Monday, January 30, 2023

இன்றைக்கு இருக்கும் காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியவில்லை. அனந்தசாமியை பற்றி

#அன்றைய காங்கிரஸ் நிகழ்வுகள்….. 
—————————————
இன்றைக்கு இருக்கும் காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியவில்லை. 

அனந்தசாமி எனபவரை அன்றைக்கு காங்கிரஸில் இருந்த பழ.நெடுமாறன். எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம், ப.சிதம்பரம் என்.எஸ்.வி. சித்தன் ஆகியோருக்கு தெரிந்திருக்கலாம்.  ஒருக்கால் பீட்டர் அல்போன்ஸுக்கும் ஓரளவு தெரிந்திருக்கலாம். குமரி அனந்தன் அப்போது காங்கிரஸ் கட்சியில் இல்லை. கண்ணதாசன் அன்றைக்கு உயிரோடு இருந்தார். 
 
அனந்தசாமி காங்கிரசில் எந்தவொரு பொறுப்பும் வகிக்காமல் இருந்தாலும், அவரால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக ஆனதெல்லாம் உண்மை. அவரிடம் காங்கிரசில் இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனும், சி.சுப்பிரமணியமும், முன்னாள் முதல்வர் பக்தவத்சலமும் கூட சற்று  கவனமாக தூரமான நட்பையே வைத்திருந்தனர். அந்த அளவுக்கு அவர் ஆபத்தான மனிதர். 
 
சென்னையில் அறுபதுகளில் இருந்து 1983 வரை காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு முக்கிய பிரமுகராக அவர் திகழ்ந்தார்.  அவர் வீடு, ஆழ்வார்பேட்டை கவிதா ஓட்டலுக்கு எதிர்ப்புறம் இருந்தது. அவர் வீட்டின் முன்புறத்தில்தான் இப்போது பாலம் கட்டப்பட்டு பாலத்தின் இறுதிப் பகுதி உள்ளது. ரமணர், மகரிஷி படத்தை அனந்தசாமி வைத்துக் கொள்வார். ஆனால் அதற்கு மாறாக செய்வதெல்லாம் அயோக்கியத்தனமாக இருக்கும். 
  
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் நடந்தபோது, நெடுமாறனும், கருப்பையா மூப்பனாரும் போட்டியிட்டார்கள்.  அந்த தேர்தல் 10 ஆகஸ்ட் 1977  மயிலாப்பூர் சாயி பாபா திருமண மண்டபத்தில் நடந்தது. தஞ்சை ராமமூர்த்தி  3 ஆவது வேட்பாளராக நின்று  வாக்குகளைப் பிரித்துவிட்டார். திருநெல்வேலி செல்லப்பாண்டியன் வாக்களிக்கிறேன் என்று நெடுமாறனுக்கு உறுதி கொடுத்துவிட்டு,  வேறு சில வகையில் கடைசி நேரத்தில் மூப்பனாருக்கு வாக்களித்தார்.  இதனால்  மூப்பனார் வெற்றி பெற்றார். மூப்பனார் வெற்றியின் பின்புலத்தில் இந்த அனந்தசாமியின் வேலை இருந்தது. இந்த தேர்தல்தான்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கடைசி தலைவர் தேர்தல். அதற்குப் பிறகு இதுவரை தேர்தல் நடைபெறவில்லை. பி.வி.நரசிம்ம ராவ் அன்று நெடுமாறன் நலம் விரும்பியாகவும், பிரணப் முகர்ஜி மூப்பனார் பக்கம் இருந்தார்.அப்போது நான் மாணவர் காங்கிரஸ் நிர்வாகி.
  
அங்கு அனந்தசாமி என்னிடம் பேசிக் கொண்டு இருக்கும்போது தவறுதலாக சில வார்த்தைகளை விட்டுவிட்டார். எனக்கு அப்போது சின்ன வயது. ‘தாயோளி’ என்று எங்களூர் பாஷையில் அவரைத் திட்டிக் கொண்டே, எனது காலில் இருந்து செருப்பைக் கழற்றி அவரை அடிக்கப் போய்விட்டேன். அப்போது வந்து  என்னைத் தடுத்த அண்ணன் வாழப்பாடி ராமமூர்த்தியிடம் அனந்தசாமி என்னிடம் சொன்னதைச் சொன்னேன். அவருக்கும் கோபம் வந்துவிட்டது. அப்போது பொறையார் ஜம்பு, தி.சு.கிள்ளிவளவன்,. எம்.கே.டி.சுப்பிரமணியம், தமிழழகன், ஆர்.எஸ்.பாண்டியன், குன்னக்குடி தங்கவேலன், தின்டுக்கல் அழகர்சாமி,திருமாறன், வழக்கறிஞர்கள் நடனசாபாபதி, ஜேசய்யா ஆகியோர் இருந்ததாக எனக்கு நினைவு. இது நடந்து  ஏறத்தாழ  43-44 ஆண்டுகளாகிவிட்டன.
 
நல்லவர்களை  ஒழித்துக் கட்ட கூடிய மாமனிதராக வலம் வந்த அனந்தசாமி,  ஜெயந்தி நடராஜன் போன்றவர்களுக்கு எல்லாம் நல்லவராகவே இருந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஆஷாடபூதிகள் வெட்கமில்லாமல், மானமில்லாமல் மாமனிதர்களாக இருக்கிறார்கள். அனந்தசாமி ஒரு குடிலனைப்  போன்றவர். சமீபத்திய தினமலரில் அவரைப் பற்றி படிக்கும்போது,  எனக்கு அவரைப் பற்றிய பழைய நினைவுகள் வந்தன. தினமலரில் வந்ததையும் இத்துடன் இணைத்து இருக்கிறேன்.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 
#KSR_Post
30-1-2023.

https://imgg.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3224673.jpg?w=400&dpr=3.0

#Magna Carta

#Magna Carta 
—————————-

Although King John accepting the Magna Carta is today hailed as a landmark moment in the development of liberty, justice, and equality, at the moment of its signing in 1215, it mattered only to the king - who was being forced into signing it - and the 25 nobles who were doing the forcing. Within a matter of months, King John held the document to be invalid. For a time, it looked as if the Magna Carta would be, at best, a footnote in history. However, because of how terrible of a king John was, how quickly he died after signing it, how young his heir was, and how it got reinterpreted by future generations; the document was destined to birth an age of liberty and to lay the foundations for the English Common Law. Magna Carta was a myth that became a miraculous reality.
. . .

Eleanor of Aquitaine’s marriage to the future King Henry II in 1152 helped lay the foundation for the Angevin Empire, which encompassed almost all of Britain and most of what we think of as France today. Desiring to keep the power that came from such lands intact instead of divided among sons, initially, Henry II planned to leave nothing to their son John, who came to have the nickname Lackland. Ironically, John outlived his brothers and took the throne in 1199, but as king of England, his nickname proved to be prophetic; he quickly managed to lose most of the lands he had inherited. Further, he so enraged the pope that all of England was put under interdict for six years, which meant that no sacraments or masses could be performed.

King John leaned far too heavily on his nobles in trying to hold onto his empire. Needing money to fight his wars, he did what many kings of England had done in earlier days: He levied taxes on his nobles, which technically, he had the right to do. But John went to the well far too often, and by 1215, his nobles had had enough. They even entertained the idea of inviting the king of France to cross the channel and claim England for himself.

In the face of outright rebellion, John had no choice but to meet with his barons and agree to their terms at Runnymede. This was definitely a turning point in the medieval world, but not a turning point in the way that we often imagine it. John agreed to a series of articles - essentially a peace treaty - that severely limited the power of the monarchy in a way that had not been effected anywhere in the medieval world before this time, but very little changed initially.
. . .

The Magna Carta, as it came to be called much later, does not represent a triumph of the common man. It is, first and foremost, a document concerned with protecting the interests of the 25 nobles who presented it under threat of rebellion against the crown. The document helped some other people at the top of the social hierarchy, but for 90 percent of English society, the signing of the Magna Carta was a complete non-event.

The Magna Carta has 63 articles, and those that are most often hailed as a great leap forward for humanity are numbered 38, 39, and 40. Read from a modern vantage point, clauses 38 and 39 seem to articulate the right to trial by jury, but at the time, they meant that none of John’s nobles should have to accept his decisions unless they agreed to do so as a group. And Clause 40, when read on its own, seems a defiant articulation of the rights of all people: “To no one will we sell, to no one deny or delay right or justice.” At last, this seems a statement about human rights and dignity, freedom and justice - except for the fact that this clause, and 38, and 39, are buried deep in the middle of the document. These clauses come after others relating to the theft of firewood; fish traps cluttering up the Thames; and standard weights and measures for wine, ale, and corn. They are diluted still further by the fact that they are not even the dramatic climax of the document. After the bit about never denying or delaying justice, the Magna Carta shifts its focus to merchants moving in and out of the country, forest rights, whether the Crusading movement should continue, and removing from office anyone related to, or a friend of, some guy named Gerard of Athee - who apparently wasn’t very popular.

John also had to agree to give back lands and titles that he had taken from various nobles and to accept the authority of a council of barons who would have the right to censure his behavior. In other words, for the first time, a king agreed to have his power limited by his vassals. In this act, many historians have seen the beginnings of the English Parliament.
. . .

Crucial to the history of the Magna Carta, when John agreed to accept the articles in 1215, he did not do so willingly. Just after giving his formal agreement, John appealed to the pope to declare the document unenforceable and without significance. Pope Innocent III issued a papal bull nullifying the Magna Carta just three months after it’s signing. This caused outrage among the barons, and things got even worse for John. His popularity sank, and he was forced to drain the royal treasury putting down rebellions. He then died of dysentery in October of 1216, leaving his nine-year-old son, Henry III, to succeed him.

At first, it seemed that Henry III might be removed as king in favor of someone who was more mature and skilled in warfare and diplomacy. Such a person did emerge, but he did not try to take the throne for himself; rather, he sought to save it for Henry by reaffirming the articles of the Great Charter. This man was William the Marshall, who had survived a threat of hanging from King Stephen and gone on to become the most universally admired knight in the land. It was William’s loyalty, along with his recognition that something drastic had to happen in order to keep Henry III on the throne, that gave the Magna Carta new life.

In 1216, William made a point of reissuing the charter in the name of Henry, and while he kept the bulk of the document intact, he carefully and cleverly amended certain clauses to appeal to the greatest population of nobles. This was a brilliant move, but again, we should note that peasants, traders, and craftsmen figured in the document only insofar as they had anything to do with the concerns of the nobles.

Later on, Henry would reissue the charter under his own authority, and later kings would follow suit. Over time, it became customary for the full text of the Magna Carta to be reissued every year and, later, read aloud in public. Without this oral reading, there would be no way for the average person to know what the document contained since few could read. As time passed, it was the “average person” who would come to be most deeply invested in the charter.
. . .

Neither King John, nor his barons, nor William Marshall, nor Henry III could have imagined what the events of that June day at Runymede in 1215 would eventually produce. Neither could they see, from their perspective, how the moment when a king agreed - against his will - to a contract he never intended to keep, would ultimately transform the entire world.

In the 17th century, lawyers in England, principally Sir Edward Coke, began to assert that the Magna Carta stated basic principles of law, arguing that there needed to be limits on the powers of the king, and that this document had been affirming that idea for centuries. When Englishmen began setting up colonies in the Americas, they ran with Coke’s idea and began quoting the Great Charter in their colonial laws. The document was later cited by the Founding Fathers of the United States and by those who fought in the French Revolution. And its name was placed in the United Nation Universal Declaration of Human Rights.

Every time someone pointed to the values described in the Magna Carta as an inspiration, the significance of the moment of the initial agreement was enlarged and enhanced. Eventually, the barons at Runymede became mythologized as freedom fighters against the crown. But in fact, striking a blow for human rights was not on the minds of these nobles. As men who believed in the class hierarchy of their age, most of them probably would have been horrified and confused at the idea that the document suggested an earl might have something in common with a blacksmith or a knight with a farmer.

Still, King John’s acceptance of the Magna Carta stands as a massively pivotal moment because without his agreement to its articles - reluctant as it was - the English system of law and justice might not have developed along the lines it eventually did. If that hadn’t happened, one could go so far as to suggest that the United States, the modern nation of France, and the international body of the United Nations would not exist in the forms they do today. It truly was a magnificent myth that became a reality.
. . .

“In 1215 the Magna Carta was nothing more than a failed peace treaty. John was not to know - any more than the barons who negotiated its terms with him would have done - that his name and the myth of the document sealed at Runnymede would be bound together in English history forever. Yet this, in the long run, was the case. The Magna Carta would be reissued time and again in the years immediately following John’s death, and interpreting this intricate document on the limits of the powers of a king would be at the heart of every constitutional battle that was fought during the thirteenth and fourteenth centuries. As Henry III struggled to regain the rights and territories that his father had lost, the great charter gradually came to define the terms of engagement between king and community. When it was reissued in 1225, the Magna Carta was nailed to church doors and displayed in town squares across England, gaining legendary status as a document whose spirit stood for the duty of English kings to govern within the laws they made. That, in a strange way, was John’s legacy. Perhaps the most ruthless legalist ever to reign as English king would have appreciated the irony.” (Jones)

Today, some scholars have attempted to rehabilitate John and make excuses or offer up explanations for his behavior as king, arguing that he really wasn’t that bad. Yes he was that bad - a brutal and terrible king. There is no way to put it nicely: He was a dismal failure in almost every way imaginable. But it was precisely his ineptitude that gave us the liberty of the English Common Law.

. . .

Book Sources:

    - “The Plantagenets: The Warrior Kings and Queens Who Made England” by Dan Jones

    - “Magna Carta: The Birth of Liberty” by Dan Jones

    - “A Brief History of Liberty” by David Schmidtz and Jason Brennan

Picture: “King John Signing the Magna Carta Reluctantly” painting by Arthur C. Michael


அரசியல் ஒரு தவம் என்பது மாறி வியாபாரம் ஆகி விட்டது.

இன்றைய அரசியல்; மானம் கெட்ட அடிமை, மூடர், பாசாங் கூட்டம். இதையும் இங்கு கொண்டாடும் இழி நிலையை என்ன சொல்ல, அரசியல் ஒரு தவம் என்பது மாறி வியாபாரம் ஆகி விட்டது. அறம் சார் நெறிகள் மாறிவிட்டன. இதுவும்இருண்டகற்காலம்தான்..வெறும்  எங்க மண், அவர் பூமி என பேசுவதும் (முட்டாள்) வேடிக்கைதான்

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு... ***** ‘முதற் சங்கு அமுதூட்டும் மொய்குழலார் ஆசை நடுச்சங்கம் - நல்விலங்கு பூட்டும் கடைச் சங்கம் ஆம்போதது ஊதூம் அம்மட்டோ? இம்மட்டோ? நம் பூமி வாழ்ந்த நலம்.’ - பட்டினத்தார்

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு...
*****

‘முதற் சங்கு அமுதூட்டும் மொய்குழலார்
ஆசை நடுச்சங்கம் - நல்விலங்கு பூட்டும்
கடைச் சங்கம் ஆம்போதது ஊதூம் அம்மட்டோ? இம்மட்டோ? நம் பூமி வாழ்ந்த நலம்.’
- பட்டினத்தார்

ஆகஸ்ட் 2012 - இல் #டெசோ மாநாடு தலைவர் கலைஞர் தலைமையில் நடந்ததை நீங்கள் மறந்திருக்கலாம். அந்த மாநாட்டுக்கு நான் பணிகள் செய்ததையும் மறந்திருக்கலாம். அதைப் பற்றி பேசவில்லை. கட்சிக்காக உழைத்தது யார், எவர் என்று கூட உங்களுக்கு நினைவிருக்காது. அது உங்களுடைய வாடிக்கை. இது விடயம் அல்ல. 
 
நீங்கள் நேரடியாகச் சந்தித்துக் கௌரவித்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 2012 - இல் சென்னைக்கு வந்திருந்தார். போட் கிளப்பில் அவரைச் சந்தித்து கலைஞர் சார்பில் அவரை டெசோ மாநாட்டுக்கு அழைத்தேன். ஆனால் அவர் மாநாட்டுக்கு வரவில்லை. அவர் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. பிற இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிங்கள அரசுயோடு சேர்ந்து டெசோ மாநாட்டுக்கு வரவிடாமல் தடுத்தார். இது உங்களுக்குத் தெரியுமா?
  
இன்றைக்கு உங்களையும் உங்கள் தங்கை கனிமொழியையும் சுமந்திரன் சந்தித்துவிட்டு பந்தாவாக நாட்டுக்குத் திரும்புகிறார். கனிமொழி கருணாக்களும் தேவை - தலைவர் பிரபாகரனும் வேண்டாம் 13-வது திருத்தமும் காணும் -பேருக்கு ஈழமும் வேணும்' என்பார் சுமந்திரன்.
 
முள்ளிவாய்க்கால் துயரத்தின்போது, திமுகவையும் கலைஞரையும் கடுமையாகச் சாடிய வைகோ போன்ற பலரையும் தோழமையோடு ஏற்றுக் கொள்வீர்கள். சுமந்திரனையும் ஏற்றுக் கொள்வீர்கள். முள்ளிவாய்க்கால் பிரச்னையால் ஏற்பட்ட அவப்பெயரை நீக்க அரும் பாடுபட்ட என்னை இடைநீக்கம் செய்வீர்கள். இதுதான் உங்களுடைய நடவடிக்கை. 
அன்றைக்கு வைகோ ‘குய்யோமுறையோ’ என்று கலைஞர், திமுகவை சாடியவர். அவர் இப்போது உங்களுக்கு நல்லவர். சுமந்திரனும் உங்களுக்கு நல்லவர். நீங்களும் உங்கள் தங்கையும் கனிமொழி நன்றாக இருங்கள். இதுதான் உங்கள் அரசியல். நான் என்ன சொல்ல முடியும்?  
 இதுதான் நீங்கள் சொல்லும் திராவிட மாடலா? திரவிடியன் மாடல், திரவிடியன் ஸ்டாக் இரண்டையும் வேறுபடுத்தி உங்களால் பேச முடியுமா?

