Wednesday, January 31, 2024

#*தோழமை தேர்தல்தொகுதிப் பங்கீடுகளை*….

#*தோழமை தேர்தல்தொகுதிப்
பங்கீடுகளை*…. 
————————————
1979-1980 காலங்களில் எம்ஜிஆர்  கால தோழமை தேர்தல் தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் போது  அதன் தேர்ந்தெடுப்பு குழு சார்ந்து நான் பின் 2001 வரை வருடங்களில் அதில் கலந்து இருக்கிறேன்.

பெண் பார்க்க செல்லும் போது வழங்குவதை போல நல்ல காஃபியும் வடையும் கொடுப்பார்கள் தோழமை கட்சிகளுக்கு…. இது சம்பிரதாயம், சடங்கு.. முன்பு வடைக்கு பதில் பிஸ்கட்..இப்போது வடை…

தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சியில் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் காஃபியை நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.. 

மாட்டுத் தாவணியில். துண்டில் கைகளை மறைத்து கைவிரல்களை கொண்டு பேரம் பேசும் காட்சிகள் நினைவுக்கு வருகின்றது.
 
(மாட்டு மாட்டுத் தாவளம் - என்ற  சொல்லே மருவி 'மாட்டுத் தாவணி' - 
(தாவளம் > தாவளி > தாவணி.)

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
31-1-2024.

Tuesday, January 30, 2024

#* நடிகை ஸ்ரீவித்யா வாழ்க்கையே தனிமைதான்*! - Tragic Life Of *Srividhya*

#* நடிகை ஸ்ரீவித்யா வாழ்க்கையே தனிமைதான்*! - 
Tragic Life Of *Srividhya* - Reveals Political Activist & Advocate K.S. Radhakrishnan 

https://youtu.be/GEOzlI-nwBU?si=ScgXvHYZSLzKXei_

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
30-1-2024.

Monday, January 29, 2024

India’s Finance Ministers : Stumbling into Reforms (1977 to 1998)

*India’s Finance Ministers : Stumbling into Reforms (1977 to 1998) by A.K. Bhattacharya*
————————————
India’s Finance Ministers: Stumbling into Reforms (From 1977 to 1998) is the second volume in the series of books on some of India’s unforgettable finance ministers. Analysing the role of India's finance ministers who managed India’s economy during one of its worst phases (post Emergency to the late 1990s), the book highlights the lasting impact they left on India's political economy. This volume also provides a fascinating account of India's economic history offering an incisive view of the key events in India's journey from an closed, agrarian economy to a liberal economy.

Critically examining the decision making of the finance ministers , the book provides interesting insights into the relations between them and their prime ministers and to what extent these relations influenced their decisions.

Full of exciting stories, this is the ultimate work on the critical role finance minister plays in the functioning of an economy.

#penguinindia

#ksrpost
29-1-2024.


Sunday, January 28, 2024

காட்சிகள் மாறும் நாடகம் போலே காலமும் மாறாதோ காலமும் மாறாதோ காலங்களாளே வாழ்க்கை செல்லும் பாதையும் மாறாதோ...


காட்சிகள் மாறும் நாடகம் போலே காலமும் மாறாதோ காலமும் மாறாதோ காலங்களாளே வாழ்க்கை செல்லும் பாதையும் மாறாதோ...


#*காங்கிரஸ் இந்திகூட்டணி தொலைநோக்கில் இல்லை*. *காங்கிரஸ் இரட்டை காளை, 1969 பின் பசுவும் கன்றும் என மாறி 1979 இல் கை சின்னமாகிவிட்டது*.



————————————
இந்தி கூட்டணியில் இருந்து நிதீஷ்குமாரும் அவுட் ஆகி வெளியேறிவிட்டார்...

இந்தி கூட்டணியை முதலில் ஆரம்பித்த ஒருங்கிணைப்பாளர்  அவர்தான்....

இந்தி கூட்டணி தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பெரியளவில் வாக்குகளை பெற்றுத்தரபோவதுமில்லை,பெரிய அதிர்வை ஏற்ப்படுத்தப்போவதும் இல்லை என்றாலும் நித்திஷ்குமாரின் வெளியேற்றம் நிச்சயம் அந்த கூட்டணிக்கு பின்னடைவுதான்... மம்தா வேறு காங்கிரஸ் எங்களுக்கு சரிபடாது என சொல்லி விட்டார். பாவார் ஒன்றும் சொல்ல முடியாமல் உள்ளார்.







இந்த கூட்டணியில் உள்ள கடசிகள்  காங்கிரசை அல்லது அதன் இன்றைய தலைமையை எதிர்த்து உருவானவை.சரத்பவாரின் (என்சிபி), மம்தாவின் (டி.எம்சி) ஆகியவை காங்கிரஸ் தலைமையை எதிர்த்துக் காங்கிரசில் இருந்தவர்கள் வெளியேறி உருவாக்கியவை. ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட் ரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட்கள், திமுக, சிவசேனா, so called Socilists லாலு, பஸ்வான,நிட்டிஷ், முலாயமின் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் காங்கிரஸை எதிர்த்துத் தோன்றியவை. காங்கிரசையும் கம்யூனிஸ்ட்களையும் ஆம் ஆத்மியையும் தவிர மற்றக் கட்சிகள் பாஜகவோடு இருந்தவை. சிபிஎம் -காங்கிரஸ் கூட்டு பிழை பட்டவை என தெரிந்த விடையம்.சமரசங்கள் செய்து வெற்றி பெறும் கூட்டணியில் தங்கள் சுய நலனை (பதவி - சம்பாத்தியம்) மனதில் கொண்டு மாநில நலன் என உதட்டு அளவில் உதடு கோடு புன்னகையில் பட்டும் படாமல் சொல்வார்கள். பேரம் பேசும் வலிமை தாங்கள் பெறும் எம்பிக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே இருக்கும் என இவர்கள் தெரிந்து கொண்டு, காங்கிரஸ் சீட்டுகளை வழங்கயுள்ளனர்.

ஒரே ஒரு சௌகர்யம்..இனி திமுக ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது மட்டும்தான்.

பிகார், டில்லி, இரண்டும் 2025ல் . தமிழ்நாடு மேற்கு வங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி 2026ல் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கின்றன.காங்கிரஸை தலைமையாக கொண்ட கூட்டணி  தெளிவான வலிமையாக பேருக்குதான் இருக்க முடியும்.

ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த உத்தர பிரதேசத்தில் இன்றைய காங்கிரசின் நிலைமை குறித்து ஒரு மீள்பார்வையைச் செய்ய வேண்டி இருக்கிறது .மோதிலால் நேரு காலம் தொட்டு ஜவஹர்லால் நேரு, பந்த் , கிருபாளனி,குப்தா காலம் வரை தொடர்ந்து இந்திரா காந்தி கமால பதி திரிபாதி, எச். என். பகுஹனா பலர் வரைக்கும் ஒரு ஒரு குடும்ப அழகியலிலின் செவ்வியிலாக  அதுவே சுதந்திரத்திற்கு பிறகான மக்களின் நம்பிக்கைக் உரிய அரசு அதிகாரத்தின் முன்னெடுப்பாக இந்த மாபெரும் மாநிலம் ஆன உத்திரபிரதேசம் தொடர்ந்து இயங்கி காங்கிரசின் அதிகார நலம் சார்ந்த கோட்டையாக இருந்ததை யாரும் மறந்து விட முடியாது.பின் சரன்சிங் இதை மாற்றினார்.

தீர்மானமாகச் சொன்னால் இந்திய அரசியலில் உத்தரப்பிரதேசத் தேர்தல் வெற்றி தான் ஒட்டுமொத்த காங்கிரசின் பரிமாணத்திற்கு அதன் வளர்ச்சிக்கு அடிப்படையாக வரலாற்றில் இருந்தது என்பதை என் ஞாபகத்தில் கொண்டுள்ளேன்.

ஏறக்குறைய 90 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் மிகப் பரந்த மாநிலம் அது. நாடாளுமன்றத்தின் வெற்றி வாய்ப்பில் ஏறக்குறைய 30 சதவீதம்.

அந்த வகையில் கடந்த கால முழுக்க நேரு குடும்பத்தின் மீதான அபிமானத்தின் வழியே எப்போதும் காங்கிரஸ்தான் அங்கு நிலையான ஒரு அரசியல் கட்சியாக இருந்தது.

ஆனால்  இன்றைய நிலைமையில்
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் துணையோடு தங்களுக்கு 11 இடம் கொடுத்தால் போதும் என்கிற நிலையில்  காங்கிரஸ்.

ஒரு அரசியல் விமர்சகர் என்கிற முறையில் எனது கவலைக்குரிய விஷயங்களில் ஒன்று இது.

காலங்களும் காட்சிகளும் மாறி வருகிற காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் எப்படி தேய்ந்து கட்டெறும்பாகிப் போனது .என்பது குறித்து யோசிக்கும் போது புரண்டு படுக்கும் வரலாற்றை நினைத்து கடந்த காலத்தை அசைபோடுவதன் அவசியத்தை உணர்கிறேன்.

தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகள் எத்தனை முறை ஆட்சியை பிடித்தாலும் மக்களுக்கு காங்கிரஸ் மீது ஒரு ரகசியமான காதல் 2009 வரை இருந்தது.அது ஈழத்தமிழர் விவகாரத்தில்சிதைந்து போய்விட்டது என்பது எனது வருத்தத்துக்குரிய விஷயங்களில் ஒன்று.

ஆக,

இந்தி கூட்டணியில் இன்றைய நிலை.

1.மேற்கு வங்காளத்துல மம்தாதனித்து போட்டி.

2. பஞ்சாப், டில்லில கேஜரிவால் தனித்து போட்டி.

3.கேரளத்துல சிபிஎம் விஜயன் எதிர்த்து போட்டி.

4. உ.பில் பெகன் ஜி, அகிலேஷ் ஓரமா போட்டி. 

5. பாண்டிச்சேரில   ‘கோவில் செல்லா அகில இந்திய சனதான எதிரி ‘ திமுக  சுயேட்சியா போட்டியா⁉️

அடுத்தாப்புல, நிதிஷ்குமாரும் கணக்கை முடித்துவிட்டார். லாலு மற்றும் காஷ்மீர் குடும்பங்கள் வகையறா,கோபாலபுரம் குடும்பம்  என்ன செய்ய போகிறதோ, பார்ப்போம்.⁉️

காங்கிரஸ் இரட்டை காளை, 1969 பின் பசுவும் கன்றும் என மாறி 1979 இல் கை சின்னமாகிவிட்டது.

#CongressParty
#காங்கிரஸ்

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

முல்லை பெரியாறு ,கண்ணகி கோவில் சிக்கல் என பல…. மதுரை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேளுங்கள்

#*முல்லை பெரியாறு ,கண்ணகி கோவில் சிக்கல் என பல…. மதுரை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேளுங்கள்*,  உச்சநீதி மன்றம் தீர்ப்பு படி முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்க வேண்டும் . முல்லை பெரியாறு அணைக்கட்டின் நீர்ப்பிடிப்பு பகுதி தமிழகத்திற்கு வேண்டும் . கண்ணகி கோவில் சிக்கலை குறித்து  மதுரை மக்கள்  உங்கள் எம்பியிடம் கேளுங்கள். அங்கு ( மதுரை, தேனி)
உள்ள மக்கள் ஏன் இதை கேட்பதில்லை . கேரளாவில் சிபிஎம் ஆட்சி. அவரின் கட்சி …
அவர் எளிதாக தீர்க்கலாம்…
இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் 30 ஆண்டிகளுக்கு முன் வழக்கு தொடர்ந்தவன். அந்த தகுதியில் இதை இங்கு சொல்கிறேன்..

#முல்லைபெரியாறு 
#கண்ணகிகோவில்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
28-1-2024.

#எனதுசுவடு பகுதி 51 #தமிழ்நாட்டில் இரு காங்கிரஸ் இணைந்த வரலாறு -

#எனதுசுவடு பகுதி 51

#தமிழ்நாட்டில்இருகாங்கிரஸ்
இணைந்த வரலாறு -

கே. எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார். 
#ksradhakrishnan , #indiragandhi, #Stalin, #politics, #kamarajar,  #mgr, #kamarajar #kalaignar #karunanidhi #kamarajar #kaamarajhistoryintamil #kamarajaruntoldstory #kamarajarmovie #nedumaran ##KSRVOICE
#கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்ராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்வாய்ஸ் #கேஎஸ்ஆர்,#கேஎஸ்ஆர்போஸ்ட்,#கேஎஸ்ராதாகிருஷ்ணன்,#கேஎஸ்ஆர்வாய்ஸ்,#ksr,#ksrvoice,#ksrpost,#ksradhakrishnan,#yenadhusuvadu,#kamarajar,#kingmaker,#congress,#DMK,#kumarasamyraja,#indiragandhi,#kannadasan, #nsvchithan, #ponmuthuramalaingam, #cpm, #mgr,#asokamehta, #kamarajarindraghandhi https://youtu.be/AEPJzKNnGOM?si=VW54-HNdEbeHx_iR

#எனதுசுவடு
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்ராதாகிருஷ்ணன்
#ksrpost
28-1-2024.

Saturday, January 27, 2024

#எனதுசுவடு பகுதி 50 - கேஎஸ்ஆர்- KSR

#எனதுசுவடு பகுதி50
நல்ல அனுபவம் கிடைக்கும் போது பரவசபட வேண்டும். மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவப்பட வேண்டும்.

வாழ்க்கை ஒரு யாத்திரை. அதில் ஒரு பயணியே இருமுறை வாழ்கிறான். 

#ksradhakrishnan, #indiragandhi, #Stalin, #politics, #kamarajar,  #mgr, #kamarajar #kalaignar #karunanidhi #kamarajar #kaamarajhistoryintamil #kamarajaruntoldstory #kamarajarmovie #nedumaran #KSRVOICE
#கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்ராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்வாய்ஸ் 

https://youtu.be/RZ_ZKdGY2Vo?si=EY8whR1ZXDhSlhFY

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
27-1-2024

*நல்ல அனுபவம் கிடைக்கும் போது பரவசபட வேண்டும். மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவப்பட வேண்டும்*.

*Life is mixture of pleasures and sufferings* .
*Life is straightforward and unstopable* .
*Life is inside us*.
*Life is what you can achieve and what you can't* .



*வாழ்க்கை ஒரு யாத்திரை. அதில் ஒரு பயணியே இருமுறை வாழ்கிறான்*. 


#ksrpost
27-1-2024.
(Photo-1998)

#*இந்தியாவின்இரண்டாவது தலைநகரமாக சென்னைஅறிவித்தால்… டெல்லிக்கும் சண்டிகருக்கும் நடக்கக்கூடிய பிரச்சனைகள்தான்*

#*இந்தியாவின்இரண்டாவது தலைநகரமாக சென்னைஅறிவித்தால்…
டெல்லிக்கும் சண்டிகருக்கும் நடக்கக்கூடிய பிரச்சனைகள்தான்* 



————————————
சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக ஆக்க வேண்டும் என்று திமுக - இண்டி கூட்டணி கட்சி கோரிக்கை வைக்கிறது.




ஒரு வகையில் பார்த்தால் சரிதான் போலத் தோன்றும். ஆனால் இப்படி இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவித்தால் மத்திய அரசு அதை நிர்வாக ரீதியாக கையில் எடுத்து விடும் என்பது கூட தெரியாமல் அர்த்தமற்ற அபத்தமாக இக் கோரிக்கையைப்பிதற்றியிருக்கிறார்கள்.

