்று நிரூபித்துவிடாதீர்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா! ஈழம் ஒன்றும் நீங்கள் நினைக்கின்ற கடைச் சரக்கல்ல. தமிழர்களின் உரிமை கீதம். தகுதி, உரிமையின் காரணமாக இதை சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. 

விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

வ.உ. சிதம்பரனார், முண்டாசுக் கவி பாரதி, ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, டாக்டர் ஜோசப் குமரப்பா, தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, திரு.வி.க., சேலம் வரதராஜுலு நாயுடு, அயோத்திதாச பண்டிதர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, பசும்பொன் தேவர், காயிதே மில்லத், திருச்சி அனந்த நம்பியார், பொதுவுடைமைவாதி தோழர் ஜீவா, சேலம் விஜயராகவாச்சாரியா, பட்டுக்கோட்டை அழகிரி, பாரதிதாசன், பி. ராமமூர்த்தி, மதுரை வைத்தியநாத ஐயர், வேதாரண்யம் சர்தார் வேதரத்னம், ம.பொ.சி., குமரியை தமிழகத்தோடு இணைத்த பி.எஸ். மணி, நேசமணி, செங்கோட்டையை இணைத்த கரையாளர், ராமசாமி படையாச்சி, கக்கன், கோவை ஜி.டி. நாயுடு, தொழிற்சங்கத் தலைவர்கள் சிங்காரவேலர், சக்கர செட்டியார், டாக்டர் தருமாம்பாள், அலமேலுமங்கத் தாயாரம்மாள் (இந்த பெண்மணியை தமிழகம் இதுவரை அறியவில்லை. பெரியாருக்கும், திராவிட இயக்கத்துக்கும் கிடைத்த தலைமகள் ஆவார்) விவசாயிகளின் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு என பல போராளிகளையும், தலைவர்களையும் பெற்றெடுத்த தமிழகத்தில் நேற்று வரை அரைகுறை ஆடையோடு வெள்ளித் திரையில் காட்சியளித்த, வி...ந்....., ந..மீ....., என்ற பல அநமதேயங்கள் திடீரென தோன்றி மக்களுக்கு அரசியலை சொல்லித் தர வந்துள்ளார்கள்.  இவர்கள் சொல்லி மக்கள் வாக்களிக்க வேண்டுமா? இவர்களின் பெயர்களை முழுமையாகக் கூட சொல்ல தகுதியற்றவர்கள்.  இவர்களுக்கு தமிழர்களின் பிரச்சினைகள் தெரியுமா? விவசாயிகள் என்றால் யார் என்று தெரியுமா? நாட்டை உயர்த்திப் பிடிக்கும் தொழிலாளிகள் யார் என்று தெரியுமா? மக்களுக்காக வேகாத வெயிலிலும், மழையிலும், வெள்ளத்திலும், போராடாத இந்த தறுதலைகளை தாய் தமிழகம் தாங்குமா? இப்படியும் தமிழகம் பாழ்படுத்தப்படுகிறது. இந்த ஊழுக்கு கர்த்தா யார்? எதிர்வினைகளே விதைத்தால் எதிர்வினைகள்தான் விதைப்பவர்களுக்கு வரும் என்று இயற்கையின் விதியைக் கூட அறியாமல் சில கேடுகெட்ட ஜென்மங்கள் நடந்துகொள்கிறார்கள். 

இதற்கு நீதி கேட்டு இன்னொரு கண்ணகி எழவேண்டும்.

விதியே விதியே தமிழச் சாதியை 
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? 

- பாரதி

சரியாகத்தான் பேரறிஞர் அண்ணா சொல்லியுள்ளார். "ஏ, தாழ்ந்த தமிழகமே!" 

Saturday, April 23, 2016

Shakespeare

Bridge of words
#WilliamShakespeare's writings inspired by a rich idea of India

As the world celebrates the 450th birth anniversary of the Bard of Avon William Shakespeare today, let's look back on how the playwright knew and wrote about India. Shakespeare lived at a time when India was ruled by Akbar the Great, or the Great Mogor as he was referred to by the sea-faring Europeans, whose long reign was marked by opulence, harmony and a resultant peace.

