Tuesday, March 31, 2020

#Tamil_leader_Samuel_James #Veluppillai_Chelvanayakam_of #Sri_Lanka ;

#Tamil_leader_Samuel_James #Veluppillai_Chelvanayakam_of 
#Sri_Lanka ;
————————————————
"நடுங்கிய குரல்..
நடுங்கிய தோற்றம்..
ஆனாலும் 
நடுங்காத கொள்கை!
அவர் 
தமிழீழத்தின்மண்டியிடா



மூத்த தலைவர்
---
'தந்தை செல்வா'"

மார்ச் 31, 2020- - இன்று தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் 123வது பிறந்த நாள்.

இலங்கை தீவில் தமிழர்கள் இனியும் சிறிலங்கா அரசோடு இணக்க அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்து அறவழியில் போராடிய நிலையில் தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத வெறியை சிறிலங்கா அரசு தமிழர்கள் மேல் கக்குவதை கண்டு வருந்தி தமிழ் மக்களை காக்க இதற்கு மேல் என்ன வழி என உணராதவாக "தமிழரை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!" என்ற வேதனையை தனது சிந்தனை விதைப்பாக விதைத்து சென்றவர் தந்தை செல்வா.

அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக 2 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கைத் தமிழரின் அரசியல் தலைவராக இருந்தவர்.

1898 மார்ச் 31 இல் மலேசியாவின் ஈப்போ நகரில் ஜேம்சு விசுவநாதன் வேலுப்பிள்ளை, ஹரியட் அன்னம்மா ஆகியோருக்கு முதலாவது மகனாக செல்வநாயகம் பிறந்தார்.

யாழ்ப்பாணம் தொல்புரம் என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியரான செல்வநாயகத்தின் தந்தை மலேசியாவுக்குக் குடிபெயர்ந்து வர்த்தகரான பின்னர் இவரது குடும்பம் தைப்பிங் நகருக்கு இடம்பெயர்ந்தது.

செல்வநாயகத்தின் சகோதரர்கள் ஏர்னெஸ்ட் வேலுப்பிள்ளை பொன்னுத்துரை (பி. 1901), எட்வர்ட் ராஜசுந்தரம் (பி. 1902). தங்கை அற்புதம் இசபெல் இளம் வயதிலேயே இறந்து விட்டார். செல்வநாயகம் 4 வயதாக இருக்கும் போது, தாய், சகோதரர்களுடன் இலங்கை திரும்பினார்.

செல்வநாயகம் குடும்பத்துடன் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில் வாழ்ந்து வந்தார். செல்வநாயகம் தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு சென்று புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார்.

இவருடன் இக்கல்லூரியில் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பின்னாளைய பிரதமர் சாலமன் பண்டாரநாயக்கா ஆவார்.

செல்வநாயகம் இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகப் படித்து தனது 19வது அகவையில் அறிவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார்.

பட்டப்படிப்பு முடிந்தவுடன் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியத் தொழிலில் இணைந்தார்.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரர் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டபோது அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் ஆசிரியப் பதவியில் இருந்து விலகி பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியில் ஆசிரியரானார்.

ஆசிரியப் பணியில் இருந்த போதே இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று 1923 இல் சட்ட அறிஞராக வெளியேறினார்.

1927 இல் எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சுசிலி என்ற மகளும், செ. சந்திரகாசன், வசீகரன் என இரு மகன்களும் உள்ளனர்.

உவெசுலி கல்லூரியில் பணியாற்றும் போது அவர் தமிழ்த் தேசிய உடையை அணிகிறார் எனக் குற்றம் சாட்டி அவரை ஆசிரியர் பதவியில் இருந்து விலக்கினர்.

செல்வநாயகம் பின்னர் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார்.

ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின்கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.

இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 50 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்ற இவர் காங்கேசன்துறை நாடாளுமன்றத் தொகுதியில் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தார்.

தமிழ் மக்களின் தொடர் இன்னல்கள் கண்டு மனம் மிகவும் வருந்தியவர் அதற்காக குரல் கொடுத்தும் வந்தார்.

நோயுற்று முதுமையுற்று தனது இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்த தந்தை செல்வா இனி யார் வருவாரோ தமிழ் மக்களை காக்க என்று வலி சுமந்த ஏக்கத்தோடேயே ஏப்ரல் 26, 1977 அன்று மண்ணை விட்டு மறைந்தார்.

அவரின் ஏக்கத்தை போக்கும் வகையில் அகிம்சை வழியில் போராடிய ஈழத்து தமிழ் சமூகம் ஆயுத போராட்டத்தை கையில் எடுத்து அடிக்க வந்த எதிரியை திருப்பி அடித்து எம் மண்ணை விட்டு ஓட விட்ட வரலாறு பின்னாளில் உருவானதும் அதையும் சர்வதேசத்தின் துணையோடும் நசுக்கி ஒடுக்கியது பேரினவாத அரசு என்பதும் அதையும் மீறி மக்கள் போராட்டம் இன்று நீதி வேண்டி நிலத்திலும் புலத்திலும் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் தொடர்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

“வரலாற்றில் வழி காட்டும் தலைவர்கள் மண்ணை விட்டு செல்வதில்லை. மண்ணில் உள்ளவர்களுக்கு வழி காட்டிகளாக வரலாற்றில் நிலைக்கின்றார்கள்!” என்பதற்கு தந்தை செல்வா ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றார்.

உலகத்தை_உலுக்கிய_நோய்கள், #பதட்டங்கள். #கரானா

#உலகத்தை_உலுக்கிய_நோய்கள், #பதட்டங்கள்.   #கரானா
———————————————
ஆறாம் நூற்றாண்டு காலத்தில் ஐரோப்பா கண்டத்தில் பரவிய பிளேக் நோயினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது மனிதகுலமே நொறுங்கி விட்டது. காண்ஸ்டாண்ட் நோபிளிலிருந்து ஆட்சி செய்த ரோம அரசன் பைசாண்டியன் பேரரசை சேர்ந்த ஜஸ்டினியன் ஆட்சிக் காலத்தில் இந்த கொடிய நோய் பரவியது. கிட்டத்தட்ட 50 மில்லியன் மக்கள் இதற்கு பலியானார்கள். இதை ‘ஜஸ்டினியன் பிளேக்’என்று கூட அழைப்பதுண்டு. 

பின்னாளில் 14ஆம் நூற்றாண்டில் ‘பிளேக் டெத்’என்ற பரவல் நோயால் அம்பது மில்லியனுக்கு அதிகமான மக்கள் இறந்தனர். மூன்றாவதாக ‘தி கிரேட் லண்டன் பிளேக்’1664ல் பரவி லண்டன் முழுவதும் மிகவும் பாதிப்புக்குள்ளானது. 




மலேரியா, காலரா, பிளேக் போன்ற நோய்களால் இந்தியாவில் பம்பாயில் மட்டும் ஒன்றரை லட்சம் மக்களுக்கு மேல் மாண்டனர். இவை நடந்தது 1896 காலக்கட்டங்களில். இறுதியாக 1994ல் சூரத்தில் ‘எலி நோய்’என்று 56 பேர் இறந்தனர். இப்படி இந்தியாவில் வங்கத்திலும்,உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இந்த நோய் தாக்குதல் இருந்தது. இப்படி ஒரு நோய் ஒரு பக்கம் தாக்குதல் நடத்தியது. 




வகட்சியின் காரணமாக ‘தாது வருச பஞ்சம்’மக்களை வாட்டி பலர் பட்டினியில் இறந்ததெல்லாம் உண்டு. 

இரண்டாம் உலகப் போரின் போது நோய் தாக்குதல் இல்லையென்றாலும் போருக்குப் பயந்து மக்கள் வீட்டில் முடங்கியிருந்தனர். அன்றாட உணவுக்குக் கூட தத்தளித்ததுண்டு. இப்படியான துயரமான வரலாற்றுச் செய்திகள் இன்றைக்காவது தகவல் தொழிக் நுட்பத்தால் கரானா வைரஸ் குறித்தான  செய்திகளும்  நம்மைப் பாதுகாத்துக்கொள்ளஆலோசனைகளும் பெறவும் விழிப்புணர்வும் ஏற்படுகிறது. அன்றைய காலத்தில் இந்த  வசதி
யெல்லாம் கிடையாது.  வானொலியும் செய்தித்தாள்களும் இருந்தாலும் அது அனைத்து தரப்பினருக்கும் எட்டுவதில்லை.

கடந்த 1979ம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவின் ஸ்கை லேப் (SKylab) காலம் முடிந்து பூமியில் தெறித்து விழப் போகிறது என்றும் அதுவும் குறிப்பாக தென் இந்தியாவில் விழுந்து விடும் என்றும் செய்திகள் வர மக்கள் அச்சத்தில்  தவித்தனர். தமிழகமெங்கும் ஒரே பேச்சு. அன்று இரவு 2 மணிக்கு கோளில் மோதி கீழே விழும் என்றவுடன் தெருவில் அன்றைக்கு இரவெல்லாம் நடமாட்டம் இல்லை. அப்போது தொலைக்காட்சி சென்னை நகரில் மட்டும் தான் இருந்தது,  மற்ற ஊர்களில் செய்தித்தாள்களும் வானொலி மட்டும்தான் இருந்தன.  இதில் வேடிக்கை என்னவென்றால் அன்றைக்கு இரவு மதுரையில் இருந்தேன் சட்டமன்ற காங்கிரஸ் முன்னாள்  உறுப்பினர் வழக்கறிஞர் நன்பர் ஶ்ரீவில்லிபுத்தூர் எ.ராஜகோபாலும் நானும் மதுரை ரீகல் தியேட்டரில் படம் பார்க்கச் சென்ற பொழுது,டவுன் ஹால் ரோட்டின் எதிரில் இரவு உணவுக் கடைகளில் காசில்லாமல் உணவை கொடுத்தது கண்ணில் பட்டது. “ஸ்கைலேப் விழுந்தா நம்ம என்ன காச எடுத்துட்டா போகப் போறோம். சாப்புடுப்பா” என்றார் அந்த சிறிய உணவு விடுதிக்காரர் சொன்னார். அதுபோல ரீகல் தியேட்டரிலும் “படம் பாருப்பா நான் டிக்கெட்  வாங்கித்தரேன். இன்னைக்கு இருப்போம் நாளைக்கு இருப்போமா தெரியாது” என்பது போன்ற குரல்கள் கேட்டன. 

கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் முடியப் போகின்றன.  இந்த ஸ்கை லேப் 280 மைல் வேகத்தில் தாக்கலாம் அதுவும் எங்கே  தரையில் விழப் போகிறது  என்பதை உடனே  சொல்ல முடியாது  என்று விஞ்ஞானிகள் தெரிவித்தது ஒரு மாத காலம் பீதியும் பேச்சும் இருந்தது. தமிழகத்தில் அப்போது  எம் ஜி ஆர் ஆட்சி. காவல்துறையும், மருத்துவ
மனைகளும் தயார் நிலையில் இருந்தன. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.கிருஷ்ணசாமி  ஸ்கைலேப் பிரச்சினையை கண்காணிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். பின்ன நாட்களில் ஏற்பட்ட சுனாமி என சில உண்டு.

இப்படியெல்லாம் கடந்து வந்துள்ளோம். ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொரு பதட்டமும்  பீதியையும்  ஏற்படுத்டும் சிக்கல்கள் வந்துக். கொண்டு
தானிருக்கின்றன.அதையும்கடக்கிறோம் 
தன்னம்பிக்கையும் பொறுப்புணர்வும் தான் இந்த  இயற்கை  பேரிடர்களை சமாளிக்க முடியும். கரானா வைரசால் தன்னம்பிக்கையோடு தனித்திருப்போம் , தள்ளியிருப்போம்.  இது நமக்கான சோதனை   மட்டுமல்ல  மனித இனத்திற்கே சவால் என்ற புரிதல் இருந்தால் போதும். பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் மடிந்தோம் என்று எதிர்வினையில்லாமல் ஏதோ நம்மால்  முடிந்தது  கடப்பாடோடு செல்வோம் என்ற முறைப்படுத்தினால் போட்டிகள் பொறாமைகள் இல்லாமல் இருந்தால் நல்லது என்பதற்காக இயற்கை  தருகின்ற  பால பாடம் என்பதை உணர வேண்டும். இயற்கையை யாரும்   மிஞ்ச முடியாது.  தனிமனித உரிமைகள்  அவசியம்.  அந்த எல்லையைத் தாண்டி  சென்றால் விளைவுகள் விபரீதமாகும் என்ற புரிதல் எல்லாருக்கும் வேண்டும். இயற்கையை காப்போம், நம்மையும் காப்போம்.

