Friday, June 30, 2017

Don’t depend...

Don’t depend too much on anyone in this world because even your own shadow leaves you when you are in darkness.

John F. Kennedy

John F. Kennedy’s coffin lies in state in the Capitol Building Rotunda, US (1963)

அழகர் கோவில் மலை....

Dadabhainooroji

Remembering the Grand Old Man of the Indian Freedom Struggle. It's been a hundred years since his demise but his words should still inspire all true people....

#Dadabhainooroji
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-04-2017

அதி நியாயம்...

அதி நியாயம்
--------------------------
அதி நியாயம் - இதுதான் அநியாயம் என்று மருவியது. 
ஓதுக்கப்பட்டு,தவிர்க்கப்பட வேண்டியவர்களுக்கு அங்கீகாரமும், புகழும் வழங்குவது; தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு. பரிசளித்து,அவர்களை  கொண்டாடுவது. இதுதான் அதி நியாயம்.
-மகாபாரத உரைகளில்...

#அதி_நியாயம்
#அநியாயம்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-04-2017

Thursday, June 29, 2017

This is Not A Slap on Police System But a slap on us too...

A Heart Breakning Incident from Meerut U.P. where Manvi, a 5 years old offered his savings to IG Zone MEERUT & pleaded, after she came to knew that Police Demanding Money From his Grand father for Investigating Murder case of Her Mother :(

This is Not A Slap on Police System But a slap on us too...

தாய் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க தனது உண்டியல் பணத்தை போலீசாரிடம் லஞ்சமாக கொடுத்து திடுக்கிட வைத்துள்ளார் 5 வயது சிறுமி.

உத்தரபிரதேச மாநிலத்தின், மீரட்டில் வசிக்கும் 5 வயதான சிறுமமி, மான்வி, செவ்வாயன்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராம் குமார் அலுவலகத்திற்கு வந்திருந்தார். மான்வியின் தாயார், சீமா கௌஷிக், அவரது கணவர் சஞ்சீவ் குமார் மற்றும் கணவன் குடும்பத்தாரால் வரதட்சணை தொந்தரவு செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாகவும், தனது தாயின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமி கூறினார்.

மேலும் தனது கையிலிருந்த உண்டியலை போலீசாரிடம் கொடுத்து, இதை லஞ்சமாக வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுங்கள் என கூறினார். போலீசார் இதுவரை இந்த வழக்கில் சுணக்கம் காட்டி வந்த நிலையில், சிறுமி இவ்வாறு உண்டியல் பணத்தை கொடுத்து அசிங்கப்படுத்தியுள்ளார்.

சஞ்சீவ் குமார், அவரது தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சீமாவின் தந்தை சாந்தி ஸ்வரூப் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால், சஞ்சீவ் குமார் மட்டும் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர்களை கைது செய்ய, போலீசார் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சிறுமி இவ்வாறு உண்டியலை கொடுத்துள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்த, போலீஸ் ஐ.ஜி. கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறி, சிறுமியை அனுப்பி வைத்தார். மேலும், லஞ்சம் கேட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தீப்பெட்டித் தொழிலையே தீயை வைத்து கொளுத்திவிட்டார்கள்

ஒரு காலத்தில் சிறுதொழில்கள் வளர்ந்து கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை வழங்கி அன்றாட வாழ்க்கைக்கு உதவியாக இருந்த்து. 1991 இல் இந்தியாவில் நடைமுறைக்கு வந்த உலகமயமாக்கல் கொள்கைகளினால் இன்று அதற்கான அடையாமே இன்றி அழியும் நிலைக்குச் தள்ளப்பட்டு விட்டன என்றே கூறலாம். 1999 இல் மத்திய அரசு இயந்திரத்தால் செய்யக்கூடிய தீப்பெட்டி தொழிலுக்கு அனுமதி கொடுத்ததால் கிராமப்புற, நகரப்புற ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை நாசப்படுத்தியது உலகமயமாக்கல் கொள்கை. 
அன்றே இந்த தீப்பெட்டித் தொழிலை நம்பி சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டிருந்தனர். இத்தொழிலில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு இருந்தது. தமிழகத்தில் பட்டாசுக்கு அடுத்தபடியாக தீப்பெட்டியிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. செமி மெக்கானிச இயந்திரத்தின் வழியாக இயங்கும் 400 தொழிற்கூடங்களில் சுமார் 80,000 க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை வழங்குகின்றது. 

முழுக்க இயந்திரமயத்தால் இயங்கும் 30 தொழிற்சாலைகளில் 4500 பேருக்கு மேல் வேலை செய்கின்றனர். இதன் சார்புத் தொழிலாக உள்ள அனைத்திலும் சேர்த்து சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன் பெறுகின்றனர். தற்போது கையினால் செய்யப்படும் தீப்பெட்டி குடிசைத் தொழிலாக இருக்கிறது. அதில் இயந்திரத்தை கொண்டு உற்பத்தியாகும் தீப்பெட்டி தொழில் வளர்ச்சி அடைந்ததால் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் சில தொழிற்சாலைகள் இயங்குகிறது. 
இதற்கு முன்பு வரை இதற்கு வரி கிடையாது. தற்போது ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. 
கொன்று ஒழிக்கப்பட்ட தொழிலுக்கு கூட வரியாம். 

குச்சியில் மருந்தை மட்டும் வைத்து காய வைத்து வெளியே வரும் இயந்திரத்திற்கு (Semi Mechanism) தற்போது 6% வரி, இனி 18% ஆக உயர்த்துப்படுகிறது. இயந்திரமே முழுமையாக செய்து தரும் தீப்பெட்டிக்கு 12% வரி, 5% வாட் வரியாக இருந்தது; தற்போது இதற்கும் 18% வரி. செமி மெக்கானிசத் தொழில் ஈடுபடுவோருக்கும் புல் மெக்கானிசம் என்ற அடிப்படையில் செய்யப்படும் தீப்பெட்டிக்கும் ஒரே மாதிரி வரி என்றால் ‘எப்படி’ என்கின்றனர் செமி உற்பத்தியாளர்கள். 

அதனால் எங்களுக்கு வரியை குறைத்தாக வேண்டும் என்று கோருகின்றனர். செமி மெக்கானிச உற்பத்தியில் 600 தீப்பெட்டிக்கு 120 ரூபாய் உற்பத்தி செலவாகும். இதுவே புல்லி மெக்கானிச உற்பத்தியில் ரூ. 80/- மட்டுமே செலவாகிறது. கூடுதலாக முதலீடு செய்து புல்லி மெக்கானிசம் உற்பத்தியில் ஈடுபட வாய்ப்புகள் இல்லை. எனவே தொழிற்சாலையை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று குமுறுகிறார்கள். 

இத்தொழில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கயத்தாறு, நெல்லை மாவட்டத்தில் திருவேங்கடம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்தங்கல், ஏழாயிரம் பண்ணை, விளாம்பட்டி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், தருமபுரி மாவட்டம் காவிரிப்பட்டணம் போன்ற இடங்களில் இந்த வரியால் தீப்பெட்டித் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் பட்டாசு, அச்சுத் தொழிலும் இதனால் முடங்கிவிட்டன. 

#தீப்பெட்டித்_தொழில் 
#தென்மாவட்ட_தொழில்_முடக்கம் 
#சிறுதொழில் 
#match_factory 
#village_industries 
#small_industries
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-04-2017

ஆக்ஸ்போர்ட் அகராதி

ஆக்ஸ்போர்ட் அகராதி

ஆக்ஸ்போர்ட் அகராதி நேற்று தனது ஒன்பதாவது பதிப்பை வெளியிட்டு உள்ளது. அதில்900 புதிய  சொற்களும் , 240  இந்திய மொழி சொற்கள் அதற்கான பொருளுடன் பதிப்பிடப்பட்டுள்ளது. 

#ஆக்ஸ்போர்ட்அகராதி
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-04-2017

Wednesday, June 28, 2017

Big boss

Big boss.... 100 நாள் எல்லாம் சொகுசும் கொடுத்து அவங்களை சூட் செய்து டிவியில் காட்டுவதற்கு பதிலாக,
விவசாயிகள் வீட்டுக்கு  அனுப்பி
அவங்களோட கஷ்டத்தை அனுபவிக்கிறதை  எடுத்து  ஒளிபரப்பு செய்தால் நல்லது .

தற்கொலை,கடன்தொல்லை மன
அழுத்தத்தால் இதுவரை 80 விவசாயிகள் மாண்டுயுள்ளனர். துப்பாக்கி சூட்டில் 77 (1972- '92) விவசாயிகள்  பாலியாகியுள்ளனர். இவர்களின் வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

உலகமே நாடக மேடை; இது விளம்பர,வியாபார மோகம்......

யாசகஅரசியல்

யாசகஅரசியல்:
----------------
திருநெல்வேலி நகரில் ஒரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம். அக்கூட்டத்திற்கு பொதுமக்களும் கட்சிக்காரர்களும் அதிகமாக வருகை தந்தனர். வாகனங்களில்பலரும் வந்து  இறங்கினர்.  கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சலசலப்பு. சலசலப்பு சர்ச்சையானது. சர்ச்சை சண்டையானது. சண்டை வள்ளியூர் காவல் நிலையத்தில் புகாரானது. புகார்  கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யும் நிலைக்கு சென்றுள்ளது. 
 