யார் யாரே வில்சன், இளங்கோ,நாமக்கல் யாரோ ராஜிஷ் குமார், யாரோ ஒரு பாய்
அப்துல்லாவாம் . உங்களுக்கு உழைப்பை கொடுத்தவர்களை புறக்கணிப்பால் அவர்கள் ஒன்றும் வீழ்ந்து விட மாட்டார்கள். நேற்று வரை திமுக கலைஞரை திட்டி தீர்தவர்கள் பதவிகள்,உங்கள் ஆட்சியில் மரியாதைகள்…. நடத்துங்கள். பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி; இணையத்தில் சம்பள ஆட்களை வைத்து புகழ் வார்த்தைகளை பரபரவென்று  சொல்வது,பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் நிலை.கலைஞர் கால இயல்புகள் வேறு ஆனால் இன்று முற்றிலும்  மாறாக ஜெயலலிதா மாதிரியான போக்குகள் ….

எப்படியோ ஆட்சி வந்து விட்டது என நினைக்க வேண்டும் மிஸ்டர் (இன்றைய) சீப் மினிஸ்டர். எதுவும் நிறந்தர மற்றது.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 
#KSR_Post
30-1-2023.

Sunday, January 29, 2023

இவர்கள் தான் காட்டுமிராண்டிகள். அடுத்த மனிதனின் நம்பிக்கைகளைத் தகர்க்க இவர்கள் யார் ?

நூறு வருட கோயிலை இடித்தேன்.. சரஸ்வதி லட்சுமி பார்வதி கோயிலை இடித்தேன்.. டி.ஆர்.பாலு ஒப்புதல்…
இது ஒரு பெருமை! தாரளமாக எவர் கையும் வெட்டுங்கள்.
கோவில் ,சர்ச், மசூதி இடியுங்கள். வாழ்க உங்கள் மக்கள் பணி.

இவர்கள் தான் காட்டுமிராண்டிகள்.
அடுத்த மனிதனின்
நம்பிக்கைகளைத்
தகர்க்க இவர்கள் 
யார் ?
எவ்வளவு சோதனைகள் வந்தாலும்  கடவுளை வணங்கமாட்டேன் என்று  நெஞ்சிலே கை வைத்து  சத்தியம் செய்யும் திக ஆட்கள் இன்று 1000 பேர் இருப்பார்களா ?
மற்றவர் உணர்வை மதிக்க வேண்டும் என்று தானே அண்ணா 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'என்று இறங்கி வந்தார்.

Saturday, January 28, 2023

இன்றைக்கு உண்மைகளையும் யதார்த்தங்களையும் சொன்னால் யாரும் கேட்பதற்குத் தயாரில்லை.

இன்றைக்கு உண்மைகளையும் யதார்த்தங்களையும் சொன்னால் யாரும் கேட்பதற்குத் தயாரில்லை. அவர்களே ஒரு புள்ளியை வைத்துக் கொண்டு இதுதான் உண்மை, இதுதான் வரலாறு என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.சொல்லி எழுதி ஆவன படத்தவேண்டும் என்கின்றனர். பிழையாக விதண்டாவாதமும், பித்தலாட்டமும் செய்கிறபோது என்ன சொல்ல?
 
இன்றைய இளைஞர்கள் கணினியிலும், செல்பேசியிலும் விரல்நுனிகளில் தெரிந்து கொள்கிற உலகத்தைத் தவிர, வேறு எதையும் தெரிந்து கொள்வதில்லை. இன்றைய சமுதாயத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், ஜெயபிரகாஷ்நாராயணன், தமிழகத்தில் ஓமந்தூரார், குமாரசாமி என்று சொன்னால் அவர்களைப் பற்றி எதுவும் தெரிவதில்லை. 
 
எனது முகநூல் பதிவில் ஆட்சி, அதிகாரம், அரசு பரிவாரத்தைவிட ஜனநாயம் மேலானது என்று பதிவிட்டிருந்தேன். ஜனநாயத்துக்குப் பிறகுதான் ஆட்சியும் அதிகாரமும். ஜனநாயம் இல்லாமல் குடியரசு இல்லை. இரண்டும் பிரிக்க முடியாதவை. ரயில் தண்டவாளங்களைப் போல ஒரே திசை நோக்கி இரண்டு பயணிக்க வேண்டும். இதில் மாறுபட்டால் எல்லாம் தடம் மாறிவிடும். 
 
எல்லாவற்றுக்கும் மேலானது மனிதம். மனிதத்தை அடிப்படையாகக் கொள்ளாத ஜனநாயகம், குடியரசு, ஆட்சி, அதிகாரம் எல்லாம் பயனில்லாதது. இவற்றையெல்லாம் இன்று புரிந்து கொள்ளும் சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது. என்ன சொல்ல?
இங்கு சாதி, மதம், கட்சி தலமைக்கு அடிமை என்ற வைத்த அரசியலில் இயங்கும் மூடர் கூட்டத்தை என்ன சொல்ல.

#KSR_Post
28-1-2023.

Friday, January 27, 2023

உண்மையை உரத்துச் சொல்லவே இந்த ‘ஒரு சொல் ’ ! ***** திமுக ஆட்சியில் இல்லாத காலங்களில், யார் யார் எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள் என்பதை ‘ஒரு சொல் ’ என்ற தலைப்பில் பதிவிட இருக்கிறேன்.

உண்மையை உரத்துச் சொல்லவே இந்த ‘ஒரு சொல் ’ !
*****
திமுக ஆட்சியில் இல்லாத காலங்களில், யார் யார் எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள் என்பதை ‘ஒரு சொல் ’ என்ற தலைப்பில் பதிவிட இருக்கிறேன். 
 
கவர்னர் சென்னா ரெட்டியைப் பற்றி ஜெயலலிதா  குறிப்பிட்டதைப் போல, ஒரு பெண்மணி குமுதம் ஏட்டுக்கு அளித்த ஒரு பேட்டியில் கலைஞரைப் பற்றி  தப்பும் தவறுமாகச் சொன்னார். திமுக  ஆட்சியில்  இப்போது அவருக்கு விருது வழங்கப்படுகிறது. 

திமுக ஆட்சியில் இருந்தால் நான் திமுகவில் இருந்தது இல்லை இருக்கவும் முடியாது. எதிர் கட்சியாக திமுக இருந்தால் திமுகவில் நான் இருக்க முடியும்.எனது 52 ஆண்டுகளில் அரசியியல்  பயணத்தில் 38 ஆண்டுகள் திமுகவில்  நான் பார்த்தது.

முள்ளிவாய்க்கால் பிரச்னை, ஜெயலலிதா வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றம் செய்வதற்காக செய்த அடிப்படை வேலைகள்,  ஜெயலலிதா ஆட்சியில்  நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது அது தொடர்பான  சிடியை சன் டிவிக்கு நான்  கொண்டு சென்றது, கனிமொழி பிரச்னை, ஜெயலலிதா ஆட்சியின்போது இன்றைய முதல்வர் வேளச்சேரி வீட்டில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது நான் ஆற்றிய பணிகள், மறுநாள் இன்றைய முதல்வரின் துணைவியாரை மனித உரிமை ஆணையத்துக்கு அழைத்துச் சென்றது, அண்ணாநகர் ரமேஷ் தற்கொலை என  இப்படியான பல விடயங்களில் திமுகவுக்காக உழைத்த நான்,  தற்போது இடைநீக்கம் என்ற திமுகவில் அரிய விருதை பெற்றுள்ளேன். திமுகவுக்கு மிக்க நன்றி.

ஆனால், நேற்று வரை திமுகவைத் திட்டியவர்கள், எதிர்வினையில் இருந்தவர்கள்,திமுகவிற்காக  எதுவும் செய்யாதவர்களுக்கு எல்லாம் இன்று பெரிய பதவிகள், அந்தஸ்துகள்.  என்னதான் நடக்கிறது திமுகவில்? 
 
உண்மையைப் பேசுவது தவறில்லை. உண்மையை தமிழ் கூறும் நல்லுலகம் அறிய வேண்டும். நான் பேசாவிட்டால்  உண்மையில் நிகழ்ந்தவை எதுவும் வெளியே தெரிய வராது. வரலாற்றின் பக்கங்களிலும் பதிவு பெறாது. உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தினமும்  ஒரு  சிறிய பதிவை ‘ஒரு சொல் ’ என்ற தலைப்பில்  பதிவிட இருக்கிறேன். 
 
இது யாரையும் குறை சொல்வதற்கோ, பழி பாவத்திற்கோ அல்ல.  வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டால், உண்மை வெளியே தெரியாமல் போய்விடும்  என்பதற்காகத்தான் பேச வேண்டியிருக்கிறது. #தகுதியே_தடை என்ற நிலையில் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் என்னைப் போல களப்பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டவர்கள் எல்லாம் எந்தவித காரணமும் இன்றி ஒதுக்கப்படுவதும், எதுவுமே செய்யாமல் - சில நேரங்களில் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள்  கூட அங்கீகரிக்கப்படுவதும் எந்தவிதத்தில் நியாயம்?  உண்மையை உரத்துச் சொல்லவே இந்த ‘ஒரு சொல் ’.
********

என்னை அழித்தாலும்
என் எழுத்தை அழிக்க இயலாது
என் எழுத்தை அழித்தாலும்
அதன் சப்தத்தை அழிக்க இயலாது
என் சப்தத்தை அழித்தாலும்
அதன் எதிரொலியை அழிக்க இயலாது
என் எதிரொலியை அழித்தாலும்
அதன் உலகத்தை அழிக்க இயலாது
என் உலகத்தை அழித்தாலும்
அதன் நட்சத்திரக் கூட்டங்களை அழிக்க இயலாது
என் நட்சத்திரக் கூட்டங்களை அழித்தாலும்
அதன் ஒழுங்கை அழிக்க இயலாது
என் ஒழுங்கை அழித்தாலும்
அதன் உள்ளழகை அழிக்க இயலாது
என் உள்ளழகை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
என்னை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது

அழிப்பது இயல்பு
தோன்றுவது இயற்கை....

- #ஆத்மாநாம்
—————-
(உ-ம்)முள்ளிவாய்க்கால் கொடுமையின் பின் திமுகவுக்கு கலைஞர் காலத்தில் என் பணி, உழைப்பை பெற்றபோது இப்படியான பேச்சுகள் இருந்தன. அன்று திமுகவை சாடியவர்களுக்கு  எல்லாம் இன்று பதவிகள்.எனக்கு இடை நீக்கம் என்ற திமுக விருது. யார் இந்த வில்சன் இளங்கோ அப்துல்லா இப்படி பலர். மிக்க நன்றி முதல்வர் ஸ்டாலின் அவர்களே)

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 

#KSR_Post.
27-1-2023.


முத்துப்பழனியும் #செங்கோட்டை ஆவுடையக்காளும்!

இன்றைய (27-1-2023) தினமணியில் முத்துப்பழனியும் செங்கோட்டை ஆவுடையக்காளும்! என்ற எனது கட்டுரை
—————————————
#முத்துப்பழனியும் #செங்கோட்டை ஆவுடையக்காளும்!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
*****
தஞ்சை தமிழ் மண் களத்தின் காவியமான ‘ராதிகா சாந்தவனமு’ மூலம் தெலுங்கு இலக்கியத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியவர் முத்துப்பழனி.   பின் நவீனத்துவம் என்பது ஏதோ மேலை நாட்டில் இருந்து வந்ததாக நமது சிந்தனைகள் ஓடுகின்றன. உண்மையில் ஔவையின் பாக்களிலும், ஆண்டாள், காரைக்கால் அம்மையார், முத்துபழனியின் ராதிகா சந்தாவனம், ஆவுடையக்காள் கவிதைகள், அகநானூறு என்று தமிழில் சொல்லப்பட்ட வரிகளிலும் பின்நவீனத்துவம் இருக்கிறது என்பதை உணரத் தவறுகின்றோம். 



