Wednesday, November 30, 2022

#திமுக #எனது_இடைநீக்கம் #ksrpost

#திமுக #எனது_இடைநீக்கம்
#ksrpost
30-11-2022.   
https://youtu.be/fgRcakAM7JA #திமுக #எனது_இடைநீக்கம்
#ksrpost
30-11-2022.   
https://youtu.be/fgRcakAM7JA

Tuesday, November 29, 2022

வாரணாசியில் மகாகவி பாரதி….

வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடான ‘சிவமடத்தில்’ பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள  திட்டமிடப்பட்டுள்ளது என்று வாரணாசி மாவட்ட ஆட்சியா் எஸ். ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
   வாரணாசியில் உள்ள அனுமன் காட் எனும் பகுதியில் 1898- ஆம் ஆண்டு முதல் 1902  வரை பாரதியார் தனது அத்தை வீட்டில் வசித்தார். அந்த வீடு சிவமடம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது அவருக்கு வயது பதினாறு. 
 அவா் காசியில் வாழ்ந்த அந்தக் காலத்தில் பண்டித மதன் மோகன் மாளவியா, அன்னிபெசன்ட், பால கங்காதர திலகா்  முதலிய அரசியல் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களுடன் பேசி, விவாதித்து, பல்வேறு விஷயங்களில் தெளிவு பெற்றார்.



  தமிழ்நாட்டுக்குத் திரும்பிய பிறகும் காசியில் நடக்கும் நிகழ்வுகளை செய்தித்தாள்களின் வழியாக அவா் தொடா்ந்து அறிந்து கொண்டார். 
 அந்த வீட்டில் தற்போது தற்போது அந்த வீட்டில் பாரதியின் அத்தையின் பேரனும் தங்கை மகனுமான கே.வி.கிருஷ்ணன் வாழ்ந்து வருகிறார். பாரதியைப் பற்றிய அறிமுக நூலை ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் கே.வி. கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
   பாரதியார் அந்த வீட்டில் வாழ்ந்த  நினைவைப் போற்றும் வகையில் அந்த வீட்டின்  ஓா்  அறையில் பாரதியின் மார்பளவு வெண்கலச் சிலை வைக்கப்படும்.  அது மட்டுமல்ல, பாரதியாரின் படைப்புகள் அடங்கிய  நூலகத்தை அமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெறுகின்றன. 
பாரதியாரின்  இலக்கியப் படைப்புகள் டிஜிட்டல்  முறையில் நவீனமாக்கப்பட்டு  காட்சிக்கு வைக்கப்படும். சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய பங்கேற்பு, சமூக அவலங்களையும், அந்தக் காலகட்டத்தில் இருந்த சமுதாயப் பிரச்னைகளையும் அவா் எவ்விதம் தனது கவிதைகள் மூலம் அணுகினார் போன்ற முக்கியத் தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்படும். அவை இளம்தலைமுறையினருக்குச் சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிய வருகிறது.

இந்து மகாசமுத்திரத்தை குறித்து ‘சீனா அரசின் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் எஜென்சி’ ஓர் ஆலோசனைக் கூட்டத்தை குன்மிங் நகரில் நடத்தியுள்ளது. இந்தியாவுக்கு அழைப்பில்லாமல்

*தமிழ் தினசரி செய்தித்தாள்களே... ஊடகங்களே... இதழ்களே... இதையெல்லாம் நீங்கள் கவனிக்கவில்லையா? அவசியமில்லையா?*
 ————————————-
இந்து மகாசமுத்திரத்தை குறித்து ‘சீனா அரசின் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் எஜென்சி’ ஓர் ஆலோசனைக் கூட்டத்தை குன்மிங் நகரில் நடத்தியுள்ளது. இந்தியாவுக்கு அழைப்பில்லாமல் பாகிஸ்தான், மியான்மர், இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவு, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஈரான், ஓமன், தென்னாப்பிரிக்கா, கென்யா, முசாம்பிகா, தான்சானியா, சீசெல்ஸ், மடகாஸ்கர், மொரிஷியஸ், டிஜிபௌட்டி, ஆஸ்திரேலியா என 19 நாடுகளை அழைத்து நடத்தியிருக்கிறது.  



இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியாவும் மாலத்தீவும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். 

சீனாவுக்கு எதற்கு இந்த அடாவடித்தனமான வேலை? கள்ளத்தனமாக காய்களை நகர்த்தி, சீனா வட எல்லையில் இந்தியாவுக்கு தொடர்ந்து சிரமங்களைக் கொடுத்ததுபோல, இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், கச்சத்தீவு அருகே உள்ள காற்றாடி உற்பத்தி, மற்றும் பட்டுவழிச் சாலை என்று வைத்துக் கொண்டு இந்தியாவை மிரட்டப் பார்க்கிறதா? ஏற்கெனவே இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவின் டிகோகார்ஷியா, பிரான்ஸ், ஜப்பான் நாடுகளின் நடமாட்டம் இருப்பது அறிந்ததே. இப்படி இந்தியாவை அழைக்காமல் இந்தியப் பெருங்கடல் மாநாட்டை சீனா கமுக்கமாக நடத்தும் கள்ளத்தனம் எதற்கு? 
பொதுவுடைமைக் கொள்கையை ஆதரிக்கிறோம். ஆனால் இப்படியான சீன நிலைப்பாட்டைக் குறித்து இந்திய கம்யூனிஸ்ட்டுகள் என்ன சொல்லப் போகிறார்கள்? 
இந்தியா உள் அரசியலி்ல் எப்போதும் மனமாச்சரியங்கள் உண்டு. ஆனால் இந்திய பாதுகாப்பு விடயத்தில் எப்போதும் எல்லாருக்கும் ஒரே மனநிலைதான் இருந்து வந்திருக்கிறது.
சீனா இப்படி மாநாட்டை நடத்துவதை எளிதில் விட்டு விட முடியுமா? 

இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கம் ஏற்பட்டால் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் ஆபத்து. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இருப்பு அதிகமானால் கூடங்குளம், தூத்துக்குடி துறைமுகம், மகேந்திரகிரி ஹெவி வாட்டர் புராஜெக்ட், ஐஎன்எஸ் கட்டபொம்மன், கல்பாக்கம் என தெற்கே இருந்து சென்னை, விசாகபட்டினம் வரை உள்ள முக்கிய கேந்திரங்கள், துறைமுகங்களுக்கு ஆபத்தல்லவா?
 வங்கக் கடலில் இப்படி ஒரு சிக்கல் இருக்கும்போது அரபிக்கடலிலும் கேரளத்தின் தெற்கே தும்பாவிருந்து கொச்சின் துறைமுகம், மங்களூர் என அரபிக் கடல் ஓரத்திலும் சீனா சிக்கலை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.  இப்படி 19 நாடுகளை அழைத்தது இந்தியாவுக்கு எதிராக அவர்களைத் திசை திருப்பத்தானே? சீனாவில் மாநாடு இப்படி ஒரு மாநாடு நடத்த என்ன அவசியம் இருக்கிறது? இந்த மாநாட்டை சீனா நடத்தியதன் முழுநோக்கமே, இந்த நாடுகளின் ஆதரவோடு இந்தியாவுக்கு எதிராக சீன காய்களை நகர்த்தத்தான்.
 இந்த விடயம் குறித்து பிரதமர்,தமிழக முதல்வர் அறிவாராகளா என்று தெரியவில்லையா. இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பால்  தமிழகத்திற்கு ஏற்படும் எதிர்கால எதிர்வினைகளை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதச் சொல்லி் முதல்வரிடம் குறிப்புகள் கொடுத்தேன். அவர் கண்டுகொள்ளவில்லை என்பது வேறு விடயம். 

சீனா நடத்தியுள்ள மாநாடு குறித்து பிரதமர் கடுமையான எதிர்வினைகள் ஆற்ற வேண்டியது அவசரமான கடமை மட்டுமல்ல, அவசியமான அணுகுமுறையும் கூட. வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.
இந்த செய்தியை மட்டுமல்ல, இன்னொரு முக்கிய விடயத்தையும் தமிழக செய்தி நிறுவனங்களும் ஊடகங்களும் வெளிப்படுத்தவில்லை என்பது இன்னொரு வருத்தமான செய்தி.  
 கடந்த 10 நாட்கள் முன் இந்திய அரசில் சார்பில் அஜித் தோவலும், ரா தரப்பில் இருந்து அதனுடைய தலைவர் சமந்த்குமார் கோயலும் இலங்கை சிங்கள அரசோடு ஈழத்தமிழர் பிரச்னை குறித்து பேசியதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இலங்கைப் பிரதமர் ரணிலுடன் சீனாவுடன் நெருக்கம் காட்டுவது தவறு என்று சுட்டிக்காட்டியும், தமிழ் மாணவர்களை பாகிஸ்தான் கல்லூரியில் படிப்பதற்காக அனுப்ப சம்மதித்ததும், தமிழ்நாட்டில் குற்றவாளியாக வலம்வந்த இலங்கை மீன்வளத்துறை டக்ளஸ் தேவானந்தம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு - யாழ்ப்பாணம், திரிகோண மலைக்கு – சீன, பாகிஸ்தான் தூதர்களை அழைத்துச் சென்று தமிழர்களைச் சந்திக்க வைத்ததும் எவ்விதத்திலும் நியாயமில்லை என்று கருத்துத் தெரிவித்து இருக்கின்றனர். தமிழக மீனவர்களைக் கைது செய்தது குறித்தும், அவர்களுடைய படகுகளை நாசப்படுத்துவது குறித்து ரணிலிடம் கடுமையாக எடுத்துச் சொல்லப்பட்டது என்றும் கொழும்பு நண்பர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தான் தூதர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது, கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை விரட்டி அடித்தது குறித்து அக்கறையாக கேட்டறிந்ததாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த விடயங்களைக் குறித்தெல்லாம் இந்தியா தரப்பிலிருந்து ரா தலைவர் ரணிலுடன் பேசியுள்ளார் என்று தெரிகிறது.
இதைக் குறித்து என்னுடைய சமூக  ஊடகத்தில் அப்போதே பதிவிட்டேன், யாரும் கண்டு கொள்ளவில்லை. அஜித் தோவலும், ராவின் தலைவர் சமந்த்குமார் கோயலும் ரணில் விக்ரமசிங்கை சந்தித்ததைக் கூட தமிழகப் பத்திரிகைகள் வெளியிடவில்லை ஊடகங்களும் சொல்ல வில்லை என்றால், என்ன எழுதுகிறார்கள்? என்ன செய்தி வெளியிடுகிறார்கள்?  
 அவருக்கு அமைச்சர் பதவி தயாராகிவிட்டதா? என்ன துறை கொடுக்கப் போகிறார்கள்? ஒப்பாணி - சப்பாணி இணையப் போகிறார்களா? அவ்வையார் பிராட்டி தலைமை தாங்கப் போகிறாரா என்று உப்புக்குச் சப்பில்லாத செய்திகளைப் பரபரப்பாக வெளியிடுவதுதான் ஊடகங்களின் பணியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை ஈழத்தமிழர்களைப் பற்றிய முக்கிய செய்திகளை வெளியிடுவதைப் பற்றி பலருக்கும் அக்கறையில்லை.  
 சில விலை போன வேடிக்கை மனிதர்கள்  காக்காக் கூட்டத்தின் உறுப்பினர்கள் தானே? ஆயிரம் உலக நியாயங்களை வாய் கிழியப் பேசுவார்கள். ஆனால் நாட்டுக்குத் தேவையான முக்கியமான செய்திகளைப் பற்றி அக்கறை கொள்ளமாட்டார்கள். என்ன செய்வது?

#ksrpost
29-11-2021.

Monday, November 28, 2022

*China convened Indian Ocean conference without inviting India* *but invited 19 countries* *It is very dishonest attitude* *சீனா, இந்தியா அழைக்காமல் இந்து மகா சமுத்திர மாநாடு, மற்ற 19 நாடுகளை அழைத்துள்ளது கண்டனக்குரியது*.

*China convened Indian Ocean conference without inviting India* *but invited 19 countries* *It is very dishonest attitude*
*சீனா, இந்தியா அழைக்காமல் இந்து மகா சமுத்திர மாநாடு, மற்ற 19 நாடுகளை அழைத்துள்ளது கண்டனக்குரியது*. 

*It's disgusting that India was not invited for the Indian Ocean Region Forum convened by China. It's unreasonable and unacceptable. China has no locus standi to convene this forum without India*.
https://www.thehindu.com/news/international/australia-maldives-officials-did-not-attend-chinas-indian-ocean-meet/article66192987.ece

#ksrpost
28-11-2022.


குறையொன்றுமில்லை -5



 
………………………………………..


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு…
 
 இறுதியாக சொல்ல வேண்டிய சில விடயங்கள்...
 
 வைகோ போன்றவர்களால் என்னுடைய அரசியல் பயணத்தில் தடை ஏற்பட்டது என பலருக்கு தெரியும். அதை பிழையாக சொல்லவில்லை.. 
 
2001 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் கூட்டணி வேண்டும் என்றும் 21 சீட்டுக்களை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் ஏற்பட்ட பின்; கூட்டணி  வேண்டாம் என கூறிய வைகோவிடம் போராடி.. அது முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறினேன்.. 
 
பின்  2015ல்.. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளை…  தலைவர் கலைஞரிடம் வைகோவை  9 ஆண்டுகளுக்குப் பிறகு  எனது செல் பேசி யில் பேச வைத்து,அன்றே மாலை உங்களின் இல்லத்தில் தங்களை சந்தித்து இந்த விபரத்தை கூறினேன்.கலைஞர் என்னை பணித்ததை அடுத்து…   உங்களை அழைத்துக் கொண்டு உங்கள் தம்பி  தமிழரசுவின் புதல்வர் திருமண அழைப்பிதழ் வழங்க வைகோ வீட்டுக்கு  அடியேன் அழைத்துச் சென்றது தங்களுக்குத் தெரியும்.
 
இருதரப்புக்கும்  இணக்கமான சூழல் தோன்றியது. ஆறேழு மாதம் நம்பிக்கையோடு வைகோ இருக்கிறார் என்று நினைத்த வேளையில், 2016 சட்டமன்றத் தேர்தலில்  திடீரென மக்கள் நலக் கூட்டணி என தனி  அணி 2015 இறுதியில் அமைத்து விட்டார் வைகோ.  
 
இந்த இரண்டு நிகழ்வுகளும் -  2001  மற்றும் 2016  ஆண்டுகளில்  வைகோவின்  அரசியல் போக்குகளும் - எனக்கு பின்னடைவுதான்.
 
இன்றைக்கு ஒரு நாளைக்கு நூறு முறை தி.மு.க., தளபதி என சொல்லிக்கொண்டு இருக்கும் வைகோ அவர்களுக்கு அன்றைக்கு ஏன்  இந்த மனப்போக்கு ஏற்படவில்லை..
 
அவருடைய  திடீர் முடிவால் அன்று  என் போன்ற பலருக்கும் எவ்வளவு சிரமங்கள்.. நீங்களும் அவரை ஏற்றுக் கொண்டீர்கள்..இதற்கான காரணங்கள் இன்று வரை தெரியல…
 
 20 ஆண்டுகளுக்கு முன்னால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நான் அரசியல் களத்தில் வலம் வந்தவன். பின் காலத்தில் பணியே செய்ய முடியாமல் தடுத்த சிலரும் உண்டு..  கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன், மறைந்த தூத்துக்குடி பெரியசாமி ஆகியோர் ஏற்படுத்திய தடைகள் பல.  அவர்கள் தங்களிடம் என்னைப் பற்றி தவறாக கூறியதையும் அறிவேன்.
 இதை  தலைவர் கலைஞர் உயிரோடு இருந்தபோது என்னிடம் சொன்னதும் உண்டு. 
 
2019 நாடாளுமன்ற தேர்தல்..  கனிமொழி, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.. கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் என்ற மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இரவும் பகலும் கிராமம்  கிராமமாக சென்று வாக்கு சேகரித்தேன்; நானும்  என்னுடைய நண்பர்கள் மற்றும் கட்சித் தோழர்களும் என் சொந்த செலவில் இரண்டு மூன்று வாகனங்களில்  சென்று தேர்தல் பணியாற்றினோம்.
 
அதே போல ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலின் போதும், பணி செய்தேன். 
 
இந்த இரு தேர்தல்களின் போதும், ஏறத்தாழ எழுபத்தைந்து நாட்கள் கோவில்பட்டியிலும் எனது சொந்த கிராமத்திலும் முகாமிட்டு பணியாற்றினேன்; அப்போது பலர் என்னிடம், ‘தி.மு.க. உங்களுக்கு என்ன செய்தது.?  ஏன் இவ்வளவு சிரமமப்டுகிறீர்கள்’ என்று கேட்டனர்; வருத்தப்பட்டனர்.
 