இதற்கெல்லாம் காரணம் என்னவென அறிந்த போது இந்த அரசியல் தேவைதானா என யோசிக்கவும், முகம் சுளிக்கவும் வைக்கின்றது. அதாவது பெண்களுக்கு தலா 100ரூபாய் மற்றும் சாப்பாடு, ஆண்களுக்கு 100ரூபாய் மற்றும் சாப்பாடு. மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு குவார்டர் பாட்டில், வாகன ஓட்டிகளுக்கு பணம் என அளித்து கூட்டத்தை திரட்டி வந்திருக்கின்றார்கள்.  குறிப்பிட்ட நபர்களுக்கு காசு போய் சேராத காரணத்தால் சர்ச்சை வெடித்தது. இதுக்கு இப்படி கூட்டம் திரட்ட வேண்டிய கட்டாயம் என்ன? அரசியல்வாதிகள் நிலை தான் இப்படி என்றால் காசுக்காக கலந்துக் கொள்ள  சென்ற மக்களுக்கு சூடு , சொரணை வேண்டாமா? தன்மானம் இல்லையா? ஒரு வேளை சோறு இல்லையெனில் இறந்தா போய்விடுவார்கள்? மானமிழந்து சாப்பிடுவதற்கு ......?

ஒருகாலத்தில்பெரியார்,ராஜாஜி,ஜீவா ,காமராசர், அண்ணா, தலைவர் கலைஞர் மேடை ஏறுகின்றார்கள் என்றால் என்ன வாசகம் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் 20 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கூட்டத்தில் கலந்துக் கொள்வது உண்டு. அதிலும் ஒரு சைக்கிளில் மூனு பேர் எல்லாம் ஏறிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட வாசங்கங்கள் கேட்க வந்தது  தான் அரசியல். இவர்கள் மக்களை யாசகம்  கேட்க அல்லவா  வரவழைக்கின்றார்கள்? 

தமிழர்கள் மானத்துடன் உண்டு வாழ்ந்தனர் என சங்க இலக்கியங்கள் மேற்கொள்காட்டுகின்றனவே?  

விளைபதச் சீறிடம் நோக்கி , வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலி முயன்றனையர் ஆகி உள்ளத் தம்
வளம் வலியுறுக்கும் உளம் இலாளரொடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ!
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணாதாகி வழி நாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டு எழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ? 

என்கிறதே புறநானூறு.

புலி  வேட்டையாடும்   ஆண்பன்றி  வலப்பக்கம் வீழ்ந்தால் மட்டுமே உணவாக உட்கொள்ளும், பலமின்றி  இடப்பக்கம் விழுந்தால் புலி  அதனை சீண்டாது என படித்ததை எல்லாம் எலிக்கும், புலிக்கும் சொல்லப்பட்டது எனக்கில்லை என கருதுகின்றார்களா?  இப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு இடையில் என் போன்றவர்களும் அரசியல்வாதிகள் என சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டியதாகின்றது. மழைக் காளான்களை போல தரமற்ற, தகுதியற்றவர்கள் எல்லாம் தங்களை தலைவர்கள் என சொல்லிக் கொண்டால் அரசியல் இப்படித்தான் நடக்கும். 

#யாசகஅரசியல் 
#மானமற்றஅரசியல்வாதிகள். 
#KSRadhakrishnanpostings 
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-06-2017

Tuesday, June 27, 2017

அச்சன்கோவில் - பம்பை - வைப்பாறு இணைப்பு

இன்றைய (27/06/2017) தினத் தந்தி நாளிதழில், அச்சன்கோவில் - பம்பை - வைப்பாறு இணைப்பு  ுறித்து எனது கட்டுரை வெளியாகியுள்ளது. வானம் பார்த்த பூமியாக உள்ளது திருநெல்வேலி வடக்குப் பகுதி. இந்த திட்டத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் முதலிய பல தென் மாவட்டங்கள் பயன்படக்கூடிய ஒரு திட்டத்தினை மத்திய அரசு பாராமுகம் காட்டி வருகிறது. இது குறித்தான எனது கட்டுரை.....
epaper.dailythanthi.com

பம்பை - அச்சன்கோவில் - தமிழக வைப்பாறுடன் இணைப்பு
___________________________________________________
 
- வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
rkkurunji@gmail.com
​மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு, “உச்சநீதிமன்றம் கடந்த 2012ல் எனது வழக்கில், நதிநீர் இணைப்பு குறித்து வழங்கிய தீர்ப்பின் மீது என்ன செயல்பாடுகள் நடந்துள்ளது?” என்று அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளச் சமீபத்தில் சென்றிருந்தேன். 
​இந்த அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீசசி சேகரைச் சந்திக்கச் சென்ற போது அவருடைய அறையில் அவர் இல்லை. எனவே அவருக்கு அடுத்துள்ள அதிகாரிகளான, துணை மற்றும் இணைச் செயலாளர்களைச் சந்திக்கக்கூடிய சூழல்தான் அப்போது அமைந்தது. 
அந்த அதிகாரிகளிடம் உச்சநீதிமன்றத்தின் தீர்பின் மீது அரசு என்ன முடிவு எடுத்திருக்கிறது என்று கேட்டேன். குழு அமைத்ததுடன், உரிய ஆலோசனைகள் நடத்தி நவலவாலா தலைமையில் “நதிநீர் இணைப்புக் குழு” இதுகுறித்து ஆய்வு செய்கின்றது என்று தெரிவித்தனர். அமைச்சர் உமாபாரதி அவர்களைச் சந்திக்க நினைத்தபோது அவரும் டெல்லியில் இல்லை.
தமிழகத்தின் மத்திய அரசால் கேரள அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் கிடப்பில் போட்ட திட்டம் தான் அச்சன்கோவில் – பம்பை – தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கும் திட்டமாகும். என்னுடைய நதிகளை தேசியமயமாக்கி, கங்கையை குமரி மாவட்ட நெய்யாறோடு இணைத்திட வேண்டும். அச்சன்கோவில் – பம்பை மற்றும் கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளை தமிழகம் நோக்கி திருப்பவேண்டுமென்ற உச்ச நீதிமன்றத்தில் 30 ஆண்டுகாலம் வழக்கு நடத்தி 27/02/2012ல் இதற்கான தீர்ப்பு கிடைத்தது. கிடைத்தும் செயல்பாடானது ஆமை வேகத்தில் உள்ளன.
 
ஆனால், 06-03-2011 அன்று கேரள சட்டமன்றக் கூட்டத்தில் கேரள ஆளுனர் உரையில், பம்பை அச்சன்கோவில் – வைப்பார் - இணைப்பு செயல்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.  அந்த உரையில் கேரளா கோடைகாலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதர்காக வாமானபுரம், அச்சன்கோவில், மீனச்சில், சாலியாறு நதிகளின் குறுக்கே புதிய அணை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய அணையைக் கட்டுவதால், அச்சன் கோவில் ஆற்றின் தண்ணீர்வரத்து வரும் பகுதியில் தான் இந்த புதிய அணை கட்டப்படும். 1972லிருந்து மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட, தமிழகம் பயன்பெறும் திட்டம் இதனால் கேள்விக்குறி ஆகிவிட்டது.
 
அந்த திட்டம் என்ன என்ற் பார்த்தோமானால், கேரளாவில் உள்ள பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆற்றுப் படுகையின் உபரிநீரைத் தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கும் திட்டம் 43 வருடங்களாக விவாதிக்கப்பட்டு, மத்திய அரசும் இத்திட்டத்தை பரிந்துரைத்தது.
 
கேரளாவின் ஒத்துழைப்பில்லாமல் இத்திட்டம் கிடப்பில் கிடக்கின்றது. 1983ல் அடியேன், நதிகள் தேசியமயமாக்கப்பட்டு கங்கை – மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணார் – காவிரி – வைகை – தாமிரபரணி குமரிமாவட்ட நெய்யாறோடு இணைக்க வேண்டுமென்றும், அத்தோடு கேரளாவில் மேற்கு நோக்கிப்பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்துக்குத் திருப்புவதோடு, அங்குள்ள அச்சன்கோவில் - பம்பை நதிகள்  தமிழகத்தில் உள்ள வைப்பாறோடு இணைக்கவேண்டுமென்ற எனது பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம்,  “பயன்பெறும் வகையில் ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைக் காண  மத்தியஅரசு ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழு முறையாக அமர்ந்து நாடு எதிர்பார்க்கும் இந்த முக்கியப்பிரச்சனைக்கு அவசியம் தீர்வு காணவேண்டுமென்றும்” மிகத் தெளிவாக அறிவுறுத்தியது.
 
மத்திய அரசு, அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் நேரடித் தலையீட்டில், 1972ல் அமைத்த நீர்பாசன குழுவின் அறிக்கை தொகுதி II பக்.384ல், கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளிலிருந்து தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்கின்றது.  இதை தமிழகத்திற்குத் திருப்பலாம் என்று அப்போதே பரிந்துரை செய்தது. 4134.கி.யூ.மீ தண்ணீர் கடலில் கலப்பதாக இந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அந்த காலகட்டத்திலிருந்து இந்தப்பிரச்சனை இதுவரை 20சுற்றுகளுக்கு மேல் பேசப்பட்டும் மத்திய அரசின் முன்னிலையில் கேரள-தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை.
 
அச்சன்கோவில் - பம்பை - வைப்பாறு இணைப்பால், விருதுநகர், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறும், குடிநீர் வசதியும் கிடைக்கும். இங்கு 500மெகாவாட் நீர்மின் திட்டத்தையும் ஏற்படுத்தி மின்சார உற்பத்தியையும் பெற முடியும். 1992-93 திட்டத்தின் படி இதன் மதிப்பீடு 1397.91 கோடிகள். எட்டுவருடங்களில் இந்தப்பணியை முடிக்கலாம் என்றும் திட்டமிடப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு முன், வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது, சுரேஷ் பிரபு தலைமையில் இயங்கிய நதிநீர் இணைப்புக் குழு, பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்பு பற்றி ஆய்வு செய்தது. பம்பா ஆற்றின் புன்னமேடு என்கிற இடத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திற்கு மலைக்குள் குகைப்பாதை அமைத்து பம்பாவை அச்சன்கோயில் ஆற்றுடன் இணைப்பது, பின்னர் அச்சன்கோயிலில் இருந்து 9 கிலோமீட்டர் தூரம் குகைப்பாதை அமைத்து மேற்குத்தொடர்ச்சி மலையைக் கடந்து தமிழகத்தில்  செங்கோட்டை அருகே வடகரை கிராமத்தில் மலைக்குள் அமைந்திருக்கும் அடவிநயினார் அணைப் பக்கம் தண்ணீரைக் கொண்டு வந்து, பின்னர் அங்கிருந்து மலை அடிவாரத்திலேயே  50.68 கிலோமீட்டர் தூரத்திற்கு 14 மீட்டர் அகலமும், 4 மீட்டர் ஆழமும் கொண்ட கால்வாயை வெட்ட வேண்டும்.
 
