Sunday, September 30, 2018

யாழ் நகரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழ மக்கள் நலன் குறித்து பேச்சு.

யாழ் நகரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழ மக்கள் நலன் குறித்து பேச்சு.
நேற்று 27-09-2018 மாலை யாழ்ப்பாணம் ஹெரிட்டேஜ் அரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சில் உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்கள் சந்திப்பு சேனாதிராஜா தலைமையில் நடந்தது. அவ்வமயம் இன்றைய ஈழமக்களின் அவசிய தேவைகள் என்ன என்பதுக் குறித்து பேசினோம்.
விவாசாய நிலங்களை மீட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
போரில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து அவர்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இறுதிப்போரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
போரில் கனவனை இழந்த விதவைகள் மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.
சர்வதேச விசாரணை பொய்த்து போகும் பட்சத்தில் அதற்காக மேற்கொண்ட பத்து ஆண்டுகால உழைப்பு விரயமாகிவிடும்.
இந்த சந்திப்பும் கலந்தாலோசனையும் இலங்கைவாழ் தமிழ் மக்களிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களிடத்தில் நம்பிக்கை துளிர்க்கின்றது. இந்த பயணத்தில் எனக்கும் மிகுந்த மனநிறைவை அளித்த சந்திப்பு என்றால் மிகையல்ல.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
28-09-2018
#சேனாதிராஜா
#யாழ்ப்பாணம்சந்திப்பு
#KSRadhakrishnanpostings
#KSRPostings


Image may contain: one or more people, people sitting and indoor

யாழ் நகரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழ மக்கள் நலன் குறித்து பேச்சு.

யாழ் நகரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழ மக்கள் நலன் குறித்து பேச்சு.
நேற்று 27-09-2018 மாலை யாழ்ப்பாணம் ஹெரிட்டேஜ் அரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சில் உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்கள் சந்திப்பு சேனாதிராஜா தலைமையில் நடந்தது. அவ்வமயம் இன்றைய ஈழமக்களின் அவசிய தேவைகள் என்ன என்பதுக் குறித்து பேசினோம்.
விவாசாய நிலங்களை மீட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
போரில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து அவர்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இறுதிப்போரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
போரில் கனவனை இழந்த விதவைகள் மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.
சர்வதேச விசாரணை பொய்த்து போகும் பட்சத்தில் அதற்காக மேற்கொண்ட பத்து ஆண்டுகால உழைப்பு விரயமாகிவிடும்.
இந்த சந்திப்பும் கலந்தாலோசனையும் இலங்கைவாழ் தமிழ் மக்களிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களிடத்தில் நம்பிக்கை துளிர்க்கின்றது. இந்த பயணத்தில் எனக்கும் மிகுந்த மனநிறைவை அளித்த சந்திப்பு என்றால் மிகையல்ல.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
28-09-2018
#சேனாதிராஜா
#யாழ்ப்பாணம்சந்திப்பு
#KSRadhakrishnanpostings
#KSRPostings

கரிசல் மண்ணின் மைந்தர் பத்மஶ்ரீ ஜி. வெங்கடசாமியின் நூற்றாண்டு தினம்.

கரிசல் மண்ணின் மைந்தர் பத்மஶ்ரீ ஜி. வெங்கடசாமியின் நூற்றாண்டு தினம்.
————————————————
பத்மஶ்ரீ #டாக்டர் ஜி. #வெங்கடசாமி (அக்டோபர் 1, 1918 – ஜூலை 7, 2006) அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரும்,அகிலம் அறிந்த கண் மருத்துவரும் ஆவார் . 1918ம் ஆண்டு எட்டயபுரம் அருகில் உள்ள அயன்வடமலாபுரம் ஊரில் பிறந்தவர்.எங்கள் கரிசல் மண்ணின் மைந்தர்
இன்று அவரின் நூற்றாண்டு தினம்...
வாழ்க அவர் புகழ்!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
1-10-2018

இலங்கையில் ஆனந்த கொமாரசாமி . பென்னிகுவிக் ......

இலங்கையில் ஆனந்த கொமாரசாமி . பென்னிகுவிக் ......
————————————————
இன்று (30-9-2018)கொழும்பு நகரில் பல்வேறு நண்பர்களை சந்தித்துவிட்டு, சர்வதேச புத்தக கண்காட்சியை பார்த்துவிட்டு திரும்பியபோது, ஆளுமை ஆனந்த கொமாரசாமி மாவத்தை(சாலையில்) விக்டோரியா பார்க் அருகில் அற்புதமான கலைஞர்களின் கைவண்ண சித்திரங்களைக் கண்டு மெய்மறந்தோம்.
ஆனந்த கொமாரசமி
சிறந்த கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர், ஆராய்ச்சியாளர், நூலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களில் வாழ்ந்தவர். 
அந்தக் காலத்தில் விடுதலை (சுதேசிய) உணர்வால் உந்தப்பெற்று சமூக சீர்திருத்தச் சங்கத்தை (1905) நிறுவினார். அதன் சார்பில் Ceylon National Review என்னும் இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகச் பணியாற்றினார். 1906 ஆம் ஆண்டு சூன் நாலாம் நாள் முதன் முதலாக யாழ்ப்பாணம் சென்றார். அங்கு உரையாற்றும்போது "நமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பினை உலகில் வேறெங்கும் காணமுடியாது....எம்மவர் விஞ்ஞானக் கல்வியையும் கைத்தொழிற்கல்வியையும் நாடுகின்றனர். இவை அவசியமானவையே! ஆனால் இவை எல்லாம் பண்பாடு என்னும் அடிப்படையிலிருந்து வரவேண்டும்..." எனக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் அவருக்கு வித்தியா விநோதன் என்னும் பட்டம் அளிக்கப்பட்டது.
அவர் பெயரிலேயே இந்த தெரு அமைத்துள்ளது . கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் அளவில் ஓவிய கலைத்தொகுப்புகளை காண்பவர்கள் கண்களுக்கு மிக ரம்மியமாக உள்ளது. விட்டோனியல என்ற ஆங்கிலேய கலைஞர் தான் முதன் முதலாக இத்தகைய கலைகளை அறிமுகப்படுத்தினார். அவரின் நினைவாக இந்த சதுக்கம் பெயரிடப்பட்டுள்ளது.
கொழம்பில் பிரதான தெருவான காலே தெருவின் ஒரு பகுதியில் முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் பெயரில் ஒரு தெரு உள்ளது. அவர் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த போது அரசு அதிகாரியாக சில காலம் இலங்கையில் பணியாற்றினார். இலங்கையில் அவரது நினைவாக ஒரு தெரு உள்ளபோது தமிழகத்தின் நீர்ப்பாசனத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவருக்கு நினைவாக நாம் தலைநகர் சென்னையில் எதுவும் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு வெளிப்படுகிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30/09/2018

Image may contain: 1 person

Image may contain: indoor

Image may contain: outdoor


The Universal Declaration of Human Rights

The Universal Declaration of Human Rights is available in over 500 languages- making it the most translated document in the world.
Read it and #StandUp4HumanRights on Sunday's International Translation Day: https://bit.ly/1O8f0nS
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-09/2018
#KSRPostings

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன்
விழுத்துணையே.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30/09/2018
#KSRPostings
#KSRadhakrishnanPostings

இலங்கை பயணத்தில் யாழ்ப்பாணம்

இலங்கை பயணத்தில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, திரிகோணமலை ஆகிய பகுதிகளில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் முடிந்துவிட்டு கொழும்பு வந்தபோது, வடக்கு, கிழக்கு மாகாண ஈழ சகோதரர்கள் எங்களைப் பார்க்க வரவில்லையே என்று ஆதங்கத்துடன் வருத்தமாக குறிப்பிட்டனர். எங்களது பயண திட்டம் மிகவும் குறுகிய காலத்திற்குள் அமைக்கப்பட்டது. அனைத்து இடங்களுக்கும் சென்றுவர எங்களால் இயலவில்லை. அப்படியிருக்கையில் உங்களை புறக்கணித்துவிட்டோம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அடுத்தமுறை இந்த பகுதிகளுக்கு வரும்போது உங்களை சந்திக்க விழைகிறேன். கொழும்பு நகரில் நாளை வரை இருக்கிறேன். வாய்ப்பிருப்பவர்கள் வாருங்கள். சந்திப்போம். 

