Sunday, December 31, 2017

புத்தக இரவு

Image may contain: people sitting and indoor
பாரதி புத்தகாலயம் இன்று நள்ளிரவில் நடத்தும் புத்தாண்டு புத்தக இரவில் பங்கேற்கிறேன்.
இளங்கோ தெரு,
தேனாம்பேட்டை.
#புத்தாண்டு
#புத்தக_இரவு
#new_year
#KSRadhakrishnanPostings
#KSRPostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
31-12-2017

அண்ணாசிலை


Image may contain: 2 people, people sitting and wedding

இந்த அரிய படம் 1967 இறுதி காலகட்டங்களில், தி.மு.க ஆட்சிக்கு வந்து பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபொழுது எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படம். இந்தப் படத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவும், அவருடைய மார்பளவு சிலையும், அவருடைய புகைப்படமும் அண்ணா சிலை செய்வதற்காக பணிகள் நடந்தபோது எடுத்து படம். அண்ணாவின் சிலையை அமைக்க முதலில் அண்ணா இசைவு தரவில்லை. நான் நாற்காலியில் அமர்ந்து போஸ் கொடுத்து சிலை செய்ய வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். தலைவர் கலைஞரும், எம்.ஜி.ஆரும், நாவலரும் அவரை வற்புறுத்தி அழைத்து வந்தார்கள். இது அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்தச் சிலைக்கான முழுச்செலவையும் எம்.ஜி.ஆரே ஏற்றுக் கொண்டார். அந்தச் சிலைதான் இன்றைக்கு அண்ணாசாலையில்,வாலாஜ சாலை சந்திப்பில் இருக்கும் சிலையாகும். இந்தச் சிலையை சென்னை பல்கலைக்ககழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.எல். முதலியார் திறந்து வைத்தார். இதைக் குறித்து விகடன் பத்திரிகையிலிருந்து அதன் செய்தியாளர் அஸ்வினி விளக்கம் கேட்டபோது இதுகுறித்து இந்த விவரத்தினை அவரிடம் தெரிவித்தேன்.


*கே.எஸ். இராதாகிருஷ்ணன்*
30-12-2017



Saturday, December 30, 2017

யார் யாருக்கோ ஞானபீடமா?

மூத்த படைப்பாளி கி.ரா வின் நினைவு கூட உங்களுக்கு வரவில்லையா??
தமிழக படைப்பாளிகள் அகிலன், ஜெயகாந்தன் ஆகிய இருவர் மட்டுமே ஞானபீடம் பெற்றுள்ளனர்.
கிராவுக்கு கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறது. கிராவின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, பிரஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. எல்லாரும் எதிர்பார்த்த ஞானபீடம் தமிழுக்கு கிடைக்கவில்லை என்று அனைவரையும் வேதனைபடுத்தி ள்ளது .
ஞானபீட விருது 1965ல் இருந்து ஜெயின் ட்ரஸ்ட் என்ற தனியார் அமைப்பு இந்தியாவின் பல்வேறு மொழிகளில் உள்ள இலக்கியப்படைப்புகளில் ஒரு மொழியை தேர்ந்தெடுத்து அந்த மொழியில் உள்ள சிறந்த படைப்பாளிக்கு விருதினை வழங்கி வருகிறது.

வங்கமொழிக்கு 6 முறையும், கன்னட மொழிக்கு 8 முறையும், மலையாள மொழிக்கு 5 முறையும், தெலுங்கிற்கு 3 முறைக்கு மேலும் ஞானபீட விருதுகள் வழங்கபட்டுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில்,தமிழ் இலக்கிய படைப்புகளுக்கு ஒரு முறைகூட வழங்காமல் ஞானபீடம் புறக்கணித்து விட்டது. தமிழ் இலக்கிய கர்த்தாக்களுக்கு இந்த ஆண்டும் வழங்காமல் வங்க மொழி கவிஞர் ஷங்கா கோஷ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் படைப்பாளிகளான அகிலன், ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழ் இலக்கியத்திற்கு ஞானபீடம் கிடைக்கவில்லை. நா.பார்த்சாரதிக்கு 1987ல் கிடைத்திருக்க வேண்டிய ஞானபீட விருதும்  அவர் மரணம் அடைந்துவிட்டதால் அந்த வாய்ப்பும் தவறிவிட்டது. ஏனெனில் ஞானபீட விருது மறைந்தவர்களுக்கு கொடுப்பதில்லை.
விருதுகள் பெறுபவர்களால் பெருமைப்படும். தவிர விருதுகள் என்றுமே படைப்பாளிகளுக்கு பெருமை சேர்ப்பது அல்ல.
கி.ரா போன்ற இலக்கிய ஆளுமைகள் இந்த மண்ணில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

#ஞானபீடம் 
#கி_ராஜநாராயணன்
#தமிழ்_இலக்கியம்
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
#KSRPostings
#KSRadhakrishnanpostings

30-12-2017

Prime Minister Harold Macmillan



On1986 former Prime Minister Harold Macmillan died. In this group picture is Macmillan alongside several other former and current British Prime Minister and Queen Elizabeth II.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
29-12-2017
Image may contain: 3 people, people standing, suit, wedding and indoor

கவிஞர் இளையபாரதி வெளியிடும் ‘வேலுப்பிள்ளை பிரபாகரனின், விடுதலைப் போராட்ட வரலாறு’

நண்பர் கவிஞர் இளையபாரதி, தனது வ.உ.சி நூலகம் மூலமாக செம்பூர் ஜெயராஜ் எழுதிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் விடுதலைப் போராட்ட வரலாறு 1200 பக்கத்திற்கு விரிவான நூலாக விரைவில் வெளியிட இருக்கின்றார். அதற்கான பல தரவுகளையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் சகோதரர் பிரபாகரன் அவரது சகாக்களோடு எனக்குள்ள நெருக்கமும், 1980 காலக்கட்டங்களில் நடந்த நிகழ்வுகளையும் குறிப்புகளாக இந்த நூலுக்கு வழங்கியது எனக்கு கிடைத்த பெரும் பேறாக நினைக்கின்றேன்.


