Friday, November 17, 2023

#திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டாஸ் ஏன்? காவல்துறையின் வெண்டைக்காய் விளக்கம்….பாரீர். #முதல்வராக முன் தேர்தல் களத்தில் ஸ்டாலின விவசாயிகளை பற்றி சொன்னது என்ன? இன்று என்ன நடக்கிறது…. #திமுக ஆட்சி விவசாயிக்கு குண்டாஸ் #விசாயிகள்போராட்டம் #தமிழக விவசாயிகள் சங்கம்.

#திருவண்ணாமலை மாவட்ட
விவசாயிகள் மீது
குண்டாஸ் ஏன்?
காவல்துறையின் வெண்டைக்காய்  விளக்கம்….பாரீர்.
#முதல்வராக முன்   தேர்தல் களத்தில் ஸ்டாலின
 விவசாயிகளை பற்றி சொன்னது  என்ன? 
இன்று என்ன நடக்கிறது…. #திமுக  ஆட்சி  விவசாயிக்கு
குண்டாஸ்
#விசாயிகள்போராட்டம்
#தமிழக விவசாயிகள் சங்கம்.
#விரிவானவரலாற்று பதிவு
(1)
—————————————————————

"திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக கடந்த 126 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மேல்மா சிப்காட் செய்யாறு சிப்காட் அலகு 3 என்ற பெயரில் 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தையும் முன் நின்று நடத்தியவர்கள்"




















"அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு, எதிர்ப்பு தெரிவித்தார்கள்"

இந்த 7 விவசாயிகள் கைது குறித்து தமிழக காவல்துறை விளக்கம்.
••••
காணவில்லை!
கடந்த அதிமுக ஆட்சியில்எட்டு வழி சாலை, நெடுவாசல் விவகாரங்களில் துள்ளிக்குதித்து கொந்தளித்த  சிபிஎம், சிபிஐ, மதிமுக, சிறுத்தை போன்ற  கட்சிகள் ஊடக’பத்திரிகையாளர்கள ஆகிய அனைவரும்  இப்போது திருவண்ணாமலையில் அமைதியாக போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்த போது காணவில்லை!

‘’6 விவசாயிகள் மேல குண்டாஸ்  கேஸ் போட்டது திமுக ஆட்சின்றதால அமைதியா இருக்கோம் இதே வேற ஆட்சியா இருந்துருந்தா இன்நேரம் ரொம்ப உக்கிரமா இருந்துருப்போம்....!!!’

7 சிறைகளில் தனித்தனியாக அடைக்கப்பட்ட விவசாயிகள்!

ரவுடிகள் வெட்டுக் குத்து களவு கடத்தல் சுதந்திரமாக இருக்கும் நாட்டில், விவசாயிகள் குண்டாசில் கைதாகும் அளவுக்கு மறியல் எனும் வன்முறையில் ஈடுபடுவார்கள் தானே?

அதுசரி மறியலுக்கு பேர்போன முகநூல் புரட்சிப்படை போராளிகள் என்ன செய்யிறாங்க?

ஸ்டாலின் நல்லா இருக்க சஷ்டிக்கு மௌன விரதம் இருக்குறாங்க. 

ஓ சரிசரி. இருக்கட்டும் இருக்கட்டும்.

திருவண்ணாமலை விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது

சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக 3174 ஏக்கர் விவசாய விளைநிலங்களை சட்டத்திற்கு எதிரான முறையில் உழவர்களின் கடுமையான எதிர்ப்பை மீறி வலுக்கட்டாயமாக  பறிக்கப்படுவதை எதிர்த்து  போராடியவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. 

தங்களுடைய வாழ்வாதாரமான விளை நிலங்கள் பாதுகாக்க போரடிய விவசாயிகள் மீது குண்டர்‌ சட்டத்தின் கீழ் கைது செய்வது நம் எவ்வளவு அடக்குமுறை, சார்வதிகர ஆட்சியாளர்கள் கீழ் வாழ்கிறோம் என்பதை காட்டுகிறது.

சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக 1970ல் பெருமநல்லுரில்  பின் 
மின் கட்டணத்தை எதிர்த்து போராடிய விவசாய மீது துப்பாக்கி சூடு நட்த்தி இவு இரக்கமின்றி மூன்று விவசாயிகளை சுட்டுக் கொன்றது . கோவில்பட்டி, வேடசந்தூர் என பல இடங்களில் சுட்டுக் கொன்றது அன்று ஆண்ட‌ இதே கட்சி அரசு என்பது வரலாறு..