ஏற்கனவே நடந்ததை ஒப்பிட்டு பார்த்தோமானால் டெல்லிக்கும் சண்டிகருக்கும் நடக்கக்கூடிய பிரச்சனைதான் இது.
டெல்லியில் கெஜ்ரிவாலுடைய பிரச்சினை எப்படி ஒரு யூனியன் பிரதேசத்தில் தனிமை கண்டதோ அல்லது கெஜ்ரிவால் என்னதான் உரிமைகளைக் கேட்டாலும் அது இந்திய  வரைபடத்தில் ஒரு ஒரு மாநகரமாக பொருளாதார வணிக வரவினம் சார்ந்து யூனியன் பிரதேசமாக ஆகிவிட்ட சூழ்நிலைதான் நாளைக்கு சென்னைக்கும் வரும்.இது கூடத் தெரியாமல் பேசினால் என்னவென்று சொல்வது?

பிறகு எப்படி மாநில சுயாட்சி கோரிக்கைகளை முன் வைக்கிறீர்கள்! உலகின் வளர்ச்சி பெற்ற நாடுகள் எல்லாம் தங்கள் நகரங்களை தேசிய சொத்தாக அறிவித்திருக்கிறார்கள்!

மத்திய  நாடாளுமன்றம் சென்னையை கல்கத்தாவை பாம்பேயை  பெருநகர வளர்ச்சி பட்டியயில் இணைத்து இருக்கிறது.இது கூட இந்தகட்சி
அரசியல்வாதிகளுக்குப் புரியவில்லையா! இத்தகைய பெருநகரங்கள் பின் காலனித் துவத்தில் உலக மயமாகிவிட்டது என்பது கூட இவர்களுக்குப் புரியவில்லை!

ஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்த எம் ஜி ஆர் திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகராக மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்தார்!

அதன் உள்ளடக்கத்தில் சென்னை திமுகவின் சொத்துரிமை கொண்ட பெரிய மாநகரமாக மாறிவிட்டது என்பது  மட்டுமல்ல தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லோரும் சென்னைக்கு கிளம்பி வருவது என்பது அதிக பொருள் செலவு மிக்கது அந்த வகையில் திருச்சி தான் தமிழ்நாட்டின் மையமாக இருப்பதினால் எல்லா தரப்பு மக்களும் திருச்சிக்கு வருவது சுலபமாக இருக்கும் என்று தான் அந்த முடிவை எடுத்தார்.

சென்னையில் அதிக சொத்துடைமை உள்ளவர்கள் குறிப்பாக பெரும் வணிகர்கள் நில உடமையாளர்கள் உட்பட அரசு அதிகாரிகளும் அது சாத்தியமில்லை என்று மறுத்தார்கள். 

இன்றைக்கு திமுக இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை மாற்ற வேண்டும் என்று கேட்பதன் அர்த்தம் என்ன!?

மேலும் பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு வைத்து கொள்ளையடித்து தங்களைத் தாங்களே குடும்ப நலங்களுக்காக பெருக்கிக் கொள்வதற்கு தான் என்பதன்றி அதில் இருக்கும் சூட்சுமம் தான் என்ன?

சரி, இப்படிச் சொல்பவர்கள் தமிழ்நாட்டில்  அதிக மக்கள் தொகையையும் பெருகிவரும் வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு 150 கிராமங்கள் சுற்றியுள்ள மதுரையை நிர்வாக வசதிகருதி இரண்டாவது தலைநகராக அறிவிப்பார்களா?

தனக்கு தனக்கு தான் என்றால் பதக்கும் கலம் கொள்ளும் என்பார்கள்
இம்மாதிரியான வேடிக்கைகள் எல்லாம் இன்றைய உலகளாவிய மூலதனத்தில் செல்லாது சம்பாதித்தது போதாதா!

முதலில் #தமிழ்நாட்டின்இரண்டாவதுதலைநகரமாக_மதுரை அறிவித்துவிட்டு பிறகு டெல்லியை நோக்கி இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னை அறிவிக்க வேண்டும் என்று கேட்கட்டும்!

#இந்தியாவின்இரண்டாவதுதலைநகரமாக_சென்னை

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
#27-1-2024.

#முல்லை பெரியாறு

கேரள சட்டமன்ற ஆளுநர் உரையில் #முல்லை பெரியாறில்
புது அணை கட்டுவது குறித்த அறிவிப்புக்கு, முதல்வர் ஸ்டாலினின் விடியல் -மாடல் ஆட்சியில்; தனது அன்பு சகோதரர் கேரள முதல்வர் பினராயி விஜயன்யிடம்  எதிர் வினை ஆற்றி-பேசி புது அணை திட்டத்தை நிறுத்துவாரா⁉️ ஸ்டாலின் ஆதரவாக இண்டி கூட்டணி வேறு உள்ளது.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
27-1-2024.

Friday, January 26, 2024

#*எட்டயப்புரப்பள்ளு ஒரு அற்புதமானநூல்*

#*எட்டயப்புரப்பள்ளு
ஒரு அற்புதமானநூல்*
 . 
#*குருமலை,கழுகுமலையில்
உள்ள மூலிகைகள் பற்றிச்சொல்கிறது* | Ksr | @ksrvoice 

#கேஎஸ்ஆர்,#கேஎஸ்ஆர்போஸ்ட்,#கேஎஸ்ராதாகிருஷ்ணன்,#கேஎஸ்ஆர்வாய்ஸ்,#ksr,#ksrvoice,#ksrpost,#ksradhakrishnan #ettayapuram #ettayapurampai

https://youtu.be/sepFm3vDYuo?si=6HkJaV-TmvqgfS8Y

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
26-1-2024.

The women of India worked for our Constitution

Greatest warriers and fore thinking reformers. Worked tirelessly for the Nation building.  Remember them on this day .

#75thRepublicDay 

#ksrpost 
26-1-2024.


The Padma Vibhushan has been awarded to Shri M Venkaiah Naidu,

The Padma Vibhushan has been awarded to Shri
M Venkaiah Naidu, #Padmaawards2024

My heartiest congratulations to you Sir, #MVenkaiahNaidu


Wednesday, January 24, 2024

ஏமாற்றங்கள் இன்றி வாழ்வு அமைவதில்லை.. ஏமாற்றங்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை.. மாற்றம் வரும், மலரும் நம் வாழ்க்கை என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.

ஏமாற்றங்கள் இன்றி வாழ்வு அமைவதில்லை..
ஏமாற்றங்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை..

மாற்றம் வரும், மலரும் நம் வாழ்க்கை என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.
வானம் என்றால்
ஆயிரம் நட்சத்திரங்கள் இருக்கும் ..

வாழ்க்கை என்றால்
ஆயிரம் துன்பங்கள் வரும்..சூரியன் வந்தால் 
நட்சத்திரங்கள் மறைவது போல..
தன்னம்பிக்கை இருந்தால்
துன்பங்கள் அனைத்தும் மறந்து போகும்.

என்ன
நடந்தாலும்
பரவாயில்லை
என்னும்
ஒரு திமிர் மட்டும்
இருந்தால் போதும்
வாழ்க்கையை
சந்தோசமாக
வாழ்ந்துவிட்டு
போகலாம்.புறம் பேசுவதற்கு
நேர்மை எனும்
தகுதி அவசியம்.
ஆனால்...
நேர்மையானவர்கள்
யாரும் புறம்
பேசுவதில்லை.


#இந்திய அரசியல்சாசனம் மதசார்பற்ற - செக்யூலர் (Secular)என சொல்வது பிழை. சரியாக மதநல்லிணக்கம்(communal harmony )என அழைக்க வேண்டும்.

#இந்திய அரசியல்சாசனம் 
மதசார்பற்ற - செக்யூலர் (Secular)என
சொல்வது பிழை. சரியாக மதநல்லிணக்கம்(communal harmony )என அழைக்க வேண்டும்.












1950ல் இந்திய  மூல அரசியல் சாசனத்தில் ராமர் படம்.. 
———————————————————-
கேரளாவின் நடிகை பார்வதி மேனன் உள்ளிட்ட அங்குள்ள திரைப்படத்துறையினர் பதிவில்,
இந்திய அரசியல் சாசன முகப்பின் முதல் பக்கத்தில் செக்யூலர் என்று பதிவு உள்ளது என்று இன்றுதான் அதைப் புதிதாக அறிந்தவர்கள் போல ஒரு புரட்சிகரக் கோரிக்கையை வைக்கின்றார்கள்.




உண்மையில் 1950ல் இந்திய  மூல அரசியல் சாசனத்தில் ராமர் படம்தான் இருந்தது.அது காந்தி அடிகள் சொன்ன ராம ராஜ்ஜியம் என்கிற அரசியல்உள்ளடக்கத்தைகொண்டிருந்ததைத் தவிர அதில் வேறு ஒன்றும் தவறில்லை.(Portrait of Bhagwan Ram, Goddess Sita and Laxman In Original Copy of Indian Constitution 1950) Artist,Nandalal Bose, a great Bengali and Indian and a pioneer in modern India art, hailing from Shantiniketan, West Bengal. Prem Behari Narain Raizada (1901–1966) was an Indian calligrapher. He is notable for being the calligrapher who hand-wrote the Constitution of India.

பின்னாளில் அரசியல் தலைமைக்கு வந்த இந்திரா காந்தி செக்யூலர் இந்தியா  42வது அரசியல் சாசனத்தை திருத்தத்தை கொண்டு வந்தார். 1976 இல் இந்திய அரசியலமைப்பின் நாற்பத்தி இரண்டாவது திருத்தத்துடன் ,  அரசியலமைப்பின் முன்னுரை இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அறியப்பட்டது. மதசார்பற்ற (Secular)என சொல்வது பிழை. சரியாக மத நல்லிணக்க (communal harmony )என்றுதான்அழைக்க வேண்டும்.

நடந்தது நடந்ததாக இருக்கட்டும் உண்மையில் பல மதங்களை உள்ளடக்கி இருக்க கூடிய பல நம்பிக்கைகளை பல வழிபாடுகளை நம்பி இருக்கக்கூடிய இந்தியாவில் அது எப்படி செக்யூலர் கவர்ன்மெண்டாக இருக்க முடியும்.எல்லா மதங்களும் தங்களுடைய இருப்பை இந்த இந்தியாவில் தங்களது நம்பிக்கை சார்ந்த இருத்தலியலாக நிலைநாட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.

அப்படி எனில் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று எப்படி சொல்வது? மதங்கள் இருக்கத்தானே செய்கிறது ஆகவே இதை அனைத்து மதங்களின்  நல்லிணக்க நாடு என்று தான் சொல்ல வேண்டும்.

மதச் சார்பற்ற நாடு என்பது தவறான விவாதம் ஆகும்.அப்படி அல்லவெனில் இந்த நாட்டில் ஒரு மதமும் இருக்க கூடாது.

இந்துத்துவம், சீக்கியம்,இஸ்லாம் கிறிஸ்துவம், ஜைனம், பொளத்தம், யூதம் உட்பட பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்ட நாடு இந்தியா!! என்பதை ஏற்றுக் கொள்ளுபவர்கள் அத்தனை மதங்களையும் உள்ளடக்கி நல்லிணக்கம் கண்ட நாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் அடிப்படையில்தான் இங்கு அனைத்து மதத்தினரும் தங்களது இருத்தலியில் வாழ்வை அமைதியாக மேற்கொள்கிறார்கள்!

இவ்வளவு வேற்றுமையிலும் ஒருங்கிணைக்கப்பட்டு சகோதரத்துவத்துடன்  வாழும் சகிப்புத்தன்மை கொண்ட வேறு நாடுகள் உலகில் எங்கும் இல்லை!

என்பதை ஜனநாயக பூர்வமான அறிவுடையோர்   தங்களது நாட்டின் பெருமிதமாக ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள்.

அந்த வகையில்இது ஒற்றை மதம் சார்ந்த நாடு கிடையாது மாறாக பல மதங்களின் நல்லிணக்க நாடு மட்டுமல்ல அதற்குரிய ஜனநாயக மாண்பை காப்பாற்றும் வல்லமை உடைய அரசியல் வலிமையும் உடைய நாடு என்பதுதான் எனது பார்வை!!இன்றைய ஊடகங்களில் வெறுமனே ஸ்டண்ட் அடித்துக் கொண்டு அதை மாற்று இதை மாற்று என்று கூக்குரல் எழுப்பிக் கொண்டிருப்பது வெட்டிவேலை.

Some of the most well known examples for states considered "constitutionally secular" are the United States, France, Turkey, India, Mexico, and South Korea, though none of these nations have identical forms of governance with respect to religion

இப்படித்தான் செக்யூலர் என்பது பொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இங்கெல்லாம் மதங்கள் இல்லை என்பவர்கள் கை தூக்குங்கள்.

இல்லையெனில் மனச்சான்றின் படி ஞாபகம் கொள்ளுங்கள்

 நாம் கண்ணீர் விட்டா வளர்த்தோம் பல்வேறு காலனிய
ஆதிக்கங்களுக்கு அப்பால் செந்நீர் ஊற்றி அல்லவா தேசப்பயிர் காத்தோம்.

மற்றபடி இந்தியாவில் வாழ முழு சுதந்திரத்தையும் அனுபவித்துக் கொண்டு முரண்பாட்டின் அரசியலால் அடையாளம் பெற நினைப்பது  அபத்தம்.

••••

எழுதப்படாத அரசியலமைப்பு சட்டங்கள் (Unwritten Constitutions) மரபுகள், நடை முறைகள் என பின் பற்றும் நாடுகள்.
———————————————————-
இங்கிலாந்து ,UK , ஆனால் முதல் அரசியலமைப்பு சட்ட ஆவனம் மகா சாசனம்(Magna carta-Magna Carta Libertatum commonly called Magna Carta is a royal charter of rights agreed to by King John of England at Runnymede, near Windsor, on 15 June 1215)நடை முறைக்கு வந்தது.

கனடா.

சவூதி அரேபியா. ...

நியூசிலாந்து. ...

இஸ்ரேல். இஸ்ரேல் அரசு ஒரு எழுதப்படாத அரசியலமைப்பின் கீழ் செயல்படுகிறது மற்றும் ஜூன் 30, 1950 இன் ஹராரி முடிவின்படி செயல்படுகிறது, இது இஸ்ரேலிய அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

#Constitutions #ConstitutionsofIndia
#Unwritten_Constitutions
#Magna_Carta #செக்யூலர்
#இந்தியஅரசியல்சாசனம் #மதசார்பற்ற #Secular #மதநல்லிணக்க 
#communalharmony

#KSR_Post
24-1-2024

#ஜனநாயக் கர்பூரி தாக்கூர்



———————————————————-
விபி சிங்  போன்ற பலருக்கு முன்பே உண்மையான சமூக நீதி காவலர் ,பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்கபட உள்ளது. ஏற்கனவே கர்பூரி தாக்கூர் அவர்களுக்கு இந்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 2024 இவரின் நூற்றாண்டு.









பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பிடவுஞ்சியா (இப்போது கர்பூரி கிராம்) கிராமத்தில் கோகுல் தாக்கூர் மற்றும் ராம்துலாரி தேவி ஆகியோருக்கு கர்பூரி தாக்கூர் பிறந்தார்

மிகச்சிறந்த சமூக நீதிக் காவலர் அரசியல் வாழ்வில் அறிவு நாணயமும்  அரசியல் விடுதலை என்பது அடித்தள மக்களுக்கான தொண்டு என்பது அல்லாமல் வேறு எதுவும் இல்லை எனச் சிந்தித்தவர் நேர்மையானவர். சுதந்திரப் போராட்ட வீரர், ஆசிரியர் இவரிடம் நேற்று வேறு பேச்சு இன்று வேறு பேச்சு என இருந்தது இல்லை.