ஆனால் நான் நேர்மையாக உண்மையாக பணியாற்றினேன்.என்னால்  கனிமொழிக்கு அதிகமான ஆதரவு – கூடுதலான வாக்குகள் கிடைத்ததை யாரும் மறுக்க முடியாது..
 
இதுவரை அந்த வட்டாரத்தில் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சோ.அழகர் சாமி, நாராயணசாமி நாயுடுவுடைய விவசாய சங்கத்தின் தாக்கம்,  அந்த பகுதியில்  எனது நீண்ட கால அரசியல்  பணிகள்.. என்ற வகையில் அந்த வட்டாரத்தின் முக்கிய -  அறியப்பட்ட புள்ளிகளாக திகழ்ந்தோம்.
 
கடம்பூர் ராஜூ என்பவர் பிற்காலத்தில் ஜெயலலிதாவால் அமைச்சர் ஆக்கப்பட்டார்.. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்  பொறுப்பிலும் இருந்தார்.   அன்றைய தேர்தல் களத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக அவர் இருந்தார். அதிகாரம் அவர்கள் பக்கம் இருந்தது.
 
அதை மீறி என்னுடைய பணிகள் இருந்தன என்பது அனைவரும் அறிந்ததே..
 
இந்த வட்டாரத்தில் 1947ல் இருந்து பல முக்கிய  அரசியல் தலைவர்கள் இருந்தார்கள்.. பெருந்தலைவர் காமராஜர் கோவில்பட்டி மண்ணில் தன்னுடைய ஆரம்பகட்ட வாழ்க்கையை துவங்கிய போது அவருக்கு உதவி செய்தவர்களையும், அவர் இங்கு வரும்போது  தங்கும் ராஜகோபால் வங்கியையும் மறக்க முடியாது.
மடத்துப்பட்டி கோபால நாயக்கர், ரா.கி., எஸ்.ஆர். நாயுடு, தேனி என்.ஆர்.டி. போன்றவர்கள் எல்லாம் காமராஜரின் அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளமாக  ஒரு காலத்தில் திகழ்ந்தவர்கள்.  
 
செல்வாக்கு இருந்தும் இவர்கள் எவரும் அமைச்சர் ஆக முடியவில்லை..
 
கடம்பூர் ராஜூ, அதிமுகவில் அமைச்சர் ஆனார் என்பது வேறு விடயம்.
 
கனிமொழியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தேன்!. 
 
வேதனை என்னவென்றால்..
 
தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழி, நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்துகிறார்..  அதுவும்  கோவில்பட்டி மந்தையில்!
 
 அந்த கூட்டத்திற்கான அழைப்பிதழில் எனது பெயர் இல்லை..  கூட்டத்துக்கும் அழைப்பில்லை!

கோவில்பட்டி, சங்கரன்கோவில், சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, விளாத்திகுளம் பகுதிகளில், நான் சார்ந்த  கூட்டங்களில், அழைப்பிதழிலில் என் பெயர் இல்லாமல்.. எனக்கு அழைப்பு இல்லாமல் நடந்தது இல்லை. இப்பகுதி மக்களுக்கு என் மேல் உள்ள அன்பினால்.. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இதுதான் சம்பிரதாயம்.
 
அந்த வட்டார மக்களே, ‘இதென்ன.. இப்படி’ என தலையில் அடித்துக்கொண்டு வேதனைப்பட்டனர்;  சம்சாரிககளும், வியாபாரிகளும் என்னிடம் ஆதங்கத்தைக் கொட்டினர். இப்படியா கனிமொழி செய்வார்? என சொன்னதுண்டு.
 
இதைக் குறித்து உங்கள் பார்வைக்கு  சுட்டிக்காட்டிய போது, நீங்கள் அதை பெரிதாக நீங்கள் எடுத்துக் கொள்ளவே இல்லை.பிறகு, இதை எதற்கு உங்களிடம் சொன்னேன் என்று வேதனையாக உணர்ந்ததும் உண்டு..
 
அது மட்டுமல்ல..
 
மறைந்த.. எழுத்தாளர் கிரா என்றால் நான் என்று தமிழகமே அறியும்..
 
கோவில்பட்டி வீதியில் கி.ராவுக்கு விழா நடக்கிறது… கனிமொழி, கீதா ஜீவன் செல்கிறார்கள்..  எனக்கு அழைப்பு இல்லை.
 
கீதா ஜீவனுக்கும் கி.ரா.வுக்கும் என்ன சம்பந்தம்..
 
கி.ராவின் கோபல்லபுர கிராமம் புதினம் பல  கால தாமதத்திற்கு பின், காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் புதல்வி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி எம்.எ்ல்.சி. அவர்களது வாசகர் வட்டம் 1974 காலகட்டத்தில் வெளியிட  நானும் சிட்டி சுந்தர்ராஜன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் கனிமொழிக்கு தெரியுமா..?
 
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில்  1989ல் வேங்கட சுப்பிரமணியம் துணை வேந்தராக இருந்த போது, கி.ரா. பணியில் சேர காரணமாக இருந்தவர்களில் நானும் ஒருவன்.
 
1980களின் துவக்கத்தில் கி.ரா.வின் மணி விழாவை அண்ணன் கவிஞர் மீராவும், நானும் மதுரை காலேஜ் ஹவுஸ்ல் எடுத்தது…  அவரது 75வது விழா, 80, 85 விழாக்களை சென்னையிலும் 90வது விழாவை புது டெல்லியில் டெல்லி தமிழ்ச்சங்கமும்  தினமணி நாளிதழும் இணைந்து நடத்த நான் முன்முயற்சி எடுத்ததும்,  95 விழா புதுவையில் நடந்த போது, என் தாயார் முதல் நாள் 98 வயதில்  ( செப்டம்பர் 15) இறப்பு.. மறுநாள் கிராமத்தில் இருந்து . புதுச்சேரிக்கு ஓடோடி வந்து நடத்தியது.. அங்கு அது மட்டுமல்ல..  95 வது விழா, நல்லகண்ணு, நெடுமாறன், திரைப்படக் கலைஞர் சிவகுமார் போன்ற முக்கிய புள்ளிகள் கலந்துகொள்ள புதுவை மத்திய பல்கலை கழகத்தில்  நடந்தது. 
 
அந்த விழாவை ஒட்டி, கி.ரா.வை வாழ்த்தி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோரின் வாழ்த்துரைகளைப் பெற்றேன்.
 
இது குறித்து தங்களிடமும் கடிதம் கொடுத்தோடு, கி.ரா. பற்றிய குறிப்புகளையும் அளித்தேன். ஆனால் தங்களின் வாழ்த்துச் செய்தி வரவில்லை.
 
உங்கள் உதவியாளர் தினேஷிடம் பல முறை பேசினேன். இறுதியில் அவர்,  ‘கி.ரா. ஒன்றும் தி.மு.க.வுக்கு  சாதகமான நபர் இல்லையே..’  என்றார்.  பெரும் வேதனை ஏற்பட்டது எனக்கு. ஆனாலும், அதற்கு மேல் அதைப் பெரிதாக  அடியேன் எடுத்துக்கொள்ளவில்லை.
 
தான் சொன்னதை இப்போது,  தினேஷ் ஏற்கலாம்.. மறுக்கலாம்.. ஆனால் என் மனசாட்சியை தொட்டுச் சொல்கிறேன்.. என் பெற்றோர் மீது ஆணையாகச் சொல்கிறேன்..  நான் சொல்வது உண்மை.
 
ஆயிரம் நியாயங்கள் பேசுகிறீர்களே.. இதில் உள்ள நியாயம் சொல்லியும் உங்களுக்குத் தெரியவில்லை என்பதே  என்னுடைய ரணப்பாடு..

கே.கே.நகர் பகுதி தி.மு.க. செயலாளர்  தனசேகரன்
2001ல்  அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்,  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.. அவரை மீட்க எனது சட்டரீதியான முன்னெடுப்புகளை தாங்கள் அறிவீர்கள். மயிலை மாநகராட்சி கவுன்சிலர் கடத்தப்பட்டு சம்பமும் உண்டு.
 
இவ்வளவு பணிகள் செய்தும்.. இந்த அசிங்கங்களையும் அவலங்களையும் நான் பார்க்க வேண்டி உள்ளதே என்பதை நினைத்து நான் வருந்தவில்லை..  அவமானகரமாக நினைக்கவில்லை.. 
 இதுதான் தார்மீகமா பண்பாடா..!

எங்கள் பகுதியில் பிறந்தார் பாரதி.. நான் பாரதி நேசன்..
 
அவரது வரிகள்
 சிறுமை கண்டு பொங்கி எழு என்பது!
 
அதற்கேற்றாற்போல,  2019 க்குப் பிறகே, ‘என்ன இப்படி’ என்று நானும் பட்டும் படாமல் இருந்தேன். அது தவறு என்றால் -  அதற்கு நான் காரணம் அல்ல.
 
இடைப்பட்ட இந்த காலத்தில் கோவிட் தொற்று நோய் வேறு..!
 
இன்னும் எத்தனையோ விஷயங்கள் மனதிலாடுகின்றன… போதும்..
 
நான் காமராஜரில் இருந்து கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நெடுமாறன், வேலுப்பிள்ளை பிரபாகரன், ஜெபி,சஞ்சீவரெட்டி, இந்திரா காந்தி என அனைவரையும் பார்த்தவன்.. அனைவரிடமும் தொடர்பில் இருந்தவன்..
 
நான் யாரையும் குறை கூறவோ பழி சொல்லவோ அவசியமில்லை..
 
 நிராகரிப்பு என்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை!!. அன்று நாம் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டோம்,  நிராகரிக்கப்பட்டோம் என்பதை புரிந்து கொள்வதற்கும் சில காலம் தேவைப்படுகிறது.புறக்கணிப்புகளும் பாராமுகமும் தொடர்ந்தால்.. எனக்கென்ன வந்தது என்கிற எண்ணமே யாரானாலும் ஏற்படும். ஆனாலும் நான், அரசியலாளர் என்ற முறையில் எனது பணிகளைத் தொடர்ந்து கொண்டுதான் வந்தேன்.

எவ்வளவு நசுகல்கள் உடையதாயினும்
வாழ்க்கை சுவாரசியமானதே. நிதர்சனங்கள் கனத்த
உணர்வின் அடர்த்தியை
அதிகமாக்க
இருப்பின் நம்பகத்தன்மையை அடர்வனமொன்றில் 
யானைத் தந்தங்களின்
வலுசேர்க்கின்றன..
***
போரினில் யானை விழக்கண்ட - பல
  பூதங்கள் நாய்நரி காகங்கள் - புலை
ஓரி கழுகென்றிவை எல்லாம் - தம
  துள்ளம் களிகொண்டு விம்மல்போல் - மிகச்
சீரிய வீமனைச் சூதினில் - அந்தத்
  தீயர் விழுந்திடக் காணலும் - நின்று
மார்பிலும் தோளிலும் கொட்டினார் - களி
  மண்டிக் குதித்தெழுந்தாடுவார்...

                                                 ----- பாரதி
                                   ( பாஞ்சாலி சபதம்)
 இன்றைய உலக அரசியல் வெளியின் ஆரவாரக் காட்சியினை அன்றே பாரதி சொன்ன வரிகளை…
 
குறையொன்றுமில்லை!
 இத்துடன் நிறைவு செய்கிறேன்..நன்றி..
 
 கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
 
#ksr post
 
28.11.2012

Sunday, November 27, 2022

To Mr Stalin Cm

https://m.facebook.com/groups/168532959895669/permalink/5746530235429219/?mibextid=Nif5oz

பட்டிகாடா பட்டணமா

#*பட்டிகாடா பட்டணமா* 

 அடி என்னடி ராக்கமமா......... கலகலப்பான கிட் பாடல்
—————————————

கல்லூரியில் படித்த காலம். காமராஜர் தலைமையில் (ஸ்தாபன) மாணவர் காங்கிரஸில் நிர்வாகியாக இருந்த நாட்கள்.

மதுரை மேல கோபுர வாசல் தெருவில்,சென்ட்ரலில்  தியேட்டரில் (இது திருவாடுதுறை ஆதினத்தின் சொந்த இடம்) 6-5-1972 இல் சித்திரை திருவிழாவின் போது நடிகர் திலகம் சிவாஜியின் பட்டிகாடா பட்டணமா வெளியிடப்பட்டது. படம் தமிழகமெங்கும் மாபெரும் வெற்றி அதிலும் மதுரையில் பெரிய வெற்றி. முதல் முப்பது நாட்கள் தியேட்டருக்கு அருகிலேயே செல்ல முடியவில்லை. தொடரந்து அரங்கு நிறைந்த காட்சிகள். முதல் ஷோவில் டிக்கெட் கிடைக்காதாவர்கள் அடுத்த ஷோக்கு அப்படியே காத்திருந்து வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து படம் பார்த்தார்கள். 




கதைக்களம் மதுரை வட்டாரம், எழுதியவர் மதுரையை சேர்ந்த கதை வசனகர்த்தா பாலமுருகன்.அதுவும் சோழவந்தான் பக்கம் இருப்பது போல் கதை நகரும்.சோழவந்தான் to வாடிப்பட்டி பாதையிலும், தென்கரை ஆற்று பக்கம்,திருவேடகம், மற்றும் சோழவந்தான் தோப்பு, வயல்கள், கோயில் வீதி என படத்துக்கு லொகேஷன். இயக்குனர் மாதவன், நடிகர் திலகம் உட்பட யூனிட்டில் உள்ள முக்கிய ஆட்கள் சோழவந்தானில் டி ஆர் மகாலிங்கம் அவர்கள் வீட்டிலேயே தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. படம் சிம்பிள் பட்ஜெட். கருப்பு வெள்ளைதான் கலர் படம் அல்ல.



வி கே ராமசாமி, சுகுமாரி நாயகனுக்கு மாமனார், மாமியார். ஜெ செம அமர்களமான ஜோடி. கதையே அவரை மையப்படுத்திதான் செல்லும்.
 
எம்ஆர் ஆர்.வாசு (ராதாரவி அண்ணன்-காங்கிரஸ் கட்சி பேச்சாளர்), பக்கோடா காதர் துணையோடு மைனராக வந்து மனோரமாவை கலாய்க்கும் லூட்டி படத்தோடு கலந்த நகைச்சுவை. நாயகனின் அக்கா மக சுபாவும் படத்தின் முக்கிய ரோலில் வந்த படத்துக்கு சிறப்பு சேர்த்தார்கள்.

படத்தின் பாடல்கள் அனைத்துமே அனைத்து வித ரசனையிலும் இருந்தது. அடி என்னடி ராக்கமமா......... கலகலப்பான கிட் பாடல், அதுவே பின் படத்தில் சோகமாகவும் வரும். படத்தின் வெற்றி விழா பெருந்தலைவர் காமராஜர் முன்னிலையில் நடந்தது.அவருக்கு நடிகர் திலகம்  சிவாஜி அவர்கள் படத்தின் முக்கிய அம்சமாக இருந்த ஏர்கலப்பையை நினைவூட்டுவது போன்று வெள்ளி ஏர்கலப்பையை பெருந்தலைவருக்கு நினைவு பரிசாக வழங்கினார். பட்டிகாடா பட்டணமா படம் வந்து ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டது.

#KSR_Post
27-11-2022.

வெல்வெட்டித்துறை பிரபாகரன் இல்லம்

வெல்வெட்டித்துறை

 பிரபாகரன் இல்லம்.இலங்கையின் வடகிழக்குக் கரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணலிருந்து இருந்து வடக்கே 16 மைல் தூரத்திலும், தென்னிந்தியாவிலிருந்து தெற்கே கடல் மார்க்கமாக 30மைல் தூரத்திலுமுள்ள ஒரு துறைமுகப்பட்டினம். இதன் பரப்பு ஒன்றேமுக்கால் சதுரமைல்.

#V.P.Singh #வி.பி.சிங்

#V_P_Singh #வி_பி_சிங்





குறையொன்றும் இல்லை.. 4 ( தொடர்ச்சி..)

குறையொன்றும் இல்லை..  4 ( தொடர்ச்சி..)
……………………………………….. 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு…

முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பிறகு,  ஆட்சியில் இருந்த தி.மு.க. மீது, கடுமையான எதிர்வினைகளை ஆற்றியவர்கள் இன்று தோழமையாக இருக்கிறார்கள். நல்லதுதான்.




முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பின் நான் தி.மு.க.வில் இணைந்து,  பல விமர்சனங்களுக்கு மத்தியில் அடியேனின் முழு முயற்சியில் டெசோ நடத்தியது உங்களுக்கும் நன்கு தெரியும். ஜெனிவா மனித உரிமை ஆணையம் - ஐ.நா.வில் - ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேச இரண்டு முறை தாங்களும் நானும் பயணத் திட்டமிட்டதும்.. கடைசி நிமிடத்தில் தாங்கள் இயலாது என்றதும் தங்களுக்குத் தெரியும். 

