Thursday, November 30, 2023

#*பிரபாகரன் பற்றி தெரியாத தகவல்கள்* | *உடைக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்* | கொடி பறக்குது | *Aadhan Tamil* #*ஈழம்*#*eelam* #*துவாரகா*

#*பிரபாகரன் பற்றி தெரியாத தகவல்கள்* | *உடைக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்* | கொடி பறக்குது | *Aadhan Tamil* #*ஈழம்*#*eelam* #*துவாரகா* 
https://youtu.be/NSBAjKaozHk?si=jpa-p1H3koAHTlY-

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost 
30-11-2023.

எதுவுமே முடிவல்ல*...

*எதுவுமே
முடிவல்ல*...
எல்லாமே...
நல்லது
நடப்பதற்கான
தொடக்கமே..!

கசப்பான நினைவுகள்
காலம் முழுவதும் 
கசப்பதில்லை

நிகழ்வுகள் மாறும் போது
நினைவுகளும் இனிக்கும்

எல்லாம் சரியாயிடும் அப்படிங்கறது
நம்பிக்கை...

எல்லாத்தையும் சரி செஞ்சிடலாம் அப்படிங்கறது
 தன்னம்பிக்கை...



எல்லாத்தையும் சரி செஞ்சு தான் ஆகணும் அப்படிங்கறது
வாழ்க்கை...

 வாழ்க்கையை
மட்டும்
ஏற்றுக் கொண்டால்
போதும்...

எப்படி வாழ்வதென்பதை
விழும் ஒவ்வொரு
அ(நொ)டியும்
வழிகாட்டும்....

நாம் அனைவரும் அனுபவிக்கும் பொதுவான அதிருப்தி - சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி - விரைவில் திருப்திக்கான வழியைக் கண்டுபிடிக்கிறது. இதனால், நம் மனம் உறங்கிவிடுகிறது. 

துன்பத்தின் மூலம் அதிருப்தி அவ்வப்போது எழுகிறது; ஆனால் மனம் மீண்டும் மீண்டும் திருப்தி தரும் ஒரு தீர்வைத் தேடுகிறது.

இந்த"அதிருப்தி - திருப்தி" என்னும் சக்கரத்தில் மனம் சிக்கிக் கொள்கிறது. 

துன்பத்தின் மூலம் நம்மை தொடர்ந்து விழிப்புற செய்வது நமது அதிருப்தியின் ஒரு பகுதியாகும்.

அதிருப்தி என்பது விசாரணையின் வழியாகும். 

ஆனால் மனம் பாரம்பரியத்துடன், இலட்சியங்களுடன், கோட்பாடுகளுடன் இணைந்திருந்தால் விசாரணை இருக்காது.

30-11-2023.

#ஈழம் #eelam #துவாரகா

பின்னணி என்ன..? பரபரப்பு தகவல் Exclusive | #Thuvaraka | sathiyamTV youtu.be/m78wvlw-j9A?si…
#ஈழம் #eelam #துவாரகா 

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost 
30-11-2023.

Tuesday, November 28, 2023

*மாவீரர் நாளில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வி துவாரகாவின் உரை தமிழ் -English * *Dwaraka, the daughter of LTTE chief Velupillai Prabhakaran- speech*

*மாவீரர் நாளில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வி துவாரகாவின் உரை தமிழ் -English *

*Dwaraka, the daughter of LTTE chief Velupillai Prabhakaran- speech* 
————————————
எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,
 
இன்று மாவீரர் நாள்.
 
தமிழீழம் என்ற அதியுன்னத இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த எமது காவல் தெய்வங்களை எமது இதயக் கோவில்களில் நாம் பூசிக்கும் இத் திருநாளில் உங்கள் முன் வெளிப்படுவதற்குக் காலம் எனக்கு வாய்ப்பு அளித்திருப்பதை மிகப்பெரும் பேறாகவே கருதுகின்றேன்.






 
இப்படி ஒரு சந்தர்ப்பம் எனது வாழ்நாளில் ஏற்படும் என்று நான் நினைத்திருக்கவில்லை. எத்தனையே ஆபத்துகள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களைக் கடந்தே இன்று உங்கள் முன் நான் வெளிப்படுகின்றேன். அதே போல் என்றோ ஒரு நாள் தமிழீழத் தாயகம் திரும்பி, அங்கு எமது மக்களோடு கூட இருந்து அவர்களுக்காகப் பணி செய்வதற்குக் காலம் வாய்ப்பளிக்கும் என்ற அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு.
 
எனது அன்பார்ந்த மக்களே,
 
முழு உலகமுமே வியப்படையும் வகையில் களமுனைகளில் சாதனை படைத்தவர்கள் எமது மாவீரர்கள். தனித்து நின்று எம்மோடு போர்புரியத் திராணியற்ற சிங்கள அரசு, சக்தி வாய்ந்த நாடுகளைத் தன் பக்கம் வளைத்தது. தோல்வியின் விளிம்பில் நின்ற தருணங்களில் எல்லாம் அந்நிய சக்திகளிடமும், சக்திவாய்ந்த நாடுகளிடமும் மண்டியிட்டு யாசகம் புரிந்தது. எமது தேச சுதந்திர இயக்கத்தின் மீது உலகின் பல நாடுகளில் தடைகள் விதிக்கப்பட்டு எமது வளங்கள் முடக்கப்பட்டன. தமிழீழ தாயகத்திற்கான விநியோகப் பாதைகள் மூடப்பட்டன. சிங்களப் படை இயந்திரத்தை எமது தேச சுதந்திர இயக்கம் பலவீனப்படுத்திய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சக்திவாய்ந்த நாடுகள் தலையிட்டு சிங்களப் படை இயந்திரத்திற்கு உயிர்ப்பூட்டின. உலகின் ஒரு மூலையில் தனித்து நின்று, எமது மக்களின் ஆதரவில் மட்டும் தங்கி நின்று போராடிய எமது தேச விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்துப் போனதற்கு இதுவே காரணமாகும்.
 
ஆனாலும் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம் முற்றுப் பெறவில்லை. தமிழீழம் என்ற அரசியல் வேணவா கருக் கொள்வதற்குக் காரணமாக இருந்த புறநிலை சூழல்கள் இன்றும் கூட அப்படியே தான் இருக்கின்றன. தமது தாயக பூமியில் தமது கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையோ, தத்தமது சமய வாழ்வையோ, மொழிப் பாதுகாப்பையோ பேணிப் பாதுகாக்க முடியாத அளவிற்குப் பண்பாட்டுச் சீர்கேடுகளை ஊக்குவித்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் பாகுபாடுகளை மேற்கொள்வதோடு, சிங்கள-பௌத்த மயப்படுத்தல் நடவடிக்கைகளை சிங்கள அரசு முழு மூச்சுடன் முன்னெடுத்து வருகிறது.
 
இவை போதாதென்று ஈழத்தீவில் முற்று முழுதாகச் சிங்களப் படையாட்சிக்கு உட்பட்ட ஒரேயொரு மாநிலமாகத் தமிழீழ தாயகத்தைச் சிங்களம் மாற்றியமைத்துள்ளது. அனைத்து சுதந்திரங்களும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட தேசமாகத் தமிழீழத் தேசம் திகழ்கின்றது. சட்ட ஆட்சி மறுக்கப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் என எந்நேரமும் இராணுவப் பேயாட்சியைச் சிங்களம் திணித்துள்ளது. குரல்வளை நசுக்கப்பட்ட ஒரு மக்களாகவே ஈழத்தீவில் எமது மக்கள் வாழ்கிறார்கள்.
 
மறுபுறத்தில் எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தால், அரசியல் வழிகளில் எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றலாம் எனப் போர் நிகழ்ந்த காலப்பகுதியில் ஆசைவார்த்தை கூறி, நம்பிக்கையூட்டிய
உலகின் சக்திவாய்ந்த நாடுகள் இற்றை வரைக்கும் எமது மக்களுக்கு ஒரு காத்திரமான அரசியல் தீர்வைத் தானும் வழங்கவில்லை. ஈழத்தீவில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது போர்க் குற்றம் என்றும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல் என்றும் கடந்த பதினான்கு ஆண்டுகளில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட ஐ.நா. மன்றமும், இவை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றிய சக்தி வாய்ந்த நாடுகளும், இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட தமிழீழத் தேசத்திற்கு இற்றை வரைக்கும் ஒரு பரிகார நீதியைத் தானும் பெற்றுத் தரவில்லை.
 
இவை தான் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம் தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணிகளாகும். சமஸ்டி அரசு கோரி 1950களில் எழுச்சி கொண்ட எமது தேசத்தின் அகிம்சைப் போராட்டம், 1960களில் ஆயுத வலுக் கொண்டு சிங்கள அரசால் நசுக்கப்பட்டது. இதன் விளைவாகவே 1970களில் போர்க்குணம் கொண்ட இளைய தலைமுறை தோற்றம் பெற்றது. சிங்கள ஆயுதப் படைகளையும், அதன் ஒடுக்குமுறை அரச இயந்திரத்தையும் எதிர்த்து வீரம்செறிந்த ஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். எமது தேசியத் தலைவரும் எனது தந்தையுமாகிய மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில் ஆயிரமாயிரமாய் அணிதிரண்ட எமது இளைஞர்களும், யுவதிகளும் ஈழத்தமிழினம் ஓர் வீறுகொண்ட, மண்டியிடாத வேங்கையினம் என்பதை நிறுவினார்கள். இந்த நிலையை உருவாக்கித் தந்தவர்கள் தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை ஈகம்செய்த மாவீரர்களே. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். அந்த மகத்தான, உன்னதமானவர்களை என்றும் எம் மனக்கோவிலில் வைத்துப் பூசிப்போம்.
 
எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், எமது சுதந்திரத்திற்கான, எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடு இருப்பதற்கு, எமது தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் எமது மக்களும், அரசியல் தலைவர்களும், எமது தேச விடுதலை இயக்கத்தில் பணிபுரிந்த போராளிகளும், செயற்பாட்டாளர்களுமே காரணம் என்பேன். சுதந்திரத்திற்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான யதார்த்த சூழமைவில் மக்கள் என்றும், புலிகள் என்றும் ஈழத்தமிழர்களை வேறுபடுத்திப் பார்ப்பது அர்த்தமற்றது. மக்களே புலிகளாகவும், புலிகளே மக்களாகவும் விளங்கும் யதார்த்தம் எமது போராட்டத்தின் பரிமாணமாகும்.
 
ஆனாலும் எமது அரசியல் போராட்டத்தை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்து, எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். கட்சி பேதங்கள், அமைப்புகளுக்கிடையே நிலவும் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழ தேசத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவும், இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிட்டுவதற்காகவும் ஒற்றுமையோடும், வினைத்திறனோடும் பயணிக்க வேண்டிய கடப்பாடு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழர்களுக்கும் உண்டு. கருத்து வேறுபாடுகள் எமக்கிடையே நிலவலாம். ஆனாலும் வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதே தேசத்தின்
அரசியல் உரிமைகள் என்று வரும் போது ஒரே கோட்டின் கீழ் பயணிக்க வேண்டியவர்களாக நாம் எல்லோரும் இருக்கின்றோம்.
 
அதே நேரத்தில் தாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எமது மக்களினதும், கடந்த காலங்களில் தம்மையே அர்ப்பணித்துப் போராடிய முன்னாள் போராளிகளினதும் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, அவர்களின் பொருண்மிய வாழ்வை மேம்படுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டவர்களாக எமது தேசத்தின் வளம்கொண்ட தரப்பினர் இருக்கின்றார்கள். குறிப்பாக இதற்கான பொறுப்பு புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு உண்டு. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எம் இன உறவுகள் அனைவரையும் பொறுப்பேற்று உதவி புரிந்தால் அந்நியர்களிடம் எமது தேசம் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படாது.
 
இத்தனை ஆண்டுகளாக எமக்காகத் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி, பக்கபலமாகத் திகழும் தாய்த் தமிழக உறவுகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், உலகத் தமிழ் மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது இனம் கடந்து இந்தியாவிலும் மற்றும் உலகநாடுகள் எங்கும் எமக்காகக் குரல் கொடுத்து துணைநிற்கும் உறவுகளின் கரங்களையும் வாஞ்சையோடு பற்றிக்கொள்கிறேன். தமிழீழ தேசத்திற்குப் பக்கபலமாகத் திகழும் தாய்த் தமிழக உறவுகளும், உலகத் தமிழர்களும் எமது மக்களுக்கு உறுதுணையாக நின்று, எமது மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தொடர்ந்தும் நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என்று எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.
 
எனது அன்பார்ந்த மக்களே,
 
நாம் வரித்துக் கொண்ட இலட்சியமும், இதற்காக எமது மாவீரர்கள் கொடுத்த விலையும், எமது தேசம் புரிந்த ஈகங்களும், சந்தித்த இழப்புகளும் அளப்பரியவை. இவை ஒரு நாளும் வீண்போகாது. நெருக்கடி மிகுந்த காலங்களில் எல்லாம் எமக்குத் தூண்களாக நின்றவர்கள் எமது மக்களாகிய நீங்களே. இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களாக எமது விடுதலையை வென்றெடுக்க ஒன்றுசேர வேண்டுமென்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றேன்.
 
மாற்றம் கண்டுள்ள உலக ஒழுங்கிற்கு ஏற்ப, அரசியல் வழியில், அறநெறி நின்று நாம் தொடர்ந்தும் போராடுவோம். எல்லா வகையான போராட்டங்களிலும் அரசியல் போராட்டம் மிகவும் கடினமானது. இவ் வகையான போராட்டத்திற்குப் பொறுமையும், நம்பிக்கையும், இலட்சிய உறுதியும் அடிப்படையானது. இதனை நான் புரிந்து கொள்ளாமல் இல்லை.
 
தமிழீழத் தனியரசே எமது தேசத்தின் இறைமையையும், தன்னாட்சி உரிமையையும் உறுதி செய்யும் என்பது எனது அசையாத நம்பிக்கை. இதுவே எமது தேசியத் தலைவரின் நிலைப்பாடும் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். எமது மக்கள் தமது தாயக பூமியில் அவர்களது மொழியையும், பண்பாட்டையும், தத்தமது சமய வாழ்வையும், பொருண்மிய வளங்களையும் பேணிப் பாதுகாத்து, மேம்படுத்தக் கூடிய வகையிலும், சனநாயக விழுமியங்களுக்கு இசைவாகவும், தனிமனித சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் பேணக் கூடிய விதத்திலும், சட்ட ஆட்சி கொண்ட மக்களாட்சியாகத் "தமிழீழம்" என்ற தனியரசு அமைவதற்கான புறச்சூழலை காலம் ஒரு நாள் கட்டவிழ்க்கும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உண்டு.
 
