Thursday, October 31, 2019

#தமிழகம்_63 (இழந்தது அதிகம். எல்லைகள் வரையறுக்கப்பட்டு 62 ஆண்டுகள் ஆகிறது).





தமிழக எல்லைகள் அமைந்த மொழிவாரி மாநிலமாக இன்றைய தமிழகம் அமைக்கப்பட்டு இன்றோடு 62 ஆண்டுகள் ( நவம்பர் 1, 2018 ) முடிகிறது. நவம்பர் 1, 1956ம் ஆண்டு இன்றைய தமிழகம் அதன் எல்லைகளோடு பிரிக்கப்பட்டு அமைந்தது.







'தமிழகம் 50' விழாவை 12 ஆண்டுகளுக்கு முன் மயிலை பாரதிய வித்யா பவனில் விழா எடுத்தேன். 'தமிழ்நாடு 50' என்ற எனது நூலும் வெளியிடப்பட்டது.

அந்த விழாவில் வடக்கு எல்லை போராட்ட தியாகிகளான சிலம்புச் செல்வர் ம.பொ.சி, விநாயகம், மங்கலங்கிழார், கொ. மோ. ஜனார்த்தனம், சோமா.சுவாமிநாதன், ஆ. தாமோதரன், சி.வேங்கடசாமி, ஆ.வை. கிருஷ்ணமூர்த்தி, அம்மையப்பன், விசுவநாதன், அ. லூயிஸ், மு. வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் போன்றோரும், தெற்கெல்லை குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க பாடுபட்ட பி.எஸ்.மணி, மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், ஏ.அப்துல் ரசாக், தாணுலிங்க நாடார், டாக்டர். மத்தியாஸ், பொன்னப்ப நாடார், சிதம்பர நாதன் நாடார், போன்றவர்களையும், நெல்லை மாவட்ட செங்கோட்டையை தமிழகத்தோடு இணைய போரிட்ட செங்கோட்டை கரையாளர் அவர்களையும், தமிழ்நாடு என்று பெயர் வேண்டும் என்று உண்ணா நோன்பிருந்த தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் சிலரது படங்களையும், அவர்களின் தியாகத்தையும் இநத நிகழ்ச்சியில் நினைவு கூறப்பட்டது.

இதே நாளை ஆந்திரம் விசால ஆந்திரம் என்றும், கேரளம் நவகேரளம் என்றும், கர்நாடகா சம்யுக்த கர்நாடகம் என்றும், மகாராஷ்டிரம் சம்யுக்த மகாராஷ்டிரம் என்றும், குஜராத் மகா குஜராத் என்றும் கொண்டாடுகின்றன.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்த நாள் அமைந்தது குறித்து இதுவரை கவனிக்கப்படவில்லை. 2005ல் ஆனந்த விகடனில் இதுகுறித்து நான் எழுதிய கட்டுரையும் வெளியானபின்; நான் எடுத்த விழாவிற்கு பிறகே இதுகுறித்து தமிழக மக்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்த நிகழ்வினை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியும் கலந்து கொண்டும் வருகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலை பாலு தலைமையில் ‘மொழிவழி மாநிலம் அமைந்த நாள்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
தெற்கே கன்னியாகுமரி அருகே நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு பகுதிகளை இழந்து அந்த பகுதி கேரளத்திற்கு சென்றதால் நெய்யாறு அணையில் தமிழகத்தின் உரிமை கேள்விக்குறியாக உள்ளது. நெல்லை மாவட்டம் அடவிநயினார், உள்ளாறு, செண்பகவல்லி அணை பிரச்சனை, அழகர் அணை பிரச்சனை (ஸ்ரீவில்லிப்புத்தூர்), தேவிகுளம், பீர்மேடு இழந்ததால் முல்லை-பெரியாறு பிரச்சனை, கொங்கு மண்டலத்தில் பாலக்காட்டு பகுதியில் உள்ள தமிழர்களுடைய கிராமங்களின் இழப்பால் பம்பாறு, சிறுவாணி, ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – புன்னம்பழா போன்ற நதிதீரப் பிரச்சனைகள், கர்நாடகத்திடம் கொள்ளேகால் போன்ற தமிழர்கள் பகுதிகளை இழந்த்தால் காவிரி, ஒகேனக்கல், தென்பென்னையாறு பிரச்சனை, ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லுர் பகுதிகளை இழந்த்தால், பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரிப் பிச்சனைகள் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் அட்டப்பாடி பிரச்சனை, கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோர பிரச்சனையில் கேரள அரசு குடிமைப் பொருள் வழங்கும் அட்டை (ரேசன் அட்டை) வழங்கியது. இப்படியாக நாம் இழந்த பகுதிகளால் பல சிக்கல்களை கடந்த 62 ஆண்டுகால் சந்தித்து வருகிறோம். பலர் போராடவில்லை என்றால் திருத்தணி நம்மைவிட்டு ஆந்திரத்ற்கு செல்கிறோன். நமது எல்லைப் போராட்ட தலைவர்களையும், தியாகிகளையும் நினைவுகூற வேண்டிய நாள் இன்று.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய பல்வேறு போராட்டங்களில் துப்பாக்கிச் சூடும் நடந்ததுண்டு. அந்த தியாக வரலாறையெல்லாம் நாம் நினைவு கூறவேண்டும்.
1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதியில் மூன்று பேர் பலியாயினர்.
1. ஏ. தேவசகாயம், மங்காடு,
2. தி. செல்லையா, கீழ்க்குளம்,
3. கத்திக்குத்தில், பாகோடுவை சார்ந்த ஒருவரும் பலியானார்.
1950-ல் குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் வேகமெடுத்தன. இதற்கிடையில் தமிழக அமைச்சர் பக்தவச்சலமும், கொச்சி முதலமைச்சர் பாளையங்கோட்டையில் சந்தித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டபோது, குமரி மாவட்ட போராட்டக் குழுவினருக்கு அது உடன்பாடாக இல்லை. இதை எதிர்த்து 11/08/1954இல் குமரி மாவட்டத்தில் மறியல்களும், பொதுக் கூட்டங்களும் நடந்தது. அன்று காவல் துறையினர் 16 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்.
1. புதுக்கடை ஏ. அருளப்பன் நாடார்
2. கிள்ளியூர் எம். முத்துசாமி நாடார்
3.. தோட்டவாரம் எம். குமரன் நாடார்,
4. புதுக்கடை எம். செல்லப்ப பணிக்கர்,
5. தேங்காய்ப்பட்டணம் ஏ. பீர்முகமது,
6. தொடுவட்டி சி. பப்புப் பணிக்கர்,
7. நட்டாலம் எஸ். இராமையன் நாடார்,
8. மணலி, தோட்டவிளை ஏ. பொன்னப்பன் நாடார்
9. தோட்டவிளை, மணலி எம். பாலையன் நாடார்.
மேலும் இப்போராட்டத்தில் சங்கரன்நாடார் என்பவர் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்டார். வண்டி ஏற்றி ஒருவர் கொல்லப்பட்டார். பனை உச்சியிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார். மொத்தம் 36 பேர் பலியானதாக தகவல்கள். பலர் கை, கால்களை இழந்தனர். குமரி மாவட்டமே அப்போது பதட்டமாக இருந்தது.
குமரி மாவட்டம் இரணியல் காவல் ஆய்வாளர் திரு. வி.எம். ஜார்ஜின் உத்தரவின் பேரில் இயங்கிய சிறப்பு தனி காவல் படை, காட்டுமிரான்டித் தனமாக நடந்து கொண்டது.
ஒரே நாளில், மாங்கரை, கொட்டேத்தி, பாலப்பள்ளம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் தெருக்களில் சென்று கொண்டிருந்தவர்களில் 50-க்கும்  மேற்பட்டவர்கள் மீது லத்தியால் அடித்தனர். திக்கணம்கோட்டை வரும்போது பள்ளியை விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவர்களிடம் அச்சத்தை உருவாக்கியது.
வடிவேல் என்ற மாணவன் சவரிமுத்து என்பவரின் வீட்டில் புகுந்து ஒளிந்துகொண்டார். போலீஸ் படை வீட்டுகுள் புகுந்துவிட்டதை கண்ட மாணவன்  உயிருக்குப்பயந்து வெளியே சாடி ஓடிவிட்டான். அந்த பையன் யார் என்று சவரிமுத்துவிடம் போலீஸ் ஆய்வாளர் கேட்டார். தனக்குத் தெரியாது என்று சவரிமுத்துக் கூறியதால் தனி போலீஸ் படையினராலும், ஆய்வாளராலும் லத்தியால் அடித்து உதைக்கபட்டார் சவரிமுத்து. குறுக்கிட்ட அவன் சகோதரனும் தாயும் அதேபோன்று தாக்கப்பட்டனர். இச்செயலை கண்டித்த, திருமண வயதுக்கு வந்த, அவனது இளைய மகள் கன்னத்தில் அறையப்பட்டாள்.
அவளது காதில் கிடந்த அணிகலன் துண்டுதுண்டாக நொறுங்கியது. மூன்று பற்களும் ஆட்டம் கொடுத்தன. 10 தினங்களுக்கு முன் தனது 11-வது குழந்தையைப் பெற்றெடுத்த அவன் மனைவி இரக்கம் காட்டும்படி கெஞ்சினாள். அவள், பூட்ஸ் காலால் நெஞ்சில் உதைக்கப்பட்டாள். முடிவில், சவரிமுத்து போலீஸ்வேனில்  கொண்டுசெல்லப்பட்டார். கொட்டேத்திச் சந்தையில் போலீசார் புகுந்து கலகம் விளைவித்தனர். அன்றாட பொருட்களை வாங்கவும் விற்கவும் அங்கு  கூடியிருந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்களை துரத்தி அடித்தனர். பெண்கள் அலங்கோலமான முறையில் உயிருக்குப்பயந்து அங்குமிங்குமாக ஓடினர். இப்படியான ரணங்களும், அவலங்களும் அன்றைக்கு குமரி மண்ணில் நடந்தன.
கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையில் சரிபாதி என நாலரைத் தாலுகாக்கள் திருவிதாங்கூர் பகுதிகளில் தமிழகத்தோடு இணைந்தன. குமரி மாவட்ட எல்லைப் போராட்டத்தில் பி.எஸ்.மணி, நேசமணி போன்றோர் செய்த தியாகங்களை எல்லாம் மறக்கமுடியாது.
விடுதலைப் போரில் போராடினோம். விடுதலை பெற்றோம். தமிழர் மண்ணை மீட்க போராடிய போது, தமிழகத்தின் குரலை மத்திய அரசு புறந்தள்ளியது. நம்முடைய நியாயங்கள் மறுக்கப்பட்டன. நம்முடைய தமிழ் மண்ணை கேரளம், கர்நாடகம், ஆந்திரத்துடன் இழந்தோம். இறுதியாக கச்சத்தீவையும் இழந்தோம். இப்படியெல்லாம் மண்ணை இழந்து 62 ஆண்டுகள் கடந்துவிட்டன.
------------

