Thursday, November 2, 2023

#*தமிழ்நாடு-கேரளா இடையேயான* *நதிநீர் பிரச்சனைகள்* #*கேரளீயம்* #*நவகேரளம்* #*நவம்பர்-1* #*கமலஹாசன்*



—————————————
கேரளப் பிறவி நவம்பர் -1,2023,  
நவ கேரளம் என கேரள அரசு கொண்டாடும் கேரளீயம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேரளா முதல்வருடன்.  மம்மூட்டி, மோகன்லால் கமலஹாசன் ஷோபனா...  ஆனால் தமிழகநாள் என நவம்பர் 1 அன்று திமுக அரசு கொண்டாடவில்லை என்பது வரலாற்று பிழை.

தமிழ் மலையாள நடிகர்கள் பலரும் இந்திய தேசியத்தின் பல விருதுகளை வாங்கியவர்கள்.  கமலஹாசன் மம்முட்டி மோகன்லால் போன்றவர்களுடன்   கேரளீயத் திரைக்கலைஞர்கள் என்னும் ஒரு பாசமிகு உறவை  எப்போதும் பேணிக்கொண்டு வருபவர் தான் செந்தமிழ் நாட்டின் நடிகர் கமலஹாசன் . இன்று வரை கேரள முதல்வர் திரு பினராய் விஜயன் அவர்களோடு தன் நட்பையும் செல்வாக்கையும் வைத்துள்ளார் .தமிழ்நாட்டில் டார்ச் லைட் அரசியலிலும் ஈடுபடுகிறார்.

அது ஒரு புறம் இருக்க

தமிழ்நாடு மற்றும் கேரளாஉள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அமைக்கப்பட்ட குழுக்கள் இடையே மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை தொடர்ந்து இன்னும் நடைபெற்று வருகிறது..

#பரம்பிக்குளம்_ஆழியாறு, #பாண்டியாறு_புன்னம்புழா_பிரச்னைகள் குறித்து விவாதிக்க தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றதாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த குழுக்களின் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று கிட்டத்தட்ட திறந்த விவாதங்களுடன் நடைபெற்றது.

பேபி அணை மற்றும் #முல்லைப்பெரியாறு கன்னியாகுமரி விளவங்கோடு தாலுகாவில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் #நெய்யாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது , #அடவிநயினார்அணை சிக்கல், #செண்பகவல்லிஅணை, 
#அச்சன்கோவில்_பம்பா_தமிழக_வைப்பாறு_இணைப்பு,#அழகர்அணை,#ஆனைமலையாறுதிட்டம், நீராறு-நல்லாறு இணைப்பு,  #பம்பாறு, #சிறுவாணி #அமராவதி மற்றும் தேனி மாவட்டம்,#மங்களாதேவி_கண்ணகி_கோயில் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழகம் எழுப்பியது என்று செய்திகள் அறிவிக்கின்றன. ஆனாலும்பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தை புதுப்பித்தல் மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மின்சாரம் தயாரிப்பது என இத்திட்டங்களை  கேரளா ஏக போகமாக பாத்தியதை எடுத்துக் கொண்டு நமக்கு கையை விரிக்கிறது..
  நாம் மேற்சொன்ன வகையில் சிறப்பு ச் செல்வாக்கு உள்ள நடிகர் கமலஹாசன் அவர்கள் பெரிய மனது பண்ணி ஒரு அம்பாசிடரை போல இயங்கி இந்த நதிநீர் பிரச்சினைகளை தீர்த்துக் கொடுக்க தனது நண்பரான கேரள முதல்வரிடமும்  பேச்சு வார்த்தை நடத்தி தனது சக கேரளா நடிகர்களுடமும் இதை எடுத்துச் சொல்லி தமிழ்நாட்டுக்கு ஒரு நல்லது செய்வார் எனில் அவருக்கு எவ்வளவு பெரிய புகழும் பெருமையும் இன்னுமும் கூட அரசியல் செல்வாக்கும் கிடைக்கும் என்பதை நினைத்து பார்க்கிறேன்.

அரசியல் கட்சிகளை தொடங்குவது முக்கியமில்லை  அதை நற்செயல்களுக்கென இயக்குவது முக்கியம் என்கிற விபரங்களை நன்கறிந்தவர் கமலஹாசன். தன்னுடைய கேரளா தமிழ்நாடு நல்லுறவை அடிப்படையாக வைத்து விரைவில் இந்த நல்ல ஏற்பாட்டை செய்வார் என்று நம்புகிறேன்.

#தமிழ்நாடு_கேரளா_இடையேயான_நதிநீர்_பிரச்சனைகள் #கேரளீயம்  #நவகேரளம்
#நவம்பர்_1
#கமலஹாசன்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்ராதாகிருஷ்ணன்
#ksrpost
2-11-2023.

No comments:

Post a Comment

*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Ch...