இந்த புத்தகத்தின் மாதிரி நகலை படிக்க வாய்ப்பு கிடைத்தது. அற்புதமான உழைப்பு, முழுமையான தரவுகளும், ஆய்வுகளோடு ஈழத்தமிழரின் போராட்டத்தையும் பதிவு செய்துள்ளது. இந்நூல் வீரத் தியாகிகளின் வரலாறோடு மட்டுமல்லாமல் தமிழர்களுடைய ஆற்றல்களையும், தியாகத்தையும் வெளிப்படுத்துகின்றன. அருமைத் தம்பி பிரபாகரனுடைய புரட்சிகரமான இந்த வீரப்போராட்டம் தமிழகத்தை மிரள வைத்தது. இப்படி இன்னொரு போராட்ட வரலாற்றை படைக்க முடியுமா? என்பது என்னைப் போன்றவர்களுக்கு கேள்விக்குறியாக மனதில் அவ்வப்போது எழுகிறது. பிரபாகரன் மற்றும் அவரின் சகாக்களோடு நெருங்கிப் பழகியதால் அவர்களின் ஆற்றல், பண்புகள் போன்றவற்றை நன்கு அறிந்தவன்.

கவிஞர் இளையபாரதி இந்தப் பணியை தவமாகச் செய்துள்ளார். அவரை வாழ்த்திப் பாராட்டவேண்டியது நம் அனைவரின் கடமையாகும். சிலர் நினைப்பது போல இல்லாமல் ஈழப் போராட்டம் ஒவ்வொரு தமிழனின் உணர்வில் கலந்த தியாகத்தின் வடிவமாகும். அதை நூல்வடிவமாக  வ.உ.சி. நூலகம் வெளியிடுவது மகிழ்ச்சிக்குரிய செய்திகளாகும்.

#ஈழப்_போராட்டம்
#வேலுப்பிள்ளை_பிரபாகரன்
#velupillai_prabakaran
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-12-2017

பாரதியார் பாடல்களும், பிரியா சகோதரிகளும்.

கடந்த சனிக்கிழமை (23-12-2017) மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் பிரியா சகோதரிகளுடைய இசைக் கச்சேரியை கேட்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. நல்லக் குரல்வளம். முண்டாசுக்கவி பாரதியின் இந்த ஏழு பாடல்களையும் கம்பீரத்தோடு பாடியுள்ளனர்.

‘நல்லதோர் வீணை செய்து…’
‘ஆசைமுகம்…’
‘திக்குத்தெரியாத…’
‘நின்னைச் சரணடைந்தேன்…’
‘நெஞ்சுக்கு நீதியும்…’
‘ஆசைமுகம்…’
‘கேட்ட பொழுதில்…’

இன்னும் சில பாரதியார், பாரதிதாசன் பாடல்களை இவர்கள் பாடி தனி சிடி ஆல்பமாக வந்தால் தமிழ் கூறும் நல்லுலகம் மகிழ்ச்சியுறும். வாழ்த்துகள்.

#பாரதியார்_பாடல்கள்
#பிரியா_சகோதரிகள்
#priya_sisters
#bharathiyar_songs
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-12-2017

விவசாயிகள் தற்கொலை.

விவசாயிகள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். தற்கொலைகளும், விவசாய மரணங்களும் நடந்த வண்ணம் இருக்கின்றது. விவசாயம் மழையில்லாமல் பொய்த்துப் போவதும், விவசாய விளைப் பொருட்களுக்கு லாபகரமான விலையில்லாததும், கடன் பிரச்சனைகளும் விவசாயிகளின் நிம்மதியை குலைத்து நிலைகுலையச் செய்கின்றது. 
உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனை இருக்கின்றது.குறிப்பாக இந்தியாவில் இது அதிகம். ஆஸ்திரேலியாவில் நான்கு நாட்களுக்கு ஒரு விவசாயியும், பிரான்சில் இரண்டு நாட்களுக்கு ஒரு விவசாயியும், பிரிட்டனில் வாரத்திற்கொரு விவசாயியும் மன அழுத்தத்தினால் மரணத்தை சந்திக்கின்றனர். 

இந்தியாவில் 1995 முதல் 2,70,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற கணக்கு இருந்தாலும், இந்தக் கணக்கை 1985லிருந்து கூட்டிக் கழித்துப் பார்த்தால் 5,00,000த்திற்கும் அதிகமான விவசாயிகள் கடன் சுமையாலும், வறுமையாலும், மன அழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை என்பது இந்தியாவில் மட்டும் தான் அதிகம் நடந்துள்ளன. 

