Monday, November 6, 2023

#*முதல்வர் ஸ்டாலினுக்கு ஆக்கபூரமான நன்கு அறிந்த ஆலோசகர்கள் தேவை*…. #*இது வருத்தமான நிலை*

#*முதல்வர் ஸ்டாலினுக்கு ஆக்கபூரமான நன்கு அறிந்த ஆலோசகர்கள் தேவை*….
#*இது வருத்தமான நிலை*
————————————
கலைஞரின் திமுக காலத்தில் முரசொலி மாறன் போன்ற தீவிரஆலோசனையாளர்கள் அவர் அருகே நிறைந்திருந்தார்கள். அரசு திட்டங்கள் , நீதிமன்ற வழக்குகள் என பல சிக்கல்கள் போது  கலைஞருடன்  கலந்தாலோசித்து  பொருத்தமான ஒரு முடிவை எடுத்து தவறில்லாமல் அதை செய்து முடிப்பதில் அவருக்கு துணையாகவும் பலர் இருந்தார்கள். அத்தகைய ஆலோசனைக் கூட்டங்களின் போது நானும் அதில் பங்கு எடுத்திருக்கிறேன் என்கிற முறையில் இங்கு நான் இதைக் குறிப்பிட வேண்டியதாகிறது!

இன்றைய ஸ்டாலின் திமுகவில் அப்படியான ஆக்கபூரமான, நன்கு அறிந்த ஆலோசகர்கள் என்று யாரும் அவர் அருகே இல்லை என்பதுதான் பரிதாபம். கற்றோரை கற்றோரே காமுறுவர் என்பது போல அரசியலில் தெளிவான பாடங்களை உணரா ஸ்டாலினுக்கு யார் ஆலோசகராகச் செல்ல முடியும். யாரோ இயக்குகிறார்கள். ஒரு பரந்துபட்ட நாட்டின் நலன் அது எத்தகைய பூர்வீகங்களையும் தனிப்பட்ட பண்புகளையும் கொண்டது என்பதை சுயமாக அறிய அவேண்டும். இன்றைய முதல்வரின் சுய அடையளமற்ற தீவிர ஆலோசனையாளர்கள் இருப்பவர்களுக்கு தனி திறமைகள் ஏதும் இல்லாமல் திமுக கட்சி மூலம் முகவரி, அடையாளம், வெளிச்சம், பலன்கள் (இந்த ஆலோசனையாளர்கள்) பெற்றுக்கொண்டு தவறான ஆலோசனைகள் சொல்லி திமுகவை முட்டு சந்தில் வைக்கின்றனர். இவர்களால் திமுகவுக்கு பயன்கள் இல்லலை.

தலைவர் கலைஞரிடம் நல்ல விதமாக சொன்னால் எதையும் கேட்பார்.
நேற்று வரை திமுக-கலைஞரை முள்ளிவாய்க்கால் என பல விடயங்களில் திட்டியவர்கள், சுய சிந்தனையற்ற திறமையற்றவர்கள  இன்று இந்த ஆட்சியின் ஆலோசகர்கள்.

செந்தில் பாலாஜி முதல் இன்றைய சனதானம் வழக்கு , உச்ச நீதி மன்ற  பொன்முடி வழக்கு என இந்த நிமிட வரை திமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவை கவனித்தால் உண்மை புலப்படும். இதுவே ஏதார்தம். இதில் ஆரோக்கியமான சிந்தனையும் வேண்டும்.

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆக்கபூரமான, நன்கு அறிந்த ஆலோசகர்கள் தேவை….

இது எனது தனிப்பட்ட வருத்தங்கள்.

#DMK #திமுக #திமுகஆட்சி #Stalin 
#ஸ்டாலின் #கலைஞர் #kalaignar

#கேஎஸ்ஆர்போஸ்ட
#ksrpost
6-11-2023.


No comments:

Post a Comment

*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Ch...