Friday, December 8, 2017

தயாள் சிங் கல்லூரி பெயர் மாற்றம்

டெல்லியில் தயாள் சிங் கல்லூரியின் பெயரை ‘வந்தே மாதரம் மகா வித்யாலயா’ என்று பெயர் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கல்லூரி தயாள் சிங் பெயரில் அவர் நினைவாக அவர் அளித்த கொடையில் நிறுவப்பட்டு கட்டப்பட்டது. இந்த தயாள் சிங் மஜீத்தியா என்பவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிறுவனர். வட இந்தியாவில் அனைவரும் வேண்டி விரும்பி படிக்கும் ஆங்கில டிரிப்யூன் ஏட்டின் நிறுவனரும் ஆவார். தொலைநோக்கு பார்வையும் முற்போக்கு சிந்தனை கொண்டவர். விடுதலைப் போராட்டத்திலும் பங்காற்றியவர்.


வாரனாசியில் மதன் மோகன் மாளவியா பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியதை போன்று தானும் ஒரு கல்லூரியை நிறுவ விரும்பி அவர் பெயரில் தயாள் சிங் கல்லூரியை டெல்லியில் அமைத்தார். ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர், டெல்லி போன்ற பகுதிகளில் பொதுப் பணிகளை ஆற்றிய ஆளுமையாவார் இந்த தயாள் சிங். அவருடைய பெயரை மாற்ற எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.

#தயாள்சிங்_கல்லூரி
#Dyal_Singh_Evening_College_delhi
#renaming_Dyal_Singh_College
#KSRadhakrishnanPostings
#KSRPostings
@Radhakrishnan KS
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
08-12-2017

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...