#விவசாயம்
#விவசாயிகள்_தற்கொலை
#Farmers_Suicide
#agriculture
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-12-2017

Friday, December 29, 2017

கார்வான் சரிகம (CARVAAN)

டெல்லியிலிருந்து பத்திரிக்கை நண்பர் அஜய் கிருஷ்ணன் தமிழில் இனிமையான பாடல்களை ஒலிக்கக் கூடிய ‘கார்வான் சரிகம’ வை புத்தாண்டு பரிசாக அனுப்பி வைத்திருந்தார். நல்ல பயனுள்ள கட்டமைப்போடு வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இதில் மெல்லிசையும், கர்நாடக இசையும் கேட்கலாம். நடிகர்கள் வாரியாகவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பி.சுசிலா மற்றும் டி.எம்.சௌந்தர்ராஜன் (TMS) போன்ற பாடகர்களின் வரிசையிலும் 5,000 பாடல்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



ஆனால் விலைதான் கிட்டத்தட்ட 6,000 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சற்று விலை குறைவாக இருந்தால் எல்லோரும் வாங்க வசதியாக இருந்திருக்கும். ப்ளு டூத், யுஎஸ்பி, எப்.எம், ரீசார்ஜபிள் பேட்டரி என சகல வசதிகளோடு இது இயங்குகின்றது.

#கார்வான்_ச_ரி_க_ம
#Carvaan_sa_re_ga_ma
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

29-12-2017

Thursday, December 28, 2017

காவிரிப் பிரச்சனை - சிவசமுத்திரம் நீர்மின் திட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது.

கர்நாடக மாநிலத்தின் சிவசமுத்திர நீர்மின் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியை கோரி கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே காவிரி நதிநீர் பிரச்சனைக்குத் தீர்வு எட்டாமல் இருக்கிறது. இப்போதும் பிரச்சனையில் உள்ள நிலையில் சிவசமுத்திர நீர்மின் திட்டத்தை அமைப்பது நல்லதல்ல. இதனால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நீரின் அளவும் காவிரியில் குறையும். ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது. இதே திட்டத்திற்கு 1988ஆம் ஆண்டு கர்நாடகம் கோரிக்கை வைத்தபோது மத்திய அரசு அதை நிராகரித்தது. அதுபோல, காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு எட்டாத நிலையில் சிவசமுத்திரம் நீர்மின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. #காவிரிப்_பிரச்சனை #சிவசமுத்திர_நீர்மின்_திட்டம் #cauvery_issue #KSRadhakrishnanpostings #KSRpostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 28-12-2017

Osorno Volcano, Chile.

Image may contain: sky, cloud, outdoor and nature

*நாசமாப் போன தமிழ்நாடு!*#தகுதியேதடை #அரசியல்

நாசமாப் போன தமிழ்நாடு!

முப்பது ஆண்டுகளுக்கு முன் கையில் துட்டில்லாமல் தெருவில் அலைந்து கொண்டிருந்தவர்கள் திடீரென அரசியலில் இருந்தவர்களோடு அன்டிப் பிழைத்து பணத்தைக் கொள்ளையடித்து பெரிய மனிதர்களாக தங்களை கூறிக்கொண்டு, தேர்தலில் காசு கொடுப்போம் என்று உறுதி கொடுத்து பின் அந்த பணத்தையும் கொடுக்காமல் வெறும் 27 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்று தங்களை நாயகர்ளாக அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்
அந்த கிரிமினலகள் .அதற்கும் துதிபாட சில கோஷ்டிகள். அரசியலில் தகுதியில்லாமல், அன்றைய செய்தித்தாள்களை கூடப் படிக்காமல், செய்திகளைக் கேட்டால் கூடத் தெரிவதில்லை. அவர்களை எல்லாம் அரசியல் தலைவர்கள் என்று போற்றுகிறோம். தரமான,நல்ல,நேர்மை தரமானவர்களை புறந் தள்ளுகிறேம்.

இதற்கு காரணம் யார்? மக்கள் தானே. தமிழகம் மாண்புமிகு மண். அந்த மண்ணை தாழ்ந்த தமிழகமாக்கியது காசு வாங்கி வாக்களித்த மக்கள் தானே. தாழ்ந்து இழந்த மக்களே உங்களுக்கு சுயமரியாதை என்பதே இல்லையா?

அம்மா... அம்மா.... எதற்கெடுத்தாலும் அம்மா... அவர் செய்த தவறுகளால் தமிழ்நாடே கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. 

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு அம்மா உடைத்து சென்றார். பல திட்டங்கள் இலவசமாக அளித்து 28% ஓட்டு போட்டவர்களுக்காக 72% பேரின் பணம் வீணாகக் கரைக்கப் பட்டது. 

கோபம், ரோஷம், ஆணவம், பழி தீர்த்தலே அரசாளும் முறையாக இருந்தது. 

இதே காலகட்டங்களில் ஏழை மாநிலமாக இருந்த கேரளா முன்னேறி இன்று இந்தியாவின் பணக்கார மாநிலமாக முன்னேறி விட்டது. த.நாட்டில் ஊழல் அதிகமாகி ஐடி தொழில் கர்நாடகாவில் கொடிகட்டி பறக்கிறது.

தமிழனுக்கு எச்சில் இலைகளே பசியாற போடப் படுகிறது.

கூலித்தொழிலாளிகள் மட்டுமே இருந்த ஆந்திராவை பில் கேட்ஸ் வரவழைத்து ஹைதராபாத்தை ஒரு சிலிகான் வேலி ஆக்கிக் காட்டினார் சந்திரபாபு நாயுடு.