“The Joint-Committee have done a very good job in redrawing the map of India, but my complaint is that they have not adopted the same principles in the settlement of the boundaries for the various states. Particularly I should like to say a few words about the Shenkottai Taluk. This is a Taluk which is proposed to be transferred from Travancore- Cochin to Madras. It was unfortunate that no member of the area was included in the Joint-Committee which settled the fate of the Tamil Taluks of Tranvancore - Cochin, and consequently our case was decided ex-parte.... In para 294 of their report, the SRC have said the ‘Shenkottai Taluk is partly an enclave in Thirunelveli District of Madras State and the percentage of Tamil speaking people in the Taluk is about 93. Physically and geographily it belongs to the Thirunelveli District in which it should now merge”.

: “It should be mentioned that, owing to my long connection with Bihar, I refrained form taking any part in investigating and deciding the territorial disputes between Bihar and West Bengal, and Bihar and Orissa – S.R.C Chairman, Hon. S. Fazl Ali (Sardar K.M. Panicker did not have this honesty).

“We are generally in agreement with this view, but in our opinion, the mere fact that a certain language group has a substantial majority in a certain area should not be the sole deciding factor”.

“We do not regard the linguistic principle as the sole criterion for territorial readjustments, particularly in the areas where the majority commanded by a language group is only marginal”. “The Devikulam and Peermede taluks stand on a some what different footing. These are hill areas which, for various economic and other reasons, are of great importance to the state of Travancore – Cochin”.

“The Shenkotta taluk is partly an enclave in Tirunelveli district of Madras State and the percentage of Tamil – speaking people in this taluk is about 93. Physically and geographically it belongs to Tirunelveli district in which it should now merge”

…“the four southern taluks, namely, Agasteeswaram, Thovalai, Kalkulam, Vilavancode, situated in what is known as Nanjil Nad, the percentage of Tamil speaking people is above 79. The wishes of the people of this area have been clearly expressed and there is no particular reason why these wishes should not be respected”. S.R.C cheated the tamilians 
On the basis of the percentage of the people speaking Tamil, the S.R. Commission recommended for the transfer of four taluks namely, Agasteeswaram, Thovalai, Kalkulam and Vilavancode to Tamil Nadu from the State of Travancore-Cochin. The same yard stick was used for the transfer of Shenkotta Taluk to Tamil Nadu. While dealing with Devikulam and Peermede taluks, even though the majority was Tamil – speaking people and the representatives to the State Assembly were Tamilians as in the case of the above indicated five taluks, the commission used a different yard stick and recommended to retain in Travancore – Cochin State. This cheating may be attributed to one reason, ie, one of the three members of the commission Sardar K.M. Panicker was a Malayalee. Even though Shenkotta was fully transferred by the commission the Joint – Committee appointed to fix the exact boundaries of the states, divided Shenkotta Taluk and allowed Travancore – Cochin State to retain a major portion. Thus the S.R. Commission and the Joint – Committee cheated the State of Tamil Nadu. This is according to the Travancore State Manual. The Historian of the Travancore - Cochin State says that the Raja of Poonjar was the descendant, of the Pandyan Kings and that he used to sign as Meenakshi Sundaram. It is in evidence that tax was being collected by the Raja of Poonjar through petty chieftains called Manadirs, and receipts had been used under the seal of “Madurai Meenakshi Thunai”. So this area had been under the sway of Naiks of Madurai under the Pandyan Kings and it had never been a territory of Travancore till 1889. The precursors of the modern KDHPC - Kannan Devan Hill Product Company - when they first entered into an agreement, executed the agreement with the Raja of Poonjar. That was in 1879. The Secretary of State for India, when he executed agreement on behalf of the Periyar, lake project. executed it in favour of the Maharaja of Travancore. So it is clear that during the period 1879-1889, this change took place. It is said that the Maharaja of Travancore got it on lease from the Raja of Poonjar. Whatever that may be, till 1935 there was absolutely no access from the Travancore area to this area of Devikulam and Peermedu. It is borne out by the Census Report of 1951, that this area is approachable from the Madurai District, through the passes of Thevaram. Kudalur, Kumili. Bodinayakanur, Kambam and Shivagiri. These are the passes through which trade flowed. That is admitted. As it formed part of Madras State, these people came and settled there and have now their habitation there”. (None objected to this statement of Mr. A. Nesamony, M.P., The Father of Kanyakumari District, either at the time of his speech in the Parliament or later outside).

#Tamilnadu
#தமிழ்நாடு_63

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#ksrpost
30-10-2019.

கதைசொல்லி 34

#கதைசொல்லியின் 34வது இதழ் பணி முடிவடைந்து அச்சுக்கு செல்கிறது.



(நவம்பர் 2019)
-----------------
*கி. ரா. பக்கங்கள்
*கே.எஸ்.ஆர். குறிப்புகள் 
*கலாப்ரியா: படைப்புலகக் கொண்டாட்டம்
*மருத்துவர் வெ. ஜீவானந்தம் 
கணவதி அம்மா 
*பா.செயப்பிரகாசம் 
நாங்க பாத்துக்கிடுதம் பாட்டி! 
*குரு.ஸ்ரீ.வேங்கடப்பிரகாஷ்
மழைநீர்
*ஆரண்யா அல்லி
தமிழர்கள் உழைப்பிலிருந்து 
அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறார்களா?  
*மணா 
*முகைதீன் அர்சத் 
இந்திய சுயராஜ்யத்தில் மருத்துவம் 

மொழிபெயர்ப்பு கதைகள்:

கோதாவரி அழைக்கிறது...
தெலுங்கு மூலம் : தாட்ல தேவதானம் ராஜு 
*தமிழில் : சாந்தா தத்
நியாயமும் அநியாயமும் 
பிரஞ்சு நாட்டுப்புறக் கதை 
*தமிழில் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் 

கவிதைகள்:

*விக்ரமாதித்யன் கவிதைகள்
*சர்மிலா வினோதினி கவிதை 
ஆதிச்சநல்லூர் அதிசயமே..  
*சாரதா க. சந்தோஷ்

சிறுகதைகள்:

சவம் நினைந்து உரைத்தல்
*நாஞ்சில் நாடன்
கரிசல்க்காட்டுக்காரன் படும்பாடு
*சூரங்குடி அ. முத்தானம்
கருப்பையாவின் வனம் 
*உதயசங்கர்
யாரோட கூடு..  
*அப்பணசாமி
சாவு மொதலு 
*கி. உக்கிரபாண்டி 
ஆரைக்கா வயசு 
*பிரபி
பழனி 
*பொம்மிடி அரண் குமார் 
முத்தண்ண கடை 
*என். கோகுல் சங்கர் 
தென்புலத்தார் 
*ராஜா சிவக்குமார்
வீடு பேறு 
*க. ஆனந்தன்
கண்ணாடியுள் விரியும் ஸ்தெப்பிவெளி 
*சாரதி 
உச்சிக்கருப்பு 
*ஸ்ரீதர் பாரதி 
கொய்யா 
*ராஜ்ஜா 
வெள்ளாமை 
*கோ.மகேந்திரன் 
பார்வைகள்  
*சுரபி விஜயா செல்வராஜ் 

சினிமா:

நூரெம்பெர்க் விசாரணை 
*நாச்சியார்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#ksrpost
30-10-2019.