கர்பூரி தாக்கூர் (24 ஜனவரி 1924 - 17 பிப்ரவரி 1988) பீகாரின் 11வது முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர் (முதலில் டிசம்பர் 1970 முதல் ஜூன் 1971 வரை, பின்னர் ஜூன் 1977 முதல் ஏப்ரல் 1979 வரை) அவர் பிரபலமாக ஜன நாயக் (மக்கள் ஹீரோ) என அழைக்கப்பட்டார்.

சோசலிஸ்ட் கட்சி (எஸ்எஸ்பி) , பாரதிய கிராந்தி தளம் , ஜனதா கட்சி , சரன் சிங்கின் லோக்தளம் அரசியல் கட்சிகளில் முக்கிய தலைமை நிர்வகியாக இருந்தவர்.

மாணவர் ஆர்வலராக, இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர தனது பட்டதாரி கல்லூரியை விட்டு வெளியேறினார் . இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 26 மாதங்கள் சிறையில் இருந்தார். 

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தாக்கூர் தனது கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். சோசலிஸ்ட் கட்சி வேட்பாளராக தாஜ்பூர் தொகுதியில் இருந்து 1952 இல் பீகார் விதான் சபா உறுப்பினரானார் . 1960ல் மத்திய அரசு ஊழியர்களின் பொது வேலைநிறுத்தத்தின் போது P & T ஊழியர்களை வழிநடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். 1970ல், டெல்கோ தொழிலாளர்களின் போராட்டத்தை மேம்படுத்துவதற்காக 28 நாட்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார் . 

பீகாரின் கல்வி அமைச்சராக இருந்த அவர், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் ஆங்கிலத்தை கட்டாய பாடமாக நீக்கினார். மாநிலத்தில் ஆங்கில வழிக் கல்வியின் தரம் தாழ்ந்ததால் பீஹாரி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.  1970 இல் பீகாரின் முதல் காங்கிரஸ் அல்லாத சோசலிச முதலமைச்சராக ஆவதற்கு முன், தாக்கூர் பீகாரின் அமைச்சராகவும் துணை முதல்வராகவும் பணியாற்றினார் . பீகாரிலும் அவர் முழு மதுவிலக்கை அமல்படுத்தினார். அவரது ஆட்சியின் போது, ​​பீகாரில் பின்தங்கிய பகுதிகளில் அவரது பெயரில் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிறுவப்பட்டன .

பீகாரின் எம்பிசிக்களில் ஒருவரைச் சேர்ந்த கல்வியாளர் எஸ்.என்.மலகர், 1970களில் கர்பூரி தாக்கூரின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஆதரித்து நடந்த போராட்டத்தில் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த (ஏஐஎஸ்எஃப்) மாணவர் ஆர்வலராகப் பங்கேற்றார். , ஜனதா கட்சி ஆட்சியின் போது தலித் மற்றும் உயர் OBC கள் ஏற்கனவே நம்பிக்கை பெற்றிருந்தனர்.

புலந்த்ஷாஹரைச் சேர்ந்த சேத் ராம் தோமர் அவருடைய நெருங்கிய கூட்டாளி. ஒரு சோசலிஸ்ட் தலைவர், தாக்கூர் ஜெய பிரகாஷ் நாராயணனுக்கு நெருக்கமானவர் . இந்தியாவில் (1975-77) அவசரநிலையின் போது , ​​அவரும் ஜனதா கட்சியின் பிற முக்கிய தலைவர்களும் இந்திய சமுதாயத்தின் வன்முறையற்ற மாற்றத்தை இலக்காகக் கொண்ட "மொத்த புரட்சி" இயக்கத்தை வழிநடத்தினர்.

1977 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் இந்திய தேசிய காங்கிரஸ் ஜனதா கட்சியால் பெரும் தோல்வியைச் சந்தித்தது . ஜனதா கட்சி என்பது இந்திய தேசிய காங்கிரஸ் (அமைப்பு) , சரண் சிங்கின் பாரதிய லோக் தளம் (BLD), சோசலிஸ்டுகள் மற்றும் ஜனசங்கத்தின் இந்து தேசியவாதிகள் உள்ளிட்ட வேறுபட்ட குழுக்களின் சமீபத்திய கலவையாகும் . இந்தக் குழுக்கள் ஒன்று சேர்வதன் ஒரே நோக்கம், நாடு தழுவிய நெருக்கடி நிலையைத் திணித்து , பல சுதந்திரங்களைக் குறைத்த பிரதமர் இந்திரா காந்தியைத் தோற்கடிப்பதாகும். பிற்படுத்தப்பட்ட சாதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சோசலிஸ்டுகள் மற்றும் BLD மற்றும் உயர் சாதியினரான காங்கிரஸ்(O) மற்றும் ஜனசங்கம் ஆகியவற்றுடன் சமூகப் பிளவுகளும் இருந்தன. 

ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு , பீகார் ஜனதா கட்சித் தலைவர் சத்யேந்திர நாராயண் சின்ஹாவுக்கு எதிராக 144 க்கு 84 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் பீகார் ஜனதா கட்சித் தலைவர் சத்யேந்திர நாராயண் சின்ஹாவுக்கு எதிராக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பீகாரின் முதலமைச்சரானார்.  முங்கேரி லால் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தும் தாக்கூரின் முடிவு குறித்த கேள்வியால் கட்சியில் உட்கட்சி பூசல் உடைந்தது, அது பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. ஜனதா கட்சியின் உயர் சாதியினர், தாக்கூரை முதல்வராக பதவி நீக்கம் செய்து இடஒதுக்கீடு கொள்கையை நீர்த்துப் போகச் செய்ய முயன்றனர். தலித் எம்.எல்.ஏ.க்களை விரட்ட, ராம் சுந்தர் தாஸ் என்ற தலித் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். தாஸ் மற்றும் தாக்கூர் இருவரும் சோசலிஸ்டுகள் என்றாலும், தாஸ் முதலமைச்சரை விட மிதமானவராகவும், இணக்கமானவராகவும் கருதப்பட்டார். தாக்கூர் ராஜினாமா செய்தார் மற்றும் தாஸ் 21 ஏப்ரல், 1979 அன்று பீகார் முதல்வரானார். கீடு சட்டம் பலவீனப்படுத்தப்பட்டது. ஜனதா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பதட்டங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து 1980ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்தது.  இருப்பினும், 1979 இல் ராமிடம் இருந்து தலைமைப் போரில் தோல்வியடைந்ததால், இவரால் பதவியில் நீடிக்க முடியவில்லை. அவருக்கு எதிராக அவரது எதிரிகள் நிறுத்திய சுந்தர் தாஸ் முதல்வராக பதவியேற்றார். 

ஜூலை 1979 இல் ஜனதா கட்சி பிளவுபட்டபோது , ​​கர்பூரி தாக்கூர் வெளியேறும் சரண் சிங் பிரிவுக்கு ஆதரவாக இருந்தார். அவர் 1980 தேர்தலில் ஜனதா கட்சி (மதச்சார்பற்ற) வேட்பாளராக சமஸ்திபூர் (விதான் சபா தொகுதி) இருந்து பீகார் விதான் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவரது கட்சி பின்னர் அதன் பெயரை பாரதிய லோக் தளம் என மாற்றியது, மேலும் தாக்கூர் பீகார் சட்ட மன்றத்துக்கு 1985 தேர்தலில் சோன்பர்சா தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விதான் சபையின் பதவிக்காலம் முடிவதற்குள் அவர் காலமானார்.

இவரை இரு முறை 1983,1985 இலங்கை தமிழர் சிக்கல் குறித்து,எனது நண்பரும் அக்காலத்தில் அடித்தள மக்களுக்காக அதன்போதாமைகளை முன்னெடுத்து கவனம் பெற்ற  ராம் விலாஸ் பஸ்வான் மூலமாக நான்  பட்னா, டில்லியில் வைத்து சந்தித்து இருக்கிறேன்.  

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத முதல், முதல்வர் என்ற பெருமை கர்பூரி தாகூருக்கு உண்டு. முன்பாகவும் பின்பாகவும்  #லல்லுபிரசாத்யாதவ், #பஸ்வான் உட்பட இன்றைய #நிதீஷ்குமார் வரையிலும் பீகாரின் ஆட்சியில் இருந்த பல முதல்வர்களுக்கு அவர் முன்னோடியும் அரசியல் வழிகாட்டியுமாக இருந்தார்.

கடந்த 1970-71 மற்றும் 1977-79 கால கட்டங்களில் பீகார் முதல்வராக கர்பூரி தாக்கூர் பதவி வகித்தார். சிறந்த சோஷியலிஸ்ட் தலைவராக அறியப்பட்டவர் கர்பூரி தாக்கூர்.

இவர் அகிலனின் வாசகர். ஞானபீட விருது வழங்கப்பட்டபோது அவசர அவசரமாக தில்லி வந்து பங்கேற்றார். பின்னர் ஒரு முறை சென்னை வந்த போது சாந்தோம் இல்லறத்திற்கு நேரடியாக வந்து அகிலனைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். பீகாருக்கு அரசு முறை விருந்தினராக அகிலனை அழைத்துச் சென்று சிறப்புச் செய்தார்!

இந்திய நவ பாரத-நவீனச் சிற்பிகளில் ஒருவரானகர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது குறித்து  மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

 #ஜனநாயக்_கர்பூரிதாக்கூர்
#KarpuriThakur #RamVilasPaswan

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
24-1-2024.

Tuesday, January 23, 2024

*தமிழக உரிமைகளை மறுக்கும் பினராயி விஜயன் மாநிலங்களுக்கு அதிக அதிகார உரிமைகள் கேட்டு டில்லியில் போராட ஸ்டாலினை அழைக்கிறார்*….⁉️

#*தமிழக உரிமைகளை மறுக்கும் பினராயி விஜயன் மாநிலங்களுக்கு அதிக அதிகார உரிமைகள் கேட்டு டில்லியில் போராட ஸ்டாலினை அழைக்கிறார்*….⁉️
'*கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு'மக்களை ஏமாற்றும் வித்தை*❓
————————————
சென்ற வாரம் மாநிலங்களுக்கு அதிக அதிகார உரிமைகள் கேட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் போராடப் போவது குறித்த எனது பதிவைப் பலரும் படித்திருக்கலாம்.

இப்போது நானும் கூட்டு நரியும் கூட்டு என்பது மாதிரி வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லியில்  மாநிலங்களுக்கான உரிமை கோரிப் போராடத் தன்னுடன் இணையுமாறு தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலினை அழைத்துள்ளார்.

அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் போவது அல்லது போகாது இருப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

அதற்கு முன்பாக கேரளா முதல்வரை தமிழ்நாட்டின் ஏகோபித்த மக்கள் அனைவரும் முதலில்
அவர் தமிழகத்துக்கு தர மறுக்கும் நெய்யாறு,முல்லைப் பெரியாறு, பிஏபி என பத்துக்கு மேலான நீர் ஆதாரங்களின் தண்ணீரை வீணாக கடலில் கலக்கச் செய்யும் அவரது எதோச்சைப் போக்கையும். தேனி மாவட்டம் மங்களா தேவி கண்ணகி கோவில் சிக்கல், அட்டப்பாடி பிரச்சனை ,கழிவுகள் தீய குப்பைகள் என தமிழ்நாட்டின் எல்லைகளில் கொண்டு வந்து கொட்டி விட்டு போகும் வக்ர புத்தியையும் கேள்வி கேட்கத் தான் விரும்புகிறார்கள்.  கேரளாவிற்குத் தேவையான பால் காய்கறிகள் மணல் என தமிழ்நாட்டில் இருந்து அனைத்தையும் தந்திரமாக தருவித்துக் கொள்ளும் கெட்டிக்காரத்தனத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன பாசம் வேண்டி கிடக்கிறது!  நாட்டுக்கு ஒரு முகம் கூட்டுக்கு ஒரு முகம் காட்டும் கேரள முதல்வர் புத்திசாலி தான்.

இணைந்து போராட சக சகோதரத்துவ அமைப்பாக தமிழ்நாட்டு முதல்வரை டெல்லிக்கு அழைக்கும் முன்பாக அவர் முதலில் நியாயமாக தமிழக முதல்வரை அழைத்து இந்த பிரச்சனைகளை நாம் தமிழ்நாட்டு மற்றும் கேரள மக்களின் நன்மைக்காக முதலில் பேசி தீர்த்துக் கொள்வோம் என்று சொல்லிவிட்டு அல்லவா மாநில உரிமைகள் பற்றி பேச வேண்டும்?
சொல்ல மாட்டார்!!பங்காளிக்கு எப்போதும் பழைய கணக்கு தான்!

மாநிலத்திற்கான அதிக உரிமைகள் தேவைதான்! ஆனால் தத்தம் அண்டை மாநிலங்களுக்கு கூட எதையும் தர இயலாத இவர்கள் எப்படி உரிமைகள் கேட்டு காவடி எடுக்கிறார்கள்.!? என்பதுதான் புரியவில்லை.! இதற்கு ஸ்டாலின் பதில் என்ன❓…

#தமிழக_கேரளா_சிக்கல்கள்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
23-1-2024,

ஈழத்தில்,தமிழரசுக் கட்சிக்கு நண்பர் மாவை சேனாதி ராஜா பின் புதிய தலைவராக ஸ்ரீதரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

*

 மகிழ்ச்சி*. 
கடந்த 1949ம் ஆண்டு டிசம்பர் 18 தமிழரசுக்கட்சி தோற்றுவிக்கப் பட்டபோது "இப்போதிருக்கும் நிலைமையில் ஒரு சுதந்திரத் தமிழரசை நிறுவுவது இன்றியமையாதென்பது எமது திடமான நம்பிக்கையாகும்" என்ற முழக்கத்துடன் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழரசுக் கட்சியைத் தோற்றுவித்தார். 







அதன்பின்  கட்சியின் தலைவர்களாக வந்த கு.வன்னியசிங்கம், என்.இ. ராஜவரோதயம், சி.எம். ராசமாணிக்கம், இ.எம்.வி. நாகநாதன் என தொடர்ந்து ஆறாவது தலைவரான அ.அமிர்தலிங்கமும் அதையே கைக்கொண்டு நடைமுறைப்படுத்தினார்கள். 

1970களில் அ. அமிர்தலிங்கத்தின் பெருமுயற்சியால் தமிழர் கூட்டணி உருவாகி அது தமிழர் விடுதலைக் கூட்டணியாக பரிணமித்தபோதே  தமிழரசுக் கட்சி மௌனிக்கப்பட்டுவிட்டது. அந்த காலகட்டத்திலேயே, தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி அமைதி நிலையில்….. அதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கக் காலத்தில் வேறு ஏதோ ஒரு யோசனையோடு, பழைய படி இன்னொரு தமிழரசுக் கட்சிக்குத்தான் இப்போது தேர்தல் நடந்து  தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 

நடந்த இந்தத் தலைமைத்துவத் தேர்தலில் சுமந்திரன் வேறு மாற்றத்தை உருவாக்கியிருப்பார். இப்போது ஸ்ரீதரன் பெற்றிருக்கும் வெற்றி ஒரு புறத்தில் ஒரு 
ஆறுதலேயாயினும், இனி எப்பேர்ப்பட்ட அரசியல் தமிழ் மக்களிடையே முன்நிலைப்படுத்தப்படும் என்ற கேள்வி உட்படமேலும் பல புதிய கேள்விகளையும் உருவாக்கிவிட்டுள்ளது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

#ksrpost
23-1-2024.