••••••

நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் விவசாயிகளுக்கான போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு விவசாயிகளைத் தமிழ்நாடு காவல் துறை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது. காரணம் தமிழ்நாடு சிப்காட் திட்டத்தை விரிவாக்கம் செய்ய நிலத்தைக் கையகப்படுத்துகிறார்களாம். 
 20 விவசாயிகளுக்கு மேல் வழக்கு போட்டு அவர்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. விவசாய நிலங்களை தொழிற்சாலைகளுக்கு மாற்றித் தரும் போது ஏற்படும்  சட்டங்களை முறைப்படி அரசு கையாளுகிறதா?
இல்லை இதில் ஏதேனும் பினனணித் தந்திரங்கள் இருக்கிறதா?

எப்படியாக இருந்தாலும் இது சரியான நடவடிக்கை இல்லை இது மோசமான அரசு அதிகார வன்முறையாக இருக்கிறது. நேற்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது காணொளியில் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கான மின் கட்டடத்தை ஒரு பைசா உயர்த்திய போது கலைஞர் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினார், துப்பாக்கி சூட்டில் விவசாயிகள் பலி என்று தவறான தகவலைத் தருகிறார். அன்று கலைஞர் ஆட்சி. எம்ஜிஆர் 1977 இல் ஆட்சிக்கே வருகிறார். நான் கேட்கிறேன் உங்களிடம் யார் இந்தப் பொய்யான தகவலை தந்தது? உங்களுக்காவது இதை சரியானதா என்று ஆய்வு செய்ய தெரியாதா? யார் உங்களுக்கு எழுதி கொடுக்கிறார்கள்.
அது அப்படி நடக்கவில்லை.

உண்மையில் கலைஞர் தான் 1971-72ஆம் காலத்து தனது ஆட்சியில் ஒரு பைசா மின் கட்டணத்தை உயர்த்தினார். வரலாற்றை எடுத்துக் கோப்புகளை திரும்பப் பாருங்கள். அப்போது அந்த மின் கட்டண உயர்விற்காக சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை விவசாயிகள் உலகமே திரும்பிப் பார்க்கும் வண்ணம் மாட்டுவண்டி போராட்டம் நடத்தினார்கள். அமெரிக்காவின் 
#நியுயார்க்டைம்ஸ் பத்திரிக்கை அந்த #மாட்டுவண்டிகளை #விவசாயிகளுடைய_யுத்தபீரங்கிகள்  என்று வர்ணித்தது . அதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? இப்படியாக கலைஞர் ஆட்சியின் போது தமிழகம் முழுக்க விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள் என்பதை வசதியாக மறந்து விட்டு அது எம்ஜிஆர் காலத்தில் நடந்தது என்று முதல்வர் பொய் பிரச்சாரம் செய்கிறார். இதுதான் இவரது யோக்கியதை. வரலாறு தெரிந்தவர்களுக்கு முதல்வரின் இந்த பேச்சு வேடிக்கையாகவும் அபத்தமாகவும் தான் இருக்கும்.
கலைஞர் தன்னுடன் இருப்பவர்களுக்கு மிகுந்த மரியாதை தருவார். முக்கியமான பிரச்சினைகளை நண்பர்களுடன் குறிப்பாக என்னுடன் கூட கலந்து ஆலோசிப்பார்.கலைஞர் காலத்தில் ஐநா சபை வரை இலங்கை பிரச்சனைக்கான  அவரின் விளக்கக் கடிதங்களை கொண்டு போய் சேர்த்து அங்கே நியாயத்தை எழுப்பியவன் நான்.
அன்றைய திமுக நிலைப்பாடுகளை எடுத்து வாதிட்டவனும் கூட நான்தான்.
இன்றைய முதல்வருக்கு அருகில் யார் இன்று இருக்கார்கள் என்று தெரியவில்லை? முழுவதும் கூமுட்டைகள் எந்த அனுபவமும் அற்றவர்கள்.