மூத்த பத்திரிக்கையாளர் மணா #தமிழ்நாடு_63..... சிலரின் பர்வைக்கு...

எல்லை நிர்ணயிக்கப்பட்டு தமிழகம் உருவான நாள்!
*
1956 நவம்பர் 1 ஆம் தேதி.
தமிழகத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்ட தினம். இன்னொரு விதத்தில் சொன்னால் – தமிழகத்தின் வரைபடம் உருவான தினம்.

தமிழகத்தில் எல்லைகளை நிர்ணயிக்கப் பெரும்போராட்டமே நடந்த வரலாற்றை இன்றைய இளைஞர்கள் அறிவார்களா? 

எத்தனை தலைவர்கள் அதற்காகப் போராடியிருக்கிறார்கள்?

சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் தமிழ்நாட்டின் எல்லைகள் வேறு!
சிலவற்றை தமிழகத்துடன் இணைத்தோம். சிலவற்றை இழந்தோம்.



ஆந்திராவில் உள்ள சித்தூர், நெல்லூர், வடவேங்கடம் போன்றவற்றை இழந்தோம். கர்நாடகத்தில் உள்ள கொள்ளேகால், கோலார் தங்கவயல்,  பெங்களூரூவை இழந்தோம். 







கேரளத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, நெடுமங்காடு, நெய்யாற்றின்கரை, பாலக்காடு போன்றவற்றை இழந்தோம்.

நேசமணி போன்றவர்கள் பெரும் கிளர்ச்சியை முன்னெடுத்த பிறகே கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது.

கேரளமும், கர்நாடகமும், ஆந்திராவும் அவை உருவான தினத்தைக் கொண்டாடுகின்றன. 

ஆனால் தமிழர்கள்  அந்தத் தினத்தைக் கொண்டாட மறந்த நிலையில் 1981 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியன்று அதற்கென விழாவை எடுத்தவர் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.

அதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. ம.பொ.சிவஞானம், நாவலர் நெடுஞ்செழியன், அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி, போன்றவர்களுடன் அன்றைய விழாவில் கலந்து கொண்டவர், அதற்கென பல தரவுகளைச் சேகரித்து வைத்திருந்தவரான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

அதே சமயம் கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் தியாகி பி.எஸ்.மணியுடன் பங்கேற்றவர் அன்றைய சட்டமன்ற உறுப்பினரான பழ.நெடுமாறன்.

2006 ஆம் ஆண்டு சென்னையில் ‘தமிழ்நாடு-50’ என்கிற தலைப்பில் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னின்று நடத்தினார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். 

பொதிகை-பொருநை-கரிசல் அமைப்பு இந்த விழாவை முன்னின்று நடத்தியது. 

ம.தி.மு.க பொதுச்செயலாளரான வைகோ, பழ.நெடுமாறன், இரா.செழியன், வழக்கறிஞர் ஆர்.காந்தி போன்றவர்கள் கலந்துகொண்ட இந்த விழா நடந்தபோது ஆனந்தவிகடனில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய தமிழகம் 50 என்கிற கட்டுரை வெளிவந்தது.

புதிய பார்வை – இதற்காகத் தனிச்சிறப்பிதழே வெளியிட்டது.

தமிழகம் இழந்தது குறித்த வருத்தமும், சில பகுதிகள் இணைந்தது குறித்த மகிழ்ச்சியும் ஒருசேர வெளிப்படும் தினமாக அமைந்திருக்கிறது தமிழ்நாடு உருவான நாள்.

விருதுநகரில் சங்கரலிங்கனார் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த பிறகு, அறுபதுகளில் சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் பெயர் மாற்றம் குறித்து விவாதங்கள் எல்லாம் நடந்தபிறகு, 1967ல் அண்ணா தமிழக முதல்வர் ஆனபிறகு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றத்திற்கான ஆணை பிறப்பிக்கப் பட்டதெல்லாம் நடந்தாலும்,
தமிழக எல்லை தீர்மானிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட நாள் நவம்பர் 1.

நாளையோடு 63 ஆண்டுகள் நிறைவடைந்து அதற்கான விழாவும் எடுக்கப்படுகிற நேரத்தில், அதற்காகப் பாடுபட்டவர்களையும் விழா எடுத்து, புத்தகம் வெளியிட்டு நினைவூட்டியவர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது.


Shakespeare

#

_Invented In all of his work – the plays, the sonnets and the narrative poems – Shakespeare uses 17,677 words. Of those words, Shakespeare ‘invented’ an incredible 1,700 of them! We say invented, though in reality  many of these 1,700 words would likely have been in common parlance, just not written down prior to Shakespeare. 

  That said, it is #Shakespeare who is credited with bringing into usage the below list of words that we still use in our daily speech – some of them frequently.

accommodation

aerial

amazement

apostrophe

assassination

auspicious

baseless

bloody

bump

castigate

changeful

clangor

control (noun)

countless

courtship

critic

critical

dexterously

dishearten

dislocate

dwindle

eventful

exposure

fitful

frugal

generous

gloomy

gnarled

hurry

impartial

inauspicious

indistinguishable

invulnerable

lapse

laughable

lonely

majestic

misplaced

monumental

multitudinous

obscene

palmy

perusal

pious

premeditated

radiance

reliance

road

sanctimonious

seamy

sportive

submerge

suspicious

You

Zones

Along with these everyday words, Shakespeare also used a number of words in his plays that never quite caught on in the same way… words like ‘Armgaunt’, ‘Eftes’, ‘Impeticos’, ‘Insisture’, ‘Pajock’, ‘Pioned’ ‘Ribaudred’ and ‘Wappened’. We do have some ideas as to what these words may mean, though much is guesswork.

(Pic-Green Templeton College, University of Oxford)

பாஞ்சாலி சபதம்

"அம்பினொத்த விழியாள் - உங்கள்
ஐவருக்கும் உரியாள்

அவள் இகழ்ந்திடாளோ? - அந்த
ஆயன் பேசுவானோ?
கவலை தீர்த்து வைப்போம் - மேலே
களி நடக்கு"கென்றான்
இவளவான பின்னும் - இளைஞர்
ஏதும் வார்த்தை சொல்லார்
துவளும் நெஞ்சினாராய் - வதனம்
தொங்க வீற்றிருந்தார்..

- மகா கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்).

#தமிழ்நாடு_63 தியாக வரலாற்றில் நிலைபெற்றவர்களை அறியா சில பொதுவாழ்வில் சிலமனிதர்கள்......



————————————————

மொழிவாரி மாநிலம் அமைந்து 62ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, மாற்றுக் கட்சி தலைவர் ஒருவரும்,நாடாளுமன்ற பத்தாண்டுகள் மேலாக உறுப்பினராக உள்ள ஒருவரும் இதுகுறித்து கருத்து என்னிடம் தெரிவிக்கையில் "சங்கரலிங்கனார்" அவர்கள் இதற்காக பெரிதும் பாடுபட்டார், உயிரிழந்தார் என குறிப்பிட்டு நீங்கள் பதிவு செய்ய வில்லையே என் பதிவை பார்த்து கேட்டனர். எனக்கோ என்ன இப்படி புரிதல் இல்லா மனிதர்களாக?என பட்டது.

மொழிவாரி மாநிலமாக தமிழகம் பிரிக்கப்பட்டது நவம்பர் 1, 1956 ஆகும். நமது தமிழத்தின் சில பகுதிகளை பிரித்து அண்டை மாநிலங்களில் இழந்தோம்.

ஆனால் சென்னை மாகாணம்(மெட்ராஸ்)
என்பது தமிழ் நாடு என்று 1967ம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்காக தான் தியாகி சங்கரலிங்கனார் 77 நாட்கள் 
விருதுநகரில் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களில் தமிழகம் முன்னெடுத்து நடந்த போராட்டங்கள்.

இரண்டையும் இணைத்து ஓரே கால்கட்டம் என பார்ப்பது முரணானது.
நான் எனது கருத்தினை,’இழந்தது அதிகம்’என்ற தலைப்பில் குமரி மாவட்ட இணைப்பு போரட்டத்தில் புதுக்கடையில் 16 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள் அதில் 9பேர் பலியானர்கள்.சங்கரன்நாடார் என்பவர் கிணற்றில் வீசி கொல்லப்பட்டார். அதிகபட்சமாக 36 பேர் கொல்லப்பட்டனர் என்றும் சொல்லப்பட்டது.

இதனை ஏன் மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன் என்றால் அரசியல் மட்டுமின்றி வரலாற்றில் தியாகங்கள் மதிப்பிழந்து போகின்றன. மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டியவர்கள் தவறாக பேசுகின்ற வேளையில், வரலாறுகள் மறுக்கபடும் பட்சத்தில் பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண முடியும்?
***
மீள் பதிவு-1-11-2017
யாரும் கண்டுகொள்ளாத தமிழகம் 61
-------------------------------------
நவம்பர் 1ம் தேதி, இன்றைய தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் 1956 இல் உதயமானது.