புரிதலுக்கு;
" மாற்றார் உங்களால் இனி எதுவும் முடியாது என எளிதாக நினைக்கும்போது எழுந்து நின்று வென்றுகாட்டுவதே வலிமை... இலக்கிலிருந்து கண்களை அகற்றினால், தடைகள் மட்டுமே தென்படும்.  அடையும்வரை மாறாத நோக்கும் போக்கும்"

#கரானா

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
31.03.2020
#ksrposts

Monday, March 30, 2020

*Strange_fact.* *Virus *

*Strange_fact.* *Virus *
—————————-
Despite many periods of plague during Shakespearean times, "no one in Shakespeare’s plays dies of the plague. Romeo and Juliet, who die because the friar’s letter is held up by quarantine measures in northern Italy, are the nearest anyone comes to plague fatalities." 

-*Emma Smith, *Shakespeare professor, Oxford ‘versify*

கரானா #சில_எதார்த்தங்களை_புரிந்து #தெளிவாகினால்_நல்லது.

#கரானா

#சில_எதார்த்தங்களை_புரிந்து #தெளிவாகினால்_நல்லது. 
————————————————-

பயங்களையும் கவலைகளையும் ஒரு வைரஸும் தொற்றி விடாது.....
-Tk Kalapria

கரானா வைரஸ் சூழலில் மூன்று வாரம் தனிமைபடுத்துதல் என்பதோடு நிற்கப் போவதில்லை. மேலும் இது நீடிக்கலாம். இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு அதன் பின்பும் இதனுடைய தாக்கம் after effect இருக்கும். இயற்கையின் விதியை யாரும் மீற முடியாது. அதற்கேற்ப எதையும் எதிர்கொள்ள நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த  ஆறு  மாதங்களுக்கான சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய அளவில் அரசுகளும் நாமும் திட்டமிட்டுக் கொள்வது நல்லது. இந்த மூன்று வார காலம் நன்கு சிந்தித்து நம்மை நாமே பாதுகாக்கக் கூடிய அளவில் முன்னேற்பாடுகளை செய்துக் கொள்வது நல்லது. இந்த புதிய வைரஸ் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒழிந்து விடுமா என்பது தெரியவில்லை. அது தொடரக் கூடாது.  இதற்கான திட்டங்களுக்கு அரசுகள் என்ன செய்யப் போகிறதோ தெரியவில்லை. பொருளாதார ரீதியாக மேலும் நெருக்கடிகள் சகல தளங்களிலும் ஏற்படும். இந்தியாவினுடைய வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் 5.3 சதவிகிதம் என்பது 2.6 சதவிகிதமாக குறையலாம். ஆனால் பங்குச் சந்தையின்  ஏற்ற இறக்கத்தை மட்டுமே கவனிக்கின்றோம். அது வெறும் நமது மக்கள் தொகையில் 5 சதவிகிதம் பங்களிப்புதான்.. அதை வைத்துக் கொண்டு எதையும் நிர்ணயிக்க முடியாது. எதிர்கால செலவுக்கு கையில் பணயிருப்பை பாதுகாத்து வைத்துக் கொள்வது முக்கிய கடமையாகும்.




தேவையான  அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் செலவு செய்யுங்கள்.  சிறுதொழில்கள் பாதிக்கப்படலாம். வேலைகள் சில இடங்களில் இல்லாமலும் போகலாம். மத்திய நிதியமைச்சர் 1.7 லட்சம் கோடிகள்நிவாரணமாகஅறிவித்
துள்ளார். அந்தந்த மாநிலங்களும் இது போன்ற அறிவிப்புகளை செய்துள்ளன. ஒரு பக்கம் அரசு இது  போன்ற அறிவிப்புகளை செய்தாலும் நீண்ட காலமாக போராடி இந்த கொடிய நோயிலிருந்து  விடுபட  வேண்டும். பொருளாதாரம், வாழ்க்கை  ஆகிய இரண்டு அடிப்படை கடமைகள் உள்ளன. இது உலகம்  முழுவது நிலவுகின்ற அசாதாரண நிலைதான்.

தனித்திருங்கள் வீட்டிலிருங்கள் என்று சொன்னாலும் நேற்று மதுரையில் நடந்தது என்ன? வட மாநிலங்களில் நடந்தது என்ன? இன்னமும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளில் இருந்து நலம் விசாரிக்கும் போது  அங்குள்ள மக்களும் தனித்திருக்காமல் வெளியே நடமாடுவது வேதனையாக கூறினர். ஸ்பெயின் நாட்டு ராணி இந்த கொடிய நோயினால் மரணமடைந்தார்.  பிரிட்டிஷ் பிரதமருக்கும் இளவரசருக்கும் இந்த நோய் தொற்றிக் கொண்டது. ஜெர்மனி நிதியமைச்சர் தற்கொலை போன்ற கவலையளிக்கக் கூடிய செய்திகள் வந்துக் கொண்டே இருக்கிறது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப் பட்டு விட்டது என்ற செய்தி உண்மைதானா என்பதும் இன்னும் சரியாக தெரியவில்லை. சீனாவில் 2019 இறுதியிலேயே இந்த நோய் பரவியதும் இந்த நோயினுடைய கொடுமையை ஏன் சீனா உலகிற்க்கு வெளிப்படுத்தவில்லை. அப்படி வெளிப்படுத்தியிருந்தால் எச்சரிக்கையாக இருக்கவோ அந்த நோயைத் தடுக்க மருத்துவ வழிகளைச் செய்திருக்கலாம். இந்த கமுக்கமான நிலையில் சீனா இருந்தது நல்லதல்ல. இந்தியாவில் இருந்துக் கூட நிவாரணப் பொருட்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்ட போது இந்தியாவும் விழித்திருக்க வேண்டும்.  சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதன் முதலாக கொரோனா ஆட்கொல்லி குறித்த செய்தி வெளியானாலும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் தான் கரோனா எனும் சொல் ஊடகங்களில் பரவலாக வெளிவரத்
தொடங்கின. பிப்ரவரி 1, 2 தேதிகளில் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த 654 இந்தியர்களை இந்திய அரசு விமானங்கள் மூலம் மீட்டுகொண்டு வந்தது. சீனாவினுடைய இந்த தவறான அணுகுமுறையால் இன்று உலகம்  பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்தியா போன்ற  ஜனநாயக நாட்டில் இதுபோன்றவிஷயங்கள்வெளிச்சத்திற்கு வரும் சீனாவில் வெளிச்சத்திற்கு வராது. 

இரண்டாம் உலகப் போரின் பின்பு இந்த தொற்று  நோய்  போர்  அரசுகள் மட்டுமல்ல மக்களும் சுயநலமற்ற கடமையோடு முன்னெடுத்தால் தான் தீர்வை நாம் எட்ட முடியும். நமக்கான அடிப்படையில் இந்த வைரஸ் அறியும் சோதனையை செய்யக் கூட வசதிகள் இல்லாமல் திண்டாடுவதாக செய்திகள் வருகின்றன.  

வெறும் கோஷங்களும், விவாதங்களும் என்பது இதற்கு தீர்வாகாது. சிந்திப்போம்...
பொறுப்பை உணர்வோம்...
கடமை ஆற்றுவோம்...

நாடு என்ற தேர் இன்றைக்கு சேரில் சிக்கியுள்ளது. ஒட்டு  மொத்த சமுதாயமும்  நிறைகுறைகள் சொல்லாமல்  நம்மை  நாமே பாதுகாக்கின்ற கடமை எனும் தேரினை இழுப்போம். இது ஒரு இருண்ட காலம். ஒளியேற்ற வேண்டும். இனிமேலாவது ஓரளவுக்கு  காசு வாங்காமல் வாக்களித்து  நல்லவர்களை தகுதியானவர்களை அடையாளப் படுத்துங்கள்.  ஓட்டுக்கு வாங்கிய காசினால் இந்த கரானாவை சமாளித்து விடலாமா? இதையெல்லாம் நெஞ்சில் நிறுத்திப் பாருங்கள். 

இன்றைக்கு ஒரே  கடமை உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த கொடிய நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும். அதை செய்யாமல்  ஜனநாயகம் கம்யூனிசம், ரைட்,  லெஃப்ட், செண்டரிஸ்ட் என்று பேசி எந்த பயனும் கிடையாது. ஏனென்றால் தகுதியே தடை என்ற நிலையில்  தகுதியற்ற மக்கள் பிரதி நிதிகள் அவர்களுடைய கடமையை உணர்ந்து பொது தளத்தில் செயல்படுவார்களா?என்று நினைத்துப் பாருங்கள். இதற்கெல்லாம் காரணம் நாம் தான்..... இந்த சமுதாயம் தான்......

what is the reason for this evil?
it is because of our own commission and omission.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
30.03.2020
#ksrposts

My *Vice Chancellor S.V. Chittibabu passed away*




Well-known academician S.V. Chittibabu passed away on Sunday at the age of 100. The former Vice Chancellor of Madurai Kamaraj University and Annamalai University had also served as Vice Chairman of the Tamil Nadu State Council for Higher Education. He was formerly Director of Collegiate Education.
.
Mr. Chittibabu headed the State government-constituted commission to prescribe fee structure and minimum infrastructure facilities for private schools following the death of 96 children in a school fire in Kumbakonam in 2004.
.
Mr. Chittibabu is also founder of the Tamil Nadu History Congress.

#ksrpost
30-3-2020.

#கடந்த1970_வரை_திருமணங்கள் #சொந்த_வீடுகளில்_மகிச்சியாக #நடந்தது.#பகட்டு_பெருமைக்கு #மண்டபம்_தேடியது_கரோனா_அதை #உடைத்து....

#கடந்த1970_வரை_திருமணங்கள் #சொந்த_வீடுகளில்_மகிச்சியாக #நடந்தது.#பகட்டு_பெருமைக்கு #மண்டபம்_தேடியது_கரோனா_அதை #உடைத்து....
————————————————-
திருமணங்கள் திரும்பவும் வீடுகளில் வைரஸ் நோயினால் நடத்துகின்றனர். எனக்கு அறிந்த வரை 1978 -79 வரை வீடுகளிலேயே திருமணங்கள் நடந்தன. எங்கள் பகுதி கிராமங்களில் மணமேடை என்பது நிரந்தரமாக முற்றத்தில் 7க்கு 6 அளவில் கட்டப்பட்டு 2 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும். நான்கு புறமும் சிகப்பும்  வெள்ளையுமாக கோடுகள் அடிக்கப்பட்டிருக்கும். அதை அழகுப்படுத்தி மேடையில் திருமணம் நடத்துவார்கள். பெரிய நீண்ட பந்தல் என இரண்டு நாட்கள் இந்த திருமணத்திற்கான நிகழ்வுகள்,
வேலைகள் நடத்துவார்கள். சமையலுக்கு தவசிப் பிள்ளை என்பவர் கிடைப்பது அரிதாக இருக்கும். கோவில்பட்டி, சங்கரன்கோவில், சிவகாசி,இராஜபாளையம் போன்ற நகரில்  இவர்களுக்காக அலைய வேண்டும். இதே போல் சமையல் பாத்திரங்களுக்கும் முகூர்த்த காலத்தில் மெனக்கெட வேண்டும். அரிசி, பருப்பு போன்றவை வீட்டிலேயே இருப்பதால் பிரச்சினை இல்லை. அதிகமான காய்கறி என்றால் கோவில்பட்டியில் இருந்து தான் வாங்கிவர வேண்டும். விடிய விடிய காய்கறிகளை நறுக்கிக் கொண்டு சமையல் வேலைகள்  நடந்துக் கொண்டேயிருக்கும். வெளியூரிலிருந்து வரும் உறவினர்கள் குவிந்து விடுவார்கள். அவர்கள் கிராமத்தில் உள்ள மோட்டார் பம்புகளை திறந்துவிட்டு குளிப்பது வாடிக்கை. ஒவ்வொரு பம்பு செட்டிலும் கோபால் பல்பொடி பொட்டலங்களும் மைசூர் சாண்டல் சோப்புகளும் தயாராக இருக்கும். ஒரு பாட்டிலில் எண்ணெயும் ஊற்றி வைத்து விடுவார்கள். முன்பு என் தந்தையார் காலத்தில் இரண்டு வாரம் திருமண நிகழ்ச்சிகள் நடந்தது 

குளிக்க சாப்பிட,சீட்டு விளையாட என நேரம் போய்க் கொண்டிருக்கும். பெண்கள் குளிப்பதற்கு தயாராக மறைவுகள் கட்டப்பட்டிருக்கும். அது ஒரு பக்கத்தில் நடந்துக் கொண்டிருக்கும். இப்படியெல்லாம் என்னுடைய வீட்டில் திருமணம் நடக்கும்போது பார்த்ததுண்டு. அன்றைக்கு உற்றார் உறவினர் நட்புகளிடம் ஆழமான, எதார்த்தமான, பாமரத்தனமான அன்புப்பெருக்கம் இருந்தது.  எப்படியோ அதையெல்லாம் இன்றைக்கும் அசைப் போட்டால் நிலைமை திரும்ப வந்து விடுமா என்ற ஏக்கம் தான் ஏற்படுகிறது.  காலச் சக்கரங்கள் வேகமாக ஓடிவிட்டன. இப்போது திருமணங்கள்மண்டபங்களில் நடக்கிறது. 9 மணி திருமணத்திற்கு 8.30க்கு  நெருங்கிய  உறவினரே வருகின்றார்கள். பத்து  மணிக்கு சாப்பிடாமல் திரும்பி விடுகிறார்கள். இப்படித்தான்  இன்று உறவுகள் இருக்கின்றன. வீடுகளில் நடந்த திருமணத்தில் ஒரு உயிர்ப்பும் ஜீவனும் இருந்தது.  மண்டபங்களில் நடந்த திருமணங்கள் போகிற போக்கில் ஒரு சம்பிரதாயமாக  பகட்டாக ஆடம்பரமாக இருக்கின்றது. திருமணம் என்பது பகட்டில்லாமல் நிறைவாக மகிழ்ச்சியாக உற்றார் உறவினர்கள் அன்பு செலுத்தும் நட்பு வட்டத்தோடு நடந்தால் தான் பொருத்தமாக இருக்கும்.