ஜெனிவா மனித  உரிமை ஆணையத்தில் தி.மு.க.வின்– தலைவர் கலைஞரின் கருத்துக்களாக அடியேன் வைத்தது;  ஐ.நாஅவை. ஆண்டறிக்கையில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையை இன்று தங்களோடு பொறுப்பில் உள்ள எவராவது செய்திருக்க முடியுமா..இயலுமா?




கீழே அந்த மூன்று பக்கங்களை இணைத்துள்ளேன்..

சற்று பின்னோக்கிய நிலைனவைுகள் மனதிலாடுகின்றன.. 

1989  சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு..தலைவர்கலைஞர் அவர்களும் முரசொலி மாறன் அவர்கள் என்னை அழைத்தார்கள்.  

கரூர் அடங்கிய திருச்சி மாவட்டம்,  தஞ்சை மாவட்டம், நாகை சம்புவராயர் மாவட்டம்,கடலூர், விழுப்புரம் அடங்கிய தென்னாற்காடு மாவட்டம்.., ஒன்றுபட்ட செங்கல்பட்டுமாவட்டம்,   திருவண்ணாமலை அடங்கிய வேலூர் மாவட்டம்,நாமக்கல் அடங்கிய சேலம் மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் அடங்கிய கோவைமாவட்டம், நீலகிரி மாவட்டம்..  இவைஉள்ளடங்கிய சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது…வேட்பாளர்கள் சரியானவர்கள் யார் ?என சாதக பாதகங்கள் என்னென்ன என அறிந்து வந்து அறிக்கை தரும்படி பணித்தார்கள்.

அதுஅம்பாசிடர் கார் காலம்.. எனது அம்பாசிடர் காரில் 1988 இல் ஆறு மாத காலத்துக்கும் மேலாக இந்தபகுதிகளில் எல்லாம் தொகுதி தொகுதியாக சுற்றி வந்து ஆய்வு செய்தேன்.  இறுதியில் எனது அறிக்கையை தலைவர் கலைஞர்  அவர்களிடம் சமர்ப்பித்தேன்.ஏதோ போகிறபோக்கில் நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். இதற்கு சாட்சியாக வைகோவே இருக்கின்றார்.

அடியேனின் இந்த சுற்றுப்பயண  அறிக்கையில் எழுதிக்கொடுத்த பெயர்கள்தான்.. திருச்சி கே.என். நேரு,  விழுப்புரத்தில் பழனியப்பனுக்கு மாற்றாக தெய்வசிகாமணி என்று அழைக்கப்பட்ட இன்றைய பொன்முடி, அச்சரப்பாக்கம் ராமகிருஷ்ணன்,   இன்றைக்கு பாஜகவில் இருக்கிறாரே வி.பி.துரைசாமி…இப்படி அந்த பட்டியல் மிக நீண்டது.

இதையெல்லாம் இன்று சொன்னால்தான் தெரியும்.. என்ன சொல்வது!

கே.என்.நேருவுக்கு  அன்று அன்பிலும் செல்வராஜும் எதிர்வினையாற்றி னார்கள். பொன்முடி விசயத்தில்   பட்டும்படாமல் விலகி இருந்தார்  செஞ்சி ராமச்சந்திரன். ராமகிருஷ்ணனுக்கு வாய்ப்பு தர கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் இருந்தார்,  மதுராந்தகம்ஆறுமுகம் என்பதெல்லாம் விஷயம்.. 

தங்களது வேளச்சேரி வீட்டில்,  காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபு சார்ந்தகாவல்  துறையினர் நள்ளிரவில் செய்த துவம்சங்கள்.. அப்போதும் எனது பணிகள்..

கலைஞரின் நள்ளிரவு கைது  துயர சம்பவத்தின் போது அடியேன் ஆற்றிய பணிகளை ஏற்கனவே நினைவு கூர்ந்து இருக்கிறேன். அதையொட்டி நினைவுக்கு வந்த இன்னொரு சம்பவம்.. 

யாரும் எட்டிப் பார்க்காத  அந்த நேரத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற டெல்லியில் இருந்து வந்த  அகில இந்திய அரசியல் தலைவர்களிடம்  தொடர்பு கொண்டு பேசினேன்.. அவர்களை பேராசிரியர் அவர்களிடம் அழைத்துக்கொண்டு சென்று சந்திக்கவும் வைத்தேன்..

இந்த கைது நடவடிக்கையை கண்டித்து கடற்கரையில் நடந்த கண்டன பேரணியில் பத்திரிகையாளர்கள்  கழகத்தினர் கடுமையாக தாக்கப்பட்டனர். கோவை குடிமங்கலத்தை சார்ந்த நிர்வாகி இந்த தாக்குதலில் பலி….

மாலை பொழுதில்.. கூட்ட கடற்கரை மேடையில் கவலையுற்று இருந்தார் கலைஞர்.  அண்ணன் மாறன் அவர்கள்  அடியேனிடம் சொல்ல… மேடையில் இருந்தே அன்றைய குடியசுதலைவர் கே.ஆர். நாராயணன்  அவர்களிடமும்,  அன்றைய ஜெயலலிதா ஆட்சியில் உள்துறை செயலாளராக இருந்த நரேஷ்  குப்தா அவர்களிடமும் நிலையை எடுத்துச் சொல்லி என் செல்போனில் இருந்து பேசினேன். யாரும்தயாராக இல்லாத நிலையில்,  என்னை அழைத்து மாறன்அவர்கள் பேசச் சொன்ன போது தயக்கம் இன்றி உடனே பேசி,  நிலைமையை சொன்னேன். 

இதெல்லாம்.. இன்றைக்கு உள்ள அமைச்சர்கள் எத்தனை பேருக்கு தெரியும்.. ஏனென்றால் இவர்களில் பலர் அன்றுஅரசியல் களத்தில்  இருந்தார்களா என்றுதெரியாது..

கடந்த 2016 வரை திமு.க. மீதும் தலைவர் கலைஞர் மீதும் கடுமையாக – தவறாக விமர்சனம் செய்தவர்களுக்கு எல்லாம் இன்று பாட புத்தக நிறுவனத்தில் பொறுப்புகள்.. திட்டக்குழுவில் பொறுப்புகள்.. கலைஞர் தொலைகாட்சியில் பொறுப்புகள்.. கழக நிர்வாகத்தில்  பொறுப்புகள்.. என அள்ளிக்கொடுத்தீர்கள். இப்படி எதிராக இருந்தவர்கள் பலருக்கும் பல பொறுப்புகள்.. நியமனங்கள்.  
நான் இவ்வளவு செய்தும் மதிப்பும் மாண்பும் எனக்குக் கிடையாது..என்தான் நடக்கிறது.

நான் பொது வாழ்க்கையில் இழந்தது அதிகம்.. பெற்றது ஒன்றுமில்லை…  இனி எவ்வளவோ இருக்கிறது.. கடிதம் வாயிலாக தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்..



நாடும் நீங்களும் உங்கள் கொற்றமும்  வாழ்க என்று வாழ்த்தி… என் பாதையில் – என் வழியில் சுதந்திரமாக  ஜீவிக்க வழி அமைத்ததற்கு கோடி நன்றிகள்..! 

குறையொன்றுமில்லை.. மகிழ்ச்சி..
 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#ksr_post
27.11.2012


Saturday, November 26, 2022

#வேலுப்பிள்ளை_பிரபாகரன்

#வேலுப்பிள்ளை_பிரபாகரன்            


1986 சென்னை

#வேலுப்பிள்ளை_பிரபாகரன்

#வேலுப்பிள்ளை_பிரபாகரன்

*Eelam* #*Prabhakaran*

Premiere LIVE 2.30 pm

#*K.S.Radhakrishnan*
#அரசியலாளர்
#VinothrajaNeriyalar
#KSRPost
#ksr
#*hindutamil*
#kamadenudigitalTV
#hindutamilthisai
#tamilthehindu
#TheHindu #*Eelam* #*Prabhakaran*
https://youtu.be/C96VhPCxMJY

ConstitutionDay Nov-26

*On this day, the 26th of November, in 1949, The Constitution of India was adopted by the Constitutent Assembly*. 

*Happy ConstitutionDay to everyone, may we forever uphold its values as individuals and as a nation*



#ksrpost.
26-11-2022.


இன்றைய (26-11-2022) தினமணியில் தமிழக நீர் நிலைகள் குறித்த என கட்டுரை *குளம் தொட்டு கோடு பதித்து வழி சீத்து*...!

இன்றைய (26-11-2022) தினமணியில் தமிழக நீர் நிலைகள் குறித்த என கட்டுரை

*குளம் தொட்டு கோடு பதித்து வழி சீத்து*...!
 —————————————
 ஒவ்வொரு வருடமும் அக்டோபர் – நவம்பர் மாதம் தமிழகத்தில் ஏதோ ஒரு வட்டாரத்தில் மழையினால் மக்கள் பாதிக்கப்படுவதும், மக்கள் வாழும் குடிசைகள், வீடுகள் பாதிக்கப்படுவதும் குறித்த செய்திகள் தவறாமல் வருகின்றன. இந்த ஆண்டு மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் பெரும் பலத்த மழையால் கடுமையான பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன.  
 தமிழகத்தில் மழை அதிகம் பெய்யும்போது, அந்த நீர் வளத்தைப் பாதுகாத்து பயன்படுத்த வேண்டும் என்கின்றஅக்கறை நம்மிடம் இல்லை. அதற்கான கடப்பாடுகளை தொடர்ந்து எடுக்க நாம் தவறிக் கொண்டு இருக்கிறோம்.
‘ நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவப் பேராசான் சொல்கின்றார். நமக்கோ மழைநீரை சேகரிக்க மனதில்லை. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று ஒருபக்கம் குரல் கேட்கின்றது. இன்னொரு பக்கம் மழைக்காலங்களில் காவிரியில் பெருகி வரும் தண்ணீரை தடுப்பணைகள் கட்டி சேகரிக்காமல், அதை வங்கக் கடலில் வீணாகக் கலக்கவிடுகிறோம். நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. இயற்கையின் அருட்கொடையாக நமக்குக் கிடைக்கும் நீர்வளத்தின் அருமை தெரியாமல், அதை வீணடிக்கின்றோம் என்பதுதான் உண்மை. 
குளம் தொட்டு கோடு பதித்து வழி சீத்து
உளம் தொட்டு உழுவயல் ஆக்கி, 
வளம் தொட்டுப் பாடுபடும் கிணற்றோடு என்று
இவை பாற்படுத்தான் ஏகும் சுவர்க்கம் இனிது
 
என்று பண்டைய தமிழ் இலக்கியமான சிறுபஞ்சமூலத்தில் புலவர் காரியாசான் நீர்மேலாண்மை பற்றிசொல்லியிருக்கிறார். 
 தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்க மன்னர்கள், தஞ்சையை ஆண்ட மராத்தியர்கள் ஆட்சிக் காலத்தில் நீர்நிலைகள் ஏரி, குளங்கள் பாதுகாப்பதைமுக்கிய கடமையாகச் செய்து வந்தனர். அதற்கு இன்றைக்கு அடையாளமாக இருப்பது கரிகாலன் கட்டிய கல்லணை, சோழமன்னர்களின் அர்ப்பணிப்பான இன்றைக்கும் நம் கண்முன் இருக்கிற வீராணம் ஏரி, ராஜேந்திர சோழன் கங்கை வரை வடபுலத்துக்குப் படையெடுத்துச் சென்று அந்த வெற்றியின் அடையாளமாக அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பொன்னேரியில் கங்கை நீரை ஊற்றி அமைத்த சோழகங்கம் ஏரி, திருச்சி தெப்பக்குளம் மற்றும் மதுரையில் வண்டியூர் தெப்பக்குளம், மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளம், நெல்லை டவுன் தெப்பக்குளம், ஒவ்வொரு திருக்கோவில்களிலும் முறையாக தண்ணீரைச் சேமிக்க உதவும் கோவில் தெப்பக்குளங்கள் என பல நீர்நிலைகளை இன்றைக்கும் நம் கண்முன்னே காண்கின்றோம். இவை யாவும் தமிழகத்தை ஆண்ட அரசர்கள் முன்னெடுப்பில் செய்யப்பட்ட மக்கள் நலனுக்கான பணிகள். இவற்றை அறப் பணிகளாக நினைத்து அரசர்கள் செய்தார்கள். 
நாட்டின் விடுதலைக்கு முன் தமிழகத்தைப் பொருத்தவரை அதாவது 1940 காலகட்டங்களில், ஏறத்தாழ 65 ஆயிரம் ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் இருந்தன. இன்றைக்கு அவை யாவும் ஏறத்தாழ 35 ஆயிரமாகக் குறைந்துவிட்டன. இவை யாவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘மகேசன்’ என்ற மன்னர்களால் சூறையாடப்பட்டன. 30 ஆயிரம் குளங்கள் என்னவாயிற்று? இந்த குளங்களை வீட்டுமனைகளாக்கி விற்றது யார் என்று ஒரு கேள்வி எழுப்பினால் நமது மனசாட்சிக்கு நிச்சயமாக விடை தெரியும்.  
 மன்னாராட்சிக்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட, இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் குடிமராமத்து, ஆயக்கட்டு என்ற உள்ளூர் நிலைக்கேற்றவாறு, திட்டங்களைத் தீட்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மெட்ராஸ் வாட்டர் போர்டுஆக்ட் என்று 1930 - இல் நடைமுறைப்படுத்தினர். இந்த சட்டத்தை ஆங்கிலேயர் நடைமுறைப்படுத்தினாலும் தொன்று தொட்டு நாம் பழக்கத்தில் இருந்த முறைகளை நடைமுறைப்படுத்தத்தான் இதை 1930 - இல் கொண்டு வந்தார்கள்.
குடிமராமத்து என்பது ஒரு கிராமத்தில் உள்ள குளத்தை அந்தக் கிராமத்தில் உள்ள மக்களே கூட்டுறவு முறையில் பராமரிப்பது, குளங்களுடைய மதகுகளை மசகு போட்டு பராமரிப்பது, குளத்தில் தேவையில்லாமல் மரங்களோ, கருவேல முள் மரங்களோ முளைத்தால் உடனே அப்புறப்படுத்துவது, மழைக்காலங்களில் நீர் வரும்போது நீரில் கிடைக்கும் மீன்களை ஏலம் விட்டு அதில் வரும் வருவாயை ஊர்ப் பொதுவில் வைப்பது என இப்படியெல்லாம் கிராமங்களில் குளங்களை ஒவ்வொருவரும் தங்கள் ஊர் ஆலயங்களைப் போல பாதுகாத்து வந்தனர். மதகுகள், கண்மாய்க்கரைகள், வாய்க்கால், நீர்வழிப் பாதைகளையும் இதே அக்கறையோடு அந்தந்த கிராமங்களில் கிராம மக்கள் கவனம் எடுத்து, கடமையாற்றினர். 
ஆயக்கட்டு என்பது ஒரு குளத்தின் மூலம் பாசன வசதி பெறும்நிலங்களைக் குறிப்பதாகும். இந்த நிலங்களை உடையவர்கள் ஆயக்கட்டுக்காரர்கள் என அழைக்கப்படுவார்கள். இந்த ஆயக்காட்டுக்காரர் குளத்து நீரைப் பயன்படுத்துவதற்கு, அதற்காக சிறு தொகையை தீர்வையாக வாட்டர் ரேட் என்று 1950-60 களில் கட்டியது எனக்கு நினைவுக்கு வருகிறது. வாட்ரேட் என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. ஏனென்றால் எனது தந்தையார் நான்கு கிராமங்களுக்கு கிராமமுன்சீப்பாக இருந்தார்.  
 ஆங்கிலேயர்கள் இந்த ஆயக்கட்டு, குடிமராமத்து ஆகிய திட்டங்களை முதன்முதலாக தஞ்சை மாவட்டத்தில் தொடங்கி வைத்தனர். இவை யாவும் 1968-க்கு முன்பு நடந்த நடைமுறைகளாக இருந்தன. 1968 - க்குப் பின்  ஊர்மக்கள் கூட்டுறவாக இணைந்து செய்த குடிமராமத்துப் பணிகள் நிறுத்தப்பட்டன. அரசின் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் குடிமராமத்துப் பணிகள் நடக்க ஆரம்பித்தன. அரசு சார்பில் குடிமராமத்துப் பணிகள் ஆரம்பித்த பின், குளங்களில் சீமைக் கருவேல மரங்கள் சரியாக அகற்றப்படவில்லை. வண்டல் மண்ணை விவசாயிகள் எடுப்பதற்கு  கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மீன் வளத்தை சம்பந்தபட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று இல்லாமல் வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும்மனிதர்கள் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்என்ற சூழ்நிலைகள் ஏற்பட்டன. 50 - 60 களுக்குப் பின்குளங்களைப் பாதுகாக்கும் முழுமையான நடைமுறைகள்இல்லாமல் போனது கவலையான விடயமாகும். 
இன்றைக்கு இருக்கின்ற நீர்நிலைகளில் ஏறத்தாழ 20,413 நீர்நிலைகள்  ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ளன. 18,709 நீர்நிலைகள் தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. ஜமீன் குளங்களின் எண்ணிக்கை 756. இப்படி ஒரு தோராயமான புள்ளி விவரங்கள் உள்ளன. இந்த கணக்கீட்டில் தனியார் குளங்கள் என்பனவற்றை தமிழ்நாடு சட்டம் 49 / 1974 அதாவது, எஸ்டேட் அபாலிஷன் மற்றும் கன்வெர்ஷன் இன் டூ ரயத்துவாரி சட்டம் 1948 - இன் படி தனியார் பட்டா பெற்ற குளங்களை திரும்பப் பெறப் பெற்று இந்த குளங்களைப் பொதுக் குளங்களாக அரசே ஏற்றுக் கொண்டது. ஏரிகள், கண்மாய்கள், குளங்களில் இருந்து பாசனத்திற்கு ஆண்டுக்கு 390 டிஎம்சி பயன்படுகிறது. இதன்மூலம் நிலத்தடி நீரும் 425 டிஎம்சி கூடுதலாகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தனை குளங்கள் இருக்கின்றன என்பதான புள்ளிவிவரங்கள் இருப்பினும் இந்தக் குளங்களை எந்த மனசாட்சியும் இல்லாமல், செல்வாக்கு பெற்று சொல்வாக்கு அற்றவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்துக் கொண்டதை எல்லாம் மறுக்க முடியாது.  இப்படித்தான் நதிகளில் மணலை அள்ளி சூறையாடினர். காட்டு வளத்தைச் சூறையாடினர். 
செங்கல்பட்டு மாவட்டத்தை ஏரி மாவட்டம் என்று அழைப்பதுண்டு. மதுராந்தகம் ஏரி இருப்பதில் பெரிய ஏரி என்று சொல்வதும் உண்டு. இன்று ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குளங்கள் எத்தனை இருக்கின்றன என்று கணக்குப் பார்த்தால், வருத்தமான புள்ளி விவரங்கள்தாம் நமக்குக் கிடைக்கும்.  
இயற்கையின் அருட்கொடையான நீர்நிலைகள், மணல், வனங்கள், மலைகளை தங்களுக்குத்தான் சொந்தம் என்று சூறையாடும் சுயநல மாந்தர்கள் இன்றும் மிடுக்கோடு பவனி வருகின்றனர். எத்தனை கிராமசபைகள் அமைத்து கூடி தீர்மானங்கள் போட்டாலும் இந்த அநீதிக்கு முடிவு கட்ட முடியவில்லையே... என்ன சொல்ல? 
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு என்பது – வருவாய்த்துறை, நீர்வளத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், தன்னல அரசியல்கட்சிகள் – ஊரகப் பகுதிகளில் மிரட்டல் அதிகாரம் செலுத்தும் உதிரிக் கட்சியாளர்கள் இவர்களின் கூட்டு உடந்தையோடும் நடக்கும் நிகழ்வே என்பது அரசுக்கும் தெரிந்தே இருக்கிறது. வாக்கு வங்கியாக இவ்வாக்கிரமிப்பு குடிசைப் பகுதிகளை வைத்து அரசியல் நடத்துவதும் தொடர்கிறது.
 தமிழகம் முழுவதும்  தமிழக அரசு சார்பில் குடிமராமத்துப் பணிகள் 2016 -17 முதல் 2020-21 வரை ஏறத்தாழ ரூ.1,500 கோடி மதிப்பீட்டிற்கு மேல் செலவுகள் செய்தும் ஓர் ஆக்கப்பூர்வமான பயன்படும் வகையில் அமையவில்லை என்பதுதான் யதார்த்தம்.
நீர்நிலைகளை விட்டுவிடுங்கள். மேட்டூர் அணையைத் திறந்துவிட்டால், கடைமடைப்பகுதியான மயிலாடுதுறை மாவட்டம், திருத்துறைப்பூண்டி வரை காவிரித் தண்ணீர் செல்கின்றதா, இல்லையே? இப்படித்தான் நமது நீர் மேலாண்மை உள்ளது.  
இதேபோல வெள்ளத் தடுப்பு, தணிப்பு பணிகளும் சுணக்கத்தில்தான் உள்ளன.  
சமீபத்தில் ஒரு செய்தி. ஊட்டச்சத்தான வண்டல் மண்ணை தனது நிலத்துக்குப் பயன்படுத்துவதற்காக நீர்நிலைகளில் இருந்து எடுத்து வந்த ஏழை விவசாயிகளின் மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பிடித்து வைத்துக் கொண்டு திருப்பித் தருவதில்லை. இதனால் கடன் வாங்கி மாட்டுவண்டியை வாங்கிய விவசாயி ஒருவர் வருத்தத்துடன் இப்படிச் சொல்கிறார்: “இந்த மாட்டுவண்டி இனி கிடைக்காது. இதை விறகாகத்தான் இனி எரிக்க முடியும்”.  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்பட்ட செய்திகளும் வந்தன. 
பண்டைய அரசராட்சி காலத்தில் நீர்நிலைகளையும் கோயில் நிலங்களையும் ‘சிவன் சொத்து குலநாசம் ’ என்று யாரும் கையகப்படுத்தமாட்டார்கள். முடியாட்சியில் நீர்நிலைகளைக் காப்பாற்ற முடிந்ததைப் போல இந்த குடியாட்சியில் ஏன் காப்பற்ற முடியவில்லை? 
இந்தப் பிரச்னைகளையெல்லாம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அடியேன் பொதுநல வழக்கு ரிட் மனு எண் 30397/ 2018 தாக்கல் செய்தேன். அந்த மனுவில் இந்த விஷயங்களை எல்லாம் முழுமையாகக் குறிப்பிட்டிருந்தேன். கிராமப்புறங்களில் அந்த மக்களின் பொறுப்பில் குடிமராமத்து இருந்த வரையில் குளத்தின் பாதுகாப்புகள் திருப்தியாக இருந்தன. 
 
