Saturday, April 30, 2016

உ.வே.சா. நினைவு நாள்

இன்றைக்கு (ஏப்ரல் 28) உ.வே.சா. நினைவு நாள். அவருடைய என் சரித்திரத்தின் சில பக்கங்களை படிக்கவேண்டும் என்று விரும்பி பக்கங்களை புரட்டினேன். ஏற்கனவே உ.வே.சா.வுக்கும் திருநெல்வேலி மண்ணுக்கும் உள்ள தொடர்புகளை என்னுடைய நிமிர வைக்கும் நெல்லை என்ற நூலில் பதிவு செய்துள்ளேன். உ.வே.சா. சுவடிகளைத் தேடி நெல்லை மாவட்டத்தில் கரிவலம்வந்தநல்லூர், தென்காசி அருகே மேலகரம், திருக்குற்றலாம், கடையம் என பல நெல்லை மாவட்டப் பகுதிகளுக்கு சுவடிகளைத் தேடி அலைந்துள்ளார். மற்றொரு செய்தியை கேள்விப்பட்டேன். நெல்லையில் அவர் இப்போது ஷிபா மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். இந்த வீட்டின் பக்கத்தில்தான் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கிருந்துதான் உ.வே.சா. திருநெல்வேலியின் தென்பகுதிகளுக்கு ஓலைகளைத் தேடி, திருக்....., ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர் நாங்குநேரி என்று சென்று வருவதுண்டு. வில்வண்டி கட்டிக்கொண்டு விடியற்காலையிலேயே ஓலைச்சுவடிகளை எங்கிருக்கிறது என்று அறிந்து அங்கெல்லாம் செல்வார். சில நேரங்களில் இருட்டியப் பின்புதான் திருநெல்வேலியில் தங்குவார். இன்றைக்கு அந்த வீட்டில் வாரிசுகள் சாமிநாதன் தங்கியிருக்கின்றார். அந்த வீட்டின் அருகேதான் ஆரம்பத்தில் தினமலர் ஏட்டில் நிறுவன ஆசிரியர் ராமசுப்பய்யர் வீடும் இருந்தது. இந்தப் பகுதியில்தான் நெல்லை சங்கீத சபாவும் உள்ளது. அத்தோடு திருவாடுதுரை ஆதினத்துக்கான சொத்துக்களும் சைவமும், தமிழும் திருநெல்வேலியில் வளர்ந்தது ஒரு தனி வரலாறு. உ.வே.சா. காலடிப் படாத இடமே திருநெல்வேலியிலும், பாளையங்கோட்டையிலும் இல்லை. கல்வியின் கேந்திரப் பகுதியான பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு அல்லவா.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...