 18 - ஆம் நூற்றாண்டில்  தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னரான பிரதாபசிம்ஹா ராஜா தென்னாட்டு வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டிருந்தார். 1730 முதல் 1763 வரை இவர் தஞ்சையை ஆண்டு வந்தார்.
 பிரதாபசிம்ஹா ராஜாவின் அரண்மனையில் பல தேவதாசிகள் உயரிய அந்தஸ்துடன் இருந்து வந்தனர். அப்படிப்பட்ட பல தேவதாசிகளில் ‘முத்துப்பழனி’ (1739 -1790) எனும் பெயர் கொண்ட தேவதாசி அவருடைய ஆசை நாயகியாக இருந்தார். தஞ்சை நாயகி என்ற கணிகையின் பேத்தி இவர். அரசவை நடன மாதாக இருந்த முத்துப்பழனி, கலைகளில் தேர்ச்சியும் பன்மொழிப் புலமையும் வாய்ந்தவராகவும் இருந்திருக்கிறார். அரசனுக்கே ஆலோசனை சொல்பவராகவும் இருந்திருக்கிறார்.
முத்துபழனி ஆண்டாளின் திருப்பாவையைத் தெலுங்கில் மொழிபெயர்த்தவர். சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப் படிக்கத் தெரிந்தவர். இசை, இலக்கியம், நடனம் அனைத்திலும் கைதேர்ந்தவர். கவிதைகளை எழுதுவதோடு மட்டுமல்லாமல், ஏழு வரி வசனம் என்ற ஒரு புதிய உரைநடை வடிவத்தை அறிமுகம் செய்திருக்கிறார். அதை சப்தபதம் என்று அழைத்தார். ஆண்டாளின் திருப்பாவையையொட்டி அதே போல தெலுங்கில் ஒரு காவியத்தை இயற்றினார் முத்துபழனி. அவர் எழுதிய அந்த காவியம்தான் ‘ராதிகா சாந்தவனம்’.   
இலாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளும் கிருஷ்ணன் முதல் மனைவியான ராதாவை சமாதானப்படுத்துவது போல அமைந்த பாடல்களைக் கொண்டதால் ‘ராதிகா சாந்தவனம்’ என்று அழைக்கப்பட்டது இந்நூல். 
பெண்ணின் பார்வையில் காமவுணர்வுகளையும் பாலின்ப அனுபவத்தையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகள் கொண்டது இந்நூல். பேச்சுவழக்கில் உள்ள பழமொழிகள், மரபுத் தொடர்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. 
தெலுங்கு – ஆங்கில அகராதியை வெளியிட்ட சார்லஸ் பிலிப் ப்ரவுன் என்பவர் கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலகத்தில் ராதிகா சாந்தவனத்தின் ஓலைச்சுவடியைப் பார்த்திருக்கிறார். இந்த ஓலைச்சுவடி 1887- இல் திருக்கடையூர் கிருஷ்ணாராவ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பின்னர் இது அதிபதி வெங்கட்டன்னராசு என்பவரின் மேற்பார்வையில் 1907- இல் மறு அச்சு செய்யப்பட்டது. காமத்தைத் தூண்டும் பாடல்கள் இருப்பதாகக் கருதப்பட்டதால், அது  முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை.
ராதிகா சாந்தவனம் 584 பாடல்களைக் கொண்டது. சந்தியா முல்சந்தானியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The Appeasement of Radhika என்னும் நூலாகப் பென்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  
பின்னர், தேவதாசி மரபில் வந்த நாகரத்தினம்மா அந்தக் கவிதைகளை முழுமையாகக் கண்டுபிடித்து – தன்னிடம் இருந்த மூல ஓலைச்சுவடிகளின் அடிப்படையில் 1910- இல் பதிப்பித்தார். தியாகராஜ பாகவதரின் சிஷ்யையான நாகரத்தினம்மா, திருவையாறில் தியாராஜ பாகவதருக்கு நினைவு மண்டபம் கட்டும் பணிக்கு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகராஜ பாகவதரின் சமாதிக்கு அருகே அவருக்குக் கோயில் கட்டினார். ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் நினைவு நாளில் இசைத் திருவிழா ஒன்றை நடத்தினார். அது பின்னர் ஒவ்வோராண்டும் நடைபெறும் வருடாந்திரக் கச்சேரியாக மாறியது.  
நாகரத்தினம்மா ராதிகா சாந்தவனத்தை வெளியிட்டதும் அது அப்போது கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. குறிப்பாக கந்துகுரி வீரசேலிங்கம் பந்துலு   என்கிற இலக்கிய விமர்சகர் கடுமையாக எதிர்த்தார். ராதிகா சாந்தவனத்தை ஆபாசமான பிரதி எனவும் அதை எழுதியிருப்பவர் ‘தரம் கெட்டவர்' எனவும் எதிர்ப்பாளர்கள் சொன்னார்கள். இசைச் கலைஞர்கள், கோயில் நடனமாதர்கள் ஆகிய இருவரும் பொதுமக்களுடன் பழகினால், கருத்துகளைப் பகிர்ந்து கொண்டால், ஏற்கெனவே உள்ள மக்களின் பண்பாட்டில் அது பாதிப்பை ஏற்படுத்தும் பொது மக்களின் ஒழுக்கத்தை தாக்கி, அதைச் சீரழிக்கும் என்றனர். முத்துப்பழனி என்ற தேவதாசியால் எழுதப்பட்டதும், தேவதாசியான நாகரத்தினம்மாவால் பதிப்பிக்கப்பட்டதுமான ராதிகா சாந்தவனம் பொதுமக்களின் பண்பாட்டைச் சீரழிக்கும் என்ற அவர்களின் கருத்துகள் அப்போது வலுவாக இருந்தது. இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 292 ஆவது  பிரிவின் கீழ் முத்துப்பழனியின் படைப்பின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராகக் கடுமையாகப் போராடினார் நாகரத்தினம்மா. ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லை
 சென்னை காவல்துறை டெபுடி கமிஷனர் கன்னிங்ஹாம் தலைமையில் ஒரு குழு  1911 மே மாதம் நடத்திய ஆய்வில் மொத்தம் 18 நூல்களை ஆபாசம் என்று முடிவுக்கு வந்து ஒரு பட்டியல் தயாரித்தது. அதில் இரண்டாமிடத்தில் நாகரத்தினம்மா பிரசுரித்த முத்துப்பழனியின் ராதிகா சாந்தவனம் இருந்தது. நூல் தடை செய்யப்பட்டது.
 இந்திய விடுதலைக்குப் பின்பு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த  தங்குதுரி பிரகாசம் இந்நூலின் மீதான தடையை நீக்கினார். தடையை நீக்கிய பின்பு அவர் பெருமிதத்தோடு சொன்னார் : “தெலுங்கு இலக்கியத்தின் அணிகலனில் சில முத்துக்களை மீண்டும் பதித்திருக்கிறேன்”.
இன்றும் கூட, பெண் கவிஞர்கள் எழுதத் தயங்கும் பாலியல் இச்சைமிகுந்த சொற்களை 17 - ஆம் நூற்றாண்டிலேயே எழுதியிருக்கிறார் முத்துப்பழனி. ஒரு பெண்ணின் முதல் பாலியல் அனுபவம், இன்னொரு பெண் மீது கணவன் விருப்பம் கொள்ளும்போது எழும் பொறாமையுணர்வு என்று பெண்ணின் அகவுணர்வுகளை மிகத் துல்லியமாக முன் வைத்த கவிதைகள் முத்துப்பழனியுடையவை.     
சங்கப்பாடல்களின் தொடர்ச்சியை முத்துபழனியின் பாடல்களில் பார்க்க முடிகிறது. ஆண்டாள் எழுதிய பதத்தை வேறு வகையான வாக்கிய அமைப்பில் தெலுங்கில் எழுதியிருக்கிறார்  
மிகச் சிக்கலான உளவியலைக் கூட மிக எளிதாக எழுதும் திறன் பெற்ற முத்துபழனி, “ஒருத்தியால் விலையுயர்ந்த ஆபரணங்களை விட்டுக் கொடுக்க முடியும்; உறவுகளையும் மதிப்புமிக்க பொருள்களையும் விட்டுக் கொடுக்கமுடியும்; ஆனால், வாழ்வை விட்டுக்கொடுக்க முடியுமா” எனக் கேட்டிருக்கிறார். இந்தக் கேள்வி அவருடைய தனிப்பட்ட வாழ்விலிருந்தும் சூழலிலிருந்தும் பிறந்தவை.  
ஆணாதிக்கச் சமூகத்தின் இலக்கணம், கற்பு, ஒழுக்கவாதம் எல்லாவற்றையும் அத்துமீறிய இந்தக் காதலையும் அச்சம், மடம், நாணங்களை உதறித் தள்ளிய பெண்ணுடலையும் படைத்துக் காட்டியவர் முத்துப்பழனி.  
ராதிகா சாந்தவனத்தை தமிழில் மொழிபெயர்த்து சகோதரிகள் கவிஞர்  அ.வெண்ணிலா, கவிஞர் மதுமிதா நூலாகக் கொண்டு வர இருக்கின்றனர். இதை ஏற்கெனவே தில்லி பல்கலைக்கழக தமிழ் பேராசிரியை முனைவர் தி.உமாதேவி மொழிபெயர்த்து காவ்யா பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. ஆதிரா முல்லை, ஆர்.ஆர்.சீனிவாசன், கவிஞர் குட்டி ரேவதி ஆகியோரின் முன்னெடுப்பு பணியில் ராதிகா சந்தவனத்தை தமிழில் கொண்டு வர முயன்றேன். கவிஞர் வெண்ணிலாவும் கவிஞர் மதுமிதாவும் அதைக் கொண்டு வர இருப்பதால், அதை நிறுத்திவிட்டு, ஆவுடையக்காள் பாக்களை மட்டும் திரும்பவும் நூல் வடிவில் கொண்டு வர பணிகள் நடக்கின்றன.
முத்துப்பழனியைப் போல அல்லாமல், வேறுபட்ட திசையில் அதேசமயம் பெண்ணின் வலிகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்திய இன்னொரு பெண் கவிஞர் செங்கோட்டை ஆவுடையக்காள். 
ஆவுடையக்காள் செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவர் எப்போது பிறந்தார் என்பதற்கான துல்லியமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. கி.பி. 1655–1695 இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் பிறந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.  
அவருக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. சிறுவயதிலேயே பருவமடைவதற்கு முன்பே இவர் விதவையானார் 
கணவனை இழந்த கைம்பெண்ணாக வீட்டுக்குள் வளர்ந்து வந்த அவருக்கு ஊராரின் எதிர்ப்பையும் மீறி அவருடைய தாயார், பண்டிதர்களை வீட்டுக்கே வரவழைத்து ஆவுடையக்காளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடுகளைச் செய்தார். அதனால் கல்வியறிவும், சிந்தனைத் திறனும் ஆவுடையக்காளுக்கு ஏற்பட்டது.
தற்செயலாக அந்த ஊருக்கு அப்போது வருகை புரிந்த ஸ்ரீவெங்கடேசர் என்னும் துறவி , ஆவுடையக்காளின் அகம் விழிப்புறும் வகையில் ஞானத்தை வழங்கிவிட்டு மறைந்து போனார். அத்துறவியை ஆவுடையக்காள் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்லிய ஊர்க்காரர்கள் அவரை சாதி நீக்கம் செய்தார்கள். சிறிதுநாட்களில் ஆவுடையக்காள் அந்த ஊரைவிட்டு வெளியேறிவிட்டார்.
 திருச்சிக்கு அருகே உள்ள ஒரு மடத்தில் மீண்டும் துறவியைச் சந்தித்த ஆவுடையக்காளுக்கு உபதேசமும் ஆசியும் வழங்கிய ஸ்ரீவெங்கடேசர் என்ற அந்த துறவி. ஆவுடையக்காளை செங்கோட்டைக்கே சென்று தங்கியிருக்கும்படி சொல்லி விட்டுச் சென்றார்.
இதற்கிடைப்பட்ட காலத்தில் அத்வைத உண்மைகளை விளக்கும் பாடல்களை ஆவுடையக்காள் பாடினார். அவை எங்கெங்கும் பரவி, அவருக்கு மக்களிடம் மதிப்புமிக்க ஓரிடத்தை உருவாக்கிக் கொடுத்தன. அவருக்குப் பல சீடர்கள் உருவாகினர். திரும்ப அவர் ஊருக்கு வந்தபோது, அவரை அங்கிருந்தவர்கள் வரவேற்றனர்.
ஆவுடையக்காள் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இயற்றி உள்ளார். அவரின் பாடல்கள் பல சிறு நூல்களாகவும், திரட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. அவற்றில் வேதாந்தப் பாடல் திரட்டு, பிரம்ம மேகம் ஆகியன குறிப்பிடத்தக்கன. 
ஆவுடையக்காளைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் கிடைத்த பாடல்களையும் முதன்முதலாகத் திரட்டியவர் ஆய்க்குடி வேங்கடராம சாஸ்திரிகள். 1953 - ஆம் ஆண்டில் ஆவுடையக்காள் பாடல்களின் தொகுப்பு வெளி வந்தது
அத்வைத உண்மையைப் பரப்புவதையே தன் நோக்கமாகக் கொண்டு, மிக எளிய மனிதர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஏராளமான பாடல்களைப் பாடினார்.  
அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த நாட்டுப்புறப் பாடல்களின் எல்லா வடிவங்களிலும் ஆவுடையக்காள் பாடல்களைப் பாடியிருக்கிறார்.
நாட்டுப்புறப் பாடல்களின் சாயலையுடைய பாடல்களைத் தவிர, பல்லவி, அனுபல்லவி, சரணங்களுடன் ராகமும் தாளமும் கூடிய சுவையான கீர்த்தனைகளையும் ஆவுடையக்காள் புனைந்துள்ளார். ஏறத்தாழ எழுபத்து நான்கு கீர்த்தனைகள் ஏட்டிலிருந்து எடுத்தெழுதித் தொகுக்கப்பட்டுள்ளன.  
தனிப்பாடல்களைத் தவிர ‘சூடாலை கதை’ என்னும் தலைப்பில் ஒரு குறுங்காவியத்தையும் எழுதியுள்ளார் ஆவுடையக்காள். இக்காவியம் ஏறத்தாழ அறுநூறு வரிகளைக் கொண்டது. ‘ஞானக் குறவஞ்சி’ என்பது மற்றொரு குறுங்காவியம். நிகழ்கலைக்கே உரிய பலவிதமான தாளக்கட்டுடைய பாடல்கள் இக்காவியத்தில் உள்ளன.
ஆவுடையக்காளைப் பொருத்தவரை மெய்ஞ்ஞானம் என்பது அத்வைத மெய்ஞ்ஞானம். அந்த மெய்ஞ்ஞானத்தை ஆண்டியாக முன்னிலைப்படுத்தி அவர் பாடல்களை எழுதியுள்ளார்  
இவர் வாழ்ந்த காலத்தில் பெண்கள் அடக்குமுறை, சாதிய சமய ஒடுக்குமுறை உச்சமாக இருந்தது. இவர் சிறு வயதில் விதவை ஆகி, சாதி நீக்கம் செய்யப்பட்டார். இந்தக் கடுமையான வாழ்க்கைச் சூழ்நிலை இவரது பாடல்களின் கருப்பொருட்களில் வெளிப்படுகின்றது. இவரது பாடல்களில் சாதிய எதிர்ப்பு, பெண்ணுரிமை, சித்த, அத்வைத, வேதாந்த கருத்துகள் பரந்து கிடைக்கின்றன. 
தீட்டு என்று மகளிரை விலக்கி வைத்த அந்த மூன்று நாட்களின் வலியைப் பற்றி முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆவுடையக்காள் பேசியுள்ளார். 
நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் அவருடைய பாடல்கள் வாய்வழக்காகவே பாடப்பட்டு வந்தன. ஆவுடையக்காள் ஒரு வகையில் மகாகவி பாரதியாரின் கவிதைகளைப்  பாதித்த ஆளுமைமிக்கவர்.  
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற கேட்ட அந்தக் காலத்திலேயே, மிகவும் தீவிரமான சிந்தனைப் போக்குகளுடைய பெண் ஆளுமைகள்தாம் முத்துப்பழனியும், செங்கோட்டை ஆவுடையக்காளும்.
 
கட்டுரையாளர்: அரசியலார்

Thursday, January 26, 2023

The entrance #Hampi #Vijayanagar Empire Then Tolgate (டோல் கேட்)

The entrance #Hampi
#Vijayanagar Empire
Then Tolgate (டோல் கேட்)


#*குடியரசு நாள்*. #*Republic Day* #*ஜனநாயகம் -குடியரசு என்றால் என்ன..?*



—————————————
ஜனநாயகம் என்பது அரசியல் சார்ந்த ஒன்றாகவே புரிந்துக்கொள்ளப்படுகிறது. ஜனநாயகம்  என்பது தேர்தல் ஆட்சி என்ற கருத்து. அதுவும் இங்கு கமுக்கமான  ஓட்டுக்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வந்து லஞ்சம்-தங்களை பெருக்கி கொள்வது.  இந்த தளத்தில் மக்கள் நல அரசுகள் இல்லாதுபோது குடியரசு என்பது கேள்வி குறிதான்.

ஜனநாயகத்தை   குடியரசுடனும், நாடாளுமன்ற அரசாங்கத்துடனும் இணைத்துப் பார்ப்பதால் ஏற்படும் குழப்பத்தை நீக்கும்வரை இதற்கு சரியான பதிலை அளிக்க இயலாது. குடியரசு மற்றும் நாடாளுமன்ற அரசாங்கம் ஆகியவற்றிலிருந்து ஜனநாயகம் முற்றிலும் வேறுபட்டது.ஜனநாயகத்தின் வேர் அரசாங்கத்திலோ,நாடாளுமன்றத்திலோ அல்லது இவை போன்ற வேறு எந்த அமைப்பிலோநிலைப்பெற்றிருக்கவில்லை. ஜனநாயகம் அரசாங்கத்தைவிட மேலானது. அது  ஒன்றிணைந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. ஒருங்கிணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்களே ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர்.




ஆனால், இங்கு சமூக விரோத சக்திகள் எளிதாக ஆட்சிக்கு வந்து வல்லான் வகுத்ததே வாய்க்கால்; குடியரசா? ஜனநாயகமா? சட்டமாவது? விட்டமாவது? வெங்காயமாவது?. 

ஜனநாயகம் குடியரசு என்றால் என்ன..?  என தெரியா பல முட்டாள் மனிதர்கள் அரசியல் களத்தில் இங்கு உள்ளனர். இதுதான் ஏதார்த்தம்.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 
குடியரசு நாள்.
Republic Day 

#KSR_Post.
26-1-2023.

Wednesday, January 25, 2023

சில மானம் கெட்டவர்கள்;

சில மானம் கெட்டவர்கள்; தனக்கு துணை நின்றவர்களை அழித்து விட்டு நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு…பொருத்தப்பாடற்ற இலக்கு, தன்தேவைக்கு துட்டுக்கு விலை போகும் , சுய நல விருப்பு, நம்பிக்கையற்ற, ஏமாற்று விழுமியம் நடத்தை என சில இழிவு (இழவு)மனிதர்கள்… நம் முன்….

*எனக்குத் தெரிந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்1970களில்….*




கடந்த எழுபதுகளின் தொடக்கத்தில்  பழ.நெடுமாறனோடு,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த எம்.பி.சுப்பிரமணியம் அவர்களோடு  (இவர் அண்ணா காலத்தில்  முதன்முறையாக திமுக போட்டியிட்டு வென்ற  சட்டமன்றத் தேர்தலில்  (1957) வெற்றி பெற்ற 15 எம்ஏல்ஏகளில் ஒருவர் ) அண்ணன் வாழப்பாடி ராமமூர்த்தியோடு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின்  தந்தையார் ஈ.வெ.கி.சம்பத் அவர்களைப் பார்க்க,  இன்றைக்கு வேப்பேரியி்ல் உள்ள அவருடைய  இல்லத்துக்குச் சென்றிருக்கிறேன். 

அப்போது,  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அங்கே பார்த்ததுண்டு.  புல் ஹேண்ட் சட்டை, பெல்பாட்டம், பெல்ட்அணிந்து ஹிப்பி முடியுடன் காட்சி அளிப்பார். டிஸ்கோவில் ஆர்வமானவர். 
சர்ச் பார்க் பள்ளியில் ஜெயலலிதாவும் இவரும் ஒரு சாலை மாணாக்கர்கள். ஜெயலலிதாவோடு அன்றைக்கு இவருக்குத் தோழமையும் உண்டு. அதேசமயம் பிற்காலத்தில் ஜெயலலிதா மீது மிகக் கடுமையான எதிர்வினை ஆற்றியவரும் கூட. அன்றைக்கு சர்ச் பார்க் பள்ளிக்கூடம் மாணவர்களும், மாணவிகளும் சேர்ந்து படிக்கும் பள்ளிக்கூடமாக இருந்தது. 
 
சிவாஜிகணேசனின் ஆதரவாளர் என்ற நிலையில் 1984 - ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அதிமுக ஆதரவில் இங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதன்முறையாகச் சட்டமன்றத்துக்கு சென்றார். எம்ஜிஆர் ஆட்சிக் காலம். 1984 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோடு மற்றும் இரண்டு பேருக்கு சிவாஜி கோட்டாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தது. அவர்களில் ஒருவர் உடுமலைப்பேட்டையில் திருமலைசாமி கவுண்டர், இன்னொருவர் பெயர் மறந்துவிட்டது.
 
சட்டையில் காலர் இருப்பதே தெரியாத  சிறிய காலர் உள்ள வெள்ளைச் சட்டையைப் போட்டுக் கொண்டு அவரின் தந்தையை போல அப்போது அவர்  சட்டமன்றத்துக்கு வருவதெல்லாம் நினைவுக்கு வருகிறது. 
மிகவும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். யார் மீதும் எந்த தனிப்பட்ட  கோப, தாபங்களையும் காட்டாதவர். 

நான் பார்த்த அரசியலில், இவர் தந்தையார் சம்பத்தைப் போல - கவிஞர் கண்ணதாசனைப் போல - பழநெடுமாறனைப் போல,   தன்னோடு துணை நின்றவர்களை நன்றியோடு நினைத்துப் பார்த்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு  துணை நிற்கும் நல்ல மனிதர்களில் இவரும் ஒருவர்.

#KSR_Post
25-1-2023.