Monday, January 22, 2024

தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை" தமிழ் அறிஞர் கோவை சே .ப. நரசிம்மலு நாயுடு அவர்களின் நினைவு தினம் இன்று. சிறுவானி நீர்- கோவைக்கு குரல் கொடுத்த சேலம் பகடால நரசிம்மலு நாயுடு

தமிழறிஞர்களைப் போற்றுவோம்!

"தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை"  தமிழ் அறிஞர் கோவை 
சே .ப. நரசிம்மலு நாயுடு அவர்களின் நினைவு தினம் இன்று.
சிறுவானி நீர்- கோவைக்கு குரல் கொடுத்த
 சேலம் பகடால நரசிம்மலு நாயுடு 
(ஏப்ரல் 12, 1854 – ஜனவரி 22, 1922)



இவரின் தட்சன தேச பயணம்-(தென்னிந்திய சரிதம்) மறுபதிப்பாக கொண்டு வர உள்ளேன். அதன் பணிகள் நடக்கின்றன. •••••



பண்டைக்காலம் தொடங்கி தமிழர்கள் பூர்வீக நிலம்விட்டுப் புலம்பெயர்தல், இன்றுவரை இடைவிடாமல் தொடர்கிறது. பொருள், பஞ்சம், போர், வேளாண்மை, வேட்டை போன்றவற்றுடன் உணவு தேடல் இடம் பெயர்தலில் முக்கிய காரணமாகும். ஆங்கிலேயரின் காலனியாதிக்கக் காலகட்டத்தில் வறுமை, தீண்டாமை காரணமாகத் தமிழகத்தைவிட்டு மலேஷியா, மொரிஷியஸ், டச்சுக் கயானா, இலங்கை, பர்மா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த விளிம்பு நிலையினரான தமிழர்களின் அனுபவங்கள் நூல் வடிவம் பெறவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்திற்குள்ளும்  வெளியிலும் பயணித்த கல்வியறிவு பெற்றவர்களின் அனுபவங்கள் கட்டுரைகளாகியுள்ளன. 




இத்தகைய பயணக் கட்டுரைகளுக்கு முன்னோடியாக வடஇந்தியாவிற்குப் பயணித்த கோயம்புத்தூரைச் சேர்ந்த சே.ப. நரசிம்மலு நாயுடு, தனது பயண அனுபவங்களை 'ஆரியர் திவ்ய தேச யாத்திரையின் சரித்திரம்' என்ற பெயரில் 1889 ஆம் ஆண்டு விரிவான நூலாக எழுதியுள்ளார். அந்த நூலின் விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு 1913 ஆண்டில் வெளியாகியுள்ளது. தமிழில் இதுவரை பிரசுரமாகியுள்ள பயண இலக்கிய நூல்களின் காலத்தை ஒப்பிட்டு ஆராய்ந்தால் ‘ஆரியர் திவ்ய தேச யாத்திரையின் சரித்திரம்' நூல்தான் காலத்தினால் முந்தையது. அந்த வகையில் சே.ப. நரசிம்மலு நாயுடு அவர்களைத் தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை என்று கவிஞர் சிற்பி குறிப்பிட்டிருப்பது பொருத்தமானது.

அன்றைய காலகட்டத்தில் பம்பாய் நகருக்குச் சென்று நூற்பாலைகளைப் பார்வையிட்ட நரசிம்மலு நாயுடு, கோவையில் ஆங்கிலேயரின் உதவியுடன் நூற்பாலைகள் நிறுவினார் என்ற தகவல், அவருடைய சமூக அக்கறையின் செயல் வடிவமாகும். சர்க்கரை ஆலை, காகித உற்பத்தி ஆலை போன்ற தொழில்களைத் தமிழகத்தில் நிறுவிட அவருடைய பயண அனுபவங்கள் பயன்பட்டுள்ளன. நரசிம்மலு நாயுடு கொங்கு வட்டார மக்களின் நலனுக்காகச் சிறுவாணிக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் செயலாற்றியுள்ளார். பத்திரிகைகளின் ஆசிரியர், புத்தகங்களின் ஆசிரியர், பிரம்ம சமாஜி, சமூக சீர்திருத்தவாதி, காங்கிரஸின் ஆதரவாளர் எனப் பல்வேறு நிலைகளில் செயல்பட்ட நரசிம்மலு நாயுடு பன்முக ஆளுமையாளர்.

எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர், சமூகசேவகர் எனப் பல தளங்களில் இயங்கியவர் சேலம் பகடால நரசிம்மலு நாயுடு. இவர், ஏப்ரல் 12, 1854 அன்று, ஈரோட்டில், அரங்கசாமி நாயுடு-லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் பாலகிருஷ்ணன். தாத்தா நரசப்ப நாயுடு மிகவும் புகழ்பெற்று விளங்கியதால் இவரது இயற்பெயர் மறைந்து தாத்தாவின் பெயரே நிலைத்து நரசிம்மலு நாயுடு ஆனார். திண்ணைப் பள்ளியில் துவக்கக்கல்வி பயின்றார். தாய்மொழியான தெலுங்கை முதற்பாடமாகப் படித்தார். பின்னர் மாவட்ட அரசுப்பள்ளியில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் வல்லவரானார். நூலகங்களுக்குச் சென்று படித்து சமயம், தத்துவம், வரலாறு, இலக்கியம், யாப்பு என அனைத்திலும் தேர்ந்தார். அந்தச் சிறுவயதிலேயே கட்டுரை எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்ப அவை தினவர்த்தமானி, அமிர்தவசனி, கஜன மனோரஞ்சனி, பிரமதீபிகை போன்ற அக்காலத்தின் புகழ்பெற்ற இதழ்களில் வெளியாகின. எட்டு வயது எதிராஜம்மாளுடன் 14 வயது நரசிம்மலு நாயுடுவிற்குத் திருமணம் நிகழ்ந்தது.

சிலகாலம் மருத்துவ உதவியாளர், மக்கள்தொகை கணக்கெடுப்பாளர், ஆசிரியர் போன்ற பணிகளைச் செய்து வந்தார். 1877 ஆம் ஆண்டில் சேலத்தில் 'சுதேசாபிமானி' என்னும் இதழைத் துவக்கினார். "சேலம் மாவட்ட பூமி சாஸ்திர கிரந்தம்" என்பது இவரது முதல் நூலாகும். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மாணவர்களின் கணித அறிவு மேம்படும் பொருட்டு 'சிறந்த கணிதம்' என்னும் நூலை எழுதினார். நகராட்சி ஆணையராக இருந்த ஸ்மால் துரை சேலம் பகடால நரசிம்ம நாயுடுவின் உயர்வில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். அவரது திறமையறிந்து ஊக்குவித்த துரையின் ஆதரவுடன் சேலம் பெண்கள் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். அப்பள்ளி மாணவிகளுக்காக 'நீதிக் கொம்மி' என்னும் நூலை எழுதினார். நடுவில் சில மாதங்கள் ஸ்ரீரங்கத்தில் வசிக்க நேர்ந்ததால் அக்காலகட்டத்தில் 'ஸ்ரீரங்க ஸ்தல பூஷணி' என்ற இதழைத் துவங்கி நடத்தினார். 1879 ஆம் ஆண்டில் சேலத்திலிருந்து கோவைக்குக் குடிபெயர்ந்த போது 'கோயமுத்தூர் அபிமானி' என்னும் இதழைத் துவங்கினார். ஒரே காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து மூன்று இதழ்களை நடத்திய பெருமை இவருக்குண்டு. இவர் தனது இதழ்களில் தயவு, தாட்சண்யம் இல்லாமல், தவறு செய்பவர்களைப் பற்றி ஆதாரத்துடன் எழுதினார். இதனால் மக்கள் ஆதரவு பெருகியது. ஆனால், அதிகாரிகளின் எதிர்ப்பு உண்டானது. அவர்களால் எதிர்ப்பு, வழக்கு, விற்பனையில் நஷ்டம் வந்தபோதும் அஞ்சாது நடத்தினார். ஆனாலும் தொடர் நஷ்டம் உள்ளிட்ட சில காரணங்களால் இதழ்களை நிறுத்த வேண்டியதாயிற்று.

 அதனால் கோவையில் 'கலாநிதி' என்னும் பெயரில் சொந்தமாக ஓர் அச்சுக்கூடத்தை நிறுவினார். 1881ஆம் ஆண்டில் 'கோயமுத்தூர் கலாநிதி' என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழிலும் மக்களின் இடர்களைக் கண்டும் காணாத அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். மதமாற்ற அக்கிரமங்களையும், அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்பட்டதையும் ஆதாரத்துடன் எழுதினார். அதனால் அதிகாரிகள் இவருக்கு எதிராயினர். ஆனாலும், மக்கள் ஆதரவு இருந்தது. வாரம் இருமுறை வெளிவந்த முதல் பத்திரிகை இவரது கலாநிதிதான். அதில் பெண் முன்னேற்றம், சமூக விடுதலை, பெண் கல்வி, சமயம் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலுமாகத் தொடர்ந்து பல விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கோவையில் பிரம்ம சமாஜக் கிளையைத் தோற்றுவித்தார். அதன்மூலம் சமூக நற்பணிகளைச் செய்தார். இவர் எழுதியிருக்கும் 'கோயமுத்தூர் ஜில்லா பூமி சாஸ்திர கிரந்தம்' என்ற நூல் குறிப்பிடத்தக்க ஒன்று.




விவசாயம்பற்றி ஆராய்ந்து சில நூல்களை இவர் எழுதியிருக்கிறார், அதுவும் 1900 ஆம் ஆண்டுக்காலத்திலேயே. விவசாயம்பற்றி முதன்முதலில் நூல் எழுதிய முன்னோடி இவர்தான். 'விவசாய சாஸ்திரம்' என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் கொண்ட நூலை இவர் எழுதியிருக்கிறார். 'குடியானவர் கஷ்ட தசை', 'எருவைக் காக்கும்விதம்', 'விவசாயப் பழமொழிகள்' போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. பெண் விடுதலைக்காகப் பாடுபட்ட முன்னோடியான இவர், அவர்களுக்காகப் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்தார். பிரம்ம சமாஜக் கொள்கைகளைப் பின்பற்றியவர் என்பதால் அச்சமாஜத்தின் மூலம், பெண்கல்வி மற்றும் வாழ்க்கை நலனுக்காகப் பணிகள் செய்தார். சென்னை மகாஜன சபாவின் செயலாளராக பணியாற்றிய இவர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மேல்நிலை அடைய உதவினார். அவர்களுக்காக உண்டு-உறைவிடப் பள்ளி ஒன்றையும் அமைத்து நடத்தினார்.

சிறந்த சமூக சீர்த்திருத்தவாதியாகத் திகழ்ந்தவர் நரசிம்மலு நாயுடு. கோவை நகரை நிர்மாணித்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. தமிழகத்தின் மான்சென்ஸ்டராகக் கோவை உருவாக இவரே முழுமுதற் காரணம். கோவையின் முதல் பஞ்சாலை அமைந்தது இவரது முயற்சியால்தான். அதற்காகத் தனது நிலத்தின் ஒரு பகுதியைத் தந்துதவினார். கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் முதல் ஆலையைப் போத்தனூரில் அமைத்ததும் இவரே! கோவையின் புகழ்பெற்ற விக்டோரியா ஹால் எனப்படும் டவுன் ஹாலைக் கட்டியவர் இவர்தான். விக்டோரியா மகாராணியின் ஐம்பதாம் ஆண்டு ஆட்சி விழாவை முன்னிட்டு இவர் கட்டியது அந்த மண்டபம். காங்கிரஸ்மீது அபிமானம் கொண்டிருந்தார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் கிளையை ஏற்படுத்தி, அதன் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

 அக்காலத்தில் அங்கே தண்ணீர் பிரச்சனை அதிகம் இருந்தது. அதனைத் தீர்க்க, வெள்ளியங்கிரி மலை அருகே உள்ள எலிவால் மலைச்சாரலிலிருந்து பாயும் முத்திக்குளம் நீரை நொய்யல் ஆற்றில் திருப்பி விடுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். அங்கிலேய அதிகாரிகளால் பாராட்டப்பட்ட அத்திட்டமே பிற்காலத்தில் சிறுவாணித் திட்டம் உருவாக வழிவகுத்தது. கோவை மக்களின் நீண்டகாலத் தண்ணீர்ப் பஞ்சமும் நீங்கியது. அந்தவகையில் கோவையின் வளர்ச்சிக்கு வித்திட்ட மேதைகளுள் ஒருவர் நரசிம்ம நாயுடு என்பதில் ஐயமில்லை.

இதழியல்பணி, சமூகப்பணி இவற்றோடு நரசிம்மலு நாயுடு செய்த எழுத்துப் பணியையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சமயம், தத்துவம், வரலாறு, இசை என்று பல தலைப்புகளில் இவர் நூல்கள் எழுதியிருக்கிறார். சேலம் டவுன் ஸ்கூல் சிந்து, பிரம்ம சமய சரித்திரக் கீர்த்தனைகள், கோயமுத்தூர் கோதையர் கொம்மிகள் உள்ளிட்ட நூல்கள் அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை. இசைபற்றி விரிவாக ஆராய்ந்து 'சரித்திர சங்கிரகம்' என்ற நூலை எழுதினார். 

தென்னிந்திய சரிதம், பலிஜவாரு புராணம் (பலிஜா நாயுடு சமூக வரலாற்று நூல்), ஆரிய தருமம், இந்து பைபில் உள்பட 90க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தமிழில் பயண இலக்கியம் பற்றி எழுதிய முன்னோடி எழுத்தாளர். இவர் எழுதியிருக்கும் 'ஆரியர் திவ்விய தேச யாத்திரை' என்னும் நூல் குறிப்பிடத்தகுந்தது. 1889 ஆம் ஆண்டில் வெளியான இந்நூலில் காசி, கயா, கல்கத்தா, பூரி, அயோத்தி, டெல்லி, அமிர்தசரஸ், ஆஜ்மீர், உஜ்ஜயனி போன்ற நகரங்களுக்குத் தான் மேற்கொண்ட யாத்திரையின் பயணத் தடம், தங்குமிடம், ரயில் வசதி, உணவு போன்ற வசதிகள் குறித்து மிக விரிவாக அந்நூலில் விளக்கி இருக்கிறார். அங்குள்ள மனிதர்கள், சந்தித்த நபர்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் எனப் பல செய்திகளை சுவாரஸ்யமாக இதில் விளக்கியிருக்கிறார். காசி பற்றிய வர்ணனை இது. "அசி முதல் வருணை வரைக்கும் மத்தியில் ஆயிரம் இரண்டாயிரம் பிராமணர்கள் வரையில் அந்தக் கட்டங்களில் விசுப்பலகையைப் போட்டுக் கொண்டும், குடைகளின் நிழலிலிருந்து கொண்டும், உபசார திரவியங்களான சந்தன, புஷ்ப விபூதி, கோபி சந்தனங்களை வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். இவர்களன்னியில் கெங்காபுத்திரர்கள், காட்டியர்கள், டானியர் என்ற பஞ்சதிராவிட பஞ்ச கெவுடாள் முதலான பிராம்மண யாசகர்கள், பத்துப் பதினையாயிரம் பெயர்கள் வரையில் இருக்கிறார்கள். இந்தக் கட்டங்களில் எங்கு பார்த்தபோதிலும் ஆயிரக்கணக்கான ஸ்நானம் செய்கிறவர்களும், சுவாமி தரிசனத்திற்கு உயர்ந்திருக்கும் படிக்கட்டுகளில் ஏறிப்போகப்பட்டவர்களுமான ஜனங்களின் காக்ஷி வெகுவினோதமாக இருக்கிறது..." என்கிறார்.