நாயுடு எனக்கு எது கிடைத்தாலும் மக்கள் பணி செய்வேன் என்று அமராவதியை தலைநகராக்கி, நான்கு ஆறுகளை ஒரே வருடத்தில் யாரிடமும் கை ஏந்தாமல் தன் கஜானா பணத்தில் இணைத்து வறண்ட மாவட்டங்களை வளமாக்கி உள்ளார். 

மேலே சொன்ன *எந்த மாநிலமும் சைக்கிளோ,* *மடிக் கணினியோ, இருசக்கர வாகனமோ, கேஸ் அடுப்போ, மின்விசிறி, மிக்ஸி கொடுத்து மக்களிடம் ஆட்சி உரிமையைக் கோரவில்லை.* 

ஏன்? *தமிழ்நாடு மட்டும் இத்தனை இலவசங்கள் தருகிறது? 63% வரிப்பணம் இலவச திட்டங்களுக்காம்! பணத்தை விவசாயிக்கு ஏன் செலவிடவில்லை? உள்ளூர் நதிகளை ஏன் இணைக்கவில்லை?* 

நாளைக்கு குழாயில் தண்ணீர் வராது என்றால் இருக்கும் காலி பாத்திரங்களில் நீர் சேமிக்கும் தமிழனின் அதே புத்தி ஆளும் அரசுக்குத் தோன்றாதது ஏன்?

*ஏரி குளங்கள் தூர் வாருவதை விட, பொங்கலுக்கு ரெண்டு துண்டு கரும்பை ரேஷன் கடையில் கொடுப்பதை ஏன் பெருமை பீற்றிக் கொண்டார்கள்?*

ராஜபக்‌ஷே இலங்கையில் தமிழ் இனத்தை அழித்தார்.

தமிழ்நாட்டை, அழித்தது யார்? முதலமைச்சர் பதவி மோகத்துக்கு மாநில நலனை பலி கொடுத்தது யார்.  ஓட்டு போடுவதை ஒரு சமுதாய கடமையாக பார்க்காமல், விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட தமிழக வாக்காளன் தானே.  

*நாளை சரித்திரம் சொல்லும்போது குடித்து சீரழிந்த தமிழன் பிணத்தின் மேல் இலவச வேட்டி போர்த்தி, மின்சாரம் இல்லாமல் இயங்க மறுக்கும் இலவச மின் விசிறி அருகில் பசியோடு குழந்தைகள் இழவை கவனிக்காமல் தட்டைத் தூக்கிக் கொண்டு பள்ளியில் இலவச மதிய உணவு உண்டு விட்டு கொள்ளி போட வரும் அவல நாள் தூரத்தில் இல்லை!*

*படித்தேன். வேதனைப்பட்டேன். ஆதலினால், மேலும் சில கருத்துக்களோடு பகிர்கின்றேன்!

#KSRadhakrishnanPostings
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
28-12-2017

#நெய்வேலிநிலக்கரிசுரங்கம் #JambulingaMudaliar #NyeveliLignite

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைய காரணமான ஜம்புலிங்க முதலியார் .

Jambulinga Mudaliar, a farmer landlord and important political figure in South Arcot district was the person who first discovered the presence of coal on his land. Bits of coal came gushing out of a deep well that he had sunk on his farm in the 1930s. He got examined the particles that were coming out with the water from the well. These were particles of lignite. By 1938, analyses in labs of Madras confirmed the presence of lignite. What followed was the setting up of the Neyveli Lignite Corporation in 1959 as a public limited company.

28-12-2017

கிழக்குக் கடற்கரை இரயில் பாதை கைவிடப்பட்டது.


சென்னை – பெருங்குடி – மாமல்லபுரம் – புதுச்சேரி – கடலூர் 178 கிலோ மீட்டருக்கான இரயில் பாதை 2008-2009 இரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆய்வும் முடிந்தது. மறு ஆய்வுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. கடலூரிலிருந்து திருவாரூர் தற்போது பயண்பாட்டில் உள்ள அகல இரயில் பாதையை இதனுடன் இணைத்துக் கொள்ளவும், பின் திருவாரூர் – காரைக்குடி – இராமநாதபுரம் – கீழக்கரை -  தூத்துக்குடி – ஆறுமுகநேரி – திருச்செந்தூர் – கூடங்குளம் வழியாக கன்னியாகுமரி வரை 248 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய இரயில் பாதை அமைக்க 2009 இல் ஆய்வும் செய்யப்பட்டது. இதற்கு மொத்த மதிப்பீடு செலவு ரூ. 1080 கோடி என்று மத்திய அரசுக்கு அறிக்கையும் வழங்கப்பட்டது. 
பத்தாண்டுகள் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது கைவிடப்பட்டுள்ளது ஏன் என்று தெரியவில்லை. தமிழகத் திட்டங்கள் ஏனோ டெல்லியில் கிடப்பில் போடுவது வாடிக்கையாகிவிட்டது.
ஏற்கனவே கிழக்கு கடற்கரைச் சாலைப் பணிகளும் ஆமை வேகத்தில் நடக்கின்றது.