 
 
நீர்நிலைகளைப் பாதுகாக்க: 
1. பழைய வருவாய் ஆவணங்களைத் தேடிப்பிடித்து, எங்கெல்லாம் நீர்நிலைகள் இருந்தனவோ, அவற்றைக் கையகப்படுத்தி நீர்நிலைகளைச் சீர்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
2. தனியார் குளங்களை 1974 - இல் பொதுக் குளங்களாக மாற்றியதை முழுமையாக மக்களின் நீர் பாசனத்துக்குப் பயன்படச் செய்ய வேண்டும். 
3. இந்த நீர்நிலைப் பாதுகாப்பை மேலாண்மை செய்யவும் கண்காணிக்கவும் மாவட்டம், வருவாய்க்கோட்டம், ஊராட்சி ஒன்றிய அளவில் நேர்மையான உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்பு மேலாண்மை செய்யக் கூடிய பொதுக்குழுக்களை அமைக்க வேண்டும். 
4. கிராமங்களில் குளங்களைப் பாதுகாக்க வெட்டியான் மடையன் என்ற பணிகளில் பகுதி நேர ஊழியர்களை நியமிக்க வேண்டும். (தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. குளங்களில் மண்டிக்கிடக்கும் செடிகளை நீக்குதல், மதகுகளில் உள்ள கம்பியில் மசகு போடுவது, மதகுகளின் அடிப்புறத்தில் பலகைகள் கெட்டுவிடாமல் இருக்க பக்கவாட்டில் உள்ள இரும்பில் எண்ணெய் தேய்ப்பது என்பன போன்ற வேலைகளை கிராமப்புறங்களில் 1950-60 களில் அவர்கள் செய்வதைப் பார்த்ததுண்டு.) அம்மாதிரி குளங்களைப் பராமரிக்கபணியாளர்களை நியமிக்க வேண்டும்.
5. குளங்கள், நீர்நிலைகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைஆழப்படுத்தி தூர்வாருதல், ஏரியின் கரைகளை எடுத்து சரியாக திடமாகக் கட்டுதல் என்பதைக் குறித்து ஆய்வுகள் நடத்த வேண்டும்.  
6. நீர்நிலைகள் சார்ந்த விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த வண்டல்மண் எடுக்க முறையாக அனுமதிக்க வேண்டும். ஆடு, மாடுகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்.
7. குறிப்பிட்ட கிராமத்தில் ஊராட்சி நிர்வாகமும், அந்த கிராமத்தின் பொது மகுமையும் இணைந்து குளத்தில் கிடைக்கும் மீன் வளத்தின் உரிமையை அந்தந்த கிராமத்துக்கு வழங்க வேண்டும்.
மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகள், குளங்கள் வேளாண் பாசனத்திற்கும், குடிநீர்/ குளிநீருக்கும், கால்நடை வளர்ப்பிற்கும் நிலத்தடி நீரைச் செறிவூட்டி வேளாண் திறந்த கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளையும் உயிர்ப்பிக்கின்றன. இவை தற்போது 25 முதல் 50% வரை வண்டல் மண் படிந்து மேடிட்டாலும் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.  தமிழ்நாட்டு ஊரகப் பகுதிகளின் உயிர்நாடி இவையே என்றால் அது மிகையில்லை. 
எனவே குறைந்த செலவில் விரைவாக (6 மாதகாலத்தில்)இவற்றைத் தூர்வாரி 1.00 மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்தினால் 100 டிஎம்சி + 50 டிஎம்சி கூடுதல் நீரை இவற்றில் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். குறிப்பாக வீராணம், மதுராந்தகம், காவிரிப்பாக்கம், பூண்டி, புழல் மற்றும் செம்பரபாக்கம் போன்ற மாபெரும் ஏரிகளை 1.00 மீட்டருக்கு ஆழப்படுத்தினால் 10 டிஎம்சி வரை கூடுதல் நீரைத் தேக்கி ஆண்டு முழுமைக்கும் குடிநீர் பெற இயலும். உற்பத்திச் செலவின்றி – இப்படி வெறும் பாதுகாக்கப்பட்ட  குடிநீரின் வணிக விலை – 1 கனமீட்டர் (1000 லிட்டர்) – ரூ.80 மட்டுமே. கடல்நீரைக் குடிநீராக்கும்பொழுது உற்பத்திச் செலவு மட்டுமே 1 கன மீட்டர் (1000 லிட்டர்) ரூ.50. இதிலிருந்து ஏரிகுளங்களைத் தூர்வாரி ஆழப்படுத்துவதன் அவசியம் புரியும். 1.00 மீட்டர் ஆழப்படுத்தினால் – பல ஏரிகள், கண்மாய்களில் தாழ்நீர்மட்டம் (Sill Level) கீழே போனாலும் – இவை நிலத்தடி நீரைச் செறிவூட்டவும், கால்நடைகளுக்குக் குடிநீராகவும் பயன்படும். தேவைப்படும்போது நீரேற்றிகள் மூலமாக நீரை இறைத்து பாசனமும் செய்யலாம் இவை பெரும்பாலும் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ளதால் – மேல் வண்டல் மண்ணை-  அப்பகுதியில் தொழில்புரியும் உழவர் பெருமக்களுக்கும், அதற்கடுத்து மண் செங்கல் சூளை வைத்திருப்போருக்கும்மீதமுள்ள 80%க்கும் மேலுள்ள மண் (வெட்டி எடுக்கும் மண்) – உள்ளூர் சாலைகள் போடும் – கட்டடங்கள் கட்டும் ஒப்பந்ததாரர்களுக்கும் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
இன்னும் மிகுந்த அளவில் மண் இருந்தால் (பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், வீராணம் போன்றவைகளில்) – நிரப்பு மண் மிகுதியும் தேவைப்படும். மாநில நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தல், தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்தல் – பெரும் ஒப்பந்தக்காரர்களுக்கு ஒரு யூனிட் (100 கனஅடி)மண்ணை ரூ.500க்கு விற்றுவிடலாம். இதனால் நம் அரசுத்துறைகளான நீர்வளத்துறை,ஊரக வளர்ச்சித்துறைமற்றும் வருவாய்த்துறை அலுவலர் பணி மிகுதியாகக் குறையும். இவர்கள் திட்டமிட்டு மேலாண்மை செய்தால் (மண்வெட்டுமிடம், வெட்டும் ஆழம் வரையறுத்தல், மேற்பார்வையிடல்) போதும்.  
இம்மாதிரியான விடயங்களையும் குளங்களை ஆக்கிரமிப்புச் செய்தால் அது குறித்து முறையிடவும் மாவட்ட ஆட்சித்தலைவரின் பார்வையில் மாவட்ட அளவில் ஆம்பட்ஸ்மேன் அமைக்கப்பட வேண்டும். இந்த ஆம்பட்ஸ்மேன் மேல் முறையீடு செய்ய மாநிலத்தில் சென்னையிலும் மதுரையிலும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமும் அமைக்க வேண்டும். 
இவ்வாறு தொன்மையான தொன்று தொட்டு நாம் பாதுகாத்த நீர் ஆதாரங்களைத் திட்டமிட்டு பாதுகாத்து, பராமரிப்புச் செய்வது ஆட்சியாளர்களின் கடமை என்பதை உணர வேண்டும்.

#ksrpost
26-11-2022.
கட்டுரையாளர்: அரசியலார்


Friday, November 25, 2022

Radhika Santwanamu was the first book to be banned in Madras presidency ராதிகா சாந்தவனம் ஆவுடையக்காளின் பாக்கள. Avudai Akkal and ‘Radhika Santawanam’ by Muddupalani in Tamil very soon

Radhika Santwanamu was the first book to be banned in Madras presidency ராதிகா சாந்தவனம் ('ராதிகா சாந்த்வனமு')ஆவுடையக்காளின் பாக்கள.
Avudai Akkal and  ‘Radhika Santawanam’ by Muddupalani in Tamil very soon
—————————————
இன்றைய  (25.11.2022) ஆங்கில இந்து ஏட்டில் முத்துப்பழனியின்  ‘ராதிகா சாந்தவனம் ’ நூல் குறித்த  செய்தி தமிழ்நாடு இன் ஃபோகஸ் பகுதியில் வந்துள்ளது.
  ‘ராதிகா சாந்தவனம் ’  என்ற இந்த நூல், பலரும் அறியாத நூலாகும். பின் நவீனத்துவத்தை அந்த காலத்திலேயே திறம்பட சொல்லிய இந்த நூலின் பாக்களின் கதைக்களம், தஞ்சாவூர்,  காவேரி டெல்டா பகுதியாகும். முத்துப்பழனி தெலுங்கில் எழுதி சுவடிகளாக இருந்த நூலை, இசைவாணி நாகரத்தினம்மா அச்சில் கொண்டு வந்தார். 






  1912 -இல் -ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் -  இந்தியாவிலேயே முதன்முதலாகத் தடைசெய்யப்பட்ட நூல் இது. பின் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, இந்த நூலுக்கான தடையை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தஞ்சையின் மராட்டிய அரசர் பிரதாபசிம்மனின் ராஜ நர்த்தகியாக இருந்த முத்துப் பழனி தெலுங்கில் எழுதிய நூல்.
17ஆம் நூற்றாண்டின் இறுதியில்
ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட இந்நூல் 1887ஆம் ஆண்டு திருக்கடையூர் கிருஷ்ண ராவினால் பதிப்பிக்கப்பட்டது. குஜிலி புத்தகமாக வெளியானது அப்போது.
இந்தப் புத்தகத்தைத்தான் பின்பு பெங்களூர் நாகரத்தினம்மாள் மூலத்துடன் சரிபார்த்துப் பிழை திருத்தம் செய்து தன் முன்னுரை ஒன்றுடன் வெளியிட்டார். ஆபாசமான பாடல்களைக் கொண்ட நூல் தடைசெய்யப்பட வேண்டுமென்ற விவாதம் தீவிரமாகி, நூலைத் தடை செய்யலாம் என்று 27 செப்டம்பர் 1911 ஆம் ஆண்டு பிரிட்டீஷ்  அரசு உத்தரவை வெளியிடுகிறது. அப்போது தடை செய்யப்பட்ட நூல் விடுதலைக்குப் பிறகே தடை விலக்கப்பட்டது.