அதேநேரத்தில் தமிழீழ தாயகத்தில், தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஒரு தேசமாகத் தமிழீழ மக்கள் வாழ்வதற்கு வழிசமைக்கக் கூடிய வகையில் உலகம் முன்வைக்கக்கூடிய அரசியல் தீர்வுகளைப் பரிசீலித்துப் பார்ப்பதற்கு எமது தேசம் தயாராக இருக்க வேண்டும் என்பதை நான் உணராமல் இல்லை.
 
சிங்கள மக்களுக்கும் இந்நேரத்தில் ஒரு விடயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாம் சிங்கள மக்களுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்ல. நீங்கள் எங்களுக்கு எதிரிகளும் அல்ல. சிங்கள மக்களுக்கு எதிராக நாம் செயற்பட்டதுமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். சிங்கள இனவெறிகொண்ட அரசு இயந்திரத்தாலும் சுயநலம் கொண்ட சிங்கள அரசியல்வாதிகளினாலும் திட்டமிட்ட வகையில் பொய்யான கருத்துக்கள் விதைக்கப்பட்டு அப்பாவிச் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களாகத் தூண்டிவிடப்பட்டார்கள் என்பதையும் நான் அறிவேன். எனவே எம்மினத்தின் தார்மீக உரிமைகளையும் எமது மக்களின் உணர்வுகளையும், எமது அறத்தின்பாற்பட்ட போராட்டத்தையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
 
எனது அன்பார்ந்த மக்களே,
 
எமது தேசியத் தலைவர் குறிப்பிட்டது போன்று “எமது பாதைகள் மாறலாம், ஆனால் ஒரு போதும் எமது இலட்சியம் மாறப் போவதில்லை.” சத்தியத்தின் சாட்சியாக நின்று எமது மாவீரர்களின் தியாகமும், மாண்டு போன மக்களின் ஈகங்களும் எமது தேசத்திற்கு வழிகாட்டும். அந்தச் சத்தியத்தின் வழியில் சென்று, என்றோ ஒரு நாள் நாம் எமது இலட்சியத்தை அடைந்தே தீருவோம்.
 
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

My beloved and esteemed people of Tamil Eelam, Today we mark Great Heroes’ Day.
I consider it a great privilege that time has provided me the opportunity to make an appearance on this sacred day when we commemorate in the temples of our hearts the defenders of our nation who laid down their precious lives to achieve our eminent goal of Tamil Eelam.
 
I had never anticipated such an opportunity will arise in my lifetime. I am making this appearance after having surmounted numerous dangers, obstacles, challenges and betrayals. At the same time, I have inexorable faith that time will one day provide me the opportunity to return to my homeland, Tamil Eelam, where I can live with my people and serve them.
 
 
 
My beloved people,
 
Our Great Heroes achieved many unimaginable feats on battle fields, making the entire world look at them in amazement. The Sinhala state which lacked the will to confront us on its own rallied powerful nations behind it. Whenever the Sinhala state was on the verge of defeat, it bowed down to alien forces and powerful nations and sought their support. Our national liberation movement was proscribed in many countries and our resources were frozen. All supply routes to our homeland, Tamil Eelam, were shut down. On every occasion that our national liberation movement weakened the Sinhala military machinery, powerful nations intervened and resuscitated it. This was the reason why the armed struggle spearheaded independently by our national liberation movement in the corner of the world, and depending solely on the support of our people, was silenced in Mullivaikal.
 
Yet, our struggle for political independence is far from over. The political conditions that led to the emergence of our aspiration for Tamil Eelam remain very much alive today. The Sinhala state has embarked on a full-scale Sinhala-Buddhisation programmes in our
homeland, and encourages the disorientation of our culture, thereby making it difficult for our people to safeguard their language, cultural values and their religious ways of living.
 
To make matters worse, Tamil Eelam is the only region in the island of Eelam where the Sinhala state has imposed total military rule. Tamil Eelam has become a nation that has been deprived of all freedoms and human rights. The Sinhala state has deprived our people the rule of law and constantly imposes Satanic rule in the form of counter-terrorism and emergency laws. Our people live in the island of Eelam with their voices silenced.
 
On the other hand, the powerful nations that promised our people and made them believe during the armed conflict that if the armed struggles came to an end our people will be able to realise their aspirations through political means have not delivered a constructive political solution. Neither the UN that filed reports within the past fourteen years that the atrocities inflicted against the Tamil people in the island of Eelam to be war crimes and crimes against humanity, nor the powerful nations that passed resolutions at the UN Human Rights Council, have taken steps to deliver remedial justice to the Tamil nation that became a victim of genocide.
These are the reasons why our struggle for political independence continues to remain alive. The non-violent struggle launched by our nation in the 1950s to create a Tamil federal state was crushed in the 1960s by the Sinhala state through military violence. It was against this backdrop that the valiant youth emerged in the 1970s. Our youth resisted, through a valiant armed struggle, the Sinhala armed forces and the oppressive state machinery. Our men and women, who rallied in their tens of thousands under the leadership of my father, our National Leader Hon. Velupillai Pirapaharan, demonstrated that the Eelam Tamils are a nation of
tigers. It was our Great Heroes who sacrificed their lives in the Tamil Eelam national liberation war who made this possible. Our Great Heroes have transcended time. Let those great, revered ones be honoured in eternity in the temples of our conscience.
 
 
 
Although the armed struggle has come to an end, our political struggle to realise our aspirations and achieve national independence continues to remain alive because of our people, political leaders, and cadres and activists who served in our national liberation movement, both in our homeland and abroad. Our struggle for independence continues with vigour. Under these circumstances, it would be meaningless to differentiate Eelam Tamils as the people and the Tigers. Our political struggle has evolved to the stage where the people and the Tigers have become one entity.
 
Yet, we must move forward our political struggle more effectively and achieve our political rights. Every Tamil, both in our homeland and abroad, has the duty to transcend party differences and differences between various organisations, and work in unity and efficacy to realise the political aspirations of the nation of Tamil Eelam and deliver justice to our loved ones who were subjected to genocide. We may have differences of opinion. Despite the differences, when it comes to the subject of our people’s political rights, we all must travel along the same path in unity.
 
At the same time, the wealthy sections of our nation have the duty uplift our people at home living below the poverty line, and build the lives of our former cadres who selflessly fought
in the past. In particular, this duty falls on Eelam Tamils living abroad. We do not have to rely on the aid of foreigners if we take responsibility for all of our loved ones living below the poverty line.
 
I thank our loved ones and political leaders in our mother Tamil Nadu, and the global Tamil Diaspora for acting as our voice and their unwavering support for many years. I also extend my hand of love to the non-Tamils in India and other parts of our world who voice for us and support us. I have inexorable faith that the people of Tamil Nadu and the Global Tamil Diaspora will stand by our people and voice for them so that they would be able to achieve their rights.
 
 
 
My beloved people,
 
Our goal is of high esteem, and the cost borne by our Great Heroes, the sacrifices made by our nation and the loses we sustained were innumerous. These will never go to waste. You, the people, were the ones who stood as our pillars during difficult times. I urge you all to come together as a people united by our goal so that we would be able to achieve our independence.
In accordance with the norms of the current global order we will continue our struggle through just and political means. Out of all struggles, a political struggle is the most difficult one. Patience, faith and resilience in our goal are the foundations of this form of struggle. I am not ignorant of this.
 
I have inexorable belief that only the creation of an independent state of Tamil Eelam would ensure the sovereignty and the right to self-determination of our nation. You all know very well that this is also the stance of our National Leader. I have inexorable faith that time will one day generate the conditions to establish the state of Tamil Eelam which will respect democratic norms, the rule of law, civil liberties and human rights, and which will allow our people to preserve, protect and develop their language, culture, their own religious ways of living, and economic resources in our motherland.
 
At the same time, I am not unaware of the fact that our nation should be willing to explore any political solutions that may be presented by the world to pave the way for the people of Tamil Eelam to live in the Tamil Eelam homeland as a nation with the right to self- determination.
 
At this conjuncture, I would like to also make a statement to the Sinhala people. We have never been against the Sinhala people. Nor are the Sinhala people our enemies. You are aware that we have never acted against the Sinhala people. I am aware that innocent Sinhala people were turned against the Tamil people by selfish politicians and the racist state machinery that planted malicious ideas in their minds. I therefore have faith that you will recognise the moral rights of our people and our just struggle.
 
My beloved people,
 
To cite our National Leader, “Our paths may change but our goal will always remain the same.” The sacrifices made by our Great Heroes and our people who lost their lives will bear witness to the truth and guide our nation. We will continue our journey on this path of truth and realise our goal one day.
 
“Tigers Yearn for the Tamil Eelam Homeland


#*எனது மாவீரநாள் உரை* #கேஎஸ்ராதாகிருஷ்ணன், #கேஎஸ்ஆர்

#*எனது மாவீரநாள் உரை*
#*maaveerarnaal, #*prabhakaran*, #srilanka, #eelam, #tamileelam, #ltte, #*துவாரகா*, #மாவீரநாள், #பிரபாகரன், #ஸ்ரீலங்கா, #mullivaikkal, #dwaraka'sspeech, #பிரபாகரன்மகள், #முள்ளிவாய்க்கால், #ஈழம், #துவாரகாபேச்சு, #இந்தியாஈழம், 
#கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்ராதாகிருஷ்ணன், #கேஎஸ்ஆர் youtu.be/Dnf28LnYIF0?si…

#*maaveerarnaal #prabhakaran #srilanka #*eelam #tamileelam #ibctamil #ltte #eelam #*துவராகா* #*dwaraka* *ஈழ தமிழ் இனத்துக்கு உதவ யாருமே இல்லையே?*- *KS Radhakrishnan* | IBC *Tamil Eelam* | *Maaveerargal Naal | Prabhakaran*

#*maaveerarnaal #prabhakaran #srilanka #*eelam #tamileelam #ibctamil #ltte #eelam #*துவராகா* #*dwaraka* 

*ஈழ தமிழ் இனத்துக்கு உதவ யாருமே இல்லையே?*- *KS Radhakrishnan* | IBC *Tamil Eelam* | *Maaveerargal Naal | Prabhakaran*

https://www.youtube.com/watch?v=jAhzRKqfBN4

#*Ancient Tamils Indian Elections*** Indian Democracy is greater than the #Democracy of Athens and the #Republic of Rome…. #kudavolaisystem #uttarameru #uttaramerur Elections #Uttarameru inscription #ParantakaChola #pallaru,manur inscriptions. -K.S. Radhakrishnan

Today’s  28-11-2023 the Pioneer ,Delhi 
carried out my column on our ancient Elections.

***#*Ancient Tamils Indian Elections*** 
Indian Democracy is greater than the #Democracy of Athens and the #Republic of Rome….

#kudavolaisystem #uttarameru
#uttaramerur Elections  
#Uttarameru inscription
#ParantakaChola #pallaru,manur inscriptions.

-K.S. Radhakrishnan 
•••••
India’s democratic legacy extends far beyond the very origin of the democracy itself. The fact is that democracy in India was not only established earlier but was also more organized and inclusive than its counterparts in the West. Kudavolai is an ancient election system used to elect the members of the village administration. In this method, people gather in ward wise and write the names of the eligible candidates on slip of palm leaf. Then they gather it together, put it in a pot and choose it after a shuffle. This elective system showcased meticulous planning and inclusivity.

The kudavolai system was practiced from the 9th century to 16th century. The evidence for this is found in three inscriptions from the 12th regnal year of Parantaka Chola. Of these, two were found in Uttaramerur and the other in Pallipakkam village, Thanjavur. Many refer this kudavolai system as an example of Tamilnadu's democratic tradition.

Kudavolai electoral system shows how Manu smriti was built and maintained during the Cholas period.
Eligibility for participating in local body elections:

The candidate should possess one veli land.
A house built in a taxable land on his own site.
Age from 35 - 70 years can only participate
Should have knowledge about Vegas and mantras.
Need to have etiquette manners.
Should not have held this post for three subsequent years.

Uttaramerur Election

Want are the qualifications to stand in an election? Who can stand? Were answered in the constitution which clearly written in the Chola period. Uttaramerur, which has a 1250 years history is situated in Kanchipuram district, about 90 Km from Chennai. We will be amazed to see this 1000 years old inscription that looks like it was written yesterday.

Uttaramerur was divided into 30 families. The members of the respective family should select one person from that family.  Candidates must possess some basic qualifications. The stone inscription clearly described how every village was categorized as Kudumbu, which we call a ward in modern day parlance. Finding a parallel between the present day electoral requirement of candidates to declare their wealth and assets with that of Chola-era practice, there was also a provision to disqualify the people's representatives from contesting elections if any candidate failed to declare his property and money they won. Moreover, if he is disqualified he and his close relatives could not contest the election.

The inscription at Uttaramerur has interesting details of resolution of general assembly and the kudavolai system which was followed to elect representatives to the village assembly or Sabha. The inscription on the temple walls, too, speak about the prevalence of village assemblies in the other parts of the state.

Acts of misconduct including accepting bribe, misappropriating else's property and the likes were strictly prohibited, if the village mates know about the illegal activities, the member will be disqualified within a year. If proven guilty of misconduct, he will disqualify from contesting future elections. People who speak about eradicating corruption and collect lakhs of rupees are called “sagasam”. If they are protected by some others, even the protectors cannot stand for the election.

Breach of ethics became come in this era. There are reports of electoral malpractice, malefaction, booth violence is all about today's election. To avoid such defeats, the process of taking kudavolai will be done in the presence of all the people.

The inscription refers the elected one as “Perumakkal”. No payment was made for the Perumakkal. After the election committees were formed, the functions of the sabha were many and varied.  Out of the 30 elected members, 12 members were appointed to Annual committee, 12 members were appointed as the members of Garden Committee and 6 members to the tank committee. These committees looked after the administration of the subjects entrusted to them. Besides managing the common land, the collection of taxes was also exclusively done by them. The collection of taxes was extremely done by them. It assisted the central officers in surveying the land and assessing the tax. It recorded the transfer of property, settled land disputes. The irrigation was planned at its best, each pond and other water bodies were maintained regularly as a result, rich agricultural practices flourished.

Thousand years have passed, mankind witnessed many changes. Is the electoral system mentioned in the inscription is suitable for this era? Before coming to a negative conclusion, try it in villages otherwise at least in collages, student leaders can be elected in an ethical way without campaigning and party rivalry. But if we compare the discipline, sacrifice, dedication that the people of that time with today in public, it will remain a question mark.

Silappathikaram, the story of jewelled anklet is rooted in the ordinary lives of the early Tamils of Pandiayan kingdom. It strongly empathizes that those in power will be punished if they deviate from righteous principles. One passage in the whole of the epic which had stirred the souls of generations of people for more than a thousand years pertains to Kannaki's rage on hearing that her husband was sentenced to death by the Paandiya King's orders. Like a raging inferno, Kannaki brushed past the security into the royal court and dared the King, who asked "Who are you and why did you come before me?”