#கிழக்கு_கடற்கரை_இரயில்_பாதை
#தமிழ்நாடு_உரிமைகள்
#TN_Rights
#KSRadhakrishnanPostings
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*

27-12-2017

Wednesday, December 27, 2017

*விடுதலைப் புலிகள்1983ல் வாஜ்பாயையும், அத்வானியையும் சந்திக்க உதவிய ஜனா. கிருஷ்ணமூர்த்தியும், கே. நாராயணராவும்.*


-------------------------------------
தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் முதல் தலைவராக 1980-85 தலைவராக இருந்தவர் கே. நாராயணராவ். விடுதலைப் புலிகள் தங்களின் நிலைப்பாட்டை பாரதிய ஜனதா கட்சிக்கு விளக்க வேண்டியிருந்ததால் வாஜ்பாயையும், அத்வானியையும் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது ஜனா.கிருஷ்ணமூர்த்தியும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவராக பொறுப்பிலிருந்த இருந்த கே. நாராயணராவும் உதவினார்கள். 
திரு. கே. நாராயணராவ் இன்று (27/12/2017) காலமானார். அவருக்கு ஆழ்ந்த இரங்கல். 

ஜனா. கிருஷ்ணமூர்த்தியும் அந்த காலக்கட்டத்தில் என்னோடு மிகவும் அன்பாக இருப்பார். கச்சத்தீவு, இந்திரா காந்தி இலங்கைக்கு கொடுத்த போது அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர். நான் கச்சத்தீவு நூல் எழுதுவதற்கு எனக்கு பல தரவுகளையும் வழங்கியவர். ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் சகாவான கே.நாராயணராவ் தாம்பரம் பகுதியில் வசித்து வந்தார். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

#ஜனா_கிருஷ்ணமூர்த்தி
#கே_நாராயணராவ்
#தமிழ்நாடு_பாரதிய_ஜனதா
#கச்சத்தீவு
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-12-2017

*பணம், காசு, வியாபார அரசியல்*


--------------------
எனக்கு ஓரளவு அரசியல் புரிந்த நிலையில் 1959 காலகட்டத்தில் தேர்தலில் மக்கள் சாதி, காசு பணம் பார்க்காமல் வாக்களித்தனர். இப்போது அப்படியான ஒரு நிலை இல்லை. ஒன்று சாதிபலம் அல்லது பணபலம் அல்லது புஜபலம் ஆகியவை இன்றைய அரசியலுக்கு அவசியமாகிவிட்டது.

ரூ. 20 நோட்டுக்களை டோக்கனாக பயன்படுத்தி ஒருவர் வெற்றி பெற்று விட்டதை வீரப்பிராதபம் என பேசுகின்றனர். எந்த வகை அரசியல் இது?  ஓட்டுக்கு பணம் வாங்குவது வேறொரு தொழில் செய்வதற்கும் என்ன வேறுபாடு காணமுடியும்?

குடவோலை முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய பண்டைய தமிழர்களின் அரசியல் நாகரீகத்தை கொச்சைப்படுத்தியதை வேடிக்கை பார்ப்பதே தவறு. ஆனால் சிலர் அதனை நியாபப்படுத்தி பேசுவது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது.
இன்றைக்கு கொள்கையும், தியாகமும், நேர்மையும் அவசியமில்லை. பணமும், அடிதடி இரண்டும் இருந்தால் அரசியலுக்கு போதுமானது.

வள்ளுவனும் வாசுகியும் போல், நகமும் சதையும் போல் பணமும் அரசியலும்  இணைந்தே இருக்கும். இது தான் அரசியல் சூத்திரம். யார் நினைத்தாலும் இதனை இனி மாற்ற முடியாது.
இனி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வங்கிக் கடனை பெற்று வெற்றி பெற்ற பின் அதை திரும்பி செலுத்தும் சூழ்நிலை கூட வந்துவிடும்.

குடியாத்தம், 1954 இடைத்தேர்தலில் போட்டியிட்ட காமராசர் வெற்றி பெறுவதற்காக பணம் கொடுத்தார் என்பது கம்யூனிஸ்ட்களின் குற்றச்சாட்டு. காஞ்சிபுரத்தில், 1962 தேர்தலில் அறிஞர் அண்ணா போட்டியிட்ட போது அவரை எதிர்த்து போட்டியிட்ட நடேச முதலியார் வாக்குக்கு பணம் அளித்தார் என்பது குற்றச்சாட்டு. அதே காலகட்டத்தில் தஞ்சையில் போட்டியிட்ட தலைவர் கலைஞரை எதிர்த்து போட்டியிட்ட பரிசுத்தநாடார் வாக்குக்கு பணம் அளித்தார் என்பது குற்றச்சாட்டு.
எனக்கு தெரிந்த மங்கலான நினைவுகளில் ஒன்று. 1950-60 காலக்கட்டத்தில் தென்மாவட்டங்களில் இசைஞானி இளையராஜா அவர்களின் அண்ணன் பாவலர் வரதராஜன் பொதுவுடமை இயக்கத்தின் தொண்டராக கலைநிகழ்ச்சிகள் நடத்துவார். அந்த நிகழ்ச்சிகளில் காசுக்கு விலை போகாதீர்கள் என்றுப் பாடுவார்.

நான் 1970 முதல் 1998 வரை தேர்தல் களத்தில் முகவராகவும் வேட்பாளராகவும் களத்தில் இருந்துள்ளேன். அப்போதெல்லாம் வாக்குக்கு பணம் அளித்தது இல்லை. பூத் செலவுக்கு மட்டும் பணம் அளிப்பது வழக்கம். அதிலும் கூட சில பகுதிகளில் நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என பூத் கமிட்டி உறுப்பினர்கள் பணத்தை வாங்க மறுத்ததும் உண்டு. அவர்கள் கையில் திணிக்க முயன்று தோல்வியடைந்த அனுபவங்கள் அதிகம்.
திமுக சார்பில் 1989 பொதுத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் போது இவ்வளவு செலவுகள் கிடையாது. அப்படியிருந்தும் அப்போது 35,000 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பினை இழந்தேன்.