நவம்பர் 1,கேரளா மக்கள் ‘நவகேரளம்’ என்று கொண்டாடுகிறார்கள்.
கர்நாடகம் ‘அகண்ட கர்நாடகம்’ ஆக ராஜ்ய உற்சவமாக நேற்று விழா கொண்டாடியது.அந்த மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் விழா எடுக்கப்பட்டுள்ளன. நடிகை காஞ்சனா போன்ற திரையுலக ஆளுமைகளும், இலக்கிய ஆளுமைகளும் கௌரவிக்கப்பட்டனர்.
விசால ஆந்திரம் என்று ஆந்திரம் கொண்டாடி உள்ளது. மகாராஷ்டிரம் ‘சம்யுக்த மகாராஷ்டிரம்’ என்று கொண்டாடியுள்ளது, குஜராத்தும் ‘மகா குஜராத்’ என்று கொண்டாடியுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் நேற்று கொண்டாட்டங்கள் இல்லை.

இது போன்ற நிகழ்ச்சிகளை 2006 ம் தமிழ்நாடு -50 ஆண்டிலிருந்து ஒரு விழாவாக எடுத்தேன் என்ற முறையிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் 2017ல்கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலை பாலு தலைமையில் ‘மொழிவழி மாநிலம் அமைந்த நாள்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நானும், நண்பர் ஆழிசெந்தில்நாதனும் கலந்து கொண்டிருந்தோம். மயிலை பாலு மட்டுமே தமிழகத்தில் ஒரு விழா எடுத்திருந்தார். அதுவும் மழையின் காரணமாக பலர் வர முடியாத நிலையில் அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.
தமிழ் மண்ணின் மீது நமக்குள்ள அக்கறையை பாருங்கள். நம் முன்னேற்ற பாதையில் தான் செல்கின்றோமா? மாலைகளை போடுகிறோம் பலருக்கு. மண்ணிருந்தால் தானே மாலைகள் போட முடியும். மண்ணை கொண்டாடுவது தான் முக்கியம். அடிப்படையும் கூட.
இப்படி வரலாற்று ரீதியான நிகழ்வுகளை கொண்டாடலாம், சில பகுதிகளை நாம் இழந்ததால் விழிப்புணர்வு நாளாகவும் ஏற்பாடு செய்யலாம். எதையும் சிந்திக்காமல், இந்த நிகழ்வை கவனிக்காமல் இருக்கிறோமே; எப்படி தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் செல்லும். எதிலும் போலி பாசாங்கு, பிம்ப அரசியலை நம்பினால் ஒன்றும் செய்ய முடியாது. காவிரியில் தண்ணீர் வராது, முல்லை பெரியாறில் தண்ணீர் வராது, நீராதாரங்கள் பாதிக்கப்படும், மீனவர் சுடப்படுவான், விவசாயிகளுக்கு புனர்ஜென்மம் கிடைப்பது சிரமம். நம்முடைய உரிமைகளையே நினைத்து பார்க்க நேரமில்லாத நமக்கு நாம் எப்படி நம்முடைய பிரச்சினைகள் தீரும். தமிழகம் என்ற மண் உதயமானது கூட நினைவில் இல்லாமல் வேறு விசயத்தை பேசிக்கொண்டு காலத்தை போக்கி கொண்டிருக்கிறோமே.
விதியே! விதியே!! தமிழ் சாதியே!!!

#தமிழ்நாடு_63

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#ksrpost
30-10-2019.

Tuesday, October 29, 2019

*#வரலாற்றில்_தவறுகள்_ஏற்பட்டு #விடக்கூடாது* *#மொழிவாரியாக_எல்லைகள் #வகுக்கப்பட்டு_தமிழ்நாடு_அமைந்த #நிகழ்வும், #தமிழ்நாடு_என்று_பெயர் #சூட்டப்பட்ட_நிகழ்வும்வெவ்வேறானது* *தமிழக அரசின் அரசாணையில் திருத்தம் வேண்டும்*



————————————————-
தமிழக அரசு நவம்பர் 1, தமிழ்நாடு நாள் என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சிதான். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு  இன்றைய எல்லலைகளோடு  அமைந்த தமிழகம் 1956 நவம்பர் 1 ஆம் தேதி சென்னை மாகாணமாக என்று அமைந்தது. மெட்ராஸ் ராஜ்தானி (madras presidency) துவக்கத்தில் அழைக்கப்பட்டது. ஆந்திரா, ஒரிசா எல்லை வரை தெற்கே திருநெல்வேலி மாவட்டம் வரை அமைந்தத்து அன்றைக்கு அமைந்திருந்தது மெட்ராஸ் ராஜ்தானி. மொழிவாரியாக மாநிலங்கள் அதன் எல்லைகளை வரையறுக்க அன்றைய பிரதமர் நேரு குழு ஒன்றை அமைத்தார். அதன் அறிக்கைகளை பெற்று கேரளத்தில் தேவிகுளம், பீர்மேடு போன்ற சில பகுதிகளும், இன்றைய கர்நாடகத்தில் கொல்லேகால் போன்ற சில பகுதிகளும், ஆந்திராவில் திருப்பதி, சித்தூர், நெல்லூர், காளஹஸ்தி போன்ற  பகுதிகளும் நாம் இழந்து இன்றைய எல்லைகள் அமைந்த தமிழகம் நவம்பர் 1 1956ல் அமைந்தது.

தியாகசீலர் ம.பொ.சி., மங்களக்கிழார், விநாயகம் போன்றோர் பலரின் போராட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம்.  தென்முனை குமரியை பி.எஸ்.மணி, நேசமணி, குஞ்சன் நாடார், ரசாக் போன்றோருடைய தியாகமும், மார்த்தாண்டம் புதுக்கடையில் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 11 தியாகிகளின் ரத்தத்தில் தமிழகத்தோடு இணைந்ததுதான் குமரி மாவட்டம்.  

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் தியாகி கரையாளருடைய மாசற்ற தியாகத்தால் செங்கோட்டை கிடைத்தது. ஆனால் நம்மோடு இணையவேண்டிய தென்மலை,நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை ஆகியப் பகுதிகளை தர மறுத்தனர். தமிழர்கள் வாழும் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்கு சென்றுவிட்டன. 1956 நவம்பர் 1ம் தேதி உதயமான கேரளம் "நவ கேரளம்" என்று கொண்டாடுகிறது. 

கர்நாடகம் "அகண்ட கர்நாடகம்" என்று விழா எடுக்கிறது. ஆந்திரம் "விசால ஆந்திரம்" என்று ராஜ்ய விழாவாக கொண்டாடுகின்றது. மகாராஷ்டிரம் "சம்யுக்த மகாராஷ்டிரம்", குஜராத் "மகா குஜராத்" என்று நவம்பர் 1ம் தேதியை மகிழ்ச்சிப் பெறுக்கோடு வரவேற்கின்றது.  ஆனால் நாம் இந்நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதா? அல்லது இழந்த பகுதிகளுக்காக வருந்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதா? என்று சொல்ல முடியவில்லை.  

இப்போது பிரச்சினைக்கும் விஷயத்திற்கும் வருகின்றேன். மாநில எல்லைகள் வரையறுக்கப்பட்டு இன்றைய தமிழகம் பலரின் தியாகத்தால் திருத்தணி, குமரி மாவட்டம் இணைந்தது . ஆனால் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட தியாகச் சுடர் சங்கரலிங்கனாரின் மகத்தான தியாக போராட்ட நிகழ்வு வேறு. இந்த  போராட்டங்கள் நடைபெற்றது 1960 களில் . பின்னர் அறிஞர் அண்ணா முதலமைச்சராகி பெயர் சூட்டியது வேறு. 

மொழிவாரியாக எல்லைகள் அமைந்து இன்றைய தமிழ்நாடு என 1956ல் அறிவிக்கப்பட்டது வேறு, அண்ணாவால் தமிழ்நாடு என்று 1967ல் பெயர் சூட்டிய நிகழ்வு வேறு. 

இருவேறு வரலாற்று தியாக நிகழ்வுகளை ஒரே நிகழ்வாக பார்ப்பது மாபெரும் வரலாற்றுப் பிழை. இந்த இரண்டு தியாகப் போராட்டங்களையும் தனித்தனியாக தனிக் களமாக வரையறுத்து வரலாற்றில் இந்த தியாக சீலர்களை குறித்து பதிவேற்ற வேண்டும். இந்த இரண்டு நிகழ்வுகளும் வெவ்வேறானது என்பதை உணர்த்தவே இந்த பதிவு. வரலாற்றில் தவறுகள் ஏற்பட்டு விடக்கூடாது.
தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-10-2019.
#KSRPostings
#KSRadhakrishnanPostings

Madras state-Andhra .



.........................................
Rajendra Prasad, the President's State visit to Madras on 15th of August 1956, by the time of which the fight over MADRAS had come to an end. 

This is the history of the brotherhood  fight over MADRAS, between the Tamils and the Telugus. (btw, the Telugu language, which is also a claasical one, had its original roots from the Classical  Tamil language itself )




About 70 years ago, the Madras City, as it was earlier known faced anxious moments when Telugu-speaking citizens demanded the city as theirs and wanted it to be the capital of their future state.