Tuesday, January 24, 2023

#THE CONSTITUTION OF NDIA -1 #Constituent Assembly of India #அரசியல் சாசனம் #அரசியல் நிர்ணய சபை

#THE CONSTITUTION OF NDIA -1 
#Constituent Assembly of India
#அரசியல் சாசனம் 
#அரசியல் நிர்ணய சபை 

அரசியல் சாசனத்தில் தமிழில் கையெழுத்திட்ட ஒரே அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்! youtu.be/O1YMd4JtURw

#KSR_Post
#KSR_voice
24-1-2023


#Chetak memorial In #Balicha , Rajasthan . #Maharana Pratap




This Is The Place Where Great Indian King and Warrior Maharana Pratap's Faithful Horse Chetak Died During Battle of Haldighati In 1576 A.D.

சேத்தக் (Chetak) (சேட்டக், சேடக்), மகாராணா பிரதாப் சிங்கின் போர்க்குதிரை. ஜூன் 21, 1576 அன்று நடைபெற்ற போரில் இக்குதிரையின் பங்கு மகத்தானது. இக்குதிரை கதியாவாரி எனும் வகையைச் சேர்ந்தது. அக்பரின் படைக்கு தலைமை தாங்கி ராஜபுத்திர மன்னன் ராஜா மான்சிங், மாவீரர் என்று தமது வீரத்திற்காகவும் நாட்டுப்பற்றிற்காகவும் வர்ணிக்கப்பட்ட மகாராணாவை எதிர்த்து ஹால்டிகாட் எனும் இடத்தில் போரிட்டதில் தோற்கடிக்கப்பட்ட மகாராணாவை, தான் படுகாயமுற்றபோதும் பகைவர்களிடம் சிக்காமல் தன் வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு வெகுதூரத்தில் உள்ள காட்டுக்கு கொண்டு வந்ததின் மூலம் அவ்வீரரின் மானத்தைக்காப்பாற்றியதற்
காகப் புகழப்படும் போர்த்திறனில் சிறந்த குதிரை.இப்போரில் இக்குதிரை மரணமடைந்தது.அந்த சம்பவ இடமும் நினைவிடமும்.

Maharana Pratap passes away on this date in 1597, at his capital Chavand, one of the greatest Hindu warriors ever, a man who has been an inspiration to so many warriors and revolutionaries, one of the few Rajput rulers who refused to bow to Akbar.



#KSR_Post
24-1-2023.

1960 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் அறிக்கை. #ksrpost 24-1-2023.


பண்டா, செல்வா, ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் செய்தும் செய்துஈழத்தமிழர்களை அழித்தனர்...

எழுதப்படாத அரசியலமைப்பு சட்டங்கள் (Unwritten Constitutions) மரபுகள், நடை முறைகள் என பின் பற்றும் நாடுகள்.

எழுதப்படாத அரசியலமைப்பு சட்டங்கள் (Unwritten Constitutions) மரபுகள், நடை முறைகள் என பின் பற்றும் நாடுகள்.
———————————————————-
இங்கிலாந்து ,UK , ஆனால் முதல் அரசியலமைப்பு சட்ட ஆவனம் மகா சாசனம்
(Magna carta-Magna Carta Libertatum commonly called Magna Carta is a royal charter of rights agreed to by King John of England at Runnymede, near Windsor, on 15 June 1215)நடை முறைக்கு வந்தது.

கனடா.

சவூதி அரேபியா. ...



நியூசிலாந்து. ...

இஸ்ரேல். இஸ்ரேல் அரசு ஒரு எழுதப்படாத அரசியலமைப்பின் கீழ் செயல்படுகிறது மற்றும் ஜூன் 30, 1950 இன் ஹராரி முடிவின்படி செயல்படுகிறது, இது இஸ்ரேலிய அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

#Constitutions
#Unwritten_Constitutions
#Magna_Carta 

#KSR_Post
24-1-2023.


Monday, January 23, 2023

#Mettur Dam different angle picture



கண்ணியத்திற்குரிய கிராமத்து அழகு தேவதைகள்… காண வண்ணத்து பூச்சிகள் போல….

பசையடித்துப் பேச
நா எனக்கு ஏனோ எழவில்லை
பாசாங்கு செய்து பசப்ப
சுய கண்ணியம் விடவில்லை
கொஞ்சிக் குலவி ஊடாடக்
கர்வம்  கை தரவில்லை
கூட்டிக் குறைத்தெதையும் பேச
வார்த்தைகளால் வரம்பு கடக்கத்
தெரியவில்லை
பின்னால் அலையத்
தன்மானம் தாழவில்லை…..
(எங்கோ கேட்டது)
**
கண்ணியத்திற்குரிய கிராமத்து அழகு தேவதைகள்… காண வண்ணத்து பூச்சிகள் போல….கிராமப்புற பகுதிகளில் இருக்கும் ஒரு சாலை மாணாக்கர்கள் வாழ்வு செழிக்கட்டும் என்றும்……
***


Sunday, January 22, 2023

இலங்கையில் தமிழீழப் பகுதிகள்…



*தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி படு கொலை வழக்கில் ஏழவர் விடுதலை பொருளாக்கப்பட்டு வெளிவந்தவர்களில் அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன்*,

*தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி படு கொலை வழக்கில் ஏழவர் விடுதலை பொருளாக்கப்பட்டு  வெளிவந்தவர்களில் அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன்*,  (சிறையில் 31 ஆண்டுகளாக மேலாக சிறையில் இருந்தவர்) இன்றைக்கு (22.01.2023)  என்னைச் சந்திக்க வந்தார். அவரோடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். 
  
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான பூவுலகின் அமைப்பைச் சேர்ந்த ஆர்.ஆர்.சீனிவாசன் மற்றும் கவிஞர்  குட்டி ரேவதி ஆகியோரும் வந்திருந்தனர்.  இவர்கள் அனைவரிடமும்  காலை 9.00 மணியிலிருந்து மதியம் 2.00 மணி வரை பல விடயங்கள் பற்றி பேசக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக பல்வேறு அரசியல் சார்ந்த நிகழ்வுகளைக் குறித்துப் பேசினோம். 
















  
அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன் நேரடியாக இலங்கைக்குச் சென்று களப்பணிகள் செய்தவர். அங்கிருக்கும் இயக்கத்தோடு தொடர்ந்து தொடர்பில்  இருந்தவர். இவர்களோடு பேசி கலந்துரையாடிய  இன்றைய பொழுது  நல்ல பொழுதாகக் கழிந்தது.




#KSR_Post
22-1-2023.


#பெங்களூரு நாகரத்தினம்மாள்பதிப்பித்த ராதிகாஸாந்தவனமு வந்துவிட்டது என் கனவு நூல்...



————————————————————-

2008ஆம் ஆண்டு, தேவரடியார்கள் பற்றிய ஆய்வுக்காகத் தகவல்கள் தேடியலைந்தபோது, பெங்களூரு நாகரத்தினம்மாள் பதிப்பித்த ராதிகா ஸாந்தவனமு நூல்.

முத்துப்பழனி எழுதிய தெலுங்குக் கவிதைகளை நேரடியாகத் தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம். முதன்முறையாக அகநி அந்தக் கனவை நிறைவேற்றியிருக்கிறது. 
இசையியல் அறிஞர் திரு.பி.எம்.சுந்தரம் நூலை மொழிபெயர்க்க ஒப்புக்கொண்டதுடன், மூலப்பிரதியைத் தேடி ஹைதராபாத் வரை, தனது 87 வயதைப் பொருட்படுத்தாது பயணம் செய்திருக்கிறார். 

முதன்முதலில் (1910ஆம் ஆண்டு) பதிப்பித்த வாவிள்ள ராமசாமி சாஸ்த்ருலு பதிப்பகத்தாரிடமே சென்று, நாகரத்தினம் பதிப்பித்த நூலின் பிரதியைப் பெற்று வந்து, தமிழாக்கம் செய்துள்ளார்.  திரு பி.எம்.சுந்தரம் கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷணாவின் சீடர். தமிழுக்கு இசையியல் ஆய்வு சார்ந்த நூல்களைக் கொடையாகக் கொடுத்தவர்.
கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் இருந்த முத்துப்பழனியின் கையெழுத்தில் இருந்தது.

பிரிட்டீஷ் ஆட்சி நூலைத் தடைசெய்து உத்தரவிட்டது

ராதிகா சாந்தமானாள் (ராதிகா ஸாந்த்வனமு)
தஞ்சை அரசன் பிரதாபசிம்மனின் அரசவையின் நடனமணியான முத்துப்பழனி என்ற கவியரசியால், தெலுங்கு மொழியில் இயற்றப் பெற்ற ’ராதிகா ஸாந்த்வனமு’ என்ற அரும்பெரும் காவியம், இதுவரை ஆங்கிலம் தவிர (அதுவும் முழுமையாகவில்லாமல்) வேறு மொழிகளில் வெளிவரவில்லை. பல ஆண்டுகளுக்குப்பின், இப்போது, முதன்முறையாகத் தமிழில் இசையியல் அறிஞர் பி.எம்.சுந்தரத்தால் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ‘ராதிகா சாந்தமானாள்’ எனும் தலைப்புடன்  அகநி பதிப்பகம் அரிய முயற்சியின் மூலம் வெளிவருகின்றது.
கவிஞர் அ. வெண்ணிலாவுக்கு வாழ்த்துக்கள்

குஜிலிப் பாடலாகப் பதிப்பிக்கப்பட்டிருந்த இந்நூலை, பெங்களூரு நாகரத்தினம்மாள், கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் இருந்த முத்துப்பழனியின் கையெழுத்துப் பிரதியைப் பெற்று, மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, 1910ஆம் ஆண்டு, விரிவான முன்னுரையுடன் சிறப்பான பதிப்பாக வெளியிட்டார். 

கந்துகூரி வீரேசலிங்க பந்துலு போன்றவர்கள் இந்நூலைத் தடைசெய்ய வேண்டுமென்று தொடர்ந்து எழுதியதின் விளைவாக, 584 பாடல்களைக் கொண்ட முத்துப்பழனியின் நூலை அன்றைய பிரிட்டீஷ் அரசு 1912ஆம் ஆண்டு ஆபாச இலக்கியமென்று கூறி தடை செய்தது. 

தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த டங்குடூரி பிரகாசம் ஆட்சிக்காலத்தில் தான் நூல் மீதான தடை நீக்கப்பட்டது. தடைசெய்யப்பட்டு 110 ஆண்டுகள் கடந்த நிலையில், ‘ராதிகா ஸாந்தவனமு’ தஞ்சை மண் காட்சிக்களம் நேரடியாகத் தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 
பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் இந்நூல் குறித்து பத்திரிகைகளில் வெளியான விவாதங்கள், கண்டனங்கள், நூலை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட தனிநபர் குழு, குழுவின் கருத்தின்மீது அரசாங்கம் பிறப்பித்த தடையுத்தரவு ஆகியவற்றுக்கான ஆவணங்களும் நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ளமை முக்கிய முயற்சியாகும். மெட்ராஸ் பிரசிடென்சியில் புத்தகங்கள் மேலான தணிக்கையை முதன்முதலில் சந்தித்த நூல் ராதிகா ஸாந்த்வனமுதான்.
ராதிகா சாந்தமானாள் (ராதிகா ஸாந்தவனமு)

தெலுங்கு மூலம் : முத்துப்பழனி
தமிழில் : பி.எ.சுந்தரம்
அகநி வெளியீடு
பக்கம் ; 312
விலை ; ரூ.450
தொடர்புக்கு ; 94443 60421

#ராதிகாஸாந்தவனம்
#அகநிவெளியீடு அகநி வெளியீடுஅகநி AKANIஅ.வெண்ணிலா
R R Srinivasan@kuttiravathi

Friday, January 20, 2023

தமிழகத்தின் எல்லையோரப் பகுதிகளில் #கேரளஅரசு டிஜிட்டல் சர்வே எடுக்கவே இல்லை-தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர்…..



—————————————

 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரிமாநிலங்கள்உருவாக்கப்பட்டன

அதன் நினைவாக கடந்த2023 நவம்பர் 1 ஆம் தேதிதான் கேரள அரசு தமிழகத்தின் எல்லையோரப் பகுதிகளில் டிஜிட்டல் ரீ சர்வே பணியைத் தொடங்கியது. 
 
தமிழகத்தின் எல்லையோரப் பகுதிகளில் கேரள அரசு டிஜிட்டல் சர்வே எடுக்கவே இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது இன்றைய தமிழ் இந்துவில் (20.01.2023) செய்தியாக வெளிவந்திருக்கிறது. 
 
இவர் சொல்வது உண்மையாக இருந்தால், தேனி மாவட்ட விவசாயிகள் எதற்காக இதை எதிர்த்துப் போராட வேண்டும்? இந்தப் பிரச்னை கடந்த 2 மாதங்களுக்கு முன்னால் தீயாக எரிந்தபோது, இதைப் பற்றி சரியாகப் பதில் சொல்லாத வருவாய்த்துறை அமைச்சர், இன்றைக்கு நமது எல்லைப்புறத்தில் கேரள அரசு டிஜிட்டல்  ரீ சர்வேயைச் செய்யவில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. ஏன்... திமுக கூட்டணி கட்சியான மதிமுக போன்ற தோழமைக் கட்சியினரும் கூட கேரள அரசு டிஜிட்டல் ரீ சர்வே நடத்துவதாகச் சொன்னார்கள். அவர்கள் அதைக் குறித்து வெளியிட்ட கருத்துகள் எல்லாம் பொய்யா? தமிழகத்தில் அத்தனை பத்திரிகைகளிலும் இது குறித்து வெளிவந்த செய்திகளும் பொய்யா என்ற கேள்வி எழுகிறது. மென் அண்ட் மேட்டர் என்று புரி  தல் அற்றவரை என்ன சொல்ல? 
 “அய்யா... அம்மா...’’, “இவரை விட்டால் வேறு வழியில்லை...’’, “அவரைவிட்டால் வேறு வழியில்லை’’ என்று வாய்திறப்பது மட்டும்தான் தமிழக அமைச்சர்கள் கடந்த 30 ஆண்டு காலமாகச் செய்துவரக் கூடிய வேலை என்ற அரசியல்நிலை உருவாகிவிட்ட பிறகு, சமகாலப் பிரச்னைகளை அவர்கள் அறிந்து, அவற்றை ஆராய்ந்து, சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய திறமையுடன் அவர்களால் எப்படி செயல்பட முடியும்?

#KSR_Post
20-1-2023.

என்னுடைய சுயவிவரக் குறிப்பை எனது வலைதளப் பக்கத்தில் (https://www.ksradhakrishnan.in) பார்த்தால், நான் யார் என்று தெரியும்.

ஒரு பெண்மணியும் அவர் அருகில் ஒரு கவிதை பாடும் பெண்மணியும் கோவில்பட்டிக்கு வந்தபோது ; அந்தப் பெண்மணி என்னைப் பற்றி தற்புகழ்ச்சியோடு பேசுவார் என்று சொல்லியுள்ளாராம். என்னுடைய சுயவிவரக் குறிப்பை எனது வலைதளப் பக்கத்தில் (https://www.ksradhakrishnan.in)  பார்த்தால், நான் யார் என்று தெரியும். 
 கே.பி.கந்தசாமியின் எதிர்வினையை மீறி உங்கள்  அப்பா மாவட்ட செயலாளர் ஆவதற்கும், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி மாவட்ட மார்க்கெட் விவகாரத்தில் எப்படியாவது உங்கள் அப்பாவை  கைது செய்ய வேண்டும் என்று சொன்னபோது, காப்பாற்றியவன். நீங்கள் எல்லாம் அப்போது ஃபீடிங் பாட்டிலில்  பால் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள்.

#ksrpost
19-1-2023.

கொள்கைகள்-கோட்பாடுகள்-செயல்கள்

கொள்கைகள்-கோட்பாடுகள்-செயல்கள் எல்லாம்  சில நம்பிய மனித மிருகங்களால கனவாகிப் போகிறதுஎல்லாமும்…  இவை சம்போகத்தின் போதும்
ஒலியெழுப்பிக்
களங்கப்படுத்தி
விடுகிறது.
அடித்துவிரட்டினால்
பாபம் சூழும்
என்ற பயம்வேறு. 
(சில வரிகள், நன்றி நா. விச்வநாதன்)

மாகவி பாரதி இங்கு எங்கு உள்ளார்… வேதனை…

மாகவி பாரதி இங்கு எங்கு உள்ளார்…
வேதனை…


#ஓமந்தூரார் #தமிழ்க்கலைக்களஞ்சியம்-1947



———————————————————-
 ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அன்றைக்கு ஆந்திரம், தமிழ்நாடு , தென் கர்நாடகம், கேரளத்தின் மலபார், தமிழகத்தில் கன்னியாகுமரி நீங்கலாக இருந்த சென்னை ராஜதானியின் பிரதமர் – பிரீமியர்(முதல் அமைச்சர்). அவர் பொறுப்பில் இருந்தபோது தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை புதிதாக ஏற்படுத்தி அச்சு கலைக்கு இன்றைய வசதி -எளிதாக இல்லா நிலையில், தமிழ்க் கலைக்களஞ்சியத்தை உருவாக்க உரிய ஆணையைப் பிறப்பித்தார். இன்றைக்குள்ள பலருக்கு இது  தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தாலும், திட்டமிட்டு வெளியே சொல்லாமல் மறைத்துவிடுவார்கள். 







