Wednesday, January 17, 2024

*சுடுநீரில் குளிக்கமுடியாதவன் நெருப்பில் பாய்வானா*! *பினராயி விஜயன்* *தமிழக நதிநீர் உரிமைகளை மறுக்கும் பினராயி* *மாநிலங்களுக்கான உரிமைகள் கேட்டு டெல்லியில் போராட்டமும் நடத்த இருக்கிறாராம்*. *தமிழகம்கேரள* *நதி நீர் சிக்கல்கள்*

*சுடுநீரில் குளிக்கமுடியாதவன்*
*நெருப்பில் பாய்வானா*!

*பினராயி விஜயன்* 

*தமிழக நதிநீர் உரிமைகளை மறுக்கும் பினராயி* *மாநிலங்களுக்கான உரிமைகள் கேட்டு டெல்லியில் போராட்டமும் நடத்த இருக்கிறாராம்*.

*தமிழகம்கேரள*
*நதி நீர் சிக்கல்கள்*
————————————
வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் மாநிலங்களுக்கான அதிக உரிமைகள் கேட்டு டெல்லி ஜந்தர்மந்திரில் பேரணியும் போராட்டமும் நடத்த இருக்கிறாராம்.

தன் முதுகுக்கு பின்னால் நூறு அழுக்கை வைத்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்யும் வேலை.

தமிழக உரிமைகள்;மங்களா தேவி கண்ணகி கோவில் சிக்கல்,மேற்கு மலை தொடர்ச்சியில் நெய்யாறு, அடவி நயிநானர், முல்லைப் பெரியாறு, ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழா, பம்பாறு, சிறுவானி எனப் பெருகிவரும் பத்து நீர் ஆதாரங்கள்  தமிழகத்திற்கு தர எத்தனை பேச்சு வார்த்தைகள் நடத்தியும்  பயனில்லை.  உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் vs கேரளம் என பல வழக்குகள். இதற்கு பினாராய் என்ன சொல்கிறார். அவர் பதில் சொல்ல மாட்டார். எந்த ஒரு முடிவிற்கும் கட்டுப்படாமல் போக்கு காட்டி வருகிற  கேரளமுதல்வர் அண்டை மாநிலத்திற்கு தனது பெருந்தன்மையை அறுத்துக் கட்டுகிறார். குதிரை குப்பறத்தள்ளியது  போக குழியும் பறித்த  கதையாய் ஏராளமான மருத்துவ கழிவுகள் குப்பைகள் இறைச்சி கழிவுகள் எனக் கொண்டு வந்து தமிழக எல்லைகளில் நைச்சியமாகக் கொட்டி விட்டு போகும் கேரள ட்ரக்குகளைக்
கட்டுப்படுத்த வழியைக் காணோம். நான் கேட்கிறேன் தூய்மைக் கேரளாவிற்கு தமிழ்நாடு என்ன குப்பை தொட்டியா? தமிழகத்திலிருந்து அரிசி, காய்கறிகள், வைக்கோல் என பல அவசிய பொருட்களை கேரளம் எடுத்தும் கொள்கிறது. திருட்டு மணல் கடத்தல் வேறு.



நில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசின் முயற்சி வேறு என பல சிக்கல்கள்

கேட்டால் தண்ணீர் தருவதற்கு சட்டமன்ற அனுமதி வேண்டும் என்று கூறுகிறார்.  சட்டமன்றத்தில் அனுமதி வாங்கி தான் அடுத்த மாநிலங்களுக்கு தண்ணீர் தர  முடியும் என்கிற ஷரத்து அடிப்படையான நீர் பங்கீடு சட்டங்களில் இல்லை. நீர் மேலாண்மை  அண்டை மாநிலங்களோடு சரியான முறையில் பகிர்தளிக்கப்பட வேண்டும்!  இதற்கு பதில் சொல்ல திராணியில்லாமல் இவர் அனைத்து மாநிலங்களுக்கும்  அதிக உரிமை கேட்டு போராட பினராயி விஜயன் டெல்லிக்குப் போகிறாராம். மத்திய மாநில உறவுகளை பேணுகிறாராம்!

சுடுநீரில் குளிக்க முடியாதவன்
நெருப்பில் பாய்வானா!
உன் கண்ணில் உத்தரம் அளவுக்கு தூசியை வைத்துக்கொண்டு அடுத்தவர் கண்ணில் அரும்பு போல தூசி இருக்கிறது இன்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

கேரளா மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் இணைந்திருக்கிறது. நான் கேட்பது இத்தகைய மாநிலங்களின் உறவை அவர் பினராயி விஜயன் உண்மையில் பேணுகிறாரா?
கடவுளின் பூமி என்று பெருமை பீத்திக் கொள்ளும் கேரளாவிற்கு முதல்வராக இருக்கும் இவர் தமிழகத்தை எவ்வாறு மதிப்பிடுவார்!

தன் மாநிலம் குறித்த இந்த நெறியற்ற செயல்கள் புரிந்து கொண்டு தான் மற்ற மாநிலங்களுக்கு போராடக் கிளம்பி பினராயி விஜயன் இருக்கிறாரா?

இத்தகைய அடையாள அரசியல் எல்லாம் யதார்த்த பூர்வமாக இருக்க முடியாது. தன்னை தக்க வைத்துக்கொள்ள பிறரை குறை சொல்லும் இந்த மாண்பு முதலில் தன்னை சீர்திருத்திக் கொண்டு எல்லாவற்றிலும் சரியாக இருந்து கொண்டு தான் அரசியலில் தன்னை முன்மொழிந்து கொள்ள வேண்டும்.

திமுக- சிபிஎம் அரசியல் தலைமைகளின் அருகே மட்டும் தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும்  ஏதோநல்லுறவு  இருப்பது போல் இரு பக்கமும் நடிக்கிறார்கள்.

தமிழகம் தூய்மை மாநிலமா⁉️உங்கள் கேரளத்தின் குப்பைத்தொட்டி மாநிலமா⁉️
முதலில் அதை சீர்படுத்துங்கள்.

#தமிழகம்கேரள_நதிநீர்சிக்கல்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-1-2024.


No comments:

Post a Comment