இந்த நூலின் இரண்டாம் பாகமாக தக்ஷிண இந்தியா சரித்திரத்தில் (1919) தென்னாட்டு யாத்திரை அனுபவங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார். சென்னையின் வரலாறு, அப்பெயர் வரக் காரணம், மதராஸ் என்ற பெயர் பெறக் காரணம், சென்னையின் புகழ்பெற்ற இடங்கள், மக்கள்தொகை, ஆலயங்களின் சிறப்புக்கள் போன்றவற்றையும் நூல் பேசுகிறது. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல நகரங்களின் ஆலயப் பெருமைகளை இந்நூலில் விளக்கியிருக்கிறார். சான்றாக இன்றைய திருவள்ளூரின் அக்காலப் பெயர் திரு எவ்வுளூர். அதுபோல திருத்தணியின் பழைய பெயர் 'செருத்தணி'. முருகன் சூரபத்மனோடு நடத்திய யுத்தம் முடிந்து 'செரு' தணிந்து ஓய்வெடுத்ததால் இப்பெயர் என்று குறிப்பிடுகிறார். பெங்களூருக்கு அப்பெயர் வரக் காரணம் மொச்சை மிகுதியாக விளைந்ததுதான் என்கிறார். (மொச்சை = பேங்கில்) கோனிமுத்தூரே கோயமுத்தூர் ஆகியிருகிறது என்கிறார். வரலாற்றுக் கருவூலங்களாக இவரது நூல்கள் அமைந்துள்ளன.

நரசிம்மலு நாயுடுவிற்குப் பெருமையையும் எதிர்ப்பையும் ஒரே சமயத்தில் தந்த நூல் 'இந்து பைபில் என்னும் ஆரியர் சத்திய வேதம்'. 'பைபில்' என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதற்காக எதிர்ப்பையும், வேதம், வேதாந்தம், உபநிஷத் ஆகியவற்றிலிருந்து தொகுத்துத் தந்திருப்பதால் பாராட்டையும் பெற்ற நூல் இது. திவான் பகதூர் எஸ். சுப்பிரமணிய ஐயர், தமிழறிஞர் சி.வை, தாமோதரம் பிள்ளை, ஜெயராம் பிள்ளை, வெங்கட்ராம ஐயங்கார் உள்ளிட்ட அறிஞர்களால் பாராட்டப்பட்ட இந்த நூலை தி ஹிந்து, இந்தியன் சோஷியல் ரிஃபார்மர், சித்தாந்த தீபிகை, த மெட்ராஸ் ஸ்டாண்டர்டு உள்ளிட்ட இதழ்களும் பாராட்டியிருக்கின்றன. வேதங்களில் இருந்து சிறந்த கருத்துக்களை எடுத்து அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பையும் கூடவே நீண்ட விளக்கத்தையும் இந்த நூலில் அளித்திருக்கிறார். வேதங்கள், வேதங்களின் பிரிவுகள், உபநிஷத்துக்கள், அவற்றின் பிரிவுகள், சிறப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. நூலில் 'அத்வைத சித்தாந்த ஸார வினா விடை' என்னும் பகுதியில் அத்வைதம் பற்றி, பிரபஞ்ச மாயை பற்றி, உலகம் பற்றி, உலகைப் படைத்தவனான ஈஸ்வரன்பற்றி பல கேள்விகள் எழுப்பப்பட்டு விடை காணப்பட்டிருக்கின்றன. கூடவே விசிஷ்டாத்வைதம், த்வைதம் குறித்தும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது. பல்வேறு சமயங்களையும், மதங்களையும் ஆராய்ந்து அவர் எழுதியிருக்கும் 'மதவிருட்சம்' குறிப்பிடத் தகுந்ததாகும். பல்வேறு மதங்களை ஆராய்ந்து மிக விரிவாக எழுதப்பெற்ற முதல் சமய தத்துவ நூல் அதுதான்.

மகன், மகள் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தது இவரை வெகுவாகப் பாதித்தது. மெள்ள அதிலிருந்து மீண்டு, நூல்கள் எழுதுவதிலும், சமூகப்பணிகளிலும் கவனம் செலுத்தினார். தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான மேடைகளில் உரையாற்றிய பெருமையுடையவர் இவர். 'பிரசங்க சாரகம்' என்று போற்றப்பட்டவர்.

 தமிழ் இதழியலின் முன்னோடி என்றும் இவரைச் சொல்லலாம். இவர் வாழும்போதே இவரது வாழ்க்கை வரலாற்றை ஜீ.எம். வெங்கட்ராம நாயுடு எழுதி வெளியிட்டார். பிரம்ம சமாஜக் கொள்கைகளில் இவருக்கிருந்த பற்று அளவிடற்கரியது. தனது உயிலில் இவர், "அடியிற்கண்ட எனது சொத்துக்களையும் அவற்றின் வருமானத்தையும் கொண்டு கல்கத்தா சாதாரண சமாஜ சாதனாச்சிரமத்தைப் போல 'கோயமுத்தூர் நரசிம்மலு நாயுடு பிர்ம சாதனாச்சிரமம்' என்ற பெயரால் ஒரு தர்மத்தை எனது தோட்ட பங்களாவில் ஸ்தாபிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். வாழ்வாங்கு வாழ்ந்த இவர், ஜனவரி 21, 1922 அன்று காலமானார். இன்றளவும் இவர் பெயரால் கல்வி நிறுவனங்களும், சேவை அமைப்புகளும், அறக்கட்டளைகளும் சிறப்புடன் கோவையில் இயங்கி வருகின்றன. தமிழர்கள் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய முன்னோடி சேலம் பகடால நரசிம்மலு நாயுடு.




நரசிம்மலு நாயுடு எழுதிய 'இந்து பைபில்'.

  சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய இந்திய இலக்கியச் சிற்பிகள்: சே.ப. நரசிம்மலு நாயுடு.

தென்றல்- இலக்கிய இதழ்.

நிச்சயம், வாழ்வில் நிஜமுண்டு..! நிஜமில்லா வாழ்வை தவிர்த்து நிஜமான வாழ்வை வாழ்வோம்..!

இடது, வலது மேலும் நடிப்பு, பாசாங்கு இல்லா நடுநிலை என்றும் நிலைக்கும். வாழ்கை  இரண்டு பக்கம் அனைவருக்கும் இருக்கும்.  மாற்று கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. இன்றைய சமூக நிலையில் விமர்சனம் செய்வது எளிது.  நாம் நாமாக இருக்க வேண்டும். எதையும் கடந்து சொல்ல வேண்டும். இது அவ்வளவு எளிது அல்ல. Every one not perfect… but some extent with self respect and esteem….
••••

நான் 
எனும் கர்வம் மட்டும் 
இல்லையெனில்
அன்பின் 
சுயநல ஆட்டத்தில் 
எப்போதோ நான் தோற்றுப்போயிருப்பேன்

நான் 
எனும் கர்வம் மட்டும்
இல்லையெனில்
துரோகத்தின் விசம் தீண்டி 
எப்போதோ நான் இறந்திருப்பேன்

நான் 
எனும் கர்வம் மட்டும்
இல்லையெனில்
நம்பிக்கையின் பெயரில் 
எப்போதோ நான் கழுவிலேற்றப்பட்டிருப்பேன்

நான் 
நான் என்பதெல்லாம்
அகந்தைதான்
ஆயினும்
அதுதான் 
சமயங்களில்
என்னை 
வைராக்கியமாய் 
வாழச்செய்கிறது

-ரிஸ்கா முக்தார்Riska Mukthar

நிச்சயம், வாழ்வில் நிஜமுண்டு..! நிஜமில்லா வாழ்வை தவிர்த்து நிஜமான வாழ்வை வாழ்வோம்..!

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-1-2024.


*தமிழ் கூறும் நல்லுலகில் நாம் ஸ்ரீராமனை கம்பராமாயணத்தோடுகொண்டாடுவோம்*(4) #*இந்திய வேற்றுமையில்ஒற்றுமை*: *#சங்க இலக்கியத்தில் இராமன்!*

*தமிழ் கூறும் நல்லுலகில் நாம் 
ஸ்ரீராமனை கம்பராமாயணத்தோடுகொண்டாடுவோம்*(4) 
#*இந்திய 
வேற்றுமையில்ஒற்றுமை*:

*#சங்க இலக்கியத்தில்
இராமன்!*
————————————
சங்கப் புலவர்கள் இராமனையும் இராமயணத்தையும் கொண்டாடி வந்துள்ளதை சங்க இலக்கியத்தில் பார்க்கிறோம்.



"கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை 
வலித்தகை யரக்கண் வௌவிய ஞான்றை 
நிலஞ்சேர் மதரணி கொண்ட குரங்கின் 
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு 
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே"

(புறம்-278)

ஊன்பொதி பசுங்குடையார் எனும் தமிழ் புலவர் இராமாயணம் பற்றி கூறும் செய்தி இது. ஆற்றல் மிகுந்த இராமன் சீதையுடன் காட்டிற்கு சென்றான். அங்கு வலிமை மிகுந்த அரக்கன் சீதையை கவர்ந்து சென்றான். செல்லும் வழியில் தன் அணிகலன்களை கீழே  போட்டுகொண்டே செல்கிறாள் சீதை. காட்டில் குரங்குகள் அந்த அணிகலன்களை மாற்றி மாற்றி அணிந்து கொண்ட காட்சியை இந்த புறநானூற்று பாடல் விளக்குகிறது. 

"வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே"

(அகம். 70)

கடுவன் மள்ளனார் எனும் தமிழ் புலவர் மற்றுமொரு இராமாயண செய்தியை கூறுகிறார். இலங்கை படையெடுப்பின் போது இராமன் தொன்முது கோடியில் ஆலமர நிழலில் தங்கி இருந்தார். அப்போது பறவைகள் இடைவிடாது ஆரவாரம் செய்து கொண்டிருந்தது. படையெடுப்பு குறித்து பேச பறவைகளின் ஒலி தடங்களாக இருந்தது. இராமன் தன் கையை உயர்த்தி காட்டினார். உடனே பறவைகள் அமைதியானது என்கிற காட்சி அகநானூறு பாடல் குறிப்பிடுகிறது.

இதுபோல சிலப்பதிகாரம், திருமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் இராமாயணம் பற்றிய செய்திகள் குறிப்பிடபடுகிறது. ஆனால் சங்க இலக்கிய இராமாயண செய்திகள் எதுவும் வால்மீகி இராமாயணத்திலோ இன்னப்பிற இராமாயணத்திலோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. வால்மீகி இராமாயணத்துக்கு முந்தைய நூலும் இருந்திருக்கலாம் என்பதும் ஆய்விற்குரியது. இராமருக்கு எதிரான போலி பிரச்சாரங்களை புறந்தள்ளி சங்க இலக்கிய புலவர்கள், இளங்கோவடிகள், நால்வர் வரை பாடிய இராமனை நாளும் வணங்கி கொண்டாடுவோம்.

#அயோத்திஇராமனுக்கும்_தமிழகத்துக்கும்_என்னதொடர்பு ? 

இந்தியாவிலேயே உத்திரபிரதேசத்தை அடுத்து இராமனுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்ட மாநிலம் என்றால் அது தமிழகம் தான்.  

* இராமர் வாழ்ந்ததற்கான பிரதான அடையாளமாகக் கருதப்படும் இராமேஸ்வரம்
* இராமாயண  காலத்தில் வாழ்ந்து இராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் ஒரு தமிழர் என நம்பிக்கை.
* சீதையை மீட்க இராமனும் அவரது படைகளும் நீண்ட காலம் தங்கிய இடம் தமிழகமே.  தமிழகத்தில் இருக்கிற நூற்றுகணக்கான ஊர்களின் பெயர்கள் இராமாயண சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டவையே.

* இராமர் வனவாசத்தில் இருந்த போது தனது தந்தைக்கு முதல் தர்ப்பணம் கொடுத்த இடம் திலதர்ப்பணபுரி.

* இராமனுக்காக உயிரை தியாகம் செய்த ஜடாயூ பறவை  இறந்து புதைக்கப்பட்ட இடம் வைதீஸ்வரன் கோவில்.

* இராமனின் குழந்தைகள் இலவனும், குஷனும் தங்கி வளர்ந்த இடம் தமிழகம்.

* சோழர்களின் முன்னோன் இராமன் என்பதற்கு பல கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன, அதன் காரணமாகவே தமிழில் கம்பர், ஒட்டக்கூத்தர் என பல புலவர்களால் போட்டி வைத்து  இராமாயணம் பிரமாண்டமாக எழுதப்பட்டது.

* இராமர் கோவில் வழக்கில் 93 வயதில் நீதிமன்றத்தில் போராடி வழக்கில் வெற்றியை நிலைநாட்டி,  இராமஜென்ம பூமியை மீட்ட வழக்கறிஞர் பராசரன்  ஸ்ரீரங்கத்துக்காரர்.

அன்றும் இன்றும் என்றுமே தமிழகமும் இராமனும் பிரிக்கவே  முடியாத இரண்டு இணைகள்.

#தமிழ்நாட்டில்_ராமர்கோவில்கள்

1. ராமேஸ்வரம் - கோதண்ட ராமர்
2. வடுவூர் - கோதண்ட ராமர்
3. மதுராந்தகம் - ஏரிகாத்த ராமர்
4. கும்பகோணம் - ராமசாமி (பட்டாபிஷேகராமர்)
5. திருப்புல்லாணி - தர்பசயன ராமர்
6. திருவள்ளூர் - வீரராகவப் பெருமாள்
7. தில்லைவிளாகம் - வீர கோதண்டராமர்
8. சத்துவாச்சேரி, வேலூர் - ஸ்ரீ ராமர்
9. முடிகொண்டான் - கோதண்ட ராமர்
10. திருபுள்ளம்பூதங்குடி - ஸ்ரீ வல்வில் ராமர்
11. திருவெள்ளியங்குடி - ஸ்ரீ கோலவில்லி ராமர்
12. திருப்புட்குழி - ஸ்ரீ விஜயராகவப் பெருமாள்
13. பருத்தியூர் - கோதண்டராமர்
14. அதம்பார் - கோதண்டராமர்
15. விருதுநகர் - ஸ்ரீ ராமர்
16. சிவகாசி - கல்யாணராமர்
17. வடலூர் - ராமர்
18. நெடுங்குணம் - ராமச்சந்திரப் பெருமாள்
19. ரகுநாதசமுத்திரம், திருவண்ணாமலை மாவட்டம்  - ஸ்ரீ ஞான ராமர்
20.  இஞ்சிமேடு, திருவண்ணாமலை மாவட்டம் - யாக சம்ரக்ஷண ராமர்
21. பெரிய கொழப்பலூர் - ஸ்ரீ சதுர்புஜ ராமர்
22. படவேடு - ஸ்ரீ யோக ராமச்சந்திரன்
23. ஊனமாஞ்சேரி (வண்டலூர் அருகில்) - ஏரி காத்த ராமர்
24. அயோத்தியாபட்டினம், சேலம் - கோதண்டபாணி
25. ராம்நகர், கோயம்பத்தூர் - ஸ்ரீ ராமர்
26. ஒண்டிப்புதூர், கோயம்பத்தூர் - ஸ்ரீ ராமர்
27. ஓசூர் - ஸ்ரீ ராமர்
28. வேங்கடம்பட்டி (நெய்வேலி அருகில்) - ஸ்ரீ ராமர்
29. பொன்பதிர்கூடம் - ஸ்ரீ சதுர்புஜ ராமர்
30. மேப்பூர் - ஸ்ரீ ராமர்
31. மாம்பலம், சென்னை - கோதண்ட ராமர்
32. நந்தம்பாக்கம், சென்னை - ஸ்ரீ கோதண்ட ராமர்
33. தரமணி, சென்னை - ஸ்ரீ ராமர்
34. நூத்தஞ்சேரி, மாடம்பாக்கம், சென்னை - கோதண்ட ராமர்
35.மதுரை பழங்காநத்தம் ராமர் கோவில்.
36. ‪கந்தர்வகோட்டையில் கண்டராதித்த சோழ மன்னன் கட்டிய 1000 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில். சோழர்கள் ராம பக்தர்கள் என்பதற்கான அடையாளம்.‬ இப்படி பல இராமன் கோவில்கள்…


வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
கல் கிடந்தது கானகம் தன்னிலே
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
உயர்ந்தெழுந்தது இராமன் கதை அரோ

கம்பனைப் பற்றிய தனிப்பாடல் திரட்டு.
வில்லென்றது ! 
மிதிலையில் ஜனகனின் மகள் ஜானகியினை மணக்க ஸ்ரீராமன் வளைத்த சிவதனுசு !
கல்லென்றது !
கானகத்தில் சாபவிமோசனம் வேண்டி ஸ்ரீராமன் காலடி படக் காத்திருந்த அகலிகைக்கல் !
நெல்லென்றது !
சடையப்ப வள்ளலின் வீட்டில் ஸ்ரீராமனைப் பாடிய கம்பனுக்காக கிடந்த தானிய நெல் !
சொல்லென்றது !
ராமகாதையினை அழகுத்தமிழில் அற்புதமாய்ப் பாடிய கம்பனின் தமிழ்ச் சொற்கள் !

