Tuesday, January 17, 2023

#46பேரை காவு கொடுத்த விவசாயப் போராட்டங்களின் வரலாற்றை மறைப்பது ஏன்?


(1)
—————————————
அ.முத்துக்கிருஷ்ணன் Muthukrishnan எழுதிய ‘போராட்டங்களின் கதை ’ என்ற விகடன் பிரசுர  Vikatan PublicationsVikatan Prasuramநூலைப் பார்த்தேன்.  எல்லாப் போராட்டங்களின் வரலாற்றையும் சொல்லிவிட்டு, 1966 - இலிருந்து இன்று வரை தமிழ்நாட்டில் நடக்கும் விவசாயப் போராட்டங்களின் வரலாற்றை இந்த நூலாசிரியர் சொல்லவில்லை.
 நான் மாணவனாக இருந்த காலத்திலேயே  சி.நாராயணசாமி நாயுடுவோடு 14 ஆண்டு காலம் விவசாயப் போராட்டங்களில் ஈடுபட்டவன். பல கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அந்த போராட்டங்களில் ஈடுபட காரணமாக இருந்தவன் என்ற முறையில் இது எனக்கு மிகப் பெரிய குறையாகப்படுகிறது. 
   சி.நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் 70-80 களில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தின்போது,  காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 46 விவசாயிகள் பலியானார்கள். வேறு காரணங்களுக்காக  6 விவசாயிகள் இறந்தார்கள். என்னுடைய சொந்த கிராமத்தில் மட்டுமே 8 பேர் இறந்தார்கள்.  நாராயணசாமி நாயுடுவின் தலைமையின் கீழ் விவசாயிகள் வீறுகொண்டு எழுந்த அந்த போராட்ட வரலாற்றை அ.முத்துக்கிருஷ்ணன் ஏன் எழுதாமல் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.   
   அன்றைய பிரதமர் இந்திராகாந்தி முதல் முதல்வர் எம்ஜிஆர் வரை நாராயணசாமி நாயுடுவின் ஊரான வையம்பாளையம் என்ற சிற்றூரில் இருந்த  அவருடைய ஓட்டு வீட்டுக்கு வந்தார்கள். போர்க்குணம் மிக்க நாராயணசாமி நாயுடு மின்கட்டணம் கட்டமாட்டேன் என்று மறுத்ததால் அவருடைய வீட்டில்  மின்சார வசதி அப்போது துண்டிக்கப்பட்டு இருந்தது. அந்த வீட்டுக்குத்தான்  பிரதமரும் முதல்வரும் வந்தார்கள். இது நூல் ஆசிரியருக்குத் தெரியவில்லையே?
 நாராயணசாமி நாயுடுவின் தலைமையிலான விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை, இன்றைக்கும் சமூக ஊடகங்களில் இருக்கிறது. 
 தமிழக விவசாயிகளின் வீரமான போராட்ட வரலாற்றை தவிர்த்துவிட்டு, ‘போராட்டங்களின் கதை ’ என்ற பெயரில் எழுதுவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. உண்மைகளும் நல்லவைகளும் நம் வசப்படுவது இப்போது அரிதாகவே உள்ளது. போலிகளையும், தகுதியற்றவர்களையும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதுதான் இன்றைய அரசியல் களத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் இருக்கிறது.

https://www.hindutamil.in/news/tamilnadu/555798-free-electricity-46-killing-farmers-background-ks-radhakrishnan-shared.html

#K.S.Radhakrishnan #கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்
#தமிழக அரசியல்* 

#ksrpost.
17-1-2023.

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...