இந்த கலைக்களஞ்சியத்தைக் கொண்டு வர  அன்றைய கல்வி அமைச்சர் டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார், பெரியசாமிதூரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் மற்றும் பல்துறை சார்ந்த  அறிஞர்கள் முழுமூச்சுடன் செயல்பட்டனர். தெலுங்கு, கன்னடம், 
ம லையாளம் ஆகிய மொழிகள் பேசக் கூடிய மக்கள் சென்னை ராஜதானியில் இருந்தபோதிலும் தமிழுக்காக ஓமந்தூரார் செய்தது பலரிடம் முணுமுணுப்பை ஏற்படுத்தியது. என்றாலும் அதைப் பற்றி எல்லாம்  கவலைப்படாமல், அப்படித்தான்... எங்கள் மொழி தமிழ் என்று ஓமந்தூரார் செய்ததை இன்று நினைத்தப்  பார்க்க யாருமில்லை. 

கடந்த 1947 - இல் தொடங்கப்பட்ட தமிழ் கலைக்களஞ்சியம்  10 தொகுதிகளாக வெளிவந்தது. முதல் தொகுதி 1954 - இல் வெளிவந்தது. கடைசித் தொகுதி 1966-67 காலகட்டத்தில் வெளிவந்தது. தமிழுக்கு ஓமந்தூரார் அளித்த இந்த  அற்புதமான கொடையை யாரும் மறுக்க முடியாது.

இன்று பெரிதாக பேப்படும் சமூகநீதி ஆணையை நாட்டின் விடுதலைக்குப் பின் முதன்முதலாக பிறப்பித்தவரும் ஓமந்தூரார்தான். அது மட்டுமல்ல,  தமிழைப் பயிற்சி மொழியாக்குதல், தமிழ் பாட புத்தகங்களை வெளியிடுதல் ஆகியவற்றுக்கான அரசு  ஆணகளைப் பிறப்பித்தவரும் அவர்தான். ஹைதராபாத் நிஜாம் பகுதிகள் இணைப்பு  என பல பணிகள் உண்டு

எந்தவொரு தகுதியுமற்ற நபர்களைத் தூக்கி நிறுத்தும் இக்காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சி,  சமூகநீதி, விவசாய முதல்வர் என பெயர் பெற்ற ஓமந்தூராரின் படம் கடந்த 70 ஆண்டுகளாக சட்டபேரவையில் வைக்கப்படவில்லை. கடந்த  மூன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் பல்வேறு கோரிக்கைகளில் விளைவாக தமிழ்நாடு அரசு வைத்தது. 

தமிழகத்தில் புது அணைகளைக் கட்ட ஆரம்பத்தில் திட்டம் இட்டவரும் ஓமந்தூரார்தான். இவருக்குப் பின் வந்த ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா இவர் திட்டமிட்ட ஆணைகளுக்குப் பணம் ஒதுக்கினார். நேர்மையான  இரண்டாவது முதல்வராகவும் விளங்கினார். பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் படம் இதுவரை சட்டமன்றத்தில் வைக்கப்படவில்லை. அது குறித்த சிந்தனையும் தமிழ்சாதிக்கு இன்னும் வரவில்லை. 

‘விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?’ என்ற பாரதியின் கவிதை வரிகள்தாம் நினைவுக்கு வருகின்றன.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 

#KSR_Post.
20-1-2023.

Achiankoil-Pampai (Kerala) - Tamilnadu,Sattur; Vaipar link. My WP filed on the Supreme Court India in this regard. Order dtd 27-2 -2012 #KSRPost 20-1-2023.

Achiankoil-Pampai (Kerala) - Tamilnadu,Sattur; Vaipar link.
My WP filed on the Supreme Court India in this regard. Order dtd 27-2 -2012
#KSRPost 20-1-2023.


Wednesday, January 18, 2023

#தமிழ்நாடு, #தமிழகம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

#தமிழ்நாடு, #தமிழகம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். 




காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை, கடந்த 16 ஆண்டுகளாக மூடப்பட்ட குமரி மாவட்டத்துக்கு வளம் சேர்த்த நெய்யாறு பிரச்னை, கொங்குமண்டலத்தில் பிஏபி பிரச்னை, சிக்கலான 16 நீர்ப்பாசனத் திட்டங்கள் பிரச்னை, கண்ணகி கோவில் பிரச்னை, சேதுகால்வாய் பிரச்னை, சேலம் இரும்பாலை பிரச்னை, ஈழத்தமிழர் சிக்கல்,மீனவர்- கச்ச தீவு, தெலுங்கு கங்கா,ஊட்டி பிலிம் தொழிற்சாலை பிரச்னை போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட்டு, மற்றவற்றை பேசுவோம்.

#ksrpost
18-1-2022

“ஜூனியர் விகடன் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதானே விரும்பியது? திமுக ஆதரவு நிலைதானே?அவ்வப்போது இதுபோன்ற அட்டைப் படங்களைப் போட்டுக் கொண்டு வருகிறதே...

இன்று காலை செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டிருந்தபோது1980 களில் ஜூனியர் விகடன் தொடங்கப்பட்ட போது ஆசிரியர் குழுவில் இருந்த முக்கியமான ஒருவர், ஒரு வேலையாக என்னைச் சந்திக்க வந்தார். 

அன்றைக்கு ஜூனியர் விகடன் வாரம் ஒருமுறைதான் வெளிவந்தது. பெரிய அளவில்  இருக்கும். ஜூனியர் விகடன், ஜூனியர் போஸ்ட், ஆனந்தவிகடன் ஆகியவை அன்றைக்கு வெளிவந்தன. பின்னர் ஜூனியர் போஸ்ட் நிறுத்தப்பட்டது என்பது வேறு செய்தி. 
  
வந்தவரிடம் இன்றைக்கு வந்த ஜூனியர் விகடன் அட்டைப் படத்தைக் காட்டினேன். காட்டும்போது, “ஜூனியர் விகடன் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதானே விரும்பியது? திமுக ஆதரவு நிலைதானே?அவ்வப்போது இதுபோன்ற அட்டைப் படங்களைப்  போட்டுக் கொண்டு வருகிறதே... நீங்கள் ஜூனியர் விகடனில் இருந்த காலத்தில்  எம்ஜிஆர் ஆட்சியை அது கடுமையாக விமர்சித்து எழுதியதும் உண்டு. இதனால் விகடன் பாலசுப்ரமணியம் சிறைக்குச் சென்றதும் உண்டு. சிறை உடையும் அவருக்கு வழங்கப்பட்டது” என்று சொன்னேன். 

 “நீங்கள் அன்றைக்குப் பார்த்த ஜூனியர் விகடன் வேறு சார். இப்போது உள்ள ஜூனியர் விகடன் வேறு சார்” என்றார். வேறு எதுவும் அவர் சொல்லவில்லை.
 
ஜூனியர் விகடன்  எப்போதும் பழைய ஜூனியர் விகடன் மாதிரி இருந்திருக்க வேண்டும்.ஆனால் ஏதோ நிலைக்கு வந்து விட்டது.

#ksrpost
18-1-2023.


#தமிழ்நாடுஅமைந்தது... #1950களில் #எல்லைப்போராட்டம்... #9பேரை காவுகொண்ட….. தியாகிகள்!(2)

#தமிழ்நாடுஅமைந்தது... #1950களில் #எல்லைப்போராட்டம்... #9பேரை காவுகொண்ட….. தியாகிகள்!(2)
————————————
   அ.முத்துக்கிருஷ்ணன்Muthukrishnan எழுதிய ‘#போராட்டங்களின்_கதை’   என்ற Vikatan PublicationsVikatan Prasuram நூலைப் பற்றி நேற்று பதிவிட்டிருந்தேன். அதில் சி.நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகளின் போராட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், தமிழக விவசாயிகள் இன்றைக்கு இலவச மின்சாரம் பெறுகிறார்கள் என்றால் அதற்கு நாராயணசாமி நாயுடு அவர்கள் நடத்திய போராட்டங்கள்தாம்  காரணம் என்றும் சொல்லியிருந்தேன். 
 நாராயணசாமி நாயுடு தலைமையில் வீரியமாக விவசாய சங்கம் போராட்டம் நடத்தியபோது, அன்றைய ஸ்தாபன காங்கிரஸ், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எல்லாம் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தாங்கள் நடத்தும் விவசாயிகள் சங்கம் மட்டும்தான் விவசாயிகள் பிரச்னைகளை முன்னெடுக்க வேண்டும் என்று நினைத்ததால் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்  பிரிவு இந்தப் போராட்டத்தை ஆதரித்து உண்டு. பசுவந்தனை குருசாமித் தேவர் இந்த இயக்கத்தின் சார்பில் பாஞ்சாலங்குறிச்சியில் நாராயணசாமி நாயுடுவுக்கு வரவேற்புக் கொடுத்தார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்  பிரிவில் இருந்த டி.எஸ்.எஸ்.மணி  இதற்கு சாட்சி. 




1984 - இல் நடந்த கோவில்பட்டி சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சோ.அழகர்சாமிக்கு ஆதரவாக நாராயணசாமி நாயுடு பிரச்சாரம் செய்ததும்,  பிரச்சாரம் பின் உடல்நலம் சரியில்லாமல் போய் அதற்குப் பிறகு இரவில் அவர் கோவில்பட்டி பயணிகள் விடுதியில் என் கண் முன் மரணமடைந்ததெல்லாம் அன்றைய காலத்தின் நிகழ்வுகள்.
  
விவசாயிகள் போராட்டம் மட்டுமல்ல, தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பல போராட்டங்கள் இந்த நூலில் இடம் பெறவில்லை என்பது வருத்தமான செய்தி.

அதேபோன்று இன்றைய எல்லைகளாக உள்ள தமிழ்நாடு 1956 நவம்பர் 1 ஆம் தேதி அமைந்தது மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்தில் எல்லைப் போராட்டங்கள் நிகழ்ந்தன. குமரி மாவட்டம் புதுக்கடையில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்த 9 தியாகிகள் மறைவில் அமைந்ததுதான் இந்த மாநிலம். தெற்கெல்லைப் போராட்டங்கள் பி.எஸ் மணி-ஏ.நேசமணி தலைமையிலும் வடக்கெல்லை போராட்டங்கள் ம.பொ.சி. தலைமையிலும் நடந்தன. வடக்கெல்லைப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கவில்லை என்றால்,  திருத்தணி நமக்குக் கிடைத்திருக்காது. ‘மெட்ராஸ் மனதே’   என்று ஆந்திரர்கள் போராட்டம் நடத்தி சென்னையையும் கைப்பற்றியிருப்பார்கள். 
 
அதேபோன்று தமிழகத்தின் தெற்குப் பகுதியில் குமரி மாவட்ட இணைப்பு- எல்லைப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கவில்லை என்றால், தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்காது. 

இன்றைய செங்கோட்டை அன்றைய நெல்லை மாவட்டத்தில் இணைந்ததற்கு சட்டநாத கரையாளர் போராட்டம் நடத்தியது, அப்போது  அவர் கைது செய்யப்பட்டது என அவரைப் போன்ற  பலருடைய சர்வபரி தியாகங்களும் காரணமாகும். அவர்கள் போராடியிருக்கவில்லை என்றால்,  இந்தப் பகுதிகளை எல்லாம் நாம் இழந்திருப்போம்.
 
இந்த எல்லைப் போராட்டங்களில் ஈடுபட்டு பல தியாகங்களைச் செய்த ம.பொ.சி., நேசமணி, பி.எஸ்.மணி, சாம் நதானியெல், குஞ்சன் நாடார், ரஸாத் ஆகியோரை மறந்துவிட்டு தமிழக வரலாற்றை எழுத முடியாது. 

இன்றைய தமிழகம் அமைந்த 25  ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கலைவாணர் அரங்கில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நெடுமாறன் தலைமையில்  இயங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தி.சு.கிள்ளிவளவனும் நானும் கலந்து கொண்டோம். நெடுமாறன் நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
 
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நான் எடுத்த தமிழ்நாடு 50 - ஆம் ஆண்டு விழாவில்( 1-11-2006) பழ.நெடுமாறன், இரா.நல்லகண்ணு, இரா.செழியன், வைகோ, நீதிபதி ரத்னவேல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். எல்லைப் போராட்டம் குறித்தான எனது வரலாற்று தொகுப்பு நூலும் அப்போது வெளியிடப்பட்டது.
‘போராட்டங்களின் கதை’   நூலாசிரியருக்கு தமிழகத்தில் நடந்த இந்த எல்லைப் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1935 - இல் சாத்தான்குளத்திலும் தூத்துக்குடியிலும் தொடக்கத்தில் நட
ந்தது. 1965 - இல் நடந்த இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தை  தமிழக மாணவர்கள்  முன்னெடுத்தபோது, அன்றைக்கு அண்ணா தலைமையில் இருந்த திமுக அக்கறையோடு, ஆதரவோடு அதைக் கவனித்தது. கலைஞர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது மாணவர் தலைவராக இருந்த பெ.சீனிவாசன் இந்தப் போராட்டத்தை அகில இந்திய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டார்.  திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் மாணவர்களைச் சந்தித்து இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவைத் திரட்டினார். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த மேற்கு வங்கத்துக்குச் சென்று கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மாணவர்களிடம்  போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கான பயணத்தை அவர் தொடர்ந்து கொண்டிருந்த காலத்தில், அன்றைக்கு எல்.கணேசன் போராட்டம் நிறுத்தப்பட்டதாக  அறிக்கைவிட்டதாக செய்திகள் உண்டு. இதுகுறித்து ஷியாம் நடத்திய தராசு இதழில் பெ.சீனிவாசன் எழதிய தொடர் கட்டுரையில் குறிப்பிட்டதும் உண்டு.
 
இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த இந்த செய்திகள் எல்லாம் இந்த போராட்டங்களின் கதை  நூலில் இடம் பெறவில்லை.
 அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் போராட்டம், பெர்லின் சுவருக்கான போராட்டம், சீன மாணவர்கள் தியானென்மென் சதுக்கத்தில் நடத்திய போராட்டம் போன்றவற்றைப் பற்றி எல்லாம் எழுதத் தெரிந்த நூலாசிரியருக்கு,  அவர் வாழும் தமிழ்நாட்டில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க இந்த போராட்டங்கள் கண்ணில் படாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.
 
கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டம், நியூட்ரினோ திட்ட எதிர்ப்புப் போராட்டம், கதிராமங்கலம் மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம் எனத் தொடங்கி காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்க எதிர்ப்பு போராட்டங்கள் வரை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாட்டில்  நடத்தப்படும் போராட்டங்கள் எண்ணற்றவை. சரிதான்….

  1988 ஆம் ஆண்டு அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், ரஷ்ய பிரதமர் மிக்கைல் கொர்பசோவும் கூடங்குளம் அணுமின்நிலைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கூடங்குளத்தில் அணுமின்நிலையம் அமைக்கக் கூடாது என்று அடியேன், நெல்லை மாவட்ட திமுக செயலாளர் டிஏகே.லக்குமணன், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்,  நாகார்ஜூனா போன்ற பலர் முன்னெடுத்த  விடயங்கள் எல்லாம் உண்டு. 1987 இறுதி -88 காலகட்டங்களில் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் அமைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கையும், பின்பு 2010 இன் இறுதியிலும் இன்னொரு பொது நல வழக்கையும் அதற்காக நான் தொடுத்திருந்தேன்
 
1988 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டம், 2012 - இல் மிகவும் தீவிரமடைந்தது. கூடங்குளத்தில் படைகளைக் குவித்து மக்களுக்குப் பீதியூட்டும் வேலையை மத்திய – மாநில அரசுகள் மேற்கொண்டன.
 
போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடிந்தகரையில் இருந்த சுப.உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் பெரும் மக்கள் திரளுடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து நடத்தினர்.  ஆனால் அரசின் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளான கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் பற்றி இந்த நூலில் ஒரு வரி கூட இல்லை!     
 
அமெரிக்காவின் இனவெறி, கறுப்பின மக்களுக்கு எதிரான அடக்குமுறை, இந்தியாவில் சாதி ஒடுக்குமுறை ஆகியவற்றை குறித்துப் பேசும் கட்டுரை ஒன்றின் தலைப்பு ‘இடிந்தகரை போராட்டம்: தலைகுனிந்த அணு உலைகள்’ என்று உள்ளது. வாசகர்களை முட்டாள்கள் என்று நூலாசிரியர் நினைக்கிறாரா என்று தெரியவில்லை.  
 போராட்டங்களின் வரலாற்றை எழுதும்போது, குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த போராட்டங்கள் எவையும் விட்டுப் போகாமல் எழுத வேண்டும். அந்தப் போராட்டங்களினால் கிடைத்த நற்பயன்களையே இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம். போராட்டங்களில் ஈடுபட்டு தியாகம் செய்தவர்கள், போராட்டங்களின் களப்பணிகளுக்காக தங்களுடைய வாழ்க்கையில் பலவற்றை இழந்தவர்கள் பற்றிய விவரங்கள் எதுவுமில்லாமல் எழுதப்படும் இத்தகைய வரலாறுகள், உண்மையான வரலாறாக ஒருபோதும் இருக்க முடியாது. நூலாசிரியரின் மனவிருப்பம் சார்ந்த தகவல்களின் தொகுப்பாகவே இருக்க முடியும். வரலாறு என்பது உண்மையின் நடந்த நிகழ்வுகளின் பதிவாகவே இருக்க வேண்டும். அதுதான் உண்மையான வரலாறு. அப்படியில்லாமல் எழுதப்படுகிறவை வெறும் கதைகளாகவே இருக்க முடியும். போராட்டங்களின் ‘கதை’ என்ற இந்த நூலின் தலைப்பும் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 

#KSR_Post.
18-1-2023.