தி. ஜானகிராமனுடைய நாவல்களில் தஞ்சை வட்டார வீடுகளில் நடக்கும் திருமணத்தைப் பற்றி அற்புதமாக சிலாகிப்பார்.கு. ஆழகிரிசாமியும் கரிசல்
மண்  திருமணங்களை  தனது படைப்புகளில் கூறுவார்

உத்தமர் காந்தி வீட்டு திருமணத்தை இரண்டு நாட்களுக்கு முன் பதிவு செய்தேன். நேருவுக்கும் பட்டேலுக்கும் கூட அழைப்பு இல்லாமல் தன் உறவினர் மத்தியில் சிறப்பாக நிறைவாக காந்தியடிகள் நடத்தினார். 

இன்றைக்கு கரானா வைரஸ் என்ற நிர்பந்த நிலையில் வீடுகளில் திருமணங்கள் நடக்கிறது. பழமை திரும்பினாலும் இது தொடருமா என்பது கேள்விக்குறியும் கூட. இன்றைய சமுதாயம் பகட்டு போலி வெட்டி பந்தாக்கள் எதார்த்த நிலை புரியாமல்  தேவையில்லாமல் வாடிக்கையாகிவிட்டது. அன்றைக்கும் இந்த மாதிரி தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் எனபதை மனதில் கொள்ள வேண்டும். வேறு என்ன சொல்வது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
30.03.2020
#ksrposts

பிரதமர்களும்அவர்களுடைய #வருத்தங்களும்

#பிரதமர்களும்அவர்களுடைய #வருத்தங்களும்
————————————————
இந்திய-சீனா போரில் நேரு சொன்னது,இந்திரா காந்தி அவசர நிலை காலத்தை அறிவித்ததை வருத்தம் தெரிவித்தார். நரசிம்மராவ் புதிய பொருளாதார கொள்கியினை 1992இல் அறிவிக்கும் போது உடல்நலத்திற்கு கசப்பான மருந்தை உட்கொள்வது போன்றது என்று கவலையோடு சொல்கிறேன் என்றார். இன்றைக்கு மோடி வேறு வழியில்லை மன்னித்து விடுங்கள் என்கின்றார். இவற்றையெல்லாம் நாடு கவனித்தது, கவனிக்கிறது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
30.03.2020
#ksrposts

Protagoras_Paradox #Greece

#Protagoras_Paradox #Greece
——————————————
Over 2000 years ago, in Greece, there was a lawyer named Protagoras. A young student, Euthalos,  requested to apprentice under him, but was unable to pay the fees. The student struck a deal saying, “I will pay your fee the day I win my first case in the court”. Teacher agreed. When the training was complete and a few years had elapsed without the student paying up, the teacher decided to sue the student in the court of law. 
The teacher thought to himself: ‘If I win the case, as per the law, the student will have to pay me, as the case is about non-payment of dues. And if lose the case, the student will still have to pay me, because he would have won his first case. Either way I will get paid’.
The student’s view was, ‘If I win the case, I won’t have to pay the teacher, as the case is about my non-payment of fees. And if I lose the case, I don’t have to pay him since I wouldn’t have won my first case yet. Either way I will not pay the teacher.’
This is known as Protagoras Paradox, which ever way you look both have equally convincing arguments, one can go either way in supporting the teacher or the student and would not be wrong.
Those of us in medical practice often come across such situations, either in making a diagnostic or therapeutic decision. One physician can recommend a course of treatment based on scientific evidence and another can recommend a diametrically opposite course again based on medical evidence. Right or wrong, but some merit would exist on both sides. Often the physician himself is having an internal struggle to make a decision about the most appropriate course of action, Protagoras & Euthalos are arguing in his mind, to do this or to do that. The horns of dilemma are tearing him apart.
But what prompted this essay was a tweet by Donald Trump, ‘hope the cure is not worse than the disease’. I hate to say, but I find some merit in this tweet. In our global attempt to flatten the COVID curve, I hope we do not flatten the global economy curve. The question is what’s the best way forward. One group recommends ‘total lockdown’ to break the transmission chain, based on evidence from China, they managed to control the spread of the virus by ruthless lock down and 3 months later they are showing that disease is controlled in Wuhan. On the other hand, the other school of thought is graded isolation & protection of elderly and very young and those with co-morbidities, let it spread amongst the young and healthy, after all the disease ultimately will be controlled when we achieve ‘herd immunity’. The medical community is divided in these two groups. To enforce complete lockdown or Graded isolation?
To complicate the issue the epidemiologists have joined the bandwagon with cacophony of statistical analysis. From Rosy to Dooms day predictions. If we don’t do a complete lockdown then a million people will die in 1 year. No say some more like 90 million will die in 1 year. Whose data analysis is correct.  Some suggest do nothing, nature will take over in a few months and all will be well, they quote historical data to justify their recommendations.  On whose inputs should we base our disaster management strategy.
Then come the economists with their doomsday predictions. If this continues till May our medical resources will be overwhelmed, Agriculture will suffer, food shortages will occur, production will come to a standstill. There will be an economic crisis of the proportions that world has not seen ever. So, break this lockdown nonsense and let’s get back to work as usual.
What will our political masters do. My guess is they will listen to medical experts, epidemiologists & economists. Then they will decide what course of action will ensure their survival, what will get them people’s votes and they will run with that. At present ‘Lockdown” finds favour with them. Boris in UK had to abandon the recommendations of the medical community about graded response, because the people’s perception became that our Government is not doing enough to protect us citizens. That means revolt against him. So, screw it, lets go with total lockdown if that’s what the people want. Gradually people will get tired of lockdown and demand- let life go on. Then with equally convincing arguments the governments will say the time has now come to lift the blockade, we have controlled the contagion, we have won. Unfortunately, the costs in either case will be huge, both lives and money! 
Incidentally the Protagoras Paradox has not be resolved till date. Students in Law school still hold mock trial and give arguments on both sides. With out any resolution of the dispute.


Sunday, March 29, 2020

#Places_in_Old_Delhi_for_BookLover

#Places_in_Old_Delhi_for_BookLover



Delhi (Purani)markets are a dream for every book lover. You get the biggest steals and deals on all kinds of books here!
So, we have picked up two places for you to check out for amazing bargains on books. Let’s take you through them.

1. Dariyaganj

Famous for its Sunday Market where one can see streets dotted with books of all colours and sizes, Daryaganj is a reader’s favourite. You can buy a lot of second-hand books in Delhi for a small amount of money. Rejoice! Parking here might be a problem so take our advice and head here via the comfortable and convenient metro. Do remember, the book market only happens on Sundays and if you come here on a weekday, you might not find any books at all!

2. Nai Sarak

The book market in Nai Sarak is one of the popular book markets in Delhi that connects Chandni Chowk and Chawri Bazaar. The lane is dotted with booksellers selling all sorts of books.

#ksrpost
29-3-2020.

நமக்கு_நாம்தான் என.....

யாராவது கூட இருந்தால் தான் தைரியம் வருமா...... இல்லை.
யாருமே நமக்கு இல்லை என்பதும்   தைரியம்தான்.#நமக்கு_நாம்தான் என.....

#ksrpost
29-3-2020


Literature_and_Life*" -*Phillips_Brooks*

"*Literature_and_Life*" 
-*Phillips_Brooks* ————————————



Life comes before literature, as the material always comes before the work.
The hills are full of marble before the world blooms with statues.
The forests are full of trees before the sea is thick with ships.
So the world abounds in life before men begin to reason and describe
and analyze and sing, and literature is born.

The fact and the action must come first. This is true in every kind
of literature. The mind and its workings are before the metaphysician. 
Beauty and romance antedate the poet.

The nations rise and fall before the historian tells their story.
Nature’s profusion exists before the first scientific book is written. 
Even the facts of mathematics must be true before the first diagram 
is drawn for their demonstration.

*KSR Post*
29-3-2020.

கரானாவுக்கும்_ஹார்வர்டு பல்கலைக்கழத்திற்கு_நிதி*_*வழங்கியராஜீவ்_படுகொலை_சிறைக்கைதி*

*கரானாவுக்கும்_ஹார்வர்டு  பல்கலைக்கழத்திற்கு_நிதி*_*வழங்கியராஜீவ்_படுகொலை_சிறைக்கைதி*
————————————
ராஜீவ்  படுகொலையில் சிறையில் வாடுகின்ற ஏழுவரில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் அருப்புக்கோட்டை  தம்பி ரவிச்சந்திரன், கரோனா நிதிக்காக முதலமைச்சர் நிதிக்கு மதுரை சிறையில் இருந்து சிறைவாச சம்பளத்தொகையில் 5000  அனுப்பியுள்ளார். அதுமட்டுமல்ல அமெரிக்கா ஹார்வர்டு பல்கலை
கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.20000 நிதி  நன்கொடை நிதி அனுப்பினார். இவை யாவும் சிறையில் அவர் பணியாற்றிக் கிடைத்த ஊதியத் தொகையாகும். இவர் தான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமாக அறிமுகமானவர். கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இவருக்கு ஊடக வெளிச்சமே கிடையாது. இது பற்றிய இன்னொரு விடயமும் கவனிக்கப்பட வேண்டும். ராஜீவ் காந்தி கொலையில் அந்த ஏழு பேரின் பெயரைகளையும் முழுமையாக உச்சரிக்கப்படுவதில்லை. அந்த ஏழு பேரினுடைய தியாகம் அளப்பரியது. அப்பாவியான இவர்களை சரியான புலனாய்வு விசாரணை இல்லாமல் இந்த வழக்கில்  தங்கள்  இளமையை தொலைத்து காலத்தை தள்ளுகின்றனர். எனவே எழுவரின் தியாகமும் ஒருவொருக்கொருவர் குறையில்லாது சமமானவை என்பதை ஆரோக்கியமாக புரிதுக் கொண்டால் சரி.




கே. எஸ். இராதாகிருஷ்ணன்
29.03.2020
#ksrposts

#கரானா
#ராஜீவ்_படுகொலை

இலங்கையில்_தமிழரை_சுட்டுக் #கொன்ற_ராணுவ_சர்ஜென்ட்_விடுதலை #உத்தரவுக்கு_ஐநா_கண்டனம்.

#இலங்கையில்_தமிழரை_சுட்டுக்
#கொன்ற_ராணுவ_சர்ஜென்ட்_விடுதலை #உத்தரவுக்கு_ஐநா_கண்டனம்.
•••••
இலங்கையில் அப்பாவி தமிழரை சுட்டுக்
கொன்ற ராணுவ  சர்ஜென்ட் ரத்ன நாயக்
ராஜபக்சே விடுதலை உத்தரவுக்கு ஐநா
கண்டனம்.
பழைய பதிவு:
——————

#இலங்கையில்_விடுதலை.....
#ஆனால்_இந்தியவில்....?———————————————-

This amidst covid19  fight ! Mirusuvil murders suspect released ! He was convicted for the murders by the supreme court .But  here Rajivi case, 7persons arecustody past 29years.

கரோனா வைரஸ் தாக்குதல் பின், தமிழக மத்திய சிறைகள் உள்ள கைதிகைள, பத்தாண்டுகளுக்கும்  மேலாக இருப்பவர்களை விடுவிக்க  உத்தரவை பிறப்பித்தது தமிழக அரசு. வரவேற்ககூடிய ஒன்று. 

ஆனால், ராஜிவ்காந்தி படு கொலை வழக்கில்  7  தண்டனைக் கைதிகளை விடுவிக்க வில்லை.

