Sunday, December 10, 2017

மீன்பிடித் தொழிலை பற்றிய குறிப்புகள்.




-------------------------------------
கன்னியாகுமரி, தருவைக்குளம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் தான் ஆழ்கடல் மீன்பிடிப்பில் பல அபாயங்கள் நேர வாய்ப்புள்ளது. மீனவர்கள் 15 நாட்கள் மீன்பிடிக்க செல்லும் போது 12லிருந்து 100 கடல் நாட்டிகல் மைல் தொலைவு  இந்திய எல்லைக்குள் செல்வதுண்டு. 1500 நாட்டிகல் கடல் மைல்களுக்கு இந்திய மீனவர்கள் இப்போது இந்திய எல்லையில் அதிகரித்துவிட்டனர். 

கன்னியாகுமரி மீனவர்கள் குஜராத் கடல் எல்லைவரை செல்வதுண்டு. சில நேரங்களில் ஓமன், மொரீஸியஸ், டீகோகார்சியா, செசல்ஸ் தீவுகள் வரை குமரி மீனவர்கள் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இது குறித்தான மீன்பிடிப் படகுகள் குளச்சலில் 1200 ம் கேரளாவில் 300 ம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்தூரில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான 1500 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 கிலோமீட்டரிலேயே ஷார்க் மீன்கள் அகப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்பில் 15 டன் மீன்களை பிடித்து பாதுகாக்கலாம். 

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஜிபிஎஸ் கருவி, வயர்லெஸ், சோனார் போன்றவை தங்களுக்கு வழிகாட்டவும் பயன்படுத்துகின்றனர். ரூபாய். 4,00,000 மதிப்புக்கு 2 டன் மீன்களை இழுவைப் படகுகள் சுமக்கும். அதிகபட்சமாக 10 டன் மீன்களை பிடிக்க முடியும். 

இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் ஆகும். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் மீனவர்கள் தங்களுடைய தொழிலை நடத்துகின்றனர். சமீபத்தில் ஏற்பட்ட ஓகிப் புயலால் குமரி மாவட்டத்தினை சேர்ந்த 1000 பேருக்கு மேல் கடலில் தவித்து பலர் கடலிலே மரணமடைந்து ஜலசமாதியானதும் வேதனையான செய்தி.
#மீனவர்கள்
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
09-12-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...