The demand in itself was not problematic, but the solutions proposed to solve the dispute between Tamil and Telugu-speaking citizens over the future

The city came close to being split into two along River Cooum – the northern part assigned to Andhra and the southern to Tamil Nadu. 

However, a combination of factors settled the issue in Tamil Nadu’s favour. This not only saved the traumatic partition, but also avoided two other equally vexatious possibilities: declare Madras as a plebiscite or a centrally administered province. 

As the city celebrates its past, it would be worthwhile to recall how the city survived its testing moments and retained its cosmopolitan nature.

Madras was a presidency town – the largest colonial city in south India with Telugus, Tamils, Kannadigas and Malayalees all living here. As the struggle for independence intensified, the formation of States on linguistic principles became imminent. Telugus were among the first to raise the demand for the need of a separate province.

As early as 1912, Telugu leaders and newspapers started to complain that the ‘progress of Dravidians overshadowed’ that of the Andhras (Telugu speaking) and the creation of a separate province would ‘cure this handicap.’  However, they did not step up the demand immediately, but wanted to do so only after independence. Until then, they decided to keep the issue alive.

In the initial years, the status of #Madrascity was not a central issue. The situation changed in the 1940s. An intriguing tale in November, 1941 brought the city of Madras to centre stage. 

T. Prakasam, the Congress leader, who later became the first Chief Minister of Andhra told the Mahasabha conference in Vishakapatanam that the cabinet of the Madras Province had met a few months ago to discuss the formation of Andhra province. 

They invited Lord Erskine, the Governor, to attend the meeting as a matter of goodwill.

Erskine suggested that both provinces — Andhra and Madras — be located in the city. Everyone including the Tamil Ministers agreed to this idea, #Prakasam claimed.  Prakasam then alleged that an ‘evil genius in the cabinet’ poisoned Erskine’s mind later and made him write a letter to the Secretary of State against the move. 

Prakasam refused to divulge the name of the ‘evil genius’ but told the gathering that Erskine cautioned the British government that ‘blood would flow in the streets of Madras’ if Andhra was formed.  

Remarks by O.P.#RamaswamyReddiar, the premier of Madras province in September, 1947 complicated matters. He told a group of press persons that if Andhra claimed Madras then Tamils would claim Nellore, Chittor and Tirupati in return. Positions hardened and Telugu leaders demanded that the government settle the future of the city first.

For their part, Tamil writers and leaders aggressively opposed Andhra’s claim over Madras. Notable writer Kalki Krishnamuthi remarked that the Tamils and Telugus had turned ‘strange brothers’ and the city had greater contact with Tamilians than with Telugus.  

Rajaji dismissed the claim over Madras as untenable and citied population figures in support.

A few readers writing to The Hindu said that the politicians must be kept out of this issue and the government should hold a referendum. This did not happen.

A solution was in sight in 1949. The Indian National Congress set a three-member committee comprising Nehru, Patel and Pattabi Sitaramiah to look into linguistic provinces. The committee report — known as the JVP report — recommended the formation of Andhra province but concluded that Madras would not be part of it. 

With Nehru and Patel involved, many thought the JVP report would be accepted. On the contrary, the fight over Madras escalated.

While the JVP’s position pleased Tamil leaders, the Telugus agitated. Sitaramiah, who was a signatory to the report tried to clarify that though the JVP report said Madras could not be part of Andhra, it did not specify that it should be part of the Tamil province. The city should be a centrally administered area, he demanded.

Matters came to a flash point in 1952 when #PottiSreeramulu, a Gandhian who was fasting for an Andhra province and the inclusion of Madras, died.  

#Sreeramulu, was born in Madras. He quit his well-paying job in the Railways in 1930 to join Gandhi in his Sabarmati ashram. Later, after independence, he took up social work. On October 19, 1952, Sreeramulu decided to indefinitely fast in support of the Andhra issue. 

His fast neither altered the position of the national Congress or the Madras government.  After 51 days, Sreeramulu died.

His death sparked violent protests across Telugu-speaking areas of the Presidency. Nehru appealed for calm and assured people that the issue would be settled soon. Following this, in January 1953, the government appointed Justice Wanchoo to look into the formation of the Andhra province. 

The Wanchoo committee identified boundaries of the new State, but concluded that Madras could be the temporary capital for three to five years. If that was not possible, until a permanent city was found, Guntur or Vishakapttanam could the temporary capital, the committee suggested.

This was not acceptable to Rajaji and other Tamil leaders.  Finally, in March 1953, Nehru announced that Madras would not be the temporary capital. In October 1953, the Andhra province was formed with Kurnool as its temporary capital.

V. Kaleeswara Ro, the vice-president of the Andhra Pradesh Congress committee was practical. He told other Telugu leaders that they should now work ‘increasingly with the Karnataka brethren for the disintegration of Hyderabad State’ and combine the Telugu-speaking areas with #Andhra. 

This way, Andhra could get the twin city of Hyderabad and Secunderabad as its permanent capital. 

He was right. After two years, a larger Andhra Pradesh with Hyderabad as its capital emerged.  Madras remained with #TamilNadu.
President's visit to the City of Madras, after the declaration that it belongs only to the State of Madras(here the word Madras represents Tamilnadu, the name of which was later fought for and made possible by the serious efforts of Arignar Anna.
-Sheena John Peter

கிழக்குத் தொடர்ச்சி மலைகள் - சில குறிப்புகள் | EasternGhats



_______________________________________
கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடுயிலிருந்து தொடங்கி, நெல்லைமாவட்டம் சாயமலை, காரிசாத்தான், கழுகுமலை, கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, சித்தேரி மலை, பழமலை, ஏற்காடு,வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் சவ்வாது மலை,  தெற்கு கர்நாடகாவின் சாமராஜாநகர் மாவட்டத்தில் கொல்லேகால் தாலுகாவில் மாதேஸ்வரன் மலை, வெளிகொண்டா மலை, .நல்லமல்லா மலை, திருமலை, கொண்டாபள்ளி மலை, பாப்பி மலை, மதுரவாடா முகடு, மாலியா மலைத்தொடர், மதுகுலகொண்டா மலைத்தொடர், சந்திரகிரி பொட்டங்கி மலைத் தொகுதி, கார்சட் மலைகள்  ஆகியவை இம்மலைத்தொடரில் உள்ள மலைகளாகும்.

கிழக்குத்தொடர்ச்சி மலைகள் காலத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைகளைவிட பழமையானவை. மேற்குத் தொடர்ச்சிமலைகளைப் போல அல்லாமல் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் துண்டுதுண்டாக இணைப்பில்லாதது போல் காணப்பட  வங்காளவிரிகுடாவில் கலக்கும் கிழக்குநோக்கிப் பாயும் , மகாநதி, துங்கபத்திரை, கோதாவரி,  கிருஷ்ணா, காவேரி ஆகிய நதிகள் காலங்காலமாக ஏற்படுத்தும் மணல் அரிப்பு முக்கிய காரணம்.

இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ள மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் என்றழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடர் வடக்கில் மேற்கு வங்காளத்தில் தொடங்கி ஒடிசா மற்றும் ஆந்திரா வழியாக தமிழ்நாடு மற்றும் சிறுபகுதி கர்நாடகம் வரை பரவியுள்ளது. இம்மலைத்தொடரின் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டதற்கான காரணம், தீபகற்ப இந்தியாவின் நான்கு முக்கிய ஆறுகளான கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவேரி ஆகிய ஆறுகள் இம்மலைத் தொடரின் ஊடாகப் பாய்ந்து ஏற்படுத்திய மண் அரிப்பு முக்கிய காரணமாகும். ஆனாலும் இம்மலைகளின் அடித்திட்டுகள் ஒன்றுக்கொண்டு இணைந்தே உள்ளன.

கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையில் கடற்கரைச் சமவெளி காணப்படுகிறது. இம்மலைத்தொடரின் நிலவியல் வரலாறு பண்டைய ரோடினிய கண்டம் உடைந்து கோண்டுவானா கண்டம் உருவானதாக நம்பப்படும் சிக்கல் நிறைந்த வரலாறு ஆகும். 

சார்னோகைட் பாறைகள், கருங்கல் பாறைகள், உருமாறிய தகட்டுப்பாறையான கோண்டாலைட் மற்றும் படிகப்பாறைகள் கலந்து உருவான மலைத்தொடராக கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் காணப்படுகிறது. இம்மலைத்தொடர் நெடுகிலும் பாறை அமுக்கமும் பாறை வெடிப்புகளும் விரவி உள்ளது. மேலும் இம்மலைத்தொடர் முழுவதும் சுண்ணாம்புக்கல், பாக்சைட் மற்றும் இரும்பு தாது போன்ற கனிமங்கள் காணப்படுகின்றன.