நன்றி;வணக்கம்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30/09/2018

Saturday, September 29, 2018

தருமனுக்கே விழவில்லை தாயம்.



யார்யாருக்கு எது எது எப்போது கிடைக்க வேண்டுமோ அப்போது தான் கிடைக்கும். 
காலத்தே அல்லாது பழுக்காது பலா.
தருமனுக்கே விழவில்லை தாயம்.
(யாழ் மண்ணில் கேட்டது)
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29/09/2018

திரிகோணமலையில் திரிகோணமலை

எங்களால் முடிந்தவரை போராடிவிட்டோம். இனி எங்களுக்கு என்ன நடக்கபோகிறது. இருப்பினும் நாங்கள் சலிப்படையாமல் போராட வேண்டிய நிலையில்.........
————————————————
நேற்று திரிகோணமலையில் திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களைச் சேர்ந்த வட்டார நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணக் குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளூராட்சி பிரதிநிதிகளை சந்தித்து உரையாடி பேசக் கூடிய வாய்ப்பு கிட்டியது.
இந்த கூட்டத்தில் ஈழ நன்பர்கள், நாங்கள் எங்களால் முடிந்தவரை போராடிவிட்டோம். இனி எங்களுக்கு என்ன நடக்கபோகிறது. இருப்பினும் நாங்கள் சலிப்படையாமல் போராட வேண்டிய நிலையில் இருக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்த நிலையில் நான் அவர்களிடம், தாய் தமிழகம் உங்களுக்கு என்றென்றும் உறுதுணையாகவும், உங்களுடைய கவலைகளிலும், எதிர்ப்பார்ப்புகளிலும் தனது பங்களிப்பை நிச்சயமாகச் செய்யும். திரிகோணமலை துறைமுகம் தென்கிழக்கு ஆசியாவின் ஒரு கேந்திர மையமாகும். ஆழ்கடல், வர்த்தகம், தொழில் போன்றவைகளுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் போல இந்த திரிகோணமலை துறைமுகம் அமைந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் திரிகோணமலை துறைமுகத்தில் இடம்பெறத் துடிக்கிறது. இதற்கான நிலஅமைப்பை கொண்ட திரிகோணமலை எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும்.
இந்திரா காந்தி காலத்திலிருந்து திரிகோணமலை துறைமுகத்தையும் நில அமைப்பு ரீதியாக கவனித்தும் வருகிறது. இந்த துறைமுகத்துடன் இந்து மகா சமுத்திரத்தின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதாகும். இந்த துறைமுகம் வழியாக சீனாவின் பட்டு வழி சாலையை (Silky way) ஏற்படுத்தி தனது வர்த்தகத்தை மேம்படுத்தி ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளவும், அதன்வழியே தனது ஆதிக்கத்தை செலுத்தவும் முயற்சித்து வருகிறது. ஏற்கனவே இந்து மகா சமுத்திரத்தில் டீகோகார்சியா தீவு பிரிட்டனிடமிருந்து அமெரிக்காவிற்கு சென்றுவிட்டது. பிரான்சும் இதில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த பிரச்சனைகளுடன் ஈழத்தமிழர் பிரச்சனையையும் சேர்த்து கவனிக்கக்கூடிய நிலையில் உள்ளது.
நீங்களும் போராடி பார்த்துவிட்டீர்கள். உங்களது உரிமைகளையும், பிரச்சனைகளையும் தீர்க்க உங்களது அரசும் முன்வர வேண்டும்.
இந்த நிகழ்வின் போது, இலங்கை எதிர்கட்சித் தலைவர் சம்மந்தனை அவரது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரும் இத்தகைய கருத்தை தான் தெளிவுப்படுத்தினார். அவருக்கும் எனக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம். எனது இல்லத்துக்கு பலமுறை வந்துள்ளார் . அவரை 1980களில் அடிக்கடி சந்திப்பதுண்டு. செல்வநாயகம் ,அமிர்தலிங்கம் காலத்து நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நாட்டின் எதிர்கட்சித் தலைவர் மிக எளிமையாக இருப்பது திரு. சம்மந்தம் அவர்களை பார்க்கும்போது தெரிந்தது. இந்த நிகழ்வின் போது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், கவிஞர் இளையபாரதி, குகதாசன் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஈழ ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29/09/2018
#இலங்கை_பயணம்
#Srilankan_Visit
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29/09/2018
Image may contain: 4 people, people smiling, people standing and indoor

Friday, September 28, 2018

இலங்கை_பயணம்

இலங்கை பயணம்.
------------------------
இன்று (26/09/2018)மாலை 7 மணிக்கு வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவே.சேனாதிராஜா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீகந்தராசா, தினமணி வைத்தியநாதனுடன் நானும் இலங்கை தமிழர்கள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டோம். வவுனியா, மட்டக்களப்பு, மன்னார் பகுதி முக்கிய தமிழ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நாளை மாலை யாழ்ப்பாணத்தில்...
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28/09/2018
#இலங்கை_பயணம்
#Srilankan_Visit
#KSRPostings
#KSRadhakrishnanPostings

இலங்கை_பயணம்

முள்ளிவாய்க்கால் , நந்திக்கடல் பார்வையிட சென்றேன் . கண்ட காட்சிகள் கண்ணுக்குள் முள்ளாய் தைக்க நெஞ்சுக்குள் கண்ணிர்க்கடல் பெருகியதே......
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27/09/2018

Thursday, September 27, 2018

யாழ்ப்பாணத்தில் முதல்வர் திரு. விக்னேஸ்வரனுடன்......

யாழ்ப்பாணத்தில் முதல்வர் திரு. விக்னேஸ்வரனுடன்......
————————————————
இன்று (27-9-2018)இலங்கை வடக்கு மாநில முதல்வர் திரு. விக்னேஸ்வரன் அவர்களை அவரது யாழ்ப்பாணம் நல்லூரில் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் அரசியல் நிகழ்வுகளை குறித்து பேசிக் கொண்டிருந்தோம் . சேலம் Aaranya Alli ஆரண்ய அல்லியின் கைவண்ணத்தில் தமிழர்களின் அடையாளமான இசைக் கருவிகளை துணியில் நெய்த படத்தை வழங்கியபோது...
உடன் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்,
சரோஜா சிவச்சந்திரன்,
கவிஞர் இளையபாரதி இருந்தனர்.

Wednesday, September 26, 2018

நன்றி : மு.வே. வாஞ்சிநாதன்

26 - 09 - 1987
இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது!திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம்.
பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழுப்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன்.
கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல்,
"நவீனன்" என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன். அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் ?ஜில்? லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது.

மனம் 'பட பட' வென்று அடிக்கத் தொடங்கியது?
மீண்டும் 'நவீனன்' என்று அழைத்தேன்.
நவீனன் எழும்பி விட்டான்.

ஐந்து நிமிடங்களில் மேடையில் ஒரு பெரிய மெழுவர்த்தி எரியத் தொடங்கியது? மெழுகுவர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது? ஒரே வினாடிதான்! அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது.
பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது. திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதனால், என்மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை. மிகவும் மெல்லியதாக அடிக்கிறது. உடனே இரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன். அது மிகவும் குறைவாக இருக்கிறது. 50 என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் உயிர் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும்.
உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது. திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.
'வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது. அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது. சுயநினைவோடு என்றாலும் சரி.சுய நினைவில்லை என்றாலும் சரி. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ'
என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அவர்.

அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன்? எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன்? மனிதநேயத்தையும் - அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது?.......
எது?
ஆம்.
சத்தியம்! என்ற இந்த ஐந்து எழுத்துக்களுக்காகத் தானே திலீபன், ?அகிம்சை? என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான். கடமை ? கண்ணியம் - கட்டுப்பாடு என்ற மூன்று உயரிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால், 'கட்டுப்பாடு' என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே பலி கொடுப்பதைத் தவிர, வேறு வழியொன்றும் எனக்குத் தெரியவில்லை.

என் கடமையைச் செய்வதற்காக மேடையின் பின்பக்கம் இறங்கிச் செல்கிறேன். அங்கே பிரதித் தலைவர் மாத்தயா நிற்கிறார். அவரிடம் திலீபனின் உடல் நிலையின் அபாயகரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன்.
திலீபனின் உடல் நிலை மோசமாகிவிட்ட விடயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் பொதுமக்களும் மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். திலீபனுக்கு கடைசி நிமிடம் வரையும் ஒருவித சிகிச்சையும் அளிக்க முடியாமல் எமது கைகள் கட்டப்பட்டிருந்ததற்கு வேறு முக்கிய காரணமும் ஒன்று இருந்தது. எமது காதில் விழக்கூடியதாகவே பல எதிரணி உறுப்பினர்களும், எமது இயக்கத்துக்கு எதிரானவர்களும் பேசியதைக் காதால் கேட்டவர்களில் நானும் ஒருவன்.
'புலிகள் தந்திரமாக மக்கள் மனத்தை மாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்ற பெயரிலே தண்ணியைக் குடிச்சுக்கொண்டு இருப்பார்கள். ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் வைத்தியம் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம். இதுதான் இந்த சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை'
இப்படியான பேச்சுக்களுக்கு உண்மை வடிவம் கொடுத்து, புலிகள் பொய்யர்கள் என்ற கெட்ட பெயரை வரவிடாமல் காப்பாற்றுவதற்காகவும் எம்கைகள் கட்டப்பட்டிருந்தனவே தவிர, வேறு ஒன்றுக்காகவும் அல்ல.
எம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான, தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம். ஆனால் முடியவில்லையே? விதி! தன் வலிய கரங்களை மிக நன்றாகவே திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான்.
உயிருடன் அந்த மனித தெய்வம் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பதை என் கண்களால் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டமைக்காக, நான் வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய முடியும்?
265 மணித்தியாலங்கள் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09.1987) 10.48 மணியளவில், எம்மையெல்லாம் இந்தப் பாழும் உலகில் பரிதவிக்க விட்டுவிட்டுத் தான் மட்டும் போய்விட்டான்.
ஆம். தமிழர்தம் விளக்கு அணைந்துவிட்டது! அணைந்தேவிட்டது! டொக்ரர் சிவகுமார் அவர்கள், திலீபன் இறந்த பின் அவரைப் பரிசோதனை செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்த போது, மக்கள் கதறி அழத் தொடங்கினர்!
எங்கும் அழுகைச் சத்தம். விம்மல் ஒலி. சோக இசை. வானமே இடிந்து விட்டதைப் போன்ற வேதனை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்து விட்டது போன்ற உணர்வு!
காலை 11 மணிக்கு "என்பார்ம்" செய்வதற்காக, அவரது உடலை யாழ். வைத்தியக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றோம்.
பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் அதே மேடைக்கு முன்பாக அவரின் புகழுடம்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் புள்ளி போட்ட, பச்சையும் - கறுப்பும் கலந்த இராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, 'லெப்டினன்ட் கேணல்' என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.
அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கு எந்தப் பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்குத் தெரியும். ஆனால், என்ன செய்ய முடியும்?
அவரைப் படுக்க வைத்திருந்த பேழையை, விடுதலைப்புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. தந்தை, சகோதரங்கள், உறவினர்கள் ஆகியோர் உடலை வந்து தரிசித்துச் சென்றனர். பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, திரு. இராசையா அவர்கள் 'ஓ' என்று அலறியவாறு அவர் உடல்மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்களும், சிறு பிள்ளைகளைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.
பொதுமக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர்.
ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார், தமிழகத்திலிருந்து வருகைதந்து தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
தலைவர் பிரபாகரன், சொர்ணம், மாத்தயா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா, நடேசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலியைத் தமது தோழனுக்குச் செலுத்தினர்.
சாஜகான், நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் போன்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர்.
திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார்?
அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு. அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!
நன்றி : மு.வே. வாஞ்சிநாதன்

Image may contain: 1 person

திலீபன் நினைவு நாள்

நாயின் கனவெல்லாம் எலும்பின் மழைதான்... அதிலும் கேடுகெட்ட மானங்கெட்ட நாய்களின் கனவில் அழுகிய துர்நாற்ற எலும்புகள்தான் இது மானிடத்திற்கு பொருந்தும்.
*திலீபன் நினைவு நாள்*. யாழ்ப்பாணத்திலிருந்து...

பாடும் பறவைகள் நல்லூர் வாருங்கள் வீரன் திலீபனைப்பாடுங்கள்.........

பாடும் பறவைகள் நல்லூர் வாருங்கள் வீரன் திலீபனைப்பாடுங்கள்.........

Image may contain: 3 people, people sitting

பாதசாரிகள் கடப்பதற்கு இந்த படத்தில் காட்டிய படி விளக்குக்கம்பங்களில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்றைக்கு காலையில் கொழும்பு காலி ரோடில் நடைபயிற்சிக்கு சென்ற போது பாதசாரிகள் கடப்பதற்கு இந்த படத்தில் காட்டிய படி விளக்குக்கம்பங்களில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமாதிரி லண்டன் போன்ற பெருநகரங்களில் பார்த்துள்ளேன். ஏனோ சென்னையில் இப்படியான நவீன கருவிகள் இல்லை.
கொழும்பு நகரை பார்க்கும்போது திருவனந்தபுரம் நகரம் தான் மனதில் வருகிறது.நகுலன் இல்லத்தின் பகுதிகள் கண்ணில் அப்படியே தென் படுகின்றன....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-9-2018.
#இலங்கை_பயணம்
#Srilankan_Visit
#KSRPostings
#KSRadhakrishnanPostings
26-09-2018Image may contain: one or more people, people standing and outdoor

இலங்கை பயணம்.

இலங்கை பயணம்.
------------------------
நாளை (26/09/2018)
காலை - கொழும்பு நிகழ்ச்சி.
மாவீரன் திலீபன் நினைவு நாள்.
நாளை மாலை 4 மணிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மாவே. சேனாதிராஜாவின் ஏற்பாட்டில் வவுனியாவில் தமிழ் மக்கள் சந்திப்பு.
#இலங்கை_பயணம்
#Srilankan_Visit
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25/09/2018

Monday, September 24, 2018

நீண்டநாட்களாக சந்திக்க நினைத்த கவிஞர்.







————————————————-
நான் நீண்டநாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த கவிஞர். க்ருஷாங்கினியை சந்திக்கும் வாய்ப்பு இன்று (24-9-2018)கிட்டியது. க்ருஷாங்கினி என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் ப்ருந்தா நாகராஜனின் சிறுகதைகள், கவிதைகள், இலக்கியம் பேணும் இதழ்களிலும், வெகுஜன பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களில் ஓவியம், நடனம் குறித்த இவரின் கட்டுரைகளும், இவை தொடர்பான பல விமரிசனக் கட்டுரைகள் பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளன. மொழிபெயர்ப்பையும் விட்டு வைக்காத இவர் ஒரு சகலகலாவல்லி. எழுத்தில் ஆளுமை பெற்றிருக்கும் இவர் நகைச் சுவையுணர்வுடைய, இளமையோடு உறுதியும் கொண்ட எப்போதும் இருபது வயதைத் தாண்டாத இளகிய, மென்மையான, மனதையுடையவர். 

