Tuesday, January 16, 2024

அவமானம் படுதோல்வி… எல்லாமே உரமாகும்… தோல்வியின்றி வரலாறா … ⁉️

அவமானம் படுதோல்வி…
எல்லாமே உரமாகும்…
தோல்வியின்றி
வரலாறா … ⁉️
————————————



உன்னை பற்றிய விமர்சனம்  குறித்து என்றும் கவலை பட தேவை இல்லை. நாம் நாமாக  நம் நேர்மையான பணிகளில் இருக்க வேண்டும் என என் தந்தை எனக்கு சொன்ன அறிவுரை. 

‘’மனிதா உன் மனதை கீறி…
விதை போடு மரமாகும்…
அவமானம் படுதோல்வி…
எல்லாமே உரமாகும்…
தோல்வியின்றி வரலாறா…
துக்கம் என்ன என் தோழா…
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்…
அந்த வானம் வசமாகும்’’…

சிலரால் சிக்கல் ஏற்பட்டாலும், எதிர்ப்புக்கள் குறுக்கிட்டாலும், சலிப்பு புகுந்து குடைந்தாலும், அவசரம் ஆத்திரத்தை மூட்டினாலும் நம்மை குலைத்துக்கொள்ளக்கூடாது. உரிய நோக்கத்தை உருக்குலைய விடக்கூடாது, ஊசல் பண்டமாகக் கூடாது, முனை ஒடிந்த வாளாக, திரிந்த பாலாக ஆகக்கூடாது இடிந்த மாளிகை, இரசம்போன கண்ணாடி, ஊசல் பண்டம், உடைந்த வாள், பிரிந்துபோன கூடை, திரிந்த பால் ஆகி விட கூடாது. சுய நலத்தின் துரோக கயமைகள் அற்பத்தனங்களைக் கண்டு
மனம் விடாமல் புன்னகைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.தேவை பொறுமை,மன உறுதி,உற்சாகமான , நம்பிக்கை, தளரா செயல்பாடு, நல்லதிர்ஷ்டங்கள் உள்ளது  என
கவனமாக பிடிவாதமாக நம்பவேண்டும்.

மனிதன் சர்வ வல்லமை பொருந்தியவன். ஆனால் தனக்குத்தானே தடைகளை இட்டுக்கொண்டு வெளிவரத்தெரியாமல் தவிக்கும்  பிறவி. சிறுமகிழ்வையும் அனுபவிக்கத்தெரியாத முட்டாள் பிறவி ஆகி விட கூடாது. 
••••

இருப்பை 
உணராதவர்கள் இடையில்
ஒரு சலனமுமின்றி 
இல்லாமல் போவதில் 
உடன்பாடில்லை
எனக்கு

நான் 
இல்லாமல் போவேன்
ஓர் இலை உதிர்வது 
போலல்ல

ஒரு பூகம்பம் நிகழ்வது போல
ஒரு புயல் அடித்தோய்வது போல
ஒரு சுழல் கடந்து செல்வதனைப்போல
-Riska Muktharரிஸ்காமுக்தார்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-1-2024.


No comments:

Post a Comment