கடந்த 1994இல்  செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, உள்துறை ஒரு அரசாணையை ( எண்13/58- 10.11.1994) வெளியிட்டது. ‘20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை, அவர்கள் என்னவித குற்றவியல் தண்டனைப் பெற்றவர்களாக இருந்தாலும் விடுவிக்கலாம்’என தமிழக அரசாணை. பிரிவு 166 பின்பற்றி விடுதலை செய்திருக்கலாம்.
ஆனால்,இலங்கையில் ராஜபக்சே அரசு,
சார் ஜென்ட் சுனில் ரத்த நாயக் என்ற (ராணுவ  குற்றவாளி)   தூக்கு தனடணையை கைதி நேற்று சகல மரியாதைகளோடு கரோனா வைரஸ் காரணம் காட்டி விடுதலை செய்துள்ளது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
26.03.2020
#ksrposts


கரோனா

#கரோனா
—————-
கரோனா வைரஸ் Covid-19 புல்லட் டிரெயினைப் , Wi-fi போல வேகமாக பரவி வருகின்ற இத்தருணத்தில் Social Distancing, தனித்திருத்தல் என்ற வார்த்தைகள் இன்றைக்கு பயன்படுத்தப்பட்டு கவனமாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய காலம்.  

கரோனா வைரஸ்,இரண்டாம் கட்டத்துக்கு தமிழகம் நகர்கிறது. கேரளம்,மராட்டியம் நிலை மோசம். டில்லி. ஜார்க்கண்ட, ம.பி  போன்ற மாநிலங்களில்  நிலைமை அச்சுறுத்துகிறது.நாம்  இந்த அலட்சியத்துக்கு நாம் கொடுக்கப்போகும் விலை என்ன? அடுத்து வரும் துயரம் மிக்க நாள்களை எவ்வாறு கடக்கப்போகிறோம்?

ஒவ்வொரு தொற்றுநோய் கிருமிக்கும் முக்கியமாக இரண்டு குணங்கள் உண்டு. முதலாவது தொற்று பரவு விகிதம் எனப்படும் R0 (ஆர் நாட் என உச்சரிப்பார்கள்), கிருமி தொற்று உள்ள ஒருவர் இயல்பாக சராசரியாக எவ்வளவு பேருக்கு இந்தக் கிருமித் தொற்றை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதே தோற்று பரவல் விகிதம். 



நாவல் கரோனா வைரஸ் கிருமி தொற்று உள்ளவரிடமிருந்து வெறும் 6 அடி தொலைவு தான் செல்ல முடியும். எனவேதான் பலர் ஒன்றுகூடி சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், கொரோனா ரஸ் பரவாமல் இருக்க ஒருவருக்கு ஒருவர் இடையிலான இடைவெளி சுமாராக ஒரு மீட்டர் இருக்க வேண்டும் என கூறுகிறார்கள். காற்றில் பரவும் தட்டம்மை 100 மீட்டர் வரை பரவும். இரண்டாவதாக எவ்வளவு நேரம் ஓம்புயிருக்கு வெளியே அந்த வைரஸ் சிதையாமல் செயல்படும் தன்மை கொண்டிருக்கும் என்பது. தட்டம்மை பலமணிநேரம் உயிர்ப்புடன் இருக்கும். ஆனால் கொரோனா வைரஸ் காற்றில் வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே செயலூக்கத்துடன் இருக்கும். எனவே இரண்டு தன்மையையும் சேர்த்து பார்க்கும் போது கொரோனா வைரசை விட தட்டம்மை சதவிகிதம் கூடுதலாக இருக்கும் என கூறத்தேவையில்லை. இது சராசரி என்பதை நினைவில் கொள்க. சிலர் மிக பரப்பர்கள் (சூப்பர் சஸ்பிரெட்டர்கள்) என அழைக்கப்படுகின்றனர். தென்கொரியாவில் மத நிறுவனத்தை சார்ந்த ஒரு தனிப் பெண் மட்டும் 37 பேருக்கு கொரோனா வைரைசை தொற்று செய்துள்ளார்.  சராசரியை விட கூடுதல் மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு உள்ளவர்கள் கூடுதல் நபர்களுக்கு கிருமியை பரப்புவார்கள்.

இதை தொலைக்காட்சியில் இந்தியா முழுவதும் பார்க்கும் பொழுது பல இடங்களில் சற்றும் சிந்திக்காமல் மக்கள் நடமாடுவது நல்லதல்ல. ஆங்கிலத் தொலைக்காட்சியில் பார்த்த பொழுது காவல்துறையினர் மக்களை திரும்பப் போகச் சொல்லித் தாக்குகின்றார்கள்.  அதுபோல காவல் துறையும் இதுபோல வருகின்றவர்களை அன்போடு அழைத்துப் பேசி இது போன்ற நேரங்களில் கவனமாக இருங்கள், உங்கள் நலனுக்காகத் தான் சொல்கின்றோம் என கனிவோடு சொல்லலாம்.  காவல்துறையும் சில இடங்களில் கடுமையாக நடந்துக் கொண்டிருக்கிறது என ஆங்கிலச் செய்திகளில் வடமாநிலங்களில் புலப்பட்டது. 
எப்படியும் தனிமைப் படுத்திக் கொண்டு நம்மை நாமே காத்துக் கொண்டால் தான் இந்த நிலையில் இருந்து விடுபட முடியும். தன்னலத்தோடு நாட்டின் நிலையினையும் காப்பதற்கான பொறுப்பு நமக்கிருக்கிறது என்ற பார்வையோடு ஊரடங்குச் சட்டம், இன்றைய சிக்கல்களைத்  தீர்க்க அவரவருக்கு கடமையும் பொறுப்பும் இருக்கிறது என்பதை உணர்ந்தால் தான் இதிலிருந்து நாம் விடுபட முடியும்.  உலகத்தைப் பொறுத்த வரையில் வல்லரசு நாடுகள் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருக்கும்போது இந்த நோய்க் கொடுமையிலிருந்து மீள்வதற்கு அனைவருடைய பங்களிப்பும் முக்கிய காரணியாகும். 

கொரானா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில்  திருமண மண்டபத்தில் நடப்பதாக இருந்த திருமணங்கள் எளிமையான முறையில் வீட்டிலேயே நடக்கிறது. மணமக்களின் உறவினர்கள் மொத்தம் 30 பேர் மட்டுமே கலந்துக் கொண்ட இந்த திருமணத்தின் மொத்த செலவே 5000  ரூபாய்  தான்  என்பது ஆச்சரியமான விடயம். பகட்டான பணத்தை அதிகம் விரையும செய்து நடக்கும் திருமணங்கள் நல்லதா? உத்தமர் காந்தி வீட்டு திருமணம் வெறும்
10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
நேரு, படேலுக்கு அழைப்பு இல்லை.

மக்கள் இங்கே மாறாதவரை எதுவும் மாற சாத்தியமில்லை.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2020
#ksrposts

Saturday, March 28, 2020

பெண்மையில் ஒளிந்திருக்கும் கற்பனையற்ற நளினத்தை அன்பை வெளிக்கொணர்தல் எத்தனை அழகானது.




என்றோ மாலையில் கங்கை (வாரணாசி ) நதிக்கரையோரம் நீரில்
கால் பதித்த ஆனந்த நினைவலைகள் இப்போது ....! அப்போது அவள் இருந்தாள். அது ஜீவன் ஆன காலம்.
•••

நேர்மையாக வலிமையாக இருந்தும் சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் 
வாழ்வில் வீழ்ந்தாயே....
என்ற கர்ணன் திரைப்பாடல்  நினைவுகள்......

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2020
#ksrposts

#ஊழ்-#இயற்க்கை....

#

  போடும் கோலத்தில் நாம் வெறும் புள்ளிகளே. அவை போடும் கோடுகளை தாண்ட  நமக்கு சக்தி இல்லை.இயற்க்கையை மீறி நாம் கடக்க முடியாது. மலையை,  பசுமை காட்டை சூறையாடினோம்.தண்ணீர்,மணலை மானவரியாக   அள்ளி  கொள்ளை அடித்தோம். உலகம் வெப்ப மண்டலம் ஆக்கினோம்.தற்போதுஇயற்க்கையின் சீற்றத்தை பார்க்கிறோம்

#கரோனா_வைரஸ் 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2020
#ksrposts

Today I am wise, so I am changing myself.

Yesterday I
was clever,
so I wanted
to change
the world.

Today I am
wise, so I
am changing
myself.

#Rumi

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2020
#ksrposts


Virus

Ministers responsible during this Coronavirus pandemics! why not... Jayasanker MEA  for Tamilnadu.

#ksrpost
28-3-2020.


சபாபதி

#சபாபதி @Sun life today 
அருமையான திரைப்படம்.

பம்மல் சம்பந்தமுதலியாரின்நாடகத்தின் 
கருப்பு வெள்ளை திரைப்படம் இது. 

சபாபதி 1941 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஏ. டி. கிருஷ்ணசாமி மற்றும் ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்னம், டி. ஆர். ராமச்சந்திரன் போன்றோரின் நடிப்பை இன்றைக்கும் ரசிக்கலாம்.



#Ksrpost
28-3-2020.


சொந்த ஊருக்கு திரும்புவர்களின் ரணம்..... இடம்பெயரும் நிலை.....பெரும் துயரம். எல்லாம் டார்வின் கோட்பாட்டில் சொல்லப் பட்டதுதான். என்ன செய்ய? வாழ்ந்தாக வேண்டும்.

#சொந்த_ஊருக்குதிரும்புவர்களின்  #ரணம்..... 
இடம்பெயரும் நிலை.....
எல்லாம் #டார்வின்_கோட்பாட்டில் #சொல்லப்_பட்டதுதான். 
#என்ன_செய்ய?
#வாழ்ந்தாக_வேண்டும்.
———————————————-
Wearing FACEMASK is better than wearing VENTILATOR MASK.
Staying in your ROOM is better than staying in ICU.
Washing HANDS is better than washing your LIFE away.
Praying is better than COMPLAINING right now.
Stay home. Stay safe.

ஆனால் ஓர் புறம்;
பிறந்த  ஊருக்கு  எப்படியாவது திரும்ப வேண்டும் என்று  நடையாகவே மாநிலம் விட்டு  மாநிலம் மன வலியோடு பயணிக்கிற மக்களின் வேதனை. பிள்ளைக்குட்டிகளோடு தனது சொந்த ஊருக்கு திரும்புவர்களின்  ரணம்..... 








டில்லி , உத்திரப்பிரதேச எல்லையில் உணவு , உடை , உறைவிடம் , பேருந்து இல்லாமல் திக்கற்று நிற்கும் நிலை.



இடம்பெயரும் நிலை.....பெரும் துயரம்.
எல்லாம் டார்வின் கோட்பாட்டில் சொல்லப் பட்டதுதான். என்ன செய்ய?
வாழ்ந்தாக வேண்டும்.

#கரோனா_வைரஸ் 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2020
#ksrposts

You are our hero, Dr Minal. We salute your hard work and dedication.

#CoronaWarriors #Respect 

"She is very hard working and extremely dedicated," says Dr Gautam Wankhede, Mylab's Director of Medical Affairs, about virologist Minal Dakhave Bhosale. 

Mylab's research and development chief, Dr Minal headed the team that designed Patho Detect — the first 'Made-In-India' COVID-19 test kit — in a record time of six weeks. 

But this wasn't the only deadline the scientist was battling with. While working on the kit, Minal was in the final stages of her pregnancy and gave birth to a baby girl last week. 

In fact, she only began work on the programme in February, just days after leaving hospital with a pregnancy complication.

"It was an emergency, so I took this on as a challenge. I have to serve my nation," says Dr. Minal adding that her team of 10 worked "very hard" to make the project a success.

In the end, she submitted the kit for evaluation by the National Institute of Virology (NIV) on 18 March, just a day before delivering her daughter.

Interestingly, Dr Minal had also worked on the swine flu disease at NIV, Pune, during the 2009 outbreak.




To know more about Mylab's work, read this: https://www.google.com/amp/s/www.thebetterindia.com/221836/coronavirus-pune-mylab-startup-covid19-test-kit-make-in-india-nor41/amp/

கரோனா #பொறுப்பான_அரசியல்வாதிகளும், #ஐஏஎஸ்_அரசு_அதிகாரிகளுமேஇப்படி #இருந்தால்_பாமர_மக்களை_சொல்ல #முடியும்.

#கரோனா
#பொறுப்பான_அரசியல்வாதிகளும்,  #ஐஏஎஸ்_அரசு_அதிகாரிகளுமேஇப்படி #இருந்தால்_பாமர_மக்களை_சொல்ல #முடியும். 
———————————————-
கேரளாவில் முக்கியமான  காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தும் வடக்கே காசர்கோடில் இருந்து திருவனந்தபுரம் வரை நண்பர்களோடு பயணித்துள்ளார். அதுமட்டுமல்லாதுகேரளாஅமைச்சர்கள், சட்டமன்றஉறுப்பினர்கள்ஆகியோரையும் சந்தித்துள்ளார்.   கிட்டத்தட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களை சந்தித்ததோடு இரண்டு பிரார்த்தனை கூட்டங்களில் கலந்துக் கொண்டு, காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கும் சென்றுள்ளார். இதுவரை அவருடன் தொடர்பு ஏற்பட்ட 260 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதே போல கொல்லம் மாவட்ட உதவி கலெக்டராக இருக்கும் அனுபம் மிஷ்ராவுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்திருக்கிறது. அதை தொடர்ந்து விடுப்பில் சென்றவர் பிப்ரவரி மாதம் மனைவியுடன் தேன்நிலவுக்கும் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பியவரை அரசு 14 நாள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கச் சொல்லி அறிவுறுத்த, அதை சற்றும் கவனத்தில் கொள்ளாமல் அவர் தப்பி சென்றிருக்கிறார். கொல்லம் கலெக்டர் இது பற்றிய செய்தி அறிந்து அவரைத் தொடர்புக் கொண்ட போது அவர் பெங்களூருவுக்கு சென்றுக் கொண்டிருப்பதாக  தகவல் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் பெங்களூரு செல்லாமல் தன் சொந்த ஊரான கான்பூர் சென்றிருப்பதாக தகவல்கள் வருகின்றன. பொறுப்பான இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும், மெத்தப் படித்த ஐஏஎஸ் அரசு அதிகாரிகளுமே இப்படி இருந்தால் பாமர மக்களை நாம் என்ன சொல்ல முடியும். 