ஆங்கிலத்தில் எஸ். சாரதா எழுதிய கலாசேத்திரா ருக்மணி ஆரண்டேல் நினைவுகளைக் குறித்து இவர் தமிழாக்கம் செய்து சமீபத்தில் நூலாக வெளிவந்தது. அதன் பிரதியை கையொப்பமிட்டு தி.நகர் புக்லேன்டில் நான் வாங்கவேண்டுமென்ற அன்பான அவருடைய கோரிக்கையை ஏற்று பெற்றுக் கொண்டேன். உடன் இலங்கையில், கொழும்பு நகரில் தமிழ் இலக்கியம், கலைத் தளங்களில் இயங்கிவரும் திருமதி. மிதிலா பத்மநாபனும் உடனிருந்து இந்த நூலைப் பெற்றுக் கொண்டார்.

சி.சு. செல்லப்பா தலையில் சுமந்து தன் படைப்புகளை விற்றது போல, இவர் தன்னுடைய புத்தகங்களை ஜோல்னா பையில் வைத்துக் கொண்டு மிக எளிமையாக, மின்சார இரயில் ஏறி வந்து புத்தகக் கடைகளில் விற்கும் பணியை இந்த வயதிலும் தவறாமல் செய்கிறார். இதை ஒரு தவமாகவும் எண்ணுகிறார். அவரின் பணி சிறக்கட்டும்.

#க்ருஷாங்கினி
#krushangini
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-09-2018

Sunday, September 23, 2018

*தற்சார்பு மரபு விவசாயம் – 3*



*மானிடமே, உன்னை அழிக்கும் நஞ்சு வேளாண் உற்பத்திப் பொருட்களை தவிர்*
-------------------------------------
உலகம் முழுவதும் பன்னாட்டளவில் கையாளப்படும் சாகுபடி முறைகளும் ஒரே முறையில் இருக்க வேண்டுமென்ற நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது நல்லதல்ல. வேளாண் முறையில் மண் சார்ந்தவையாகவும், பகுதி சார்ந்தவையாகவும், மரபு சார்ந்தவையாகவும் இருக்க வேண்டும். எந்தவொரு பயிரும், விளைவிக்கும் முறையும், அதை பராமரிக்கும் விதமும் ஒரே மாதிரியாக பார்ப்பதும் தவறு. நம்முடைய நெல் விளைச்சலுக்கும், வாழைச் சாகுபடிக்கும் வேறு நாட்டில் உள்ளது போன்று நாமும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். இது தவறான அணுகுமுறை. ஒவ்வொரு நாட்டுக்கும் தட்ப்வெட்ப முறைகளுக்கேற்ப பயிர்களும், சாகுபடிகளும் அமைய வேண்டும். 
மரபுரீதியான வேளாண்மை அல்லது சுயசார்பு இயற்கை வேளாண்மை என்ற சொன்னாலே அதை ஒதுக்குவதும், ஏதோ ஒரு மூட நம்பிக்கை போன்று பார்ப்பதில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். தற்சார்பு மரபுரீதியான விவசாயத்தை பாதுகாக்க நம்மாழ்வார் போன்ற ஆளுமைகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம். இதைதான் அன்றைக்கு ஜே.சி.குமரப்பா தற்சார்பு கிராம ரீதியான பொருளதார முறைகள் அமைய வேண்டுமென்றே வலியுறுத்தி வந்தார். 
விஞ்ஞான வளர்ச்சியின் காரணமான விவசாயத்திலும் அதில் புகுத்தி  விளைநிலத்திலின் பயிர்களையும் நாசப்படுத்திக் கொண்டோம். விவசாயம் என்பது இயற்கையின் அருட்கொடை. இயற்கை தந்த நிலம், மண், வருடந்தோறும் பெய்துவரும் மழையைப் பொருத்தே வேளாண்மை அமைகின்றது. விவசாயம் என்பது அரசு பரிபாலனண போல் அல்ல. இயற்கை, காலநேரத்தினைக் கொண்டு விவசாயம் அமைகின்றது. 

பசுமைப் புரட்சிக்குப் பின் இயற்கையை வென்றெடுத்து மரபற்ற முறையில் புதிய விதைகளை உருவாக்கி நம்முடைய பழமையான விவசாய முறைகளை நாசப்படுத்திக் கொண்டோம். இன்றைய விவசாய நடைமுறைக்கு பயிர்களை வளரவும், பாதுகாக்கவும், செயற்கையான ரசாயண உரங்களை நாடுகிறோம். 

என்.பி.கே உரங்களையும் பெரிதும் நம்புகிறோம். படித்து பட்டம் பெற்ற விவசாயப் பட்டதாரிகள் கூட மரபுரீயிலான விவசாயத்தினை புறந்தள்ளி, செயற்கை விவசாய முறைகளை தான் பரிந்துரைக்கின்றன. இராசயன உரங்கள் பூச்சிக் கொல்லி மருந்துகளை தான் சிபாரிசு செய்கின்றனர். இவர்களாலேயே மரபுரீதியிலான விவசாம் மறுதலிக்கப்படகிறது. இந்தியாவைப் பொறுத்தவகையில், ஆங்கிலேயர்கள் இந்தியா வந்தபின் விவசாயத்தில் சிறிது சிறிதாக வேதியியல் இடுபொருள்களை அறிமுகப்படுத்தி பயன்படுத்தத் துவங்கினர். உலகளவில் 19வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நவீன விவசாயம் என்பது அசுர வேகத்தில் தொடங்கியது. இது வளர்ச்சியின் திட்டங்களே என்று சொன்னாலும் நஞ்சைக் கக்கும் நடவடிக்கைகள் தான்.

உலகளவில் ஒவ்வொரு சூழ்நிலைகள் இருந்தாலும். அதற்கும் அளவுண்டு. அதற்காக விவசாயத்தில் அளவுக்கதிமான இரசாயண இடுபொருட்களை சேர்த்தால் அது அழிவிற்கு தான் வழிவகுக்கும். விஞ்ஞானி ஹம்ரேடேவிட் மண்ணின் வளம் என்? மண்ணின் தன்மை என்ன? என்று 1813இல் கண்டு வெளிப்படுத்தினார். அதன்பின் விஞ்ஞானி ஜஸ்டஸ் வான் லீபிக் தாவரங்களின் பகுதிகளில் இயற்கையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. தேவையானவற்றை இயற்கையாகவே மண்ணில் இருந்து எடுத்துக் கொள்கிறது என்று கண்டறிந்தார். இந்த மண்ணின் வேதியியல் ஊட்டச்சத்துகள் இயற்கையாக இருக்க வேண்டும். செடிகளுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் இலை தழைகளில் இருந்து பெறலாம். இலை தழைகளின் வேர்களில் உள்ள முண்டுகளில் நைட்ரஜன் உள்ளது. பாஸ்பரஸ், பொட்டாசியம் இலைகளிலும், தண்டுகளிலும் கிடைக்கும். இது எப்படியென்றால் மனிதர்கள் எப்படி கீரையை உடம்புக்கு நல்லது என்று உண்கிறோமா அதுபோல இலைத் தழைகளிலிருந்து வளரும் வேளாண் பயிர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இன்றைக்கு இதையெல்லாம் நாம் தள்ளிவிட்டு செயற்கையான என்.பி.கே உரங்களை உருவாக்குகின்றோம். நைட்ரஜன் வாயு நிலையில் இருந்தால் தான் தாவரங்கள் அதை நேரடியாக ஏற்றுக் கொள்ளும். ஹேபர், பாஸ் என்ற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானிகள் முதல் உலகப்போர் நடக்கும்போது நைட்ரஜன் வாயுவை வைத்து அமோனியாவின் உற்பத்தி முறையை கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு ஐரோப்பா அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சென்றடைந்தது. முதல் உலகப்போருக்குப் பின்னரே 1930களில் காற்றிலிருந்தே அமேனியா தயாரிக்கப்பட்டது இது எப்படி என்றால் மின்சக்தி ஆற்றலைக் செலுத்தி அமோனியா அதிகளவில் உற்பத்தியையும் கண்டறிந்தனர். இரண்டாம் உலகப்போரில் இந்த அமோனியா உற்பத்தி பன்மடங்கு உயர்ந்தது. செயற்கையான அமோனியா விவசாயத்தில் புகுத்தப்பட்டன. இந்த நிலையில் என்.பி.கே. என்ற நைர்டசுள் பொட்டாசியத்தை ஈடா அமோனியாவை கையாளவும் தொடங்கினர். வணிக ரீதியான அமேனியாவை உலகளவில் அறிவியல் ரீதியாக விவசாய கல்வி நிலையங்களில் அமோனியாவைப் பற்றி போலியான விழிப்புணர்வைக் காட்டி அதன் விளைவாகத் தான் யூரியா உரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