 18 - ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல், 584 பாடல்களைக் கொண்டது.  சந்தியா முல்சந்தானியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இதை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட இருக்கிறோம். டெல்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியை தி.உமாதேவி மொழிபெயர்த்த நூலை ஏற்கெனவே காவ்யா வெளியிட்டிருக்கிறது.
  இதே காலகட்டத்தில்தான் ஆவுடையக்காளின் பாக்களும் எழுதப்பட்டன.  பாரதி கவிதை எழுத ஆதர்சனமாகத் திகழ்ந்தவர் ஆவுடையக்காள். இளம் வயதில் விதவையான ஆவுடையக்காள்,  அன்றைக்கே பின் நவீனத்துவ கருத்துகளை முன்னெடுத்து தன்னுடைய உரிமைகளையும் சமூக சூழல்களையும் குறித்து எழுதிய கவிதைகள் அவசியம் கவனிக்கப்பட வேண்டியவையாகும். குற்றாலம் பகுதியில் உள்ள மேற்கு  தொடர்ச்சி மலை வனத்தில் ஐக்கியமாகி தனிமையில் இந்த பாக்களை அவர் வடித்துள்ளார். 
 ஆவுடையக்காள் பாடல்கள், ராதிகா சாந்தவனம் ஆகிய இரண்டு நூல்களையும் கொண்டு வர ஆதிரா முல்லை, நண்பர் ஆர்.ஆர்.சீனிவாசன், மற்றும் கவிஞர் குட்டி ரேவதி ஆகியோர் முன்னெடுப்புப் பணிகளைச் செய்து வருகிறார்கள். கதை சொல்லி, பொதிகை – பொருநை – கரிசல் கட்டளை அமைப்பின் மூலமாக  இந்த இரண்டு நூல்களையும் அச்சில் கொண்டு வர முயற்சி செய்து வருகிறேன். தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இந்தப் படைப்புகள் பெருமையைச் சேர்க்கும். 

Radhika Santwanamu was the first book to be banned in Madras presidency 
Radhika Santwanamu, an erotic work of 584 poems in Telugu written by poet – courtesan Muddupalani in the 18th Century, was the first book to be banned in 1912 in Madras Presidency for obscenity. A new edition brought out by Bangalore Nagarathnamma attracted the ban, which was revoked around independence.
The Hindu, 25th  Nov 22.

There is a popular misconception that Post Modernism came from the West. In reality, though India has seen progressive writers in the regional language even in ancient times. In Tamil Nadu, we had progressive poets from the Sangam era such as Andal, Avudai Akkal, Avvaiyar and Karaikalammaiyar, who expressed feminist thoughts and socially revolutionary ideas. Telugu poet, Muddupalani, a courtesan in the 18th century, came up with a collection of 584 poems, some of which propagated sexual liberation of women. 
On behalf of Kadhai Solli,Podhigai-Porunai- Karsal  poet @adhiramullai Adhira Mullai, -RR Srinivasan and poet Kutty Revathy have taken initiatives to publish the works of Avudai Akkal and  ‘Radhika Santawanam’ by Muddupalani in Tamil very soon. Ms. Sandhya Mulchandani has previously translated “‘Radhika Santawanam”  in English.

#ksrpost
25-11-2022


*குறையொன்றும் இல்லை*.. (3)( தொடர்ச்சி..)

*குறையொன்றும் இல்லை*..  (3)( தொடர்ச்சி..) மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு…
……………………………………
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு…

சென்னை அண்ணா நகர் ரமேஷ், (நாகை)குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட போது,. திமுக முன்னணி தலைவர்களை இந்த வழக்கில் திமுக முன்னோடிகளை  எப்படியாவது சேர்த்துவிட துடித்தது அப்போதைய  அ.தி.மு.க. அரசு. ரமேஷின் நெருங்கிய உறவினர்களிடம், இதற்கேற்றாற்போல வாக்கு மூலம்  வாங்கிவிட வீட்டிலேயே காத்திருந்தனர் ஜெயலலிதா அதிமுக அரசின் காவல்துறையினர்.

அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்தார்என் உறவினர். தவிர ரமேஷின் மனைவி காஞ்சனாவின் தந்தை தந்தை அய்யலுசாமி  1989ல் கோவில்பட்டி சட்டமன்ற தேர்தலில் எனக்காக தேர்தல் பணி பார்த்தவர்.   பி.ஏ.பி.டி.  உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்.. மேலும், கோவில்பட்டி, மேட்டில் காந்தி மைதான்ம் அருகில் அச்சகம் வைத்து பள்ளி பாடப் புத்த துணை நூல்களை அச்சடிக்கும் பணியும் மேற்கொண்டிருந்தார்.

கலைஞர் அவர்களும், முரசொலி மாறன் அவர்களும், என்னிடம், ‘உங்களைச் சார்ந்த ஆட்கள் தானே அவர்கள்.. அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லி வாருங்கள்..’ என்றனர்.

இதைத் தொடர்ந்து தினமும் அண்ணா நகர் ரமேஷ் வீட்டுக்குச் சென்று ஆறுதலும் தைரியமும் சொல்வேன். ஒரு முறை தி.மு.க. வடசென்னை  மாவட்ட  அன்றைய செயலார் பலராமனும் என்னுடன் வந்தார்.

ரமேஷ் குடும்பத்தாரிடம், ‘எது வந்தாலும் சட்டப்படி பார்த்துக் கொள்ளலாம்..  தைரியமாக இருங்கள்..’ என துணை நின்றேன். இப்படி, யாரும் முன் வராத பணிகளை அடியேன் செய்தது உண்டு.

பிறகு கலைஞர் அவர்களும், முரசொலி மாறன் அவர்களும், ‘ரமேஷ் பிரச்சினை குறித்து ஆற்காடு வீராசாமியிடம் ஒரு மனுவில்  கையெழுத்து பெற்று,. மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடுங்கள்’ என்றார்கள். 

அந்த நேரத்தில் மும்பை சென்ற ஆற்காட்டார், அங்கு கால் முறிந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரு வாரத்துக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தார்.  நான்  அங்கு சென்ரு கையெழுத்து அவரிடம் பெற்று, மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடுக்கும் ஏற்பாட்டை செய்தேன்.

இதை சொல்வதற்கு இன்று கலைஞரோ மாறனோ இல்லை.. பல்ராமனும் இல்லை
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த  சித்தண்ணன் அவர்களுக்கு ஓரளவுக்கு இந்த விவரங்கள் தெரியும். 

தலைவர் கலைஞர் நள்ளிரவில் சட்டத்துக்குப் புறம்பாக  ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்யப்பட்ட போது, உலகமே கண்ணீர் வடித்தது.   (அந்த துயர நிகழ்வின் போது, கி.வீரமணி அவர்களும், வைகோ அவர்களும் என்ன கருத்துக்கள் சொன்னார்கள் என்று திரும்பிப் பார்த்தால் நல்லது..) இந்த சம்பவத்துக்குப் பிறகு நடந்த சில நிகழ்வுகள்..

 
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், முதன் முதலாக பொன்முடியின் சைதை வீடு.. அடுத்தடுத்து  துரைமுருகன், ரகுபதியின் அசோக் நகர் வீடு.. என அவர்களது வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்பான  இடங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அப்போது  அங்கெல்லாம் சென்று காத்திருந்து, காவல்துறையினர் கேட்கும் கேள்விகளுக்கு – வழக்கறிஞர் என்கிற முறையில் - உரிய பதில் அளித்து  இரவு வரை உடன் இருந்து சிக்கல்களை தீர்த்துவைத்தவன் அடியேன்.

2002ல் நடந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.. தி.மு.க. சார்பில் வைகை சேகர் நேர் நிற்கிறார்.

அந்த தேர்தல் பணியில் பொன்.முத்துராமலிங்கம், மு.க. அழகிரி,  ஐ. பெரியசாமி, அடியேன் மற்றும் போடி முத்துமனோகரன்  தேர்தல் குழு பணி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோம்.. அந்த நிலையில் பலரும்  ஒப்புக்கு  பணியாற்றிய நிலையில்,  அடியேன், தொகுதி முழுதும் தைரியமாக தனியாக காலை முதல் மாலை வரை  ஊர் ஊராக சென்று தேர்தல்  பணியாற்றியதை மறக்க முடியுா..?
 
அதே போலவே,2002ல்  நடந்த சைதை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல். ஆளும் அ.தி.மு.க. சார்பாக ராதாரவி, தி.மு.க. சார்பாக மா.சுப்ரமணியன் களம் காண்கிறார்கள்.

அமைச்சர் பொன்முடியும் நானும் களத்தில் பணியாற்றினோம். அதிமுகவினர் கடுமையாக நடந்து கொண்டார்கள்..  தேர்தல் நாள் அன்று காலை 11  மணி அளவில் அ.தி.மு.க.வினரால், பொன்முடி கடுமையாக தாக்கப்பட்டார்.. அதற்கு மேல் அவருக்கு பணியாற்ற சிரமமாக இருந்ததால் அவர் சென்று விட்டார். நான் மட்டும் தான் இருந்தேன்.

இன்றைக்கு தி.மு.க. அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் சேகர் பாபு அவர்கள், அப்போது அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்.  அவர், சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொறுப்பாளராக இருக்கிறார்.

தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக இருந்த..  அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்  நாகை அசோகன்.. அவர் இளைஞரணி பொறுப்பிலும் இருந்தார்..   அவரை கடுமையாக தாக்கினார் சேகர்பாபு.  அதைத் தடுக்க அடியேன் போராடியதை மறக்க முடியுமா..
 
அப்போதைய இன்னொரு அ.தி.மு.க. பிரமுகரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்னையும் தாக்க வந்தார்.

அவர் என்னை தாக்க வந்ததை அடுத்து அப்போதைய தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சாரங்கி அவர்களுக்கு   தகவல் தெரிவித்தேன். அவர் நேரடியாக வந்து என்னை  சந்தித்து ஆறுதலும் தைரியமும் தெரிவித்தார்.. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.

கோட்டூர்புரம்  துரைமுருகன் வீட்டு அருகில் உள்ள வாக்குச்சாவடியில் பரிதி இளம்வழுதி வேட்டியை அவிழ்த்து விட்டார்கள்; இன்று போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் சிவசங்கரை சைதை  காவல் நிலையத்தில் மிகவும் அவமரியாதையாக நடத்தினார்கள்.இந்த இடைத்தேர்தலில்  திமுக பகுதி  பொறுப்பாளராக இருந்த கருப்பசாமி பாண்டியன்  மற்றும் இன்றைய அமைச்சர்  ரகுபதி,  உள்ளிட்ட சிலர் மீது வழக்கும் தொடுத்தார் அப்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த விஜயகுமார்.  கைது  நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.  இது தொடர்பான வழக்கு, சைதை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போதும் அடியேன் என்னால் இயன்ற அத்தனை பணிகளையும் கழகத்துக்காக செய்தேன்.

எனது இந்த தேர்தல் பணிகளைப் பாராட்டி,   முரசொலியில், உடன் பிறப்பு கடிதத்தில் எழுதி பாராட்டினார் கலைஞர்,,  ஜூவி, கல்கி ஆகிய ஏடுகள், அடியேன் ஆற்றிய பணிகளை முழுமையாக எழுதி செய்திக் கட்டுரைகள் வெளியிட்டன. 

 சென்னை கடற்கரை கண்ணகி சிலை இடித்துத் தள்ளப்பட்ட  விவகாரத்தில், கலைஞர் அவர்களின் அறிவுறுத்தலின் படி  அடியேன் களம் இறங்கினேன். சைதை மறைமலையடிகள் பாலத்தின் தென்புறம் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம்,   அண்ணா மேம்பாலத்துக்கு க்கு அருகில் உள்ள பொ.ப.துறை அலுவலகம் என பத்து இருபது தடவைக்கு மேல்  இங்கும் அங்குமாக அலைந்தது நினைவில் ஆடுகின்றன..  செங்கை சிவம்,  இரு சட்டமன்ற தொகுதிகளில் தலைவர் கலைஞர் சொல்லி போட்டியிட மனுக்கள் தாக்கல் செய்த போது காவல் துறையினரின் கடும நெருக்கடி; அப்போது அச்சரவாக்கம், பெரம்பூர்  தொகுதியில் உடன் இருந்து மனுகளை தாக்கல் செய்தது என…..
  
இப்படி, சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன.  இவற்றை சொல்லக் காரணம் மன அழுத்தமோ,  வேதனையோ இல்லை… யாரையும் குற்றம் சாட்டுவதோ,குற்றப்பத்திரிகை வாசிப்பதோ என் நோக்கமல்ல..

எங்கிருந்தாலும் அடியேன் திடமாக செயல்படக் கூடியவன்.

வரலாற்றை பலர் மறந்துவிடுவர்.. சிலர் மறைத்து விடுவர்.. செய்யதை சொல்கிறேன்.
அப்படி நடந்துவிடக் கூடாது என்பதாலேயே இந்த ஞாபகப் பகிர்வுகள்.

மெளனமாக கடந்து செல்ல முடியா நிலை… எவரையும் குறை கூற அல்ல  இந்த பதிவு.. 

மற்றபடி.. 

குறையொன்றும் இல்லை..!
 
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
#ksrpost
25.11.2012

Thursday, November 24, 2022

மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே



மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே

தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

மலரே குறிஞ்சி மலரே

யார் மடி சுமந்து
தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து
தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ

கொடி அரும்பாக
செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ

நாயகன் நிழலே
நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்

தாய் வழி சொந்தம்
ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே






உறவென்னும் சாம்ராஜ்ஜியம்

தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

மலரே குறிஞ்சி மலரே

பாடிடும் காற்றே
பறவையின் இனமே
பனி மலைத்தொடரில்
பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களே

பால் மனம் ஒன்று
பூ மணம் ஒன்று
காதலில் இன்று
கலந்தது கண்டு

நல்வாழ்த்து கூறுங்களே

தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

மலரே குறிஞ்சி மலரே

மலரே குறிஞ்சி மலரே



இந்து தமிழ் திசை

https://kamadenu.hindutamil.in/politics/ks-radhakrishnans-open-letter-to-chief-minister-stalin

குறையொன்றுமில்லை.. …………………………………………… மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு.. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இந்த கருத்துக்களை வைக்கிறேன்

குறையொன்றுமில்லை..
……………………………………………
(2)

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு..
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இந்த கருத்துக்களை வைக்கிறேன்.
தங்களுக்கு நன்றாக தெரியும்.. 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற நான் உழைத்தது.. இதை தி.மு.க. பொதுக்குழுவிலேயே மறைந்த முரசொலி மாறன் அவர்கள் சிலாகித்து பேசியது..
கலைஞர் நள்ளிரவில் அராஜகமாக கைது செய்யப்பட்ட போது, அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ கேசட்டை இரவோடு இரவாக சன் டி.வியி்ல் ஒப்படைத்து ஒளிபரப்பப் செய்தது..
அந்த கொடுமையை மாநில மனித உரிமை அமைப்புக்குக் கொண்டு சென்றது..

குயின் மேரிஸ் விவகாரத்தில் தங்களை காவல்துறை கைது செய்து கடலூர் சிறைக்கு கொண்டு சென்றபோது இரவு முழுதும் உடன் இருந்தது..என மீதும் FIR யில் என் பெயர் சேர்க்கப்பட்டு என் மீதும் வழக்கு சைதை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.இந்த விசயத்தையும் மாநில மனித உரிமை கழகத்துக்குக் கொண்டு செல்ல மரியாதைக்குரிய தங்களது துணைவியார் அவர்களை அழைத்துச் சென்று நடவடிக்கை எடுக்க உழைத்தது..தங்களை குறி வைத்து விசாரித்த எனது உறவினர் அண்ணா நகர் ரமேஷ் குடும்பம் தற்கொலை சம்பவங்களில் குறித்த  எனது சட்ட நடவடிக்கைகள்… நிர்யாவாகிகள் யாரும் எட்டி பார்காத  ஆண்டிபட்டி, சைதை2001 -22  இடைத்தேர்தலில் நான் ஆற்றிய பணிகளை கலைஞர்,கல்கி, ஜீனியர் விகடன் என்னை பாராட்டி எழுதியது மறக்க முடியாது.



1984 – 85 முதல் டெசோ  மற்றும் அது தொடர்பான பணிகளில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உழைத்தது...பின்  முள்ளிவாய்க்கால் துயர சூழலில் 2011 இராண்டாம் டெசோ அமைப்பை கட்டியது…டெசோ தீர்மாணங்கள் ஐநா மன்றம் கலைஞர் கடிதம் உட்பட எடுத்து சென்ற பணிகள், தங்களை பிரிட்டிஷ் (லண்டன்) நாடாளுமன்றத்தில் நடந்த ஈழ மாநாட்டிற்க்கு அழைத்து சென்றேன்.

1985ல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் மீதான கப்பல் விவகார ஊழல் குற்றச்சாட்டு குறித்து  விரிவான அறிக்கை தயாரித்தது.. இத முரசொலி மாறன் அவர்கள் பாராட்டியது…

இன்னொரு விசயம் உங்களுக்குத் தெரியுமா இல்லையா என  எனக்குத் தெரியவில்லை.. தலைவர் கலைஞர் 1979 என்னை 1979 முதல் பெயர் சொல்லி அழைக்கும் அறிமுகம் உண்டு.
1991ல் கலைஞர் அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திய ஒரு விசயத்தில் தீர்வுகாண  மறைந்த என்.வி.என்.சோமு, வழக்கறிஞர் என்.கணபதி ஆகியோர் முயன்றும் இயலாத சூழலில், அடியேன் முயற்சி எடுத்து அப்பிரச்சினையை தீர்க்க ஒரு காரணமாக இருந்தது…வைகோ, விஜயா தாயன்பனுக்கு ஆகியோருக்கு நன்கு தெரியும்.