கரோனா வைரஸ் என்பதை குறித்து ஓரளவு விழிப்புணர்வுடனும் கவனத்துடன் இருக்கின்றோம், மறுக்கவில்லை. ஆனால் இதன் அடிப்படை காரணமே இத்தனை பெரிய மக்கள் தொகை இருந்தும் நாம் கட்டுப்பாடுடன் இருக்கின்றோம். பெரிதும் பாதிக்கப்பட்ட சில நாடுகள் மக்கள் தொகை நம்மை விட குறைவாக இருந்தாலும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பொருளாதாரத்திலும் நமக்கு சரிவு இருக்கின்றது. மற்ற நாடுகளைக் காட்டிலும் நமக்கு பெரிய சவாலாக இருக்கும் மக்கள் தொகை அதிகரிப்பால் மக்களுக்கு தேவையான திட்டங்களை சரியாக வகுக்க முடியவில்லை.  கிட்டத்தட்ட 1960களில் இருந்து மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து பேசிக் கொண்டிருந்தாலும் இன்னமும் மக்களை அது சரியாக சென்றடையவில்லை. மக்களும் ஒரு வீட்டிற்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால் போதும் என்ற பொறுப்புணர்வுடன்  நடந்துக் கொள்ள வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க கூடிய அளவில் அரசுகள் செய்தாலும்  செய்யாவிட்டாலும் நோயாயினும் மக்கள் தொகை கட்டுப்பாடு ஆயினும் நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வது நமக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.

#கரோனா_வைரஸ் 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2020
#ksrposts


தென் மாவட்டங்களில் அந்த கால கட்டுமான வீடுகள்...

What's on your mind...


இந்தப் பாணியில் அமைக்கப்பட்ட வீடுகளின் உள்ளே வெப்பநிலை ஒரே சீராக இருக்கும். இவை சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்டவற்றை சேர்த்து அரைத்து கட்டப்பட்டதாகும். வெயில் நேரத்தில் குளிராகவும், மழை, பனி நேரத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும்.

சிறந்த அறிவியல் ரீதியான கட்டிட அமைப்பு.

சுவரின் கனம் 1.5 அடி கொண்டதாகவும், உயரம் குறைந்த வாயிற்படிகளையும், நல்ல காற்றோட்ட வசதியும் கொண்டு அமைக்கப்பட்டவை.

வசதி குறைந்தவர்கள் நாளி ஓடு என்ற வகை ஓடுகளை கூரையாக அமைத்திருப்பார்கள். மூன்று அடுக்கு ஓடுகள் அடுக்கப்பட்டிருக்கும். சுற்றிலும் மண் சுவர் தான் இருக்கும். அந்த அமைப்பிலும் வெப்பநிலை ஒரே சீராகவே இருக்கும்.

அன்று வீடுகளின் தளங்களில் பயன்படுத்தப்பட்ட செங்கற்களுக்கு இணையாக வேறு எந்த வித இயற்கை மற்றும் செயற்கை கற்கள் எதுவும் இல்லை.

பழந்தமிழரின் கட்டடக்கலை போற்றுதலுக்குரியது.போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.

Pic:Thanks to Shobhna 
#ksrpost
28-3-2020.

Friday, March 27, 2020

சென்னை_கல்கத்தா_நகரங்களைச் #சேர்ந்த_பாரம்பரியக்_கட்டிடங்கள்

#சென்னை_கல்கத்தா_நகரங்களைச் #சேர்ந்த_பாரம்பரியக்_கட்டிடங்கள்.
———————————————-
இங்கு கீழே காட்டப்பட்ட இரண்டு படங்கள் சென்னை, கல்கத்தா நகரங்களைச் சேர்ந்த பாரம்பரியக் கட்டிடங்கள். இந்தக் கட்டிடங்களைப் படத்தின்  மூலம்  பார்த்தால் பராமரிப்பில்லாமல் கிடப்பதைப் பார்க்கலாம்.சென்னை சட்டக் கல்லூரி சிவப்பு கோபுரங்களில் தேவையற்ற செடிகள் வளர்ந்திருப்பதை கடந்த 5 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். இப்போது அங்கு கல்லூரி இயங்கவில்லை. இது குறித்து 2016இல் சட்டக் கல்லூரி முதல்வரிடமே நேரில் சந்தித்து சொல்லியும் தேவையில்லாத செடிகளை இதுவரை அகற்றவில்லை.
சென்னை தலைமைச்செயலகத்தின் அருகில் கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்திலும் இதுமாதிரி செடிகள் வளர்ந்துள்ளன. சென்னை அண்னா மேம்பாலத்திலும் இதே நிலைமைதான். இது குறித்தான பதிவைக் கூட சமூக வலைத்தளத்தில் பதிந்திருந்தேன்.கல்கத்தா பாரம்பரியமான நகரம் அந்த நகரத்தின் பிரதான சாலையிலேயே உள்ள பழைய கட்டிடத்தில் இப்படி செடிகள் வளர்ந்துள்ளன. இதையும் பார்த்துக்கொண்டு தினமும் லட்சக்கணக்கான மக்கள் கடந்து செல்கின்றனர்.







#சென்னை_கல்கத்தா_நகர_பாரம்பரிய #கட்டிடங்கள்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
27.03.2020
#ksrposts

இந்தியாவில் 144 ஊராடங்கு

https://www.thaaii.com/?p=32908

“The one unchangeable certainty is that nothing is unchangeable or certain.” #ksrpost 27-3-2020

“The one unchangeable certainty is that nothing is unchangeable or certain.”

#ksrpost
27-3-2020


Hell is empty and all the Devils are hers

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
#வள்ளலார்



-#Shakespeare, #Macbeth.
#ksrpost
27-3-2020.

#ஒரிசா_கவர்னராகவும்_சென்னை #ராஜதானி_அன்றைய_தமிழகத்தின் #ஒரிசா_எல்லை_வரை_முதல்வராக #இருந்த_நேர்மையான_பி_எஸ. #குமாராசாமி ராஜா



————————————————-
ஒரிசா கவர்னராகவும் சென்னை ராஜதானி அன்றைய தமிழகத்தின் ஒரிசா எல்லை வரை முதல்வராக இருந்த பி.எஸ. குமாராசாமி ராஜா நேர்மையானவர். தன் சொத்துக்களை அப்படியே பொது நலனுக்காக அர்பணித்தவர். 




பண்டித நேருவே வேண்டி விரும்பி முதல்வராக்கினார், ஆனால் சிலருடைய கயமைத்தனத்தால் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட போது தோல்வியுற்றார். மீண்டும் முதல்வர் ஆக பதியேற்றுக் கொள்ளுங்கள் என்று நேரு சொன்ன போது “நான் தோற்றுவிட்டேன், பதவி வேண்டாம்” என மறுத்துவிட்டார். நான் எங்கள் ஊரில் முதல்வர் பதவி தேடி வந்த போது கூட எங்களுடைய ராஜபாளையத்தில் நூல்நிலையம் அமைக்கின்ற பணியில் இருக்கின்றோம். அதனால் இப்போது பதவி ஏற்க வாய்ப்பில்லை என்று தட்டிக்கழித்த ஒருவரைப் பார்க்க முடியுமா? ஆனால் அவர் பெயரில் பழைய கிரீன்வேஸ் சாலை, குமாரசாமி ராஜா சாலை என்று அழைக்கப்பட்டும் அவர் பெயரைச் சொல்லாமல் பசுமைவழிச் சாலை என்றுதான் பத்திரிக்கைகள் அமைச்சரகள் தங்கியிருக்கின்ற சாலையினை குறிப்பிடுகிறார்கள். 

அவரது இளமைக் காலம் குறித்து இராஜபாளையம் - ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தைக் குறித்து அவர் எழுதிய நூல் அல்லையன்ஸ் ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ளார். அதை நேற்று மாலை படித்த பொழுது அன்றைய தேர்தல் முறை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எப்படி இருந்தது என்பதை நினைவுப் படுத்தியது.
———

‘’என் வாழ்க்கையில் முதல் முதலில் நான் தேர்தல் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்தது ஸ்ரீவில்லிபுத்தூரில்தான். ஆனால் இக்காலத்து தேர்தல் பிரச்சாரங்களுக்கும் தடபுடல்களுக்கும் அது எவ்விதத்திலும் ஈடாகுமா? எனினும் அக்காலத்துத் தேர்தல் நிகழ்ச்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தவை பிரமாதமாக இருந்தனவென்றே சொல்லலாம்.
அவைகளில் முனிசிபல் வார்டு எலெக்‌ஷன்தான் முக்கியமானது. அப்போது எவ்வளவு தேடிப் பார்த்தாலும் ஒரு வார்டில் நூறு வாக்காளர்களுக்கு மேல் இருக்கமாட்டார்கள். ஆனாலும் எலெக்‌ஷன் என்றால் ஊரில் எங்கும் ஒரே பரபரப்பாகத்தான் இருக்கும்.
அப்போது முனிசிபல் ஆபீஸ் ஸ்ரீ ஆண்டாள் சன்னதித் தெருவில் இருந்தது. அது ஒரு மண்டபம். போட்டி போடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் முனிசிபல் ஆபீசுக்கு பக்கத்தில் இருக்கும் மற்ற மண்டபங்கள் ஒவ்வொன்றிலும் தங்கள் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். ஓட்டுப் போடுகிறவர்களை வேட்பாளர்கள் தங்கள் தங்கள் ஆட்களை அனுப்பியோ, வண்டிகளிலேயோ கூட்டிக்கொண்டு வருவார்கள். முதலில் அவரவர்கள் இடத்துக்குத்தான் கூட்டிக்கொண்டு வருவார்கள்.
அங்கே ஒரு கூடையில் புளியோதரை; மற்றொரு கூடையில் தோசை; இன்னும் பிரசாத வகைகளையும் வைத்திருப்பார்கள். கல்யான அழைப்புக்காக வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குத் தாம்பூலம் கொடுத்து மரியாதை செய்யும் வழக்கம் இருக்கிறதல்லவா? அதேபோல ஓட்டுப் போட வந்தவர்களுக்கும் ஏதாவது மரியாதை செய்யாமல் அனுப்புவது நன்றாய் இராது என்று எண்ணித்தான் பிரசாத வகையறாக்களைக் கொடுத்து உபசாரம் செய்வது. வந்தவர்கள் முதலில் புளியோதரை சாப்பிட்டுவிட்டுத்தான் ஓட்டுப் போட போவார்கள்.
புளியோதரை பொங்கல் தோசை இவைகளைச் சாப்பிட்ட பிறகுதான் ஓட்டுப் போட வேண்டுமென்று தேர்தல் விதி ஒன்றும் கிடையாது! ஆனால் நடைமுறையில் அப்படித்தான்.
இதைத் தெரிந்துகொள்ளாமல் யாராவது நேராகப் போய் ஓட்டுப் போட்டுவிட்டால், அப்புறம் புளியோதரை தோசை ஒன்றையும் அவர் காண முடியாது! ஓட்டுப் போட்ட பிறகு அவரை என்ன, ஏது என்று கேட்பார்தான் யார்? திக்கற்ற அநாதை போல் வீடு திரும்ப வேண்டியதுதனே!
ஆனால் ஒன்று: ஒரு மண்டபத்தில் சாப்பிட்டுவிட்டு மற்றொரு மண்டபக்காரருக்கு ஓட்டுப் போடுவது அக்காலத்தில் நடந்திருக்காதென்றே நினைக்கிறேன். எனென்றால் இக்காலம் மாதிரி எலெக்‌ஷன் சூட்சுமங்களும் சூழ்ச்சிகளும் அவ்வளவாக இல்லாத காலம் அல்லவா அது?
முனிசிபல் எலெக்‌ஷன் மாதிரி அவ்வளவு ஆர்ப்பாட்டமாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் குறைந்த அளவில் நடக்கும் எலெக்‌ஷன் இரண்டு உண்டு. அவைதான் (1) ஸ்ரீவில்லிபுத்தூர் சாஸ்வத நிதி (பெர்மனெண்டு பண்டு) ஆபீஸ் எலெக்‌ஷன்; (2) இந்து ஹை ஸ்கூல் கமிட்டி எலெக்‌ஷன்.
எலெக்‌ஷன் ஆன சில நாள் வரை வேட்பாளர்களின் வெற்றியையும் தோல்வியையும் பற்றித்தான் பள்ளி மாணவர்களும் மற்றவர்களும் பேசிக் கொண்டிருப்பார்கள்.’’