பம்பை-கல்லாறு புன்னமேடு என்ற இடத்தில், 160மீட்டர் உயரத்தில் அணைகட்டுவதும், அதுபோல, அச்சன்கோவில் கல்லாறு நதியில் சித்தார்மூழி என்ற இடத்தில் 160மீட்டர் உயர அணைகட்டி, அந்த நதிநீர்களைத் தேக்கி, அச்சன்கோவில் அருகே 35மீட்டர் உயரத்திற்கு கிராவிட்டி அணைகட்டி,  புன்னமேடு சித்தார்மூழி இரண்டு அணைகளையும் இணைத்து 5மீட்டர் விட்டத்திற்கு சுரங்கம் வெட்டி, 8கி.மீ தூரம் சுரங்கம் வழியாக தமிழக எல்லைக்குவந்து மொத்தம் 550.68கி.மீ தொலைவில் வைப்பாற்றோடு அந்த தண்ணீரை இணைகலாம்.
 
செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், திருவேங்கடம், வெம்பக்கோட்டை, அதன்வழியாக சாத்தூர் அருகாமையில் உள்ள வைப்பாற்றில் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வழியாக கடலில் சேரும். இதுதான் அச்சன்கோவில் –பம்பை –வைப்பாறு இணைப்புத்திட்டம். இத்திட்டத்தின் வாயிலாக, சிவகாசி வடபுரத்திலும், தெற்கே கோவில்பட்டி வரை நீர்பாசனபரப்புக்கும் , குடிநீருக்கும் பயன்பெறும் வகையில் கிளைக்கால்வாய்களும் இடம்பெறும்.
இந்த கால்வாய்களில் வரும் நீர்வரத்தை கிளைக்கால்வாய்களாக சிவகிரி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் வரைக்கொண்டு செல்லமுடியும். ஏற்கனவே திருவில்லிபுத்தூர் அருகே அழகர் அணைத்திட்டமும் பரிசீலனையில் இருக்கும்பொழுது, வைப்பாறு கிளைக்கால்வாய் சேர்ந்தால் நீர்வரத்து அதிகமாகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் அணைக்கும், திட்டத்தில் உள்ள உள்ளாறு, செண்பகத்தோப்பு அணைகளுக்கும் நீர்வரத்து பெருகும்.
 
நெல்லை மாவட்டத்தின் கடையநல்லூர் – சங்கரன்கோவில் தெற்குநோக்கி கால்வாய் வெட்டினால், மேலநீலிதநல்லூர், மானூர் பகுதி வழியாகச் சென்று தாமிரபரணியில் இணைக்கலாம். மேலும் இந்தக்கால்வாய் தெற்கே நான்குநேரிவரை கொண்டு சென்று தற்போது பணி நடக்கின்ற தாமிரபரணி- கருமேனி ஆற்றோடும் சேர்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் அருகே தெற்கு நோக்கி கால்வாய் வெட்டினால், எட்டையபுரம், ஒட்டபிடாரம் வரை சென்று தூத்துக்குடி நகருக்கே குடிநீர் வழங்கலாம். இத்திட்டத்தால் இவ்வளவு பயன்பாடுகள் உள்ளன.
 
வீணாகக் கடலுக்கு செல்லும் நீரைப் பெறுவதற்குத்தான் அண்டை மாநிலம்,  ஹரியின் தேசமான கேரளாவிடம் மண்டியிடுகின்றோம். ஆனால், அரசியல் மனமாச்சர்யங்களைக் கடந்து ஒரு சொட்டுத் தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்ற தயாள மனதில்லாமல் அங்கு வரும் ஆட்சியாளர்கள் இருக்கின்றனர்.  
 
அச்சன்கோவில் –பம்பை- வைப்பாறோடு இணைப்பது தமிழக மக்களிடமே இன்னும் விழிப்புணர்வு வராதது வேதனையைத் தருகின்றது. குமரி நெய்யாறு, நெல்லை மாவட்டத்தின் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, விருதுநகர் மாவட்டம் அழகர் அணைத்திட்டம் மற்றும் முல்லைப் பெரியாறு, பாண்டியாறு-புன்னம்புழா, ஆழியாறு-பரம்பிக்குளம், சிறுவாணி, பம்பாறு என அனைத்து பிரச்சனைகளிலும் தாராளமாகத் தண்ணீர் வழங்கலாம். வழங்க மனம் தான் கேரளாவுக்கு இல்லை.
இதுகுறித்து, கேரள முதல்வர் உம்மன்சாண்டி கேரள சட்டமன்றத்தில் பேசும்போது, “பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளைத் தமிழகத்தின் வைப்பாற்றுடன் இணைக்க முடியாது என்றும், முல்லைப்பெரியாறுக்குச் சொன்ன கற்பனை காரணமான பேரழிவு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் குட்டநாடு பகுதி பாலைவனமாகிவிடும் என்றும், உபரி நீரை தமிழகத்திற்குத் திருப்பினால் கேரளத்தில் மீன்பிடிப்புத் தொழில் பாதிக்கும் என்ற விநோதமான காரணத்தையும் சொல்கிறார். கேரளா நினைத்தால் தான்  இந்தப்பிரச்சனையில் எதுவும் செய்யமுடியுமென்று சொல்லியுள்ளது வேதனையைத் தருகின்றது. அங்கு பொதுவுடைமைக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே பதில்தான். தமிழகமோ 20சதவீத உபரிநீரைத்தான் வைப்பாறு இணைப்புக்குக் கேட்கின்றது.
 
ஐரோப்பாவிலுள்ள யூகோஸ்லோவியா கேரள மாநிலத்தைப் போன்று மலைப் பிரதேசமாகும். அதற்கு அண்டை நாடான ருமானியாவுக்கு யூகோஸ்லோவியா தன் நாட்டிலுள்ள எஞ்சிய நீரை கொடுத்து உதவும்போது, இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தின் எஞ்சிய நீரை மற்ற மாநிலத்திற்குக் கொடுப்பதால் எந்தவிதமான சிக்கலும், பாதிப்பும் ஏற்படாது. இதைப் போன்று சோவியத் நாட்டிலுள்ள துருக்மேனியா மாநிலத்திலுள்ள கேரிகம் கால்வாய் அண்டை மாநிலங்களுக்கு எஞ்சிய நீரைக் கொடுத்து உதவி செய்கிறது. சோவியத் நாட்டிலுள்ள வட பகுதிகளில் பாயும் நதி நீர் தென் பகுதிகளுக்குத் திருப்பப் பட்டுள்ளது.
 
கேரளப் படுகையில் உள்ள பாண்டியாறு, புள்ளம்புழா, மோயாறு, சோலாத்திப் புழா, பன்சிகல்லா ஆகிய நதி நீர் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் வரை பயன்பெறும். இதில் எஞ்சிய நீர் சுமார் 150 டி.எம்.சி. ஆகும். இந்த நீரில் சுமார் 18 டி.எம்.சி. நீரைத் திருப்பினால் 2.80 இலட்சம் ஏக்கர்களுக்கு பாசன வசதி கிடைக்கும். மற்ற நதிப்படுகையிலிருந்து கிழக்குமுகமாக தமிழகத்திற்குத் திருப்பினால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் வளம்பெறும்.
 
நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், பழநி, திருச்சி, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்கள் குடிநீர்வசதி பெறும்.
பம்பை – அச்சன் கோவில் -  வைப்பாறு இணைப்பு திட்டத்தை மத்தியஅரசின் தேசிய நீர்மேம்பாட்டு ஆணையம் வரையறை செய்தது. இத் திட்டத்தால் தென்தமிழகப் பகுதிகள் பாசனவசதி பெறும் என்பதால் ஆர்வத்துடம் தமிழகஅரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், உபரிநீரை வழங்கவேண்டிய கேரளஅரசு இன்றுவரை ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறது. 
 
கேரளத்தில் உற்பத்தியாகும் நதிநீரை முழுமையாகக் கேரள மக்கள் பயன்படுத்தவில்லை. அதிகமான மலைப் பிரதேசங்கள் இருப்பதால் விவசாய நிலங்கள் குறைவு. கேரள மாநிலத்தின் நீர்வளம் தமிழகத்தைவிட அதிகமானதாகும். தமிழ்நாட்டின்  நீர்வளம் 1,300 டி.எம்.சி. ஆகும். ஆனால், கேரளத்தின் நீர்வளம் சுமார் 2,500 டி.எம்.சி. ஆகும். இதில் சுமார் 1,100 டி.எம்.சி.க்கும் அதிகமான நீர் வீணாகி அரபிக் கடலில் சேருகிறது. (இந்தத் தண்ணீரின் அளவு மேட்டூர் அணையிலுள்ள நீரைப்போல சுமார் 11 மடங்கு ஆகும்.) கேரள மாநிலத்துக்குத் தேவையான நீர் அளவு 800 டி.எம்.சி. மீதமுள்ள நீரைத் தமிழகத்திற்குக் கொடுத்தால் சுமார் 8.20 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும். இதனால் கேரளத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை..
 