"Oh, Injudicious King," retorted Kannaki," I do have a complaint. I hail from the famous Pukar, where we have a tradition of justice; in the name of fair play one of our Kings appeased a pigeon (by giving his own flesh) to the amazement of everyone; in order to uphold justice to a grieving cow who rang the enquiry bell thunderously, another King ordered the chariot run over his only son, who earlier killed her calf by negligently running his chariot over it. From the same city comes Kovalan, son of an affluent, accomplished and highly respected grain merchant, Masatthuvan, who also had an impeccable character. To overcome his cruel fate, Oh King, Kovalan who came to this city to sell my own personal anklets and rebuild our lives, got killed by you unjustly. I am Kovalan's wife, Kannaki".

Then Kannaki proved that her husband was innocent by showing that her anklets contain rubies whereas the Queen's contained only pearls. Realizing his mistake, the King dropped dead. Silapathikaram has a grim force and splendor- it is imbued with both the ferocity of early Tamils and their steam respect for justice and it throws light on the early Tamil political ideas.

Even during kings’ reign democracy was practiced and flourished, but even after so many technological advancements in 21st century, the elections are used for self-gain. Many times it questions whether they run a government or a business. There is no constructive rules for the candidates section. It leads to less hope in the democracy.

The state of corruption and its deep Nexus create and worrying stage. At once, Tamil Nadu was teaching democracy and ethics to the rest of the world by inscriptions. Now all the developmental activities are marred by corruption. Most of the funds allotted for various programs and policies are siphoned in the name of Implementation, but the truth is that it goes into the pockets of politicians. The bureaucratic who is well-known for red tapes, complicated procedures, poor transparency in various policies and programs are also responsible for more corruption activities.

From Chola period we can see a procedural usage of public money for various program. Now on the contrary, when a new government assumes power, the plants and programs of earlier government get cancelled out rightly, leading to waste age of public money.
It is widely known that people who are prone to corruption attitudes are escaping the clutches of law due to unclear nature of laws and underhand dealings with higher officials. No laws are daring enough to reach the corrupt and put them behind bars.

One should think that the country is not only run in technology but also in the scope of human resources. In this era of Artificial intelligence youths are taking everything for Granted and not ready to make a right decision and questioning the state of world a comfortable life is a primary requirement. Nobody is ready to take a responsibility to make the system stand right.
 As we are from the land of Swami Vivekananda, his message for the youth of this country is “let’s be human”. He also dwelt on the capabilities of the youth; he wanted the youth to train itself in order to serve humanity.

What he wanted from the youth were ‘muscles of iron’ and ‘nerves of steel’. Today, the youth are exceptionally responsive and they just need to be encouraged. Swami Vivekananda was only the medium; he is himself the message as well for the youth of India. His teachings will always stay relevant.

He once said, “The education which does not help the common mass of people to equip themselves for the struggle for life, which does not bring out strength of character, a spirit of philanthropy, and the courage of a lion – is it worth the name? Real education is that which enables one to stand on one’s own legs.” For him, education meant secular learning that built character and instilled human values in students.

All these initiatives of the Government require active involvement and support of youth as they are the major stakeholders of future of this country.
And as Swami Vivekananda once exhorted, “Arise! Awake! And stop not till the goal is reached”, let us all unite and work for the country with Purity, patience, and perseverance as the Swami felt long ago that these three are essentials to success.

The country, believe it or not, is in dire need of a revolution and the only hope we have is the youth. With their vision and farsightedness, the youth can bring to the plate not only changes, but freshness which the country could use to give itself an image makeover.

Chola administration has become foundation for modern democracy. We are in the age to revive our electoral pattern as our democratic legacy extends far beyond Athenian democracy and Roman republic.

-Political Activist 

#ksrpost
29-11-2023


Monday, November 27, 2023

திமுக- கலைஞர்- DMK

📸 Look at this post on Facebook https://www.facebook.com/share/fAoUNPZZgYRyaCGr/?mibextid=WC7FNe

உறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழகத்தில் பிறந்து தமிழீழத்துக்காக உயிர் துறந்த மாவீரர்களின் விபரங்கள் சில…

உறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழகத்தில் பிறந்து தமிழீழத்துக்காக உயிர் துறந்த இந்திய
மாவீரர்களின் விபரங்கள் சில…
———————————————————
 நீண்ட காலமாக தொடர்ந்த ஈழ விடுதலை போராட்டத்தில் பிரபாகரனுடைய  தலைமையானது ஒரு புனிதப் போருக்கான அதற்கு இணையான அரபு நாடுகளில் ஓமர் முக்தார் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் சேகுவாரா போன்ற துணிச்சல் மிக்க தேசிய வீர வரலாற்றுகளின் தொடர்ச்சியில் முக்கியமான ஒரு தேசிய இன போராட்டமாக தான் வரையறுக்க முடியும்.



அத்தகைய ஈழ விடுதலைப் போராட்டத்தில்  நமது தாய் தமிழகத்திலிருந்து பல இளைஞர்கள் இலங்கைக்கு சென்று  பயிற்சி எடுத்து ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று வீர மரணங்களும் அடைந்தார்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கும் சேர்ந்துதான் இந்த மாவீரர் நினைவு நாள் கொண்டாடப்படுகிறது அல்லது கொண்டாடப்பட வேண்டும்.




இன்றைக்கு உலகமெங்கும் இந்த தீபத்திருநாளில் மாவீரர் நாள் கொண்டாடப்படுவது வலியுடன் சேர்ந்த ஒரு வீர வரலாற்று காவிய மரபு தான்.

எழுச்சி தீபங்கள்!

விடியலை நோக்கிய
வீரத்தின் எழுச்சியை
மரணந் தழுவிய 
மாவீரர்களின் சுவாசத்தை
விதைக்கப்பட்ட வீரர்களின் 
தியாகத்தின் வண்ணத்தை
இதழ்களில் ஏந்தி இறுமாப்புடன்
இதழ்நகை முகிழ்க்கின்றன
செங்காந்தள் மலர்கள்! 

குண்டுகள் துளைத்த
அன்னவர்களின்
குருதிப் பிசுபிசுப்பை
உலர்ந்து போகாத
உதிரத்து உணர்வுகளை 
அதரங்களில் ஏந்தி
ஆராதனை செய்கின்றன
செங்காந்தள் மலர்கள்!

கார்த்திகை மாதத்தின்
கந்தக வாடையை
காரிருள் சூழ்ந்த
துயரத்தின் ஓலத்தை 
வெடிகளில் சிதறிய
உயிர்களின் வலிகளை
வண்ணங்களில் ஏந்திய
எழுச்சி தீபங்களாய்
விழிநீரில் மிதக்கின்றன
செங்காந்தள் மலர்கள்!

- வானதி சந்திரசேகரன்

அதற்கான சர்வதேச காரணிகள் என்னவாக இருந்தாலும் உலக வரலாற்றில் தமிழர்களுக்கென பிறந்த ஒரே  தலைவன் மேதகு பிரபாகரன் தான்.

பல்வேறு நேரங்களில் 1979 இல் இருந்து அவர் என்னிடம் சொன்னதை எல்லாம் நான் நினைவில் கொண்டிருக்கிறேன். ஒரே உலகம், ஒரே சூரியன்,ஒரே கனம், ஒரே பிறப்பு, ஒரே பாதை,ஒரே உயிர்... என பல சிந்தனைகள்..

நினைத்துப் பார்க்கவே முடியாத அளவில் உலகத் தமிழர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து தேசம் மொழி இனம் என்கிற வகையில் போராடிய மாவீர்ர்கள் வீர சரிதம் நவம்பர் 27 ல் நினைவு கூறப்படுவது முக்கியமானது.
•••
கருக்கொண்ட வானம் 
இடைவிடாது பொழிகின்ற கார்த்திகை அடைமழையில் 
சாலையைக் கடக்கின்ற தாயின் 
கண்ணீர்க்கோடு 
கரைந்து மறைகின்றது, 
தோண்டி எறியப்பட்ட கல்லறைகளில் இருந்து
சிதறி விழுந்த மணற் துளிகள் 
மழையில் கரைந்து அழுகின்றன, 
அன்றொருநாள் தூவப்பட்ட பூக்களின் நினைவுகளில் 
வேலியோரப் பூவரசு இலைகளைச் சொரிந்து 
தன் கிளைகளை அசைக்கின்றது,
மூடிய வாய்களுக்குள் பேசப்படும் வார்த்தைகளும்
இசைக்கப்படும் கீதங்களும் 
உள்ளங்களில் தீபம் ஏற்றுகின்றன, 
அடித்தும் உடைத்தும் வீசப்பட்ட 
சிதிலங்களில் 
தெரிகின்ற முகங்களில் 
சிந்தப்படும் புன்னகையில்
உயிர்க்கிறது காலப்பெருவெளி..
-சர்மிளா திருநாவுக்கரசு.
••••
உறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழகத்தில் பிறந்து தமிழீழத்துக்காக உயிர் துறந்த எமது மாவீரர்களின் விபரங்கள் சில…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்  சில
தமிழக இளைஞர்கள் 
“ஒரு மார்தட்டும் பதிவு”
ஏறக்குறைய 30,000 போராளிகள் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சற்றுக்குறைய 200 தமிழக போராளிகள் இருந்தனர்; அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை; எனக்குக் கிடைத்தவரை சில தகவல்கள் தருகிறேன். வீரமரணம் அடைந்தோருக்கு விடுதலைப் புலிகள் வழங்கும் ‘மாவீரர்’ பட்டம் பெற்ற தமிழகத் தமிழர்களில் ஒரு கரும்புலி இரண்டு பெண்போராளிகள் உட்பட 14பேரின் விபரங்கள்,

பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

…………………..
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: உமா
இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 27.05.1972
வீரச்சாவு: 11.12.1999
நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
………………………..
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மணியரசி
இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி
ஊர்: தமிழகம்.
வீரப்பிறப்பு: 02.02.1977
வீரச்சாவு: 19.04.1996
நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2 நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
………………………..
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: பத்மநாபன்
இயற்பெயர்: பி.பத்மநாபன்
ஊர்: திருச்சி, தமிழகம்.
வீரப்பிறப்பு: 27.07.1963
வீரச்சாவு: 16.03.1988
நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு
……………………..
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுனில்
இயற்பெயர்: கதிரவன்
ஊர்: தமிழகம்.
வீரச்சாவு: 11.04.1988
நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
…………………………..
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)
இயற்பெயர்: முத்தையா இராமசாமி
ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 23.07.1962
வீரச்சாவு: 11.12.1991
நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
………………………..
நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: உதயசந்திரன்இயற்பெயர்: சேதுபாணடித்தேவர் ராமமணி சேகரன்மகாதேவர்



ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 05.05.1969
வீரச்சாவு: 09.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர்
மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு
…………………………………
பிரிவு: கடற்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: ஈழவேந்தன்
இயற்பெயர்: துரைராசன் குமரேசன்
ஊர்: தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 25.05.1969
வீரச்சாவு: 20.11.1992
நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
……………..
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சச்சு
இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்
ஊர்: பியர், இந்தியா.
வீரப்பிறப்பு: 04.09.1975
வீரச்சாவு: 20.12.1992
நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம் படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
……………………………..
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)
இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 01.01.1966
வீரச்சாவு: 13.05.1996
நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
………………………..
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)
இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 31.05.1975
வீரச்சாவு: 19.05.1996
நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
…………………………..
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குற்றாளன்
இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 08.08.1969
வீரச்சாவு: 16.07.1996
நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு
……………………..
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுதா
இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்
ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு
வீரப்பிறப்பு: 28.10.1980
வீரச்சாவு: 05.07.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
……………………..
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: குருசங்கர்
இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 18.04.1973
வீரச்சாவு: 25.07.1996
நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்
மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
………………………..
போலிகளை பாலூற்றும் இளைஞரைப்பற்றிப் பேசிக் களைப்படைந்தோர் இனி இவர்களைப்பற்றிப் பேசுங்கள்.

ஒரு சொட்டுக் கண்ணீரும்
ஒரு திரி தீபமும்
ஏற்ற முடியாத தேசத்தில்
கார்த்திகை தோறும்
கண் விழிக்கின்றன காந்தள் மலர்கள்,
விழி மூடி உறங்கியவர்களுக்காய்
ஒருபிடி குழிமண்ணிட்ட கைகள்
தேடித் திரிகின்றன
சிதைக்கப்பட்ட கல்லறைகளின்
உயிர்த் தடங்களை
எல்லாமும் தீர்க்கப்பட்டதாக
சொல்லப்படும் இக்காலத்தின் தீபத்திருநாளில்தான்
தன்பிள்ளைக்கொரு தீபம் ஏற்றுகிறாள்
குழிமண்ணிட்ட தாய்.


"கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே" 

#மாவீரர்நாள் 
#மாவீரர்நாள் #நவம்பர்27

#Tamil #Eelam #EelamTamils #WorldwideTamils
#தமிழ்நாட்டில்_பிறந்த_ மாவீரர்கள்

Sunday, November 26, 2023

*இதுதான் பிரபாகரனிசம்... பிரபாகரனின் ததத்துவம்*..! -

#*வேலுபிள்ளை பிரபாகரன் 69வதுபிறந்தநாள்* 
*தமிழர்கள் தலை நிமிர்ந்த நாள்*.
*கார்த்திகை திங்கள் தீப திருநாள்*

*இதுதான் பிரபாகரனிசம்... பிரபாகரனின் ததத்துவம்*..! - 

*KS Radhakrishnan* | IBC Tamil | #*Prabhakaran* | #LTTE 
youtu.be/XsOKYOBW2jc?si…

#ksrpost
26-11-2021.

#இந்தியஅரசியல்_சாசனதினம் #ConstitutionDay #இந்தியஅரசியல்மூலசாசனம்_அசலில்_தமிழில்_ஒரேகையெழுத்து_தூத்துக்குடி மு.சி.வீரபாகு இட்டது இன்றும் உள்ளது.

#இந்தியஅரசியல்_சாசனதினம் #ConstitutionDay
#இந்தியஅரசியல்மூலசாசனம்_அசலில்_தமிழில்_ஒரேகையெழுத்து_தூத்துக்குடிமு_சி_வீரபாகு இட்டது இன்றும் உள்ளது.
——————————————————— 
Constitution Day, also known as "National Law Day" , is celebrated in India on 26 November every year to commemorate the adoption of the Constitution of India. On 26 November 1949, the Constituent Assembly of India adopted to the Constitution of India, and it came into effect on 26 January 1950. 









Ambedkar as the chairman. Other 6 members of the Drafting committee were: K.M. Munshi, Muhammed Saadulah, Alladi Krishnaswamy Iyer, Gopala Swami Ayyangar, N. Madhava Rao (He replaced B.L. Mitter who resigned due to ill-health), T. T. Krishnamachari.




The original copy of the Constitution of India (English) was handwritten by Shri Prem Behari Narain Raizada of Rampur. 
The 500 calligraphed sheets of the Constitution were decorated in 4 years, by Shri NandLal Bose of Shantiniketan. 

இந்திய அரசியல் சாசன தினம் இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம்(Law Day) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் தேதியன்று முதல் முறையாக  அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுகிறது.

ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைப்பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக முயன்று வெற்றியை ஈட்டியது. 1934 ஆம் ஆண்டுவாக்கில் இந்திய நாட்டிற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பிறகு 1936 இலும், மற்றும் 1939-லும் இருமுறை இக்கோரிக்கையை பற்றி வலியுறத்தப்பட்டன. அதன்படி 1942 ஆம் ஆண்டு மார்ச் இல் கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபையை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின்பு 1946 மே இல் அரசியல் நிர்ணய சபை ஏற்பத்த பரிந்துரைக்கப்பட்டு, 1946 சூலையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது 1946 திசம்பர் 11 இல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அச்சபையின் தலைவராக இராஜேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.

1947 ஆகஸ்ட் 15 விடுதலைக்கு பின்பு, இந்தியா, இந்திய, பாக்கிஸ்தான் என இருவேறு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச்சாசனத்தை, உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணயசபை குழு பணிகளை முயன்றது.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை 1946 டிசம்பர் 6-ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டம் 1946-ம் ஆண்டு திசம்பர்-9-ல் நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்கா (தற்க்காலிகம்) செயற்பட்டார்.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவராக டாக்டர் இராஜேந்திர பிரசாத் (நிரந்தரம்) தலைமைவகித்தார்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டம் தில்லியில் நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உறுவாக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு எழுது வரைவுக்குழு தலைவராக டாக்டர் அம்பேத்கர் செயல்பட்டார்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின், ஆரம்பகால மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின், உறுப்பினர்களின் எண்ணிக்கை 299-ஆக இருந்தது.

ஜவஹர்லால் நேரு , சி.ராஜகோபாலாச்சாரி , ராஜேந்திர பிரசாத் , வல்லபாய் படேல் , பி.ஆர்.அம்பேத்கர் , சஞ்சய் பாக்கி, கணேயால் மானேக்லால் முன்ஷி , கணேஷ் வாசுதேவ் மாவலங்கர் , சந்திப்குமார் படேல், அபுல் கலாம் ஆசாத் , ஷ்யாமா , ரஞ்சன்ஹோ முகர்ஜி , ரஞ்சன்ஹோ முகர்ஜி ஆகியோர் முக்கியப் பிரமுகர்கள். பிராங்க் அந்தோனி ஆங்கிலோ-இந்திய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார் , மற்றும் பார்சிகள் ஹெச்பி மோடியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர். ஹரேந்திர குமார் முகர்ஜி , ஒரு கிறிஸ்துவ சட்டமன்ற துணைத் தலைவர், சிறுபான்மையினர் குழுவின் தலைவராக இருந்தார் அரி பகதூர் குருங் கோர்க்கா சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.  நீதிபதிகள், அல்லடி கிருஷ்ணசுவாமி ஐயர் , பெனகல் நர்சிங் ராவ் , கே எம் முன்ஷி மற்றும் கணேஷ் மவ்லாங்கர் போன்றோர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். பெண் உறுப்பினர்களில் சரோஜினி நாயுடு , ஹன்சா மேத்தா , துர்காபாய் தேஷ்முக் , அம்ரித் கவுர் மற்றும் விஜய லக்ஷ்மி பண்டிட் ஆகியோர் . 

பேரவையின் முதல், இரண்டு நாள் தலைவர் சச்சிதானந்த சின்ஹா ; பின்னர் ஜனாதிபதியாக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது 9 டிசம்பர் 1946 அன்று முதல் முறையாக கூடியது.

சர் பிஎன் ராவ் , சர்வதேச நீதிமன்றத்தில் முதல் இந்திய நீதிபதியாகவும் , ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராகவும் இருந்த ஒரு சிவில் ஊழியர் , 1946 இல் சட்டசபையின் அரசியலமைப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் . அரசியலமைப்பின் பொது அமைப்புக்கு பொறுப்பான ராவ் பிப்ரவரி 1948 இல் அதன் ஆரம்ப வரைவைத் தயாரித்தது. பிஎன் ராவின் வரைவு 243 விடயங்களை மற்றும் 13 அட்டவணைகளைக் கொண்டிருந்தது, அவை விவாதங்கள், விவாதங்கள் மற்றும் திருத்தங்களுக்குப் பிறகு 395 விடயங்களை மற்றும் 8 அட்டவணைகள் வந்தன. 

1947 ஆகஸ்ட் 14 அன்று சட்டமன்றக் கூட்டத்தில் குழுக்கள் முன்மொழியப்பட்டன. ராவ்வின் வரைவு எட்டு நபர்களைக் கொண்ட வரைவுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு திருத்தப்பட்டது, இது 29 ஆகஸ்ட் 1947 அன்று பி.ஆர். அம்பேத்கர் தலைவராக நியமிக்கப்பட்டது. ஒரு திருத்தப்பட்ட அரசியலமைப்பு வரைவு குழுவால் தயாரிக்கப்பட்டு 4 நவம்பர் 1947 அன்று சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன், சட்டசபை 165 நாட்களில் பதினொரு அமர்வுகளை நடத்தியது.  26 நவம்பர் 1949 அன்று, அது அரசியலமைப்பை  அவையில் இதில் 284 உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். 

சட்டசபையின் இறுதி அமர்வு 24 ஜனவரி 1950 அன்று கூடியது. ஒவ்வொரு உறுப்பினரும் அரசியலமைப்பின் இரண்டு நகல்களில் கையெழுத்திட்டனர், ஒன்று இந்தியிலும் மற்றொன்று ஆங்கிலத்திலும். அசல் அரசியலமைப்பு கையால் எழுதப்பட்டது, ஒவ்வொரு பக்கமும் பியோஹர் ராம்மனோகர் சின்ஹா ​​மற்றும் நந்தலால் போஸ் உட்பட சாந்திநிகேதனைச் சேர்ந்த கலைஞர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது .  இதன் எழுத்தாளரான பிரேம் பிஹாரி நரேன் ரைசாடா ஆவார் . அரசியலமைப்பு டேராடூனில் வெளியிடப்பட்டது மற்றும் சர்வே ஆஃப் இந்தியாவால் புகைப்படம் எடுக்கப்பட்டது . அசல் அரசியலமைப்பின் தயாரிப்பு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆனது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 26, 1950 அன்று, அது இந்தியாவின் சட்டமாக மாறியது . அரசியலமைப்புச் சபையின் மதிப்பிடப்பட்ட செலவு ₹ 6.3 கோடி . அரசியலமைப்பு இயற்றப்பட்டதிலிருந்து 106 க்கும் மேற்பட்ட திருத்தங்களைக் கொண்டுள்ளது. திருத்தங்கள் மொத்தம் நிலுவையில் உள்ள மசோதக்களை வரை 115 க்கு மேலாகும்.

இந்திய அரசியல் மூல சாசனம், அசலில்
தமிழில் ஒரே கையெழுத்து அதன் உறுப்பினர்  மு.சி. வீரபாகு இட்டது இன்றும் உள்ளது. விடுதலை போராட்ட தலைவர் இவர். தூத்துக்குடியை சார்ந்தவர். வ உ சியின் அன்பர்.

\\தமிழில் கையெழுத்திட்ட
#மு_சி_வீரபாகு, #தூத்துக்குடியில் வாழ்ந்த வழக்கறிஞர்
முதல் மக்களவையின்   தமிழக மக்களவை உறுப்பினர். 
24.11.1949 அன்று
இந்திய அரசமைப்புச்சட்டம
மு.சி.வீரபாகு அவர்கள் கையெழுத்திட்ட அரிய புகைப்படம். இன்றும் மக்களவை ஆவணங்களில் உள்ளது.

#M_C_Veerabahu was a Member of Constituent Assembly. He is the one signed in his mother tongue Tamil language in the original Constitution of India

M. C. Veerabahu Pillai
 (19 May 1903 – 15 April 1976) 
was an Indian lawyer, businessman, and politician from Tamil Nadu, who served in the first Lok Sabha of independent India; he was also an independence activist.

M. C. Veerabahu Pillai
Member of Constituent Assembly
In office
1950–1952

Born:19 May 1903
Thoothukudi
Died :April 15, 1976 (aged 72)
Madras Law College

Prior to Indian independence, Veerabahu sacrificed his law career to participate in Mahatma Gandhi's struggle. He was closely associated with stalwarts like Kamaraj and Rajaji. He actively worked for removal of untouchability, prohibition and championed the cause of Scheduled Castes. He was a member of the Constituent Assembly and Provisional Parliament during 1946–1952.

Though he worked for Freedom fighter's pension, he never took any pension throughout his life. He managed his family expenses only from his ancestral property and income. He always worked for the social cause.

M. C. Veerabahu was born to M. Chidambaram Pillai and Gomathi Ammal at Thoothukudi on 19 May 1903. His family was involved in Export Business to Colombo. At a very early age, Veerabahu was involved in Indian Independence Movement.

M. C. Veerabahu was a Member of Constituent Assembly. He is the one signed in his mother tongue Tamil language in the original Constitution of India.//

வாஜ்பாய் பிரதமாராக இருந்த போது அரசியலமைப்புச்சட்ட மறு ஆய்வுக் குழுத்தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் தேசிய மனித உரிமைக் குழு வின் தலைவராக இருந்தவருமாகிய எம்.என். வெங்கடசல்லையா நியமிக்கப்பட்டு அறிக்கையும் வழங்கியது.

இந்த நாள் தேசிய சட்ட தினம்,  அல்லது அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
#ConstitutionDay
#இந்தியஅரசியல்_சாசனதினம்
#ConstitutionofIndia
#இந்தியஅரசியல்_சாசனம்
#ConstitutionAt71
#இந்தியஅரசியல்மூலசாசனம்_அசலில்_தமிழில்_ஒரேகையெழுத்து_தூத்துக்குடிமு_சி_வீரபாகு 

K.S.Radhakrishnan 
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
26-11-2023.


Saturday, November 25, 2023

IAS அதிகாரிகளுக்கு ED சம்மன் முதல்வர் ஏன் பயப்படுகிறார்? - K.S.Rathakrishnan | Dmk | Goondas act

IAS அதிகாரிகளுக்கு ED   சம்மன் முதல்வர் ஏன் பயப்படுகிறார்? - K.S.Rathakrishnan | Dmk | Goondas act

#ksradhakrishnan #dmk #goondasact #udhayanidhistalin #farmers #tamilnadufarmers #savukkumedia #mkstalin #abdulmuthaleef
youtu.be/TWZPADHVIHc?si…

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
25-11-2023

#மாவீரர்வாரம் #கார்த்திகை27

#மாவீரர்நாளில் துவாரகா வருவார் என்பவர்கள் !! ஒவ்வொரு 27 ம் இப்படியே கடக்கப் போகிறதா? | Maveerar Day youtu.be/HaT-xMw8YQY?si…

#thuvaraka #மாவீரர்வாரம் #கார்த்திகை27 #ஈழவர் #மாவீரர்நாள் #மணலாறு #ஈழம் #இலங்கை #முள்ளிவாய்க்கால் #MaveerarDay #November27 #Mullivaikal #Tamils #EzhamTamil #SrilankanTamil #TamilNadu 
youtu.be/HaT-xMw8YQY?si…

#*ConstitutionDay - Nov 26 th*

#**ConstitutionDay Nov 26 th* is celebrated in India on 26th November every year to commemorate the adoption of the Constitution of India. On 26th November 1949, the Constituent Assembly of India adopted the Constitution of India, and it came into effect on 26th January 1950.

The Indian Constitution is the largest and most detailed constitution in the world. It took 2 years, 11 months, and 18 days to complete its draft.
#KnowYourConstitution #ConstitutionDay 

#KSRPost
26-11-2023.


#*அன்று வேறு ஸ்டாலின்* #*இன்று வேறு முதல்வர்ஸ்டாலின்*. #*விவசாயிகள் மீது குண்டாஸ்* #திமுக #DMKFails

#*அன்று வேறு ஸ்டாலின்* #*இன்று வேறு முதல்வர்ஸ்டாலின்*. #*விவசாயிகள் மீது குண்டாஸ்*
#திமுக #DMKFails
•••
இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆட்சி விவசாயிகளின் போராட்டத்திற்கு தடை விதிக்கிறது அந்த போராட்டங்களை ஒடுக்க நினைக்கிறது.

திருவண்ணாமலை சிப்காட் விவகாரத்தில் விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கை பயன்படுத்தியது தொடர்பான போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்தமுயல்கிறது. விவசாய நிலங்களை அழித்து அதன்மீதுதான் என்று பிடிவாதம் பிடிக்கும் இன்றைய கார்ப்ரேட் அரசிற்கு எதிரான  விவசாய போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

தன் திட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் மீது தடை விதிக்கும் இந்த அரசு. எதிர்க்கட்சியாக இருந்தபோது
 அதிமுகவின் ஆட்சியில் விவசாயிகளுடன் இணைந்து நடத்திய போராட்டங்கள்’ டெல்டாப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் போராட்டங்கள் எட்டு வழி சாலைபோராட்டங்களை சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்.அதிமுக ஆட்சி விவசாயிகள் போராடும்போது தடை விதிக்கக்கூடாது என்று போர்க்கொடி தூக்கிய திமுக இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறது? விவசாயிகளையும் குண்டாஸிலும் போட்டு அவர்களது போராட்டங்களை ஒடுக்குவதிலும் காவல்துறை அதிகாரங்களைப் பயன்படுத்துவதிலும் முனைப்பு காட்டி வருகிறது .
அவர்கள் செய்தால் தவறு!  அதையே திமுக ஆட்சி செய்தால் சரியா.  விளைவுகளை சந்திக்க வேண்டும்.

சாத்தான்குளத்தில் , பி.ஜெயராஜ் அவரது மகன் ஜே. பெனிக்ஸ் காவல் மரணத்தில் எதிர்கட்சியாக திமுகநடத்திய போராட்டங்கள். திமுக ஆட்சியில் எத்தனை காவல் மரணங்கள் … தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய போது.. அன்று திமுக பேசியது 
என்ன? …..இப்படி பல 2021 மே மாதம் வரைஉண்டு.இவர்களின் அமைதியான கமுக்கம்…
என்ன சொல்ல… இதை கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம்கூறிக்கொண்டிருக்கிறார்கள். இதை குறித்து இவர்களின் தோழமை கட்சிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். 

அன்று வேறு ஸ்டாலின் இன்று வேறு முதல்வர் ஸ்டாலின்.
வாழியவே இவர்களின் கொற்றம். உலக வரலாற்றில் சரிந்த பல சாம்ராஜ்யங்கள் உண்டு.

#விவசாயிகள்மீதுகுண்டாஸ் 
#திமுக #DMKFails 
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட் 
25-11-2023.


Friday, November 24, 2023

*கார்த்திகை திங்கள்*, *மாவீரர் வாரம்!* *ஈழம்*




நான்காம் நாள் இன்று... 

"மாண்ட வீரர் கனவு பலிக்கும்" போது விதைக்கப்பட்டவர்கள் விருட்சமாவார்கள்.