யார் எதை எழுதிக் கொடுக்கிறார்களோ அதை பேசி விட்டு போவது இன்றைய முதல்வரின் வாடிக்கையான வழக்கமாக இருக்கிறது. மக்கள் ஞாபக மறதியில் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறார் போலும்.

இதுவரை தமிழ்நாட்டில் விவசாய போராட்டத்தின் மீது 50 பேருக்கு மேலாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.  இது இந்தி போராட்டத்தில் அல்லது மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விட அதிகமான உயிர் இழப்பு.மேலதிகமாக விவசாயிகள் மீது பொய்வழக்கு கள் தனிக்கதை.

மேற்கு வங்காளத்தில் பலகாலமாக தொடர்ந்து நீடித்து வந்த இடதுசாரி ஆட்சி விவசாயிகள் 13 பேர் மீது அவர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராக   துப்பாக்கி சூட்டை  நடத்திய பிறகு தான் அவர்களது ஆட்சி வீழ்ச்சி அடைந்து மம்தா பானர்ஜி அங்கு ஆட்சிக்கு வந்தார் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

கோவில்பட்டியில்  மற்றும் என் கிராமத்தில் துப்பாக்கி சூடு நடந்து விவசாயிகள் உயிரிழந்த போது  அங்கு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்காக போராடிய அவர்களுக்கான நஷ்ட ஈடுகளை வாங்கி கொடுக்க  நீதிமன்றத்தில் போராடியவன் நான் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் திரும்பி கூடப் பார்க்க மாட்டார். அக்காலத்தில் தமிழ்நாடு முழுக்க போராடிய சி.நாராயணசாமி நாயுடு விவசாயிகளுக்காக எடுத்த உரிமை பிரச்சினைகளை எல்லா முதலமைச்சர்கள் மட்டுமல்ல பல கட்சித் தலைவர்களும் கூட அவருக்கு  ஆதரவு அளித்தனர்.
 
அன்றைய முதல்வர், எம்ஜிஆர் காலத்தில்
 •விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்ட
உயர் அதிகாரிகள், நாராயணசாமி நாயுடு உட்பட உழவர் சங்க தலைவர்கள், அரசியல் கட்சிகள் முத்தரப்பு உயர் மட்ட குழுவை தமிழகஅரசு அமைத்தது.

• விவசாய பம்பு செட்களுக்கு (3- பேஸ் ) இலவச மின்சாரம் முதலில் வழங்கினார்.

•கலைஞர் 1989இல் எல்லா விவசாய பம்பு செட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினார்.

நாராயணசாமி நாயுடு பேசிய நியாயங்களுக்கு அஞ்சி மதிப்பு கொடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள்.

விவசாயத்திற்கு எந்த ஒரு வரைமுறையான திட்டங்களையும் ஏற்படுத்த முடியாத முதல்வர் அவர்கள் காவல்துறையை பயன்படுத்தி அவர்களின் போராட்டத்தை ஒடுக்க முயல்வது ஒரு ஏதோச்சதிகாரப் போக்கு மட்டுமல்ல ஒரு பாசிசக் கூறு நிறைந்த வன்முறை என்றும் கூட  சொல்லலாம். இந்த அரசு பொருளாதார வளமையை அதிகம் பெற்றுக்கொண்டு பொருளாதார நுண் பாசிசங்களை மக்கள் மீது ஏவி வருகிறது என்பதற்கு இம்மாதிரியான குண்டாஸ்
 வழக்குகள் சாட்சியமாகின்றன. உண்மையில் இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு பேச வேண்டிய முதல்வர் வரலாற்றை திசை திருப்ப முயல்கிறார்.

ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்று முழங்கிய லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்களின்  விவசாயம் பற்றிய தேசிய கொள்கைகளை காற்றில் பறக்க விடும் காலம் வந்து விட்டது. காலம் தோறும் விவசாயிகளுக்கான ஒரு தலைவர் கடுமையான காத்திரத்துடன் அவர்களது உரிமையை முன்வைத்து அவர்களை ஒன்றிணைத்து
  மக்கள் முன் தோன்றுகிறார். ஆனால் அவர்களை இந்த கட்சி அரசியல்வாதிகள் தங்களுடைய விசுவாசிகளை வைத்து வீழ்த்தி மீண்டும் மீண்டும் இந்த சுயலாப குடும்ப அரசியலை தக்க வைத்துக் கொள்கிறார்கள். இன்றைய தமிழக விவசாயம் மக்கள் என்கிற ஒரு பெரும் உயிர் வாழும் இனத்திற்கு அதன் தொகைக்கு இப்போது வரையிலும் இந்த அரசு எந்த நியாயத்தையும் வழங்கவில்லை! இவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் கொள்ளையடித்துச் சேர்த்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விவசாயகளை அப்புறப்படுத்திவிட்டு நவீன தொழில்நுட்ப கருவிகளை வைத்துக் கொண்டு உழுது கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு விவசாய முறையை மேற்கொள்ளும் இவர்கள் எளிய விவசாயிகளைக் கைவிடுவதை அல்லது ஏதேனும் தங்கள் உரிமைக்கென எதிர்த்து போராடும் போது அவர்கள் மீது பொய் வழக்குகளை ஏவுவதைப் பார்க்கும் போது  நடப்பது ஒரு ஜனநாயக அரசு என்கிற முறையில் இதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.?

கேட்டால் முதல்வர் கடந்த கால ஆட்சி மீது குற்றம் சாட்டிவிட்டு தன் நிகழ்காலத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்.

இவையெல்லாம் மீண்டும் ஆட்சிக்கு வர உதவாது . முக்கியமான கடுமையான விமர்சனத்தை முதல்வர் எதிர்கொள்வார். இத்தகைய  கைதுகள் அவருக்கு நன்மதிப்பை பெற்று தராது.
 இதை சரியான முறையில் விசாரணைக்கு உட்படுத்தி அந்த விவசாயிகளுக்கு நியாயம் செய்வாரா என்று பார்க்கத்தான் வேண்டும். அல்லது விவசாயிகளை வெற்றிடத்தில் விடுவாரேயானால் அவருடைய எதிர்காலமும் வெற்றிடத்தில் விடப்படும். ஏன்எனில் உலகத்தில் வளர்ந்த நாடுகள் அனைத்துமே மீண்டும் விவசாயத்தை சரியான முறையில் செப்பனிடடு உள்ளூர் தேவைக்கான மறுமலர்ச்சியை இன்று உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கண்ட கேள்விகள் இருக்க கலைஞர் ஆட்சியில் நடந்ததை எம்ஜிஆர் ஆட்சியில் நடந்தது என்று சொல்லும்  தனது பொய் பிரச்சாரத்திற்கு முதல்வர் பதில் அளிப்பாரா கேள்விகள் தொடர்கின்றன.
—————————————————————

இது குறித்து கடந்த கால எனது பதிவுகள்….
•••••••••
விவசாயிகளுக்கான முதல் போராட்டத்தை 60 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்த சி.நாராயணசாமி நாயுடு….                                                                                                                            தங்களின் ஜீவாதார பிரச்சினை களுக்காக கடந்த 18 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள் நடத்தும் நூதன போராட்டங்களால் தலைநகர் டெல்லியில் பதற்ற மான சூழ்நிலை உருவாகிக் கொண் டிருக்கிறது. இந்த வேளையில், 60 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயி களுக்கான முதல் உரிமை போராட் டத்தை நடத்தியவர் கோவையை அடுத்த செங்காலிபாளையத்தைச் சேர்ந்த விவசாயத் தோழர் நாராய ணசாமி நாயுடு. அவரைப் பற்றி நினைவு கூர்கிறார்கள் அவரோடு போராட்டக் களங்களில் இருந்தவர் கள்.

காமராஜர் ஆட்சியில் விவசாயத் துக்கு 16 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டது. 1950-களின் தொடக்கத்தில் தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகை யில் இது 4 மணி நேரமாக குறைக் கப்பட்டது. 1957-ல் இதை எதிர்த்து விவசாயிகளை ஒன்றுதிரட்டி கோவை பகுதியில் போராடினார் நாயுடு. தமிழகத்தில் விவசாயி களின் உரிமைக்காக நடந்த முதல் போராட்டம் இதுதான். போராட்டத் தின் வெற்றி மீண்டும் விவசாயத் துக்கு 16 மணி நேர மின்சாரம் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து விவசாயிகளை ஒன்றுதிரட்டும் வேலைகளில் ஈடுபட்டார் நாயுடு. இந்த நிலையில், 8 பைசாவாக இருந்த ஒரு யூனிட் மின்சாரத்தை 10 பைசாவாக உயர்த்தியது தமிழக அரசு. இதை எதிர்த்து 1970 மே 9-ல் கோவை ஜில்லா விவசாயிகளை ஒன்று திரட்டி மாட்டு வண்டிகளுடன் போராட்டம் நடத்தி, கோவையை ஸ்தம்பிக்க வைத்தார் நாயுடு. அப்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மூன்று விவசாயிகள் பலியானார்கள். நிலைமை மோச மானதால் இறங்கி வந்த அரசு, ஒரு யூனிட் மின்சாரத்தை 9 பைசாவாக குறைத்தது.

இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு யூனிட் மின்சாரத்தை 12 பைசா ஆக்கியது அரசு. இதை எதிர்த்தும் நாராயணசாமி நாயுடு 17.06.1972-ல் நடத்திய மாட்டு வண்டிப் போராட் டத்தால் யூனிட்டுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது. இந்த தொடர் வெற்றிகள் நாயுடுவை ஒட்டுமொத்த தமிழக விவசாயி களின் தலைவராக உயர்த்தியது. இதைத் தொடர்ந்து 1973-ல் ‘தமிழக விவசாயிகள் சங்கம்’ உருவாக்கப் பட்டு, அதன் தலைவராக நாராயண சாமி நாயுடு அங்கீகரிக்கப்பட்டார்.

விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் மிக தீவிரமாக விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டு மக்களை திரட்டிக் கொண்டிருந்த கால வர்த்தமான சமயத்தில் தமிழ்நாடு முழுக்க விவசாயிகள் கூட்டம் கூட்டமாக பச்சைத் துண்டை அணிந்து கொண்டு பல்வேறு கூட்டங்களில் தங்களது உரிமைகளை முழக்கமாக வைத்து அவரது தலைமையில் போராடிக் கொண்டிருந்தார்கள். விவசாயிகளை மையமாக வைத்து தொடங்கிய அந்த போராட்டம் தமிழ்நாடு முழுக்க பரபரப்பான இயக்கமாகி வந்த வேளையில்
அன்றைய ஆளும் வர்க்கங்கள் அனைவரும் அவரது கோரிக்கைகள் மற்றும் விவசாய உரிமைகள் குறித்த பேச்சின் மீது அச்சம் கொண்டிருந்தார்கள். அப்படியான சமயத்தில் தான்;
 அவர் குடியிருந்த கோவை மாவட்டம் வையம்பாளையம் கிராமத்திற்கு அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களும் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களும்  நேரில் சென்று வருகின்ற தேர்தலில் தங்களுக்கான ஆதரவுகளை நீங்கள் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதெல்லாம் நடந்தது. கலைஞரும் நாராயணசாமி  நாயுடுஅவர்களுடன் சந்தித்து பேச வேண்டும் என்று என்னிடம் கூறிய போது, நான் தான்  சென்று அவரைக் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு அழைத்து வந்தேன். பேச்சுவார்த்தை முடிந்து வந்த பிறகு கல்கி ப்ரியனுக்கு விரிவான பேட்டியை கல்கி ஏட்டுக்கு தந்தார்

அப்போது நாராயணசாமி நாயுடு அவர்கள் சென்னைக்கு வந்தால் ஸ்வாகத் ஓட்டலில் அல்லது ராயப்பேட்டை பழைய உட்லண்ட்ஸ் விடுதியில்தான் தங்குவார்.

அந்தத் தேர்தலில் அவர் கோவில்பட்டியில் சட்டமன்ற தொகுதியில் நின்ற கம்யூனிஸ்ட் கட்சி சோ.அழகிரிசாமி அவர்களுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கான மேடையில் ஆதரித்து பேசினார். அப்படி பேசிவிட்டு கோவில்பட்டி பயணியர் விடுதியில் வந்து தங்கும் போது தான் இதய வலி காரணமாக இயற்கை எய்தினார். அச்சமயத்தில் நான்  முழுவதுமாக அங்கு இருந்து ஆவண செய்ய வேண்டியதும் நேர்ந்தது. விவசாயிகளுக்காகவே தன் முழு வாழ்வையும் போராட்டத்தில் செலவழித்து பெருமளவில் மக்கள் ஆதரவையும் பெற்ற எளிமையான தலைவர் நாராயணசாமி அவர்கள்.

