Wednesday, November 22, 2023

#*இருத்தல், பின்நவீனத்துவம்- நிர்மலமான மனஅமைதிக்கு பத்து படிமங்கள்*

#*இருத்தல், பின்நவீனத்துவம்- நிர்மலமான மனஅமைதிக்கு பத்து படிமங்கள்*
————————————
வெற்றியை மட்டுமே கொண்டாடும் ஒரு கூட்டத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். சக மனிதர்கள், திறமை, கலை இதெல்லாம் அதற்கு முக்கியமில்லை.  வெற்றிக்காகப் போராடிய பின் மகிழ்ச்சியோடு தோல்வியைப் பழகிக் கொள்ள மனிதன் உருவாக்கிய ஒரு சூழல். அது மனிதர்களைப் பண்படுத்த உருவானது.

கட்சிக்கு உழைப்பவனைக் கொண்டு கட்சி நடத்து. கண்டவனையும் கொண்டு கட்சி நடத்தாதே என,
அண்ணாவின்  மணி வாசகம்.
ஆனால் திமுகவுக்கு உழைச்சவன் ரோட்டில் நிற்கின்றான். என்ன நடக்கிறது?.

இந்நிலையில் உழைப்பு, களப்பணிகள்,கொள்கை, கோட்பாடு  என இன்றைய நிலையில் சேர்வதற்கு என்று எந்த இலக்குமில்லை. 

எங்காவது செல்வது, அல்லது இலட்சியத்தைத் தேடுவது, எது சிறந்தது என்று நினைக்கிறோமோ அதைத் தேடுவது, இவையெல்லாம் நாம் முன்னேறி வருகிறோம், ஒரு சிறந்த உலகத்தை நோக்கி நகர்கிறோம் என்ற உணர்வைத் தருகிறது. இருக்கிற இந்த
இன்றைய அரசியல்-அரசு நிலையில் எங்கு தேட…..?

தெளிவற்ற நடைமுறையில் உள்ள இந்த இயக்கம் இயக்கமே அல்ல. ஏனென்றால் இலக்கு நமது துயரம், குழப்பம், பேராசை மற்றும் பொறாமை ஆகியவற்றிலிருந்துமுன்னெடுக்கப்
பட்டது. 

ஆக, உள்ளதற்கு நேர்மாறாக இருக்கக்கூடிய இந்த இலக்கு, உள்ளவற்றிலிருந்து வேறுபட்டதாகக் கருதப்படும் இலக்கு, உண்மையில் "உள்ளது என்னவோ" அது போலத்தான். இது "உள்ளது என்ன" என்பதிலிருந்து உருவாக்கப்படுகிறது.

எனவே, உள்ளது என்பதற்கும், அது என்னவாக  இருக்க வேண்டும் என்பதற்கும் இடையிலான மோதலை அது உருவாக்குகிறது. இங்குதான் நமது அடிப்படைக் குழப்பமும் முரண்பாடும் எழுகிறது.

இலக்கு என்பது இந்த சுய நல போக்கில் அங்கில்லை. அது மறுபக்கத்தில் இல்லை; தொடக்கமும் முடிவும் இங்கேயே மாயமாக  குழப்பமான சூழலில் உள்ளன. நாங்கள் தோன்றியதையெல்லாம் சொல்வோம் எங்கள் சுய நலத்தில் தோன்றியதையெல்லாம் செய்வோம்.  அதாவது நாங்கள் தாந்தோன்றி அரசியல்வாதிகள்.  எங்களை அடியை வணங்கி இருங்கள். அவ்வளவுதான் உங்களின் பங்கு. அதுக்கு இப்போ என்னன்றிங்க பைத்தியக்கார மக்களே.

அரசியல் என்பது ஒரு நாட்டிற்கான மக்கள் நல ஊழியம் அன்றி அதற்கு வேறு அர்த்தங்கள் ஏதுமில்லை. பதினெட்டாம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே முடியரசுகள் விழுந்து ஜனநாயகப் பெரும்பான்மை உலகமெங்கும் ஆட்சி முறையாக மலர்ந்தது. திரும்ப  இன்று குடியரசு பேரில் வேறு வகையில் முடியரசுகள் வந்து விட்டன.