-நன்றி/ கனம் பி.எஸ்.குமாரசாமிராஜா எழுதிய ‘இளமை நினைவுகள்’
ஜெனரல் பப்ளிஷர்ஸ் (அல்லயன்ஸ்)
திரு ஶ்ரீநிவாஸன்.

 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
26.03.2020
#ksrposts

*#கரோனா* *சிலரின் கருத்து*

*#கரோனா* 
*சிலரின் கருத்து*
—————
அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பொறுப்பு வாய்ந்த ஆளுமைகளைக் கொண்டு இந்த கரோனா வைரசை ஒழிக்க உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தால் நல்லது. அதில் பொருளாதார நிபுணர்கள், மருத்துவர்கள், திரைத்துறையினர், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், அனைத்துக் கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகள் என ஒரு உயர்மட்டக் குழுவினை அமைத்து ஆலோசனைகளை வழங்கினால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு அமைச்சரும் ஒரு மாவட்டத்தை கவனிக்கிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் இந்த குழுவில் உள்ள ஆளுமைகளை நியமித்து நேரடியாகக் கண்காணித்து அரசுக்கு அவ்வப்போது செய்ய வேண்டிய பணிகளை செய்தால் நன்றாக இருக்கும். இதை நான் சொல்லவில்லை, நேற்று என்னுடன் பேசிய ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்தாகும். எனக்கும் இது சரியெனப் பட்டது. 

வல்லுநர்கள் பல வகையில் ஆலோசனைகளைத் தரலாம். குறிப்பாக மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை சமாளிக்க பொருளாதார வல்லுநர்கள் அவர்களுடைய கருத்துக்களை கூறலாம். மக்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி திரைத்துறையினரைக் கொண்டு தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தால் அது மக்களைப் பெருமளவில் சென்றடையும். மருத்துவர்கள் ஆலோசனையும் மருத்துவ ரீதியாக பயன்படும். அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், வழக்கறிஞர்கள் பொதுவாக சமூக ரீதியான ஆலோசனைகள வழங்கலாம். இதைக் கவனத்தில் கொள்வது நல்லது. இதில் அரசியல் இல்லாமல் கொந்தளிப்பாக இருக்கின்ற இத்தருணத்தில் யாரையும் குறை சொல்ல முடியாது என்பதை கவனத்தில் கொள்ளலாம். இந்த மாதிரி ஒரு உயர்மட்டக் குழுக்கள் அகில இந்திய  அளவில் நடு நிலை அனுகுமுறையில் நாட்டின் நலன் கருதி அமைத்தால் நல்லது என்று நீதிபதி மட்டுமல்ல மேலும் கைபேசியில் பேசிய இருவர் சொன்னபோது இது எனக்கு சரியாகவே பட்டது. இதைச் சொல்ல வேண்டியது கடமை என்பதாலேயே இந்தப் பதிவு. 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
27.03.2020
#ksrposts

Thursday, March 26, 2020

இலங்கையில்_விடுதலை..... #ஆனால்_இந்தியவில்....?

#இலங்கையில்_விடுதலை.....
#ஆனால்_இந்தியவில்....?
———————————————-
This amidst covid19  fight ! Mirusuvil murders suspect released ! He was convicted for the murders by the supreme court .But  here Rajivi case, 7persons arecustody past 29years.

கரோனா வைரஸ் தாக்குதல் பின், தமிழக மத்திய சிறைகள் உள்ள கைதிகைள, பத்தாண்டுகளுக்கும்  மேலாக இருப்பவர்களை விடுவிக்க  உத்தரவை பிறப்பித்தது தமிழக அரசு. வரவேற்ககூடிய ஒன்று. 

ஆனால், ராஜிவ்காந்தி படு கொலை வழக்கில்  7  தண்டனைக் கைதிகளை விடுவிக்க வில்லை.

கடந்த 1994இல்  செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, உள்துறை ஒரு அரசாணையை ( எண்13/58- 10.11.1994) வெளியிட்டது. ‘20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை, அவர்கள் என்னவித குற்றவியல் தண்டனைப் பெற்றவர்களாக இருந்தாலும் விடுவிக்கலாம்’என தமிழக அரசாணை. பிரிவு 166 பின்பற்றி விடுதலை செய்திருக்கலாம்.
ஆனால்,இலங்கையில் ராஜபக்சே அரசு,
சார் ஜென்ட் சுனில் ரத்த நாயக் என்ற (ராணுவ  குற்றவாளி)   தூக்கு தனடணையை கைதி நேற்று சகல மரியாதைகளோடு கரோனா வைரஸ் காரணம் காட்டி விடுதலை செய்துள்ளது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
26.03.2020
#ksrposts


இத்தாலி_நிலைமை #நமக்கு_வேண்டுமா?

#இத்தாலி_நிலைமை #நமக்கு_வேண்டுமா?
———————————————
பார்த்த படங்களில் இத்தாலியில் #கரோனா_virus  பாதிப்பில் ஏற்பட்ட
கொடுமைகள்,  அங்கு  தெருக்களில் சிகிச்சைகள்   நடக்கின்ற   துயர நிலையை  பார்கின்றோம்.  உரிய மருத்துவ  வசதி இல்லாமல்   அங்கு  திண்டாட்டம்.  இத்தாலியில்  கட்டுப்
பாடான  போக்கு  ஆரம்ப காலத்தில் எடுக்காதால்  இப்படி நிலமை  மோசமாகி
விட்டது.  அடுத்து ஹண்டா வைரஸ் (Hantavirus)சீனாவில் பரவும் தொற்று  உலகுக்கு அடுத்த அச்சுறுத்தலாக மாறுமா? என்ற அடுத்த அச்சம் சவால் உள்ளது.

இது  நமக்கும் படிப்பினையாகும் ....

உண்மை தான் காரணம் நோயின் தாக்கம், அதன் பரவும் தன்மை இங்கு மக்களுக்கு இன்னும் புரியவில்லை

ஆனால் இங்கு “வீட்டுலயே இருங்க, வெளியில வராதீங்க”ன்னு சொன்னாலும் சிலர் கேட்க மாட்டேங்குறீங்களே..
சுய அக்கறை இல்லாதவங்ககிட்ட சமூக அக்கறை மட்டும் எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

#எனவே,#ஊரடங்கு_உத்தரவு_144

ஊரடங்கு உத்தரவு என்றால் என்ன? 

உலகில் சுமார் 170 நாடுகளில் பரவியுள்ள, கொரோனோ வைரஸ் இந்தியாவில் பரவுதலை மேலும் தடுக்கும் பொருட்டு, நேற்று (மார்ச் 24) நள்ளிரவு முதல், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 தேதி வரை) ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன ஊரடங்கு உத்தரவு என்று நம்மில் பலருக்கு சந்தேகம் இருக்கலாம். ஆகவே, ஊரடங்கு உத்தரவு குறித்தும் அது குறித்த நடைமுறைகளையும், அதனை மீறினால் ஏற்படும் பின்விளைவுகளை குறித்தும் காணலாம்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம்,1973ன் 10ஆவது பகுதியில், “பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலை நாட்டுதல்” என்ற தலைப்பின் கீழ் பிரிவு 129 முதல்  148 வரையிலான பிரிவுகளில் அதுகுறித்த நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் பிரிவு 144ல், “பொதுமக்களுக்கு ஏற்படும் தொல்லை அல்லது எதிர்பார்க்கப்படும் ஒரு அச்சமான சூழல் போன்ற அவசர நிலைகளில், அவைகளை உடனடியாக தடுத்தல் மற்றும் அந்த பிரச்சினைகளிலிருந்து விரைவான தீர்வு ஆகியவைகளுக்காக, தகுந்த காரணங்கள் இருக்கும் பட்சத்தில் நிர்வாக அதிகாரிகள் தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கலாம்” என்று கூறுகிறது. அவ்வாறு பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், நடைமுறையில், “ஊரடங்கு உத்தரவு” என அழைக்கப்படுகிறது.

பொது அமைதிக்கு இடையூறு ஏற்படக்கூடிய சூழல்களில், நிர்வாக அதிகாரிகளால் பொதுவாக, குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில், அந்த குறிப்பிட்ட பகுதிகளில், ஐந்து அல்லது அதற்கு அதிகமான நபர்கள் தகுந்த காரணம் இல்லாமல் பொது இடத்தில் கூடுவது தடை செய்யப்படுகிறது. அவ்வாறு கூடுவது, சட்ட முரணான கூடுகை என்று பார்க்கப்படுகிறது. அவ்வாறு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு உத்தரவு அதிகபட்சமாக இரண்டு மாத காலத்திற்கு மிகாத ஒரு  கால அளவிற்கு  அறிவிக்கப்படலாம். ஒருவேளை தகுந்த  காரணம் இருக்கும் பட்சத்தில் 6 மாத காலம் வரையிலும் அந்த உத்தரவானது நீட்டிப்பு செய்யலாம்.  இந்த சட்ட விதியானது, 1882ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் இயற்றப்பட்டு தற்போது வரையிலும் அமலில் உள்ளது.

பொதுவாக சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி ஒரு குறிப்பிட்ட பகுதியில் அல்லது குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில், சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு சமயங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய சான்றாக, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமானது 100 நாட்கள் நடந்து வந்ததைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 5 நாட்கள் அமலில் இருந்தது. பின்னர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பொதுமக்கள் மனித உரிமைகளை மீறி சட்டத்திற்க்கு புறம்பாக சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட பிறகு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

அதுபோல கடந்த 2019 டிசம்பர் மாதத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடக மாநில பெங்களூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலத்திற்கு அதுநாள் வரையிலும் வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகளுக்கு காரணமான இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் சரத்து 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்டம்  ஒழுங்கு பிரச்சனைகள் எழலாம் என்று காரணம்காட்டி, கடந்த 2019ம் ஆகஸ்ட் மாதம், காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழக விவசாயிகள் போராட்டத்தின போது  1970-1980களில்  சில நேரங்களில் ஊரடங்கு உத்தரவு 144 அறிவிக்கப்பட்டு   மொத்தம்
40 க்கு அதிகமான விவசாயிகள் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொடுமையாக கொல்லப்பட்டனர் .அது போல 1965இல்
தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம்.

இந்தியாவில் இதற்கு முன்பு இந்திரா காந்தி பிரதமராக இருந்த கால கட்டத்தில், 1975 முதல் 1977 வரையிலான காலத்தில் அரசியலமைப்பு சட்டத்தில் சாசனத்தின் அடிப்படையில், அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது. அப்போது சட்ட ஒழுங்கு பிரச்சினை எழலாம் என காரணம்காட்டி, 18 மாதங்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் மேலும் பரவுதலை தடுக்கும் நடவடிக்கை என்ற பெயரில், டெல்லி மற்றும்  மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் தமிழ்நாட்டிலும் ஒரு வார காலம் ஊரடங்கு உத்தரவு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் தான் நடுவண் அரசு நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்கள், இந்திய தண்டனைச் சட்டத்தின், பிரிவு 188 கீழ் தண்டிக்கப்படுவார்கள். முதலில் கைதும் பின்னர் சிறையிலும் அடைக்கப்படலாம். ஒரு மாத காலம் சிறை தண்டனையும் ரூ.200 அபராதம் விதிக்கப்படலாம். மேலும், மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் மீறல் இருக்கும்பட்சத்தில், ஆறுமாதம் சிறை தண்டனையும் அல்லது ரூபாய் 1,000/- வரையில் அபராதமும் தண்டனையாக வழங்கிட சட்டத்தில் இடமுள்ளது. ஒருவேளை இந்த உத்தரவு அதிகப்படியான மக்களால் மீறப்படும் பட்சத்தில், ராணுவம், கப்பல் படை மற்றும் விமானப்படையின் துணைகொண்டு மீறல்களை கட்டுக்குள் கொண்டு வரவும் சட்டத்தில் இடமுள்ளது.

தற்போது நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது, சட்ட ஒழுங்கு பிரச்சனை அடிப்படையில் அல்ல. கொரோனா வைரஸ் மேலும் பரவுதலை தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட சிவில் ஊரடங்கு உத்தரவு. ஆகவே தான் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள்,  துப்புரவு பணியாளர்கள், தீயணைப்பு துறையினர், நீதிமன்றங்கள், பால், காய்கறி விற்பனையாளர்கள் உள்ளிட்டவைகள் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் வீட்டிற்குள் இருக்கவிட்டால் கண்டதும் சுட உத்தரவிடுவேன் என இன்று (25.03.20) தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

பொதுவாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படுவது தொடர்பான நிகழ்வுகளில் நீதிமன்றங்கள் தலையீடு செய்யாது. இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை சார்ந்த முடிவு. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க செய்யாமல் இருப்பதற்கான அல்லது தளர்த்தப் படுவதற்கான தகுந்த காரணங்களை மாநில அரசு அல்லது நடுவண் அரசின் கவனத்திற்கு கொண்டு வரும்போது அவைகள் நீக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம்.