மீள்……

#அன்றைய_மெட்ராஸ்_ராஜதானி, #சென்னை_ராஜதானி, 
#பின்_சென்னை_மாகாணம்_என்றும்;  #இன்றைய_தமிழ்நாடு_66*
——————————————————-
இன்றைய தமிழ்நாடு அமைந்து நவம்பர் 1ம் தேதி (இன்று) 66ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இது நமக்கு மகிழ்ச்சியா? துக்கமா? என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளைப் பெற்றுள்ளோம். இதனால் நமக்கு நதிநீர் மற்றும் வன வளங்களின் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
சென்னை இராஜதானி என்று அழைக்கப்பட்ட ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்ததை 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக சென்னை மாகாணம் என்று பிரிந்த பின்பு அறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது. தமிழர்க்கு சொந்தமான பல பகுதிகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. இந்த ஆண்டு கடந்த காலத்தில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்திற்கு பொன்விழா ஆண்டு ஆகும். கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தோன்றிய நாளை யொட்டி ஆண்டுதோறும் அந்த மாநில அரசுகள் விழாக்கள் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழகத் தில் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை.

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்’
என்று தொல்காப்பியம் தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து கூறுகிறது. ஆங்கிலேயரின் தவறான நிர்வாகத்தால் ஒவ்வொரு தேசிய இனம் மற்றும் மொழிவாரியாக மாநிலங்கள் அமையா மல் இருந்த நிலை ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் வங்கத்தை சூழ்ச்சியால் இரண்டாகப் பிரித்தனர். அன்றைக்கு காங்கிரஸ் கடுமையாக இச்சூழ்நிலையை எதிர்த்தது. இந்நிலையில், அய்க்கிய தமிழகம், விசாலா ஆந்திரம், நவக் கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா குஜராத் என மொழிவாரியான மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி 1952இல் அக்டோபர் 13ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம் டிசம்பர் 15இல் அவருடைய மரணத்தில் முடிந்தது. இப்போராட்டம் ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பி, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதன் விளைவாக கர்நூலை தலைமையகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. இருப்பினும் ஆந்திரர்கள் தமிழகத்திற்குச் சொந்தமான வேங்கடமலையையும் தன் வசப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் மெட்ராஸ் மனதே என்ற கோஷம் வைத்து அர்த்தமற்ற முறையில் போராடினார்கள்.
சென்னை மாகாணம், தமிழகம் உருவாகியதற்கு பலரின் தியாகங்கள் அளப்பரியவை.

தமிழகத்தின் வட எல்லையன திருத்தணியும், திருப்பதியும் தமிழகத்திற்குப் பெற சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் போராட்டங்கள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன. வடக்கு எல்லைப் போராட்டத் தில் ம.பொ.சி. அவர்கள், கொ.மோ.ஜனார்த்தனம், சோமா. சுவாமிநாதன், ஆ.தாமோதரன், கிருஷ்ண மூர்த்தி, அ.லூயிஸ், மு.வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் ஆகியோருடன் திருப்பதி மீது படையெடுப்பு என்ற போராட்டத்தையும் பிரச்சார பணியையும் மேற்கொண்டார். மங்களம் கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று வடஎல்லைப் பகுதிக்கு புகைவண்டி மூலமாக திருப்பதி வரை செல்ல பயணப்பட்டார்.
ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தும் கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரை கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்பொழுது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். அதைப் பொருட்படுத்தாமல் வேங்கடத்தை விட மாட்டோம் என்று ஒருமணி நேரம் கர்ஜித்தார். ம.பொ.சி. நடத்திய மொழிவாரி மாநிலப் பிரச்சினை வேகமடைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. ஆனால், திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திகுப்பம் போன்ற பகுதிகள் நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.

09.04.1953இல் 24.4.1953 வரை கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் தொடர்ந்து 15 நாள்கள் (மறியல், போராட்டம்) நடைபெற்றது. புத்தூர் கலவரத் தில் ம.பொ.சி.யை தாக்க சதிகளும் தீட்டப் பட்டன. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றிய தாகவும் இவரை நெல்லை தமிழன் என்று ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப் பட்டு உள்ளது. 1953ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி எல்லை தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப் பட்டு 6 மாத சிறைத்தண்டனை ம.பொ.சி. பெற்றார்.
திருத்தணி எல்லைப் போராட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தமிழக – ஆந்திர முதல்வர்கள் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசி வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. 

ஒரு காலத்தில் வடஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகிய வற்றை ஆந்திரர் எடுத்துக் கொண்டனர். இப்பிரச்சினை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசியதன் விளைவாக தமிழக ஆந்திர சட்டமன்றங்களில் ஒரே நாளில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ம.பொ.சி. அவர்கள் திருத்தணி எல்லைப் போராட்டம் மட்டுமல்லாமல் நாஞ்சில் நாடான கன்னியா குமரி மாவட்டத்தையும், செங்கோட்டை, கூடலூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் என்ற போராட்டங்களுக்கும் துணை நின்றார்.
கன்னியாகுமரி, செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ்.மணி ஆவார். சாம் நதானியெல், நேசமணி போன்ற போர்குணம் கொண்டோரின் தலைமை யில் இக்கோரிக்கை பிறப்பெடுத்தது. பி.எஸ்.மணி – அழைப்பு இருந்தாலும், அழைப்பு இல்லை என்றாலும் தமிழகத்தில் நடக்கும் அனைத்து மாநாட்டுக்கும் சென்று குமரியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானங்களை முன்மொழிய வேண்டிக் கொள்வது அவரது சலியாத நடவடிக்கை ஆகும். பலர் மணியினுடைய கோரிக்கையை காதில் போடாமல் அவரை தவிர்த்த பொழுதும் கூட சற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து போராடினார். மணிக்கு ம.பொ.சி. அவர்களு டைய ஆதரவு கிடைக்கப்பெற்றது. 1954இல் ஜூனில் நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். அச் சமயத்தில் திருவிதாங்கூரில் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.

1948ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் ஏற்பட்ட எல்லை சிக்கலில் சிரோதி பகுதியை குஜராத்துக்கு அன்றைய துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மாற்றம் செய்ததை தினமணி கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அந்தக் கார்ட்டூனை 1000 தாள்களில் அச்சிட்டு ஏன் திருவிதாங்கூரை தமிழகத்தில் சேர்க்கக் கூடாது என்று நியாயம் கேட்டார் மணி.
1950இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து கொச்சி முதல்-அமைச்சரும் அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக் கொள்ளாமல் கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும் எந்த சமசர திட்டத்திற்கும் தயார் இல்லை எனத் தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்ட தளபதிகள் இப்பிரச்சினையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்கள் முன்னால் மறியல், பொதுக் கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீசாரால் சுடப்பட்டு மாண்டனர்.
நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும் குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீசாரின் குண்டர் தடியால் அடித்து உதைக்கப்பட்டனர். அச்சமயம் தலைமறைவாக இருந்த போராட்டத்தை நடத்தி வந்த மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் வைத்தனர். இதுபோன்று செங்கோட்டையிலும் போராட்டங்கள் நடத்தி கரையாளர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்டார்.
இறுதியாக காமராஜரும் திருவிதாங்கூர் – கொச்சி உள்ளடக்கிய கேரள முதல்-அமைச்சர் மனம்பள்ளி கோவிந்தமேனன் ஆகியோர் பேசியபின் தேவிக்குளம் – பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக்கொண்டது. தேவிகுளம் – பீர்மேடு கேரளத்திற்கு சென்றதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. கன்னியாகுமரி – செங்கோட்டை தமிழகத்தில் இணைந்தது. இருப்பினும் கேரளம் பெரியாறு அணையை கையகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இருந்தபொழுது காமராஜர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மாநில புனரமைப்புக் குழு பசலிக் கமிஷன் உறுப்பினராக இருந்த பணிக்கரால் தேவிகுளம் – பீர்மேடு தமிழகத்தை விட்டுப் போய்விட்டது என்ற குற்றச்சாட்டும் அப்பொழுது எழுந்தது.

நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு விழாவில் 1956 நவம்பர் 1ஆம் தேதி காமராசர் கலந்து கொண்டார். அதே நாளில் செங்கோட்டை இணைப்பு விழாவிற்கு செங்கோட்டையில் சி.சுப்பிரமணியன் பங்கேற்றார். நாகர்கோவிலில் நடந்த விழாவிற்கு தியாகி பி.எஸ்.மணி அவர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மணி இரண்டு நாள் கழித்து நாகர்கோவிலில் ம.பொ.சி., என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்டு குமரி மாவட்டம் இணைப்பு விழாவை சிறப்பாக நடத்தினார்.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பொது உடைமைக் கட்சியைச் சார்ந்த ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தியாகி சங்கரலிங்கனார் 77 நாள்கள் உண்ணாநோன்பு இருந்து தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தார். தனது கோரிக்கையை கம்யூனிஸ்ட் தலைவரான ஐ.மாயாண்டி பாரதிக்கு கடிதம் மூலமாகத் தெரியப்படுத்தினார். தமிழ்நாடு என்ற பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை அண்ணா முதல்வராகி நிறை வேற்றினார். தமிழ்நாடு என்ற பெயரிடக் கோரி நாடாளுமன்ற மக்கள் அவையில் பேரறிஞர் அண்ணாவின் கோரிக்கையை ஆதரித்து பூபேஷ் குப்தா குரல் கொடுத்தார்.

தட்சணப்பிரதேசம் என்று தக்கண பீடபூமி மாநிலங்கள் ஒன்றிணைக்க பண்டித நேரு நடவடிக்கைகள் எடுத்தபொழுது முதல் கண்டனக் குரல் அன்றைய முதல் காமராஜரிடம் இருந்து எழுந்தது. மொழி வாரியாக மாநிலங்கள் அமைய வேண்டும் என்று காமராஜர் விரும்பினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் குரல் காமராஜரின் எதிர்ப்புக்கு வலு சேர்த்தது.
தமிழகத்திற்கும் கேரள மாநிலத்திற்கும் இடையே உள்ள எல்லை 830 கி.மீ. ஆகும். கோவை மாவட்டம் முதுமலை தொடங்கி தெற்கே நெய்யாற்றங்கரை – கொல்லங்ககோடு வரை நீண்டுள்ளது. தமிழக கேரள மாநிலங்கள் எல்லை தூரம் 203 கி.மீ. அளவில்தான் இதுவரை நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 627 கி.மீ. தூரம் எல்லைகள் நிர்ணயிக்கப்படாமலே இருக்கின்றது. இதற்கு கேரளா அரசு ஒத்துழைப்புத் தரவில்லை. 

இதனால் தமிழகத்தில் இருந்தாலும் தமிழகப் பயணிகள் சித்ரா பௌர்ணமியில் கண்ணகியை வணங்கச் செல்லும்போது கேரள காவல் துறையினரால் அத்துமீறி தாக்கப்படுகின்றனர். அண்டை மாநிலங்களோடு நதிநீர்ப் பிரச்சினை யிலும், சமீபத்தில் கர்நாடகத்தோடு ஒக்கனேக்கல் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயங்களை வெளிப்படுத்தினாலும் கர்நாடகத்தின் எல்லை அத்துமீறல் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
கடந்த காலங்களில் தமிழர் இழந்த நிலங்கள் ஆந்திரத்திலும், கேரளத்திலும், கர்நாடகாவிலும் உள்ளன. தமிழகத்தில் உள்ள தாளவாடி கர்நாடகத்தில் சேர்க்க வாட்டள் நாகராஜ் தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறார். ஏற்கனவே கொள்ளேகால், பெங்களூர், கோலார் ஆகிய பகுதிகளை கர்நாடகத்திடம் இழந்து உள்ளோம். 

1956இல் தமிழகத்தின் விருப்பத்திற்கு மாறாக நெய்யாற்றங்கரை, நெடுமாங்கரை, தேவிகுளம் – பீர்மேடு கேரளத்தில் முறைகேடாக சேர்த்து விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையின் தெற்கேயிருந்து தமிழகத்தோடு இணைந்தது. நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு இழந்ததால் இன்றைக்கு காமராஜர் ஆட்சியில் நாம் கட்டிய நெய்யாறு அணையை கேரளா மூடிவிட்டது. தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இழந்ததால் முல்லைப் பெரியாறில் கேரளா முரண்டு பிடிக்கின்றது. அது மட்டுமல்லாமல் நெல்லை மாவட்டத்தின் அடவி நயனாறு, உள்ளாறு, செண்பகவல்லி, விருதுநகர் மாவட்டம் அழகர் அணை திட்டம், பாலக்காடு பகுதிகளை இழந்ததால் கொங்கு மண்டலத்தில் சிறுவாணி, பம்பாறு, பாண்டியாறு-புன்னம்புழா, பரம்பிக்குளம்-ஆழியாறு பிரச்சினைகள் இன்றைக்கும் கேரளாவோடு தலைதூக்கி நிற்கின்றது.

கர்நாடகத்தோடு கொள்ளேகால், மாண்டியா, கோலாறு இழந்ததால் காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் பிரச்சினை, ஆந்திரத்தில் சித்தூர், நெல்லூர், திருப்பதி இழந்ததால் பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி பிரச்சினை. கணேசபுரத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது. 

இவ்வளவு நதிநீர் ஆதாரங்களும், இயற்கை ஆதாரங்களும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம் இழந்த மண்ணால். இந்தத் தருணம் கொண்டாட்டமா? சிந்திக்கவா? என்று தெரியவில்லை. ஆனால் தென் மாவட்டங்களில் தமிழகத்தின் கலாச்சார பண்டைய தலைநகரம் ஏதென்ஸ், ரோம் நகர்களைப் போன்ற மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் ஏன் அமையக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்து வருகின்றது.
தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், இன்னொரு மாநிலம் அமைந்தால் பல சலுகைகளும், கிடைக்கும் என்று சிலர் வலியுறுத்துகின்றனர். மத்திய அரசின் பகுதியான புதுச்சேரிக்கே சிறப்புச் சலுகை இருக்கும்போது, தமிழ் பேசும் இன்னொரு மாநிலம் அமைந்தால் சில உரிமைகள் கிடைக்கும் என்று வாதிடுகின்றனர். இந்த வகையில் தென் தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையும் விவாதத்துக்கு உரிய பொருளாகும். தென் தமிழகம் அமைந்தால் நிர்வாகம், மக்கள் நலப் பணிகள் என பல நன்மைகளும் உள்ளன.

காலப் போக்கில் அரங்கன் பள்ளிகொண்ட காவிரியின் தென்கரை திருவரங்கரத்திலிருந்து குமரி முனையில் ஐயன் வள்ளுவன் சிலை வரை தென் தமிழகம் அமைய வேண்டும் என்ற சிலரின் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று நீர்பூத்த நெருப்பாக உள்ளன. 1998லிருந்து மத்திய அரசு சிறு மாநிலங்கள் அமைய வேண்டும் என்று வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது திட்டங்கள் தீட்டப்பட்டது. உள்துறை அமைச்சர் அதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு உத்தராஞ்சல், ஜார்கண்ட், சட்டீஸ்கர் வரை பல மாநிலங்கள் அமைந்தன. தற்போது தெலுங்கானாவும் தனி மாநிலமாகிவிட்டது. ஒரே மொழி பேசும் மாநிலத்தை நிர்வாக ரீதியாக பிரிக்கலாம் என்று மத்திய அரசும் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.
தியாகங்கள் செய்து மீட்டுத் தந்த தணிகை, குமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளோடு தமிழகத்தோடு இணைக்க போராடிய தியாகச் செம்மல்களின் கீர்த்தியை நினைவில் கொள்வோம். நாம் இழந்த மண்ணை எப்படி மீட்பது என்பதும் இப்போது சிந்திக்கப்படவேண்டிய விடயமாகும்.