இத்தனையும், சேர்ந்தெழுந்ததுதான்,,,,
கம்பனின் ராமகாதை !

கம்பன் என்றொரு தமிழன் ! 
இராமகாதையினை எழுதி இருக்காவிட்டால்,,,, ?

இராமன் ! 
இராமசாமி ஆகியிருக்க மாட்டார் !

இராமனுக்காக,,
இந்த தமிழகத்திலே ஊருக்கு ஊர் பஜனை மடங்கள் இருந்தது போல,,,, 
வேறு எந்தக் கடவுளுக்கும்,,இல்லை,,, !

அதனாலேயே,,
ஸ்ரீராமன் !
ஸ்ரீராமச்சந்திரன் !
தமிழகத்தின் ,,, 
தனிப்பெருங்கடவுளாகிப் போனார். !

இது கூடத்   தெரியாமல்,,,,?

ராமன் தமிழன் இல்லை,,,
ராமனுக்கு சேர சோழ பாண்டியர் கோவில் கட்டல,,,
ராமனின் வழிபாடு தமிழர் வழிபாடு இல்ல,,,
அது நாயக்கர் வந்தேறிகள் காலத்துல தமிழ்நாட்டுல நுழைஞ்சது,,,
இப்படின்னு ஏகப்பட்ட உருட்டுகள் !

இப்படிச் சொல்லுறவங்களில் பாதிப்பேரு,,,,
அந்த நாயக்கர் கட்சி ஆளுங்க தான்,,,,
வேடிக்கையாக இருக்கிறது !
-உங்களை எல்லாம் பார்க்கையில்,,,,,-

அந்த
ஸ்ரீராமன் பிறந்த அயோத்தியில்,,,
ஸ்ரீராமன் மீண்டும் கோவில் கொள்கிறான் !
ஸ்ரீராமச்சந்திரனுக்கு !

Velu Pillai

#sriramajanmabhumiVimochan

(படம் -கம்பராமாயணம், சாமி சிதம்பரனார் உரை.)

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-1-2024.

.


தமிழ் கூறும் நல்லுலகில் நாம் #ஸ்ரீராமனை கம்பராமாயணத்தோடுகொண்டாடுவோம்(3) #இந்திய #வேற்றுமையில்ஒற்றுமை: #சிறியனசிந்தியாதான் இன்று அயேத்தியில் ஶ்ரீ ராமர் கோவில் திறப்பு

தமிழ் கூறும் நல்லுலகில் நாம் 
#ஸ்ரீராமனை
கம்பராமாயணத்தோடுகொண்டாடுவோம்(3) 
#இந்திய 
#வேற்றுமையில்ஒற்றுமை:

#சிறியனசிந்தியாதான்

இன்று அயேத்தியில் ஶ்ரீ ராமர் கோவில் திறப்பு
———————————————————-
தாய் என உயிர்க்கு நல்கி,
      தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி!      நெறியினின் நோக்கும் நேர்மை



நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

அவதார புருஷனாகிய ராமன் வாலிவதையின் போது வாலியிடம் சொன்னதாகக் கம்பன் எழுதியுள்ள
கண்ணி இது.

வாலியை சிறியன சிந்தியா தான் என்று ராமன் போற்றுகிறான்!.

ராமா !!அவதார புருஷனாகிய நீ உன் மனைவியைப் பிரிந்திருக்கும் துக்கத்தினால் மட்டுமே எங்கள்  விலங்குக் குலத்தில் குரங்குகளுக்குள் அதாவது சுக்ரீவன் மனைவியை நான் கவர்ந்து விட்டேன்! என்ற நியாயத்தின் பாற்பற்று  நீ மறைந்து இருந்து என்னைத் தாக்கி வீழ்த்தினாய் . எங்கள் விலங்கு வாழ்க்கையில் இது சகஜமானது.
தேவ புருஷன் ஆகிய நீ இப்படி செய்யலாமா? எனக் கேட்கிறான்.

அப்போது ராமன் மேற்கண்ட மொழிகளைச் சொல்வதாக கம்பர் இங்கே அறமுரைக்கிறார்.

மிக உயர்ந்த குணங்களை உள்ள தாய்மை பண்புமிக்க நடுநிலையும் தர்மமும் உடைய  உனக்குநான்  தீமையைச் செய்து இங்கு நிற்கிறேன்  நீ அதைச் சினம் கொள்ளாது பொறுத்தருள்க !. இந்த இடத்தில் ஒரு நாய் போல் தான் நிற்ப்பதாகவும் பணிந்து ராமன் சொல்கிறான்.

தீமையும் வாய்மையிடத்து என்பது போல
ராமனின் செய்கை ஒருவருடைய மனைவியைக் கவர்வது என்கிற அர்த்தத்தில் மட்டும் நிற்கவில்லை.!

காலதேச வர்த்தமானத்தில் கவர்ந்து செல்வது என்பதும் அதை மீட்டெடுக்கும் வெட்சித் திணை என்பதும்  தமிழ் மரபு வழியானது தான். ஆநிரை மேய்த்தலில் அல்லது அதன் திணையில் தமிழன் ராமரை மனம் கொள்கிறான்.

ஒரே நேரத்தில் சுக்கிரீவனின் மனைவியையும் சீதையையும் மீட்கும் நிலை தான் கவர்ந்து செல்லுதல் மீட்டல் என்கிற இருநிலை பண்பில் மேலோங்கி நிற்கிறது.

நிலத்தையும் பெண்ணையும்  கால்நடைகளையும் மீட்பது என்பது இந்தியத் தத்துவம் சார் நிலைப்பாடு.
அது வேட்டல் வணங்குதல் என்கிற பல்வேறு கூறுகளைக்கொண்ட தாய் வழிச் சமூகத்தின் கொடைகள் ஆகும்.

இந்த இடத்தில் ராமன் வாலியை சிறியன சிந்தியாதான் என்று பாராட்டுவது அல்லது அவனை போற்றுவதும் கூட இந்த செயல்களை  அவன் செய்ய மாட்டான் அவன் நல்லவன் என்கிற அர்த்தத்தில்தான். 

வாலிக்கும் சுக்ரீவனுக்கும் நடந்த சகோதர சண்டையில்  மனைவியை கவர்வது சிறிய செயல் அதைச்  செய்யக் கூடியவன் அல்ல வாலி என்பதுதான் இதன் உட்கிடை.
 .
வாலி வதையில் இன்னும் மிகப்பெரிய சிக்கலாக இருக்கக்கூடிய காரணங்களைப் பல்வேறு அறிஞர்கள் பேசிய பிறகும்
வாலி வதையின் அர்த்தம் இன்னும் பல ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன். அந்த வகையில் ஒரு படைப்பிற்கு பல்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன அவரவர் அர்த்தங்களை வைத்துக்கொண்டு முரண்பாடுகள் ஏற்படுத்துவதை விட அதன் உண்மையான நோக்கம் என்ன என்பதைப் பார்ப்பது தான் முக்கியமானது.

அப்படி தன்னைத் தாழ்த்திப் பிறரை பெருமைப்படுத்தும் ராமன் ஏன் ஒரு கதாநாயனாக இருக்கிறான் என்பதற்கு இக்காரணங்கள் போதுமானது என்பது எனது வாசிப்பு.

வாழ்க ஶ்ரீராமன் புகழ்!

#sriramajanmabhumiVimochan

(படம் -கம்பராமாயணம்,  ரா. பி. சேதுப்பிள்ளை உரைகள்.)

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-1-2024.


Sunday, January 21, 2024

*தமிழ் கூறும் நல்லுலகில் நாம் ஸ்ரீராமனை கம்பராமாயணத்தோடுகொண்டாடுவோம்* (2)

*தமிழ் கூறும் நல்லுலகில் நாம்
ஸ்ரீராமனை


கம்பராமாயணத்தோடுகொண்டாடுவோம்* (2)
————————————
“இனையது ஆதலின் எக்குலத்து யாவருக்கும் வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும் அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி என்றான் மனுநீதியான்”.

 இது கம்பராமாயணத்தில் வரும் ஒரு மானுடவியல் வாழ்வின் தத்துவப் பகுதி.

பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என்பதற்கு இணங்க  இந்தக் கண்ணி கம்பராமாயணத்தில் ஒரு முக்கியமான இடத்தை குறிப்பிட்டு நிற்கிறது.

தமிழின் ஈராயிரம் ஆண்டு காலப் பழமையான தமிழ் மொழியில் கம்பன் வடமொழி ராமாயணத்தைத் தழுவி எழுதிய போது ராமனை அந்தச் சக்கரவர்த்தி திருமகனை  இந்திய அரசியல் சார்ந்த உன்னத தலைவனாக  தன் முழு கவித்திறனைப் பயன்படுத்தி  அவரது  சாகசப் பாவினமான ஆசிரியப்பாவில் பல்வேறு வகையாக விதந்து ஓதுகிறார்.

இந்த வகையில் எல்லோருக்கும் முன்பாக இந்தியாவின் ஒருமைப்பாட்டை கம்பன் ராமனின் கீழ் ஒரு இறையாண்மை தத்துவமாக நிறுவுகிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையான்.

என்ற வள்ளுவரின் வாக்கில் இருந்து அல்லாமல் கம்பன் மேற்சொன்ன கண்ணியில் மனிதர்களில் பண்பு தான் முக்கியம் . அத்தகைய உன்னதப் பண்புமிக்கவன் ராமன்.

அவன் தன் செயல்களாலே அறியப்பட்டான்.

என்று இந்த இடத்தில் ராமனை ஒரு அரசியல் அறவாதியாக முன்வைத்து  தனது கவி ஆற்றலால்   செயத்தக்கச் செயலைச் செய்து  கீழ்மையான பண்புகளை தன்னிலிருந்து  தவிர்த்தபடி இந்திய அழகியல் கோட்பாட்டில் உன்னதமடைந்த குறியீட்டு உதாரணம்  ராமன் என்பதை அழகான தமிழில் கம்பரை போல யாரும் இதுவரை எழுதவே இல்லை.

ராமாயணம் வால்மீகி வழியாக சமஸ்கிருதத்திலிருந்து வந்ததை விட கம்பன் அவரை தமிழில் கொண்டாடியது உலகத்தில் எந்த ஒரு காவியம் மரபிற்கும் இணையானது . ஹோமரின்  ஒடிசி இன்னும் பல கிரேக்க க்காவியங்களுக்கு இணையாக ராமன் நிறுத்தப்படுகிறான்.

அவனை ஏழை பங்காளன் என்று கம்பர் வர்ணிக்கிறார்.

ஒரு பின்நவீனத்துவ நோக்கிலோ இல்லை ஒரு பேரரசுகள் உருவாகும் காலத்தில் உண்டான அமைப்பு வாதங்களிலோ ஒரு அருமையான உணர்வு சார்ந்த மக்கள் மீது பண்புறுதியான மனிதனாய் அரசு அறம்முரைத்த  ராமன் என்பது தான் இந்திய கீழைத் தேய தத்துவத்தில் கம்பரால் நிலைநிறுத்தப்படுகிறது.

ராம ராஜ்ஜியம் என்பது இடதுசாரிகளோ அனைத்து தத்துவாதிகளோ சொல்வது போல ஒரு உட்யோப்பியன் நிர்வாக முறை தான். அது இந்தியாவில் ராமன் என்கிற தத்துவத்தில் தான் முன்னும் பின்னுமாக நிலைபெறுகிறது.
வெறும் வாய்ச்சவடால் காரர்களுக்கு கம்பனிடமிருந்து எந்த வாய்ப்பும் இல்லை. அப்படித்தான் இந்திய தேசியக் கவி பாரதி தமிழ் மொழியை போல் இனிதானதை வேறு எங்கினும் காணேன் என்று பாடியதோடு கம்பரை போல் வள்ளுவனைப் போல் இளங்கோவை போல் நான் யாரையும் பூமி தனில் கண்டதில்லை என்றும்  தன் இளம் வயதில் பாடிப் போனான். கம்பரும் தமிழும் என்பது இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் குரல் அதிலிருந்து கம்பரையும் தமிழையும் பிரிக்க முடியாது. இங்கு சுயநல நோக்கத்தோடு தன் குடும்பத்தை அரசு அதிகாரங்களின் வழியே காப்பாற்றுகிற கழிசடைகளுக்கு அந்த மேன்மை எல்லாம் புரியாது.

அந்த வகையில் கம்பன் மேன்மைக்கும் கீழ்மைக்கும் இடையே அற்புத குணங்களைக் கொண்ட ராமனைப் பாடிய பெருங்கவி! வாழ்க  அவனது புகழ்!!

(படம் -கம்பராமாயணம்,  உவேசா பதிப்பு.)

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
21-1-2024.ப

Friday, January 19, 2024

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா சங்குப்பட்டி கிராமத்தில் எனது குலதெயவம் ஸ்ரீ அக்கம்மாள் லட்சுமி அம்மாள் திருக்கோவில் தை மாதம் எமது சார்பில் இன்று இரவு (19-1-2024)வெள்ளிக்கிழமை முதல் பூஜை சிறப்பாக நடைபெற்றது

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா சங்குப்பட்டி கிராமத்தில் எனது குலதெயவம் ஸ்ரீ அக்கம்மாள் லட்சுமி அம்மாள் திருக்கோவில் தை மாதம் எமது சார்பில் இன்று இரவு (19-1-2024)வெள்ளிக்கிழமை முதல் பூஜை சிறப்பாக நடைபெற்றது வாழ்க வளமுடன் 









வளர்க வையகம்.