There are various references to India in Shakespearean plays. He uses words like Ind, Inde, India, Indies (East) and Indian to refer to a country fabulously rich. The earliest reference to India occurs in 'King Henry VI' (Act III, Scene I):
"My crown is in my heart, not on my head; not decked with diamonds and Indian stones, nor to be seen: my crown is called content, a crown it is that seldom kings enjoy."

The maximum number of times India has been referred to in a single play is four, in 'A Midsummer Night's Dream'. India appears in this play as the land of gold and sunshine.

Read more: mymea.in/a3j 
India Today

William Shakespeare

William Shakespeare the greatest writer in the English language, his works consist of approximately 38 plays, 154 sonnets, two long narrative poems and a few other verses, some of uncertain authorship. Throughout his works, there are many references to the work and role of #Parliament and within the Palace of #Westminster, in the Poets Hall, there is a mural illustrating a scene from 'King Lear', Act I, Scene I: King Lear Disinheriting Cordelia. 

Shakespeare's comedies, histories, and tragedies. Published according to the true original copies. Unto which is added, seven plays, never before printed in folio…, 1685

Shakespeare

"When I entered our room, he looked up from his book of wisdom and asked where I'd been. I replied that I'd just seen Hamlet. 'What's that?' he said, not a question you might anticipate from a class valedictorian in most schools. I explained that it was the story of a young guy whose uncle had murdered his father, prompting the guy to seek revenge. Also, the uncle had married the guy's mother... before the murder. 'Does the guy get killed in the end?' [he] asked."
--from "Me and Shakespeare: Adventures with the Bard" By Herman Gollob

On the eve of retiring from a successful publishing career, Herman Gollob attends a wonderful Broadway production of Hamlet starring Ralph Fiennes. Galvanized by the splendor of the language, the drama and the acting, he discovers an insatiable passion for all things Shakespeare. He reads broadly and deeply about the plays, discusses them with some of the great actors, directors, and teachers of our time, and soon finds himself teaching a popular Shakespeare class at a small New Jersey college. Gollob’s quest leads him to Shakespeare’s birthplace in Stratford-on-Avon; to the Folger Shakespeare Library in Washington, D.C.; to a summer course on Shakespeare at Oxford; and to London’s recently rebuilt Globe Theatre. As he pursues his glorious new obsession, Gollob reflects on his family’s bittersweet history, his encounters with writers, and the emergence of a Jewish identity that inspires some original ideas about Shakespeare’s plays. Me and Shakespeare is a joyful memoir that attests to the power of literature to re-invigorate our lives at any age. READ an excerpt here: http://knopfdoubleday.com/book/69124/me-and-shakespeare/

#Shakespeare400

Paris agreement -2016

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் 175 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆஸ்திரேலியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் சவுதி அரேபியா, ஈராக், நைஜீரியா, கஜகஸ்தான் உள்ளிட்ட எண்ணெய் வளம் மிகுந்த நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் இலக்கு. இதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உலகத் தலைவர்கள் புவி வெப்பமடைவதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வின்போது பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், "நமக்கு நேரம் குறைவாக இருக்கிறது. விளைவுகள் பற்றி சற்றும் யோசிக்காமல் செய்யும் நுகர்வு கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும். இன்று இந்த ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திடுவதன் மூலம் எதிர்காலத்துக்கான புதிய உடன்படிக்கையை செய்து கொள்கிறோம்" என்றார்.

Paris Agreement: More than 170 world leaders sign United Nations climate deal

A total of 175 countries have signed the Paris climate agreement at the United Nations in New York City, a record for a one-day signing of an international accord, the UN says. Key points:

Deal sets the goal of limiting global warming to 2C above pre-industrial levels.
Will come into force once countries responsible for 55pc of greenhouse gases ratify the accord. 

