Thursday, November 24, 2022

குறையொன்றுமில்லை.. …………………………………………… மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு.. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இந்த கருத்துக்களை வைக்கிறேன்

குறையொன்றுமில்லை..
……………………………………………
(2)

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு..
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இந்த கருத்துக்களை வைக்கிறேன்.
தங்களுக்கு நன்றாக தெரியும்.. 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற நான் உழைத்தது.. இதை தி.மு.க. பொதுக்குழுவிலேயே மறைந்த முரசொலி மாறன் அவர்கள் சிலாகித்து பேசியது..
கலைஞர் நள்ளிரவில் அராஜகமாக கைது செய்யப்பட்ட போது, அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ கேசட்டை இரவோடு இரவாக சன் டி.வியி்ல் ஒப்படைத்து ஒளிபரப்பப் செய்தது..
அந்த கொடுமையை மாநில மனித உரிமை அமைப்புக்குக் கொண்டு சென்றது..

குயின் மேரிஸ் விவகாரத்தில் தங்களை காவல்துறை கைது செய்து கடலூர் சிறைக்கு கொண்டு சென்றபோது இரவு முழுதும் உடன் இருந்தது..என மீதும் FIR யில் என் பெயர் சேர்க்கப்பட்டு என் மீதும் வழக்கு சைதை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.இந்த விசயத்தையும் மாநில மனித உரிமை கழகத்துக்குக் கொண்டு செல்ல மரியாதைக்குரிய தங்களது துணைவியார் அவர்களை அழைத்துச் சென்று நடவடிக்கை எடுக்க உழைத்தது..தங்களை குறி வைத்து விசாரித்த எனது உறவினர் அண்ணா நகர் ரமேஷ் குடும்பம் தற்கொலை சம்பவங்களில் குறித்த  எனது சட்ட நடவடிக்கைகள்… நிர்யாவாகிகள் யாரும் எட்டி பார்காத  ஆண்டிபட்டி, சைதை2001 -22  இடைத்தேர்தலில் நான் ஆற்றிய பணிகளை கலைஞர்,கல்கி, ஜீனியர் விகடன் என்னை பாராட்டி எழுதியது மறக்க முடியாது.



1984 – 85 முதல் டெசோ  மற்றும் அது தொடர்பான பணிகளில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உழைத்தது...பின்  முள்ளிவாய்க்கால் துயர சூழலில் 2011 இராண்டாம் டெசோ அமைப்பை கட்டியது…டெசோ தீர்மாணங்கள் ஐநா மன்றம் கலைஞர் கடிதம் உட்பட எடுத்து சென்ற பணிகள், தங்களை பிரிட்டிஷ் (லண்டன்) நாடாளுமன்றத்தில் நடந்த ஈழ மாநாட்டிற்க்கு அழைத்து சென்றேன்.

1985ல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் மீதான கப்பல் விவகார ஊழல் குற்றச்சாட்டு குறித்து  விரிவான அறிக்கை தயாரித்தது.. இத முரசொலி மாறன் அவர்கள் பாராட்டியது…

இன்னொரு விசயம் உங்களுக்குத் தெரியுமா இல்லையா என  எனக்குத் தெரியவில்லை.. தலைவர் கலைஞர் 1979 என்னை 1979 முதல் பெயர் சொல்லி அழைக்கும் அறிமுகம் உண்டு.
1991ல் கலைஞர் அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திய ஒரு விசயத்தில் தீர்வுகாண  மறைந்த என்.வி.என்.சோமு, வழக்கறிஞர் என்.கணபதி ஆகியோர் முயன்றும் இயலாத சூழலில், அடியேன் முயற்சி எடுத்து அப்பிரச்சினையை தீர்க்க ஒரு காரணமாக இருந்தது…வைகோ, விஜயா தாயன்பனுக்கு ஆகியோருக்கு நன்கு தெரியும்.

இறுதியாக ஒரு விடயம்..
2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது,  21 இடங்கள் என;சங்கரன்கோவில், சேரன்மாதேவி, சங்ககிரி ஆகிய தொகுகளுக்காக ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து திடுமென கூட்டணியை முறித்துக்கொண்டார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள். ‘தி.மு.க.வுடன்தான் கூட்டணி வேண்டும்’  என்று வலியுறுத்தி வெளியேறினேன்..
தனியார் நிறுவனத்தில் பணியி்ல் உள்ள ஒரு பெண்மணி! அவர்தான் அன்று கலைஞர் அவர்களின் கொடும்பாவையை எரித்தார்..இன்று தமிழக அரசு வாரிய தலைவர்.உழைப்பை கொடுத்த நாங்கள் இடை நீக்கம்.மகிழ்ச்சி… நன்று. இப்பிரபஞ்சத்தின் அவசரங்கள் புரிகின்றன.

இவற்றை எல்லாம் சொல்லக் காரணம்; எந்த எதிர்ப்பார்ப்புகளும் இல்லை.. எவ்வித நோக்கங்களும் இல்லை..
தாங்கள் அறிய வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தப் பதிவு.. இன்னும் சிலவற்றை  பின் சொல்கிறேன். இதையும் சொல்லவில்லை என்றால் என்னுடைய 52 ஆண்டு அரசியல் வாழ்வு ஒன்றும் இல்லை என ஆகிவிடும்.

மற்றபடி..
குறையொன்றும் இல்லை!
நிம்மதியாக பொது தளத்தில் பணிகளை ஆற்ற இயலும்

நேற்றைய நாளில்  என்னைக் கடந்து சென்றவர்கள், இன்றைய நாளில் வேறு மாதிரித்  தோற்றமளித்தார்கள். 
அவர்களுக்கு நானும் அப்படித்தான்  தெரிந்திருப்பேனோ ? அவ்வளவுதான்.

(இன்று மனைவியின் எட்டாம் ஆண்டு நினைவு நாள்.)

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#ksrpost
24.11.2022

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...