(படம்: வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில் நேற்று)

#Tamils
#ksrpost
24-11-2023.

Thursday, November 23, 2023

திமுக ஆட்சிக்கு வரு முன் வேறு நிலை… ஆட்சியை பிடித்தது நாங்கள் வாழ… அவ்வளவுதான். இன்று ஆட்சியில் எங்கள் நிலை வேறு.

திமுக ஆட்சிக்கு வரு முன் வேறு நிலை…
ஆட்சியை பிடித்தது நாங்கள் வாழ…
அவ்வளவுதான்.
இன்று ஆட்சியில் எங்கள் நிலை வேறு. 

அன்று விவசாய போராளியாக தெரிந்த அருள் ஆறுமுகம், இன்று தீவிரவாதியாக தெரிகிறாரா?!
வேடிக்கை…

எங்க போனாங்க ? திமுக தோழமை காட்சிகள்
சிபிஎம், சிபிஐ, சிறுத்தைகள், மதிமுக etc எங்கே? 2021 வரை போட்ட சத்தம் எங்கே?
இப்போது இந்த விவசாயிகள் விடயத்தில்
ஆதரவாக குரல் ஏன் இல்லை?
எல்லாம் இவர்களின் 2024 நாடாளுமன்ற தேர்தலில் சீட்டுகளுக்கதான் இந்த மந்தனம்…இதுதான் இன்றைய அரசியல்…

#கேஎஸ்ஆர்போஸ்ட்
23-11-2023


Wednesday, November 22, 2023

#*இருத்தல், பின்நவீனத்துவம்- நிர்மலமான மனஅமைதிக்கு பத்து படிமங்கள்*

#*இருத்தல், பின்நவீனத்துவம்- நிர்மலமான மனஅமைதிக்கு பத்து படிமங்கள்*
————————————
வெற்றியை மட்டுமே கொண்டாடும் ஒரு கூட்டத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். சக மனிதர்கள், திறமை, கலை இதெல்லாம் அதற்கு முக்கியமில்லை.  வெற்றிக்காகப் போராடிய பின் மகிழ்ச்சியோடு தோல்வியைப் பழகிக் கொள்ள மனிதன் உருவாக்கிய ஒரு சூழல். அது மனிதர்களைப் பண்படுத்த உருவானது.

கட்சிக்கு உழைப்பவனைக் கொண்டு கட்சி நடத்து. கண்டவனையும் கொண்டு கட்சி நடத்தாதே என,
அண்ணாவின்  மணி வாசகம்.
ஆனால் திமுகவுக்கு உழைச்சவன் ரோட்டில் நிற்கின்றான். என்ன நடக்கிறது?.

இந்நிலையில் உழைப்பு, களப்பணிகள்,கொள்கை, கோட்பாடு  என இன்றைய நிலையில் சேர்வதற்கு என்று எந்த இலக்குமில்லை. 

எங்காவது செல்வது, அல்லது இலட்சியத்தைத் தேடுவது, எது சிறந்தது என்று நினைக்கிறோமோ அதைத் தேடுவது, இவையெல்லாம் நாம் முன்னேறி வருகிறோம், ஒரு சிறந்த உலகத்தை நோக்கி நகர்கிறோம் என்ற உணர்வைத் தருகிறது. இருக்கிற இந்த
இன்றைய அரசியல்-அரசு நிலையில் எங்கு தேட…..?

தெளிவற்ற நடைமுறையில் உள்ள இந்த இயக்கம் இயக்கமே அல்ல. ஏனென்றால் இலக்கு நமது துயரம், குழப்பம், பேராசை மற்றும் பொறாமை ஆகியவற்றிலிருந்துமுன்னெடுக்கப்
பட்டது. 

ஆக, உள்ளதற்கு நேர்மாறாக இருக்கக்கூடிய இந்த இலக்கு, உள்ளவற்றிலிருந்து வேறுபட்டதாகக் கருதப்படும் இலக்கு, உண்மையில் "உள்ளது என்னவோ" அது போலத்தான். இது "உள்ளது என்ன" என்பதிலிருந்து உருவாக்கப்படுகிறது.

எனவே, உள்ளது என்பதற்கும், அது என்னவாக  இருக்க வேண்டும் என்பதற்கும் இடையிலான மோதலை அது உருவாக்குகிறது. இங்குதான் நமது அடிப்படைக் குழப்பமும் முரண்பாடும் எழுகிறது.

இலக்கு என்பது இந்த சுய நல போக்கில் அங்கில்லை. அது மறுபக்கத்தில் இல்லை; தொடக்கமும் முடிவும் இங்கேயே மாயமாக  குழப்பமான சூழலில் உள்ளன. நாங்கள் தோன்றியதையெல்லாம் சொல்வோம் எங்கள் சுய நலத்தில் தோன்றியதையெல்லாம் செய்வோம்.  அதாவது நாங்கள் தாந்தோன்றி அரசியல்வாதிகள்.  எங்களை அடியை வணங்கி இருங்கள். அவ்வளவுதான் உங்களின் பங்கு. அதுக்கு இப்போ என்னன்றிங்க பைத்தியக்கார மக்களே.

அரசியல் என்பது ஒரு நாட்டிற்கான மக்கள் நல ஊழியம் அன்றி அதற்கு வேறு அர்த்தங்கள் ஏதுமில்லை. பதினெட்டாம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே முடியரசுகள் விழுந்து ஜனநாயகப் பெரும்பான்மை உலகமெங்கும் ஆட்சி முறையாக மலர்ந்தது. திரும்ப  இன்று குடியரசு பேரில் வேறு வகையில் முடியரசுகள் வந்து விட்டன.

மண்ணின்நல் லவண்ணம்
  வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி
  யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறுங்
  கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும்
  பெருந்தகை யிருந்ததே.    
-மூன்றாம்-திருமுறை திருஞானசம்பந்த (தேவாரம் - 3.001 )

******
இன்னொரு தமிழர்- தீவு மண்ணில்….

ஒரு சொட்டுக் கண்ணீரும்
ஒரு திரி தீபமும்
ஏற்ற முடியாத தேசத்தில்
கார்த்திகை தோறும்
கண் விழிக்கின்றன காந்தள் மலர்கள்,
விழி மூடி உறங்கியவர்களுக்காய்
ஒருபிடி குழிமண்ணிட்ட கைகள்
தேடித் திரிகின்றன
சிதைக்கப்பட்ட கல்லறைகளின்
உயிர்த் தடங்களை
எல்லாமும் தீர்க்கப்பட்டதாக
சொல்லப்படும் இக்காலத்தின் தீபத்திருநாளில்தான்
தன்பிள்ளைக்கொரு தீபம் ஏற்றுகிறாள்
குழிமண்ணிட்ட தாய்.

Sharmila Vinothini Thirunavukarasu

இருத்தல் மற்றும் பின்நவீனத்துவம்- நிர்மலமான மன அமைதிக்கு பத்து கட்டளைகள்:-
________________________

01
எவருக்கும் இரண்டாவது வாய்ப்பாக இருக்காதே!

02
தாழ்வு மனப்பான்மை வருகிறதென்றால் நீ இருக்கும் இடம் தவறானது. 

03
உன்னைப் பொருட்டாகக் கருதாதவர்கள் அழைத்தால் அடித்துப் பிடித்து ஓடுவதை நிறுத்து, எப்போதும் கிட்டுகின்ற தூரத்தில் உன்னை வைத்துக்கொள்ளாதே.

04
வாழ்விற்குள் வருபவர் அனைவரும் உனக்கானவர்கள் அல்ல. சமயங்களில் நீ என்பது, மனிதர்கள் பயணத்தில் கடந்து போகும் சிற்றூர்.

05
உன்னைப் புரிந்துகொள்ளாதவர்களிடம் மன்றாடாதே, அனைவரும் புரிந்தும் புரியாதது போலவே இருக்கவே விரும்புகிறார்கள்.

06
உன் இருப்பு தேவையற்ற இடங்களில் இருந்து நகர்வதற்குத் தயங்காதே, நகராமல் நிற்கநிற்க உன் தன்மானம் சூடுபட்டுக் கொண்டே இருக்கும்.

07
வேண்டாமென மறுப்பவர்களுக்கு பிடிவாதமாக நீ தரும் முக்கியத்துவங்களால்தான் புறக்கணிப்பைப் பெறுகிறாய்.

08
உன்னை விரும்பாதவர்கள் எவரும் மோசமான மனிதர்கள் இல்லை, அவர்கள் உன்னை விரும்பவில்லை அவ்வளவுதான்.

09
மணிக்கணக்காகப் பேசியவர்கள் திடும்மென மௌனம் காத்தால், அவர்களைப் பேசுவதற்கு வற்புறுத்தாதே, சம்பிரதாயமான குரலை விட மௌனமே சிறந்தது.

10
நிரந்தரமென எவருமில்லை, ஆயினும் மனிதர்களைத் தவிர்த்துவிட்டு வாழமுடியாது, வெறுமைக்கு மனதைத் தயார்படுத்திவிட்டு திருவிழா கொண்டாடு, 
பெரும் கூட்டத்திலும் தனிமைக்குப் பழகு. (எங்கே ஹம்பி Hampi, துங்கபத்திரை நதி கரையில்படித்தது)

படம் -#ஹம்பி #Hampi

#சிலசிந்தனைகள்_கேஎஸ்ஆர்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
22-11-2023


*கிராவின‘கதைசொல்லி’

*கிராவின‘கதைசொல்லி’கவிஞர் யவனிகா ஸ்ரீராம் பொறுப்பாசிரியராகக் கொண்டு இனி வெளிவரும்*.

கிரா வின் கதை சொல்லி காலாண்டு சிற்றிதழ்  இதுவரை 35 தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.  மண்ணின் கதை சொல்லி கொண்டு நாட்டார் வழக்காற்றியலில் தொடர்ந்து இயங்கிய கழனியூரான் அவர்கள் பொறுப்பாசிரியராக இருந்து  மண் சார்ந்த கிராமப்புற எளிய மக்களின் கதைகளைப் படைப்புகளை கொண்டு வருவது என்று முடிவு செய்து அவ்விதழை  இணை ஆசிரியராக என் பொறுப்பில் ஏற்று  நடத்தி வந்தேன். பல படைப்பாளிகள் அதில் பங்களிப்பு செய்தார்கள் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்! அந்த வகையில் சிறப்பான படைப்புகளோடு கதைசொல்லி ஏறக்குறைய தமிழகம் முழுவதும் அறியப்பட்டது என்பதையும் இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன்.

பின் நாட்களில், சந்தா ஏதும் பெறாமல் பல்வேறு படைப்பாளிகளின் படைப்புகள் வாசகத்தளத்திற்குப் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு அதை எல்லோருக்கும் இலவசமாக அனுப்பி வைத்தேன்.

கடந்த ஒரு ஆண்டாக அதை தொடர்ந்து 
தனி  ஒருவனாக நடத்த இயலாமல் என்னுடைய வேலை பணிகள், கிரா தொகுப்பு பணிகள் என அதிகரித்து விட்டது. கதை சொல்லியை தொடர்ந்து கொண்டு வருவீர்கள் எனில் விருப்பத்துடன் தான் பொறுப்பேற்று அதை நடத்துவதாக கவிஞர் யவனிகா ஸ்ரீராம் என்னிடம் ஒருநாள் தொலைபேசியில் உரையாடினார்.

தமிழின் மிக முக்கியமான கவிஞர்  பொறுப்பாசிரியராக இருந்து கதை சொல்லி இதழை நடத்துவது எனக்கும் ஏற்புள்ளதாக இருந்தபடியால் அடுத்த மாதத்தில் இருந்து கதை சொல்லியைக் கொண்டுவர இருக்கிறேன். அன்பான படைப்பாளிகளும் இலக்கிய ஆர்வலர்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முக்கியமாக நாட்டார் வழக்குகள் மானுடவியல் கட்டுரைகள்  அது சார்ந்த கதைகள் வாய்வழி வழக்காறுகள் தொன்மங்கள் பழங்குடியினர் படைப்புகள் எனபதாக கதை சொல்லி தொடர்ந்து இயங்க இருக்கிறது.

படைப்புகளை எனது இணையதள முகவரிக்கோ அல்லது கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களின் இணையதள முகவரிக்கோ அனுப்பலாம். இதழைச் சிறப்பாகக் கொண்டு வர படைப்பாளிகளும் வாசகர்களும் ஒத்துழைக்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

இனி,Pustaka Digital Media Pvt. Ltd.,
Dindigul  பதிப்பகம்  கதைசொல்லியை அச்சிலும், இணையத்திலும் கொண்டு வரும்.

 அன்புடன,
கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
ஆசிரியர், கதைசொல்லி.
rkkurunji @gmail.com

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-11-2023.

Tuesday, November 21, 2023

#*எனது சுவடு பகுதி-47* #*கடற்கரை காமராஜர் சிலைக்கு பராமரிப்பே இல்லை*. | Ksr | Ksr Voice

#*எனது சுவடு பகுதி-47*

#*கடற்கரை காமராஜர் சிலைக்கு பராமரிப்பே இல்லை*. | Ksr |  Ksr Voice

கே. எஸ். ராதாகிருஷ்ணன் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.
#கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்ராதாகிருஷ்ணன்,
 #கேஎஸ்ஆர்வாய்ஸ், #ksr, #ksrvoice, #ksrpost, #ksradhakrishnan, #indiragandhi, #Stalin, #politics, #kamarajar,  #mgr, #kamarajar #kalaignar #karunanidhi #DYasodha, #yasodha #sivagangai, #mrradha, #MRRVASU, #nedumaran, #sivakumar, #kamarajarstatue, #naparthasarathy, #sasikumar, #padmini, #congress, #sowcarjanaki, #sivajiganesan, #dmk, #anna, #statues, #cm, #stalin, #mamramasamy, #nethaji, #யசோதா, #காங்கிரஸ், #திமுக, #சசிகுமார், #சிவகுமார், #காமராஜர், #எம்ஜிஆர், #வாசு, #நெடுமாறன், #நாபார்த்தசாரதி, #மன்ரோசிலை, #ஸ்டாலின், #நேதாஜி, #ஸ்ரீகாந்த், #ஸ்தாபனகாங்கிரஸ், #காங்கிரஸ்(o), #தேசியசிந்தனையாளர்மன்றம், #அகிலன், #ஜெயகாந்தன், #ராஜவேலு, #பீட்டரல்ஃபோன்ஸ், #கவிஞர்மேத்தா, 
#சின்னஅண்ணாமலை, #திரவியம்ஐஏஎஸ், #கடற்கரைகாமராஜர்சிலை, #ஆளுநர் சுகாடியா, #srikanth, #sthabanacongress, #congress(o), #desiyasindhaiyalarmanram, #akilan, #jeyakanthan, #rajavelu, #peteralphonse, #kavignarmetha, #chinnanaamalai, #diraviyamias, #kamarajarstatuebeach, #governorsukhadiya,

https://youtu.be/STLQ-L4QGtg

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
22-11-2023

#*வெற்றிக்குத்தான் எல்லைகள் உண்டு* ,#*முயற்சிக்கு எல்லைகள் இல்லை*…,

#*வெற்றிக்குத்தான் எல்லைகள் உண்டு*
,#*முயற்சிக்கு எல்லைகள் இல்லை*…, 
————————————
விலகுவதற்கு காரணம் தேடும் நேசங்களே விரும்பியதற்கான காரணமாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா
கொஞ்சம் கூட வாய்ப்பில்லை
ஆசைகளைத் தீர்ப்பதற்கு வேஷம் போடுபவர்களுக்கு நெஞ்சோடு நினைவு இருக்காது

தேவைகளை பூர்த்தி செய்ய முகமூடி அணிவர்களுக்கு உண்மையான அன்பின் அர்த்தம் தெரியாது

உணர்வு என்ற ஒன்று இருந்தால் பிரிவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை

உறவு பொய்யானது என்றால் விளக்கம் கொடுத்தும் பயனில்லை

யாரிடமும் ஏமாந்து விடக்கூடாது என விழிப்போடு இருப்பவர்களே..!