#ksrpost
26-3-2020.


Stopping by Woods on a Snowy Evening”



#Robert_Frost_birthday,.
(Poet Robert Lee Frost was born in San Francisco, California on this day in 1874.)

"The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep." 
- “#Stopping_by_Woods_on_a_Snowy #Evening”
•••

"#Fire_And_Ice" 
-Robert Frost :

Some say the world will end in fire,
Some say in ice.
From what I've tasted of desire
I hold with those who favor fire.
But if it had to perish twice,
I think I know enough of hate
To say that for destruction iceIs also great



And would suffice.



திருக்குறள்_686

#திருக்குறள்_686

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் 
தக்க தறிவதாந் தூது

#பொருள் 

கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்.

Lakshman_Rekha



—————————


Question: Why was Ravan successful in kidnapping Sita?  

Answer: Because she crossed her "Lakshman Rekha".

Ravan Bhiksha , this vintage Oleograph print from Ravi Varma Press teaches us to stay indoors and not to cross the "Line of Control- Lakshman Rekha."

The invisible Enemy Corona Virus is eager to Kidnap our Immunity!!! 

Let us respect the request made by our Honorable "Prime Minister Modi" to strictly adhere to follow lockdown. 

Let's win the battle!!

Lakshman Rekha not mentioned in Valmiki Ramayana

#RaviVarma #CoronaVirus #Covid19 #PMOIndia #HealthCare #CoronaFighters

#Lakshman_Rekha
Courtesy:Raja Ravivarma

#John_Keats, Lines from "#Song_of_the_Indian_maid", Endymion



———————————————
"Come then, Sorrow,  
 Sweetest Sorrow!
 Like an own babe I nurse thee on my breast:  
 I thought to leave thee,  
 And deceive thee,  
 But now of all the world I love thee best.  
 
 There is not one,
 No, no, not one  
 But thee to comfort a poor lonely maid;  
 Thou art her mother,  
 And her brother,  
 Her playmate, and her wooer in the shade."

-John Keats,

#ksrpost
26-3-2020.

Wednesday, March 25, 2020

#எஞ்சிய_நாட்களை_எப்படிக் _கழிக்கப் #போகிறோம்_என்ற_திட்டமிடுவதற்கான #நம்மை_சுய_பரிசோதனை_ஒரு_காலக் #கட்டம். #virus #lock_down_21days.



————————————————
தினமும் காலையில் அருகே உள்ள கடற்கரையில் நடைப்பயிற்சியும், வீட்டிற்கு திரும்பியதும் காலை நீட்டிக் கொண்டு தேநீர் அருந்தி தினமணி, தமிழ் இந்து, தினத்தந்தி, தினகரன், தினமலர் மற்றும் ஆங்கில ஏடுகளான டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிகள், மிண்ட், எகனாமிக் டைம்ஸ் என அனைத்து தினசரிகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு குளித்துவிட்டு வெளியே புறப்பட்டால் தான் அன்றைய தினம் முழுமையாக தெரியும். இன்றைக்கு பத்திரிக்கைகளை திருவான்மியூர் சென்று வாங்கிக் கொண்டு வரவேண்டிய சூழல். தினசரி பேப்பர் போடுபவரைக் கேட்டால் பேப்பர் போடும் யாருமே வேலைக்கு வரவில்லை என்று சொல்கிறார். இது ஒரு வித்தியாசமான வாழ்க்கை தான். 

பல போராட்டங்களில்  பங்கேற்று சிறைக்கு சென்ற பொழுது இந்த மாதிரி தினசரிகள் எளிதில் கிடைக்கும். அது போன்றதொரு தனித்திருக்கும் வாழ்க்கையும் ஒரு வித்தியாசமான போக்காக இருக்கின்றது. கடந்த கால விஷயங்களை அசைப் போடுவதற்கு ஏற்ற வகையில் அமைதியும் ஆழ்ந்த வாசிப்புகள்,பழைய திரைஇசைப் பாடல்களை கேட்டுக் கொண்டு நேரம் நகர்கின்றது. நாம் அடுத்தவர்களுக்காக பாடுபட்டதும் அந்த கடப்பாடு அவர்களை எளிதாக எடுத்துக் கொண்டு  நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், நாம் கண்ட நன்றியற்ற ரணங்களை எண்ணும் போது இதுவும் ஒரு சுகமான சுமைகளாகத் தான் உள்ளது. 

எப்போதும் மகிழ்ச்சியாகவும் செல்கின்ற பாதை எப்போதும்  எளிமையாகவும், ஏதோ பிறந்தோம், வெந்ததை தின்றோம், படுத்தோம், உறங்கினோம், எழுந்தோம் என இல்லாமல் அடுத்தவர்களுக்கு பாடுபட்டோம் அதனால் வந்த எதிர்வினைகள் ஏராளம் என்றாலும் படிப்பினைகளும் கடந்த காலத்தில் பட்ட கஷ்டங்கள் வேறாயினும் இன்றைக்கு அதை நினைத்துப் பார்க்கும்போது சிறுவயதில் கிராமத்தில் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் வேகாத வெயிலில் கரிசல் காட்டில் நுங்கு வெட்ட கிளம்பிவிடுவோம். வீட்டில் செருப்பு வாங்கிக் கொடுத்தாலும் அடம்பிடித்து செருப்பில்லாமல் வெறுங்காலில் நடந்து செல்லும் போது இரண்டு கால்களிலும் முள் குத்தி நடக்க முடியாமல் போகும். வீட்டுக்கு வந்தால் இதை எப்படி சொல்வது என்று பயந்துக் கொண்டு வீட்டுக்கு செல்லாமல் எங்கள் கிராமத்தில் முடிதிருத்துபவரிடம் சென்றால் அவர் முள்வாங்கி,ஊக்கினை வைத்து காலில் தைத்த முட்களை ஒவ்வொன்றாக பக்குவமாக எடுப்பார். கால் தோலினை மெல்ல கீறி குத்தியிருக்கும் முள்ளின் நுனியைப் பிடித்து மெல்ல ஆட்டி ஆட்டி எடுக்கும்போது வலியும் இருக்கும் அதனூடே சிறிய நிவாரண சுகமும் கிடைக்கும். 

அதுபோல இப்போது முன்நாளில் ஏற்பட்ட துயரங்களை நினைத்துப் பார்க்கும்போது அப்படி தான் தெரிகிறது. ஒரு மனிதனை சுயபரிசோதனை செய்துக் கொள்ள இந்த 21 நாட்கள் இயற்கையாகவே அமைந்துவிட்டது. கடந்து வந்த பாதைகள் இனிமேல் இருக்கின்ற காலம் எஞ்சிய நாட்கள் குறைவு தான் இந்த பூமிப்பந்தில். இனி என்ன செய்யப் போகிறோம், எப்படி இருக்கப் போகிறோம் கடந்த காலத்தில் கிடைத்த ஏமாற்றங்களில் இருந்து நமக்கு கிடைத்த வினைகளைக் கொண்டு நாட்டுக்கும் நமக்கும் பயனளிக்கும் வகையில்  எஞ்சிய நாட்களை எப்படிக்  கழிக்கப் போகிறோம்  என்ற திட்டமிடுவதற்கான நம்மை சுய பரிசோதனை ஒரு காலக் கட்டம். இது அனைவருக்குமானது.

இன்று காலை Shakespeare யின் The Merchant of Venice படித்த போது மனதை ஈர்த்த வரிகள்......

SHYLOCK:
"If you prick us, do we not bleed?
If you tickle us, do we not laugh?
If you poison us, do we not die?
and if you wrong us, shall we not revenge?". (Act III, scene I).

—William Shakespeare, The Merchant of Venice. 
Shakespeare is not for an age but for all the ages.....
-Ben Jonson(1572-1637)

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
25.03.2020
#ksrposts

 #virus #lock_down_21days.

Tuesday, March 24, 2020

virus 3wk #lock_down

#virus  3wk #lock_down 

After the #Second_World_War,this is the unique first nation lock down in India. There are two models one is #Modi_model and another one is #Trump_model (US) to fight the virus. Anyways we've to co-operate, 21 days.

#ksrpost
24-3-2020.


கொரோன #ஊரடங்கு-#போராட்டங்கள்

#கொரோன
#ஊரடங்கு-#போராட்டங்கள்
————————————————
கொரோனாவை   தடுக்க,   இன்று (24-3-2020)இரவு 12 மணி முதல்  நாடு  முழுவதும்  21 நாட்களுக்கு ஊரடங்கு....
- பிரதமர் மோடி.

பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கு, மிக அழுத்தமான  கட்டாயமாகும்.  வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம். மக்கள் அத்தியாவசிய தேவைகளைப் பெற அரசுகள் வழி செய்ய வேண்டும்.



இப்படியான சூழல் இந்தியாவில் முதன் முறை. இந்திரா காந்தி  காலத்தில் நள்ளிரவு அவசர நிலை அறிவிப்பு, கைதிகள் என நடந்தன.










இந்தியாவில் மக்களே நடத்திய சுய ஊரடங்கு போராட்டங்கள் என்பது வரலாற்று ரீதியாக 1942ல் உத்தமர் காந்தி அறிவித்த வெள்ளையனே வெளியேறு என்பது தான். 

அதன்பின் ஒவ்வொரு மாநிலத்திலும் இம்மாதிரியான ஊரடங்கு மக்கள் கலந்த போராட்டங்கள் நடந்தன. ஒன்றுபட்ட ஆந்திரத்தில் தெலுங்கானா கோரி சென்னா ரெட்டி, கம்யூனிஸ்ட் தலைவர் சுந்தரய்யா போன்ற பலர் முன்னெடுத்த இந்த ஊரடங்கு போராட்டத்திற்கு ஆந்திர மக்களே ஒன்றுத் திரண்டனர்.  திரும்பவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால் தெலுங்கானா மாநிலத்திற்காக ஆந்திரம் ஊரடங்கு போராட்டம் எல்லாம் நடத்தியதுண்டு. கோவா இந்தியாவில் இணைந்த போது நடந்த  நிகழ்வுகள்.

மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது மகாராஷ்டிரத்திலிருந்து குஜராத் தனி மாநிலம் கேட்டு 1956 ‘மகா குஜராத்’போராட்டம் நடந்தது. இதே குஜராத்தில் 1973ல் சிமன் பாய் படேல் ஆட்சிக்கு எதிராக ஊரடங்கு ‘நவநிர்மான்’என்ற பெயரில் அமைதிப் போராட்டங்கள் நடந்தன. 

அதே போல பஞ்சாபில் காலிஸ்தானம் பிரச்சினை நடந்த போது பஞ்சாபில் ஊரடங்கு போராட்டத்தை மக்களே முன்னெடுத்ததுண்டு.

கடந்த 1967ல் மேற்கு வங்கத்தில் அஜாய் முகர்ஜி ஆட்சியை எதிர்த்து இம்மாதிரியான போராட்டங்கள் நடந்தன. மேற்கு வங்கத்தில் தனி கூர்கா லேண்ட் கேட்டும் கூர்கா முக்தி மோர்சா இம்மாதிரி ஊர்டங்கு போராட்டங்களை அந்த வட்டாரத்தில் கையிலெடுத்தது.

ஜார்க்ண்ட் மாநில பிரிவிலும் இம்மாதிரி போராட்டங்கள் நடந்ததுண்டு. 

அசாமில் 1982-83 காலகட்டத்தில் அனைத்து அசாம் மாணவர்கள் அசாமின் உரிமைக்காக தாங்களே அறிவித்த ஊரடங்கு போராட்டங்களை அறிவித்ததுண்டு. 

ஏன், தமிழகம் ஈழத்தமிழர் பிரச்சினையின் போது பொது வேலைநிறுத்தம் என்று அறிவித்தாலும் 1980களில் ஊரடங்கு போராட்டமாகத் தான் அன்றைக்கு நடந்தது. 

இப்படி இந்தியா முழுவதும் இல்லை என்றாலும் மாநில மற்றும் வட்டார அளவில் ஊரடங்கு போராட்டங்கள்-பொது வேலை நிறுத்தங்கள்  நடந்ததுண்டு. கேரளத்திலும், கர்நாடகத்திலும், காஷ்மீரத்திலும் இம்மாதிரியான மக்கள் பங்கேற்ற பல பொதுவான போராட்டங்கள் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு.

*To lock something to prevent someone or something from getting into it. * 
Lock down for 21 days in India.
Lock down is a lakshman rekha on your door steps..