கேரளத்தில் 85 மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் உள்ளன. 1,96,000 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் இந்நதிகளின் மூலம் செல்கிறது. கேரளத்தில் உள்ள நெய்யாறு நீர்ப்பிடிப்பு பகுதி 138.24 சதுர.கி.மீட்டர் ஆகும். பாம்பாறு (230 டி.எம்.சி), அச்சன்கோவில் (77 டி.எம்.சி), பெரியாறு படுகை(380 டி.எம்.சி), , கல்லட ஆறு(180 டி.எம்.சி) நீர்படுகைகளில், உபரி நீர் உள்ளது. இதில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர் கடலுக்கு செல்கிறது என்று திட்டக்குழுவின் 1978ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.
 
மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைத் தமிழகத்திற்குத் திருப்புவது பற்றி மத்திய அரசு 1978ஆம்  ஆண்டு ஒரு குழு அமைத்து, இத்திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து, இந்த நதிநீரைத் தமிழகத்திற்குத் திருப்புவதற்குச் சாத்தியக் கூறுகளை அறிந்தது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இப்பிரச்சினை பல முறை எழுப்பப்பட்டுள்ளது.
 
கேரள மக்களுக்கு, அரிசி, காய்கறிகள், பால், மீன், இறைச்சி, மணல், சிமெண்ட், மின்சாரம் போன்ற அத்யாவசியப் பண்டங்களை தமிழகம் வழங்குகின்றது. அதற்காவது தண்ணீர் கொடுத்தால் தானே விளைச்சல் செய்து அரிசி, பருப்பு, பால் என்று அவர்களுக்கு வழங்கமுடியும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?

#பம்பைஅச்சன்கோவில்வைப்பாறுடன் #நதிகள்இணைப்பு
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-06-2017

குடியரசுத் தலைவர்களும் சர்ச்சைகளும்!

இன்றைய (27/06/2017) தி இந்து நாளிதழ், 'இன்றைய (27/06/2017) தி இந்து நாளிதழ், 'குடியரசுத் தலைவர்களும் சர்ச்சைகளும்!'என்ற தலைப்பில் எனது கட்டுரை வெளிவந்துள்ளது. அதில் குடியரசுத் தலைவர்களாக இருந்தபோது அதிகாரப்பகிர்வு ஏற்பட்ட பல்வேறு சர்ச்சை சம்பவங்களின் செய்திகள் இடம்பெற்றுள்ளது. மேலும் குடியரசுத் தலைவர்களாக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர். வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டு பல சந்தர்ப்பங்களில் சந்திப்புகளும் நிகழ்ந்ததுண்டு. அது குறித்தான விரிவான கட்டுரை வருமாறு:

ராஷ்ட்ரபதி பவன் சுவர்களுக்கு தான் தெரியும்
-------------------------------------
- வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

ஒரு திரைப்படத்தில் ‘வரும் ஆனால் வராது’ என்றொரு வசனத்தை கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். அதுபோலவே, குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் இல்லை என்பதை போல பேசிக்கொள்வது உண்டு. குடியரசுத் தலைவர் வெறும் ரப்பர் ஸ்டாம்பா?பதுமைய? அல்லது நாட்டின் உச்ச அதிகாரத்தின் மையமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பிரிட்டிஷ் நாடளுமன்ற முறையை பின்பற்றுகின்ற நாடாளுமன்ற ஜனநாயக நாடு இந்தியா. அமெரிக்கா, பிரான்ஸை போல குடியரசு தலைவரை மக்களே தேர்ந்தெடுக்கின்ற மாதிரி இல்லாமல் மறைமுகமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். மாநிலங்களின் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு இதில் ஓட்டுரிமை கிடையாது.

இந்திரா காந்தி காலத்தில் 1975, 76 களில் குடியரசுத் தலைவர் முறையை கொண்டு வரவேண்டும் என்று கடுமையான நடவடிக்கைகள் இருந்தன. வசந்த சாத்தே, ஏ.ஆர். அந்துலே போன்றவர்கள் எல்லாம் இதற்கான பிரச்சார பணிகளில் இறங்கினர்.

நாட்டு விடுதலைக்கு பின், ஜவஹர்லால் நேரு ராஜாஜியை குடியரசுத் தலைவராக்க வேண்டுமென்று முயன்றார். ஆனால் ராஜேந்திர பிரசாத்துக்கு ஆதரவான நிலை இருந்ததால் நேருவும் ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தார். நாடு விடுதலை பெற்ற பின் குடியரசுத் தலைவருக்கு அதிகாரமா, பிரதமருக்கு அதிகாரமா என்ற சர்ச்சை எழுந்தது.
ராஜேந்திர பிரசாத், 18-09-1951 அன்று நேருவுக்கு குடியரசுத் தலைவருக்கு உச்ச பட்ச அதிகாரங்கள் உள்ளன என்று கடிதம் எழுதினார். ஏற்கனவே 21-03-1950 இல் ராஜேந்திர பிரசாத் அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளை எல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்ற வினாவையும் எழுப்பினார். நேருவுக்கும் ராஜேந்திர பிரசாத்துக்கும் இத்தகைய சர்ச்சைகள் தொடர்ந்தன. ‘ஹிந்து கோட்’ சட்டத்தில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இருவரிடையே நடந்தது. டெல்லியில், இந்திய சட்ட நிறுவனத்தின் (Indian Law Institute) துவக்க விழாவில் கடுமையாக குடியரசுத் தலைவர் இதுகுறித்து பேசியது உண்டு. சோம்நாத் கோவிலுக்கும் செல்வதும், துவாரக பீடக் காலை சுத்தம் செய்வதை குடியரசுத் தலைவர் தவிர்க்க வேண்டுமென்று நேரு கடுமையான குறிப்புகளை ராஜேந்திர பிரசாத்திற்கு அனுப்பியதும் உண்டு. குடியரசுத் தலைவர் – பிரதமர் அதிகார வரம்புகளை குறித்த பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை சென்று, இந்திய தலைமை வழக்கறிஞர் செட்டுல்வார்டு சட்ட ஆலோசனைகளை வழங்கியதும் உண்டு. விடுதலை பெற்றவுடன் துவக்கத்திலேயே இப்படியான பனிப்போர் ஏற்பட்டது.

டாக்டர். இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்த போது 1962 சீனப் போர் பிரச்சனையிலும், பாதுகாப்பு வாகனங்களை கொள்முதலில் நடந்த ஊழல் விவகாரத்திலும் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனனை பதவி விலக வேண்டுமென்று நேருவிடம் நேரடியாக வாதிட்டு கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்ததன் விளைவாக நேருவுக்கு மனவருத்தங்கள் ஏற்பட்டன. தூக்கு தண்டனை கைதிகள் விவகாரத்தில் கருணை மனுக்களை தினமும் பெற்று உடனுக்குடன் இராதாகிருஷ்ணன் பைசல் செய்ததை நேரு விரும்பவில்லை.

இந்திரா காலத்தில் குடியரசுத் தலைவராக இருந்த ஜாகீர் உசேன், வி.வி.கிரி, பக்ருதீன் அலி அகமது ஆகியோர் ஆட்சியை அனுசரித்து சென்றனர். அவசர நிலை காலத்தில் பக்ருதீன் அலி அகமது நடந்து கொண்ட முறைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

வி.வி.கிரி தன்னுடைய பதவி காலம் நிறைவு பெற்றுச் சென்ற போது, லாரிகள் நிறைய ராஷ்ட்ரபதி பவனிலிருந்து  பொருட்களை அவரது குடும்பத்தார் எடுத்துச் சென்றார்கள். அசோகச் சக்கரம் பொறித்த இருக்கையையும் கையகப்படுத்தி எடுத்துச் சென்ற போது அவரது துணைவியாரிடம் போராடி ராஷ்ட்ரபதி பவன் அதிகாரிகள் திரும்பப் பெற்றனர். இன்றைக்கு வி.வி.கிரி இல்லை. ஆனால் நடந்த சம்பவத்தை பதிவு செய்வதில் குறையொன்றும் இல்லை.

ஜனதா ஆட்சி காலத்தில் நீலம் சஞ்சீவ ரெட்டி குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு வந்தார். மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்த போது சஞ்சீவ ரெட்டி இந்திரா காந்திக்கு ஆதரவு நிலையை எடுத்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதே சஞ்சீவ ரெட்டி வி.வி.கிரியை எதிர்த்து 1969ல் போட்டியிட்ட பொழுது இந்திரா காந்தி ரெட்டியை நிராகரித்ததால் காங்கிரஸ் பிளவுப்பட்டது.
சஞ்சீவ ரெட்டிக்கு பின் வந்த ஜெயில் சிங் பொறுப்பேற்று, இந்திரா காந்தி மறையும் வரை எந்த பிரச்சனையும் எழவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி பிரதமர் பொறுப்புக்கு வந்தவுடன் முட்டல், மோதல் துவங்கியது. ராஜீவ் அரசு பரிபாலனங்களை குறித்து தன்னிடம் சொல்வதில்லை என ஜெயில் சிங் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அஞ்சல் நிலைய மசாதா 1986ல் திருப்பி அனுப்பியதால் சர்ச்சைகள் நிகழ்ந்தன. சீக்கியர் பிரச்சனையில் ஜெயில் சிங்கின் அணுகுமுறை வேதனை தருகின்றது என ராஜீவ் குறிப்பிட்டதுண்டு. பின் ராஜீவும், ஜெயில் சிங்கும் அமர்ந்து பேசியும் முழுமையான இணக்கம் ஏற்படவில்லை.
ஆர். வெங்கட்ராமண் 1991ல் குடியரசுத் தலைவராக இருந்த பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதிய மசோதாவை கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்து தனது ஆட்சேபனையை தெரிவித்தார்.