"#*லட்சத்தீவு developஆச்சுனா மாலத்தீவு ஒன்னுமில்லை*"| Ksr | ksrvoice | #Modi #Lakshadweep

"#*லட்சத்தீவு developஆச்சுனா மாலத்தீவு ஒன்னுமில்லை*"| Ksr | ksrvoice |
#Modi
#Lakshadweep
#Snorkeling 
#கேஎஸ்ஆர்,#கேஎஸ்ஆர்போஸ்ட்,#கேஎஸ்ராதாகிருஷ்ணன்,#கேஎஸ்ஆர்வாய்ஸ்,#ksr,#ksrvoice,#ksrpost,#ksradhakrishnan
 #Maldives, #maldivesislands, #maldivesbeach, #maldives2024, #maldivespresident, #maldivesislands, #modi, #lakshadweep #indiavschina, #maldivesvsindia, #lakshadweepvsmaldives, #lakshadweepislands, #lakshadweepnews, #maldivesnews #narendramodi #narendramodinews 

youtu.be/rXLo-8J4pSE?si=5ml1aY-FNOh53uM0

#கேஎஸ்ஆர்வாய்ஸ்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
19-1-2024.

Thursday, January 18, 2024

தமிழ் கூறும் நல்லுலகில் நாம் ஸ்ரீராமனை கம்பராமாயணத்தோடு கொண்டாடுவோம் .




கலைக்கோட்டு முனிவர் ( ரிஷ்யசிருங்கர் ) மன்னர் தசரதரிடம் மைந்தரை அளிக்கும் வேள்வி இயற்றவேண்டும் என கூறுதல்;

கம்பர், 
என்றலும், 'அரச! நீ இரங்கல்; இவ் உலகு
ஒன்றுமோ? உலகம் ஈர் - ஏழும் ஓம்பிடும்
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக, ஈண்டு!' என்றான்.

(படம் -கம்பராமாயணம், கம்பன் கழகம் பதிப்பு. முதல் பதிப்பு-1976, நான்காம் பதிப்பு1984)

*Integrating of 550 + Princely States 1947 with India*

*Integrating of 550 + Princely States 1947 with India*
————————————
It is common for people to talk of some 550+ Princely States of India. That is a fiction. It does not represent the reality on the ground. It does not even represent the members of the states who were part of the Chamber of Princes. Read on:

The British ruled India with two administrative systems: British Provinces and Indian "princely" states; about 60% of the territory of the Indian sub-continent were provinces and 40% 
were princely states. Provinces were British territories directly administered by the colonial government of British India. Princely states were states with native rulers which had entered into treaty relations with the British by treaty (in case of the 40 important states, as of 1947) or by short declaration (sanad). 
  Except for some states that were extinguished by the middle of the 19th century (such as Arkat, Assam, Awadh, Jhansi, Kangra, Kannanur, Kodagu, Kozhikode, Kullu, Nagpur, Pañjab, Satara, Surat, Tanjur, Utkala), this record contains those Indian ("princely") states that existed after the end of the East India Company rule in 1858 and acceded to India with effective date on or after 15 Aug 1947. This list is selective, there were roughly 584 states when Britain granted the Indian independence on 15 Aug 1947; about 262 are listed here (not listed are most of the small Gujarat states). Rulers of 118 states (113 in modern India, 4 in Pakistan, plus Sikkim) were entitled to gun salutes. Number of guns indicated rank of the ruler (hereditary number of guns as of 1947 noted below under each state. The states continued after their accession to India until their "integration" (merger into larger provinces/states or in case of 9 states becoming provinces/states on their own) at various dates from Jan 1948 to Jan 1950 (Jammu and Kashmir in 1952). Personal privileges of former rulers were abolished in 1971. 
  However, only "states" are included; "estates" (jagir), "estate revenue grants" (thikana), and "land grants" (zamindari) are excluded, no matter how prominent and/or titled their their jagirdars, thakurs, or zamindars were. It appears though that before 1858 the British did not clearly distinguish between states and estates. An exception is made for eight estates in direct relations with the British as of 1947 that were not part of the British India provinces. Obsolete but once official English-language names  of the polities are given in parentheses, i.e., Awadh (Oudh). The princely states of India entered into protectorate/tributary relations with Britain by the end of the 19th century, where exact dates are known they are noted. The phrase "British India" is used for U.K. colonial possessions even before 1858, for brevity.  
  British (and Indian) local political officers (residents, agents, commissioners) usually were in charge of multiple states, they are recorded under the state where they had their office or under one of largest states. The Residents and Agents to the Governor-General (AGGs) were political officers of the highest rank (almost all of them are recorded in this record), the Political Agents and others (their record is selective) ranked below the Residents and AGGs, and were subordinated to the Residents or AGGs or the provincial governors, representing the Governor-General.

Here is a list of Princely States of India

1. Ajaygarh (Ajaigarh) 
2. Akkalkot 
3. Alipura 
4. Ali Rajpur 
5. Alwar 
6. Amarnagar (Thana Devli) 
7. Ambaliara (Ambalaria) 
8. Angul 
9. Arkat (Arcot) 
10. Assam 
11. Athgarh 
12. Athmallik (Athmalik) 
13. Aundh 
14. Avuku 
15. Awadh (Oudh) 
16. Baghal 
17. Baghat 
18. Bajana 
19. Balasinor 
20. Balsan (Balson) 
21. Bamra 
22. Banaras (Benares) 
23. Banda 
24. Banganapalle 
25. Bangahal 
26. Bangala 
27. Banka Pahari 
28. Bansda 
29. Banswara 
30. Baoni 
31. Baramba 
32. Baraundha Pathar Kachhar 
33. Bariya (Baria) 
34. Baroda 
35. Barwani 
36. Bashahr 
37. Basoda 
38. Basohli 
39. Bastar 
40. Baudh 
41. Beja 
42. Beri (Beri
43. Bundelkhand) 
44. Bhadrawa (Bhadrawah) 
45. Bhaisaunda 
46. Bhajji 
47. Bharatpur 
48. Bhavnagar 
49. Bhopal 
50. Bhor 
51. Bhutan 
52. Bihat 
53. Bijawar 
54. Bijna 
55. Bikanir (Bikaner) 
56. Bilaspur 
57. Bilkha 
58. Bonai 
59. Bundi 
60. Chamba 
61. Chanderi 
62. Chang Bhakar 
63. Charkhari 
64. Chhatarpur 
65. Chhota Udaipur 
66. Chhuikadan (Chhuikhadan) 
67. Chota Nagpur 
68. Chuda (Chura) 
69. Cochin (Kochin) 
70. Cooch Behar (Koch Bihar) 
71. Coorg (Kodagu) 
72. Cutch (Kachh) 
73. Dangs 
74. Danta 
75. Daphlapur (Daflepur) 
76. Darkoti 
77. Daspalla 
78. Datia 
79. Dewas Junior Branch 
80. Dewas Senior Branch 
81. Dhami 
82. Dhar 
83. Dharampur 
84. Dhenkanal 
85. Dholpur
86. Dhrangadhra (Halwad
87. Dhrangadhra) 
88. Dhrol 
89. Dhurwai 
90. Dujana 
91. Dungarpur 
92. Faridkot and Kot Kapura 
93. Farrukhabad 
94. Gangpur 
95. Garrauli 
96. Gaurihar 
97. Gondal 
98. Guler 
99. Gwalior 
100. Haydarabad (Hyderabad) 
101. Hindol 
102. Idar(Ahmadnagar 
103. Baad 
104. Morasa 
105. Soor) 
106. Indaur (Indore) 
107. Jafarabad and Janjira 
108. Jaintia 
109. Jaipur 
110. Jaisalmir (Jaisalmer) 
111. Jaitpur 
112. Jalaun 
113. Jambughoda 
114. Jamkhandi 
115. Jammu 
116. Jamnia, Nimkhera and Rajgarh 
117. Jaora 
118. Jasdan 
119. Jashpur 
120. Jaso (Jassu) 
121. Jaswan 
122. Jath (Joth) 
123. Jawhar 
124. Jetpur 
125. Jhabua 
126. Jhajjar 
127. Jhalawar 
128. Jhansi 
129. Jigni 
130. Jind 
131. Jobat 
132. Jodhpur 
133. Jubbal 
134. Junagadh 

135. Kachari 
136. Kachh (Kutch) 
137. Kadana 
138. Kalahandi 
139. Kalsia 
140. Kambay (Cambay) 
141. Kamta Rajaula 
142. Kangra 
143. Kanika 
144. Kanker 
145. Kannanur (Cannanore) 
146. Kapurthala 
147. Karauli 
148. Kashtwar 
149. Kathiwara (Kathiwada) 
150. Kathiwada (Kathiwara) 
151. Keonjhar 
152. Keonthal 
153. Khairagarh 
154. Khandpara 
155. Khaniadhana 
156. Kharsawan 
157. Kashmir 
158. Khasi States 
159. Khilchipur 
160. Khirasra 
161. Kishangarh 
162. Koch Bihar (Cooch Behar) 
163. Kochin (Cochin) 
164. Kodagu (Coorg) 
165. Kolaba (Colaba) 
166. Kolhapur 
167. Korea 
168. Kota (Kotah) 
169. Kotda
170. Sangani 
171. Kothi 
172. Kotkhai 
173. Kozhikode (Calicut) 
174. Kullu 
175. Kumaon 
176. Kumharsain 
177. Kunihar 
178. Kurandvad Junior Branch 
179. Kurandvad Senior Branch 
180. Kurnool 
181. Kurwai 
182. Kushalgarh 
183. Kutlehar 
184. Lakhtar 
185. Lathi 
186. Lawa 
187. Limbdi 
188. Loharu 
189. Lugasi 
190. Lunavada (Lunawada) 
191. Mahisur (Mysore) 
192. Mahlog (Mahilog) 
193. Maihar 
194. Makrai 
195. Maler Kotla 
196. Malia (Maliya) 
197. Malpur 
198. Manavadar (Bantva
199. Manavadar) 
200. Mandi 
201. Mangal 
202. Manipur 
203. Mansa 
204. Mathwar 
205. Mayurbhanj 
206. Miraj Junior Branch 
207. Miraj Senior Branch 
208. Mohanpur 
209. Morvi 
210. Mudhol 
211. Muhammadgarh 
212. Muli 
213. Nabha 
214. Nagodh 
215. Nagpur 
216. Naigawan
217. Rebai 
218. Nalagarh 
219. Nandgaon (Raj Nandgaon) 
220. Nargund 
221. Narsinghgarh (Narsingarh) 
222. Narsinghpur 
223. Nawanagar (Navanagar) 
224. Nayagarh 
225. Nayagaon 
226. Nilgiri 
227. Nimrana 
228. Nurpur 
229. Orchha 
230. Pahra 
231. Pal Lahara 
232. Palanpur 
233. Paldeo 
234. Palitana 
235. Pañjab (Punjab) 
236. Panna 
237. Partabgarh 
238. Pataudi 
239. Patdi 
240. Pathari 
241. Patiala 
242. Patna 
243. Peshwa's dominions (Pune) 
244. Phaltan 
245. Piploda 
246. Poonch (Punch) 
247. Porahat 
248. Porbandar 
249. Pudukottai 
250. Radhanpur 
251. Raigarh 
252. Rairakhol 
253. Rajauri (Rajouri) 
254. Rajgarh 
255. Rajkot 
256. Rajpipla 
257. Ramdurg 
258. Ramnad 
259. Rampur 
260. Ranasan 
261. Ranpur 
262. Ratanmal 
263. Ratlam 
264. Rewa (Rewah) 
265. Sachin 
266. Sakti 
267. Sambalpur 
268. Samthar 
269. Sandur 
270. Sangli 
271. Sangri 
272. Sanjeli 
273. Sant 
274. Sardargadh 
275. Sarila 
276. Satara 
277. Savantwadi (Savantvadi) 
278. Savanur 
279. Sayla 
280. Seraikella 
281. Shahpura 
282. Shailana (Sailana)
283. Siba (Dada
284. Siba) 
285. Sikkim 
286. Sirmur 
287. Sirohi 
288. Sitamau 
289. Sivaganga 
290. Sohawal 
291. Sonepur (Sonpur) 
292. Suket 
293. Surat 
294. Surgana 
295. Surguja 
296. Talcher 
297. Tanjur (Tanjore) 
298. Taraon 
299. Tehri Garhwal 
300. Tharad 
301. Tharoch 
302. Tigiria 
303. Tiruvidamkodu (Travancore) 
304. Tonk 
305. Tori
306. Fatehpur 
307. Tripura (Hill Tipperah) 
308. Udaipur (Madhya Pradesh) 
309. Udaipur (Mewar) 
310. Utkala (Khurda, Orissa) 
311. Vadia 
312. Vala (Vallabhipura) 
313. Valasna (Walasna) 
314. Vankaner (Wankaner) 
315. Vijaynagar (Pol)
316. Virpur 
317. Wadagam (Vadagam) 
318. Wadhwan 
319. Wadi (Vadi) 
320. Wao (Vav, Wai) 
321. Zainabad 

Map of Princely States of India for 1934-1947.

#ksrpost
18-1-2024.


Wednesday, January 17, 2024

#தைபொங்கல் -சிறுகிழங்கு -பனங்கிழங்கு -சுண்டக்கறி



————————————
தென் தமிழகத்து கரிசல் பூமியில் மட்டுமே அதிகம் விளையும் வருடத்தில் தை பொங்கல் முதல் 3 மாத காலங்கள் மட்டுமே கிடைக்க கூடிய சுவையான சிறு கிழங்கு நீங்கள் சாப்பிட்டது உண்டா? . சிறுகிழங்கு, (Coleus parviflorus அல்லது Plectranthus rotundifolius) லேபியேட்டே குடும்பத்தைச் சேர்ந்தது. இது கேரளா, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் கிழங்கு வகைப்பயிராகும். இது இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை,ஆப்ரிக்கா போன்ற வெப்பமண்டலப்பகுதிகளில் காணப்படுகிறது.

மற்றவை பொங்கலன்று அதிகாலையில் என் வீடு தேடி வந்தது ஒரு கட்டு பனங்கிழங்கு. பனங்கிழங்குகளை வேக வைத்து சாப்பிடும்போது நிஜமாகவே வேறு வகையான ருசி.. பனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துட் செல்லும் வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்கு உருவாகின்றது. இதுவே பனங்கிழங்கு ஆகும். ஒரு முனை கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம் கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய கூம்பு வடிவான இக் கிழங்கு ஓர் அடி வரை நீளமானது.
நாரை எனும் பறவையின் நீண்ட கூரிய அலகு, இளம் மஞ்சள் நிறமான, நீண்ட கூம்பு வடிவம் கொண்ட பனங்கிழங்கு போலிருப்பதால், சத்திமுற்றப்புலவர் எனப்படும் சங்ககாலப் புலவர் ஒருவர் நாரையின் அலகுக்கு உவமையாகப் பனங்கிழங்கைப் பின்வருமாறு எடுத்தாண்டுள்ளார்.

‘நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் ....’

பொங்கல்  காலம் என்றால்  மேலும் நினைவுக்கு வருவது சுண்டக்கறி .  சாப்பிட்டு பார்த்தால் தெரியும் இந்த சைவ உணவின் சுவை .

சாப்பாட்டை ரசனையாக உண்ணும் திருநெல்வேலிக்காரர்கள் வரலாற்றில் சுண்டக்கறி முக்கிய இடம்பெறும்.

தைப் பொங்கல் அன்று வாசலில் பொங்கல் வைத்து, இலையில் படைத்த காய்கறிகளை கொண்டு அவியல், பூசணிக்காய் பச்சடி, புடலங்காய் பொறியல், சிறுகிழங்கு பொறியல் ஆகியவற்றுடன் இடி சாம்பார் வைத்து மதியம் சாப்பிடுவது வழக்கம்.