திரும்பவும், 1996 இல் கோவில்பட்டியில் அதே அளவு வாக்குகளை சேகரிப்பதற்கு நான் செய்த செலவோ சில லட்சங்கள் தான். அதே சமயத்தில், சென்னை பூங்கா நகர் தொகுதியில் 400 முதல் 500 வரை வாக்குகளையே பெற்ற வேட்பாளர் தஞ்சை கூத்தரசனுக்கும் மதிமுக தலைமை ஒரு இலட்சம் கொடுத்தது. ம.தி.மு.க.விலேயே அந்த தேர்தலில் அதிகபட்ச வாக்குகள் பெற்ற எனக்கும் ஒரு இலட்சம் தான் கட்சி கொடுத்தது. அந்த காலகட்டத்தில் தமிழக அளவில் மதிமுக 180 தொகுதிகளில் போட்டியிட்டது. மதிமுக சார்பில் 1996 தேர்தலில்  போட்டியிட்டவர்களில் வைகோ விளாத்திகுளம் தொகுதியிலும், நான் கோவில்பட்டி தொகுதியிலும் ,தங்கவேலு சங்கரன்கோவில் தொகுதியிலும் போட்டியிட்டோம். நாங்கள் மூவர் மட்டுமே டெபாசிட்டை திரும்ப பெற்றோம். அதில் நான் மட்டுமே அதிகபட்சமாக 35,000 வாக்குகளை பெற்றேன். மற்ற மதிமுகவினர் அனைவரும் என்னைவிட குறைவான வாக்குகளையே பெற்றனர். அப்போதும் நான் வாக்குக்கு எவ்வித பணம் அளிக்கவில்லை.

பழ. நெடுமாறன் மதுரை மத்திய தொகுதி தேர்தல்களில் போட்டியிட்ட போதும், வைகோ சிவகாசி நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட போதும், கோவில்பட்டியில் கம்யூனிஸ்ட் தலைவர் சோ. அழகிரிசாமி போட்டியிட்ட போதும் பிரதான தேர்தல் பணிகளை ஆற்றியவன். நல்லகண்ணுவுடன் அழகிரிசாமிக்காக 1970களில் இணைந்து தேர்தல் பணி செய்ததெல்லாம் பழைய நினைவுகள். சென்னை மயிலை 1994இல் நடந்த இடைத்தேர்தல், ஜெயலலிதா 2002இல் போட்டியிட்ட ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல், சைதை இடைத்தேர்தல், 2012இல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல்கள் போன்றவற்றில் பல முக்கிய களப்பணிகளை ஆற்றியுள்ளேன்.   இதையெல்லாம் விளக்கமாக சொன்னால்தான் பலருக்கு புரியுமென்பதற்காக பதிவிடுகிறேன். 

இன்றைய காலக்கட்டத்தில் தேர்தலில் போட்டியிட மக்கள் பணியோ, மக்களுடன் நிரந்தர தொடர்போ, தியாகமோ, மக்களுக்கான போராட்டம் செய்தோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள எந்த தொழிலிலும் ஈடுபட்டு பொருளீட்டிக் கொண்டு தேர்தலுக்காக காத்திருக்கலாம். தேர்தல் அறிவித்த உடன் சேர்த்த பணத்தைக் கொண்டு வேட்பாளராக போட்டியிடலாம். சேர்த்த பணத்தைக் கொட்டி வெற்றி பெறலாம். இது தான் ஆர்.கே. நகர் தேர்தல் நிலை.

விஜய் மல்லையாவும், எம்.ஏ.எம். ராமசாமியும் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யபட்டதின் பின்னணி என்ன, மக்கள் சேவையா? அவர்கள் மருத்துவக் கல்லூரி இடத்தை படிக்க காசு கொடுத்து வாங்குவதை  போல, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விலைக்கு வாங்கினார்களே. அதற்கும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா துணைபோனாரே.  இது தான் ஆரோக்கியமான பொதுவாழ்வா? அப்படியென்றால், மக்களின் நன்மைக் கருதி, மாநிலத்தில் நன்மைக்காக பொதுநல வழக்கு தொடர்ந்தும், தினந்தோறும் மக்கள் பிரச்சனைகளுக்கு செவிமடுத்து தங்களால் இயன்ற உதவியை உடலுழைப்பை அளித்து வரும் நாங்கள் எல்லாம் தேர்தல் அரசியலில் வெறும் பார்வையாளர்கள் தானோ? பணபலம் கொண்டவர்கள், சுயமரியாதை இழந்து கும்பிடு போடும் ஆசாமிகளை எங்களால் முந்த முடியவில்லை. பொதுநலம் சுமைதாங்கிகளும், பணநலத்தால் பாரமற்று  இருப்பவர்கள் ஒரே பந்தயத்தில் ஓடுவது தான் இன்றைய அரசியல்.

நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக - அதிமுகவுடன் ஏற்பட்ட கூட்டணியின் பலனாக 1998ஆம் ஆண்டு வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி எனக்கு ஒதுக்கப்பட்டு அதில் போட்டியிட என் பெயரை அறிவிக்க காத்திருந்த நேரத்தில் இன்னொருவருக்கு அந்த இடம் வழங்கப்பட்டது. எனக்கென்று அந்த தொகுதி வாங்கப்பட்டு அறிவிக்கும்போது மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று இன்றுவரை தெரியவில்லை. நான் என்ன உழைக்கவில்லையா?
பின்னர், 2002 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் எனது பெயரை மறைந்த முரசொலி மாறன் அவர்கள் என்னிடம் உங்கள் கோவில்பட்டி தொகுதியில் இருந்து உங்கள் வாக்காளர் விவர சான்றிதழ் வாங்கி வந்துவிடுங்கள் என்று என்னை பணித்தபின் திருமண வரவேற்பில் இருந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தை அழைத்து அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முரசொலி மாறன் அவர்களும் இது குறித்து வருத்தப்பட்டதும் உண்டு. நான் ஏதோ இதை இட்டுக்கட்டி சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இதற்கு சாட்சியாக அன்றைக்கு சன் டிவியில் பணியாற்றிய கருப்பசாமி (இன்றைக்கு தந்தித் டிவியில் பணியாற்றுகிறார்) இருக்கின்றார். இவர் இந்த சம்பவத்தை குறித்து நன்கு அறிவார்.

இப்படி, தேர்தல் களம் என்பது உழைப்பு, தியாகம், கொள்கை என்பதில்லை. மாறாக ஒரு சதுரங்க விளையாட்டாக பதவிகள் பெறுவதாக மாறிவிட்டன. ஒரு நல்லகண்ணுவோ, மறைந்த இரா. செழியனோ, பேராசிரியர். அன்பழகனாரோ, நெடுமாறன் போன்றவர்கள் மூத்தவர்கள் என்றாலும் தேர்தல் களத்தில் தோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்களே. நடிகை வைஜெயந்தி மாலா போன்றோர் வெற்றி பெறுகிறார்கள். 

ஊழலில் திளைத்தவர்கள், கடுங்குற்றவாளிகள் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள். கண்ணதாசனுடன் நெருக்கமாக இருந்தவன் என்ற நிலையில் அவர் அடிக்கடி சொல்வார். நான் நாடறிந்தவன் தான், மக்களுக்கு எனது அறிமுகம் தேவையில்லை. ஆனால் தேர்தலில் நான் வெற்றிப் பெறுவேனா என்பதை என்னால் சொல்லமுடியாது என்பார்.
 
இப்படியான தேர்தல் பரிணாமப் போக்கில் ரூபாய் நோட்டில் டோக்கன் கொடுத்து இன்றைக்கு பத்தாயிரம் வரை ஒரு ஓட்டுக்கு கொடுக்க தயாராகிவிட்டார்கள். எதிர்வரும் தேர்தலில் இந்த மதிப்பு அதிகமாகத் தான் இருக்கும். இவ்வளவு பணம் கொடுத்து ஓட்டு வாங்கி இவர்கள் நாட்டை ஆளுவார்களா? அல்லது தேர்தல் அரசியலை வியாபாரமயமாக்கி வணிக அரசியலை ஒரு தொழிலாக்கிவிடுவார்களா? 
பிறகெப்படி, மக்கள் நல அரசு, மக்கள் அரசு மக்களுக்காக உழைக்கக் கூடிய அரசாக இருக்கும்.

_*"மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி"*_
_*"Government of the people, by the people, for the people, shall not perish from the earth"*_

என்ற லிங்கனின் வார்த்தைகளுக்கு அர்த்தமின்றி போய்விடும்.

ஆங்கிலத்தில் இன்னொரு பழமொழியும் உண்டு.

_*"Democracy - the freedom to elect our own dictators."*_

இது தான் இன்றைக்கு யதார்த்தமாகத் தெரிகிறது. அரசியல் என்பது தவம், அறம் என்பதை மறந்து தொழிலாக்கிவிட்டார்கள் அரசியல் வியாபாரிகள். ஆனாலும் ஆரோக்கிய அரசியலுக்காக இன்னும் போராடுகின்றவர்களும் இருக்கின்றார்கள். இருப்பினும், பணம், துட்டு, காசு, ஜாதி, புஜபலம் தான் இறுதியாக முடிவு செய்கிறது. இதையும் மீறி ஆரோக்கிய அரசியல் கோஷம் போர்குணத்தோடு என்றும் முழக்கிமிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நல்லவர்கள், வல்லவர்கள், ஆற்றலாளர்கள் அரசியல் சதுரங்கத்தில் அமைதியாக ஆடினாலும் என்றைக்கும் அவர்கள்  வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறுவர். ஆனால் அரசியல் வியாபாரிகள் சிலகாலம் பதவியில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு இறுதியாக மண்ணுக்கு செல்லும் போது வரலாற்றில் மறக்கப்படுவார்கள்.

#தகுதியேதடை

#தேர்தல்_அரசியல்
#வியாபார_அரசியல்
#Trade_politics
#Electoral_Politics
#KSRadhakrishnanPostings
#KSRPostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
27-12-2017

Tuesday, December 26, 2017

ரூ 20ல் நம்பர் பதிவு செய்ய டோக்கனுக்கு இன்னும் பணம் தரல......