சங்கர் தயாள் சர்மா பொறுப்பில் இருந்த பொழுது, ராஷ்ட்ரபதி பவன் நிர்வாகத்தில் சிறு சிறு மனத் தாங்கல்கள் ஏற்பட்டன.
பின் வந்த கே.ஆர். நாராயணன், 1997ல் உத்திரபிரதேசத்தின் கல்யாண் சிங்கின் பாஜக அரசை கலைக்க வேண்டுமென்று பிரதமர் ஐ.கே. குஜ்ரால் சொல்லியும், பிரிவு 356ஐ பயன்படுத்த ஒப்புக் கொள்ளவில்லை. அதே போல பீகாரில், ராப்ரி தேவி அரசை கலைக்க வாஜ்பாய் அரசு பரிந்துரைத்த போதும் மறுத்துவிட்டார். கே.ஆர். நாராயணன் வெற்றி பெற்ற தேர்தலில் தான் புதுச்சேரி, புதுடெல்லி முதலிய யூனியன் பிரதேசங்களும் வாக்களிக்க கூடிய உரிமையை பெற்றனர்.
அப்துல் கலாம் பொறுப்புக்கு வந்தபோது, 2006ல் ஆதாயமும் சலுகைகளும் பெறும் பொறுப்புக்களை வகிக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலே முன்தேதியிட்ட மசோதாவை மன்மோகன் சிங் வலியுறுத்தியும் தன்னுடைய வீட்டோ அதிகாரத்தால் முழுமையாக நிராகரித்தார் கலாம்.
முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டீல் வேட்பாளராக அறிவிக்கும் போதே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பதவிக் காலம் முடிந்தபின் ராஷ்ட்ரபதி பவன் சோபா, நாற்காலிகள் முதலியவற்றை அதிகாரிகள் தடுத்தும் எடுத்துச் சென்றார். இவர் குடியரசுத் தலைவராக பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை ஓய்வு பெற்ற பின்னர் தன்னுடனே ‌‌எடுத்துச் சென்றார். தன்னுடைய பதவிக் காலத்தில் ரூ.205 கோடி செலவில் 252 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் மேற் கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

பிரணாப் முகர்ஜி அரசியலில் அனுபவம் பெற்றதால் ராஷ்ட்ரபதி பவனை குறித்தான வரலாறுகளை ஆவணப்படுத்தினார். நடைமுறை மற்றும் செயல்பாடுகளில் தெளிவாகவும் கறாராகவும் இருந்தார்.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 77 (1) ன்படி, நாட்டில் நடக்கும் அரசு பரிபாலனங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவருடைய திருப்தியை கொண்டு தான் நடைமுறை படுத்தப்படுகிறது என்பது சம்பிரதாயம். குடியரசுத் தலைவர் மத்திய அரசின் முடிவுகள், மசோதாக்கள் ஒப்புதல் அளித்தால் தான் அவற்றை செயல்படுத்த முடியும். பிரிவு 85 ன்படி, நாடாளுமன்றத்தை கூட்டவும் கலைக்கவும் அதிகாரம், போர், வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு, உள்நாட்டு கலவரங்கள், பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு குழப்பங்கள் ஆகியன எழுந்தால் அவசர நிலையை பிரகடனப்படுத்துவது, மாநிலங்களில் சட்ட ஒழுங்கு கெட்டால் பிரிவு எண். 356ஐ பயன்படுத்துவது, தூக்கு தண்டனை கைதிகளுக்கு பிரிவு. 72 ன்படி கருணை காட்டுவது என்ற அதிகாரங்களை குறிப்பிடலாம்.
ஒரு பழைய செய்தி; டெல்லியிலிருந்து வரும் ஆங்கில ஏடான, இந்துஸ்தான் டைம்ஸ் என்று நினைக்கின்றேன். அதில் ராஷ்ட்ரபதி பவனில் சமைக்கின்ற சுவையான உணவு வகைகள் டெல்லியிலுள்ள பல உணவு விடுதிகளுக்கு அனுப்பி அதைக் காசாக்கியதும் உண்டென்று எழுதியது. இப்படியான சர்ச்சையான செய்திகள்.
இப்படி உயர்ந்த இடத்தில் ஆங்கிலேய அரசாங்கம் நடத்திய தர்பார் மாளிகையில் கடந்த எழுபது ஆண்டுகளாக இந்திய அரசியல் சதுரங்கத்தில் நடந்த தெரிந்த செய்திகள், கமுக்கமான செய்திகள் ராஷ்ட்ரபதி பவன் சுவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
#குடியரசுத்தலைவர்
#குடியரசுத்தலைவர்தேர்தல்

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-06-2017

rkkurunji@gmail.com!'என்ற தலைப்பில் எனது கட்டுரை வெளிவந்துள்ளது. அதில் குடியரசுத் தலைவர்களாக இருந்தபோது அதிகாரப்பகிர்வு ஏற்பட்ட பல்வேறு சர்ச்சை சம்பவங்களின் செய்திகள் இடம்பெற்றுள்ளது. மேலும் குடியரசுத் தலைவர்களாக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர். வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டு பல சந்தர்ப்பங்களில் சந்திப்புகளும் நிகழ்ந்ததுண்டு. அது குறித்தான விரிவான கட்டுரை வருமாறு:

Monday, June 26, 2017

முதலில் மனிதனா?

யார் வேணுமானாலும் தன்னை 
தலைவர் என வேண்டி விரும்பி 
சொல்லிக்கொள்ளட்டும் ...
அவர்கள் முதலில் மனிதனா? என எண்ணி 
பார்க்கட்டும் !
 
மேலவையும் ம.பொ.சி.யும்

இன்று சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்களின் 111-வது பிறந்த நாள்.

மேலவையும் ம.பொ.சி.யும்
---------------------------

இந்தியாவிலே மத்தியிலும் மாநிலங்களிலும் பூரண சுதந்திரம் மலர்ந்தது 1947 ஆகஸ்டுப் பதினைந்தில் ஆகும். ஆனால், இதற்கு முன்னோடியாக மாநிலங்களிலே அரைகுறையாகவேனும் சியாட்சி மலர்ந்தது 1920 ஆகும்.
 
"மாண்டேகு - செம்ஸ்போர்டு திட்டம்" என்னும் பெயரால் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு வழங்கிய அரசியல் சீர்திருத்தத்தின் விளைவக அப்போதைய சென்னை,பம்பாய்,கல்கத்தா(வங்காளம்) மாநிலங்களிலே சட்டமன்றத்தோடும் கூடிய சுயாட்சி மலர்ந்தது.
 
அப்போது தமிழ் – தெலுங்கு – கன்னடம்- மலையாளம் ஆகிய நான்கு மொழிப் பிரதேச்ங்களைக் கொண்ட சென்னை ராஜ்யம் தனக்கென சட்டம்ன்றத்தையும் அமைச்சரவையும் பெற்றது. அந்த சட்ட மன்றம் “லெஜிஸ்லேடிவ் கவுன்சில்” என்னும் ஆங்கிலப்பெயரால்அழைக்கப்பட்டது.

அதன் பின்னர்,”1935 என்னும் பெயரிலே பிரிட்டிஷ் பார்லிமெண்டால் தயாரிக்கப்பட்ட அரசியல் சட்டத்தின் வாய்லாக சென்னை – பம்பாய் – வங்காளம் ஆகியபலமான நிலங்களிலே இரண்டு அவைகளை உருவாக்கும் சட்டமானது 1937ல் நடை முறைக்கு வந்தது.

பழைய லெஜிஸ் லேடிவ் கவுன்சிலானது, அந்தப் பெயராலேயே “மேலவை” யாக நீடித்தது.“லெஜிஸ் லேடிவ் அசெம்பிளி” என்னும் பெயரிலே “கீழ் அவை” ஒன்றும் புதிதாகப் பிறந்தது!

 1937ல் தொடங்கி 1986 அக்டோபர் வரை நமது மாநிலத்தில் இரண்டு அவைகள் இயங்கிவந்தன. ஆனால், தமிழக சட்டப் பேரவை 15-05-86ல் நிறைவேற்றிய தீர் மானப்படி, நாடாளு மன்றத்திலே சட்டமியற்றப்பட்டு, 31-10-86ல் தமிழக மேலவை கலைக்கப்பட்டது.
     
1920 ஆம் ஆண்டு வரை அதாவது, தொடர்ந்து 66 ஆண்டுக் காலம் இயங்கி வந்த மேலவையின் தலைவர்களாக இருந்தவர்களின் பெயர்கள்:

பி.இராசகோபாலாச்சாரி 1920—23

எல்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளை1924-25

எம்.ரத்தினசாமி1925-26

சி.வி.எஸ்.நரசிம்மராசு1946-30

பி.ராமச்சந்திர ரெட்டி 1930-37

டாக்டர் யு.ராமராவ் 1937-46

ஆர்.பி.ராமகிருஷ்ணராசு1946-52

டாக்டர் பி.வி.செரியன் 1952-64

 சிந்தனைச் சிற்பி சி பி சிற்றரசு1970-76

ம.பொ.சிவஞானம் 1978-86

இவர்களில் அதிக ஆண்டுகள் தலைமைப் பதவியில் இருந்தவர்கள் டாக்டர் பி.வி.செரியன், டாக்டர் ம.பொ.சிவஞானம் ஆகிய இருவருமாவர்.
துணைத்தலைவராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்து அடுத்து சுமார் 9 ஆண்டு காலம் தலைமைபதவியிலிருந்தார்
ம.பொ.சி.19452 முதல் 1954 வரை மேலவையின் உறுப்பினராகவும் துணைக் கொரடாவாகவும் ம.பொ.சி. இருந்தார். ஆக, கலைக்கப்பட்ட மேலவையுடன் ம.பொ.சி.க்கிருந்த தொடர்பு 17 ஆண்டு காலமாகும்.