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
24.03.2020
#சுய_ஊரடங்கு
#போராட்டங்கள்
#ksrposts
#ksradhakrishnanposts

ஜாகை_சுகம்

#ஜாகை_சுகம்
———————-
#கொரோனாவுக்கு_144_ஊரடங்கு

வீட்டில் தனித்து இருப்பதும் ஒரு சுகம் தான்.   பழைய   கோப்புகளோடு,
தி ஜானகிராமன் சிறுகதைகள், அதில் வரும் ‘ஜாகை சுகம்’ அனைத்து சுகத்தையும் ......! தரும் என்று அவருடைய எழுத்துக்களில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. 

மன அமைதி, சுய சிந்தனை,  கடந்த கால களங்கள, சில நேரங்களில்  சில மனிதர்கள், அவர்களால் பாதிப்புகள் என நளபாகத்தோடு சிந்தனைகள் கடந்து செல்வது அலாதியான சுகம் .

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
24.3.2020
#ksrpost


கொரோனாவுக்கு_144_ஊரடங்கு

#கொரோனாவுக்கு_144_ஊரடங்கு
ஆனால்....
டாஸ்மாக் கடைகளில் நாட்டின் citizens குடிமகன்கள்..
எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள்.
வாழ்க....

#ksrpost
24-3-2020.


#இத்தாலியைஅணைக்கும்_கியூபாவின் #கருணைக்_கரங்கள். #ஆனால்_ஈழ_இறுதிப்_போரின்_போது...



———————————————
இத்தலியில் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டதற்கு கியூபா மனிதாபிமானத்துடன் உதவிக்கரம் நீட்டியது வரலாற்றில் ஒரு தவமாகும். இது பாராட்டுக்கு மட்டுமல்ல படிப்பினையும் கூட. பாதிப்பு எங்கு ஏற்பட்டாலும் உதவிக்கரம் என்பது அவசரம் அவசியமானது. 

ஆனால் கியூபா ஈழத்தமிழர் பிரச்சினையில் ஏன் அப்படி நடந்துக் கொண்டது என்பது புரியாத வினாவாக கடந்த எட்டாண்டுகளாக விடை காணாமல் உள்ளது. 

இலங்கையில் 2009ல் இறுதிப் போரில் இந்தியாவின் உதவியோடு ராஜபக்சே சிங்கள அரசு தமிழினத்தை அழித்த கொடூரம் இன்னும் நம் மனதில் இருந்து அகலாத துயரங்கள் ஆகும். இதைக் குறித்து ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் சர்வதேச சுதந்திரமான நம்பகமான புலனாய்வும், விசாரணையும் வேண்டுமென்று பிற நாடுகள் முன்னெடுத்த போது, கம்யூனிச சித்தாந்தத்தை முன்னெடுத்த கியூபா, ரஷ்யா, சீனா சிங்கள ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக ஏன் இருந்தார்கள் என்பது இதுவரை புரியாத புதிராகவும் இருக்கின்றது.

கம்யூனிசம் உலகவாதமும் உலக நலன்களையும் முன்னெடுப்பதாகும். சாதாரண மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாத கம்யூனிச கொள்கைகளை வகைப்படுத்திய கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ போன்ற தலைவர்கள் இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு எதிராக நிச்சயமா குரல் கொடுத்திருப்பார்கள். தற்போது communist block என்று சொல்லக் கூடிய ரஷ்யா, சீனா, கியூபா தமிழர்களுடைய நியாயங்களுக்கு துணையில்லாமல் இருந்தது வேதனை தருகின்ற விடயமாகும். இவையெல்லாம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த சங்கதி ஆகும்.

இந்த காலக்கட்டத்தில் இவ்வளவு உதவிக் கரம் நீட்டும் கியூபா ஒன்றரை லட்சத்திற்கும் மேல் தமிழர்கள் அழிக்கப்பட்ட போது ஏன் மெளனம் சாதித்தார்கள் என்பது தான் பார்வையாளராக நடுநிலையோடு செய்யவேண்டிய பதிவும் கூட.

#கியூபா
#இத்தாலி
#ஈழத்தமிழர்
#முள்ளிவாய்க்கால்
#ஜெனிவா
#ksrpost

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
24.03.2020

மயிலாடுதுறை_மாவட்டம்

#மயிலாடுதுறை_மாவட்டம்
————————
ஓன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கேந்திர நகரமாக திகழ்ந்த மாயவரம் 16.02.1982ல் மயிலாடுதுறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. (காரணப் பெயர்: மயில் ஆடும் துறை- ஊரும் பேரும் ரா.பி.சேதுப் பிள்ளை.) இன்று நீண்ட நாள் கோரிக்கையான தனி மாவட்டமாக மயிலாடுதுறை 38வது மாவட்டமாக தமிழகத்தில் உதயமாகி உள்ளது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
24.03.2020.
#ksrpost


#உப்பு_பற்றி_கிரா.



————————
“உப்பை உப்பு என்று சொன்னால் அது கோபித்துக் கொள்ளுமாம்; சரியாகவே அமையாதாம்! அதனால்தான் ருசிக்கல்லு என்று சொல்லுகிறதாம்.
பானக்கரமும் நீர்மோரும் இல்லாத சிறீராமநவமியே கிடையாது. பானக்கரம் இல்லாத நைனார் நோம்பும் கிடையாது.
கோடையில் பிறந்தான் ராமன்; ஆடையில் பிறந்தான் கண்ணன் என்பது சொலவடை (ஆடை என்பது மழை).
கோடையில் தாகத்துக்குத் தண்ணீர் தருவதைவிடப் பானங்கள் தருவது ரொம்ப விசேடம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்படி, ‘மோரு தந்தா மூணு ஜென்மத்துக்கு அடிமை, இளநீர் தந்தா ஏழு ஜென்மத்துக்கு அடிமை’ என்று சொல்லப்பட்டு இருக்காம்.
இதில், குடித்தவர் அடிமையா கொடுத்தவர் அடிமையா என்பது பக்கத்திலுள்ள பெரியாட்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது.” (லீலை, 2016: 142).

#ksrpost
24-3-2020.

Monday, March 23, 2020

உச்ச_நீதிமன்ற_முன்னாள்_நீதிபதிகள்-#அரசியல்_பதவிகளும் ..... (#கடந்த_கால_நிகழ்வுகள்)

#உச்ச_நீதிமன்ற_முன்னாள்_நீதிபதிகள்-#அரசியல்_பதவிகளும் .....
(#கடந்த_கால_நிகழ்வுகள்)
————————————————
சமீபத்தில்  உச்ச நீதிமன்ற (Supreme Court)முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன்  கோகாய் மாநிலங்களவை  உறுப்பினராக எதிர்ப்பகளை மீறி நியமிக்கப்பட்டார். அது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. அவர் பதவியேற்றபோது எதிர்க்கட்சிகள்மாநிலங்களவையி
லிருந்து வெளிநடப்பு செய்ததெல்லாம் உண்டு.

இது புதிதல்ல. பண்டித நேரு காலத்தில் நாடு விடுதலைக்குப் பின் நீதிபதி சையத் பசல் அலி, ஒரிசா கவர்னராக நியமிக்கப்பட்டதை கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன் கடுமையாக எதிர்த்தார். அப்போது தடுப்புக் காவலில் இருந்த கோபாலன், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு மாறாக நேரு நடக்கின்றார் என்ற குற்றச்சாட்டையும் வைத்ததுண்டு. காங்கிரஸ் தலைவராக இருந்த பஹருல் இஸ்லாம், உயர் நீதிமன்றநீதிபதியாகவும் 
பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் அமர்த்தப்பட்டார். இதை கம்யூனிஸ்டுகளும்  சோசலிஸ்டுகளும்  அப்போது எதிர்த்தனர்.

எம். கே. சாக்லா பம்பாய் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. ஆரம்பக் கட்டத்தில் ஜின்னாவோடு இருந்து பாகிஸ்தான் பிரிவினையினை ஏற்காமல் முஸ்லீம் நேஷனலிஸ்ட் பார்ட்டி என்ற கட்சியை ஆரம்பித்தார். நீதிபதி பணிக்காலம் முடிந்தவுடன் நேரு அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். இங்கிலாந்திற்கு இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். சென்னை ராஜதானியில் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர், கேரள நம்பூதரி பாட் அமைச்சரவையில் அமைச்சர், 1965 சட்டமன்ற தேர்தலில் தோல்வி. பின்னால் கேரள உயர்நீதி மன்றம் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார் வீ. ஆர். கிருஷ்ணய்யர்.

திருநல்வேலி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் 1962 மற்றும் 1971 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சேரன்மகாதேவியில் தோல்விக்குப் பின் 1974ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பின் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார்.

குஜராத் தலைமை நீதிபதியாக இருந்த கோகுல கிருஷ்ணனும் திமுகவைச் சார்ந்தவர். அது போல நீதிபதி கற்பக விநாயகம் அதிமுக, நீதிபதி சந்துரு கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர்.

அதைப் போலவே  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஹிதயதுல்லா, இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்புக்கு வர, காங்கிரஸ் மீது விமர்சனத்தை எதிர்க்கட்சியினர் வைத்தனர்.  முன்னாள்  உச்ச  நீதமன்றத்தின் தலைமை நீதிபதிகள் கே.சுப்பாராவ், எச்.ஆர்.கன்னா மற்றும் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.

அவசரநிலை காலத்துக்குப் பின் ஜனதா ஆட்சி அமைந்து மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். பின் சரண்சிங் பிரதமர் ஆகி, அவர் ஆட்சி கவிழ்ந்தது, 1980இல் திரும்பவும்  இந்திரா   காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அன்றைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி, இந்திரா காந்தி வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சிக்கு வந்தது பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்: “You have become the symbol of hope and aspirations of the poor, hungry millions of India, who had so far nothing to hope for and nothing to live for.” அப்போதும் நீதிபதி பகவதி மீதும் விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த 1983இல் இந்திரா காந்தி காலத்தில் பஹருல் இஸ்லாம் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். நீதிபதி தல்வீர் பண்டாரியை கடந்த 2012இல் தி ஹேக்கிலுள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசு   பரிந்துரைத்த  போதும் விமர்சனங்கள் எழுந்தன.  நீதிபதி சதாசிவம் 2014இல் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டதுகடும்கண்டனத்துக்
குள்ளானது.

#உச்ச_நீதிமன்ற_முன்னாள்_நீதிபதிகள்-#அரசியல்_பதவிகளும்
#judges
#Supreme_Court 
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
23.03.2020.
#ksrpost


கித்தாய்ப்பாக ஒரு பார்வை பார்ப்பார் இந்த உலகத்தை” -#கிரா|லீலை, 2016: 74.

”அவர் கருப்பு வெத்திலைப் பிரியர். இந்தப் புகையிலை போடுகிறவர்கள் பெரும்பாலும் கருப்பு வெற்றிலைதான் வேணும் என்பார்கள். காரணம், போடுகிற புகையிலைக்கு ‘ஆசு’வாக நிக்கணுமாம். வெள்ளை வெற்றிலை என்றால் தண்ணீராய்க் கரைந்துவிடுமே என்பார்கள்.
சாப்பிட்டவுடன் ஒரு வெற்றிலை மெல்லுவது என்பதுதான் ஏற்பட்டது. அதுவும் திண்ணமான சாப்பாட்டை முடித்ததும் நாக்கே – வெட்கத்தை விட்டு – கேட்டுவிடும்; ஒரு வெத்திலை இருந்தா தேவலையே என்று.
வெறும் வாயை மெல்லுகிற தாத்தாவே கேட்பார்: வாயி நம நமங்கு, ஒரு வெத்திலை போட்டா நல்லா இருக்கும்.



இந்தக் கரும் வெத்திலைத் தாத்தா களிப்பாக்கைத் தூள் பண்ணி ஒரு சிறிய டப்பா நிறைய வைத்துக்கொள்வார். அவருக்கு இந்த லொட்டு லொட்டு என்ற வெத்திலை உரல் சத்தம் பிடிக்காது. டப்பாவைத் திறந்து உள்ளங்கையில் அளவாகத் தட்டி வாயில் இட்டுக்கொண்டு, நாலு வெற்றிலைகளை எடுத்து அவற்றின் முதுகில் சுண்ணாம்பு தடவி, நீட்டு வசத்தில் மடக்கி, கோழிக்குஞ்சின் கழுத்தைப் பிடித்துத் திருகுவது போலத் திருகி வாயில் அதக்கிக்கொண்டு தொடர்புவிட்டுப் போ9காமல் வெள்ளைப் புகையிலையையும் அதேபடிக்கு முறுக்கி ஒடித்து வாயில் இட்டு முத்தாய்ப்புக் கொடுத்து முடித்துவிட்டு, கித்தாய்ப்பாக ஒரு பார்வை பார்ப்பார் இந்த உலகத்தை” -#கிரா|லீலை, 2016: 74.

#ksrpost
23-3-2020.

*Sometimes you might feel like giving up on everything*.

*Sometimes you might feel like giving up on everything*. You might have both good  and bad days, but more bad than good or so it seems. Ever...