புவியின் மேலோட்டு பரிணாம வளர்ச்சியில் பண்டைய கால பாறைக் குழுக்களுக்கிடையே உள்ள இடைவெளியை பிரதிபலிக்கும் முக்கியத்துவம் கொண்டதாக திருப்பதி மலைக் குன்றுகள் விளங்குகின்றன. இவ்வுண்மையை பாறை அடுக்கு படிவாய்வுகள் தெளிவாக்குகின்றன. ஆந்திரப்பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி திருமலா சாலையின் இயற்கையான செங்குத்து சரிவுகளில் இத்தகைய பாறைக்குழு இடைவெளி காணப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது போலவே தொடர்புகளற்ற கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலும் பல்வேறு மலைக்குன்றுகள் வெவ்வேறு பெயர்களுடன் காணப்படுகின்றன.இதன் உயரமான சிகரம் 1690 மீ உயரமுடைய ஜிந்தகடா மலையாகும். இது ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. ஆந்திராவின் நல்ல மலை, ஆனந்தகிரி ஆகியவை இம்மலைத்தொடரைச் சார்ந்தவை. தமிழகத்தின் கொல்லி மலை, பச்சை மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, சவ்வாது மலை ஆகியவை இம்மலைத்தொடரைச் சார்ந்தவை. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் நீலகிரி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடருடன் இணைகிறது.

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தெற்கு திசையில் உயரம் குறைவான பல மலைக் குன்றுகள் அமைந்துள்ளன. இவற்றில் சிறுமலை, கரந்தை மலைக் குன்றுகள் இரண்டும் குறிப்பிடத் தகுந்தவையாகும். திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோமீட்டர் துரத்தில் உள்ள நத்தம் சாலையில் சிறுமலை என்ற மலைவாழிடம் உள்ளது.

கொல்லிமலை
காவிரி ஆற்றின் வடக்கில் உயரமான கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, சித்தேரி மலை, பழமலை மற்றும் வடக்கு தமிழ்நாட்டில் மேட்டூர் மலைக்குன்றுகள் போன்றவை கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் காணப்படுகின்றன. உயர்ந்த இம்மலைகளின் தட்பவெப்பநிலை பொதுவாக குளிர்ச்சியாகவும் சுற்றியுள்ள சமவெளிகளைக் காட்டிலும் ஈரப்பதம் மிகுந்தும் காணப்படுகின்றன. பெரும்பாலும் இங்கு வறண்ட காட்டுப் ப்குதிகளும் காப்பித் தோட்டங்களும் காணப்படுகின்றன.

சேர்வராயன் மலை

சேர்வராயன் மலைப் பகுதி தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்திற்கு அருகில் காணப்படும் மலைத்தொடர்ச்சியாகும். இது மலைத்தொடர்ச்சியிலிருந்து விலகி தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இம் மலையில் ஏற்காடு என்ற மலைவாழிடம் உள்ளது. இம்மலையில் உள்ள பீடபூமிகள் கடல் மட்டத்திலிருந்து 4000அடி முதல் 5000 அடி உயரத்தில் அமைந்துள்ளன.

மதேஸ்வரன் மலை
தெற்கு கர்நாடகாவின் சாமராஜாநகர் மாவட்டத்தில் கொல்லேகால் தாலுகாவில் மாதேஸ்வரன் மலை அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இம்மலை மைசூரில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவிலும், பெங்களூரில் இருந்து சுமார் 210 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்திற்கு 3000 அடி மேலே அமைந்துள்ள இம்மலை ஒரு புன்னிய தலமாக விளங்குகிறது.

சவ்வாது மலை
வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் சவ்வாது மலைத்தொடர் 262 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. தென்பெண்ணை ஆறு மற்றும் பாலாறு ஆறுகளுக்கிடையில் உள்ள இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும். கிழக்குத்தொடர்ச்சி மலையில் ஒன்றான ஜவ்வாது மலை சுமார் 80 கி.மீ. நீளம் 32 கி.மீ. அகலத்துடன் வடகிழக்கு-தென்மேற்காக தமிழ்நாட்டின் வடபகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் வட்டத்தில் ஆரம்பித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் வரை பரவியுள்ளது. 

இம்மலை 150 ச.கி.மீ. பரப்பளவில் கிழக்கே போளூர், மேற்கே அமிர்தி, வடக்கே ஆலங்காயம் ஒன்றியங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2315 மீ முதல் 3000 மீ. வரை உயரம் கொண்டுள்ளது. 20.7°c முதல் 36.6°c வரை சீதோஷ்ணநிலை நிலவும் பகுதியாக உள்ளது. இம்மலையின் சராசரி மழையளவு 1000.85 மி.மீ.ஆகும். இம்மழையின் பெரும்பகுதி தென்மேற்கு (480 மி.மீ) மற்றும் வடகிழக்கு (429 மி.மீ.) பருவமழையின் மூலமமாக கிடைக்கிறது. 

செய்யாறு, ஆரணியாறு, கமண்டலாநதி, மிருகண்ட நதி போன்ற நதிகள் இம்மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. இம்மலையின் மேல் பீமன் நீர்வீழ்ச்சியும், மலையின் வடபகுதியில் அமிர்தி நீர்வீழ்ச்சியும் மேற்குப் பகுதியில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியும் சிறு சுற்றுலா மையங்களாக விளங்கிவருகின்றன. அமிர்தியில் உள்ள வனவிலங்கு பூங்கா சிறுவர்களுக்கு ஏற்ற சுற்றுலா மையம் ஆகும். ஜவ்வாது மலையின் ஒரு பகுதியான ஏலகிரி மலை வேலுர் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது.

கல்வராயன் மலை.

சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டருக்கு அப்பால் கல்வராயன் மலைத்தொடர் ஆரம்பமாகிறது. கள்வர் இனத்தவரின் பூர்விக வாழ்விடம் என்பதால் இம்மலை இப்பெயர் பெற்றது. இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் வட்டத்திலும் மேற்குப் பகுதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திலும் வடக்கு திசையில் ஒரு சிறு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்த்தில் செங்கம் வட்டத்திலும் அமைந்துள்ளது. 

தென்மேற்கில் சேலம் மாவட்டத்தை உள்ளடக்கி மேற்கு தொடர்ச்சி மலையை தொட்டுக் கொண்டுள்ளவாறு கல்வராயன் மலை அமைந்துள்ளது. வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் இம்மலையின் எல்லைகளாக உள்ளன. கல்வராயன் மலை.இந்த மலைத்தொடர் அதனைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகளுக்கு வடமேற்கு பருவகாற்றின் மூலமாக அதிக மழைபொழிவை கொண்டு வருகிறது. கோமுக்கி ஆறு இம்மலையில் இருந்து உற்பத்தியாகி காவிரி ஆற்றுக்கு இணையாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

வெளிகொண்டா மலை

ஆந்திர பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் பாலாற்றுக்கு வடக்கே உள்ள வெளிகொண்டா மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது.

நல்லமல்லா மலை

கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நல்லமல்லா மலை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்நூல், மகபூப்நகர், குண்டூர்,பிரகாசம் மற்றும் கடப்பா மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது. கிருஷ்ணா மற்றும் பென்னாறு ஆறுகளுக்கிடையே கோரமண்டல் கடற்கரைக்கு இணையாக 430 கிலேமீட்டர் தொலைவில் கிட்டத்தட்ட வடக்கு தெற்கு சீரமைப்புடன் இம்மலை காணப்படுகிறது. 

இம்மலையின் வடக்கு எல்லையில் தட்டையான பல்நாடு வடிநிலமும் தெற்கில் திருப்பதி மலையும் எல்லைகளாக உள்ளன. நல்லமல்லா மலையின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து சுமார் 520 மீட்டர்கள் ஆகும். இந்த உயரம் பைரானி கொண்டாவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர்களாகவும் குண்டலா பிரம்மேஸ்வராவில் சுமார் 1048 மீட்டர்களாகவும் உயர்ந்துள்ளது.

திருமலை

திருமலை கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 10.33 சதுர மைல்கள் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலைச் சிகரமாகும். கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சேசாலம் – வெளிகொண்டா மலைத் தொடரில் அமைந்துள்ள இம் மலையைச் சுற்றிலும் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி,அஞ்சனாத்திரி, விருசபத்திரி, நாராயணாத்திரி மற்றும் வெங்கடாத்திரி என ஏழு சிகரங்கள் உள்ளன. புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாசல பெருமாள் திருக்கோயில் ஏழாவது சிகரமான வெங்கடாத்திரி மலையில் இடம்பெற்றுள்ளது.

கொண்டாபள்ளி மலை

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மற்றும் கம்மம் மாவட்டங்களில் அமைந்துள்ளது. கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளுக்கு இடையே தாழ்வான மலைத்தொடராக காணப்படுகிறது.

பாப்பி மலை

ஆந்திர பிரதேசத்தில் உள்ள கம்மம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இம்ம்லைத்தொடர் பரவிக் காணப்படுகிறது. இம்மலை பாப்பி கொண்டாலு என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு தொடர்ச்சி மலையில் பார்வையாளர்களைக் கவரும் முக்கியமான சுற்றுலா மையமாகவும் பாப்பி மலை விளங்குகிறது.