பல்லாயிரம் ஆண்டுகளாக நம்முடைய சாகுபடி, பயிர் பாதுகாப்பு, கால்நடைகளை பேணுதல் போன்றவை இந்த மாதிரி செயற்கை உரங்களால், இரசாயனத் தீவணங்களால் திசைமாறியது. பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு எல்லாம் அரிய பொருட்களாக்கிவிட்டன. இந்த இடத்தில் ஒன்றை நினைவுப்படுத்த வேண்டும். சீமான் வீட்டுப் பிள்ளையான வ.வு.சி., கால்நடைகளின் மீது அக்கறை கொள்வார். தன்னுடைய இறுதிக் காலங்களில் வறுமையால் மிகவும் சிரமப்பட்டபோது, கால்நடைகளுக்கு தேவையான பருத்திக்கொட்டை, பிண்ணாக்கு ஆகியவற்றை விற்று பிழைப்பு நடத்துகின்றேன். அது ஒரு வகையில் கால்நடைகளுக்கு உணவளிக்கிறேன் என்ற புண்ணியமாவது எனக்கு கிடைக்கும் என்று சொன்னார். 

கடந்த 19ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்திலேயே கந்தகம், பைரேத்ரம் (pyrethrum) போன்ற வேதிப் பொருட்களை பயன்படுத்தி ஐரோப்பா, அமெரிக்காவில் பயிர் செய்யத் தொடங்கினர். பின்னர் அது உலகளல் பின்பற்றப்பட்டன. இந்த பயன்பாட்டில் இரசாயண உரங்களால் பாதிப்பு குறைந்தது தான். இதிலிருந்து பகாசுரமாக பெரியது தான் விவசாயப் வேதிப் பொருட்களுக்கான உற்பத்தி.

அடுத்து, இந்தியாவின் நிலைமைக்கு வருவோம். நாடு விடுதலைக்கு முன்பு இரசாயண உரங்கள் சிறியளவிலே அறிமுகமாகியது. ஆனால் இன்றைக்கு வேதியியல் உரங்களும் விதைகளும், பூச்சி மருந்துகளே இல்லாமல் விவசாயமே இல்லையென்று இந்தியாவினை அவலமான சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது. பூச்சி மருந்துகளும், இரசாயன உரங்களும் கட்டுபடியான விலையிலும் கிடைப்பதில்லை. அதை வாங்கி விவசாயிகளும் பயன்படுத்தினாலும் பெரியளவில் விளைபொருள் உற்பத்தியும் கிடைப்பதில்லை. இதுதான் பசுமைப் புரட்சி நமக்கு செய்த உபகாரம். இயற்கை விவசாயத்தை மறந்ததால் மண்வளம் பாதிக்கப்பட்டு அதை சரிசெய்ய முடியாத கேடுகள். இதை நாமே தேடிக் கொண்டோம். பாரம்பரிய விதைகளை நாம் பயன்படுத்தினால் மண் வளமும் பாதிக்காமல் இருப்பது மட்டுமல்ல, மண்ணுக்கும் அது பாதுகாப்பு. உதாரணத்திற்கு சம்பா மோசனம், 160 நாள் பயிரான நெல் நன்றாக வளர்ந்து வேர்பிடித்து மளமளவென்று காட்சி தரும். இப்படிப்பட்ட பயிர்களையும் விதைகளையும் தொலைத்தோம். இயற்கை உரங்களையும், அதன் நடைமுறைகளையும் ஒழித்தோம். ஜீவாமிர்தக் கரைசல், பஞ்சகவ்யம் ஆகிய பூச்சிக் கட்டுப்பாட்டிற்கும், பயிருக்கு உரமாக இருந்ததையும் புறந்தள்ளினோம். செயற்கையான இரசாயன முறைகளை நடைமுறைப்படுத்தியதால் இன்றைய விவசாயம் தோல்வி என்று சொல்ல முடியாது, நஞ்சை கக்கும் விளைப்பொருட்களை சாகுபடி செய்து அதை நாமே உண்டு நம் உடலை கெடுத்துக் கொண்டோம்.

இரசாயன உரங்கள், மரபு சாரா கலப்பு விதைகள், நீர்நிலைகளை அழித்தல் போன்ற நம்முடைய வினைகளால் நம்மை நாமே அழித்துக் கொண்டோம். இந்த நிலையிலிருந்து எப்படி மீள்வோம் என்பது பெருங்கேள்வியாக எழுந்துள்ளது. 

பாரம்பரிய தற்சார்பு விவசாயம் அறிவியலுக்கு விரோதமானது என்று சிலர் சொல்வது வேடிக்கை. இயற்கை என்பது அறிவியலின் அடிப்படை. மரபு சார்ந்த, தற்சார்பு விவசாயம் இயற்கையின் முறையிடையே செயல்படும்போது அது எப்படி அறிவியலுக்கு விரோதமாக முடியும். அறிவியல் என்றால் மானிடத்திற்கு நன்மை பயக்கக்கூடிய திட்டங்களை வழங்குது தான். ஆனால் விவசாயத்தில் நச்சு கக்கும் இடுபொருள்களை பயன்படுத்துவது தான் விவசாயத்திற்கும், மானிடத்திற்கும் விரோதமானது ஆகும். 

உள்ளபடியே நம்முடைய மரபுரீதியாக நிலத்தை கீழ்கண்டவாறு பயிர்செய்வதற்கு முன் பக்குவப்படுத்த வேண்டும்.

1. நிலத்தின் தன்மையை மாற்றி ஆட்டுகிடைகள் இயற்கை உரங்கள், மண்ணில் இடுவது,
2. விதைத்து தானியங்கள் முளைப்பதற்காக வசதியளிப்பது,
3. பயிர்கள் சரியாக வளர்வதற்கு ஏற்றவாறு நிலத்தை மேம்படுத்துவது,
4. களைகளை நிலத்திருந்து எடுப்பது
5. பாசன நீர் மற்றும் மழையை உறிஞ்சிக் கொள்ளும் நிலையில் நிலத்தை பக்குவப்படுத்துவது
6. திரும்பவும் எரு, உரம் முதலியவற்றை நிலத்தில் இடுவது
7. நிலத்தில் காற்றோட்டம் ஏற்படுத்துவது.

இந்த நிலைகளில் எல்லாம் மேற்கொண்டு மரபு ரீதியான விவசாய செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தினால் இரசாயன நச்சுக் கக்கும் விவசாய உற்பத்திப் பொருட்களிலிருந்து மானிடம் தப்பிக்கலாம். நம்மை நாமே காத்துக் கொள்ள தற்சார்பு விவசாயம் தான் தேவை என்ற உறுதியை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். இது காலத்தின் அவசியமும், கட்டாயமும் ஆகும்.

தடைதனை உடைத்திடுவோம் 
ஒரு விடைதனை அடைந்திடுவோம் 
மடைதனை உடைத்திடுவோம் 
ஒரு ஆற்றுவெள்ளம் போல் புறப்படுவோம் 
இனி ஒரு விதி செய்வோம் 

-தொடரும்...