மேலவை கலைக்கப்பட்டது குறித்து சென்னை உயர் நீதி மன்றத்தில்
அடியேன் வழக்கு தொடுத்தேன்.உயர் 
நீதி மன்றம் மேலவைஅமையஆணையை வழங்கிது. ஆனால்ஆட்சியாளரால் பாழ் பட்டது 

#மாண்டேகுசெம்ஸ்போர்டு 
#தமிழகமேலவை
#மேலவைவழக்கு

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-06-2017

Justice J. M.Sinha

Jagmohanlal Sinha was an judge, who served in the Allahabad High Court. He is best known for his 12 June 1975 ruling in State of Uttar Pradesh v. Raj Narain case in which he invalidated the election of Prime Minister Indira Gandhi. The political upheavals that had followed his decision resulted in Gandhi declaring Emergency across the country on the grounds of "internal disturbance"...! 

Sunday, June 25, 2017

இன்று வி பி சிங் பிறந்த நாள்

இன்று வி பி சிங் பிறந்த நாள் 

காதலுக்கு கண் இல்லை

காதலுக்கு கண் இல்லை 
கிருபாளினி-சுசேதாகிருபாளினி,
சுரேந்திரமோகன்,
யாசர் அரபாத்- சுஹா தாவித் 
ஜோர்டான் மன்னர்ஹூசேன் -லிசா
----------------------------------
காதலுக்கு கண் இல்லை என்பார்கள் உண்மை தான் ஆனால் கண்மூடித் தன்மையுடன் வந்தால் அது காதலும் இல்லை.  இருமனங்களுக்கு இடையே காதல் வந்தால் அதற்கு அழகு , வசீகரம் என ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அது மட்டுமின்றி ஒற்றை இலட்சியம் , போராட்டக் களத்திலும் காதல் மலர்வது உண்டு. இதற்கு எடுத்துக்காட்டாக திராவிடர்   இயக்கத்தில், கம்யூனிஸ்ட்களில் சில பெயர்களை  சொல்லலாம்.  
 
பாலஸ்தீன விடுதலை இயக்க நிறுவனர்
யாசர் அரபாத் தனது அறுபத்தி ஏழாவது வயதில் சுஹா தாவித் எனும் கிருத்துவ, ஆங்கிலேயே  பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். 

ஜோர்டான் மன்னர்ஹூசேன் , லிசா
எனும் அமெரிக்கன் கிருத்துவ பெண்மணியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். லிசா என்ற  பெயரை நூர் எனவும்
மாற்றிக்கொண்டார் 

சோஷலிஸ்ட் மூத்த தலைவரான சுரேந்திரமோகன் 58 வயதை நெருங்கும் அவரை ஏறத்தாழ 25வயது மதிக்கத்தக்க, மிக அழகான சகோதரி  ஒருவருக்கு  அவர் மீது ஈர்ப்பு எற்பட்டு, அவரைத் துரத்தி காதலித்து கரம் பிடித்தார்.  அவரது மனைவி சுரேந்திரமோகன் அவர்கள் மீது கொண்டது அறிவு சார்ந்த ஈர்ப்பு  அதன் வளர்ச்சி காதல் வடிவமானது. 

இதில் குறிப்பிடத்தக்க காதலர்கள் என்றால் அது ஆச்சார்யா கிருபாளினி - சுசேதா கிருபாளினி தான். ஆச்சார்யா கிருபாளினியின் புத்திக் கூர்மை, அறிவாற்றல் , இலட்சியம் ஆகியவற்றால் ஈர்ப்பு ஏற்பட்டு சுசேதாவை விட முப்பது வயது முதியவரான ஆச்சார்யா கிருபாளினியை காதலித்து பல்வேறு எதிர்ப்புக்களை எதிர்கொண்டு திருமணம் செய்துக் கொண்டார். 

இவர்கள் ஒருவரை ஒருவர் காந்தியடிகளுக்கு தெரியவந்தது. இருவரும் காந்தியடிகளை சந்தித்தனர். சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டிருக்கும் நீங்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்வதாக அறிந்தேனே என்றார்.  ஆம் என கிருபாளினி பதில் அளித்தார். சுதந்திரத்திற்கு முன்னர் திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என உறுதி எடுத்துக் கொண்டது நினைவிருக்கின்றதா என காந்தி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கிருபாளினி சுதந்திரத்திற்கு முன்னர் திருமனம் செய்துக் கொள்வோம் என நாங்கள் சொல்லவில்லையே என்றார். ஆனால் சுதந்திரத்திற்கு முன்னதாகவே 1936ல் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

மேற்காணும் இவர்களது காதல் கொள்கை, புலமை, சிந்தனை, இலட்சியம் என்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்த காரணத்தால் உலகம் இவர்களை விமர்சிக்கவில்லை.

 ஆனால் ஜாக்குலின் கென்னடி பணம், ஆடம்பரம்,  தீவு, சொத்துக்களுக்கு  ஆகியவைகளுக்கு ஆசைப்பட்டு காதல் என்ற போர்வையில் பேராசையின் காரணமாக  ஒனாசிஸை திருமணம் செய்துக் கொண்டர். பின்னர் ஜாக்குலின் கென்னடி புற்றுநோய்க்கு ஆளாகி மரணித்தார். அப்போதும் பரிதாபப்ட்டார்கள்ன் தவிர காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இளைய கென்னடி மற்றும் மகளுடன் இறுதிகாலத்தை கழித்து இருக்கலாமே , இன்னொரு திருமணம் தேவையா என  உலகத்தாரால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

#அறிவுப்பூர்வமானகாதல்
#ஆச்சார்யாகிருபாளினி
#சுசேதாகிருபாளினி
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-06-2017

இந்தியாவின் பெண் முதல்(வி)வர் சுசேதா கிருபாளினி

இந்தியாவின் பெண்  முதல்(வி)வர் சுசேதா கிருபாளினி.

25 சூன் 1908 ஆண்டு அம்பாலா, ஹரியானாவில் பிறந்தவர். இவரது தந்தையான எஸ். என். மஜீம்தார் மருத்துவரும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும் ஆவார். தன்னை விட முப்பது வயது மூத்தவரான கிருபாளினி அவர்கள்  மீது காதல்  கொண்டு பல எதிர்ப்புகளை எதிர்கொண்டு திருமணம் செய்துக் கொண்டவர். இவரது அரசியல் பணிகள், போராட்டங்கள் மட்டுமல்லாது ஆச்சார்யா கிருபாளினி அவர்களின் பணியும் , நற்பெயரும் இணைந்து இவரை உ.பியின் முதல்வர் பதவியில் அமர வைத்தது. இவரை எனது வாழ்நாளில் இரண்டு முறை சந்தித்து இருக்கின்றேன். கிருபாளினி மகளிர் இடஒதுக்கீடு தேவை ஆனாலும் பெண்கள் ஒவ்வொருத் துறையிலும்  போட்டித்தன்மையுடன் பங்கு பெறவேண்டும் என வலியுறுத்துவார். தமிழகத்தின் தற்காப்பு கலையான சிலம்பாட்டத்தை முறைப்படி கற்றுக் கொண்டவர். காந்தியுடன் அனுக்கமான முறையில் போராட்டங்களில் கலந்துக் கொண்டாலும் தவறான முடிவுகளை இவரும், ஜோசப் குமரப்பாவும் எதிர்த்தனர். 
 
சுசேதா கிருபாளினி குறித்து தி இந்து பத்திரிக்கையில் வந்துள்ள கட்டுரை 
( எனது கட்டுரை அல்ல). 

இந்திய மாநிலங்களில் முதல்வராகப் பொறுப்பேற்ற முதல் பெண் சுசேதா கிருபளானி... சுதந்திரப் போராட்ட வீராங்கனையும் கூட! சுசேதா, 1908ல் ஹரியானாவில் உள்ள அம்பாலாவில் பிறந்தார். இந்திரபிரசாத், செயின்ட் ஸ்டீபன் கல்லூரிகளில் படிப்பை முடித்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்தார். ஆச்சார்யா கிருபளானியுடன் சுசேதாவுக்குத் திருமணம் நடைபெற்றது. இருவரும் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தனர். 

‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் தீவிரமாகிக் கொண்டிருந்தபோது, காந்தியுடன் செயல்பட்டார் சுசேதா. கஸ்தூரிபாய் காந்தியின் நினைவு அறக்கட்டளைக்கு அமைப்புச் செயலாளராக சுசேதாவை நியமித்தார் காந்தி. அந்த அமைப்பின் செயலாளர் தக்கர் பாபாவுடன் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் சுசேதா. 1946ல், பாகிஸ்தான் பிரிவினையின் போது, காந்தி நவகாளி யாத்திரை மேற்கொண்டார். அப்போது அந்த யாத்திரை முழுவதும் காந்தியுடன் பங்கேற்றார் சுசேதா. 

1947 ஆகஸ்ட் 15... இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று, ‘வந்தே மாதரம்’ பாடலை அரசியலமைப்பு அவையில் பாடினார் சுசேதா. 1952ல் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சுசேதா. 1963ம் ஆண்டு டெல்லி அரசியலில் இருந்து விலகி, உத்தரப்பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றார். ‘இந்திய மாநிலங்களில் முதல்வராகப் பொறுப்பேற்ற முதல் பெண்’ என்ற பெருமை சுசேதாவுக்குக் கிடைத்தது. அவர் ஆட்சியில் இருந்த போது, மிகப்பெரிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதைத் திறமையாகக் கையாண்டு, மீண்டும் வேலையை ஆரம்பிக்க வைத்தார் சுசேதா.