 எவரையும் ஏமாற்றக் கூடாது என்பதிலும் முடிவாக இருங்கள்.

வலியை சுமப்பதற்கும் வேதனைகளை அனுபவிப்பதற்கும் இங்கு யாரும் படைக்கப்படவில்லை

பெற்ற வலி கொஞ்ச நாள் உன் கூடவே தான் இருக்கும் ஏனென்றால் உனக்கு நிறைய கற்றுக் கொடுக்காமல் அது உன்னை விட்டு போகாது….

இழந்ததை நினைத்து வருந்தாதே, வருவதை எதிர்கொள்ள, தயாராக நிமிர்ந்து நில்!

காலம் கடந்து யோசிப்பதும், கடந்த காலத்தையே யோசிப்பதும், நிகழ்கால வாழ்வை வீணாக்கி விடும்!!

வெற்றிக்குத்தான் எல்லைகள் உண்டு, முயற்சிக்கு எல்லைகள் இல்லை, முயற்சித்துக் கொண்டே இரு!!!

#சிலசிந்தனைகள்_கேஎஸ்ஆர்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
21-11-2023


Monday, November 20, 2023

#*விவசாயிகள் மீது குண்டர் சட்டம் ரத்து என்று சொன்வர்கள் எங்கே*…?* #*நீதி மன்றத்தில் குண்டர் சட்டம் ரத்து செய்து எந்த ஒருஅரசாணை இல்லை*…. என தகவல்…. வேடிக்கை…..




இன்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் விவசாயிகளின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் குண்டர் சட்டம் ரத்து என்று முதல்வர் பெயரில் வெளியான அறிக்கையை எல்லாம் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது என்று தெரிவித்துள்ளதாக தகவல். மேலும் குண்டர் சட்டம் ரத்து செய்து எந்த ஒரு அரசாணையும் தங்களுக்கு வரவில்லை என்றும் சொல்லி இருக்கிறது என்றும் பத்திரிகை செய்திகளை மட்டும் அடிப்படையாக வைத்து ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.. The bail hearing for 20 farmers resumed at the Tiruvannamalai Magistrate Court. Prosecutor Manoharan, representing the police, informed Judge Madhusudhanan that no government order has been issued to drop Goondas against six individuals. Furthermore the prosecutor urged the judge not to grant bail based solely on press reports. The final judgment is yet to come, scheduled for this evening.

ஏதேன்ஸ்ஜனநாயகம் ரோம குடியரசு விட நம்குடவோலை மாண்புமானது!

இன்றைய (20-11-2023) தினமணியில் வெளி வந்த எனது  ‘’ #குடவோலையில் 
தொலைநோக்குச் சிந்தனை’’ என்ற பத்தி
Column

#ஏதேன்ஸ்ஜனநாயகம்
ரோம குடியரசு விட நம்குடவோலை
மாண்புமானது!
- கே. எஸ். இராதா கிருஷ்ணன்
•••••••••
குடவோலை என்பது ஊர்  நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்தெடுக்க பழங்காலத்தில் பயன்பட்ட தேர்தல் முறை. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.
குடவோலை முறை 9 ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது. இதற்கான ஆதாரமாக கி.மு. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய மூன்று கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இதில் இரண்டு உத்தரமேரூரிலும், மற்றொன்று பள்ளிப்பாக்கம், மானூர் கிராமங்களில் கிடைத்துள்ளன.
தமிழகத்தின் மக்களாட்சி பாரம்பரியத்திற்கு உதாரணமாக ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்திரமேரூர் கல்வெட்டுகளில் காணப்படும் குடவோலை முறை வாரியத் தேர்தல் பற்றிய குறிப்புகளைப் பலர் மேற்கோள் காட்டுவார்கள். சிறு வயதில் பள்ளிகளில் வரலாறாகவும், பிற்காலங்களிலும் இதைப் படிக்கும் பொழுதெல்லாம் புளகாங்கிதம் அடைந்தது உண்டு.
குடவோலை தேர்தல் முறை  ஒவ்வொன்றும், சோழர்கள் காலத்தில் மனு நீதி எவ்வாறு கட்டி காக்கப்பட்டது என்பதற்கு உதாரணங்களாகத்தான் இருக்கின்றன.
உள்ளாட்சி தேர்தலில் பங்குபெறுபவர்களுக்கான தகுதிகளாக:-
1) கால்வேலி நிலமாவது தேவை
2) தன் மனையில் வீடு இருத்தல் வேண்டும்
3) வயது முப்பத்தைந்துக்கு மேல் எழுபதுக்குள் இருக்க வேண்டும்
4) வேதபாஷ்யங்கள், மந்திர ப்ராம்மணம் இவற்றில் எடுத்துரைக்கும் புலமை வேண்டும்
5) ஆசாரம் வேண்டும்
6) முந்தின மூன்றாண்டுகளுக்கு இப்பதவி வகிக்காதவனாக இருக்க வேண்டும்
உத்திரமேரூர் தேர்தல் :
அப்படிப்பட்ட ஒரு தேர்தல் முறை தேர்தலில் நிற்கத் தகுதிகள் யாவை? யார் நிற்கலாம்? யார் நிற்கக் கூடாது என்பதெல்லாம் தெளிவாக அரசியல் சாசனம் சோழர் காலத்தில் எழுதி வைத்திருந்தனர். சென்னைக்கு அருகில் 50 கல் தொலைவில் உள்ள உத்திரமேரூரில் ஒரு பெரிய கல்வெட்டுச் சாசனமே இருக்கிறது. தமிழ்நாட்டைப் பராந்தக சோழன் ஆண்ட போது கி.பி. 920 இல் ஊர்ச்சபைக்குத் தேர்ந்தெடுப்பதைக் குறிக்கும் கல்வெட்டில்தான் இவை அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. நேற்றுத்தான் எழுதியது போல் உள்ள இந்த ஆயிரம் ஆண்டுக்கு முந்திய கல்வெட்டைப் பார்த்தால் நாம் வியப்போம். அக்காலத்தில் பொது வாழ்வில் அரசியலில் ஈடுபட்டோரின் தன்மை என்ன? இன்று நிலமை எவ்வாறு உள்ளது என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

உத்திரமேரூர் முப்பது குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்தந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்த குடும்பத்திலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வுக்கு நிற்பவர் சில அடிப்படைத் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
அசையாத சொத்து சிறிதாவது உடையவராக இருக்க வேண்டும். கால் வேலியிலிருந்து அரை வேலி நிலமாவது அவருக்கு இருக்க வேண்டும். புறம்போக்கு நிலத்திலோ, பிறர் நிலத்திலோ வீடு கட்டிக் கொண்டிருப்பவராக இல்லாமல் “தன் மனையில் வீடு எடுத்துக் கொண்டவராக” இருக்க வேண்டும்.
தகுதி 35 வயதுக்கு மேற்பட்டவராக இருகக வேண்டும். 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பொதுமக்களின் பிரச்சினைகளையும், வாழ்வையும் சார்ந்த முடிவுகளை ஆட்சிக்கு வருபவர் எடுக்க வேண்டுமாதலால், 35 வயது குறைந்தபட்ச வயதாகக் வகுக்கப்பட்டது. அந்த வயதில்தான் வாழ்க்கையில் அனுபவமும் ஒரு நிதானமும் கிட்டும் என்று அக்காலத்தில் கருதினர். 70 வயதுக்கு மேலும் தாமே ஆட்சி புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணாமல் இளைய சமுதாயத்துக்கு இடமளித்தல் தேவை என்பதால் 70 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட அளவு கல்வி கற்றிருக்க வேண்டும். படிப்புக் கூட இல்லாமல் சட்டம் இயற்றவோ நெறிப்படுத்தவோ இயலுமா? படிப்பு மட்டுமிருந்தால் போதாது. தெளிவாக எடுத்துக் கூறும் ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.
செயல் புரிவதில் வல்லவனாக இருக்க வேண்டும். அதைக் கல்வெட்டு “காரியத்தில் நிபுணன்” என்று கூறுகிறது.
அவன் ஒழுக்க சீலனாக இருக்க வேண்டும். ஒழுங்கீனமாகச் சுற்றித் திரிபவர்க்கு இடமில்லை.
நேர் வழியில் சம்பாதித்த பொருளை உடையவனும் நல்ல மனம் உடையவனாகவும் இருக்க வேண்டும்.
மிகமிக இன்றியமையாத தகுதி ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் அடுத்த மூன்று தேர்தல்களுக்கு நிற்க முடியாது. இதனால் ஆற்றலும் தகுதியும் உடைய மற்றவர்களுக்கு வாய்ப்புக் கிட்டும். இல்லையெனில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தாமே எப்பொழுதும் ஆட்சியில் இருக்க முயற்சி செய்வர். அதனால் இளைய சமுதாயத்தினரிடையே வெறுப்பும் கொந்தளிப்பும் ஏற்படும். 25 ஆண்டுகளாக நானே ஆட்சி செய்தேன் என்று ஒருவர் மார் தட்டிக் கொள்ள வழியில்லாமல் பலரும் பங்குபெறும் வாய்ப்பை மக்கள் மன்றம் பெற்றிருந்தது. இப்படியாக சோழர்கால  ஆட்சி முறை இது நம்முடைய ஆட்சி என மக்கள் உள்ளத்தில் உணர செயல்பட வழி வகுத்தது. இவ்வாறு கல்வி, வயது, சொத்து, ஒழுக்கம், செயல்திறன், நேர்வழிச் சம்பாத்தியம், மனத்தூய்மை ஆகியவையே தகுதிகளாகக் கொண்டு அத்துடன் இதற்கு முன் மூன்று தேர்தல்களில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் படாதவராகவும் இருத்தல் வேண்டும் என்று தகுதியை வரையறை செய்து அரசு என்பது என்ன என்பதை தெளிவாகக்குறிக்கிறது கல்வெட்டு.

அத்துடன் நின்றுவிடவில்லை. யார் யார் தகுதியற்றவர் என்றும் தேர்தலில் நிற்க முடியாது என்றும் தெளிவாகக் கூறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒழுங்காகக் கணக்கு காட்டாமல் இருந்தாரானால் பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க முடியாது. இவர் மட்டுமல்ல இவரது மகன், பெயரன், தந்தை வழி, தாய் வழி, மகளையோ, மகனையோ சம்பந்தம் செய்து கொண்டவர் வழியில் எந்தவிதமான சொந்தக்காரர்களும் தேர்தலில் நிற்க முடியாது. தான் கொள்ளை லாபம் சம்பாதித்துவிட்டு பின் தனது சொந்தக்காரர் யாரையும் ஆட்சியில் அமர்த்திவிட முடியாது. இதைக் கல்வெட்டு தன் சுதந்திர வாசகத்திலேயே கூறுகின்றது.
“எப்பேர்ப்பட்ட வாரியங்களும் செய்து கணக்கு காட்டாது இருந்தான், இவன் சிற்றவை பேரவை மக்கள், இவர்களுக்கு அத்தை மாமன் மக்கள், இவர்களுக்கு தாயோடு பிறந்தான், இவர்கள் தகப்பனோடு உடன்பிறந்தான், தன்னோடு உடன் பிறந்தான், இவர்களுக்கு பிள்ளை கொடுத்த மாமன், இவர்கள் மனைவியோடு உடன்பிறந்தாளை வேட்டான் (மணந்தான்), உடன் பிறந்தான் மக்கள், தன் மகளை வேட்ட மருமகன், தன்தமப்பன், தன்மகன் இத்தனை யவரையும் நீக்கி” என்று கல்வெட்டு கூறுகிறது. பொதுச் சொத்துக்கு கணக்கு காட்ட வேண்டும். தன் சொத்துக்கும் கணக்கு காட்ட வேண்டும் ஒவ்வொரு ஆண்டும் கணக்கு காட்ட வேண்டும் என்பது கருத்து. இல்லையெனில் அவனது இருவழிச் சொந்தக்காரர்களும் எப்பொழுதும் தேர்தலில் நிற்க முடியாது எனக் கடுமையான விதி ஏற்படுத்தப்பட்டது.
இது மட்டுமல்ல கள் சாராயம் குடிப்பவன், பிறர் பொருள் அபகரித்தவன், பிறர் மனைவியை அபகரித்தவன், முதலியோர் நிற்க முடியாது. இவை எல்லாம் மகாபாதகம் என்று கூறப்பட்டன. இவர்கள் மட்டுமல்ல. இவர்கள் தூய்மையானவர் என்று சாதிப்பவர்களும் நிற்க முடியாது. இவற்றிற்காகத் தண்டனை பெற்று வெளிப்போந்த பின்னரும் நிற்க முடியாது. ஊரில் மாய்மாலம் செய்தல், பேசியே ஏமாற்றுபவர்கள் எல்லாம் நிற்க முடியாது. இவர்களைச் சாஹஸம் செய்வோர் என்று கல்வெட்டு கூறுகிறது.
இறுதியாக ஆனால் இன்றியமையாததாகக் குறிக்கப்பட்டுள்ளது லஞ்சம். இதைக் கையூட்டு என்று கல்வெட்டு கூறுகிறது. யாராவது லஞ்சம் வாங்கினால் ஏழு தலைமுறைக்கு தேர்தலில் நிற்க முடியாது. இரண்டே ஆண்டுகளில் பல லட்சம் சேர்த்தாயே எப்படி சேர்த்தாய் என்று மக்கள் கேட்பார்கள். கொஞ்சம் வாங்கினான் என்று தெரிந்தால் கூட ஒரே ஆண்டில் நீக்கிவிடுவார்கள். ஊழலை ஒழிப்பேன் என்று மக்களை ஏமாற்றி பல லட்சம் சேர்ப்பது “சாகசம்” எனப்படும். சாகசம் செய்தவர், தப்புச் செய்தவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்தவர், இவர்களெல்லாம் அக்காலத்தே தேர்தலுக்கு நின்றிருக்கு முடியாது என்பதை கல்வெட்டு எப்படிக் கூறுகிறது பாருங்கள்! சாஹஸியராயிருப்பான் பரதிரவியம் அபஹரித்தான் எப்பேர்ப்பட்ட கையூட்டும் கொண்டான்.
இக்காலத்தில் “பேட்டை ரெளடி” என்பதை அக்காலத்தில் “கிராம கண்டகன்” என்று கூறினர். “கண்டகம்” என்றால் முள் என்று பொருள். முள் போல் ஊருக்கு துன்பம் இழைப்பவன் கிராம கண்டகன் மட்டுமல்ல அவனுக்கு பாதுகாப்பு அளிப்பவனும் நிற்க முடியாது என்பது “கிராம கண்டகனாய் பிராயச்சித்தம் செய்து சுத்தம் ஆனான்” கல்வெட்டில் உள்ள வாசகம். “ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் நீக்கி” பிற தகுதி உடையோர் பெயரிட்டுத் தேரந்தெடுத்தல் வேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது. இன்று இந்த கல்வெட்டு அங்கு இருக்கிறது யார் வேண்டுமானாலும் நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்யலாம்.
இந்தத் தேர்தல் முறையைக் குடவோலை முறை என்கிறோம் குடத்தில் பெயர் எழுதிய ஓலைகளை கட்டிப் போட்டு அதிலிருந்து ஒரு பெயரை எடுத்து அவரே தேர்ந்தெடுக்குப்பட்டவராகக் கொள்ளப்படுபவர். ஆதலின் இது குடவோலை சீட்டு முறை எனப்படும். தகுதியற்றோரை நீக்கி தகுதியுடையவர் 30 பேர் இருக்கலாம் அல்லது 40 பேர் இருக்கலாம் ஒவ்வொருவர் பெயரையும் ஒரு ஓலையில் எழுதி ஒரு குடத்தில் போடுவர். ஒரு சிறுவனை விட்டு ஒரு ஓலையை எடுக்கச் சொல்வர். 40 பேர் தகுதியுடையவராக இருந்தால் 40 பேர் பெயரும் குடத்தில் இருக்கும். யார் ஒருவர் பெயர் வருகிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அவர் நாட்டுக்காக ஒரு குறிப்பிட்ட காலம் உழைக்க வேண்டும். அடுத்த முறை அவர் பெயர் இடம் பெறாது. மற்றவர் பெயர் இடம் பெறும். இதனால் “என்னை தேர்ந்தெடு” என்ற பிரசாரம் இல்லை. தவறான வழியில் ஆட்சியை பிடிக்க முடியாது. யார் பெயர் வருகிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் கட்டாயம் நாட்டுக்காக ஒரு முறையாவது உழைக்க வேண்டும். இதனால் “யாரோ நிற்கிறான் நமக்கென்ன” என்று அலட்சியமாக யாரும் இருக்க முடியாது. அனைவருக்கும் பங்கு இருந்தது. தவறு செய்பவர்களை நீக்கவும் வழியிருந்தது.

