Friday, November 10, 2023

#*சுயம் நித்தியமானது. நிர்மலமானது*.



————————————
*
தெளிவின்கண் ஆற்றும் 
      திறன்வழி ஆக்கம்
களித்திடும் வாழ்க்கையின் 
      காப்பு.
Vanathi Chandharasekaranவானதி_சந்திரசேகரன் 
(#குறள்_வெண்பா)

நான் என் வாழ்க்கையை பார்த்து சந்தோஷப் படுகிறேன்.

நான் வலிமையோடு இருப்பதை உணர்ந்து பிரமிக்கிறேன்.

நான் புன்னகையை அனுபவிப்பதில் பூரிப்படைகிறேன்

ஏனென்றால் என் இதயமும் மனசும்

உடைக்கப்பட்டது 
காய படுத்தப்பட்டது 
ஏமாற்றப்பட்டது
நொறுக்கப்பட்டது 
பழி வாங்கப் பட்டது

ஆனாலும் இவ் வலிகளைத்  தாண்டியும் தாங்கியும் 

என் மனசு எனக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது.

என் இதயம் எனக்காக துடித்துக் கொண்டிருக்கிறது.

எப்படி என்றால்…….
"யாராகவும் இல்லாத ஒருவரே மகிழ்ச்சியானவர்"

        மனோரீதியாக நெகிழ்வுத்தன்மையோடு இருங்கள்.

வலிமை உறுதியாகவும், வலிமையாகவும் இருப்பதில் இல்லை, மாறாக வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருப்பதில் உள்ளது.

வளைந்து கொடுக்கும் மரமே சூறாவளியில் விழாமல் நிற்கிறது.

துரிதமாக செயல்படும் மனதின் வலிமையைப் பெறுங்கள்.

வாழ்க்கை வினோதமானது, எதிர்பாராத விதமாக பல விஷயங்கள் நிகழ்கின்றன; வெறும் தடைபோடுதல் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது.

ஒருவருக்கு எல்லையற்ற நெகிழ்வுத் தன்மையும் ஒரே ஒரு இதயமும் தேவை. 

வாழ்க்கை ஒரு கத்திமுனை, மேலும் ஒருவர் அந்தப் பாதையில் நுணுக்கமான கவனத்துடனும் நெகிழ்வான நுண்ணறிவுடனும் நடக்கவேண்டும்.

வாழ்க்கை மிகவும் வளமை மிக்கது, மிக அதிகமான பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது.

நாம் அதை வெற்று இதயத்தோடு அணுகுகிறோம், நமக்கு நம் இதயத்தை எப்படி வாழ்வின் பெரும் வளங்களால் நிரப்புவது எனத் தெரியவில்லை.

நாம் மனதிற்குள்ளாக வளமற்று இருக்கிறோம்,  மேலும் வளங்கள் நமக்கு அளிக்கப்படும்போது, நாம் மறுக்கிறோம்.

அன்பு ஒரு பயங்கரமான விஷயம் ஆகும்.

அது முழு மகிழ்ச்சியைத் தரும்  ஒரு புரட்சியை மட்டுமே கொண்டு வருகிறது.

ஆகவே, நம்மில் வெகுசிலரே அன்பு காட்டும் தகுதி பெற்றவர்களாக இருக்கிறோம்.

ஆகவே சிலரே அன்பை விரும்புகிறீர்கள்.

நாம் அன்பை ஒரு வியாபாரப் பொருளாக்கி,  நம்முடைய வரையறையின்படி நேசிக்கிறோம்.

நாம் வியாபார மனப்பான்மையுடன் இருக்கிறோம், மேலும் அன்பு வியாபாரம் செய்யக்கூடிய ஒன்று அல்ல, ஒரு கொடுத்து வாங்கும் விவகாரம் அல்ல.

நம்முடைய அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்படுகின்ற அந்த ஒருவித  இருப்பு நிலை.
நாம் கிணற்றில் நீர் பிடிக்க சிறு சல்லடையை எடுத்துச் செல்கிறோம்.

ஆகவே வாழ்க்கை ஒரு போலிப் பகட்டான, பலகீனமான, அற்ப விவகாரமாக ஆகிவிடுகிறது.

எவ்வளவு வனப்பு மிகுந்த இடமாக இவ்வுலகம் இருக்கக் கூடும் - அங்கு பெருமளவில் அழகும், பெருமளவில் மகிமையும், அப்படியான ஒரு அழிவில்லாத மகிழ்விக்கும் தன்மையும் இருப்பதாலே....

நாம் வலிகளில் பிடிபட்டு இருக்கிறோம், அதிலிருந்து விடுபட்டு வெளிவர அக்கறை கொள்வதில்லை, யாராவது அதற்கான வழியைச் சுட்டிக் காட்டியபோதிலும் கூட....

எனக்குத் தெரியாது, ஆனால் ஒருவர் அன்பினால் பிரகாசமாக சுடர்விட்டுக் கொண்டுள்ளார்.

அங்கு தணிக்கமுடியாத தீப்பிழம்பு இருக்கிறது.

ஒருவரிடம் அது அதிக அளவில் இருக்கிறது மேலும் அவர் அதை ஒவ்வொருவருக்கும் கொடுக்க விரும்புகிறார், மேலும் ஒருவர் அவ்வாறு செய்கிறார்.

அது கரைபுரண்டு ஓடும் ஆற்றைப் போன்றது -  அது ஒவ்வொரு நகரத்தையும் கிராமத்தையும் வளமாக்குகிறது, நீர்வளம் பெறச் செய்கிறது.
அது மாசுப்படுகிறது, மனிதனின் அசிங்கங்கள் அதனுள் செல்கிறது, ஆனால் அந்த ஆற்றுத் தண்ணீர் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்கிறது, மேலும் விரைந்து நகர்ந்து செல்கிறது.

எதனாலும் அன்பை அழுக்காக்க முடியாது,   எல்லாமே அதில் கரைந்து போவதால் - நல்லவைகள் மற்றும் கெட்டவைகள், அசிங்கமானவை மற்றும் அழகானவை என எல்லாமே...

இது ஒன்று மட்டுமே அதுதான் அதனுடைய சுய  நித்தியமானதாகும்.
அதுவும் நிர்மலமானது.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
10-11-2021.

No comments:

Post a Comment