பின்னர், சுசேதாவும் ஆச்சார்யா கிருபளானி யும் தீவிர அரசியலில் இருந்து விலகி, ஓய்வெடுத்துக்கொண்டனர். வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு, அவ்வப்போது தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை கட்டுரைகளாக எழுதி, பத்திரிகைகளில் வெளியிட்டார் சுசேதா. தன்னுடைய சேமிப்பையும் சொத்தையும் ‘லோக் கல்யாண் சமிதி’க்கு வழங்கி விட்டார். அது ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்து வரும் நிறுவனம்.1974 டிசம்பர் 1... சுசேதா உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். புத்திசாலித்தனமாகவும் கடினமாகவும் வேலை செய்யக்கூடிய சுசேதா, மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அவரைப் போன்ற எளிமையான முதல்வரை இனி பார்க்க முடியுமா? 

#சுவேதாகிருபாளினி 
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
25-06-2017

இந்திரா காந்தி- நெருக்கடி நிலை

இன்று, ஜூன் 25 இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்த கருப்பு நாள். 
இது தொடர்பாக இன்று   New Indian Expressல் பிரசந்த் பூஷன் பேட்டி,சூரிய பிரகாஷ் பத்தி,வெங்கையா நாயுடு நினைவுகள் வெளி ஆகியுள்ளது.படிக்க வேண்டிய வரலாறு ......

1974 :: Jayaprakash Narayan Addressing Anti Government  Rally .

#KSRadhakrishnanPostings
#KSRPostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
24-06-2017

Saturday, June 24, 2017

ஐ.நா மனித உரிமைக் கழகம் -.சிறிலங்கா நம்பகத்தன்மை

ஜெனீவா ஐ.நா மனித உரிமைக் கழக 35ஆவது அமர்வு.சிறிலங்கா நம்பகத்தன்மையை மீண்டும் இழக்கத் தொடங்கி விட்டது - பல நாடுகள் அதிருப்தி
-------------------------------------
 
ஜெனீவா ஐ.நா மனித உரிமைக் கழக 35ஆவது அமர்வு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. தமிழ் மக்கள் தமது நேரடி வாழ்வியல் அனுபவங்களினூடாக சிறிலங்கா எவ்வாறு நடந்து கொள்ளும் என்று திரும்பத் திரும்ப உலக நாடுகளிற்கு வலியுறுத்தி வந்ததனை பல நாடுகள் ஏற்றுக் கொள்ளும் நிலைமை இன்று உருவாகி வருகின்றது.
 
2015 அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்திலுள்ள 25 அம்சங்களில் எதனையுமே சிறிலங்கா அரசு முழுமையாக நிறைவேற்றப் போவதில்லை; அதனை சர்வதேசத்திற்கு பல்வேறு வழிகளில் நிரூபித்துக் காட்டுவோம் என்று பிரித்தானிய தமிழர் பேரவை அன்று கூறியது இன்று நிதர்சனமாகி வருகின்றது.

 மேற்படி தீர்மானத்தின் அமுலாக்கும் காலத்தினை 2 வருடங்களினால் நீடிக்க சர்வதேச நாடுகள் 2017 மார்ச்சில் மேலுமொரு தீர்மானத்தினை கொண்டு வந்த போதிலும், தற்போது சிறிலங்கா மீதான அதிருப்தி வெளிப்படையாகவளர்ந்து வருவதனை கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை அறிய வருகின்றது.

 தீர்மானத்தின் இணை அனுசரணையாளர்களாக (Co sponsor) பொறுப்பேற்று கையொப்பமிட்ட முக்கியமானபல நாடுகளை இக் கூட்டத் தொடரில் சந்தித்த பிரித்தானிய தமிழர் பேரவை மேற்படி தீர்மானத்தின் அமுலாக்களில்உள்ள விடயங்களை சுட்டிக் காட்டி கலந்துரையாடியது. ஆதாரபூர்வமான உண்மைகள் மூலம் நாம் எடுத்துரைத்த சிறிலங்காவின் இழுத்தடிப்புகளை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதனை இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.

மனித உரிமை கழக ஆணையாளர் அலுவலம் (OHCHR) மற்றும் பிரித்தானியா (U.K.), அமெரிக்கா (USA), கனடா (Canada), இந்தியா (India), சீனா (China), பிரான்ஸ் (France), சுவீடன் (Sweden), தென்னாபிரிக்கா (South Africa), எத்தியோப்பியா(Ethiopia), மெக்ஸிகோ (Mexico), நியூஸிலாந்து (New Zealand), ஜேர்மனி (Germany), ஆர்ஜென்டினா (Argentina), சுவிற்சர்லாந்து (Switzerland), அயர்லாந்து (Ireland), கானா (Ghana), நோர்வே (Norway), நெதர்லாந்து (Netherlands), அல்பேனியா (Albania),  ஸ்லோவேனியா (Slovenia) உள்ளிட்ட பல நாடுகளையும் பல சர்வதேச நிறுவனங்களையும் இக்கூட்டத் தொடரில் சந்தித்து உரையாடப்பட்டது.

 இச் சந்திப்புகளில் கைது செய்து காணாமல் போனோரின் உறவுகளின் திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா நகரங்களில் நீடிக்கும் போராட்டம், கேப்பாபிலவு, இரணைதீவு, முள்ளிக்குளம் உள்ளிட்ட நில மீட்புக்கான தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள், முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு தொடர்பாக Fr எழில் கைது செய்யப்பட்டமை, மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் அழுத்தங்கள், பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படாமை, அரசியல் கைதிகளின் விடுதலை, பிடித்து காணாமல் போகச் செய்யப்பட்டோரின் பெயர்ப் பட்டியல் வெளிவிடாமை உள்ளிட்ட பல விடயங்கள் எம் தரப்பால் முன்வைக்கப்பட்டது.

 இக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் சிறிலங்கா பற்றிய விடயம் எதுவும் இல்லாதபோதும் வழமை போன்று பிரித்தானியா தனது அழுத்தந் திருத்தமான தெரிந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளின் மூலம் "கால வரையறையுடன்கூடிய விரிவான ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஐ.நா தீர்மானத்தினை (34/1) நிறைவேற்ற வேண்டும், அது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தினை செயல்பட வைக்க வேண்டும்" என்ற கோரிக்கைகளை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

 2017 மார்ச் கூட்டத் தொடரில் எமது பலமான ஆட்சேபனைக்குப்  பின்னரும் 2 வருட கால நீடிப்பினை சர்வதேச நாடுகள் சிறிலங்காவிற்கு வழங்கிடத் தீர்மானித்திருந்தது. கால நீடிப்பு வழங்கினாலும் சிறிலங்கா அரசு தீர்மானத்தினை அமுல்படுத்தாமல் இழுத்தடிக்கும் என்று நாம் எடுத்துரைத்திருந்தோம். எனவே "கால வரையறையுடன் கூடிய விரிவான ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஐ நா தீர்மானத்தினை நிறைவேற்ற வேண்டும்" என்ற விடயத்தையாவது உள்ளடக்குமாறு  பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), CTC, USTPAC என்பன இணைந்து முன்வைத்து பல நாடுகளையும் ஏற்றுக் கொள்ள வைத்தமை இங்கு குறிப்பிடப்பட வேண்டும்

 இத் தருணத்தில் தமிழர் தரப்பு என்ன செய்யப் போகின்றது? பிரித்தானியாவின் முன்மாதிரியை பின்பற்றி  தமிழர் வாழும் ஏனைய நாடுகளிலும் சிறிலங்காவிற்கெதிரான அழுத்தங்களை பிரயோகிக்க வைக்க வேண்டும். மாறி வரும்சூழ்நிலையை எமக்குச் சாதகமாகத் திருப்ப செயல்சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் பிரித்தானியாவிலும் ஏனைய நாடுகளிலும்  எல்லா தமிழ் தேசிய அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் ஒற்றுமையாகமுன்னெடுக்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கின்றது.
 
விவசாயகள்-கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

கடந்த இரு நாட்களாக மூன்று விவசாய சங்க பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார்கள். பிரச்சனை என்பது அனைத்து சங்கத்திற்கும் பொதுவானதாகவே உள்ளது. கோரிக்கைகளும் பொதுவானதாக உள்ளது. ஆனால் பல குழுக்களாக பிரிந்துக் கிடக்கின்றார்கள். 1970  முதல் 1980 வரை விவசாய சங்க தலைவர் நாராயணசாமி அவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டவன் , என்னுடைய கிராமத்தில் அரசாங்கம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 உயிர்பலிகளை கண்முன் கண்டவன் என்கிற முறையில்   இவர்கள் பிரிந்து கிடப்பது மிகுந்த  வேதனை அளித்தது. ஈழப் போராளிகள் பல குழுக்களாக பிரிந்து பேரழிவை சந்தித்த வரலாறை கண்முன்  கண்ட  போதும் இவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.  வேற்றுமையில் ஒற்றுமைக் கண்டு இணைவது அவசியம் என உணர வேண்டாமா? நமக்குள் ஒற்றுமை இல்லையெனில் பிரித்தாளும் அரசாங்கம் பிரிவுகளை   பயன்படுத்திக்  கொள்ளாத ? நமக்குள் ஒற்றைமை இல்லாமல் உரிமையை எப்படி பெற போகின்றோம்? 
 
பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங்
கொல் குறும்பு மில்லது நாடு //  என்கின்றது வள்ளுவம்.

#விவசாயசங்கம்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
24-06-2017

மலரும் நினைவுகள்

democracy

Behind the signboard of democracy stands the brutal dictatorship of the biggest monopolies.

#democracy
#KSRadhakrishnanpostings
#ksrpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-06-2017

Friday, June 23, 2017

1453: The Fall of Constantinople and the end of the Roman Empire

The Roman Empire didn’t end with the 476 depositions of the Western Emperor Romulus or the Fall of Rome. It continued with solid momentum in the east with the powerful Byzantine Empire. Though we know it as the Byzantine Empire, to them it was unequivocally still Roman.