ரூ 20ல் நம்பர் பதிவு செய்ய டோக்கனுக்கு இன்னும் பணம் தரல......
Image may contain: one or more people
#Rkநகர்புலம்பல்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

24-12-2017

தட்டச்சு


Image may contain: food

இது மாதிரி பழைய தட்டச்சு இயந்திரத்தை பார்க்கும்பொழுது பல நினைவுகள் மனதிற்கு வருகிறது. 1978 முதல் 1997 வரை இதை பயன்படுத்தி பல பொதுநல வழக்குகளைப் இதன் மூலம் தட்டச்சு செய்து தொடுத்து உச்சநீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றுள்ளேன். பல நூல்களை தட்டச்சு செய்து வெளியிட்டுள்ளேன்.
இன்றைக்கு இந்த தட்டச்சு இயந்திரங்களை ஒதுக்கி விட்டு கணினியில் தட்டச்சு செய்கிறோம். அன்றைக்கு கார்பன் பேப்பர், ரிப்பன் போன்றவை முக்கியமானவை. இன்றைக்கு தட்டச்சு செய்வது எளிது. தவறை திருத்துவது சுலபம். அன்றைக்கு பணிகள் சற்று சிரமமாக இருக்கும். இப்போது போல் நினைத்த மாத்திரத்தில் திருத்துவது கடினம். எழுத்துப்பிழை ஏற்பட்டால் அதை மீண்டும் புதிதாக தான் தட்டச்சு செய்ய வேண்டும்.
பிற்காலத்தில் மின்னணு தட்டச்சு இயந்திரம் (Electronic Typewriter), கையடக்க தட்டச்சு இயந்திரம் (Portable Typewriter) போன்றவை பயன்பாட்டில் இருந்தது.
இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் எனக்கு தட்டச்சு செய்து கொடுத்த என் உதவியாளர்கள் என் வழிகாட்டுதலால் அரசியலுக்கு வந்து நாடாளுமன்றம் வரை சென்றுள்ளனர்.
#தட்டச்சு இயந்திரம்
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
26-12-2017

ஆண்மையற்ற (IMPOTENT)

‘ஆண்மையற்ற’ அரசியல் என்ற வார்த்தை பிரயோகப்படுத்தப்படுகிறது .கடந்த சில தினங்களாக . ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இந்த வார்த்தை பயன்படுத்திவிமர்சிக்கப்படுகிறது.
Image may contain: one or more people and people sitting
இந்த வார்த்தை இந்திய அரசியலுக்கு ஒன்றும் புதிதல்ல. 1977களில் மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்தது. அன்றைக்கு மத்திய அமைச்சராக இருந்த சௌத்ரி சரண்சிங், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி அத்துமீறலுக்கு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஆண்மையற்று இருக்கின்றார் என்று கூறினார். இந்த பேச்சு அப்போதைய அரசியலில் பெரும் சர்ச்சைகளையும்,கடும்விமர்சனங்களையும், விவாதங்களையும் கிளப்பியது. 
சரண்சிங் விடுதலைப் போராளி, விவசாயிகளின் தலைவர் ஆவார். சிலகாலம் பிரதமாரகவும் இருந்தார். 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-12-2017

"மாயமான்"

"மாயமான்"
கம்ப ராமாயணம் பாத்திரம்.
அந்த மாயமான்கள் கேள்வி குறியானவை.
அரசியலில் வெற்றி தோல்விகள்அவர் அவரின் நேர்மை, களப்பணி,
முனைப்புகளிலும் விட இன்றைய நிலையில் மாயமான்களின் பணத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-12-2017

Monday, December 25, 2017

இயேசு பிரான்

"பணத்தை தியாகம் செய்; கொள்கையை
தியாகம் செய்யாதே !"
- இயேசுபிரான்No automatic alt text available.

இயேசு

இனம், சாதி ஊரி கிடக்கும் இந்நாளில்... அந்நாளிலேயே தன் யூத இனத்தை எதிர்த்து போராடினார் இயேசு

மாசுபடும் நதிகள்

Image may contain: cloud, outdoor, nature and water
தமிழகத்தில் காவிரி, பவானி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஷ்டா ஆகிய நதிகள் தொழிற்சாலைகளால் மாசடைந்துள்ளதாக தேசிய மாசுக்காட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை.





#மாசுபடும்_நதிகள்
#KSRadhakrishnanPostings
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
25-12-2017

நாம் சரியாக இருந்தால் தான் நாடு சரியாக இருக்கும்.

முடி திருத்தும் நிலையத்திற்கு சென்று முடி திருத்தும் நாற்காலியில் முடியை வெட்ட நாற்காலியில் நேராக அமர்ந்தால் தான் முடிதிருத்துபவர் தன் பணியை ஒழுங்காக செய்ய முடியும். தலையை தலையை ஆட்டினால் அவர் என்ன செய்வார்.
அதுபோல தான்,தகுதியான, சரியான நபர்களை தேர்வு செய்தால் தான் நாட்டுக்கு நல்லது. அதை விடுத்து பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டுவிட்டு தண்ணீர் வரவில்லை, ரேசனில் பொருள் கிடைக்கவில்லை, கட்டின பாலம் இடிந்தது என அது இல்லை, இது இல்லை என்று பிரச்சனைகளுக்கு கூப்பாடு போடுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை. 
Image may contain: one or more people, outdoor, nature and water
நாம் சரியாக இருந்தால் தான் நாடு சரியாக இருக்கும்.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
24-12-2017

பணபலம்

பணபலம் தான் அரசியலை தீர்மானிக்கும் என்றால்; இத்தாலி போன்று தமிழகத்திலும் மாஃபியாக்கள் அனைத்து தேர்தல்களிலும்
வெற்றி பெறுவர்.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

24-12-2017

போராளி

போராளிகளுக்கு பதவி என்ற சுமை இல்லையே என்ற கவலை இருக்காது.

#தகுதியே_தடை
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

24-12-2017

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...