UN chief Ban Ki-moon says world is in "a race against time". Australia will begin work to ratify the UN climate immediately and ratify within a year to exceed 2020 emissions reduction targets, Environment Minister Greg Hunt has promised.

Friday, April 22, 2016

ஏன் ஜெயா மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது ?

1991-ம் ஆண்டு, முதல் வாய்ப்பாக வாய்த்தது முதலமைச்சர் நாற்காலி. அதிகாரத்துக்கு முதல்முறை வருபவர்களுக்கே இருக்கும் இயல்பான குணத்தால் அதை அனுபவித்தாரே தவிர, சாதனைகள் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டமன்ற மகுடத்தை, அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்தார்கள். சட்ட மன்றத்துக்குள் தோழி சசிகலாவை அழைத்துச் சென்றதில் இருந்து சரிவு தொடங்கியது. அந்த மன்றத்துக்குள் சபாநாயகர் ஆசனம் என்பது முதலமைச்சருக்கு எல்லாம் மூத்தது. அதில் தானே உட்கார்ந்து, தன் அருகில் சசிகலாவை உட்காரவைத்து, சபையின் நாயகனையே தனது காலில் விழவைத்து, முதல் கோணல் முற்றிலும் கோணலாகத் தொடங்கிய ஆட்சி அது.

போயஸ் கார்டனில் இருந்து கோட்டைக்குக் கிளம்புகிறார் என்றால், முக்கால் மணி நேரத்துக்கு முன்னரே வாகனங்களை நிறுத்தி, ஓட்டுபோட்ட மக்களை வெயிலில் வறுத்தெடுத்தார்கள். 

செத்த பிணத்தை எரிக்கும் வசதிக்கான சுடுகாட்டு மேற்கூரை போடுவதில் தொடங்கி, பள்ளி மாணவர்களுக்கு செருப்பு வழங்குவது வரை... எல்லாவற்றிலும் ஊழல், ஊழல், ஊழலோ ஊழல்!

அராஜகம், சர்வசாதாரணம். கவர்னர் சென்னாரெட்டியே திண்டிவனத்தில் திணறிப் போனார். திருச்சி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கப்பட்டார். 

டி.என்.சேஷனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரவும் முடியவில்லை; தங்கியிருந்த விடுதிக்குள் போகவும் முடியவில்லை. வழக்குரைஞர் சண்முகசுந்தரம் வெட்டப்பட்டார். வழக்குரைஞர் விஜயன் மீது தாக்குதல். முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா எதற்காகவோ தாக்கப்பட்டார். சந்திரலேகா மீது ஆசிட் வீசியது அராஜகத்தின் உச்சம். சுப்பிரமணியன் சுவாமிக்கு நடந்தது அசிங்கத்தின் உச்சம். தமிழ்நாட்டு அரசியலில் மாறாத வடுக்களாக இவை மாறின.

சசிகலாவின் அக்கா மகன் வி.என்.சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்து, கோடிக்கணக்கான ரூபாய் செலவில் இந்தியாவே பிரமிக்கத்தக்க திருமணத்தை நடத்தினார். இன்று அது குறித்த உச்ச நீதிமன்ற விசாரணையும் இந்தியாவே பிரமிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டிருக்கிறது.

இவர் மீதும் இவரது சகாக்கள் மீதும் 40-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் பாய்ச்சப்பட்டு, மூன்று தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஜெயலலிதாவே கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் 28 நாட்கள் வைக்கப்பட்டார்.

Vikatan

Article 356

நடுவண் அரசின் அடாவடிதனம்! 

உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தீர்ப்பில் நீதிபதிகள் கூறிய முக்கிய அம்சங்கள்:

* உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்தது, சுப்ரீம் கோர்ட்டு வகுத்த சட்டவிதிகளுக்கு முரணானது ஆகும்.

* ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னிலையில் வைக்கப்பட்ட ஆவணங்கள், வேண்டுமென்றே வைக்கப்பட்டவை. அவை கோர்ட்டின் பரிசீலனைக்கு உகந்தவைதான்.