இறுதியாக ஒரு விடயம்..
2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது,  21 இடங்கள் என;சங்கரன்கோவில், சேரன்மாதேவி, சங்ககிரி ஆகிய தொகுகளுக்காக ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து திடுமென கூட்டணியை முறித்துக்கொண்டார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள். ‘தி.மு.க.வுடன்தான் கூட்டணி வேண்டும்’  என்று வலியுறுத்தி வெளியேறினேன்..
தனியார் நிறுவனத்தில் பணியி்ல் உள்ள ஒரு பெண்மணி! அவர்தான் அன்று கலைஞர் அவர்களின் கொடும்பாவையை எரித்தார்..இன்று தமிழக அரசு வாரிய தலைவர்.உழைப்பை கொடுத்த நாங்கள் இடை நீக்கம்.மகிழ்ச்சி… நன்று. இப்பிரபஞ்சத்தின் அவசரங்கள் புரிகின்றன.

இவற்றை எல்லாம் சொல்லக் காரணம்; எந்த எதிர்ப்பார்ப்புகளும் இல்லை.. எவ்வித நோக்கங்களும் இல்லை..
தாங்கள் அறிய வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தப் பதிவு.. இன்னும் சிலவற்றை  பின் சொல்கிறேன். இதையும் சொல்லவில்லை என்றால் என்னுடைய 52 ஆண்டு அரசியல் வாழ்வு ஒன்றும் இல்லை என ஆகிவிடும்.

மற்றபடி..
குறையொன்றும் இல்லை!
நிம்மதியாக பொது தளத்தில் பணிகளை ஆற்ற இயலும்

நேற்றைய நாளில்  என்னைக் கடந்து சென்றவர்கள், இன்றைய நாளில் வேறு மாதிரித்  தோற்றமளித்தார்கள். 
அவர்களுக்கு நானும் அப்படித்தான்  தெரிந்திருப்பேனோ ? அவ்வளவுதான்.

(இன்று மனைவியின் எட்டாம் ஆண்டு நினைவு நாள்.)

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#ksrpost
24.11.2022

*திமுகவில் இருந்து இடை நீக்கம் செய்து ஒரு மாத கால அமைதிக்கு பின்* ….

*குறையொன்றும் இல்லை*..  (1)( தொடர்ச்சி.2.) மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு
*திமுகவில் இருந்து இடை நீக்கம் செய்து  ஒரு மாத கால அமைதிக்கு பின்* ….
—————————————
(1)
எந்த உழைப்பும் இல்லாத தியாகராஜன்கள், நேற்றுவரை திட்டித் தீர்க்கப்பட்ட செந்தில் பாலாஜிகள் என பலர் படிகளே இல்லாத ஏணியின் வழியே  உச்சத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்: என்கிற போது,   எங்களைப் போன்ற உழைப்பைக் கொடுத்த சுயமரியாதைக்காரர்கள் உகந்தவர்களாக இல்லாமல் போவதில் ஆச்சரியமில்லை.
விடுதலை ஆகியிருக்கிறோம்.. மன அமைதி!

பொதுத்தளத்தில் தொடர்ந்து இயங்குவோம்!

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
@ksrpost
23.11.2022

Wednesday, November 23, 2022

மாவீரர்நாள்2022

மகா யாகங்கள் கூட வீண் போகலாம் ஆனால் மாவீரர்களின் தியாகங்கள் வீண் போகாது.
நீங்கள் நிம்மதியா உறங்குங்கள் உங்கள் கனவுகள் உறங்காது.        (மாவீரர் நாள் செய்தி வழங்கிய போது.)
#மாவீரர்நாள்2022#மாவீரர்_நாள்





#*TUTICORIN* -#*Adventures in Tamilnadu’s* *crime capital* .#*It is erroneous and unacceptable*. #*தூத்துக்குடியை தமிழகத்தின் குற்றங்களின் தலைநகர் என்று அதில் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது . தவறானது* ————————————— நேற்று 22.11.2022 டெல்லி விமான நிலையத்தில், சென்னை திரும்பும்போது WH Smith Store, Delhi Airport எப்போது போனாலும் ஸ்மித் புத்தகக் கடைக்குப் போவது வாடிக்கை. வி.சுதர்சன் என்பவர் எழுதிய TUTICORIN என்ற ஆங்கில நூல் என் கண்ணில்பட்டது. JUGGERNAUT பதிப்பகம் வெளியிட்ட அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன்.

#*TUTICORIN* -#*Adventures in Tamilnadu’s*
*crime capital*
.#*It is erroneous and unacceptable*. #*தூத்துக்குடியை தமிழகத்தின் குற்றங்களின் தலைநகர் என்று அதில் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது . தவறானது*
—————————————
நேற்று 22.11.2022 டெல்லி விமான நிலையத்தில், சென்னை திரும்பும்போது WH Smith Store, Delhi Airport எப்போது போனாலும் ஸ்மித் புத்தகக் கடைக்குப் போவது வாடிக்கை. வி.சுதர்சன் என்பவர் எழுதிய TUTICORIN  என்ற ஆங்கில நூல் என் கண்ணில்பட்டது. JUGGERNAUT  பதிப்பகம் வெளியிட்ட அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன்.  



தெற்கு சீமை தூத்துக்குடி வட்டாரத்தைப் பற்றி எழுதப்பட்ட ஆங்கில நூல் என்பதால் அது என் கவனத்தை ஈர்த்தது. ஆனால் தூத்துக்குடியை தமிழகத்தின் குற்றங்களின் தலைநகர் என்று அதில் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது என்னை வேதனைப்படுத்தியது. It is erroneous and unacceptable.அந்த நூலை வாங்கி விமானத்தில் படித்துக் கொண்டே வந்தேன். 
 
சிவலார்குளம் கொலை வழக்கிலிருந்து நெல்லை-தூத்துக்குடி வட்டாரத்தில் நடந்த பல்வேறு குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து திரு.வி.சுதர்சன்  எழுதியுள்ளார். அதில் ஆர்.கே.நாராயணனின் மால்குடி நிலவரத்தையும் இழுத்துள்ளார். 
 ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் நடந்த கடந்த கால நடவடிக்கைகள் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏன் கொடியங்குளம் கலவரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட சமூகக் குற்றங்கள் அத்தனையும் தமிழகத்தின் வேறு மாவட்டங்களில் நடக்காததுபோலவும் இந்த மாவட்டத்தில் மட்டுமே நடந்தது போலவும் நூலாசிரியர் சொல்வதை  ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆங்கில இதழ் OPEN – இல் இந்த புத்தகத்தின் விமர்சனம் வெளிவந்துள்ளது.

 https://openthemagazine.com/lounge/books/khaki-capers/

#ksrpost 
23-11-2022.
தூத்துக்குடிகோவில்பட்டி நியூஸ்நம்ம கோவில்பட்டிTuticorinதூத்துக்குடி மாவட்டம் TUTICORIN DISTRICTதிருநெல்வேலி & தூத்துக்குடி


Tuesday, November 22, 2022

ஏதோ இந்த எச்சங்கள் சற்று ஆறுதல்

கடந்த இரவுகள் ஐந்து நாட்கள் சொப்பனத்தில் கடந்த கால நினைவுகள்;1970 களில் மாணவர் போராட்டங்கள் காமராஜர்,ஜெபி,
இந்திரா காந்தி சிக்மகளுர் இடைத்தேர்தல்-அர்ஸ்,கலைஞர், பிரபாகரன், நெடுமாறன், 1970-80 களில் நடந்த தமிழக விவசாய போராட்டங்கள் வந்து செல்கின்றன… ஏதோ  இந்த எச்சங்கள் சற்று ஆறுதல்


*Churchill made a number of disparaging remarks about non-white ethnicities throughout his life

*Churchill made a number of disparaging remarks about non-white ethnicities throughout his life, including a series of racist comments and jokes about Indian nationalists made to colleagues during the inter-war period and his wartime premiership. Historian Philip Murphy partly attributes the strength of this vitriol to an "almost childish desire to shock" his inner circle. Churchill's response to the Bengal famine was criticised by some contemporaries as slow (see § Bengal famine), a controversy later increased by the publication of private remarks made to Secretary for India Leo Amery, in which Churchill allegedly said that aid would be inadequate because "Indians [were] breeding like rabbits"Philip Murphy says that, following the independence of India in 1947, Churchill adopted a more pragmatic stance towards empire, although he continued to use imperial rhetoric. During his second term as prime minister, he was seen as a moderating influence on Britain's suppression of armed insurgencies against colonial rule in Malaya and Kenya; he argued that ruthless policies contradicted British values and international opinion. He was statesman without dignity* 

Winston Churchill's statement when India was being given independence :
" Power will go to the hands of rascals, rogues and freebooters. All Indian leaders will be of low caliber and men of straw. They will have sweet tongues and silly hearts. They will fight amongst themselves for power and India will be lost in political squabbles. A day would come when even air and water would be taxed.”

#ksrpost
22-11-2022.


Sunday, November 20, 2022

கலைஞர்-அண்ணா நெருக்கம் ஏற்பட, எம்ஜிஆரை அண்ணவுக்கு அறிமுகம் செய்த நடிகமணி டிவிஎன் -100

கலைஞர்-அண்ணா நெருக்கம் ஏற்பட, எம்ஜிஆரை அண்ணவுக்கு அறிமுகம் செய்த நடிகமணி டிவிஎன் -100  மின்னம்பலத்தில் எனது கட்டுரை - https://minnambalam.com/featured-article/nadikamani-tvn-10

Thursday, November 17, 2022

#*Indian ocean* #*இந்துமகாசமுத்திரம்* #*டீகோகர்சியா* #*சீனா* #*இலங்கை* *அமெரிக்கா* *இந்து மகா சமுத்திரமும், இந்தியாவின் பாதுகாப்பும்*

#*Indian ocean* #*இந்துமகாசமுத்திரம்* 
#*டீகோகர்சியா* #*சீனா* #*இலங்கை*
*அமெரிக்கா* *இந்து மகா சமுத்திரமும், இந்தியாவின் பாதுகாப்பும்* 
#ksrpost
17-11-2022

https://youtu.be/FFVgMFAdlbQ

கிராம ராஜ்யம் வேண்டும் என என்றும் எமது விரும்பும் நிலைப்பாடு.

*குலோத்துங்க சோழ மன்னன் முடிசூட்டும் நாள். அமைச்சர்களும் பல புலவர்களும் அரசரை வாழ்த்தினர்*

*அப்போது ஒளவையார் மன்னனை வாழ்த்திப்பாட எழுந்தார். மன்னரும் அவையோரும் ஒளவையார் என்ன பாடப்போகிறார் என்று மிகவும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒளவையார் ‘வரப்புயர’ எனச் சொல்லி, அமர்ந்துவிட்டார்*.
*இதைனைக் கேட்டோர் யாருக்கும் என்னவென்று புரியவில்லை. பின்னர் ஒளவையாரே இத்தொடரைப் பின்வருமாறு விளக்கியதாக சொல்வர்*.
*வரப்புயர நீர் உயரும்*
*நீர் உயர நெல் உயரும்*
*நெல் உயரக் குடி உயரும்*குடி உயரக் கோல் உயரும்*கோல் உயரக் கோன் உயர்வான்*

திக்கு தெரிய வடபுலத்தில் பணியில் இருந்தாலும் பிறந்த கிராமத்தில் விவசாய வேலைகளையும் கவனிப்பதுதான் மன நிறைவு.
உண்மையான ஆன்மா அங்குதான் உள்ளது. கிராம ராஜ்யம் வேண்டும் என  என்றும் எமது விரும்பும் நிலைப்பாடு.
#ksrpost
17-11-2022.


*வெளி வர இருக்கும் அடியேன்தொகுத்துள்ள* (2தொகுதிகள்) #*கிரா100 க்கு* *திருஅ.முத்துலிங்கம்அவர்களின் அணிந்துரை*;

*வெளி வர இருக்கும் அடியேன்தொகுத்துள்ள*
(2தொகுதிகள்) #*கிரா100 க்கு* 
*திருஅ.முத்துலிங்கம்அவர்களின் அணிந்துரை*; 
————————————


எளிமையின் அழகு
அ.முத்துலிங்கம்
கி.ரா எழுதிய கடைசி நூல் ’மிச்சக் கதைகள்.’ மிகச் சுவாரஸ்யமான பல சம்பவங்களை, இதற்கு முன்னர் எங்குமே சொல்லியிராத நிகழ்வுகளை, இதிலே சொல்லியிருக்கிறார். பலவிதமான உடல் வாதைகள் அவரை வாட்டிய போதிலும் அவற்றிற்கு இடம் கொடுக்காமல் ஆஸ்பத்திரி கட்டிலில் படுத்தபடி பல கட்டுரைகளை எழுதி நூலை பூர்த்தி செய்தது இவரின் சாதனை. வாழ்வின் தரிசனமான இவர் நூலையும், ஆசிரியரையும் கொண்டாடும் விதமாக அமைந்ததுதான் ‘கி.ரா 100’ தொகுப்பு.
இந்த நூலில் 78 இலக்கிய ஆளுமைகள், கரிசல் கதைகளின் தந்தை பற்றி எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதன் பதிப்பாசிரியர் கதை சொல்லியின் இணை ஆசிரியர், பன்முக தன்மை கொண்ட அரசியலார் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் இந்த நூலை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கிறார்.இந்த முயற்சிக்கு கைகொடுத்து உதவிய விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்களின் சேவையையும் மறக்க முடியாது.
கி.ராவை நான் சந்தித்தது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். முதிய வயதிலும் விடாது தேடிக்கொண்டிருக்கும் அவருடைய பண்பே என்னை முதலில் கவர்ந்தது. ‘கண்பார்வை இல்லாதவருக்கு கனவு வருமா? அது காட்சியாகத் தெரியுமா?’ என்பது பற்றி நீண்ட நேரம் விவாதித்தார். ’காட்சி படிமம் அவர்களுக்கு மறுக்கப்பட்டது. ஆகவே கனவும் காட்சியாக தெரியும் வாய்ப்பு இல்லை’ என்று ஒரு விஞ்ஞானி போல தன் தீர்க்கமான முடிவை சொன்னார். புதியதை தெரிந்துகொள்ளும் வேட்கை அவரிடம் இறுதிவரை இருந்தது.
கி.ராவுக்கு எளிமையின் அழகில் அதிக நம்பிக்கை உண்டு. சிக்கலான ஒன்றை எளிய மொழியில் புரிய வைத்துவிடும் சித்து அவருக்கு கைவந்தது. இதற்கு சிறந்த உதாரணம் ’இரிசி’ என்ற வார்த்தையை துல்லியமாகவும், விரசம் இல்லாமலும் விளக்குவதற்காக அவர் எடுத்திருக்கும் முயற்சி. கி.ரா இப்படி விளக்குகிறார். ’நொங்கை வெட்டினால் மூன்று குழிகளிலும் நொங்கு இருக்கும். குழிகள் இல்லாத நொங்குதான் இரிசி.’ இதனிலும் சிறப்பாக யார் விளக்க முடியும்?
இவரிடம் ஓர் உலக சாதனை உள்ளது. கி.ராவுக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் இவர் ஓர் ஆங்கிலப் புத்தகத்தை தமிழாக்கியிருக்கிறார். இன்னொருவர் ஆங்கிலத்தில் படித்து அர்த்தம் சொல்ல தமிழிலே மொழியாக்கம் செய்திருக்கிறார். இப்படி  வியக்கும்படியான காரியங்களை சாதாரணமாக சாதித்துவிடுவார்.
மூன்று தலைமுறைகளின் ஆராதனை பெற்றவர் கி.ரா. மலையை பக்கத்தில் நின்று பார்க்க முடியாது. தூரம் வேண்டும். தூரம் என்பது இங்கே காலம். எதிர்வரும் தலைமுறைகள் எளிமையான, நேரடித்தன்மையான, கலாபூர்வமான இவர் படைப்புகளை வாய்மொழி வடிவில் படித்து இன்புறுவர்.
ஒருவர் வாழ்க்கையில் ‘மிச்சக் கதைகள்’ என ஒன்றுமே கிடையாது. அவற்றை எழுதி முடித்த அடுத்த கணமே புதுக்கதைகள் தோன்றிவிடும். ’கி.ரா 100’- கேஎஸ்ஆரின் தொகுப்பு ஓர் ஆரம்பம்தான். கிராவின் வாழ்க்கையும், அவர் கதைகளும், அவர் கண்ட மானுட அறமும் விரிந்துகொண்டே போகும். அன்பு பெருகும். வாழ்த்துகள்.

அ.முத்துலிங்கம்
எழுத்தாளர், கனடா

Wednesday, November 16, 2022

விடுதலை, நிம்மதி….

