Saturday, March 14, 2020

இளையரசனேந்தல்_பிர்காவை #தூத்துக்குடி_மாவட்டத்தில்_சேர்க்க #வேண்டும்.

#இளையரசனேந்தல்_பிர்காவை #தூத்துக்குடி_மாவட்டத்தில்_சேர்க்க #வேண்டும்.
———————————————-
தூத்துக்குடி   மாவட்டத்தில் இளையரசனேந்தல் பிர்காவை 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை மூலம் இணைத்தது. அதனை தொடர்ந்து இடைவெளியில்  அனைத்து துறைகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்
பட்டு, நடைமுறைக்கு  வந்து விட்டது. ஆனால், குருவிகுளம்    ஊராட்சி ஒன்றியத்திலிருந்துபிரித்துகோவில்பட்டி யூனியனுடன் மற்றும்  தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்தில் மேற்படி 12 பகுதிகளை இணைக்காமல் சுமார் 12ஆண்டுகளாக  இழுத்தடிக்கபட்டு வந்தது.அதனை  கண்டித்து பல்வேறு
கட்டப்போராட்டங்கள், வழக்குகள், மனுக்கள்  உரிய முறையில், உரிய துறைக்கு மனுக்கள் அனுப்பியும் இதுவரை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக்கு நடைபெற்ற தேர்தலோடு,மேற்படிஇளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த12பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை. அதனால், 12 பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள் 50 ஆண்டுகால கோரிக்கை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தாலும், தமிழக அரசாலும் புறந்தள்ளப்பட்டது. தற்போது, கோவில்பட்டி யூனியனுக்கு ஊராட்சி ஒன்றிய தேர்தலும் நடத்தப்பட்டது. அதற்கான பொறுப்புகளுக்கான தேர்தல் முடிவு பெற்றுவிட்டது. அதனால், தமிழக அரசு தகுந்த உத்தரவுகள் மூலம் இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 பஞ்சாயத்துகளை உள்ளடக்கி இளையரசனேந்தல் தலைமை இடமாக கொண்டு புதிய யூனியனை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு வலியுறுத்தியும் , அத்துடன் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து எல்லைக்குள் கொண்டுவரவும், அத்துடன் மறுவரையறை செய்யப்பட்டு மேற்படி 12 பஞ்சாயத்துகளை  தென்காசி மாவட்ட பஞ்சாயத்து  கொண்டு    சென்றதை நியாயமற்ற நடவடிக்கை ஆகும்

உடனே இளையரசனேந்தல் பிர்காவை தூத்துக்குடி   மாவட்டத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#இளையரசனேந்தல்_பிர்காவை #தூத்துக்குடி_மாவட்டத்தில்_சேர்க்க #வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-03-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...