Sunday, November 12, 2023

#*வாழ்வு- ஏற்றங்கள்….. இறக்கங்கள்*… #*வாழ்க்கை கால அளவைகளால் தொகுக்கப்படுகிறது*.

#*வாழ்வு- ஏற்றங்கள்….. இறக்கங்கள்*… 
#*வாழ்க்கை கால அளவைகளால் தொகுக்கப்படுகிறது*. 
—————————————
நாம் எளிமையாக இருக்க பயப்படுகிறோம். விஷயங்கள் சிக்கலானதாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

நாம் எதையும் முழுமையாகப் பார்ப்பதில்லை.

நீங்கள் மேகத்தை முழுவதுமாகப் பார்ப்பதில்லை - ஏனென்றால் நீங்கள் அதைப் பார்க்கும்போது, ​​வேறு ஒன்றைப் பற்றி சிந்திக்கிறீர்கள். 

நீங்கள் ஒரு மலரைப் பார்த்து, அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறீர்கள் - ஏனென்றால் உங்கள் மனம் அங்கே இல்லை.

உங்கள் வேலையைப் பற்றி யோசித்துக்கொண்டே உங்கள் மனைவி சொல்வதைக் கேட்கிறீர்கள்.

உங்கள் அன்றாட வேலைகளில் நீங்கள் பிடிபட்டுள்ளீர்கள்.

நீங்கள் ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை. 

உங்களால் உண்மையில் எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை.

விடயங்கள் எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நாம் நம்மை அறிவுஜீவிகள் என்று நினைக்கிறோம்.  

விஷயங்களை மிக எளிமையாகப் பார்ப்பது என்பது நமக்குத் தெரியாது.

 நீங்கள் விஷயங்களை மிக எளிமையாக பார்க்க முடிந்தால், நீங்கள் எல்லா அறிவுஜீவிகளுக்கும் அப்பாற்பட்டவர்.

 பிறகு, நீங்கள் உண்மையான ஒன்றைக் காண்பீர்கள் - அது சிந்தனையால் உருவாக்கப்படாதது.

இப்படி…… வாழ்வு-ஏற்றங்கள்….. இறக்கங்கள்… 
வாழ்க்கை கால அளவைகளால் தொகுக்கப் படுகிறது.
கால அளவைகளோ ஞாபகங்களால் தொகுக்கப்படுகின்றன.
••
விசையுறு பந்தினைப்போல் -- உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன், -- நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் -- சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; -- இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
- #பாரதி.
••
உன் முடிவில் நீ உறுதியாக இல்லை என்றால் உன்னை சுற்றி இருப்பவர்கள் உன் இலக்கையே மாற்றி விடுவார்கள்  

உன்னை குறை சொல்பவர்களுக்கு உன் துணிச்சல் தெரியாது உன்னை ஏளனப்படுத்துபவர்களுக்கு உன் தைரியம் தெரியாது உன்னை சீண்டி பார்ப்பவர்களுக்கு உன் பலம் தெரியாது ஆனால் உன்னைப் பற்றி உனக்கு எல்லாம் தெரியும்.எதற்கும் தயாராக இரு…
••••
சமரசப் பொழுது 

வாழ்தலின் நிமித்தம்
அவ்வப்போது சிறிது
ஆசுவாசம் தேவைப்படுகிறது 

மேற்கு திசைச் சாளரத்தைத் 
திறந்துவைத்து
மாலை நேரத் தேநீருடன்
வந்தமர்கிறேன்

மாலை நேர வரைதலை
கணகச்சிதமாக 
நிகழ்த்திக் கொண்டிருக்கிறது
கீழ்வானம்

இன்னும் 
சற்று நேரத்தில் 
வண்ணங்களைக் களீபரம் 
செய்து
இருளைத்
துணைக்கழைக்கத்தான் போகிறது 
வருகின்ற இரவு

ஆனாலும் 
வண்ணத் தீற்றலை
நிமிடத்திற்கு நிமிடம் 
மாற்றி மாற்றி
தன்னை
அலங்கரித்துக் கொண்டே
இருக்கிறது 
சளையாத அவ்வானம்

வண்ணங்களின் பின்னே
ஓடிக்கொண்டிருந்த 
என் மனதை
சற்று
பிடித்து வைத்திருக்கிறேன்
இருள் கவ்வுகையில் 
மினுக்கத் தொடங்கும்
நட்சத்திரங்களுக்காகவும்
இருளின் கருமைக்காகவும்

முன்னது நகரும்போது
பின்னதில் 
ஆசுவாசங்கொள்ளும் 
வானத்தைப் போல

இரவு பகலைத் தனதாக்கி
ஆசுவாசமாய் நகரும்
நாட்களைப் போல

வாழ்க்கையின் 
ஏற்ற இறக்கங்களுடன்
எனக்கும் சற்று 
சமரசம் 
தேவையாய் இருக்கிறது

#வானதி_சந்திரசேகரன் Vanathi Chandharasekaran
#பெண்ணில்_குளிர்ந்த_மழை

(படம்
#பாரதியின்_எட்டையபுரம்_எட்டப்பன்கோட்டை)

கே. எஸ்.இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
12-11-2023.


No comments:

Post a Comment