Friday, December 15, 2017

மாசடையும் காற்று மண்டலம்.


சுத்தமான காற்று எதிர்காலத்தில் அவசியமான சந்தைப் பொருளாக இன்றைய குடிநீர் போன்று மாறும் என்பது மறுக்கமுடியாத சூழல் ஆகும். இன்றைக்குள்ள காற்று மாசுபட்டு வருகின்றது. விஷம் கலந்த அந்த காற்றின் காரணம் பலவுண்டு. ஒரு வீட்டிற்கு 5 கார்கள் இருப்பது பெருமை என்று பீற்றிக் கொள்கிறோமே, அதனால் வெளியேறும் புகையில் உள்ள அசுத்த வாயுகள் ஓசோன் மண்டலத்தை குறிவைக்கிறது. எது எது நமக்கு வசதி என்று கருதுகிறோமோ அதனால் சுற்றுச்சூழல் மாசடைந்து நாமே நமக்கான கேடுகளை தேடிக்கொள்கின்றோம்.


தண்ணீர் கேன்களின் அதே கதைதான், காற்று விஷயத்திலும் நடக்கவிருக்கிறது. இனிவரும் காலங்களில் காற்று மாச தடுக்க வேண்டுமென்றால், அரசாங்கம் மிகத் துரிதமாகச் செயல்பட வேண்டும்.
உலகளவில் காற்று மாசுக்கு முக்கியக் காரணிகளாக இருப்பவை தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள், பயிர் எரிப்பு ஆகியவைதாம். டெல்லியில் இவையனைத்துமே பிரச்சனைகளாக இருக்கின்றன.

டெல்லி பாதிக்கப்பட்ட அதே சமயம் பாகிஸ்தானின் லாகூர் நகரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. டெல்லியின் அதே பிரச்சனை தான் லாகூருக்கும். எல்லாப் பிரச்சினைகளையும் கடந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்துதான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனச் சொல்கிறார்கள் சூழலியலாளர்கள். டெல்லி, லாகூர், பீய்ஜிங், லண்டன், வாஷிங்டன் என உலகின் பல நாடுகளின் முக்கிய நகரங்களும், காற்று மாசினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உலகில் அதிக காற்று மாசடைந்த முதல் 20 நகரங்களின் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 13 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

#சுற்றுச்சூழல்
#காற்றுமண்டலம் மாசடைதல்
#ஓசோன்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
14-12-2017



No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...