* 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். கட்சி தாவி அரசியல் சாசன பாவம் செய்ததற்கு அவர்கள் உரிய விலையை கொடுத்தாக வேண்டும்.

* உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு முந்தைய நிலை தொடரும். இதன் பொருள், ஹரிஷ் ராவத் அரசு புத்துயிர் பெறுகிறது.

* 29–ந் தேதி சட்டசபையில் ஹரிஷ் ராவத் அரசு நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Thursday, April 21, 2016

சற்றுமுன் கிடைத்த செய்தி, உத்தரகண்ட் அரசை கலைத்தது தவறு - உத்தரகண்ட் (நைனிடால்) உயர்நீதிமன்றம்

சற்றுமுன் உத்தரகண்ட் உயர்நீதிமன்றம், உத்தரகண்ட் மாநில அரசு கலைக்கப்பட்டது செல்லாது என்று நைனிடாலில் தீர்ப்பை வழங்கி உள்ளது.  பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்காமல் அம்மாநில காங்கிரஸ் அரசை மத்திய அரசு கலைத்தது அரசியல் அமைப்பு பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று உத்தரகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், நீதிபதி வி.கே. பிஸ்த் கருத்தை தெரிவித்து திரும்பவும் காங்கிரஸ் அரசு அமைய வேண்டும் என்று தீர்ப்பை வழங்கியுள்ளது. மிகவும் அரிதான நேரத்தில் விதிவிலக்கான சூழ்நிலையில் மட்டும்தான் மத்திய அரசு 356ஐ பயன்படுத்த வேண்டும். உத்தரகண்ட்டில் தலையிட்டதால் அந்த மாநில அரசை கவிழ்த்தது ஜனநாயக வேர்களை வெட்டுவதற்கு சமமாகும் என்று தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தந்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.  இது குறித்து எனது கட்டுரை தினமணியில் வெளியான இன்று (21.4.2016) உரிய நேர்மையான தீர்ப்பு வந்ததும் மகிழ்ச்சியாக உள்ளது.

Uttarakhand High Court Quashes Centre’s Proclamation Imposing President’s Rule

Nainital: The Uttarakhand high court has asked the Centre to consider putting the revocation of President’s rule on hold for a week. The court said it was “pained” that the central government was behaving in this fashion and not clarifying whether it could put the revocation on hold.

The verdict allows former Chief Minister Harish Rawat’s plea challenging imposition of President’s rule. Article 356 was imposed in Uttarakhand contrary to the law laid down by the Supreme Court, said the court.

The high court said the material considered by the Centre to impose President’s rule has been found to be wanting. It has ordered a fresh floor test in the Uttarakhand assembly on April 29.

The court rejected the Centre’s plea for a stay. “We won’t stay our own judgement. You can go to the Supreme Court and get it stayed,” the court said.

The high court also said the nine dissident Congress MLAs had to pay a price by being disqualified for committing a “Constitutional sin” by defecting. It also said the fate of the nine MLAs was entirely irrelevant and extraneous to the imposition of President’s rule.


=============


இன்றைய (21-04-2016) தினமணி நாளிதழில் “செல்லாப் பிரிவு சொல்லும் வரலாறு” என்ற தலைப்பில் நான் எழுதிய டெட் லெட்டர் பிரிவு 356 என்ற கட்டுரை தலையங்க பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  நண்பர் ஹரிஷ் ராவத் முதல்வராக கொண்ட உத்தரகாண்ட் காங்கிரஸ் மாநில அரசை மத்திய அரசு சமீபத்தில் கலைத்ததையொட்டி எழுதப்பட்ட கட்டுரையாகும்.