பொங்கல் அன்று மதியம் பொங்கலுக்கென்றே சிறப்பாக கிடைக்கும் சிறுகிழங்கு, சேப்பங்கிழங்கு, பிடி கிழங்கு ஆகியவற்றுடன் கேரட், பீன்ஸ், உருளை, சீனி அவரைக்காய், முருங்கைக்காய், நாட்டு வாழைக்காய், மாங்காய் ஆகியவை சேர்த்து அவியல் செய்வார்கள்.

அது போல பொங்கச்சோறுக்கு என்றே திருநெல்வேலி பகுதியில் பல வித காய்கறிகளை கொண்டு இடி சாம்பார் என்ற குழம்பு வைப்பார்கள்.

இதோடு பூசணிக்காய் பச்சடி அல்லது வெண்டக்காய் பச்சடி , சிறு கிழங்கு பொறியல் வகைகள் என தயார் செய்து பொங்கல் விருந்து தடபுடலாக நடைபெறும்.

பொங்கல் அன்று மதியம் இதனை உண்டு ஒய்வெடுத்த பின்னர் இரவில் மீதமிருக்கும் (கட்டாயம் மீதமிருக்கும் அதற்காகவே அதிகமா வைப்பார்கள் )இடிசாம்பார், அவியல், பச்சடி என அனைத்தையும் கொண்டு சுண்டக்கறி வைக்கும் படலம் இனிதே துவங்கும்.

✨அதென்ன சுண்டக்கறி?✨

மதியம் வைத்த இடி சாம்பார், அவியல், பச்சடி, பொறியல் என அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து அதனை மீதமான தீயில் சூடேற்ற வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து சுண்டி வரும். அதன் வாசனையே ஒரு விதமாக ரம்மியமாக இருக்கும்.

இந்த கலவையோடு தேவைக்கேற்ப சற்று புளிக்கரைசல் மற்றும் மிளகாய் வத்தல் பொடி, உப்பு சேர்த்து மண் சட்டியில் சுண்ட வைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

✨✨
பொங்கல் விட்ட சாதத்தை முந்தைய நாள் இரவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வைத்து விடுவோம். இந்த சாதம் தான் எங்களுக்கு மறுநாள் மதிய உணவே....

இந்த பொங்கச்சோறில் (பழைய சோறு) தயிர் விட்டு பிசைந்து சாதம்பாதி சுண்டகறி பாதின்னு சுண்டக்கறிய தொட்டு சாப்பிட்டால் பச்சரிசி சாதம் உருண்டை உருண்டையா உள்ள போறதே தெரியாம வயித்தை நிரப்பிடும்.

பொங்கலுக்கு மறுநாளுக்கு மறுநாள் பொங்கல் சோறு தீர்ந்திடும். ஆனா சுண்டக்கறி இருக்கும். கொஞ்சம் சூடா சாதம் வடிச்சு சுண்டக்கறி சேர்த்து அதில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்....

அதே சுண்டக்கறியை சூடாக தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆகா.... சுவையோ சுவையாக இருக்கும்....

#பொங்கல்காட்சிகள்

#சிறுகிழங்கு
#பனங்கிழங்கு
#சுண்டக்கறி

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-1-2024.


#பேரரசர் கிருஷ்ண தேவராயர்

இன்று 553வதுஜெயந்தி விழா 
#பேரரசர் கிருஷ்ண தேவராயர் அவதரித்த திருநாள்
இன்றைக்கு உள்ள பாதி  இந்தியாவை தன்னுள் #விஜயநகர_பேரரசு கீழ் கொண்டுவந்து ஆட்சி புரிந்த 


இந்தியாவின் கலாச்சாரத்தை பாதுகாத்த மாபெரும் பேரரசர் அவருடைய அவதார நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் நெஞ்சுரம் கொண்டு வணங்கி மகிழ்கிறோம்




எழுத்தாளர் "#ஸ்வாமிநாதஆத்ரேய" #மாணிக்கவீணை. தமிழ் -சமஸ்கிருத- இசையறிஞர். நூலாசிரியர்.கொரக்பூர் கீதாபிரஸ் வெளியிட்ட பகவத்கீதையை சமஸ் கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர்.

எழுத்தாளர்  "#ஸ்வாமிநாதஆத்ரேய"

#மாணிக்கவீணை.

தமிழ் -சமஸ்கிருத- இசையறிஞர்.
நூலாசிரியர்.கொரக்பூர் கீதாபிரஸ்
வெளியிட்ட பகவத்கீதையை சமஸ்
கிருதத்திலிருந்து தமிழில்  மொழி
பெயர்த்தவர்.ஆன்மிகச் சொற்பொழி
வாளர்.  மணிக்கொடி எழுத்தாளர்.
என்மேல் நேசம்கொண்டவர்.

மௌனி,சிட்டி,  திருலோகசீதாராம்,
தி.ஜானகிராமன், எம்விவி, கரிச்சான்குஞ்சு,குபரா போன்றோர்களின் நெரு



ங்கிய சகா. தமிழ் இலக்கிய உலகம்
மறந்துவிட்ட பேராளுமை. தஞ்சை
ப்ரகாஷ் என்ற ஆசானின் ஆசான்.



*சுடுநீரில் குளிக்கமுடியாதவன் நெருப்பில் பாய்வானா*! *பினராயி விஜயன்* *தமிழக நதிநீர் உரிமைகளை மறுக்கும் பினராயி* *மாநிலங்களுக்கான உரிமைகள் கேட்டு டெல்லியில் போராட்டமும் நடத்த இருக்கிறாராம்*. *தமிழகம்கேரள* *நதி நீர் சிக்கல்கள்*

*சுடுநீரில் குளிக்கமுடியாதவன்*
*நெருப்பில் பாய்வானா*!

*பினராயி விஜயன்* 

*தமிழக நதிநீர் உரிமைகளை மறுக்கும் பினராயி* *மாநிலங்களுக்கான உரிமைகள் கேட்டு டெல்லியில் போராட்டமும் நடத்த இருக்கிறாராம்*.

*தமிழகம்கேரள*
*நதி நீர் சிக்கல்கள்*
————————————
வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் மாநிலங்களுக்கான அதிக உரிமைகள் கேட்டு டெல்லி ஜந்தர்மந்திரில் பேரணியும் போராட்டமும் நடத்த இருக்கிறாராம்.

தன் முதுகுக்கு பின்னால் நூறு அழுக்கை வைத்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்யும் வேலை.

தமிழக உரிமைகள்;மங்களா தேவி கண்ணகி கோவில் சிக்கல்,மேற்கு மலை தொடர்ச்சியில் நெய்யாறு, அடவி நயிநானர், முல்லைப் பெரியாறு, ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழா, பம்பாறு, சிறுவானி எனப் பெருகிவரும் பத்து நீர் ஆதாரங்கள்  தமிழகத்திற்கு தர எத்தனை பேச்சு வார்த்தைகள் நடத்தியும்  பயனில்லை.  உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் vs கேரளம் என பல வழக்குகள். இதற்கு பினாராய் என்ன சொல்கிறார். அவர் பதில் சொல்ல மாட்டார். எந்த ஒரு முடிவிற்கும் கட்டுப்படாமல் போக்கு காட்டி வருகிற  கேரளமுதல்வர் அண்டை மாநிலத்திற்கு தனது பெருந்தன்மையை அறுத்துக் கட்டுகிறார். குதிரை குப்பறத்தள்ளியது  போக குழியும் பறித்த  கதையாய் ஏராளமான மருத்துவ கழிவுகள் குப்பைகள் இறைச்சி கழிவுகள் எனக் கொண்டு வந்து தமிழக எல்லைகளில் நைச்சியமாகக் கொட்டி விட்டு போகும் கேரள ட்ரக்குகளைக்
கட்டுப்படுத்த வழியைக் காணோம். நான் கேட்கிறேன் தூய்மைக் கேரளாவிற்கு தமிழ்நாடு என்ன குப்பை தொட்டியா? தமிழகத்திலிருந்து அரிசி, காய்கறிகள், வைக்கோல் என பல அவசிய பொருட்களை கேரளம் எடுத்தும் கொள்கிறது. திருட்டு மணல் கடத்தல் வேறு.



நில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசின் முயற்சி வேறு என பல சிக்கல்கள்

கேட்டால் தண்ணீர் தருவதற்கு சட்டமன்ற அனுமதி வேண்டும் என்று கூறுகிறார்.  சட்டமன்றத்தில் அனுமதி வாங்கி தான் அடுத்த மாநிலங்களுக்கு தண்ணீர் தர  முடியும் என்கிற ஷரத்து அடிப்படையான நீர் பங்கீடு சட்டங்களில் இல்லை. நீர் மேலாண்மை  அண்டை மாநிலங்களோடு சரியான முறையில் பகிர்தளிக்கப்பட வேண்டும்!  இதற்கு பதில் சொல்ல திராணியில்லாமல் இவர் அனைத்து மாநிலங்களுக்கும்  அதிக உரிமை கேட்டு போராட பினராயி விஜயன் டெல்லிக்குப் போகிறாராம். மத்திய மாநில உறவுகளை பேணுகிறாராம்!

சுடுநீரில் குளிக்க முடியாதவன்
நெருப்பில் பாய்வானா!
உன் கண்ணில் உத்தரம் அளவுக்கு தூசியை வைத்துக்கொண்டு அடுத்தவர் கண்ணில் அரும்பு போல தூசி இருக்கிறது இன்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

கேரளா மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் இணைந்திருக்கிறது. நான் கேட்பது இத்தகைய மாநிலங்களின் உறவை அவர் பினராயி விஜயன் உண்மையில் பேணுகிறாரா?
கடவுளின் பூமி என்று பெருமை பீத்திக் கொள்ளும் கேரளாவிற்கு முதல்வராக இருக்கும் இவர் தமிழகத்தை எவ்வாறு மதிப்பிடுவார்!

தன் மாநிலம் குறித்த இந்த நெறியற்ற செயல்கள் புரிந்து கொண்டு தான் மற்ற மாநிலங்களுக்கு போராடக் கிளம்பி பினராயி விஜயன் இருக்கிறாரா?

இத்தகைய அடையாள அரசியல் எல்லாம் யதார்த்த பூர்வமாக இருக்க முடியாது. தன்னை தக்க வைத்துக்கொள்ள பிறரை குறை சொல்லும் இந்த மாண்பு முதலில் தன்னை சீர்திருத்திக் கொண்டு எல்லாவற்றிலும் சரியாக இருந்து கொண்டு தான் அரசியலில் தன்னை முன்மொழிந்து கொள்ள வேண்டும்.

திமுக- சிபிஎம் அரசியல் தலைமைகளின் அருகே மட்டும் தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும்  ஏதோநல்லுறவு  இருப்பது போல் இரு பக்கமும் நடிக்கிறார்கள்.

தமிழகம் தூய்மை மாநிலமா⁉️உங்கள் கேரளத்தின் குப்பைத்தொட்டி மாநிலமா⁉️
முதலில் அதை சீர்படுத்துங்கள்.

#தமிழகம்கேரள_நதிநீர்சிக்கல்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-1-2024.


Tuesday, January 16, 2024

அவமானம் படுதோல்வி… எல்லாமே உரமாகும்… தோல்வியின்றி வரலாறா … ⁉️

அவமானம் படுதோல்வி…
எல்லாமே உரமாகும்…
தோல்வியின்றி
வரலாறா … ⁉️
————————————



உன்னை பற்றிய விமர்சனம்  குறித்து என்றும் கவலை பட தேவை இல்லை. நாம் நாமாக  நம் நேர்மையான பணிகளில் இருக்க வேண்டும் என என் தந்தை எனக்கு சொன்ன அறிவுரை. 

‘’மனிதா உன் மனதை கீறி…
விதை போடு மரமாகும்…
அவமானம் படுதோல்வி…
எல்லாமே உரமாகும்…
தோல்வியின்றி வரலாறா…
துக்கம் என்ன என் தோழா…
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்…
அந்த வானம் வசமாகும்’’…

சிலரால் சிக்கல் ஏற்பட்டாலும், எதிர்ப்புக்கள் குறுக்கிட்டாலும், சலிப்பு புகுந்து குடைந்தாலும், அவசரம் ஆத்திரத்தை மூட்டினாலும் நம்மை குலைத்துக்கொள்ளக்கூடாது. உரிய நோக்கத்தை உருக்குலைய விடக்கூடாது, ஊசல் பண்டமாகக் கூடாது, முனை ஒடிந்த வாளாக, திரிந்த பாலாக ஆகக்கூடாது இடிந்த மாளிகை, இரசம்போன கண்ணாடி, ஊசல் பண்டம், உடைந்த வாள், பிரிந்துபோன கூடை, திரிந்த பால் ஆகி விட கூடாது. சுய நலத்தின் துரோக கயமைகள் அற்பத்தனங்களைக் கண்டு
மனம் விடாமல் புன்னகைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.தேவை பொறுமை,மன உறுதி,உற்சாகமான , நம்பிக்கை, தளரா செயல்பாடு, நல்லதிர்ஷ்டங்கள் உள்ளது  என
கவனமாக பிடிவாதமாக நம்பவேண்டும்.

மனிதன் சர்வ வல்லமை பொருந்தியவன். ஆனால் தனக்குத்தானே தடைகளை இட்டுக்கொண்டு வெளிவரத்தெரியாமல் தவிக்கும்  பிறவி. சிறுமகிழ்வையும் அனுபவிக்கத்தெரியாத முட்டாள் பிறவி ஆகி விட கூடாது. 
••••

இருப்பை 
உணராதவர்கள் இடையில்
ஒரு சலனமுமின்றி 
இல்லாமல் போவதில் 
உடன்பாடில்லை
எனக்கு

நான் 
இல்லாமல் போவேன்
ஓர் இலை உதிர்வது 
போலல்ல

ஒரு பூகம்பம் நிகழ்வது போல
ஒரு புயல் அடித்தோய்வது போல
ஒரு சுழல் கடந்து செல்வதனைப்போல
-Riska Muktharரிஸ்காமுக்தார்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-1-2024.


திருவள்ளுவர் படம்

#திருவள்ளுவர்படம்
————————————
திருவள்ளுவர்கிமு2ஆம்நூற்றாண்டுக்கும் கிபி 8 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. சேலம் ஜில்லா காமாட்சிப்பட்டி பிறந்த வேணுகோபால் சர்மா 1959 இல் அன்றைய சென்னை (தமிழக) மாநில அன்றைய காங்கிரஸ் கல்வி அமைச்சர் பக்தவச்சலம் அரசாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தைவரைந்தவர். உண்மையாக வள்ளுவர் இப்படிதான் இருந்தார் என யாருக்கும் தெரியாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் துவங்கிவிட்டன.
அவ்வளதான்.
••••

ராஜ்பவன் கிண்டியில் இருந்து 17-2-1960 ஆண்டு வெளியான வாழ்த்து செய்தி. 

திரு வேணுகோபால் சர்மா அவர்கள் வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தை இந்திய தபால் துறை அஞ்சல் தலையாக வெளியிட ஒப்புமை வழங்கியதற்கு வாழ்த்து செய்தி வெளியிட்டார் அப்போதைய மெட்ராஸ் மாகாண கவர்னர் உயர்திரு பிஷ்ணுராம் மேதி அவர்கள்.

இந்த செய்தி குறிப்பு இன்னும் கவர்னர் மாளிகையில் கோப்புகளில் இருக்கும்.



#திருவள்ளுவர்படம்
#திருவள்ளுவர்தினம்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
16-1-2024.


*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...