#தற்சார்பு_விவசாயம்
#மரபுரீதியான_விவசாயம்
#பசுமைப்_புரட்சி
#கே_எம்_முன்ஷி
#உத்தமர்_காந்தி
#பூமிதான_இயக்கம்
#குமரப்பா
#Green_Revolution
#Mahatma_Gandhi
#J_C_Kumarappa
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-09-2018

Saturday, September 22, 2018

பாஜக தமிழிசைக்கு மீண்டும் ஓர் நினைவூட்டல் (கலைஞரும் கச்சத்தீவும் சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம். )

பாஜக தமிழிசைக்கு மீண்டும்  ஓர்  நினைவூட்டல் (கலைஞரும் கச்சத்தீவும் 
சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம். )
————————————————
பாஜகவின் தமிழக தலைவராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜன் கடந்த 20-9-2018 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈழப்பிரச்சனையில் திமுகவின் பங்கு குறித்து வரலாறு அறியாமல் கருத்துரைத்து இருந்தார்.  அதற்கு பதிலாக கழகத் தலைமைக் கழகத்தின் சார்பில் என் அறிக்கை  வெளியிடப்பட்டது. அதில் தெளிவான , ஆரோக்கியமான வரலாற்றை நியாமான முறையில் கற்பிக்கும் வகையில் பதில் அளித்து இருந்தேன். 

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழிசையின் தகப்பனார் குமரி அனந்தன் அவர்களுடன் நெருங்கி பழகி காமராசருடன் அரசியல் நிகழ்வுகளில் பங்குபெற்றவன். எனக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோ அவர் மீதான வன்மமோ கிடையாது.நட்பு,அன்பு வேறு. அரசியலில் தெளிவில்லாமல் பொதுவெளியில் பேசுவது வேறு என்ற காரணத்தால் ஈழத்தமிழர் நலனில் அக்கறையுடன் செயல்பட்டதின் காரணமாக பதில் அளித்தேன். 

அந்த அறிக்கையில் "ராஜபக்சேவின் இரத்தக்கறை படிந்த கரத்தை மோடி முகர்ந்ததையும் ராஜபக்ச்சே மற்றும்  அவர மகனுக்கு பிரதமர் மோடி டில்லியில் வரவேற்று பேசியை பற்றி தமிழிசை கருத்தளிக்கவில்லையே ? " எனக் கேள்வி எழுப்பினேன். தலைமைக் கழக அறிக்கைக்கு எதிர்வினையாற்றிய தமிழிசை அவர்கள் எனது கேள்வியை மட்டும் வசதியாக மறந்து விட்டு இன்று வாய்ச்சவடல் விட்டுருக்கின்றார். 

எனக்கும் லாவணி பாடுவதில் விருப்பம் இல்லாத காரணத்தால் தான் ஊடகங்களை கூட்டாமால் பத்திரிக்கை வாயிலாக பதில் அளிக்காமல் தனிப்பட்ட முறையில் வரலாற்றை சொல்ல விழைகின்றேன். 

பட்டுக்கோட்டக்கு வழிக்கேட்டால் கொட்டைப்பாக்கு என சொல்வது போல ஈழத்தமிழர் நலனில் கலைஞரும் திமுகவின் பங்களிப்பையும் சிறு தொகுப்பாக கூறியதற்கு சிறிதும் பொருத்தமில்லாமல் மலையக தமிழர்கள் குறித்தும், கச்சத்தீவு குறித்தும் பேசி திசை திருப்புகின்றார். கச்சத்தீவு தாரைவார்ப்பு என்பது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. கச்சத்தீவு குறித்து நேரடியாக விளக்கம் கேட்டிருந்தால் சொல்லிக் கொடுக்க கடமைப்பட்டிருக்கின்றேன். 

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட செய்தியே  நாளேட்டின் வாயிலாக அறிந்து துடித்தேன் என தலைவர் கலைஞர் அளித்த அறிக்கையும் அதன் பின்னர் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மேற்கொண்ட நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டனக் கூட்டம் போட்டவர் கலைஞர். நாடாளுமன்றத்தில் இரா.செழியன் அவர்களும் , மாரிச்சாமி அவர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். 
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை கண்டித்து வாஜ்பாய் நாடாளுமன்றத்தில்  பேசினார்.  
இலங்கை இராணுவத்திற்கு எவ்வித பயிற்சியும் , ஆயுத உதவியும் வாஜ்பாய் அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். நான் மறுக்கவில்லை.  வரலாற்றை நன்கு அறிந்தவன் அடியேன் என்ற முறையில் தமிழிசைக்கு ஒன்றை நினைவூட்ட கடமைப் பட்டிருக்கின்றேன். வாஜ்பாய் நடவடிக்கைகளுக்கு காரணம் அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்புக் கட்சிகளாக இருந்த திமுகவும் , மதிமுகவும் இருந்தது. மறைந்த முரசொலிமாறன் அவர்களும் , வைகோ அவர்களும் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களை சந்தித்து  கேட்டுக் கொண்டதின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதை நினைவுபடுத்துவது கடமை. வாஜ்பாய் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என குரல் உயர்த்தும் தமிழிசைக்கு " திமுக அமைத்த டெசோ மாநாடு மேடையில் நின்று தான் குரல் கொடுத்தார் " என்பதை சொல்லி இருக்க வேண்டும்.   கச்சத்தீவும் கலைஞரும் என்ற தலைப்பின் என் விளக்கத்தை  இத்துடன் இணைத்துள்ளேன். 

http://ksradhakrishnan.in/தலைவர்-கலைஞரும்-கச்சத்தீ/ 

 மேலும் மலையக தமிழர்கள் குறித்தும் பேசியிருக்கின்றார். வரலாற்றை நாளுக்கு நாள் வளைத்துக் காட்டவோ, திரித்து பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. நாளைய ஆய்வுக்கு பயண்படும் வகையில் வரலாற்றை திரிப்பின்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 
சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம். ஒப்பந்தம் குறித்த எனது கட்டுரை இத்துடன் இணைக்கின்றேன்.  வாசித்துக் கொள்ளட்டும். 

https://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2015/02/blog-post_3.html?m=1 

மீண்டும் மீண்டும் சொல்வது என்னவெனில் விதண்டாவாதம் பேச வேண்டும் என்றோ, பத்திரிக்கை வெளிச்சத்திற்கு விரும்பியோ இதனை பதிவு செய்யவில்லை மாறாக தெளிவு பிறக்கட்டும் என்றே பதில் எழுதியுள்ளேன்..

தமிழிசை  தானும் கல்லூரி காலத்தில் போராட்டம் செய்தேன் என கூறியிருக்கின்றார். திரப்படம் ஒன்றில் நானும் ரவுடிதான், ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் என்பது போல பேசாமல்  எந்த போராட்டம் எந்த சிறையில் இருந்தால் என்றால் அதற்கு வாழ்த்து சொல்லவும் பாராட்டவும் கடமைப்பட்டிருக்கின்றேன். காரணம் நாங்களும் போராட்டகளத்திலும் சிறை வாசலிலும் நின்றவர்கள். 

#கலைஞரும்_கச்சத்தீவும்
#சிரிசேனா_சாஸ்திரிஒப்பந்தம் 
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 
22-09-2019

மனிதர்கள் முக்கியம்....

மனிதர்கள் முக்கியம். நல்ல மனிதர்கள் முக்கியம். பொருட்கள் எங்கும் உண்டு. மனிதர்கள் கிடைப்பது தான் சிரமம். நல்ல மனிதர்கள் அண்மை முக்கியம் 

அழுகை என்பது ஒரு சிறிய விடுதலை வடிகால் வடிந்த பிறகு மனசு லேசாகும். வாஸ்தவம். மனசு லேசான பிறகு விரக்தி தான் எஞ்சும். 
நம் கையில் என்ன இருக்கிறது ? எல்லாம் கடவுள் செயல் என்று அயர்ந்து போகும் நடவடிக்கைகளில் முனைப்பு போகும். தீவிரம் அழியும்.