செல்லாப் பிரிவு சொல்லும் வரலாறு


உத்தரகண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசை மத்திய அரசு கலைத்துள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.  இதுவரை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356 ஐ, 126 முறை பயன்படுத்தப்பட்டு மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக 1959 ஆம் ஆண்டு காங்கிரஸ் இல்லாத நம்பூதிரிபாட் தலைமையில் அமைந்த கேரள மாநில அரசு நேரு பிரதமராக இருந்தபோது கலைக்கப்பட்டது. கேரளத்தில் நில சீர்திருத்த சட்டம்புதிய கல்வி கொள்கை என்ற பிரச்சினையால்கேரளாவில் நிலவிய சிறிய போராட்டங்களை காரணம் காட்டி அந்த அரசு கலைக்கப்பட்டது. இதற்கு அன்றைக்கு காங்கிரஸை தலைமை தாங்கிய இந்திரா காந்தியின் தனிப்பட்ட பரிந்துரையும் உண்டு. 

பிற்காலத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த 16 ஆண்டுகளில் 50 மாநில அரசுகளை பிரிவு 356ஐ கொண்டு கலைத்தார். இந்தியாவில் மொத்தத்தில் இதுவரை 126 முறையில் 88 முறை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மாநில அரசுகளை கலைத்தது.  பண்டிதர் நேரு 1947லிருந்து 1964 வரை ஆட்சியில் இருந்தபோது 8 மாநில அரசுகளை கலைத்துள்ளார்.  அவசர நிலை காலத்திற்கு பின்ஜனதா அரசு மொரார்ஜி தலைமையில் அமைந்தபோதுமூன்று ஆண்டுகளில் (1977 - 1979) காங்கிரஸ் ஆளும் 16 மாநில அரசுகளை கலைத்துள்ளார்.

இந்திரா காந்தி மத்தியில் பிரதமராக இருந்தபோது ஜம்மு - காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா ஆட்சியை கலைத்துஷா தலைமையில் ஒரு பொம்மை ஆட்சி அப்போது அங்கு நிறுவப்பட்டது. ஆந்திரத்தில் என்.டி. ராமாராவ் ஆட்சியை கலைத்து பாஸ்கர் ராவ் தலைமையிலும் ஆட்சி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருந்தும் ஜம்மு-காஷ்மீரிலும்ஆந்திரத்திலும்சட்டத்திற்கு புறம்பாக அபத்தமாக கலைத்தபோது இந்தியாவே வெகுண்டு எழுந்தது. அப்போது என்.டி. ராமாராவ் தனக்கு பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கின்றது என்று காட்டதெலுங்குதேச சட்டமன்ற உறுப்பினர்களோடுடெல்லி ராஷ்டிரபதி பவனுக்கே ராஜ் பாத்தில் பேரணி நடத்தி குடியரசுத் தலைவரை சந்தித்தார்.  தி.மு.க. ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. 1991ல் இரண்டு வருடம் ஆண்ட தி.மு.க. ஆட்சியை ஆளுநர் பர்னாலா பரிந்துரை இல்லாமலேயே அன்றைக்கு மத்தியில் இருந்த சந்திரசேகர் அரசு கலைத்தது.

பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 1999 லிருந்து 2004 வரை பொறுப்பில் இருந்த அரசு 5 மாநில அரசுகளை கலைத்தது.  இந்த காலக்கட்டத்தில்தான் 356ஐ எதிர்த்து கர்நாடகாவில் அரசு கவிழ்க்கப்பட்டதற்காக எஸ்.ஆர். பொம்மை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு மகாராஷ்டிராவிலும்ஆந்திராவிலும்ஜார்க்கண்ட்டிலும்சமீபத்தில் அருணாசலப் பிரதேசம்தற்போது உத்தரகண்ட்டிலும் ஆட்சியை கலைக்க 356ஐ பயன்படுத்தி உள்ளது.  இப்படி 356 என்பது தலைக்கு மேல் தொங்குகின்ற கத்தியாக இன்றைக்கும் இருக்கின்றது.

உத்தரகண்ட்டில் ஆட்சி கலைக்கப்பட்டபின் அம்மாநில உயர்நீதிமன்றம்இது தவறு என்று சொல்லி முதல்வராக இருந்த ஹரிஸ் ராவத்தனது பெரும்பான்மையை நிரூபிக்கலாம் என்று உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவர் 356ஐ பயன்படுத்தும்போது அமைச்சரவையின் பரிந்துரை இருந்தால் நீதித்துறை தலையிட முடியாது என்ற கருத்தை வெளியிட்டது. 