மதுரவாடா முகடு

கிழக்குத்தொடர்ச்சி மலையில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு வடக்கில் மதுரவாடா முகடு உள்ளது. நீண்ட ஒப்பீட்டளவில் புவியின் ஆக்கபூர்வ அமைப்பியல் தொடர்பான குறுகிய புவி ஓடு பகுதியால் இம்முகடு உருவாகியுள்ளது. இப்புவி ஓடு கோண்டாலைட் அடுக்குத் தொடர் மற்றும் பளிங்குப் பாறைகளாள் ஆனது.

மாலியா மலைத்தொடர்

இந்த மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாக 900 – 1200 மீட்டர் உயர அளவாக இம்மலைத்தொடர் விரவியுள்ளது, இருப்பினும் இம்மலைத் தொடரின் உச்சி சில இடங்களில் உயர்ந்தும் காணப்படுகிறது. இம்மலைத்தொடரில் உள்ள மகேந்திரகிரி சிகரம் அதிகபட்சமாக 1501 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது.

மதுகுலகொண்டா மலைத்தொடர்

கிழக்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியில் இம்மலைத்தொடர் அமைந்துள்ளது. இத்தொடர் மாலியா மலைத்தொடரைக் காட்டிலும் உயரமாக உள்ளது. பொதுவாக 1100 முதல் 1400 மீட்டர் உயர எல்லையில் இம்மலைத்தொடர் விரவியுள்ளது. ஆர்ம கோண்டா (1680மீ), காலிகோண்டா(1643மீ), சிங்கராம்குட்டா(1620மீ) முதலிய மலைச்சிகரங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முக்கியமான மலைச் சிகரங்களாகும்.

சந்திரகிரி பொட்டங்கி மலைத் தொகுதி

ஒடிசா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள கோராபுட் மாவட்டத்தில் அமைந்துள்ள உயர்ந்த மலைச்சிகரமான தியோமாலி(1672மீ) சந்திரகிரி பொட்டங்கி மலைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இம்மலைத் தொகுதி ஒடிசா மாநிலத்தின் பரப்பளவில் நான்கில் மூன்று பகுதியை உள்ளடக்கியுள்ளது. இந்தியத் தீபகற்பத்தின் பகுதியாக உள்ள இம்மலைத் தொகுதி பண்டைய நில மக்களின் நிலப்பகுதியான கோண்ட்வானா நிலப்பகுதியில் அங்கம் வகித்ததாக் புவியியல் ரீதியாக கருதப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் முக்கிய ஆறுகளும் அவற்றின் கிளைஆறுகளும் நிலப்பகுதிகளில் பாய்ந்து ஆழமான மற்றும் குறுகிய பள்ளத்தாக்குகளை உண்டாக்குகின்றன.

கார்சட் மலைகள்

கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரில் மலைகள் மற்றும் குன்றுகளால் ஆக்கப்பட்டது கார்சட் மலைப்பகுதியாகும். கிழக்கில் இம்மலைப்பகுதி திடுக்கிடும் செங்குத்தாய் உயர்ந்தும் மேற்கில் மெல்ல மெல்ல வடமேற்கு மயூர்பன்சிலிருந்து தென்மேற்கு மல்கான்கிரி வரை சரிந்து காணப்படுகிறது. ஒடிசா மாநிலத்திலுள்ள உயர் மேட்டு நிலப் பகுதிகள் கார்சட் மலைகள் என்றழைக்கப்படுகின்றன. இம்மலைப் பகுதியில் இரண்டு ஆற்றுச் சம்வெளிகளை இணைக்கும் பல உயர் மேட்டுநிலப் பகுதிக்ள் காணப்படுகின்றன். கிழக்கு தொடர்ச்சி மலையானது, பரந்த மற்றும் குறுகிய நதி பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ள சமவெளிகளல் பல இடங்களில் தடுக்கப்படுறது. 

கார்சட் மலைப் பகுதியின் சராசரி உயரம் சராசரி 56கடல் மட்டத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரமாக உள்ளது. கோதாவரிக்கு வடக்கில் கிழக்கு தொடர்ச்சி மலையின் உயரம் அதிகமாகி ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு எல்லையாக அமைகிறது. கிழக்கு தொடர்ச்சி மலையின் வடகிழக்குப் பகுதியில் வெகுதொலைவுக்கு நீட்சி பெற்றிருக்கும் பாறைத்தொகுதி சிமிலிபால் பாறைத் தொகுதி எனக் கருதப்படுகிறது.

இந்தமலைத்தொடர்களில் விவசாயமும், இயற்கையாக வளர்கின்ற அரிய மூலிகைகளும், மரங்கள், காய்கறிகள், பழங்கள், நறுமணப்பொருட்கள் ஆகியவை இங்கு வாழும் மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கின்றது. மழைக்காலங்களில் பசுமையாகவும், கோடைகாலங்களில் வறட்சியாகவும் தென்படும். இங்கு வசிக்கும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கைமுறைகளும், பழக்கவழக்கங்களும்  தொன்மைவாய்ந்தவை. மத்திய அரசு தொடர்ந்து கிழக்கு தொடர்ச்சிமலைகளின் பாதுகாப்பிலும், வன அடர்த்தியை கண்காணிப்பதிலும் அக்கறை காட்டாமல் இருக்கின்றது. 

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, கரந்தமலை, கடவூர் மலைப் பகுதிகளில் 8,200ஏக்கர் நிலங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வாழும் விவசாயிகளுக்கும் பழங்குடிகளுக்கும் இந்த மலைத்தொடர்களில் விளைகின்ற பொருட்கள் தான் வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்கின்றது. மேற்குத் தொடர்ச்சியை விட உயரத்தில் குறைவாக இருந்தாலும். இம்மலைத்தொடரின் அடிப்பாகம் பூமியின் அடிஆழம்வரை பரவியுள்ளதாகவும் செய்திகள் உள்ளன. கிழக்குத் தொடர்ச்சிமலை தொடங்கும் வல்லநாடு மலையின் அடித்திட்டு தூத்துக்குடி துறைமுகம அருகே அமைந்துள்ள பாறைவரைக்கும் நீள்கிறது. ஆங்கிலேயர்காலத்தில் துறைமுகப்பகுதிகளை ஆழப்படுத்தும் பணியின் போது இப்பாறைகளுக்கு வெடிகள் வைத்தும் தகர்க்கமுடியவில்லை. அவ்வளவு சக்திவாய்ந்த பழமையான மலைத்தொடராக கிழக்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-10-2019.

 #KsRadhakrishnan
 #KSR_Posts  
#EasternGhats
#கிழக்குத்_தொடர்ச்சி_மலைகள்

Monday, October 28, 2019

அமர கவி பாரதி (பாஞ்சாலி சபதம்)

ஓரம் செய்திடாமே - தருமத்
துறுதி கொன்றிடாமே
சோரம் செய்திடாமே - பிறரைத்
துயரில் வீழ்த்திடாமே
ஊரையாளும் முறைமை - உலகில்
ஓர்புறத்துமில்லை
சாரமற்ற வார்த்தை! - மேலே
சரிதை சொல்லுகின்றோம்..
•••••••••••••••

"பொய்யுரைத்து வாழ்வார் - இதழில்
புகழுரைத்து வாழ்வார்
வையமீதில் உள்ளார் - அவர்தம்
வழியில் வந்ததுண்டோ?
செய்யொணாத செய்வார் - தம்மைச்
சீருறுத்த நாடி
ஐய நீயெழுந்தால் - அறிஞர் 
அவலமெய்திடாரோ?"...

-அமர கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)


ஆட்டுச்சந்தை- எட்டயபுரம் :



.............................................
தென் மாவட்டங்களில் , ஆட்டு சந்தைகளில் மிகவும் முக்கியமான ஆட்டுசந்தை கோவில்பட்டி அருகேயுள்ள  எட்டயபுரம் ஆட்டுசந்தையில் தரமான ஆடுகள் கிடைப்பது மட்டுமின்றி, இங்குஆடுகள் விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் வியாபாரிகளும், பொது மக்களும் அதிகளவு வருவது இயற்கை, அது மட்டுமின்றி இந்த பகுதியில் நல்ல விவசாயம் நடைபெறுவதால் ஆடுகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும் என்பதால் ஆடு வாங்குபவர்கள் எட்டயபுரம் சந்தையை நோக்கி வருவது வாடிக்கை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் எட்டயபுரம் சந்தையில் ஆடு வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வழக்கமாக வாரந்தோறும் சனிக்கிழமை தான் #எட்டயபுரம் ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி நாளை வருவதால் ஒரு நாள் முன்பாக இன்று காலையில் ஆட்டுசந்தை துவக்கியது. வழக்கமான சந்தையுடன் தீபாவளி பண்டிகையும் சேர்ந்து விட்டதால் மற்ற வாரங்களை இன்று அதிகாலையில் இருந்தே சந்தை களைகட்ட தொடங்கி விட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், கடம்பூர், கயத்தார், மற்றும் திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களின் பகுதிகளில் இருந்து ஆடுகள்; வாகனங்களில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. மழையின், வறட்சி போன்ற காரணங்களினால் கடந்த ஆண்டு தீபவாளி வியாபாரத்தினை விட சுமார் என்றாலும் கூட வியாபாரம் பரவ இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டை விட ஆடுகளுக்கு நல்ல விலையும் கிடைத்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.10 கிலோ வரையுள்ள ஆடுகள் கடந்த ஆண்டு ரூ.4000 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது. இன்று ரூ.5000  வரை ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள், ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாளை தீபாவளி பண்டிகை என்பதால் மதுரை மாவட்டம் திருமங்கலம், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்,கயத்தார் போன்ற பகுதிகளில் #ஆட்டுசந்தைகள் நடைபெற்ற போதிலும் எட்டயபுரம் சந்தை குறிப்பிட தக்கது.
வேம்பார் ஆடுகள் இங்கு கிடைக்கும் . கிடை ஆடுகள்இங்குகிடைக்கும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-10-2019.