யுத்தம் தீர்மானித்தவர்கள் அழுவதில்லை. போர்க்களம் வந்துவிட்டவர்கள் புலம்புவதில்லை. துக்கத்தை அழுகையாய் மாற்றிக் கரைப்பதை விட உறைய வைத்து நெஞ்சில் நிறுத்திக் கொள்வது உத்தமம்.

 உலகத்தோடு ஆடு . திரும்பத்திரும்ப திரும்ப உள்ளே கிட. எப்போதோ ஏதோ ஒன்று ஜெயிக்கும். நீயோ அல்லது உலகியலோ. எப்போது எது ஜெயிக்கும். பிரம்ம ரகசியம். கர்மா.இதனால்தான் பலனை எதிர்பார்க்காதே என்றார்கள்

- பாலகுமாரன்மன்

தோள் கொடுக்க தோழனும் ,
தோள் சாய தோழியும் 
கிடைத்தால்
வரமே..!
மகிழ்வுகளில் மிதந்திருக்கிறேன்...  நேசங்களால் நிறைந்திருக்கிறேன்... வலிகளில் வாடியிருக்கிறேன்..., வேதனைகளில் விம்மியிருக்கிறேன்...  பிரியமெனும் பெயரால்  ஏமாற்றப்பட்டிருக்கிறேன்...
குற்றமற்றும் பழிச்சொல் சுமந்திருக்கிறேன்... 
மன உறுதியுடன் நின்றேன்...
துணிவுடன் நின்றேன்....
குறிக்கோளுடன் நின்றேன்...
தவறு செய்ய வில்லை என்ற தலைக்கேறிய
திமிருடனும் இருந்தேன்...
வழியும் கண்ணீரை மறைத்து சிரிக்கப் பழகினேன்.. 
வேடம் கட்டியவர்களை
விலக்கி நடந்தேன்...
பாசம் காட்டியவர்களை  அணைத்தேன்... 
எனக்கென ஓர் உலகமும்  அமைத்தேன்... 
என்னை முதுகில் குத்தியவர்களுக்கும் நிறைய....

நிறைவாக அத்தனையையும்  அனுபவித்து விட்டேன்...
வயதுக்கு மீறிய பாரங்கள் சுமந்த காயங்களின் தழும்புகள் மறைய மறுக்கிறது...
ஆனால் இப்போதும் சிரித்துக் கொண்டிருக்க மறப்பதில்லை... 
ஏனோ சற்று அலுப்பும் தட்டுகிறது...


Thursday, September 20, 2018

தமிழிசை வரலாறு அறிந்து வாய் திறக்க வேண்டும். கழகச் செய்தித் தொடர்புச் செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அறிக்கை

தமிழிசை வரலாறு அறிந்து வாய் திறக்க வேண்டும்.

கழகச் செய்தித் தொடர்புச் செயலாளர்

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அறிக்கை


தமிழ்நாடு பாஜக தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள்  தான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்று அறியாமல் தன்னை ஒரு தலைவராக கருதிக் கொண்டு அரசியல் பேசி வருகின்றார். வரலாறும் தெரிவதில்லை  - வார்த்தையை விடுவதற்கு முன் அதற்கான தரவுகளை ஆராய்வதும் இல்லை. தனது இருப்பைக் காட்டிக் கொள்ள வெறுப்பை உமிழ்ந்து முகத்தில் கரியை பூசிக் கொள்வதை பொழுதுபோக்காக கொண்டிருக்கின்றார்.
முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது இலங்கைக்கு காங்கிரஸ் கூட்டணி உதவியதாகவும் அதற்கு கழகம் துணை போனதாகவும் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இலங்கையில் நடந்த இறுதிப் போரின்போது தலைவர் கலைஞர் எப்படி வேதனைப்பட்டார் என்பதை அவருடன் இருந்தவர்களும் தலைவர் கலைஞரை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். 
தமிழிசை அவர்களே!  ஈழம் என்ற சொல்லோ, அதன் வரலாறோ 2009ஆம் ஆண்டில் இருந்து துவங்கியதில்லை. நீங்கள் பிறப்பதற்கு முன்பே தலைவர் கலைஞர் அவர்கள் ஈழமக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.  தி.மு.கழகம் துவக்கப்பட்ட காலக்கட்டத்தில், அறிஞர் அண்ணா அவர்கள் பொதுச்செயலாளராக தலைமை தாங்கி  சிதம்பரத்தில் நடந்த பொதுக்குழுவில் ஈழத்தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண,  நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தை முன்மொழிந்தவர் கலைஞர் அவர்கள்.
அதன்பின்னர், தூத்துக்குடியில் நடந்த பொதுக்குழுவில், ஈழத்தமிழர் பிரச்சனையை ஐநா மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள் தான். இதனை எல்லாம் இதற்கு முன் நீங்கள் வாசித்திருக்க வாய்ப்புகள் கிடைத்திருக்காது. அதுதான் உங்களின் ஈழப்பாசம். தேவைப்பட்டால் தங்களின் தகப்பனார் இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன் அவர்களை தொடர்புகொண்டு அறிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். தமிழக வரலாற்றையும்,  கலைஞர் அவர்கள் இலங்கை தமிழர்கள் மீது கொண்டிருந்த அக்கறையையும் அவர் நன்கு அறிவார். 
அதன் பின்னர் ஈழத்தமிழர்களுக்காக அவர் நடத்திய போராட்டங்கள், எழுதிய கடிதங்கள், அறிக்கைகள் எண்ணிலடங்காது.  1983-1984 காலக்கட்டத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டிக்கும் வகையில் தலைவர் கலைஞர் அவர்களும், கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர் என்பதாவது தமிழிசை அவர்கள் அறிவாரா? என்றால் அதற்கும் வாய்ப்பில்லை.
எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் விடுதலைப்  புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஒயர்லஸ் ரேடியோவை  (வாக்கி டாக்கி) உளவுத்துறை உயர் அதிகாரி  மோகன்தாசை விட்டு  பிடுங்கி வைத்ததும்,  பிரபாகரனின் சகாக்களில் ஒருவரான கிட்டுவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததும் அதிமுக அரசு தானே.  ஈழத் தமிழருக்காக அந்தக் காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர் அரசைக் கண்டித்து பல போராட்டங்களில் செய்து கைதானது தலைவரும் திமுகவினரும்தான்.
1989ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களுக்கு கடிதம் எழுதியதின் விளைவாக, தலைவர் கலைஞர் அவர்களை ராஜிவ்காந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் பாலசிங்கம் போன்றவர்களை அழைத்து துறைமுகம் விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தியதை அறிந்தவரா இந்த தமிழிசை சௌந்தரராஜன்?  அல்லது 1991ஆம் ஆண்டில் இந்த ஆட்சி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. போராளிகளை தமிழகத்தில் ஊடுருவ செய்துவிட்டது. இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என  மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசியது தெரியுமா?
பிரபாகரனை கொண்டு வந்து தூக்கில் போட வேண்டும் என்றவருக்கு ஈழத்தாய் பட்டம் கொடுத்த மண்தானே இது. இரண்டு முறை திமுக ஈழத்தமிழர் பிரச்சனைக்காக இழந்தது. உணர்வுப்பூர்வமாக ஈழத்தமிழர் பிரச்சனைக்கு திமுக தான் தீக்குளித்தது அதிகமான துயரமான கொடூர ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகள். இவற்றை எல்லாம் வரலாறு மறக்கலாம். என்போன்ற ஈழ ஆர்வலர்கள் அக்கறை கொண்டவர்கள் மறந்து விட மாட்டோம்.
2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போருக்கு பின்னரும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், எஞ்சியிருக்கும் தமிழர்கள் நலனுக்காக சென்னையில் ஆகஸ்ட் 12ஆம் தேதியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களையும் - ஈழ ஆர்வலர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் - தேசிய தலைவர்களை அழைத்து காலையில் கருத்தரங்கும் - மாலையில் டெசோ மாநாடும் நடத்தி தீர்மானங்களை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
அன்றைய காலக்கட்டத்தில் ஈழம் என்ற சொல்லைக் கூட பயன்படுத்த தடை உத்தரவு போடப்பட்டது. அந்த தடை உத்தரவை நீதிமன்றம் சென்று உடைத்ததின் விளைவாக தானே இன்றும் ஈழம் என்ற சொல்லை இவர்களால் பயன்படுத்த முடிகின்றது.
சென்னையில் 12-8-2012 அன்று நடைபெற்ற டெசோ மாநாட்டில்
14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:-
*    ராஜபக்சே நடத்திய கொடூர இன அழிப்பை  ஐ.நா. அவையின் மனித உரிமைக்குழுவின் சார்பில் சர்வதேச நம்பகமான, சுதந்திரமான விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு, இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பும் போர்க்குற்றங்களும் கண்டறியப்பட்டு, போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்திய அரசே இதனை செய்ய வேண்டும்
*    ஈழப்பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தும் முயற்சியை இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கை அரசின் இத்தகைய கொடுஞ் செயல்களை உலக நாடுகளின் பிரதிநிதியாக விளங்கும் ஐ.நா. மன்றம் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.
*    இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
*    தமிழீழ பகுதிகளில் இருந்து உடனடியாக ராணுவத்தை சிங்கள அரசு விலக்கி கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் அவையும், உலக நாடுகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ராணுவத்தை திரும்பப் பெறுவதை நேரடியாக கண்காணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் அவை ஒரு பன்னாட்டு குழுவை ஏற்படுத்த வேண்டும்.
*    இலங்கையில் இருந்து வெளியேறி, பல்வேறு நாடுகளில் அகதிகளாக அல்லலுறும் தமிழர்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சொந்த நாட்டை விட்டு வெளியேறியதால் பிறநாடுகளில் கைதிகளாக சிறையில் வாடும் ஈழத்தமிழர்களை உடனடியாக, ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான ஆணையரிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் மேற்கொள்ள வேண்டும்.

