Wednesday, November 16, 2022

*நாம் எங்கே செல்கிறோம்*… *இதுவா முன்னேற்றப்பாதை*?

#*நாம் எங்கே செல்கிறோம்*…
*இதுவா முன்னேற்றப்பாதை*?
————————————
*மக்கள் தொகையில் சீனாவைத் தாண்டி இந்தியா  முதலிடத்துக்கு வந்துவிடும். 1805 – இல் நூறு கோடி, 1925  - இல் 200 கோடி என மக்கள் தொகை கூடுதலாகி இன்றைக்கு உச்சத்தைத் தொட இருக்கின்றோம்*. இது முன்னேற்றத்துக்குத் தடையான குறியீடு ஆகும். நாடு எங்கோ சென்று கொண்டிருக்கிறது. 
  மக்கள் தொகை பெருக்கம் போல லஞ்ச லாவண்யங்கள் நித்தமும் பெருகுகின்றன. பொதுவாழ்வு புரையோடிவிட்டது. வாக்குகளை விலைக்கு வாங்கி ஆட்சியாளர்களாக மாறினால், அங்கே எங்கே மக்களாட்சி இருக்கும்?



 ஒரு பக்கம் ஜாதி, மத குழப்பங்களும் அதிகரிக்கின்றன. ஜாதிகள் கூடாது என்று சொல்லிக் கொண்டே ஜாதிக் கட்சிகள் நித்தமும் துவக்கப்பட்டு வளர்ச்சியும் பெற்றால், பிறகு எங்கே நீங்கள் ஜாதியை ஒழிக்கப் போகிறீர்கள்? ஆண்ட இனம்,மன்னர் பரம்பரை, மன்னர் பரம்பரைன்னு சொல்லிட்டு எல்லாத்திலேயும் ஏமாளியா ஆக்கிட்டானுங்க!  ஒரு காலத்தில் பெயருக்குப் பின் ஜாதிப் பெயர்களை போடும்போது கூட இவ்வளவு அராஜகங்கள் நடக்கவில்லை. ஜாதிப் பெயர்களை நீக்கிவிட்டோம்; ஜாதிகளைப் புறந்தள்ள வேண்டும் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைக்கு, மக்களிடையே பகைமை உணர்வுகள் என்னும் விஷவிருட்சங்கள், ஆல விருட்சம் போல பெரிய அளவில் வளர்ந்துள்ளன. 

 பொதுவாழ்வில் நேர்மையான களப்பணியாளர்களுக்கு வேலையில்லை.   லஞ்சம் வாங்கி சொத்துகளைச் சேர்த்து ஊரை உலையிலடிக்கும் கிரிமினல்களுக்கு மக்கள் வாக்களிக்கின்றனர். எந்தக் கட்டுப்பாடுகளும் கடமைகளும் இல்லாமல் பெருவாரியான சமுதாயம் இந்த அவலங்களை ஆதரிக்கும்போது, இன்னும் ஓர் ஐம்பது ஆண்டுகளி்ல் நாடு என்னவாகும்?  வளர்ச்சி, முன்றேற்றம்?  நேர்மை, கண்ணியம், தூய்மையான பொது வாழ்வு என்று சிந்திக்கிறவர்கள் தன்னால் முடிந்த மக்கள் பணிகளைச் செய்து கொண்டு, போலியான ஆர்ப்பாட்டமான பொதுவெளியில் தலைகாட்டாமல் இருப்பதுதான் அவர்களுக்கு மனநிம்மதியைத் தரும். தனிப்பட்ட சுயமரியாதையை அவர்கள் காத்து கொள்வதற்கும் உதவும். இதுதான் இன்றைய யதார்த்தம்.
#ksrpost
16–11-2022

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...