Saturday, November 4, 2023

#*தமிழ்நாட்டு மீனவர்களை மாலத்தீவு முதன்முறையாக கைது செய்தது ஏன்? இந்தியா சீனா மோதல் அங்கும் எதிரொலிக்கிறது*

#*தமிழ்நாட்டு மீனவர்களை மாலத்தீவு முதன்முறையாக கைது செய்தது ஏன்? இந்தியா சீனா மோதல் அங்கும் எதிரொலிக்கிறது*

IND-TN-12-MM-6376 எனும் பதிவு எண் கொண்ட படகில் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் 12 மீனவர்கள் கடந்த அக்டோபர் 10ம் தேதி இந்தியப் பெருங்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் அக்டோபர் 23ம் தேதி மாலத்தீவில் உள்ள தினதூ தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மாலத்தீவு கடற்பாதுகாப்பு படையினர் அவர்களை கைது செய்து அவர்களது படகை பறிமுதல் செய்தனர்.




மாலத்தீவு சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே அந்த வகையிலும் தற்போது  புதிய மாலத்தீவில் அதிபராக இருக்கும் முகமது முய்சு சீன ஆதரவாளர். 

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் இந்திய தஞ்சம் கோரி உள்ளார். இவர் இந்திய ஆதாரவாளர். மூன்று ஆண்டுகளுக்கு முன் முகமது நஷீத்
அதிபராக இருந்த போது இந்தியா
கடன் உதவி மட்டும்மல்ல கோவிட் காலத்தில் சகல உதவிகளை இந்தியா மாலத்தீவுக்கு அளித்தது.

மாலத்தீவு ஆப்ரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் நடுவில் அமைந்துள்ளது. எனவே, இந்த இடத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா என்னவேண்டுமானாலும் செய்யும்” என அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிற்கு அதன் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பாதுகாப்பு அரண்கள் உள்ளன. ஒன்று, அந்தமான் நிக்கோபார் மற்றொன்று லட்சத்தீவு. இந்த இரண்டு பகுதிகளுக்கும் நடுவே மாலத்தீவு உள்ளது. அங்கு சீனாவின் ஆதிக்கம் இருப்பது இந்தியாவிற்கு நல்லதல்ல…

#மாலத்தீவு
#மீனவர்கள்சிக்கல்
#மாலத்தீவு_சீனாவின்பெல்ட்அண்ட்ரோட்
#இந்துமகாசமுத்திரம்
#அரபிக்கடல்
#indiansecurity 

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
4-11-2023.


No comments:

Post a Comment

*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Ch...