அவன் விடுதலையான சிறைப் பறவை, கல்வியும், காலமும் கற்றுத் தந்ததைவிட அவனிருந்த சிறை, அவனுக்குக் கற்றுத் தந்தது அதிகம். இயற்கையை, எதார்த்தத்தை, எதையும் ரசிக்கும் குணத்தை இவை அனைத்தையும் கற்றறிந்தவனாய் அவன் 
விடுதலையாகி வெளியே வருகிறான்.




*நாம் எங்கே செல்கிறோம்*… *இதுவா முன்னேற்றப்பாதை*?

#*நாம் எங்கே செல்கிறோம்*…
*இதுவா முன்னேற்றப்பாதை*?
————————————
*மக்கள் தொகையில் சீனாவைத் தாண்டி இந்தியா  முதலிடத்துக்கு வந்துவிடும். 1805 – இல் நூறு கோடி, 1925  - இல் 200 கோடி என மக்கள் தொகை கூடுதலாகி இன்றைக்கு உச்சத்தைத் தொட இருக்கின்றோம்*. இது முன்னேற்றத்துக்குத் தடையான குறியீடு ஆகும். நாடு எங்கோ சென்று கொண்டிருக்கிறது. 
  மக்கள் தொகை பெருக்கம் போல லஞ்ச லாவண்யங்கள் நித்தமும் பெருகுகின்றன. பொதுவாழ்வு புரையோடிவிட்டது. வாக்குகளை விலைக்கு வாங்கி ஆட்சியாளர்களாக மாறினால், அங்கே எங்கே மக்களாட்சி இருக்கும்?



 ஒரு பக்கம் ஜாதி, மத குழப்பங்களும் அதிகரிக்கின்றன. ஜாதிகள் கூடாது என்று சொல்லிக் கொண்டே ஜாதிக் கட்சிகள் நித்தமும் துவக்கப்பட்டு வளர்ச்சியும் பெற்றால், பிறகு எங்கே நீங்கள் ஜாதியை ஒழிக்கப் போகிறீர்கள்? ஆண்ட இனம்,மன்னர் பரம்பரை, மன்னர் பரம்பரைன்னு சொல்லிட்டு எல்லாத்திலேயும் ஏமாளியா ஆக்கிட்டானுங்க!  ஒரு காலத்தில் பெயருக்குப் பின் ஜாதிப் பெயர்களை போடும்போது கூட இவ்வளவு அராஜகங்கள் நடக்கவில்லை. ஜாதிப் பெயர்களை நீக்கிவிட்டோம்; ஜாதிகளைப் புறந்தள்ள வேண்டும் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைக்கு, மக்களிடையே பகைமை உணர்வுகள் என்னும் விஷவிருட்சங்கள், ஆல விருட்சம் போல பெரிய அளவில் வளர்ந்துள்ளன. 

 பொதுவாழ்வில் நேர்மையான களப்பணியாளர்களுக்கு வேலையில்லை.   லஞ்சம் வாங்கி சொத்துகளைச் சேர்த்து ஊரை உலையிலடிக்கும் கிரிமினல்களுக்கு மக்கள் வாக்களிக்கின்றனர். எந்தக் கட்டுப்பாடுகளும் கடமைகளும் இல்லாமல் பெருவாரியான சமுதாயம் இந்த அவலங்களை ஆதரிக்கும்போது, இன்னும் ஓர் ஐம்பது ஆண்டுகளி்ல் நாடு என்னவாகும்?  வளர்ச்சி, முன்றேற்றம்?  நேர்மை, கண்ணியம், தூய்மையான பொது வாழ்வு என்று சிந்திக்கிறவர்கள் தன்னால் முடிந்த மக்கள் பணிகளைச் செய்து கொண்டு, போலியான ஆர்ப்பாட்டமான பொதுவெளியில் தலைகாட்டாமல் இருப்பதுதான் அவர்களுக்கு மனநிம்மதியைத் தரும். தனிப்பட்ட சுயமரியாதையை அவர்கள் காத்து கொள்வதற்கும் உதவும். இதுதான் இன்றைய யதார்த்தம்.
#ksrpost
16–11-2022

இராஜீவ் கொடுங்கொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. எந்த கொலைக் குற்றம் செய்த கொடியவரும் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் இராஜீவ் கொலைக்கான ஒருமையப் புள்ளியாக கருத்தில் கொண்டு அப்போது விசாரணை நடத்தப்பட்டது என்பதும், முறையான, சரியானவிசாரணைநடத்தப்படவி்ல்லை

IBC interview 
*இராஜீவ் கொடுங்கொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. எந்த கொலைக் குற்றம் செய்த கொடியவரும் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் இராஜீவ் கொலைக்கான ஒருமையப் புள்ளியாக கருத்தில் கொண்டு அப்போது விசாரணை நடத்தப்பட்டது என்பதும், முறையான, சரியானவிசாரணைநடத்தப்படவி்ல்லை என்பதும் எனது கருத்தாக இருந்தது. அதைப் பற்றி ‘இராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள்? ’ என்ற தலைப்பில் நான் 1991 இல்ஒரு கட்டுரையை எழுதினேன்*. 

*அன்றைய காலத்தில் எனது கட்டுரைகளை பிரசுரம் செய்யும் வெளியிட மறுத்து விட்டது. அது  19991இறுதியில் சாணக்கியன் என்ற இதழில் பிரசுரமானது. அதில் ராஜீவ் படுகொலை விசாரணை தொடர்பான முப்பதுக்கும் மேற்பட்ட வினாக்களை நான் எழுப்பியிருந்தேன். அந்த கட்டுரையில் பதில் தெரியா பல விடயங்களை குறிப்பிட்டிருந்தேன். அந்த படுகொலை தொடர்பான  புலன்விசாரணைசரியாக,நியாயமானதாக நடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் எனது கருத்தாக இருந்தது*.
  
*இராஜீவ் கொடுங்கொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. எந்த கொலைக் குற்றம் செய்த கொடியவரும் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதேசமயம் அந்த படுகொலை தொடர்பான விசாரணை நியாயமானதாக நடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் எனது கருத்தாக இருந்தது*.
https://youtu.be/nnHyJc_xc1g

Tuesday, November 15, 2022

#தமிழகத்தில் 48 வகை நீர்நிலைகள்



——————————————————-
01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
02. அருவி – (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது
03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
04. ஆறு -(River) – பெருகி ஓடும் நதி
05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர்  தேக்கம்
06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு
07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை
08.ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது
09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்
10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்
11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு
12. கடல் -(Sea) சமுத்திரம்
13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்
14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. கால் – (Channel) நீரோடும வழி
16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி
17. குட்டம் – (Large Pond) பெருங் குட்டை
18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை
19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை
20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு
22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
23. குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.
24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு
25. கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்
26.வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27. கேணி–( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு
28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை
29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை
30. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்
31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்
32. தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
33. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்
34. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்
35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்
36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்
37. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு
38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்
39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு
41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை
42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்
43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு
44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது
45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்
46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்
47 வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலை
48 வாளி ( Stream) நீர் செல்ல மறுகால்.

பாரதி போற்றிய செங்கோட்டை புரட்சி பெண் ஆவுடையக்பாள்

#*பாரதி போற்றிய செங்கோட்டை புரட்சி பெண் ஆவுடையக்பாள்.   பின்நவீனத்துவத்தைகடந்த நூற்றாண்டுகளில் சொன்ன தமிழர்*….
https://youtu.be/BmVtZb3huMo
#ksrpost
15-11-2022.

Monday, November 14, 2022

#*Don Vardhabhai* *Bombay*

#*Don Vardhabhai* *Bombay*
On The Cover of Imprint Magazine-1985. #*பம்பாய் வரதராஜ முதலியார்*
————————————
வர்தா என்றும் அழைக்கப்படுபவர் , . 1960 களின் முற்பகுதியில் இருந்து 1980 கள் வரை, அவர் கரீம் லாலா மற்றும் ஹாஜி மஸ்தான் ஆகியோருடன் , பம்பாயில் மிகவும் சக்திவாய்ந்த கும்பல் முதலாளிகளில் ஒருவராக இருந்தார். ஆனால் யாருக்கும் உதவி செய்யும் வழக்கத்தை கொண்டவர். ஏழைகள் இவரால் வாழ்வு பெற்றனர்.

இவரின் பூர்வீகம் தமிழ்நாட்டின் வட ஆற்காடு,வேலூர் சத்துவாச்சாரி அங்கிருந்து அவரது தந்தை கப்பல் வணிகத்தில் பணியாற்ற தூத்துக்குடிக்கு குடிபெயர்ந்தார். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் பிறந்தார் .

மும்பைக்கு குடிபெயர்ந்து. VT ஸ்டேஷனில் போர்ட்டராக பணிபுரிந்த அவர், கப்பல்துறை சரக்குகளை திருடி வாழ்க்கையைத் தொடங்கினார். தாராவி வசிக்கும் ஏழைத் தமிழ் மக்களிடையே அவர் அன்புடன் அழைக்கப்பட்ட வரதா மிகவும் பிரபலமாக இருந்தார். மிரட்டி பணம் பறித்தல், கடத்தல், ஒப்பந்த கொலை, நில அபகரிப்பு, சட்டவிரோத சூதாட்டம் மற்றும் மதுபானக் கூடங்கள், சட்டவிரோத மதுபானம் தயாரித்தல் மற்றும் கொள்ளையடித்தல் போன்ற பாதாள உலக சாம்ராஜ்யமாக தனது குற்றச் செயல்களை விரிவுபடுத்தி கள்ளச்சாராயம் விநியோகம் செய்யும் கும்பலின் முழுக் கட்டுப்பாட்டையும் வரதா வைத்திருந்தார்.




மும்பைக்கு குடிபெயர்ந்தார். VT ஸ்டேஷனில் போர்ட்டராக பணிபுரிந்த அவர், கப்பல்துறை சரக்குகளை திருடுவதன் மூலம் தனது குற்ற வாழ்க்கையைத் தொடங்கினார். தாராவி சேரிகளில் வசிக்கும் ஏழைத் தமிழ் மக்களிடையே அவர் அன்புடன் அழைக்கப்பட்ட வரதா மிகவும் பிரபலமாக இருந்தார். மிரட்டி பணம் பறித்தல், கடத்தல், ஒப்பந்த கொலை, நில அபகரிப்பு, சட்டவிரோத சூதாட்டம் மற்றும் மதுபானக் கூடங்கள், சட்டவிரோத மதுபானம் தயாரித்தல் மற்றும் கொள்ளையடித்தல் போன்ற பாதாள உலக சாம்ராஜ்யமாக தனது குற்றச் செயல்களை விரிவுபடுத்துவதற்கு பாரிய தாராவி சேரிகளை பாதுகாப்பான புகலிடமாக பயன்படுத்தினார். கள்ளச்சாராயம் விநியோகம் செய்யும் கும்பலின் முழுக் கட்டுப்பாட்டையும் வரதா வைத்திருந்தார்.

1980 களின் முற்பகுதியில், ஹாஜி மஸ்தான் தனது கடத்தல் நடவடிக்கைகளை கைவிட்டு, சமத் கான் மற்றும் தாவூத் இப்ராஹிம் இடையே ஏற்பட்ட பிளவால் கரீம் லாலாவின் பதான் கும்பல் பலவீனமடைந்த பிறகு , வரதராஜன் மும்பை பாதாள உலகில் சக்திவாய்ந்த போட்டியாளராக உருவெடுத்தார். வரதராஜன் தனது கோட்டைகளில் தமிழ் சமூகத்திற்குள் ஒரு இணையான நீதித்துறை அமைப்பை நடத்தினார். 1980களில் இருந்து, போலீஸ் அதிகாரி ஒய்.சி.பவார் வரதராஜன் முதலியாரை குறிவைத்தார். அவரது கும்பல் உறுப்பினர்களில் பெரும்பாலோர் அகற்றப்பட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர். அவரது சட்டவிரோத சூதாட்டம் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்பட்டன, இறுதியாக 1983 ஆம் ஆண்டின் இறுதியில், வரதராஜன் தனது பாதாள உலக சாம்ராஜ்யத்தை கைவிட்டு மும்பையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1980களின் நடுப்பகுதியில் காவல்துறையினரின் உத்தரவின் பேரில் அவரது மிகவும் பிரபலமான கணபதி பந்தலுக்கு வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவரது கும்பலின் பெரும்பாலான உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நேரம்,இதனால் அவர் பம்பாயிலிருந்து சென்னைக்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சென்னையில் ஜனவரி 1988 இல் மாரடைப்பால் இறக்கும் வரை இருந்தார். மயிலாப்பூர்  தேன்தோமில் சுப்பிரமணியசாமி வீட்டின் அருகே இவருக்கு வீடு இருந்தது. ஹாஜி மஸ்தான் வர்தாவின் விருப்பப்படி இறுதிச் சடங்குகளுக்காக வாடகைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவரது உடலை மும்பைக்குக் கொண்டு வந்தார்.

வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து மணிரத்னம் நாயகன் திரைப்படத்தை கமல்ஹாசன் நடிக்க உருவாக்கினார்.இப்படி பல திரைபடங்கள் வர்தா பாயின் தாக்கத்தில் எடுக்கப்பட்டது.

 1983 இல், அர்த்த சத்யா திரைப்படத்தில், நடிகர் சதாசிவ் அம்ராபுர்கர் நடித்த ராம ஷெட்டி கதாபாத்திரம் வரதராஜனை அடிப்படையாகக் கொண்டது.

1984 இல், நடிகர் அம்ரிஷ் பூரி , மஷால் திரைப்படத்தில் தோகர்பட்டியின் வரதராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் .

1987 ஆம் ஆண்டில், மணிரத்னம் தனது நாயகன் திரைப்படத்தை வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார். நடிகர் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்தார். 

வினோத் கன்னா நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தித் திரைப்படமான தயவன் நாயகனின் ரீமேக் ஆகும் .

1991 ஆம் ஆண்டு மும்பை பாதாள உலக நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட மலையாளத் திரைப்படமான அபிமன்யுவின் கதாபாத்திரங்களில் ஒன்று , கதாப்பாத்திரத்தின் பெயருடன் முதலியாரை ஒத்திருக்கிறது.

ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், அமிதாப் பச்சன் , வரதராஜனின் வசனத்திற்குப் பிறகு அக்னிபத் திரைப்படத்தில் தனது உரையாடல்களையும் பாவனைகளையும் மாதிரியாகக் கொண்டதாகக் கூறினார் . 

2007 இல், தொட்டால் பூ மலரும் படத்தில் , வரதராஜன் வாண்டையார் என்ற பெயரில் ராஜ்கிரண் நடித்தார்.

2010 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பையில் ரவி கான்வில்கர் நடித்த வர்தன் கதாபாத்திரம் வரதராஜன் முதலியாரால் ஈர்க்கப்பட்டது.

2013 தமிழ் திரைப்படமான தலைவாவில் , சத்யராஜின் கதாபாத்திரம் முக்கியமாக வரதராஜனின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டது. விஜய் நாயகனாகவும், சத்யராஜின் மகனாகவும் நடித்துள்ளார்.

மிதுன் சக்ரவர்த்தி நடித்த யாகவராயினும் நா காக்க என்ற 2015 தமிழ் திரைப்படத்தில் வரதராஜனின் வாழ்க்கையிலிருந்து ஒரு பாத்திரம் முக்கியமாக பிரித்தெடுக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான " காலா " இல், வரதராஜனின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்தார்.
#ksrpost
14-11-2022.

Sunday, November 13, 2022

#நூற்றாண்டு_காணும்_நெல்லை_மண்ணின்_ஆளுமைகள்! -கே.எஸ். இராதா கிருஷ்ணன்.#KSR_post 13-11-2022. பகுதி-2

#நூற்றாண்டு_காணும்_நெல்லை_மண்ணின்_ஆளுமைகள்! -கே.எஸ். இராதா கிருஷ்ணன்.#KSR_post  13-11-2022. பகுதி-2
———————————————————
 இந்த ஆண்டு தெற்குச் சீமையில் பிறந்த #காருகுறிச்சி_அருணாசலம், #மூத்த_வழக்கறிஞர்_என்_டி_வானமாமலை, #கு_அழகிரிசாமி, #தொ_மு_சி_ரகுநாதன்,#கி_ராஜநாராயணன், #வழக்கறிஞர்_பாளை_சண்முகம்,#நடிகமணி_டி_வி_நாராயணசாமிக்கும் இந்த ஆண்டுதான் நூற்றாண்டு. 


Today is the death centenary of Sankaradas Swamigal..a pic of the legendary playwright (seen sitting on the right) along with a few other famous drama artistes of the early 20th century..