*    உலககெங்கும் உள்ள இலங்கை தமிழர்களிடம், அவர்களுடைய எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
*    இலங்கை தமிழர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பயிற்சி கொடுப்பதை இந்த மாநாடு ஏற்க இயலாது என்பதோடு, இனி அப்படிப்பட்ட பயிற்சிகள் அளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
*    இலங்கையில் கைது செய்யப்பட்டவர்கள் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
*    காணமல் போனவர்களை கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
*    ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாப்புக்காக தாய்த் தமிழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டினை சட்டவிரோதமானது என்றும், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இலங்கையில் இருந்து செல்பவர்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்றும் இலங்கை அரசின் சார்பில் மிரட்டலாக அறிவித்துள்ளனர். இலங்கை அரசின் இந்த ஜனநாயக எதிர்ப்பு தன்மையை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது
என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழிசை அவர்களே! உங்களுக்கு தேவைப்பட்டால் "கலைஞரும் ஈழத்தமிழரும்" என்ற வரலாற்று ஆவணத்தை அனுப்பி வைக்கின்றேன்.  
மேற்காணும் தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைதானார்.
மத்திய அரசில் இருந்த போதும்  அங்கம் வகிக்காத போதும் ஈழத்தமிழர் நலனுக்காக திராவிட முன்னேற்ற கழகம்  போராட தயங்கியதில்லை என்பதை சொல்லிக் கொள்ள கடமைப் பட்டிருக்கின்றேன். 
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது தலைவர் கலைஞர் அவர்கள் குடும்பத்தினருக்குகூட சொல்லாமல் அண்ணா நினைவிடம் சென்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றவர்களும், மத்திய அரசும் போர் நிறுத்தப்பட்டது, இனி அத்தகைய நிலை தொடராது என்று உறுதி அளித்த பின்னர் மதிய வேளையில் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.  வீணர்கள் விமர்சனம் செய்யலாம், அக்கறை கொண்டவர்கள் அதனை புரிந்துக் கொண்டால் போதுமானது. 
திமுகவும்  - அதன் தலைவர்களும், கழகத்தின்  உயிர் நாடியான கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான உடன்பிறப்புகள் செய்த தியாகத்தை விட வேறுயாராவது செய்திருக்க முடியுமா? 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நடந்த 1991 காலக்கட்டத்தில் தான் ஜெயலலிதா அம்மையார்  "விடுதலைப்புலிகளின் இயக்கம் பயங்கரவாத இயக்கம், அது மனித நேயத்திற்கு எதிரானது, அதற்கு துணைபோகும் திமுகவும் அழிக்கப்பட வேண்டும்" என அறிக்கை அளித்தார். அத்தோடு, விடுதலைப் புலிகளின் தலைவர் கொடூரவாதி பிரபாகரனை கைது செய்து, தூக்கிலிட வேண்டும். என்று பலமுறை சட்டமன்றத்தில் பேசியுள்ளதோடு, தீர்மானமும் நிறைவேறியுள்ளார் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதும் 2010- 2011 காலக்கட்டத்தில் திமுகவின் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் இந்திய நாடாளுமன்றத்தின் போராட்டம் செய்தார்கள். இதனை தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பிஜேபி வட்டாரங்களில் கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும். அதேசமயத்தில் தேசிய தலைவர்களை அழைத்து டெல்லியில் டெசோ ஆலோசனைக் கூட்டம் டெல்லி காண்ஸ்டியுஷன் க்ளப்பில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் டி.ஆர்.பாலு அவர்கள் நடத்தி டெசோ தீர்மானங்களை இந்திய நாடாளுமன்றம் ஐநா மன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது.
டெசோ மாநாட்டு தீர்மானங்களை காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி நீதிவிசாரனை வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது திமுக.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் குழு அமைத்து, உலக நாடுகளின் கவனத்தை  ஈர்க்கும் வகையில்  நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபைக்கே நேரில் சென்று, ஐ.நா.மன்றத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கையெழுத்திட்ட மனுவினை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், டி.ஆர்.பாலு அவர்களும் வழங்கினார்கள். இதேபோன்ற மற்றொரு மனுவினை ஜெனிவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் துணை ஆணையர் நவநீதம் பிள்ளையிடமும் வழங்கினார். 
அவ்வமயம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.   
டெசோ தீர்மானங்களையும், திமுகவின் பொதுக்குழு தீர்மானங்களையும் ஐ.நா மன்றம் அதன் ஆண்டறிக்கையில் வெளியிட்டது. எந்த ஒரு இயக்கத்திற்கும் ஐநா  இத்தகைய முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை.  அந்த அறிக்கைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 
கரைபடிந்த ராஜபக்ஷேவின் கரங்களை அங்கு சென்று  முகர்ந்தாரே மோடி? அதே ராஜபக்ஷேயையும் அவர் மகனையும் கடந்த வாரம் டெல்லிக்கு வந்தபோது அகமகிழ்ந்து வரவேற்றாரே? அதைப்பற்றி ஈழத்தமிழர் நலன் மீது அக்கறை கொண்ட தமிழிசை வாய் மலர்ந்ததுண்டா?  
வழிநெடுகிலும் வரலாறுகள் குவிந்துள்ளன.  முள்ளி வாய்க்கால் தடயங்களைப் போலவே எங்களின் மனதில் ஆறாக கவலைகள் உண்டென்றால் அது ஈழத்தமிழர்கள் குறித்த கவலை தான். இனியாவது தமிழிசை வரலாறு அறிந்து வாய் திறக்க வேண்டும்.
வரலாறு தெரியாமல் புதிய வரலாற்றை  கழகத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அளிக்க உள்ளது ஆளும் அடிமை அரசு. அதாவது எதிர்க்கட்சிக்கு எதிராக ஆளும் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது வேடிக்கையானது.

"அண்ணா அறிவாலயம்"                                   கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
சென்னை -18.                                              செய்தி தொடர்பு செயலாளர்,
நாள் : 20-9-2018.                                                        தி.மு.க.










#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...