பிரிவு 356 என்ன சொல்கிறது என்றால்;  மத்திய அரசுக்கு மாநில அரசுகளைக் கலைத்து குடியரசுத் தலைவரின் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் உரிமையை அளிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் இயற்றப் பட்டபோதுஇப்பிரிவு அடிக்கடி பயன்படுத்தப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. டாக்டர் அம்பேத்கர் இப்பிரிவினை ஒரு செல்லாப் பிரிவு (Dead Letter) என்று கூறினார். இப்பிரிவு மாநிலங்களில் சட்டஒழுங்கு மிகவும் சீர்குலையும் போதோ அல்லது மாநில அரசால் கையாள முடியாத நெருக்கடி நிகழும் போது மட்டும் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் அரசியல் நிர்ணய சபையின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் நடைமுறையில் இச்சட்டம்மத்திய அரசால்தனது அரசியல் எதிராளிகளைப் பழிவாங்கவும்தங்களுக்கு சாதகமான அரசை மாநிலங்களில் அமைக்கவுமே பயன்படுத்தப்பட்டது.

ஜனதா கட்சியின் தலைவர் எஸ் ஆர் பொம்மை ஆகஸ்ட் 1988 இல் கர்நாடக மாநிலத்தின் முதல்வரானார். செப்டம்பர் 1988 இல் ஜனதா கட்சியும்லோக் தளம் கட்சியும் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கின. ஏற்கனவே சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருந்த பொம்மைக்கு மேலும் 13 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். சில நாட்கள் கழித்து கே. ஆர். மொலகேரி என்னும் ஜனதா தள உறுப்பினர் மாநில ஆளுனரை சந்தித்துதன்னை 19 உறுப்பினர்கள் ஆதரிப்பதாகவும்தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமெனக் கூறினார். அதனை ஏற்ற ஆளுனர் குடியரசுத் தலைவருக்குபொம்மைசட்டசபையில் பெரும்பான்மையை இழந்து விட்டதால்அவரது ஆட்சியை கலைத்து விடலாம் என்று பரிந்துரைத்தார். ஆனால் மொலகேரி குறிப்பிட்ட உறுப்பினர்கள் தாங்கள் கட்சி மாறவில்லை என மறுத்தனர்பொம்மை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பை வழங்காமல், 1989 ஏப்ரல் 19 ஆம் நாள்பிரதமர் ராஜீவ் காந்தியின் பரிந்துரையின் பேரில்குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன்பொம்மையின் அரசைக் கலைத்தார். கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது.  இதனை எதிர்த்து எஸ்.ஆர். பொம்மை தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டபின்பொம்மை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

1994 ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கை நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட பெஞ்சு விசாரித்தது. பொம்மையின் அரசைக் கலைத்தது செல்லாது என்று அறிவித்த நீதிபதிகளின் தீர்ப்பில் (S. R. Bommai V. Union of India, AIR 1994 Page 1918) பின்வரும் முக்கிய சட்ட விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன:

1. குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதுநீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டதாகும்.  தீய உள்நோக்குடன் (malafide) ஆட்சி கலைக்கப் பட்டிருக்குமெனில் நீதிமன்றங்களுக்கு கலைக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் நடைமுறைப்படுத்த அதிகாரம் உண்டு.

2. பிரிவு 356 இல் குடியரசுத் தலைவருக்கு வழங்கப் பட்டிருக்கும் அதிகாரம் வரம்புக்கு உட்பட்டதே.  நிபந்தனைகளுக்கும்மேற்பார்வைக்கும் உட்பட்டதே.