Today is the death centenary of Sankaradas Swamigal..a pic of the legendary playwright (seen sitting on the right) along with a few other famous drama artistes of the early 20th century.. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  #நாடாகத்_தந்தை_திரு_சங்கரதாசசாமி
    நினைவுநாள் இன்று 13 நவம்பர் 1922.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
       
#தவத்திரு சங்கரதாச சுவாமிகள் (செப்டம்பர் 7, 1867 - நவம்பர் 13, 1922) 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க (Proscenium) மரபிற்கேற்ப உருப்பெற்றது சங்கரதாச சுவாமிகள் காலத்தில்தான். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார்.அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன. புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது சமாதி புதுவை அரசால் பாதுகாக்கப்படுகிறது.

#தவத்திரு_சங்கரதாசு_சுவாமிகள்

#பிறப்பு :

சங்கரதாசு சுவாமிகள், #தூத்துக்குடிக்கு அருகிலுள்ள #காட்டுநாய்க்கன்பட்டி என்னும் சிற்றூரில் #இராமாயணப் புலவர் என அழைக்கப்பட்ட #தாமோதரக் கணக்கப் பிள்ளை. #பேச்சியம்மாள் #இணையருக்கு மகனாக 1867 செப்டம்பர் 7 ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் இவருக்கு #சங்கரன் எனப் பெயரிட்டனர்.

#கல்வி :

தொடக்கக் கல்வி தன் தந்தை தாமோதரனாரிடம் பெற்ற சங்கரதாசர், பின்னர் பழனியில் வாழ்ந்த தண்டபாணி சுவாமிகளிடம் பெற்றார். சங்க இலக்கியங்கள், நீதிநூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியன போன்றவற்றைக் கற்றார். இதனால் வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களான வண்ணம். சந்தம் ஆகியவற்றைப் பாடும் திறனைப் பெற்றார்.

#கணக்கர் :

சங்கரதாசர் தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையில் சிறிதுகாலம் கணக்கராகப் பணியாற்றினார். 1891 ஆம் ஆண்டில் தனது 24 ஆவது அகவையில் அப்பணியைத் துறந்து நாடகத்துறையில் ஈடுபட்டார்.[5]

#துறவு_வாழ்க்கை :

சாமி நாயுடு குழுவில் பணியாற்றும்பொழுது வாழ்க்கையில் வெறுப்புற்ற சங்கரதாசர் தன் வழிபடு கடவுளாகிய முருகனின் அருள்வேண்டி அருட்செலவு (தீர்த்த யாத்திரை) மேற்கொண்டார். அரையில் மட்டும் உடையுடுத்தி அருட்செலவில் ஈடுபட்ட சங்கரதாசரை பலரும் சுவாமிகள் என அழைக்கத் தொடங்கினர்.[6] இதனால் அவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆனார்.

அருட்செலவின் இறுதியில் புதுக்கோட்டை மகாவித்துவான் கஞ்சிரா மான் பூண்டியா பிள்ளை என்பவருடன் சங்கர்தாசர் தங்கினார். அவர் சங்கரதாசரை தன்னுடைய மகனாக தத்து எடுத்துக்கொண்டார்.

#நாடக_சபை_வாழ்க்கை :

ஐயர்கள் நாடக சபை 
#ராமுடு_ஐயர், #கல்யாண_ராமையர் ஆகிய இருவரும் இணைந்து நடத்திய நாடகசபையில் சேர்ந்து நாடங்களில் நடிக்கத் தொடங்கினார். சனீஸ்வரன், எமன், இராவணன், இரணியன் ஆகியன போன்ற எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் ஆசிரியராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.

சாமி நாயுடு நாடக சபை தொகு
பின்னர் சாமி நாயுடு என்பவரின் நாடக சபையில் சங்கரதாசர் சிலகாலம் ஆசிரியராக இருந்தார். அப்பொழுது நாடகத்தின் சூத்திரதாராகவும் நடித்தார்.

நடிப்பதைக் கைவிடுதல் தொகு
சங்கரதாசர் சாவித்திரி நாடகத்தில் எமனாக நடித்தபொழுது அந்நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு கர்ப்பம் கலைந்தது, நளதமயந்தி நாடகத்தில் சனீசுவரன் வேடமிட்டு சங்கரதாசர் அதிகாலையில் அவ்வேடத்தைக் கலைக்கச் சென்றபொழுது அவரைக் கண்ட பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்தது என தொடர் துயரங்கள் விளைந்ததால், அவர் நாடகத்தில் நடிப்பதை கைவிட்டார். நாடகம் எழுதுகிற, கற்றுத்தருகிற ஆசிரியப் பணியை மட்டும் தொடர்ந்தார்.

மீண்டும் நாடகப் பணி தொகு
மான்பூண்டியா பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி சங்கரதாசர் மீண்டும் நாடகப்பணியில் ஈடுபட்டார். 'வள்ளி வைத்தியநாதய்யரின் நாடக சபை, அல்லி பரமேசுவர ஐயரின் நாடகசபை ஆகியவற்றில் சிலகாலமும்[9] பி. எசு. வேலு நாயரின் ஷண்முகானந்த சபையில் நெடுங்காலமும் சங்கரதாசர் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

பாலர் நாடக சபைகள் தொகு
சமரச சன்மார்க்க நாடக சபை தொகு
நாடகங்களில் நடித்த நடிகர்கள் சங்கரதாசரின் பாடல்களை மட்டும் பயன்படுத்திக்கொண்டு தமது எண்ணத்திற்கேற்ப உரையாடத் தொடங்கினர். இவ்வுரையாடல்கள் தொடர்புடைய நடிகர்கள் தனிப்பட்ட முறையில் குத்திக்காட்டும் சிலேடைக் கூற்றுகளாகவும் மாறத் தொடங்கின. இதனால் நாடகக்கலை நலியத் தொடங்கவே, சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்ட பாலர் நாடக சபையை முதன்முதலாக 1910 ஆம் ஆண்டில் சமரச சன்மார்க்க நாடக சபை என்னும் பெயரில் சங்கரதாசர் தொடங்கினார்.

பால மீன ரஞ்சனி சபை தொகு
சிறிதுகாலத்தில் சமரச சன்மார்க்க நாடக சபையைக் கலைத்துவிட்டு, ஜெகந்நாத ஐயரின் பால மீன ரஞ்சனி சபையில் ஆசிரியராக சிலகாலம் இருந்தார்.

தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை 
பால மீன ரஞ்சனி சபையிலிருந்து 1918 ஆம் ஆண்டில் கருத்து வேறுபாட்டால் விலகி மதுரைக்கு வந்தார். அங்கே தன் நண்பர்களான சின்னையாபிள்ளை, கருப்பையாபிள்ளை, பழனியாபிள்ளை, சுப்பிரமணியபிள்ளை ஆகிய நால்வரையும் உரிமையாளராகக் கொண்ட தத்துவ மீனலோசனி சபையை உருவாக்கி அதன் ஆசிரியராகத் தனது இறுதிநாள் வரை இருந்தார்.

#நாடக_ஆசிரியர் :

சங்கரதாசர் சுமார் 40 நாடகங்களை எழுதினார். அவற்றுள் தற்பொழுது 18 நாடகங்களின் பனுவல்களே கிடைத்திருக்கின்றன.

வரிசை எண் நாடகம் ஆண்டு பனுவல் கிடைத்தவை:

01 அபிமன்யு சுந்தரி 1921 அபிமன்யு சுந்தரி
02 அரிச்சந்திரா அரிச்சந்திரா
03 அல்லி அர்ஜூனா அல்லி சரித்திரம்
04 இரணியன் 
05 இலங்கா தகனம் 
06 கர்வி பார்ஸ் கர்வி பார்ஸ்
07 குலேபகாவலி 
08 கோவலன் சரித்திரம் 1912 கோவலன் சரித்திரம்
09 சதி அனுசுயா ஸதி ஆநுசூயா
10 சதிசுலோசனா 
11 சத்தியவான் சாவித்திரி சத்தியவான் சவித்திரி
12 சாரங்கதரன் சாரங்கதரன்
13 சிறுத்தொண்டர் 
14 சீமந்தனி சீமந்தினி நாடகம்
15 சுலோசனா சதி சுலோசனா ஸதி
16 ஞான சௌந்தரி சரித்திரம் ஞான சௌந்தரி சரித்திரம் [14]
17 நல்ல தங்காள் நல்லதங்காள்
18 பவளக்கொடி பவளக்கொடி சரித்திரம்
19 பாதுகாபட்டாபிசேகம் 
20 பார்வதி கல்யாணம் 
21 பிரகலாதன் பிரஹலாதன் சரித்திரம்
22 பிரபுலிங்கலீலை 
23 மணிமேகலை 
24 மிருச்சகடி 
25 ரோமியோவும் ஜூலியத்தும் 
26 வள்ளித் திருமணம் வள்ளித்திருமணம்
27 வீரஅபிமன்யு 
28 லவகுசா லவகுச நாடகம்
29 லலிதாங்கி லலிதங்கி நாடகம்
இந்நாடகங்களில் வெண்பா, கலித்துறை, விருத்தம், சந்தம், சிந்து, வண்ணம், ஓரடி, கும்மி, கலிவெண்பா, தாழிசை, கீர்த்தனை ஆகியன உள்ளிட்ட பலவகைப்பாடல்களும் சிறுபகுதி உரையாடல்களும் நிறைந்தவையாக இருக்கின்றன.

இந்நாடகங்களை புராண நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், சமய நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், கற்பனை நாடகங்கள் எனப் வகைப்படுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.

மறைவு :

1921 ஆம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சங்கரதாசருக்கு வலதுகையும் இடதுகாலும் முடங்கிவிட்டன. வாய்திறந்து பேச இயலாது போய்விட்டது. இந்நிலையிலேயே 1922 நவம்பர் 13 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு புதுச்சேரியில் மரணமடைந்தார்.

#பாராட்டுகள்:

சங்கரதாசு சுவாமிகள் இலங்கைக்குச் சென்றிருந்த பொழுது, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் அவரது முத்தமிழ்ப் புலமையை ஆராய அங்குள்ள புலவர்களால் வினாக்கள் தொடுக்கப்பட்டன. அவற்றிற்கு சங்கரதாசர் வழங்கிய விடைகளைப் போற்றிய அச்சங்கத்தினர் அவருக்கு வலம்புரிச் சங்கு ஒன்றைப் பரிசளித்தனர்.

நினைவேந்தல்கள் 
மாணாக்கர்கள் தொகு
சங்கரதாசர் தனது 31 ஆண்டுகால நாடகப்பணி வாழ்க்கையில் எண்ணற்ற நாடகக் கலைஞர்களை உருவாக்கினார். அவர்களுள் பெரும்புகழ்பெற்று விளங்கிய சிலரின் பெயர்கள் பின்வருமாறு:

வேலு நாயர், ஜி.எஸ். முனுசாமி நாயுடு, ஜெகந்நாத நாயுடு, சாமிநாத முதலியார், சீனிவாச ஆழ்வார், நடேச பத்தர், ராஜா வி. எம். கோவிந்தசாமிபிள்ளை, எம். ஆர். கோவிந்தசாமிபிள்ளை. சி. கன்னையா, சி. எஸ். சாமண்ணா ஐயர், மகாதேவய்யர், சூரிய நாராயண பாகவதர், சுந்தரராவ், கே. எஸ். அனந்தநாராயண ஐயர், கே. எஸ். செல்லப்ப ஐயர், பைரவ சுந்தரம் பிள்ளை, சீனிவாச பிள்ளை. பு. உ. சின்னப்ப           டி. எஸ். துரைராஜ், தி.ச. கண்ணுசாமிபிள்ளை, தி.க. சங்கரன், தி.க.முத்துசாமி, தி. க. சண்முகம், தி. க. பகவதி, பாலாம்மாள், பாலாமணி, அரங்கநாயகி, வி.பி.ஜானகி, கோரங்கி மாணிக்கம், டி. டி. தாயம்மாள் 

நாடகத் திரட்டுகள் தொகு
சங்கரதாசர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய நாடகப் பனுவல்களைத் திரட்டி அச்சேற்றும் முயற்சிகள் நடைபெற்றன. அவ்வகையில் அபிமன்யு சுந்தரி, சுலோசனா சதி ஆகிய இரு நாடகப் பனுவல்களும் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் ஆதரவோடு 1959 இல் வெளிவந்தன.

தி. க. சண்முகத்தின் தனிமுயற்சியால் சீமந்தனி, பக்த பிரகலாதா, அபிமன்யுசுந்தரி, பவளக்கொடி, சுலோசனாசதி, சதி அனுசூயா, கோவலன் ஆகிய நாடகப்பனுவல்கள் சங்கரதாஸ் சுவாமிகள் இன்கவித் திரட்டு என்னும் பெயரில் நூல்வடிவம் பெற்றன.

2009 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் வீ. அரசு தற்பொழுது கிடைக்கக்கூடிய 18 பனுவல்களையும் தொகுத்துள்ளார். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு - பதினெட்டுப் பனுவல்கள் என்ற பெயரில் புதுச்சேரியைச் சார்ந்த வல்லினம் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

இவைதவிர, சங்கரதாசு சுவாமிகளின் நாடகக் களஞ்சியம் என்னும் நூலை சென்னை காவ்யா வெளியீடு வெளியிட்டு இருக்கிறது.

#வாழ்க்கை_வரலாறு :

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கைக் குறிப்பை 1955 ஆம் ஆண்டில் தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்னும் பெயரில் தி. க. சண்முகம் எழுதி வெளியிட்டுள்ளார்.

வாழ்க #கலைத்தாயின்_தலைமகனின்

#புகழ்.
நன்றி:விக்கிப்பீடியா.
                        #வங்கனூர்_அ_மோகனன்.

ஓவியம் : ஓவிய மன்னர் திரு #மாதவன்.
.

#*காந்திகிராம நிகர் நிலை பல்கலைக்கழகம்*

#*காந்திகிராம நிகர் நிலை பல்கலைக்கழகம்*
————————————
கடந்த  11.11.2022 காந்திகிராம நிகர் நிலைபல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு இந்திய பிரதமர் வந்தார். இது குறித்தும் டாக்டர் சௌந்தரம் அம்மாவைப் பற்றியும் பதிவு செய்திருந்தேன். காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் உருவாக அப்போது சின்னாளபட்டியைச் சேர்ந்த காந்தியை நேசித்த லகுமையா  நிலங்களைக் கொடுத்தார். 

காந்திய சிந்தனைகள், கிராம மேம்பாடு, கிராமியப் பொருளாதார ஆகிய இலக்குகளை வைத்து டாக்டர் சௌந்தரம் அம்மாவும்,  டாக்டர் ராமச்சந்திரனும் நிறுவினார்கள். டாக்டர் ராமச்சந்திரன் தாகூரின் சாந்தி நிகேதனில் படித்தவர். நேரு ஒருகாலத்தில்   ‘பெரிய தொழிற்சாலைகள் நாட்டுக்குத் தேவை, அவைதான் கோயில்கள் ’
என்று சொல்லி பல தொழிற்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தவர். ஆனால் அவர் தனது இறுதிக் காலத்தில் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தபோது, கிராமியப் பொருளாதார நடவடிக்கைகளில் தான் அதிகமாக கவனம் செலுத்தவில்லை என்ற தனது கவலையைத் தெரிவித்தார்.
 
இந்திராகாந்தி  தன்னுடைய இரு மகன்களோடு சிலநாட்கள் இங்கு வந்து சௌந்தரம் அம்மாவின் விருந்தினராகத் தங்கியதுண்டு. அது அவருடைய கணவர் பெரோஸ் காந்தி இறந்த நேரம். அப்போது ராஜீவ் காந்தியும், சஞ்சய் காந்தியும் பள்ளி செல்லும் சிறுவர்கள். இந்திராகாந்தி 

1976 -இல் இந்த பல்கலைக்கழகத்துக்கு வந்துபோது இந்தப் பல்கலைக்கழகத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்ற அனுமதி அளி்த்தார். 
 மார்டின் லூதர் கிங் இந்தப் பல்கலைக்கழகத்தைப் பற்றிக் குறிப்பிட்டு சிலாகித்து பாராட்டியதும் உண்டு. 
 
இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவ டிவிஎஸ் நிறுவனம், போர்ட் நிறுவனம் ஆகியவை பல உதவிகளை முன் வந்து செய்தன. 
 
என் சிறுவயதில்  இந்த பல்கலைக்கழகத்துக்கு நான் சென்ற மங்கலான நினைவு உள்ளது.
 என்னுடைய உறவினர்  வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த வி.ராமசாமி, கிராமிய பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய முதுகலை பட்டப் படிப்பை அங்கே படித்துக் கொண்டிருந்தார். என் தந்தையாரும் நானும்  திண்டுக்கல் சென்றுவிட்டு மதுரை திரும்பும்போது என் தந்தையார் என்னை காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அங்கு  கிராமங்களில் இருப்பது மாதிரியான ஓட்டுக் கட்டடங்கள், பசுமையான மரங்கள் இருந்தன. ஒரு வித்தியாசமான கலாசாலையாக அது இருந்தது.

#ksrpost
13-11-2022.

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...