அவர் நினைத்திருந்தால் அப்பொழுதே அவருக்கான கூட கோபுரங்கள் மாடமாளிகைகள் அமைத்து தரப்பட்டிருக்கும். ஆனால் விவசாய மக்களின் வேதனைகளை அறிந்த அந்த உத்தமர் தனது கிராமத்தில் தன் வாழ்நாளின் கடைசி வரை ஓட்டு வீட்டில் வாழ்ந்தார். அவர் தன் வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டாம் என்று விட்டு கொடுத்தாலும் மின் கட்டணம் கட்ட மாட்டேன் என்று சொல்லி இறுதிவரை பெற்றோமாக்ஸ் அல்லது ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் தான் வாழ்ந்தார் என்றால் இன்றைக்கு யாரும் நம்புவார்களா?

 என்ன செய்ய?அப்படியான உத்தமர்களை போராட்டத்தில் இறக்கும்படி வைத்துதான் தமிழ்நாட்டின் சூழ்ச்சி மிக்க சுய லாபமிக்க அரசியலின் அறம்.
********
(தினமணி செய்தி)
போராட்ட காலங்களில் அவரோடு உடனிருந்தவரும் தற் போதைய திமுக செய்தித் தொடர் பாளருமான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ‘‘தமிழக விவசாயிகள் சங்கம் ஆரம் பிக்கப்பட்ட பிறகு விவசாய மாண வர் சங்கத்தைக் கட்டி எழுப்பியதில் நான் முக்கியமானவன். 1980-ல் கோவில்பட்டி அருகே எங்கள் சொந்த ஊரான குறிஞ்சாகுளத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத் தில் 8 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இப்படி, 1972-லிருந்து 1992 வரை 60 விவசாயிகளைச் சுட்டுக் கொன்றி ருக்கிறது தமிழக போலீஸ்.

இப்போது, கடன் தள்ளுபடி கேட்டு விவசாயிகள் போராடுகிறார் கள். ஆனால், அந்தக் காலத்தில் வரியைக் கட்டச் சொல்லி ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளைத் துன்புறுத்தியது அரசு. இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்பதற்காகவே 07-07-1982-ல் ‘இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி’ உதயமானது. 1982-ல் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் 1984 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டி யிட்ட இக்கட்சி தோல்வி கண் டது.

கோவைக்கு அடுத்தபடியாக, பிரிக்கப்படாத ராமநாதபுரம், நெல்லை மாவட்டத்து விவசாயிகள் பெரும் நெருக்கடிகளை எதிர் கொண்டதால் தென் தமிழகத்து விவசாயிகள் மீதும் நாராயணசாமி நாயுடுவுக்கு ஒரு கரிசன பார்வை இருந்தது. அவர்களுக்காக கோவில்பட்டி உள்ளிட்ட பகுதி களில் போராட்டங்களை முன் னெடுத்த நாயுடு, 1984 தேர்தலில் சிவகாசி நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர் அழகிரிசாமியை ஆதரித்துப் பேசுவதற்காக 21.12.84-ல் கோவில்பட்டி வந்திருந்தார்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் கோவில்பட்டி விருந்தினர் மாளிகை யில் தங்கி இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந் தார். ஐந்து ஆண்டுகள் கழித்து 1989-ல் அமைந்த திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சா ரம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட உத்தரவுகள் வெளியா கின. அந்த வெற்றியைக் கொண் டாட நாயுடு எங்களோடு இல்லை. நாராயணசாமி நாயுடுவை இன்றைக்கு பலபேர் மறந்துவிட்டார்கள்.