மண்ணின்நல் லவண்ணம்
  வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி
  யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறுங்
  கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும்
  பெருந்தகை யிருந்ததே.    
-மூன்றாம்-திருமுறை திருஞானசம்பந்த (தேவாரம் - 3.001 )

******
இன்னொரு தமிழர்- தீவு மண்ணில்….

ஒரு சொட்டுக் கண்ணீரும்
ஒரு திரி தீபமும்
ஏற்ற முடியாத தேசத்தில்
கார்த்திகை தோறும்
கண் விழிக்கின்றன காந்தள் மலர்கள்,
விழி மூடி உறங்கியவர்களுக்காய்
ஒருபிடி குழிமண்ணிட்ட கைகள்
தேடித் திரிகின்றன
சிதைக்கப்பட்ட கல்லறைகளின்
உயிர்த் தடங்களை
எல்லாமும் தீர்க்கப்பட்டதாக
சொல்லப்படும் இக்காலத்தின் தீபத்திருநாளில்தான்
தன்பிள்ளைக்கொரு தீபம் ஏற்றுகிறாள்
குழிமண்ணிட்ட தாய்.

Sharmila Vinothini Thirunavukarasu

இருத்தல் மற்றும் பின்நவீனத்துவம்- நிர்மலமான மன அமைதிக்கு பத்து கட்டளைகள்:-
________________________

01
எவருக்கும் இரண்டாவது வாய்ப்பாக இருக்காதே!

02
தாழ்வு மனப்பான்மை வருகிறதென்றால் நீ இருக்கும் இடம் தவறானது. 

03
உன்னைப் பொருட்டாகக் கருதாதவர்கள் அழைத்தால் அடித்துப் பிடித்து ஓடுவதை நிறுத்து, எப்போதும் கிட்டுகின்ற தூரத்தில் உன்னை வைத்துக்கொள்ளாதே.

04
வாழ்விற்குள் வருபவர் அனைவரும் உனக்கானவர்கள் அல்ல. சமயங்களில் நீ என்பது, மனிதர்கள் பயணத்தில் கடந்து போகும் சிற்றூர்.

05
உன்னைப் புரிந்துகொள்ளாதவர்களிடம் மன்றாடாதே, அனைவரும் புரிந்தும் புரியாதது போலவே இருக்கவே விரும்புகிறார்கள்.

06
உன் இருப்பு தேவையற்ற இடங்களில் இருந்து நகர்வதற்குத் தயங்காதே, நகராமல் நிற்கநிற்க உன் தன்மானம் சூடுபட்டுக் கொண்டே இருக்கும்.

07
வேண்டாமென மறுப்பவர்களுக்கு பிடிவாதமாக நீ தரும் முக்கியத்துவங்களால்தான் புறக்கணிப்பைப் பெறுகிறாய்.

08
உன்னை விரும்பாதவர்கள் எவரும் மோசமான மனிதர்கள் இல்லை, அவர்கள் உன்னை விரும்பவில்லை அவ்வளவுதான்.

09
மணிக்கணக்காகப் பேசியவர்கள் திடும்மென மௌனம் காத்தால், அவர்களைப் பேசுவதற்கு வற்புறுத்தாதே, சம்பிரதாயமான குரலை விட மௌனமே சிறந்தது.

10
நிரந்தரமென எவருமில்லை, ஆயினும் மனிதர்களைத் தவிர்த்துவிட்டு வாழமுடியாது, வெறுமைக்கு மனதைத் தயார்படுத்திவிட்டு திருவிழா கொண்டாடு, 
பெரும் கூட்டத்திலும் தனிமைக்குப் பழகு. (எங்கே ஹம்பி Hampi, துங்கபத்திரை நதி கரையில்படித்தது)

படம் -#ஹம்பி #Hampi

#சிலசிந்தனைகள்_கேஎஸ்ஆர்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
22-11-2023


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...