இக்காலத்தில் தேர்தல்முறைகேடு, வோட்டுச் சாவடியில் முறைகேடு, வோட்டு எண்ணுவதில் முறைகேடு என்று செய்திகள் வருகின்றன. இது போன்ற குறைபாடுகள் வராமலிருக்க அக்காலத்தே வழி செய்திருக்கிறார்கள். குடவோலை எடுக்கும் முறை ஊர் மக்கள் அனைவரின் முன்னிலையில் நடைபெறும். ஊரில் பெரியவர்கள் மத்தியில் அக்குடம் வைக்கப்படும். குழுமியிருப்போரில் வயதானவர் எழுந்து நின்று பார்வையிடுவர். ஒரு சிறியவனை அழைத்து ஒரு ஓலை எடுக்க சொல்வர். ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு ஓலையாக முப்பது குடும்புக்கு முப்பது ஒலை எடுக்கப்படும். எடுத்த ஓலையை ஊர் மத்யஸ்தர் கையில் கொடுப்பர். மத்யஸ்தர் தான் கையில் எந்த ஓலையையும் ஒளித்து வைத்திருக்கவில்லை என்று எல்லோருக்கும் தெரிவிக்க தனது கையை அகல விரித்து காண்பித்து பின், அகல விரித்த கையில் சிறுவன் எடுத்த ஓலையை வாங்கி அதில் எழுதியுள்ள பெயரை எல்லோரும் கேட்கும்படி வாசிப்பார். அவ்வோலையை மண்டபத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வாசிப்பர். வாசித்த அப்பெயர் சரிதான் என்ற பின்னர் அவர் தேரந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சேரந்தது ஊர்ச்சபை. இவ்வூர்ச் சபையர் சிறு குழுக்களாகப் பல பணிகளைக் கவனிப்பர். அக்குழுக்களுக்கு வாரியம் என்று பெயர். இளைஞர்கள் உடல் வலியுள்ளவர் கடுமையான பணிகளையும், வயதாலும் ஆற்றலாலும் முதிர்ந்தவர்கள் மேற்பார்வை புரியும் பணிகளையும் புரிவர். இவ்வாறுதான் ஏரி வாரியம், தோட்ட வாரியம் என்றெல்லாம் பல வாரியங்களில் சபையோர் பணிபுரிந்தனர்.
இவ்வாறு ஊர்தோறும் கிராமங்கள் தோறும் சோழர் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகளே ஊராட்சி புரிந்தன. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கல்வெட்டு பெருமக்கள் என்று கூறுகிறது. இதனால் ஏரிகளும், குளங்களும் ஆண்டுதோறும் தூர் எடுக்கப் பெற்று நீர்நிலைகளாகத் திகழந்தன. ஏராளமான நீரோடுகால்கள் வெட்டப்பட்டு நீர்பாசனம் நிறைந்து திகழ்ந்தது. பல்லாயிரம் வேலி நிலங்கள் பண்படுத்தப்பட்டு பயிர் நிலங்களாக மாறின. செல்வம் செழித்தது. கல்வி மிகுந்தது. இயல் இசை நாட்டியம் முதலிய கலைகள் மிகுந்தன. அவற்றை பிரதிபலிக்கும் வகையில் கோயில் கட்டங்களும், சிற்பங்களும், கல்வெட்டுகளும் ஆயிரக்கணக்கில் இன்றும் சான்று கூறுகின்றன. அடிப்படை ஊராட்சி தேர்தல் முறையில் நாடு முழுவதும் நிறைந்து விளங்கியதால் நாம் வலிவுள்ளவர்களாகத் திகழ்ந்தோம். எளியர் என நம்மைப் பிறர் நகையாமல் வலியர் என வணங்கும் நல்லோராய்த் திகழந்தோம். நம்மோரையே முதற்பகை எனக் கருதாது உட்பகையின்றி வாழ்ந்தோம் என்பது சோழர் கல்வெட்டுக்கள்.
ஒருவருடன் ஒருவருக்கும் ஒன்றினுடன் ஒன்றுக்கும்
வேறுவேறு பகைமை மனத்தின்றி விழைந்து காதலுடன் சேர
எல்லோரும் தனித்தனியே வாழ்ந்தனம் என இன்புற்று
எனப் புகழ்கிறது.
இஃது அன்றிருந்த தேர்தல் முறை. ஆயிரம் ஆண்டுகள் சுழன்று விட்டன. எவ்வளவோ மாற்றங்கள் சுழற்சிகள் வந்துள்ளன. ஆதலின் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள தேர்தல் முறை இக்காலத்துக்கு பொருந்துமா எனில். பொருந்தும் பொருந்தாது என்று சொல்வதற்கு முன்னர் அடிப்படையிலாவது கிராமங்களில் இதை முயலலாமே! அதுதான் இல்லையெனில் கல்லுரிகளிலாவது பிரசாரம் இல்லாமல் கட்சிப் பகை இல்லாமல் மாணவர் தலைமையைத் தேர்ந்தெடுக்கலாமே! அதன் பின்னர் சொல்லலாமே இது பொருந்தும் பொருந்தாது என. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக கூறலாம். அன்றிருந்த மக்கள் பொது வாழ்விலும், அரசியலிலும் கொண்டிருந்த விதித்திருந்த ஒழுக்கமும், தூய்மையும், ஆற்றலும், தியாகமும் இன்றுள்ளதா எனில் அது கேள்விக் குறியாகவே நிற்கும் என்பதில் ஐயமில்லை.

ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இந்த மக்கள் வாழ்க்கையினுடைய ஜனநாயக அரசியல் முறை என்பது மன்னர் காலத்திலேயே இவ்வளவு சிறப்பாக செயல்பட்டிகிறது. இந்த 21 ஆம்நூற்றாண்டில் எத்தனையோ வளர்ச்சி என்கிறார்கள் தொழில்நுட்பம் என்கிறார்கள் முழுவதும் சுய ஆதாயத்திற்கே பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களாக இருக்கிறது. அரசாங்கம் நடத்துகிறார்களா வணிகம் நடத்துகிறார்களா என்பதே கேள்விக்குறியாக நிற்கிறது. யார் யார் தேர்தலில் நிற்கலாம் அல்லது யார்யார் நிற்கக்கூடாது என்பதற்கான விதிமுறைகளை மட்டும் பாருங்கள். இந்த உத்தரமேரூர் கல்வெட்டை அரசியல் பயிலும் மாணவர்கள் கல்லூரியில் இருந்து சென்று ஏன் பார்த்து ஆய்வு செய்யக்கூடாது. உலகளாவிய அரசியல் பார்வைகளைக் கற்றுக் கொடுக்காமல் உள்ளூரில் தகுதியற்றவர்களாக்கி அவர்களை தெருவில் விடுவது என்ன வகையில் நியாயம்?

இன்றைய ஆட்சியாளர்களுடன் ஒப்பிடும்போது இதில் எவர் ஒருவருக்கும் எந்த அடிப்படை தகுதியும் இல்லை என்று தான் ஆகிறது. தமிழர்கள் ஜனநாயக முறையை எவ்வாறு போற்றி வந்தார்கள் என்பதற்கு அல்லது அந்த வரலாற்றை சகல யோக்கியதையுடன் திரும்பி பார்ப்பதற்கு இன்றைய ஆட்சியாளர்கள் யாராயினும் வெட்கப்படத்தான் வேண்டும். இன்னும் இதுபோக பல வகையான அறநெறி சார்ந்த ஜனநாயக சான்றுகள் நமக்கு மன்னர் ஆட்சி காலத்திலேயே கிடைக்கின்றன.

பாலாற்று கரை கல்வெட்டுக்கள், மக்கள் 
பிரதிநிதிகளின் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்ற நிலை தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது எனத் தீர்மானிக்கிறது. 
ஜனநாயகம், நீதி நேர்மையை நிலை நாட்டிய மனு நீதி சோழன், 
‘’தேரா மன்னா செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி நான்… கண்ணகி கோபத்தோடு நீதிகேட்டு இன்னொரு சிலம்பை தூக்கி எறிந்தாள்’’  கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும், அவர்மனைவியானகோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். இப்படியான பல வரலாறுகள் நம்மிடம்
உண்டு.

இன்று எல்லாம் பொருள்வாதம்; எதற்கும் பணம். சீர்மிகு குடவோலை  கண்ட மண்  இன்று ஓட்டை விற்பனை செய்கிறது.

இன்றைய அரசியல் கட்சிகள் தங்கள் நடத்தும் நிகழ்வுக்கு ரூ 200-500, மது, பிரியாணி வழங்கி  மக்களை அழைக்கிறார்கள். கிரிமினல்கள் புகுந்த  இன்றைய சட்டமன்றம் ‘மந்திரிகள்’ , எம்பி, எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் என பதவிகளைப் பெற்று கொள்ளையடிக்கும் கூடாரங்கள் ஆகிவிட்டது.  மறைந்த குன்றக்குடி  அடிகளார் சொன்னதை போல ‘ஜனநாயகம் என்ற தேர் சகதியில் உள்ளது. அதை மீட்டு தரையில் நிறுத்தி  தேரைக் கழுவி சுத்தம் செய்த பின் அனைவரும் கூடி வடம் பிடிப்போம்’ என்றது போல இன்றைய ஜனநாயகத்தை மீட்டு சீர் செய்ய பேரளவு அறநிலைவாதிகள் கூடி செயல்பட வேண்டிய ஒரு அவசியத்தை இங்கே நாம் கட்டாயம் பேசி ஆக வேண்டியிருக்கிறது. இப்படியான மரபு சார்ந்த அறங்கள் ஒருபுறம் இருக்க இன்றைய பின் நவீன காலத்தின் இளைஞர்களுடைய போக்கு நடத்தைகள் மற்றும் அவர்களுடைய அரசியல் தெளிவு யாவும் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிட்டது.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் மற்றும் தமிழ் மக்கள் இதை உணர்வர்களா?

#குடவோலை

#ஏதேன்ஸ்ஜனநாயகம்_ரோமகுடியரசு_விட_நம்_குடவோலை_மாண்புமானது!

#உத்தரமேரூர்
#தஞ்சைப்_பள்ளிப்பாக்கம்  #மானூர்

#Uttaramerurinscriptions
#Kudavolaisystem.
#kurrams_kottams. #Cholaadministration #LocalSelfGovernment 


கே. எஸ். இராதாகிருஷ்ணன்,

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
20-11-2023.


Sunday, November 19, 2023

#Chennai ,ArmenianStreet, good old days memories Memory... is the diary that we all carry about with us. -#OscarWilde



———————————————
Then Madras now Chennai 1975 Armenian Street,  good old days memories nearby Madras university students Centre ,  Catholic Centre etc,locally known as Aranmanaikaran Street, is one of the historical streets of the commercial centre of George Town in Chennai, India. The road runs north–south and connects Mannady Street in the north with the China Bazaar Road (NSC Bose Road) in the south High Court. The street is dotted with several century-old historical structures. 




Student life with politics …From morning to late night wandering here and  there  by walk and cycle rickshaw…During Emergency days George Mathew Fernandes and Ram Vilas Paswan were here for few days…
Just  now took a Walk to Remember  this long street … today Sunday, not busy and not crowded …

அரண்மனைக்காரன் தெருAranmanaikaran Street, சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுனில் உள்ள வணிக மையமாகவும் வரலாற்று சிறப்பு கொண்ட தெருக்களில் ஒன்றான ஆர்மீனியன் தெரு என, பின்னர் அரண்மனையரன் தெரு என் அழைக்கப்பட்டது இந்தத் தெரு வடக்குத் தெற்காக வட சென்னையில் உள்ளது. இது வடக்கில் மண்ணடியையும் தெற்கில் சைனா பஜாரையும்  உயர நீதி மன்றத்தை இணைக்கும். இத் தெருவில் நூற்றாண்டு கடந்த  பழமையான பல வரலாற்றுக் கட்டடங்கள் காணப்படுகின்றன.
இந்த பகுதியில் Madras university students Centre (MUSC), Catholic Centre என அன்று தங்கிய சிறப்பான விடுதிகள். காலை முதல் நள்ளிரவு ஏன் இரவு 2மணி வரை நடந்து , சைக்கிள் ரிக்‌ஷா என சுற்றி படிப்பு,அரசியல், கூட்டங்கள் என மகிழ்சியாக இருந்த காலங்கள் அன்று….