3. மத்திய அமைச்சரவைகுடியரசுத் தலைவருக்கு செய்யும் பரிந்துரை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் வராவிட்டலும்அப்பரிந்துரை எந்தச் சான்றுகளின் அடிப்படையில் செய்யப்பட்டதோ அவற்றை நீதிமன்றங்கள் பரிசீலித்து ஆய்வு செய்யலாம்.

4. மாநில அரசுகளை கலைக்கும்போது காரண காரியங்கள் நேர்மையாகவும்உண்மையாகவும்வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலை கலைக்கப்பட்டபின் அவசியம் பெறவேண்டும்.

5. ஆட்சி கலைப்பு அரசியலமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று நீதிமன்றங்கள் கருதினால்கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியிலமர்த்தும் நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு.

6. இந்தியக் குடியரசின் மதச்சார்பின்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் மாநில அரசுகளை கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு.

இத்தீர்ப்பின் பயனாகபிரிவு 356 னை பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்படும் சம்பவங்கள் வெகுவாக குறைந்து விட்டன. இத்தீர்ப்புமத்திய-மாநில அரசுகள் உறவில்மாநில அரசுகளின் நிலையை பலப்படுத்தியதன் மூலம் இந்தியக் குடியரசில் கூட்டாட்சியை (federalism) பலப்படுத்தியுள்ளது.

பல்வேறு தேசிய இனங்கள்மொழிகள்கலாச்சாரங்கள்பழக்கவழக்கங்கள்அரசியல் சூழல்கள் உள்ள இந்தியாவில் பன்மையில் ஒருமை என்ற தத்துவத்தில் கடந்த 69 ஆண்டுகளாக பல சிக்கல்களை சந்தித்து அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் சேதாரம் இல்லாமல் மக்களாட்சி நடைபெறுவது என்பது கீர்த்தி மட்டுமல்லாமல் பன்னாட்டு அளவில் ஒவ்வொரு இந்தியனுக்கும் சுய பெருமையான கர்வமாகும்.
1977 ல் ராஜஸ்தான் அரசு கலைக்கப்பட்டபோதுஉச்சநீதிமன்றத்தை அணுகியபோதுநீதிபதி பகவதி பிரிட்டிஷ் ஆட்சியைப் போல் அல்லவா இந்த 356 இருக்கிறது என்று வினா எழுப்பினார்.  இது இந்திய அரசியலில் அப்புறப்படுத்தவேண்டிய சூழல் ஆகும் என்று கூறினார். (The State of Rajasthan vs. Union of India1977)

உச்சநீதிமன்றத்தில் பொம்மை வழக்குக்கு பிறகு, Kihoto hollohan vs Zachillhu and other & Rameshwar Prasad and others vs Union of India 2005 என்ற இரண்டு வழக்குகள் பிரிவு 356ஐ எதிர்த்து விசாரணைக்கு வந்தன.  அப்போது இந்தியா ஒற்றையாட்சி என்பதை விட கூட்டாட்சி என்று சொல்லாவிட்டாலும் ஒற்றையாட்சி-கூட்டாட்சியின் கலவை என்று கருதிக்கொண்டு 356ஐ மூத்த அண்ணன் மாதிரி விருப்பத்திற்கு ஏற்றவாறு பிரயோகிப்பது குடியாட்சி இல்லை என்ற கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


செல்லா காசு என்று சொல்வதைப் போல இந்திய அரசியல் சட்டத்தில் செல்லாப் பிரிவு என்று சொல்லப்பட்ட பிரிவு 356ஐக் கொண்டு பழிவாங்கல் நடந்தது எல்லாம் நமக்கு வரலாறு சொல்கின்றது.  தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை தஞ்சாவூர் பொம்மையைப் போல ஆட்டி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இருப்பினும் மத்திய அரசு ஆணவத்தோடு கடந்த 69 ஆண்டுகளாக பிரிவு 356 ஐ கொடுமையாக பயன்படுத்திக்கொண்டுதான் வருகின்றது. இந்த நிலையில் கூட்டாட்சி என்ற நிலைப்பாடு காட்சிப் பிழையாகிவிடக் கூடாது.  

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...