Even when Latin gave way to Greek, the Byzantines still considered themselves Roman. In the early medieval period, the Byzantines reclaimed control of many of the fallen territories, notably the Italian peninsula. They fought various emerging powers and faced several attempts to take their triple walled capital city. The only time it had been taken was through internal strife and treachery coinciding with the Fourth Crusade. The walls of the great city had never been breached by a foreign foe.
Though the Empire again held Constantinople after recovering it from the Fourth Crusade, it was far from the power it had been in the early medieval period. At the time of Michael VIII’s reclamation of Constantinople, the Byzantine territories were confined to Thrace and northern Greece and a part of Western Turkey. The Turks had taken territory in Asia Minor up to the territory of Nicomedia in the north and near to the island of Rhodes in the south.

A more sophisticated threat by this time, the Bulgarian Empire, and the Serbian Empires fought against the Byzantines as well. The city itself was greatly weakened by the Black Death and a large earthquake as well as civil wars that divided the populace. Under the Palaiologoi dynasty established after the reclamation of Constantinople, the empire became a shadow of its former self while a new eastern power set its sights on the great city.
Overlooking the city as it would have looked before the siege. The Golden Horn was protected by a large chain that stretched across the mouth.
The Ottoman Turks came to power with the downfall of the Seljuk Turks. Starting from a small state in Turkey, the Ottomans came to dominate the other states in the area and began to grow. By the 15th century, the Ottomans had claimed all of the Byzantine territories in Turkey with the exception of a narrow territory of the Empire of Trebizond, an allied successor state.
Before the siege the Byzantines had only a small area around Constantinople and parts of Greece, the Ottomans had much more and were still a growing power. Image Credit.
The Turks had also crossed the Bosporus and taken all of the Thracian territory west of Constantinople leaving control over a few square miles west of the city to the Byzantines. Even the great Byzantine city of Thessaloniki, which had once been considered the new capital by Constantine, was taken by the Ottomans by 1430. The Byzantines had resorted to paying tribute to the Ottomans and at times acted as an extension of the Ottomans.

The Emperors of Constantinople recognized the Ottoman threat and often attempted to manipulate the affairs of the Ottomans by inciting rebellions and backing powerful claimants to the Ottoman throne. At times they were successful, but other times their meddling efforts failed, and they were attacked in response. In 1422, the Ottomans under Murad II set out to sack the city. The Byzantines were well prepared for the siege and had been adopting new cannons into their defenses.
The Ottomans brought their own cannons, but these were still early cannons that proved ineffective against the strong Theodosian walls. The Ottomans were eventually forced to withdraw as they found no way to gain access to the city and the Byzantine leaders were able to successfully incite a rebellion within Ottoman territory.
Siege of Constantinople from Bibliothèque Nationale manuscript Français 9087 (folio 207 v). The Turkish army of Mehmet II attacks Constantinople in 1453.
The Byzantine empire was in tatters, and the population continued to shrink, but the last remnants of the Romans stumbled on. In 1448, the last Roman/Byzantine Emperor, Constantine XI, ascended to the throne. He resolved to stand up to the Ottomans, and when a young and ambitious Mehmet II took the Ottoman throne in 1451, the two leaders would fight with everything they possessed.
Mehmet II had a grand strategic vision that was dependent on securing Constantinople for use as a new imperial capital. Mehmet was twenty-one when he ascended the throne and had spent his life learning how to rule. His approach for the capture of the city was similar to the previous Arab attempts; he secured and fortified areas around Constantinople to cut supplies to the city. The twin fortresses of Rumelihisari and Anadoluhisarı were completed on either side of the Bosporus just miles north of Constantinople.
Mehmet started his campaign by building his army up near Adrianople. He employed the services of a talented cannon designer known as Orban, who spent months designing and casting some of the largest cannons in the world at the time. Mehmet II spent the time waiting for the cannons by incessantly planning out ways to actually take the city. Mehmet II was truly prepared to take the city and arrived at the gates with an estimated 80-100,000 infantry, 90 ships and 70 cannons of varying calibers.
Though this specific cannon was made a decade later, those in use against Constantinople were similar in size.
The Byzantines under Constantine and the previous emperor John VIII had the experience of the first siege and were well aware that an attack would come again. The city’s defenses were extensively repaired. Some foreign reinforcements had come, and the greatest of them were the Genoans led by Giovanni Giustiniani, who arrived just days before the siege with 700 men and several ships.

The total number of men defending the city numbered around 8-10,000 including a large combination of European allies who had finally realized that they would much rather have the Byzantines at their borders than the Turks. Constantine XI also ensured that the walls were in pristine condition and raised the chain across the golden horn. In the early days of April, Mehmet arranged his forces around the city, and by the seventh of April 1453, the full-scale siege of the city began.
The Theodosian Walls in Constantinople. Upper and lower room inside a tower.
The defenders were outnumbered as much as ten to one and even the Sultan’s most elite troops, the Janissaries, numbered as much as the defenders on their own. In contrast to the previous Ottoman siege, it was now the Byzantines who had inferior cannons as Mehmet had been quite motivated to accrue a collection of the most cutting-edge gunpowder technology while the vast majority of the Byzantine cannons had been around since the first Ottoman siege.
The Ottomans set up their cannons across from the very middle of the Theodosian walls located along the westernmost hill. A few days into the siege the cannons were able to destroy the tower of St. Romanos along the main wall. Constantine was shaken enough by this to seek peace with Mehmet in exchange for vast tribute payments to the Sultan. Mehmet offered to let Constantine leave the city and rule the Peloponnese of Greece while Mehmet would peacefully occupy the city. Constantine adamantly refused to leave the city, and the two sides resolved to fight to the end.
The Turkish navy attempted to fight their way into the Golden Horn. However, they were thwarted by the great chain, and the Byzantines were able to destroy a large portion of the Navy with cannon fire from the ships in the harbor and the sea walls along the Horn. The Turks were able to pay back the Byzantine navy however when Mehmet ordered his men to transport several of his ships overland from the Bosporus to the Golden Horn to bypass the chain.
When fire ships were sent to counterattack these ships they were sunk by the Ottoman cannons that Mehmet had taken to repositioning almost daily. Mehmet focused much of the cannon power on the neighborhood of Blachernae and the Palace of the Porphyrogenitus, which was located at the juncture of the Theodosian and Blachernae walls. The Palace was the imperial residence of the last line of emperors, and Constantine XI remained there for the duration of the siege despite the palace being constantly bombarded and assaulted. The Turks launched several assaults at the juncture of the walls near the palace but were repulsed with heavy casualties each time.
Though the cannons of the Turks were superior at the time, the Byzantines still were able to cause significant casualties with their cannons. When a breach was opened in the walls and the Turkish infantry rushed through the defenders aimed into the masses and fired their cannons, which were packed with multiple shots each the size of a walnut.
This primitive shotgun devastated each wave of Turkish attacks and forced Mehmet to devise other methods of attack. Though several breaches were opened in the walls, they proved ineffective as the walls were quickly repaired with barrels of earth which actually absorbed the cannons better than the walls did. Even if the enemy attacked before repairs could be made the gap between the inner and outer wall forced any attackers to be flanked on three sides while still being subjected to missile fire from the main wall.
Constantine XI Palaiologos, the ruler of the Byzantine Empire.
Several tunnels were attempted in the latter half of the siege. However, they were all discovered by the defenders and the Turkish miners often met disastrous fates. Mehmet finally planned an all-out attack after nearly two months of constant bombardment. On the 27th of May 1453, Mehmet arranged his forces to threaten every side of the city. His ships sported scaling ladders while the land force carried ladders of their own.
The exhausted defenders were forced to spread their army across more than twelve miles of walls. Mehmet did send his ships to attack the walls along with the land infantry, but the ships were easily repulsed. The land assault was where the Ottomans finally won the day, however. Tens of thousands of soldiers rushed the walls with scaling ladders.

Initially, the defenders were able to hold the Ottomans at bay under the superb leadership of the Venetian Giovanni Giustiniani, who had been placed in charge of the defense of the Theodosian walls since his arrival. During the assault, however, he was struck by a shot that pierced his arm and chest, and he was carried through the gates and back to the Venetian ships in the harbor. When the defenders saw their leader fall, their morale dropped and the last wave of Ottomans, the Janissaries, were able to overcome the defenders and scale the walls.
The city was looted for three days although fortunately did not endure the same level of death and destruction that was inflicted by the fourth crusade. Though it cost him dearly in both men and money, Mehmet was able to have his dream realized and after establishing Constantinople/Istanbul as the capital, the Ottoman Empire flourished for hundreds of years.

Painting of the Victorious Sultan entering his new capital.
The defenses of Constantinople were among the most impressive in the world. Perhaps the most impressive feature of the defenses was the fact that the Theodosian walls did not fall until nearly 1,000 years after their initial construction and the invention of the cannon. They allowed the empire to survive despite consistently facing tremendous odds, even with the ultimate fall of the city, the defenders were able to inflict horrendous losses to the Ottoman attackers and it took a massive army armed with advanced weaponry over a month to take the city that had spent the last century in a state of decay.
The walls were an inspiration for early European kingdoms and when they finally fell they served as a lesson for all subsequent city defenses. The city had long protected Christian Europe from Muslim expansion and its fall ultimately left Europe vulnerable to attack from one of history’s greatest Muslim powers.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
23-06-2017

கணேச மூர்த்திகள் ….. பெண்கள் பொது வெளியில் தேவையற்று சிரிக்க கூடாது .ஆண்கள் பொது வெளியில் அழக்கூடாது.

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்!    பெண்கள் பொது வெளியில்  தேவையற்று சிரிக்க கூடாது .ஆண்கள் பொது வெளியில...