அவசர நிலை காலத்தில் இங்கு  ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராம் விலாஸ் பஸ்வான் 
சில நாட்கள் தங்கிய நாட்கள் நினைவுகள்.

சில நிமிடங்களுக்கு நீண்ட காலத்திற்கு பின் இந்த நெடிய தெருவில் பழைய நினைவுகள்ளோடு ஒரு இரவு நடை….

இன்று ஞாயிற்றுக்கிழமை,  தெரு அமைதியாக வெறிச்சோடி  இருந்தது.அன்றாட வாழ்க்கையின்  பலருக்கும்  வாழ்வு தரும் அரண்மனைக்காரன் தெரு….
பெரிய தெருக்கள் விடியற்காலையில் உயிர்ப்பித்து, இரவில் அரிதாகவே காற்று வீசுகின்றன, பல உயிர்களையும் செயல்பாடுகளையும் ஒன்றாக வைத்திருக்கின்றன, அவற்றின் தன்மையை எப்போதும் மிகவும் நுட்பமாக மாற்றுகின்றன. பெரும்பாலான நகரங்களில் சலசலப்பு இருக்கும், முக்கிய சந்தைகள் அல்லது பஜார் இருக்கும் இடங்களில் அவற்றின் காட்சி சங்கதிகள் உள்ளன. இந்தத் தெருக்கள் மக்களை ஒன்று சேர்க்கின்றன மற்றும் தொழில்-உணவு மற்றும்  பல விடயங்கள் பகிரப்பட்ட செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றன. 

#ArmenianStreet_Chennai_memories

#அரண்மனைக்காரன்தெரு_சென்னை
#AranmanaikaranStreet_memories 
#சென்னை_ஜார்ஜ்டவுன்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
19-11-2023. 
11 PM

#இந்தியா -மாலத்தீவு உறவில் சீனாவால்சிக்கல்….. ஏற்கனவே சீனா இந்து மகா சமுத்திரத்தில், வங்க கடலில கச்ச தீவு வரை இலங்கையின் தயவில் அத்து மீறி செயல்படுகிறது. இனி மேற்கில் மாலத்தீவை வைத்து அரபிக்கடலில் வந்து புவி அரசியலில் பிரச்சனைகள் உருவாக்க சீனாவின் திட்டமாகும்.

#இந்தியா  -மாலத்தீவு 
உறவில்
சீனாவால்சிக்கல்…..
ஏற்கனவே சீனா இந்து மகா சமுத்திரத்தில், வங்க கடலில கச்ச தீவு வரை இலங்கையின் தயவில் அத்து மீறி செயல்படுகிறது. இனி மேற்கில் மாலத்தீவை வைத்து அரபிக்கடலில் வந்து
புவி அரசியலில் பிரச்சனைகள் உருவாக்க சீனாவின் திட்டமாகும்.
—————————————————————-
இந்தியாவும் மாலத்தீவும் நெடுங்காலமாகத் தங்கள் கடற்கரைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இருப்பினும், இரு நாடுகளின் நெருக்கம் மட்டும் அவர்களை ஒன்றிணைக்கவில்லை.1965 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து மாலத்தீவு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா அந்நாட்டுடன் முறையான இராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தது.மாலத்தீவில் இந்திய எதிர்ப்பு உணர்வு வெடித்த பிறகு, இரு நாடுகளின் நட்பு 2018 முதல் புதுப்பிக்கப்பட்டது.
இந்தியாவின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது
2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி இப்ராஹிம் சோலியின் வெற்றியானது, இந்தியாவின் சொந்த 'அண்டை நாடுகளுக்கு முதலில்' என்ற கொள்கைக்கு பூரணமான 'இந்தியா முதலில்' என்ற மாலத்தீவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
மாலத்தீவின் வரலாறு இந்தியாவுடன் பின்னிப் பிணைந்துள்ளது .ராஜராஜ சோழனின் சோழப் பேரரசு மாலத்தீவின் வடக்கு அட்டால் மீது படையெடுத்து வெற்றி பெற்றது.சமகால சகாப்தத்தில், மாலத்தீவு 1965 இல் சுதந்திரம் பெற்றது.அப்போதிருந்து, தேசம் அரசியல் அமைதியின்மை நிலையில் உள்ளது .இப்ராஹிம் நசீர் 1965 முதல் 1978 வரை தீவின் ஆட்சியாளராக இருந்தார்.
ஜனாதிபதி அப்துல் கயூம் 1978 முதல் 2008 வரை ஆட்சி செய்தார்
கயூம் தனது நீண்ட ஆட்சியின் போது நவீன மாலத்தீவின் விதைகளை விதைத்தார்
கயூமின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களும் பேரணிகளும் சீரான இடைவெளியில் வெடித்தன
இந்த காலகட்டத்தில், பிளொட் அமைப்பில் இணைந்த பயங்கரவாதிகள் மாலைதீவில் சதிப்புரட்சிக்கு முயற்சித்தனர்
இது தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு.
ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்து, 'ஆபரேஷன் கற்றாழை'யை இந்திய ஆயுதப் படைகள் துவக்கியபோது, ​​அவர்கள் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்தனர்.

கடந்த 2018 இல் ஜனாதிபதி இப்ராஹிம் சோலியின் வெற்றி, மாலத்தீவின் 'இந்தியா முதல்' கொள்கை இறுதியாக செயல்படுத்தப்பட்டது

1981 இல், இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒப்பந்தம் இருந்தபோதிலும், இருதரப்பு வர்த்தகம் இன்னும் அதன் சாத்தியக்கூறுக்குக் கீழே உள்ளது. 2018 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் மொத்தம் 288.99 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது இந்தியாவின் அண்டை நாடுகளுடன், குறிப்பாக பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைவு. 2020ல் மாலத்தீவின் 2வது பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா உருவெடுத்தது.

2004 சுனாமி மற்றும் 2014 நீர் நெருக்கடியின் போது, ​​இந்தியா மாலத்தீவுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை ஆபரேஷன் நீரின் கீழ் அனுப்பியது.

மாலத்தீவுக்கு வருகை தரும் ஐந்தாவது பெரிய ஆதாரமாக இந்தியா உள்ளது. 2019 ஆம் ஆண்டில், அட்டு அட்டோலின் ஐந்து தீவுகளில் அட்டு சுற்றுலா மண்டலத்தை மேம்படுத்தவும், வடக்கே ஹா அலிஃப் அட்டோலில் உள்ள ஹோராஃபுஷியில் தண்ணீர் பாட்டில் வசதியை ஏற்படுத்தவும் இரு நாடுகளும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

இந்தியாவின் மருத்துவ சுற்றுலா பொருளாதாரத்தில் மாலத்தீவியர்கள் ஒரு முக்கிய அங்கம். இந்தியாவால் வழங்கப்பட்ட 4,95,000 மருத்துவ சுற்றுலா விசாக்களில் மாலத்தீவு பிரஜைகளுக்கு சுமார் 45,355 மருத்துவ சுற்றுலா விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாலத்தீவில் பெரும்பான்மையான வளர்ச்சித் திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன, இது சமூகத்தின் தேவைகளால் வழிநடத்தப்படுகிறது. இது இரு நாடுகளின் வளர்ச்சி ஒத்துழைப்பின் முக்கிய அம்சமாகும்.

வில்லிங்கிலி, திலாஃபுஷி மற்றும் குல்ஹிஃபாஹு தீவுகளுடன் மாலேவை இணைக்கும் கிரேட்டர் ஆண் கனெக்டிவிட்டி திட்டம், இந்தியாவால் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இது மாலத்தீவின் மிகப்பெரிய சிவிலியன் திட்டமாகும், இது அடிக்கடி சீனாவின் சினிமேல் நட்பு பாலம் திட்டத்துடன் ஒப்பிடப்படுகிறது
இது இந்தியாவின் மேற்குக் கரைக்கு அருகில் அமைந்துள்ளது, எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது
26/11 தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கடல் வழியாக இந்தியாவை அடைந்தனர்.
சீனாவின் கடன்-பொறி இராஜதந்திரம், இந்திய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு அருகிலுள்ள தீவுகளை கையகப்படுத்துவதற்கு வழிவகுக்கும், இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும்.

மாலத்தீவின் முதன்மை பாதுகாப்பு வழங்குனராக இந்தியா தனது பங்கை பராமரிக்க விரும்புகிறது.மாலத்தீவின் தற்காப்புப் படைகளின் பயிற்சித் தேவைகளில் 70% இந்தியாவால் (MDF) பூர்த்தி செய்யப்படுகிறது.
ராணுவப் படைகள் 2009ஆம் ஆண்டு முதல் 'எகுவெரின்' எனப்படும் கூட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன
மூலோபாய ஒத்துழைப்பு என்பது SAARC மற்றும் SASEC போன்ற மன்றங்களில் பலதரப்பு ஒத்துழைப்பை உள்ளடக்கியது.
2016 ஆம் ஆண்டு காமன்வெல்த் அமைப்பில் இருந்து இடைநிறுத்தப்பட்ட மாலத்தீவு சமீபத்தில் மீண்டும் இணைந்தது.

COVID-19 தொற்றுநோய்களின் போது உலகம் முழுவதிலுமிருந்து இந்தியர்களை மீட்பதற்காக இந்தியாவின் 'வந்தே பாரத்' திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு கடற்படைக் கப்பல்கள் மாலத்தீவுக்கு அனுப்பப்பட்டன.
2019 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான நிஷான் இசுதீனின் ஆட்சியில் பெற்றார்.

இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே தற்போது நிலவும் பிரச்சனைகளை நீக்குவது மிகவும் முக்கியமானது.
அண்டை நாடுகளுடன் முறையாகப் பணியாற்றுவதற்கு இந்தியா சுதந்திரமான தீவுக் கூட்ட வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வேண்டும்
அரசாங்கத்தின் "அண்டை நாடுகளுக்கு முதலில்" என்ற மூலோபாயத்தை இந்தியா பின்பற்ற வேண்டும். அப்படித்தான் மாலத்தீவின் மீது இன்றுவரை இந்தியா தனது கொள்கைகளை பின்பற்றி வருகிறது
இப்படித்தான், அது அமைதியான, வளமான மற்றும் நிலையான மாலத்தீவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மேம்பாட்டு பங்காளியாக இருக்க முடியும்.

மாலத்தீவுகளும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பில் மாலத்தீவு முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியா-மாலத்தீவு உறவுகள் முதன்மையானது. மாலத்தீவிற்கு இந்தியா ஒரு தளராத நட்பு நாடாக இருந்து வருகிறது, இது 1988 ஆம் ஆண்டு ஆபரேஷன் கேக்டஸ் போன்ற மாலத்தீவிற்கு உதவ பல முறை வந்ததிலிருந்து தெளிவாகத் தெரிகிறது, 2004 சுனாமியின் போது மனிதாபிமான உதவிகளை வழங்கிய முதல் நாடு இந்தியா, நாட்டிற்கு குடிநீரை வழங்கியது. 2014 ஆம் ஆண்டின் தண்ணீர் நெருக்கடியின் போது மற்றும் கோவிட்-19 இன் போது தடையில்லா மருத்துவ உதவிகளைச் செய்தது.

இவ்வளவு தூரம் வரலாற்று பூர்வமாக மாலத்தீவிற்கும் இந்தியாவிற்கும் நட்புறவு இருக்க இன்றைய மாலத்தீவின் புதிய அதிபர் தங்களது புதிய உறவுகளில் சீனாவை அனுசரித்துக் கொண்டு அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்தியா தனது ராணுவத்தை மாலத்தீவில்  இருந்து திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். 

இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்திய அதிபராக முந்தைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலி திகழ்ந்தார். அவரை முகமது மூயிஸ் செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோற்கடித்தார்.

கடந்த 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலத்தீவின் எட்டாவது அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள் இந்திய ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வசம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

 மாலத்தீவில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் முறையாக தெரியவில்லை. தற்போது பதவி ஏற்றுக் கொண்டுள்ள புதிய அதிபர் முகமது மூயிஸ், அந்நாட்டின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு நெருக்கமானவர். இவர் 2013 முதல் 2018 வரையிலான ஆட்சி காலத்தில் சீனாவுடன் இணக்கமாக பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது தேர்தல் பிரச்சாரத்தில் வெளிநாட்டு படைகள் வெளியேற்றப்படும் என முகமது மூயிஸ் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சிறப்பு தூதர் ஷென் யிகினை அதிபர் முகமது மூயிஸ் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் போது தங்கள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பல ஆண்டுகளாக சீன அரசு வழங்கி வரும் பங்களிப்புக்கு அதிபர் முகமது மூயிஸ் நன்றி தெரிவித்திருந்தார்.

உட்கார்ந்து தின்னவேண்டும் வரை தின்னாச்சு இனி திமிர்த்தனத்தை காட்ட வேண்டியதுதான் என்கிற முறையில் இந்த புதிய அதிபரின் போக்கு எல்லாவற்றையும் மறந்து விட்டு கிழவியைத் தூக்கி மனையில் வை என்பது மாதிரி சீன மயம் காட்டுகிறது.!  இந்தியாவின் கடல்புற எல்லைகளில் அருகாமையில் இருக்கும் மாலத்தீவினுடைய இந்த போக்கு எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாய் அமையும் என்பதில்

சந்தேகம் இல்லை. இந்த சந்தர்ப்பவாத போக்கை புதிய அதிபர் இந்தியாவிற்கான நன்றியை செலுத்தி விட்டு தான் சொல்ல வேண்டும். பதிலாக ராணுவத்தை திரும்ப பெற சொல்வது என்பது அந்த நாட்டு பிரச்சனை மட்டும் அல்ல இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதையும் அவர் உணர வேண்டும். ஏற்கனவே சீனா இந்து மகா சமுத்திரத்தில் பட்டு வழி சாலை, வங்க கடலில் கச்ச தீவு வரை இலங்கையின் தயவில் அத்து மீறி செயல்படுகிறது. இனி மேற்கில் மாலத்தீவை வைத்து அரபிக்கடலில் வந்து
புவி அரசியலில் பிரச்சனைகள் உருவாக்க சீனாவின் திட்டமாகும்.

இது விஷயத்தில் இந்திய அரசு இனிமேல் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே சொன்ன மாதிரி மூல உபாய நட்பு அடிப்படையில் இருக்குமா என்பது ஆயிரம் டாலர் கேள்வி? புதிய மாலத்தீவு அதிபரின் போக்குதான் அதை தீர்மானிக்கும்.

#இந்தியா_மாலத்தீவு_உறவு
#இந்தியா_சீனா_புவிஅரசியல்
#IndiaChinaTension #silk way

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
19-11-2023


*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...