விதியே விதியே என் தமிழச் சாதியை
என்செயக் கருதியிருக்கின் றாயடா?
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் 
பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவயிவ்வெளி்ய
தமிழச் சாதி, தடியுதை யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்தில…

விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செயக் கருதி யிருக்கின் றாயடா?
என்று ஒரு நூற்றாண்டுக்க முன்னர் மகாகவி பாரதி பாடியது இன்றும் சரியாகவே இருக்கிறது!
****
தமிழ்நாடே வாழ்க- 
எம்தாய்நா டே வாழ்க.
அமிழ் தா கியஇய லிசைகூத் தென்னும்
தமிழா கிய உயிர் தழையும் விழுமிய.
தாய்நாடே வாழ்க!
இலங்கை சிலம்பும் குமரித் திருவடி தென்பால்
எழிலார் விந்தக் குழலார் வேங்கடம் வடபால்
கலங்கொள் முத்துக் கடலும் பவழக்
கடலும் கிழக்கு மேற்கில் உடுக்க
தமிழ்நாடே வாழ்க!
குன்றுகள் வான்தொறும் எரிமலை அறியாய்!
பெருநில முடையாய் நடுக்க மறியாய்!தென்றற் குளிரும் செங்கதிர்ச் செல்வமும்
தண்ணீர் வளவயல் செந்நெலும் கொழிக்கும்
தமிழ்நாடே வாழ்க!
-பாவேந்தர் பாரதிதாசன்-

                        (2)
(தமிழகம் இழந்தது அதிகம். எல்லைகள் வரையறுக்கப்பட்டு 66 ஆண்டுகள் ஆகிறது).தமிழக எல்லைகள் அமைந்த மொழிவாரி மாநிலமாக இன்றைய தமிழகம் அமைக்கப்பட்டு இன்றோடு 66 ஆண்டுகள் ( நவம்பர் 1, 2018 ) முடிகிறது. நவம்பர் 1, 1956ம் ஆண்டு இன்றைய தமிழகம் அதன் எல்லைகளோடு பிரிக்கப்பட்டு அமைந்தது.
‘தமிழகம் 50’ விழாவை 12 ஆண்டுகளுக்கு முன் மயிலை பாரதிய வித்யா பவனில் விழா எடுத்தேன். ‘தமிழ்நாடு 50’ என்ற எனது நூலும் வெளியிடப்பட்டது.
அந்த விழாவில் வடக்கு எல்லை போராட்ட தியாகிகளான சிலம்புச் செல்வர் ம.பொ.சி, விநாயகம், மங்கலங்கிழார், கொ. மோ. ஜனார்த்தனம், சோமா.சுவாமிநாதன், ஆ. தாமோதரன், சி.வேங்கடசாமி, ஆ.வை. கிருஷ்ணமூர்த்தி, அம்மையப்பன், விசுவநாதன், அ. லூயிஸ், மு. வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் போன்றோரும், தெற்கெல்லை குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க பாடுபட்ட பி.எஸ்.மணி, மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், ஏ.அப்துல் ரசாக், தாணுலிங்க நாடார், டாக்டர். மத்தியாஸ், பொன்னப்ப நாடார், சிதம்பர நாதன் நாடார், போன்றவர்களையும், நெல்லை மாவட்ட செங்கோட்டையை தமிழகத்தோடு இணைய போரிட்ட செங்கோட்டை கரையாளர் அவர்களையும், தமிழ்நாடு என்று பெயர் வேண்டும் என்று உண்ணா நோன்பிருந்த தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் சிலரது படங்களையும், அவர்களின் தியாகத்தையும் இநத நிகழ்ச்சியில் நினைவு கூறப்பட்டது.
இதே நாளை ஆந்திரம் விசால ஆந்திரம் என்றும், கேரளம் நவகேரளம் என்றும், கர்நாடகா சம்யுக்த கர்நாடகம் என்றும், மகாராஷ்டிரம் சம்யுக்த மகாராஷ்டிரம் என்றும், குஜராத் மகா குஜராத் என்றும் கொண்டாடுகின்றன.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்த நாள் அமைந்தது குறித்து இதுவரை கவனிக்கப்பட வில்லை. 2005ல் ஆனந்த விகடனில் இதுகுறித்து நான் எழுதிய கட்டுரையும் வெளியானபின்; நான் எடுத்த விழாவிற்கு பிறகே இதுகுறித்து தமிழக மக்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்த நிகழ்வினை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியும் கலந்து கொண்டும் வருகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலை பாலு தலைமையில் ‘மொழிவழி மாநிலம் அமைந்த நாள்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
தெற்கே கன்னியாகுமரி அருகே நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு பகுதிகளை இழந்து அந்த பகுதி கேரளத்திற்கு சென்றதால் நெய்யாறு அணையில் தமிழகத்தின் உரிமை கேள்விக்குறியாக உள்ளது. நெல்லை மாவட்டம் அடவிநயினார், உள்ளாறு, செண்பகவல்லி அணை பிரச்சனை, அழகர் அணை பிரச்சனை (ஸ்ரீவில்லிப்புத்தூர்), தேவிகுளம், பீர்மேடு இழந்ததால் முல்லை-பெரியாறு பிரச்சனை, கொங்கு மண்டலத்தில் பாலக்காட்டு பகுதியில் உள்ள தமிழர்களுடைய கிராமங்களின் இழப்பால் பம்பாறு, சிறுவாணி, ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – புன்னம்பழா போன்ற நதிதீரப் பிரச்சனைகள், கர்நாடகத்திடம் கொள்ளேகால் போன்ற தமிழர்கள் பகுதிகளை இழந்த்தால் காவிரி, ஒகேனக்கல், தென்பென்னையாறு பிரச்சனை, ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லுர் பகுதிகளை இழந்த்தால், பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரிப் பிச்சனைகள் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் அட்டப்பாடி பிரச்சனை, கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோர பிரச்சனையில் கேரள அரசு குடிமைப் பொருள் வழங்கும் அட்டை (ரேசன் அட்டை) வழங்கியது. இப்படியாக நாம் இழந்த பகுதிகளால் பல சிக்கல்களை கடந்த 66 ஆண்டுகால் சந்தித்து வருகிறோம். பலர் போராடவில்லை என்றால் திருத்தணி நம்மைவிட்டு ஆந்திரத்ற்கு செல்கிறோன். நமது எல்லைப் போராட்ட தலைவர்களையும், தியாகிகளையும் நினைவுகூற வேண்டிய நாள் இன்று.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய பல்வேறு போராட்டங்களில் துப்பாக்கிச் சூடும் நடந்ததுண்டு. அந்த தியாக வரலாறையெல்லாம் நாம் நினைவு கூறவேண்டும்.
1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதியில் மூன்று பேர் பலியாயினர்.1. ஏ. தேவசகாயம், மங்காடு,2. தி. செல்லையா, கீழ்க்குளம்,3. கத்திக்குத்தில், பாகோடுவை சார்ந்த ஒருவரும் பலியானார்.1950-ல் குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் வேகமெடுத்தன. இதற்கிடையில் தமிழக அமைச்சர் பக்தவச்சலமும், கொச்சி முதலமைச்சர் பாளையங்கோட்டையில் சந்தித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டபோது, குமரி மாவட்ட போராட்டக் குழுவினருக்கு அது உடன்பாடாக இல்லை. இதை எதிர்த்து 11/08/1954இல் குமரி மாவட்டத்தில் மறியல்களும், பொதுக் கூட்டங்களும் நடந்தது. அன்று காவல் துறையினர் 16 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்.
1. புதுக்கடை ஏ. அருளப்பன் நாடார்2. கிள்ளியூர் எம். முத்துசாமி நாடார்3.. தோட்டவாரம் எம். குமரன் நாடார்,4. புதுக்கடை எம். செல்லப்ப பணிக்கர்,5. தேங்காய்ப்பட்டணம் ஏ. பீர்முகமது,6. தொடுவட்டி சி. பப்புப் பணிக்கர்,7. நட்டாலம் எஸ். இராமையன் நாடார்,8. மணலி, தோட்டவிளை ஏ. பொன்னப்பன் நாடார்9. தோட்டவிளை, மணலி எம். பாலையன் நாடார்.
மேலும் இப்போராட்டத்தில் சங்கரன்நாடார் என்பவர் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்டார். வண்டி ஏற்றி ஒருவர் கொல்லப்பட்டார். பனை உச்சியிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார். மொத்தம் 36 பேர் பலியானதாக தகவல்கள். பலர் கை, கால்களை இழந்தனர். குமரி மாவட்டமே அப்போது பதட்டமாக இருந்தது.
குமரி மாவட்டம் இரணியல் காவல் ஆய்வாளர் திரு. வி.எம். ஜார்ஜின் உத்தரவின் பேரில் இயங்கிய சிறப்பு தனி காவல் படை, காட்டுமிரான்டித் தனமாக நடந்து கொண்டது.
ஒரே நாளில், மாங்கரை, கொட்டேத்தி, பாலப்பள்ளம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் தெருக்களில் சென்று கொண்டிருந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது லத்தியால் அடித்தனர். திக்கணம்கோட்டை வரும்போது பள்ளியை விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவர்களிடம் அச்சத்தை உருவாக்கியது.
வடிவேல் என்ற மாணவன் சவரிமுத்து என்பவரின் வீட்டில் புகுந்து ஒளிந்துகொண்டார். போலீஸ் படை வீட்டுகுள் புகுந்துவிட்டதை கண்ட மாணவன் உயிருக்குப்பயந்து வெளியே சாடி ஓடிவிட்டான். அந்த பையன் யார் என்று சவரிமுத்துவிடம் போலீஸ் ஆய்வாளர் கேட்டார். தனக்குத் தெரியாது என்று சவரிமுத்துக் கூறியதால் தனி போலீஸ் படையினராலும், ஆய்வாளராலும் லத்தியால் அடித்து உதைக்கபட்டார் சவரிமுத்து. குறுக்கிட்ட அவன் சகோதரனும் தாயும் அதேபோன்று தாக்கப்பட்டனர். இச்செயலை கண்டித்த, திருமண வயதுக்கு வந்த, அவனது இளைய மகள் கன்னத்தில் அறையப்பட்டாள்.
அவளது காதில் கிடந்த அணிகலன் துண்டுதுண்டாக நொறுங்கியது. மூன்று பற்களும் ஆட்டம் கொடுத்தன. 10 தினங்களுக்கு முன் தனது 11-வது குழந்தையைப் பெற்றெடுத்த அவன் மனைவி இரக்கம் காட்டும்படி கெஞ்சினாள். அவள், பூட்ஸ் காலால் நெஞ்சில் உதைக்கப்பட்டாள். முடிவில், சவரிமுத்து போலீஸ்வேனில் கொண்டுசெல்லப்பட்டார். கொட்டேத்திச் சந்தையில் போலீசார் புகுந்து கலகம் விளைவித்தனர். அன்றாட பொருட்களை வாங்கவும் விற்கவும் அங்கு கூடியிருந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்களை துரத்தி அடித்தனர். பெண்கள் அலங்கோலமான முறையில் உயிருக்குப்பயந்து அங்குமிங்குமாக ஓடினர். இப்படியான ரணங்களும், அவலங்களும் அன்றைக்கு குமரி மண்ணில் நடந்தன.
கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையில் சரிபாதி என நாலரைத் தாலுகாக்கள் திருவிதாங்கூர் பகுதிகளில் தமிழகத்தோடு இணைந்தன. குமரி மாவட்ட எல்லைப் போராட்டத்தில் பி.எஸ்.மணி, நேசமணி போன்றோர் செய்த தியாகங்களை எல்லாம் மறக்க முடியாது.
விடுதலைப் போரில் போராடினோம். விடுதலை பெற்றோம். தமிழர் மண்ணை மீட்க போராடிய போது, தமிழகத்தின் குரலை மத்திய அரசு புறந்தள்ளியது. நம்முடைய நியாயங்கள் மறுக்கப்பட்டன. நம்முடைய தமிழ் மண்ணை கேரளம், கர்நாடகம், ஆந்திரத்துடன் இழந்தோம். இறுதியாக கச்சத்தீவையும் இழந்தோம். இப்படியெல்லாம் மண்ணை இழந்து  66 ஆண்டுகள் கடந்துவிட்டன.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 

#KSR_Post.
1-11-2022.
9.30 -காலை.


Tuesday, January 17, 2023

இங்கு #*தகுதியே தடை* #*நன்றியற்ற அரசியல் கட்சிகள்* என எழுதப்படாத விதி

தங்கப் பல் கட்டியிருக்கும்
அரசியல்வாதி..
மக்களை வாக்குகள் மூலம் விலை பேசுகிறர்..
இவரின் கைத்தடியின் பிடியில் கூட தங்கமுலாம்..
உருக்கியெடுக்கையில் வழிகிறது
சுரண்டலின்  கொசுறுகள்          வாழ்க நமது ஜனநாயகம்.
இங்கு #*தகுதியே தடை* #*நன்றியற்ற அரசியல் கட்சிகள்* 
என எழுதப்படாத  விதி

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அன்று…

இந்த புகைப்படம் எடுக்கும்போது அதில் இருந்த பெரியவர் அலுத்துக் கொண்டிருந்திருப்பார் " இப்பம்லாம் ரொம்ப ஜன நெரிசல் ஆகிடுச்சுடே. நூறு வருஷம் முன்னாடி இந்த எடம்லாம் எப்படி ஆளே இல்லாம இருக்கும் தெரியுமாலே?" என..
திருநெல்வேலி  நெல்லையப்பர் கோவில் அன்று…
#ksrpost
17-1-2023.


நியூட்டனின் விதிகளின்படி எல்லாவற்றிற்கும் எதிர்வினைகள் உண்டு.

நேற்று தமிழகம் அறிந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பொங்கல் வாழ்த்தை செல்பேசி அழைப்பில் என்னிடம் தெரிவித்துவிட்டு, எனக்கு எதிராக கடந்த காலங்களில் எதிர்வினையாற்றிய சிலருடைய பெயர்களைச் சொன்னார்.  “இன்றைக்கு அவர்களுடைய நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களா? இயற்கை என்று ஒன்று இருக்கிறது”  என்று வெளிப்படையாகப் பேசினார். அவர் பேசியது என் மனதில் ஆழமாகப் பதிந்தது. நியூட்டனின் விதிகளின்படி எல்லாவற்றிற்கும் எதிர்வினைகள் உண்டு.

#ksrpost
17-1-2023.

#46பேரை காவு கொடுத்த விவசாயப் போராட்டங்களின் வரலாற்றை மறைப்பது ஏன்?


(1)
—————————————
அ.முத்துக்கிருஷ்ணன் Muthukrishnan எழுதிய ‘போராட்டங்களின் கதை ’ என்ற விகடன் பிரசுர  Vikatan PublicationsVikatan Prasuramநூலைப் பார்த்தேன்.  எல்லாப் போராட்டங்களின் வரலாற்றையும் சொல்லிவிட்டு, 1966 - இலிருந்து இன்று வரை தமிழ்நாட்டில் நடக்கும் விவசாயப் போராட்டங்களின் வரலாற்றை இந்த நூலாசிரியர் சொல்லவில்லை.
 நான் மாணவனாக இருந்த காலத்திலேயே  சி.நாராயணசாமி நாயுடுவோடு 14 ஆண்டு காலம் விவசாயப் போராட்டங்களில் ஈடுபட்டவன். பல கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அந்த போராட்டங்களில் ஈடுபட காரணமாக இருந்தவன் என்ற முறையில் இது எனக்கு மிகப் பெரிய குறையாகப்படுகிறது. 
   சி.நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் 70-80 களில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தின்போது,  காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 46 விவசாயிகள் பலியானார்கள். வேறு காரணங்களுக்காக  6 விவசாயிகள் இறந்தார்கள். என்னுடைய சொந்த கிராமத்தில் மட்டுமே 8 பேர் இறந்தார்கள்.  நாராயணசாமி நாயுடுவின் தலைமையின் கீழ் விவசாயிகள் வீறுகொண்டு எழுந்த அந்த போராட்ட வரலாற்றை அ.முத்துக்கிருஷ்ணன் ஏன் எழுதாமல் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.   
   அன்றைய பிரதமர் இந்திராகாந்தி முதல் முதல்வர் எம்ஜிஆர் வரை நாராயணசாமி நாயுடுவின் ஊரான வையம்பாளையம் என்ற சிற்றூரில் இருந்த  அவருடைய ஓட்டு வீட்டுக்கு வந்தார்கள். போர்க்குணம் மிக்க நாராயணசாமி நாயுடு மின்கட்டணம் கட்டமாட்டேன் என்று மறுத்ததால் அவருடைய வீட்டில்  மின்சார வசதி அப்போது துண்டிக்கப்பட்டு இருந்தது. அந்த வீட்டுக்குத்தான்  பிரதமரும் முதல்வரும் வந்தார்கள். இது நூல் ஆசிரியருக்குத் தெரியவில்லையே?
 நாராயணசாமி நாயுடுவின் தலைமையிலான விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை, இன்றைக்கும் சமூக ஊடகங்களில் இருக்கிறது. 
 தமிழக விவசாயிகளின் வீரமான போராட்ட வரலாற்றை தவிர்த்துவிட்டு, ‘போராட்டங்களின் கதை ’ என்ற பெயரில் எழுதுவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. உண்மைகளும் நல்லவைகளும் நம் வசப்படுவது இப்போது அரிதாகவே உள்ளது. போலிகளையும், தகுதியற்றவர்களையும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதுதான் இன்றைய அரசியல் களத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் இருக்கிறது.

https://www.hindutamil.in/news/tamilnadu/555798-free-electricity-46-killing-farmers-background-ks-radhakrishnan-shared.html

#K.S.Radhakrishnan #கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்
#தமிழக அரசியல்* 

#ksrpost.
17-1-2023.

Monday, January 16, 2023

சிறியதே அழகு எளிமையே பலம்.

நம் கலாச்சாரத்தின் அடையாளங்கள் ஒவ்வொன்றும் திட்டமிட்டு  நம்மை அறியாமலேயே நம் கண் முன் அழிக்கப்படுகிறது.
அலட்சியப்படுத்தாதீர்கள்.
மரபுகளை,வேர்களை மறக்க கூடாது.

எண்ணத்தை தூய்மையாக்கி ஒருமுகப்படுத்தி தன்னை அறிந்து பிரபஞ்சமாகவே மாற முடியும். நம்மால் மனதை விரித்து பூரண இயற்கையாகவே மாற இயலும். ஒவ்வொரு உயிராலும்.
ஆடம்பரத்தால் எப்போதுமே மகிழ்ச்சி என்பதும் பலருக்கு மனநிறைவு என்பதும் இன்றைய வாழ்வில் இல்லவே இல்லை.



பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

#பொங்கல்நல் வாழ்த்துக்கள் #மாட்டுப் பொங்கல்



—————————————
                              (4)
இன்று மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் கொண்டாடப்படுகிறது.

மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். சந்த னம், குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை, கலப்பை, மாட்டு வண்டியை  சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

"பட்டி பெருகோணும்.
பால் பொங்கோணும்.
வெள்ளாமை வெளையோணும்.
பொங்கல் பொங்கோணும்"

"பட்டி"-ஆடு மாடு எருமை போன்ற கால்நடைச் செல்வங்களைக் குறிக்கும் சொல்.
இன்றும் கால்நடைகளை கட்டி வைக்கும் இடத்திற்கு  "கட்டுத் தரை" / "தொண்டுப் பட்டி" / தொழுவம்  எனும் சொற்கள் வழக்கில் உள்ளன.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு ரேக்களா என விளையாட்டுகள்  இந்நாளில் நடைபெறும்.


ஜல்லிக்கட்டின்  தொன்மையை ஆராய்ந்தால் அது கிட்டத்தட்ட 5000 ஆண்டு பழைமை வாய்ந்த ஓர் நிகழ்வாய் தரவுகள் கிடைக்கிறது . சிந்துசமவெளி நாகரீகத்திலேயே இவ்விளையாட்டு குறித்த குறியீடுகள் கிடைத்துள்ளன. அதன்தொடர்ச்சியாக பாறை ஓவியங்களிலும் இவ்வீரவிளையாட்டு குறித்த ஓவியங்கள் உள்ளன 
ஐல்லிகட்டு நிகழ்வு வெறும் வீரம் தொடர்பானது மட்டுமல்ல,ஒரு காளையை தழுவும்போது, அந்த காளை மாடு பிடி வீரர்களின் எதிர்ப்பை  தாண்டி ஒரு 50 அடி தூரம் சென்றுவிட்டால் அந்த காளைக்கு வீரியம் அதிகம் என்று கருதி  அதை இனப்பெருக்கத்திற்கு அனுப்புவார்கள். பிடிபட்ட காளைகளை விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். 

சல்லி என்பதற்கு பணம் என்று பொருள், காளையின் கொம்பில் பணமுடிப்பை கட்டி வைத்து, அதன்பின் காளைகளை  அடக்கும் மாடுபிடிவீரர்கள், மாட்டினை அடக்கி அந்த பணமுடிப்பை கைப்பற்றியதால் இவ்வீர விளையாட்டிற்கு "ஐல்லிகட்டு" எனும் இப்பெயர் வழங்கப்பட்டு , அது இன்றளவும் தொடர்கிறது. 
தொல்லியல் அறிஞர்  ஐராவதம் மகாதேவன் அவரகள் சிந்துசமவெளி மக்கள் மேற்குதொடர்ச்சி மலை வழியே  இடம்பெயர்ந்து இந்தியாவின் தென் பகுதிக்கு  வருகையில் தங்கள் வாழ்வாதரத்திற்கு உறுதுணையாய் கால்நடைகளுடன் இடம் பெயந்ததாகவும் ,அங்கு இருந்த பழக்கமே இன்று வரை தொடருவதாகவும்  கருதுகிறார். 
இந்த ஜல்லிக்கட்டானது  இலக்கியங்களில் ஏறுதழுவல் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.
பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலில்  (330-335) அடிகளிலும் , பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
ஏர் தழுவுதல் நடக்கும் நாள் அல்லது அதன் முந்தைய நாள் அன்று  குரவைக்கூத்து நடைபெறும். முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறு தழுவும் வீரன் வெற்றிபெற வேண்டிப்பாடுவர். ஏறு தழுவும் நாளின் மாலையில் குரவைக்கூத்து நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவர்.
வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,
'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக்
முல்லையம் பூங்குழல் தான்' 
என்று குறிப்பிடுகிறது.

இலக்கியம் தவிர்த்து கல்வெட்டுகளிலும் ஏறுதழுவல் இடம்பெற்றுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள ஏறுதழுவல் குறித்த வீரக்கல் ஒன்று ,இப்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது .கோவுர்சங்கன் என்பவர் எருதுவிளையாட்டில் இறந்துவிடுகிறார். அவருக்கு எடுக்கப்பட்ட நடுகல் இது.
இவ்வாறு சிந்துசமவெளியில் தோன்றி, அதன் தொடர்ச்சியாய் பாறைஓவியங்களிலும் இடம்பெற்று, சங்ககாலஇலக்கியங்களிலும் புகழ்பெற்று இன்றும் நம் தமிழர்களின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது ஏறுதழுவல் எனும் நம் ஜல்லிகட்டு


கிராமப்புறங்களில் விழாக் கலை, விவசாயிகளின் மகிழ்ச்சி என் மனதில் எப்போதும் இருக்கும். விவசாயின் மகனான கிராமப்புறங்களில் விழாக் கலை நிகழ்வுகள், விவசாயிகளின் மகிழ்ச்சி என் மனதில் எப்போதும் இருக்கும். கொண்டாட்டங்களின் மூலம் நமது கலாச்சாரத்தை என் மனதில் வலுவாக விதைத்துள்ளேன். அதுதான் என் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளம் அமைத்தது.

வருடாந்திர தை பொங்கல் பண்டிகை கிராமப்புற மற்றும் விவசாயிகள் மிகவும் விசேஷமானது. இது விவசாயிகளின் திருவிழா….. திருவிழாவில் தானியங்கள் வீடு வந்து சேரும். "Share and Care" என்பது இந்திய கலாச்சாரத்தின் முக்கிய கருத்து நமது மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற உணர்வோடு கொண்டாடப்படுகிறது. வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயில் இட்டு தூய்மைக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். அத்துடன் சூரியன் வடக்கு புண்ணிய காலத்தில் நுழைந்து வெப்பத்தை கொண்டுவருகிறது. இப்போது நாம் குளிர் மற்றும் இலேசான சொக்கப்பனங்களுக்கு விடை கொடுப்போம். சூரியன் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தருகிறது. அதனால் தான் இந்த பண்டிகையன்று குழந்தைகளுக்கு சூரியனை குறிக்கும் போகி பழங்களை ஊட்டி அவர்கள் ஆரோக்கியமும் ஆயுளும் கிடைக்க அருள்வோம்.

நம் முன்னோர்களை நினைவுகூரும் விழா. நமது கடந்த காலத்தை பெரியவர்களிடம் வைத்து எதிர்காலம் அறியும். நாம் எங்கிருந்து வருகிறோம் என்றும் நம் கலாச்சாரத்தையும் நம் குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.  இன்று மூன்றாவது நாளில் மாட்டுகளுக்கு திருவிழா. உழவு செய்ய உதவும் கால்நடைகளுக்கு நன்றிக்கடன் கூடிய கட்டில்களை சுத்தம் செய்து வழிபாடு. நம் வளர்ச்சியில் இவர்களும் பங்காளிகள் என்பது தான் இதன் முக்கிய அர்த்தம். மிருகச் செல்வம் நாட்டின் செல்வம் என்ற பெரியவர்களின் வார்த்தைக்கு இதுவே சான்று.

பண்டிகை என்றால் புத்தாடைகள், மாவு பதார்த்தங்கள் மட்டுமல்ல, அது நம் கலாச்சாரம், பாரம்பரியங்கள். நமது பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகள். நம் மகிழ்ச்சியை நால்வருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், பெரியோரை மதிக்க வேண்டும். சமுதாயத்தில் உள்ள அனைவரும் பயன்பெற வேண்டும். நம் வருங்கால சந்ததியினருக்கு கலாச்சார பாரம்பரியங்களை எடுத்துச் சொல்லி பெரியோர்களை பெருமைப்படுத்த அனைவரும் 10 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.

1. நாம் நமது வேர்களுக்குத் திரும்பிச் செல்வோம். பெரியவர்கள் காட்டிய வழியில் நாம் முன்னேறுவோம். இந்திய கலாச்சாரம் புத்துயிர் பெற பாடுபடுவோம். சேவைத் திட்டங்களில் பங்கெடுப்போம்.
2. நம் வாழ்க்கை முறையில் மாற்றங்களின் ஆரம்பம் காண்போம். வாழ்க்கை முறை பற்றி அறிந்து பழகுவோம். மேற்கத்திய வாழ்வை விட்டு சுயமாக வாழுங்கள்.
3. நமது ஆரோக்கியத்தை காக்கும் உணவில் கவனம் செலுத்துவோம். நமக்கல்லாத உணவின் மீதான பற்றை குறைத்து உணவில் கவனம் செலுத்தி உடல் நலம் காப்போம்.
4. இளைஞர்களின் கவனத்தை விவசாயத்தின் பக்கம் திருப்புவோம். இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்போம் ரசாயனம் பயன்படுத்துவதை நிறுத்துவோம். விவசாயத்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்களுக்கு முயற்சி செய்வோம்.பசுமையை வளர்ப்போம்.
5. இந்திய தாய்மொழிகளை மதித்து ஊக்குவிப்போம் தாய்மொழி காக்க போராடுவோம்.
6. உலக நாடுகளால் விதைக்கப்பட்ட இந்திய குடும்ப அமைப்பின் இருத்தலை காப்போம். பாரம்பரிய சமுதாயத்தை வலுப்படுத்தி வலுப்படுத்தும் சக்தி நம் குடும்பம். தலைமுறை தலைமுறையாக நம் எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கும் சக்திவாய்ந்த பிணைப்பு அது. வளமான நமது சமூக அமைப்பை ஒருங்கிணைந்த வடிவத்திற்கு கொண்டு வந்த குடும்ப அமைப்பை பாதுகாப்போம்.
7. பகிர்வதும் கவனிப்பதும் இந்திய தத்துவத்தின் அடிப்படை. இருப்பதில் ஒரு பகுதியை நாலுபேரிடம் சந்தோஷமாக பகிர்ந்து அவர்கள் நலம் விரும்புவதுதான் இந்திய நவீன கண்ணோட்டம். அந்த தத்துவத்தை பழக்கமாக்குவோம். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்.
8. உடற்பயிற்சியின் மூலம் உடல் ஆரோக்கியம் பேணுவதோடு, மன அமைதி பெற ஆன்மீகம் பழகுவோம். இயற்கையை நேசிப்போம். இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.
9. நமது பொறுப்புகள், கடமைகள், செயற்பாடுகளை நிறைவேற்றி நாட்டின் எதிர்காலத்திற்கு பங்களிப்போம். இந்த நன்னாளில், சக்திவாய்ந்த, ஆரோக்கியமான மற்றும் வளமான நாட்டை உருவாக்க நாம் உறுதியேற்போம்.
10. நமது விளையாட்டு, நமது பாடல், நமது வழி, நமது சொல், நமது மொழி, நமது பெருமை..

பிறருக்கு உதவும் நமது கலாச்சாரத்தை வருங்கால தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வழிகளே பண்டிகைகள். திருவிழாக்களை ஏற்பாடு செய்வது குழந்தைகள் உடல் மற்றும் மனரீதியாக வளர உதவுகிறது. அந்த வளர்ச்சி அவர்களுக்கு வாழ்க்கையில் உதவும். வெற்றியை நோக்கி அவர்களை ஊக்குவித்தல். 

நமது அரசியலமைப்புச் சட்டமும் நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் உணர்வை பிரதிபலிக்கிறது அரசியல் சாசன உறுப்பை பார்த்தால் பிரபல ஓவியர் ஸ்ரீ நந்தலால் போஸ் அவர்களின்  கை வண்ணம் நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.

மகாபாரதம், ராமாயணம், அசோக், கௌதம புத்தர் ஆகியோரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் அரசியலமைப்பின் மூலையில் உள்ள படங்கள் கடமை பக்தி, சேவை, மனிதநேயம், அறிவு மற்றும் அற பக்தி போன்ற வாழ்க்கை மதிப்புகளை அவசியம். இவை அனைத்திற்கும் முக்கிய நோக்கம் நமது வருங்கால சந்ததியினரின் மனதில் நமது இந்திய மதிப்புகளையும் கலாச்சாரத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என்ற தீர்மானமே.

நேர்மையான பொது வாழ்வு அரசியல் சேவையில் தான் உண்மையான செல்வம் இருக்கிறது. பலர் நினைப்பது போல செல்வம் என்பது லாக்கரில் ஒளிந்திருக்கும் சொத்து,துட்டு,தராசின் தங்கம் அல்ல.

• வீட்டு வாசலில் கேட்கும் பெண்களின் கஜ்ஜால் சத்தம்... செல்வம்
• வீட்டிற்கு வந்தவுடன் புன்னகையுடன் என் முன்னே வரும் மனைவியின் பாசம்... செல்வம்.
• எவ்வளவு வளர்ந்தாலும் அப்பாவின் திட்டுக்கள்... செல்வம்.
• அம்மா செய்த உணவு... செல்வம்.
• தேவைப்படும் சிறந்த நண்பனின் துணை.. செல்வம்.
• புத்திசாலித்தனமான மற்றும் முன்மாதிரியாக நடத்தப்படும் குழந்தைகள்... செல்வம்
• எல்லாவற்றிற்கும் மேலாக நாம் காக்க வேண்டியது ஆரோக்கியத்தை தான்.. உண்மையான செல்வம்.

எண்ணத்தை தூய்மையாக்கி ஒருமுகப்படுத்தி தன்னை அறிந்து பிரபஞ்சமாகவே மாற முடியும் நம்மால் மனதை விரித்து பூரண இயற்கையாகவே மாற இயலும் ஒவ்வொரு உயிராலும்.
ஆடம்பரத்தால் எப்போதுமே மகிழ்ச்சி என்பதும் மனநிறைவு என்பதும் இல்லவே இல்லை.

சிறியதே அழகு
எளிமையே பலம்.
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

இந்த உத்வேகம் புரிந்து அனைவரும் முன்னேற்றப்பாதையில் மகிழ்ச்சியும் அமைதியுடனும் முன்னேற வாழ்த்துகிறேன் இந்த திருநாளில்... நாடு மற்றும் வெளிநாட்டில் வாழும் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
———————————————————
கரி நாள்  பொங்கல்
உற்றார், உறவினர்கள், நண்பர்களைக் கண்டு இனிப்புகளைப் பரிமாறி சந்தோஷம் அடைவதே காணும் பொங்கலாகும்.
“விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன்” (அகநானூறு:54)
விருந்து எனும் சொல்லிற்கு புதுமை எனும் ஒருபொருளை தொல்காப்பியம் தருகிறது.
பண்டைய தமிழரின் பண்பாட்டில் தலையாய் இருந்த பண்பு விருந்தோம்பல் ஆகும். “பண்டமாற்று முறை வழக்கிருந்த அக்காலத்தில் போக்குவரத்து வசதிகளும் இல்லாத சூழலில்.இரவலர்கள் மட்டுமின்றி ஏனையோரும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு கால்நடையாகவே மக்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. உணவு விடுதிகள் இல்லாத காரணத்தினால் உண்டிக்கும் உறையுளுக்கும் அனைவரும் செல்லும் ஊர்களையே நம்ப வேண்டியிருந்தது. ஆகவே, புதிதாக வருவோர்க்குப் பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு தமிழகத்து இல்லங்களில் உருவாயிற்று. 
‘விருந்தோம்பல்’ என்பது தம் இல்லம் தேடி வரும் புதியவர்களை இன்முகத்துடன் வரவேற்று இனிய மொழி கூறி உபசரித்து உணவளிக்கும் உயரிய பண்பாகும்.
—————————————————————-

நம் சங்க இலக்கியங்களில் பதிவான ஏறு தழுவதல் பாடல்கள்
மலைபடுகடாம்:
இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை
(மலை.330-335)
ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்
திருமாமெய் தீண்டலர்
(கலித்தொகை-102 : 9-10)
கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்
(கலித்தொகை- 103 : 63-64)
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை:
காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ்
வேரி மலர்க் கோதை யாள்"
"நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப்
பொற்றொடி மாதராள் தோள்"
இப்படி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் ஏறுதழுவலையும் தமிழர் வாழ்வின் அங்கமாக இருந்ததையும் விவரிக்கிறது.
இந்த பாடல்களில் காளைகளின் நிறம், வகை, வீரம், வேடிக்கைப் பார்க்கும் பெண்களின் கிண்டல்கள், பெண்கள், பெற்றோரின் மன இயல்பு ஆகியவற்றைதான் இந்த சங்கப்பாடல்கள் விவரிக்கின்றன.
முல்லை, மருதம் நில காளைகள் பங்கேற்கும் இந்த வீர விளையாட்டை தமிழக பெண்களும் குரவைக்கூத்து என்ற நாட்டுப்புறப்பாடல் வாயிலாகப் பாடியுள்ளனர்.ஏறுதழுவுதல் அல்லது சல்லிக்கட்டுக்கு முன்னர் குரவைக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதில் தாங்கள் விரும்பும் ஆண்கள் சல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதலில் வெல்ல வேண்டும் என்பது முதன்மை விருப்பமாகவும் இருந்தது.
அது சரி ஜல்லிக்கட்டு என்பது தமிழ்ச் சொல்லா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது ஜல்லிக்கட்டு அல்ல... சல்லி கட்டு என்பதுதான் சரியானது.
அதாவது சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையமாகும். புளியங் குச்சியால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவதுதான் இந்த சல்லி வளையம். இந்த சல்லி வளையத்தைப் பிடித்து மாட்டிக் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பணமுடிப்பை கைப்பற்றுவதுதான் சல்லிக்கட்டு என்பதாகும். இதுவே நாளடைவில் ஜல்லிக்கட்டாகிவிட்டது.
ஏறுதழுவும் வீரனின் நடுகல் ஒன்று.

BBC - MDMK மதிமுக பழைய சங்கதிகள்

https://www.bbc.com/tamil/articles/cpekp475v48o?fbclid=IwAR0AbwO3Tm8L7Jq2sNptv5Gz1mw9yjqMROo_gxGls02hTHu51CtQBCW3uPs