ஆனால், அவரைப்பற்றி வருங்காலமும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக கோவில் பட்டியில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.
ஆனால் சிலை வைக்கு அரசு அனுமதிக்க வில்லை என்ன சொல்ல… இன்னும் அந்த பணியில் நாம் உள்ளோம்.
—————————————————————

https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/may/22/free-electricity--list-of--agricultural-martyrs-3418415.html


*சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக  உழவர் பெருநதலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா அவர்கள் தலைமையில்  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - கடன் தள்ளுபடி - நியாயமான விலை-உட்பட 9 அம்ச கோரிககைகளை நிறைவேற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக நடத்திய போராட்டங்களில் கடந்த 1970 ஆம் ஆண்டு  ஜீன் 19 ம் தேதி திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அன்றைய திமுக அரசு -காவல்துறை  ஒரு பைசா மின் கட்டண உயர்வுக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மாரப்பகவுண்டர்,ஆயிகவுண்டர்,ராமசாமி கவுண்டர் ஆகிய 3ன்று விவசாயிகளை ஈவு இரக்கமின்றி துப்பாக்கி சூட்டில் அநியாயமாக சுட்டுகொன்றும் தொடர்ந்து                                                      1972ம் ஆண்டு 1 பைசா உயர்த்திய மின்சார கட்டணம் ரத்து செய்ய வேண்டும் - அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா அவர்கள் தலைமையில் தொடர்ந்து  போராடிய விவசாயிகளை ஒரே நாளில் தமிழகத்தில் 17 விவசாயிகளை- ( குறிப்பாக - சேலம்-மாவட்டம்-பெத்தநாயக்கன் பாளையம் என்ற கிராமத்தில் - 11 விவசாயிகள் ) காவல்துறை துப்பாக்கி சூட்டில் கொன்று குவித்து தன் அரசு பயங்கரவாதத்தை விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை  தொடங்கியது தி.மு.க*.

அன்று தொடங்கிய உழவர்களுக்கு எதிரான திராவிட முன்னேற்ற கழகத்தின் விவசாயிகள் விரோத செயல்கள் இன்றுவரை தொடரந்து நீடித்துக்கொண்டே இருப்பதற்கான சான்று தான் இது.                         இந்தியாவில் வேறு எந்த மாநில அரசுகளும் பயன்படுத்தாத குண்டர் சட்டத்தை போராடும் விவசாயிகளுக்கு எதிராக பிரயோகித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ள ஏதேச்சதிகாரத்தின் உச்சம்

குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவதற்கான குற்றங்களான கள்ளச்சாராய விற்பனை,மணல் கடத்தல்,பாலியல் குற்றச்செயல்,உணவு பொருட்கள் கடத்தல் ஆகிய எவற்றையும் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டுள்ள விவசாயிகள் செய்யவில்லை என்பதை தமிழக மக்கள்  அனைவரும் அறிவர்.

*அவர்கள் செய்த ஒரே தவறு செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக தங்களின் முப்போகம்  விளையும் விளை  நிலங்களை பறிக்கப்படுவதை கண்டித்து  அமைதியாக கடந்த 125 நாட்களாக அறவழியில் போராட்டம்  நடத்தியது தான்*. 

தங்களின் அடிப்படை வாழ்வாதாரமான மண்ணை காக்க போராடி கொண்டிருந்த விவசாயிகளை      குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள விவசாயிகள் விரோத  தமிழக திமுக அரசு…

 
குலோத்துங்க சோழ மன்னன் முடிசூட்டும் நாள். அமைச்சர்களும் பல புலவர்களும் அரசரை வாழ்த்தினர்.
அப்போது ஒளவையார் மன்னனை வாழ்த்திப்பாட எழுந்தார். மன்னரும் அவையோரும் ஒளவையார் என்ன பாடப்போகிறார் என்று மிகவும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒளவையார் ‘வரப்புயர’ எனச் சொல்லி, அமர்ந்துவிட்டார்.
இதைனைக் கேட்டோர் யாருக்கும் என்னவென்று புரியவில்லை. பின்னர் ஒளவையாரே இத்தொடரைப் பின்வருமாறு விளக்கியதாக சொல்வர்.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்.

இதுதான் விவசாயம், மனமிகு உழவர்கள், கிராமங்களின் மாண்பு

உண்மையான ஆன்மா அங்குதான் உள்ளது. #கிராமராஜ்யம் வேண்டும் என  என்றும் எமது விரும்பும் நிலைப்பாடு.

வாழியவே இவர்கள் …திமுக

#திமுக_ஆட்சி_விவசாயிக்கு_குண்டாஸ்_
#விவசாயிகள்_திமுக
#விசாயிகள்போராட்டம்
#சி_நாராயணசாமிநாயுடு
#தமிழகவிவசாயிகள்சங்கம்
#C_Narayanasamy_Naidu

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
17-11-2023.


No comments:

Post a Comment