 #ஆட்டுசந்தைகள்

#ksrposting

தமிழ்நாடு 63

தமிழ்நாடு 63 (தமிழக மக்களின் பார்வைக்கு)
===========================

எதிர்வருகின்ற நவம்பர் 1ம் தேதி இன்றைய தமிழகம் நிலப்பரப்பு அமைந்து 63 ஆண்டுகள்.

ஆந்திராவிடம் சித்தூர், நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடகத்திடம், கொள்ளேகால், மாண்டியாவில் சில பகுதிகள், கோலார் 
தங்கவயல், வெங்காளூர் என்று அழைக்கப்பட்ட பெங்களூரையும் இழந்தோம். கேரளத்திடம் பாலக்காடு 
பகுதியில் சில தமிழக கிராமங்கள், தேவிகுளம், பீர்மேடு பகுதி, தென்முனையில் நெடுமாங்காடு, 
நெய்யாற்றங்கரை ஆகிய பகுதிகளை இழந்தோம். இதனால் குமரியில் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் 
அடவி நயனாறு, செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணை திட்டம், நாடறிந்த முல்லைப் 
பெரியாறு பிரச்சினை, கொங்கு மண்டலத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு, சிறுவாணி, பம்பாறு, 
பாண்டியாறு-புன்னம்புழா என சில நதிநீர் பிரச்சினைகள் நமக்கு சிக்கலாகிவிட்டது. அதைப்போன்று 
கர்நாடகத்திடம் காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் பிரச்சினையும், ஆந்திரத்திடம் பாலாறு, 
பொன்னியாறு, பழவேற்காடு ஏரி என நீர் ஆதாரப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நாம் இழந்த 
மண்ணால் இழந்தோம். நாம் பெற்றதோ தியாகசீலர் ம.பொ.சி., மங்களக்கிழார், விநாயகம் போன்றோர் 
பலரின் போராட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம்.  தென்முனை குமரியை பி.எஸ்.மணி, நேசமணி, 
குஞ்சன் நாடார், ரசாக் போன்றோருடைய தியாகமும், மார்த்தாண்டம் புதுக்கடையில் போராட்டத்தின்போது 
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 11 தியாகிகளின் ரத்தத்தில் தமிழகத்தோடு இணைந்ததுதான் குமரி மாவட்டம்.  
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் தியாகி கரையாளருடைய மாசற்ற தியாகத்தால் 
செங்கோட்டை கிடைத்தது. ஆனால் நம்மோடு இணையவேண்டிய நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை 
ஆகியப் பகுதிகளை தர மறுத்தனர். தமிழர்கள் வாழும் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்கு 
சென்றுவிட்டன. 1956 நவம்பர் 1ம் தேதி உதயமான கேரளம் "நவ கேரளம்" என்று கொண்டாடுகிறது. 
கர்நாடகம் "அகண்ட கர்நாடகம்" என்று விழா எடுக்கிறது. ஆந்திரம் "விசால ஆந்திரம்" என்று ராஜ்ய 
விழாவாக கொண்டாடுகின்றது. மகாராஷ்டிரம் "சம்யுக்த மகாராஷ்டிரம்", குஜராத் "மகா குஜராத்" என்று 
நவம்பர் 1ம் தேதியை மகிழ்ச்சிப் பெறுக்கோடு வரவேற்கின்றது.  ஆனால் நாம் இந்நாளை மகிழ்ச்சியாக 
கொண்டாடுவதா? அல்லது இழந்த பகுதிகளுக்காக வருந்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதா? என்று 
சொல்ல முடியவில்லை.  

10 ஆண்டுகளுக்கு முன்பு 2006ல் அக்டோபர் இறுதி வாரத்தில் ஆனந்த விகடனிலும்,  தினமணியில் 
தமிழ்நாடு 50 என்று என்னுடைய பத்தி வெளியானபோதுதான், தமிழகமே 50 ஆண்டுகள்  ஆகிவிட்டதா 
என்று சற்று எழுந்து உட்கார்ந்தது. அந்த அளவு நம்முடைய விழிப்புணர்வுகள் இருந்தன. 

யாரும் கண்டு கொள்ளத நிலையில் முதன் முதலாக கடந்த 2006 நவம்பர் 1ம் தேதி தமிழகம் 50 என்று என்னுடைய நூல் வெளியீட்டு விழாவும், எல்லை போராட்ட தியாகிகளுடைய படங்கள் குறிப்பாக ம.பொ.சி., மங்களகிழார், விநாயகம், நேசமணி, பி.எஸ். மணி, 
கரையாளர் தமிழ்நாடு என்று பெயர்வைக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் ஆகியோரின் படங்கள் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வு மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில், வைகோ, நெடுமாறன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் சங்கரய்யா, நல்லகண்ணு, இரா செழியின், மூத்த வழக்கறிஞர்கள் 
வானமாமலை, என்னுடைய சீனியர் வழக்கறிஞர் ஆர். காந்தி, பத்திரிகையாளர்கள் மாலன் போன்றோர்கள்  எல்லாம் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

தமிழ்நாடு 50 என்ற என்னுடைய நூலில் வட எல்லைப் போராட்டம், தென்குமரி மீட்பு, செங்கோட்டைப் போராட்டம், நாம்இழந்தபகுதிகள்,
தட்சணப்பிரதேசம்எனபலவிடயங்களையும்பிரச்சினைகளையும் எழுதியிருந்தேன். அந்த நூல் திரும்பவும் விரிவான பதிப்பாக வெளிவர இருக்கின்றது.

தமிழகத்திற்கு இது ஒரு முக்கியமான காலகட்டம். இதை எத்தனைப் பேர் சிந்திப்பார்களோ, எத்தனைப் 
பேர் ஆர்வம் செலுத்துவார்களோ என்று தெரியவில்லை. நமக்கு ஒரு சினிமா நடிகை அரசியலுக்கு வந்து  என்ன சொல்கின்றார் என்றுதான் நாம் கேட்கின்றோம்.அதைவிவாதிக்கின்றோம். நம்முடைய நேரத்தை விரயம் செய்கின்றோம். இதையெல்லாம் பார்க்கும்பொழுது, "விதியே, விதியே, தமிழச் சாதியை, என்செய 
நினைத்தாய் எனக்குரை யாயோ?...." என்ற பாரதியினுடைய வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றது.

நவம்பர் 1ம் தேதி இது குறித்தான சில செய்திகளும், என்னுடைய பத்தியும் வரவுள்ளது. குறைந்த அளவு 
இதற்காக நேரம் ஒதுக்கி படித்தால் தமிழ் மண்ணுக்கு செய்கின்ற கடமையாகும்.  

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-10-2019.

#தமிழ்நாடு63
#tamilnadu63 
#ksrposting 
#ksradhakrishnanposting


Sunday, October 27, 2019

மாடுகள்



-------

கழுகுமலை, மத்திய சேனை போன்ற மாட்டுச் சந்தைகளுக்குக் போனால் மாடுகளைப் பற்றியதான சில தரவுகளை பலர் கூறக் கேட்டது உண்டு. அதுகுறித்தான விவரங்கள்.

நிறம் வகைகள்
-------------------
அத்திக்காய்ப்புல்லை
கரிசமால்
கருஞ்சிவலை
கருத்தச்செம்பரை
கருப்பு
கருமயிலை
கருவெள்ளை
காரி
குரால்
சந்தனப்புல்லை
சுத்தவெள்ளை
செந்தாலை
கண்ணாடி மயிலை
கருங்குரால்
செந்தாரை மயிலை
செம்பரை
செவலைச்செம்பரை
செவலை
நாவெள்ளை
பஞ்சகல்யாணி
புல்லை
புளியம்போர்ச்செம்பரை
மயிலை
வெள்ளை

காளை மாட்டுக் கொம்பு வகைகள்
---------------------------------------
அலைகொம்பு
ஆட்டுக்கொம்பு
காடுபார்த்த கொம்பு
கிளிக் கொம்பு
குத்துக் கொம்பு
கூடுகொம்பு
கொக்கரிக்கொம்பு
கொள்ளிக்கொம்பு
சுருட்டைக்கொம்பு
பூங்கொம்பு
பொத்தைக்கொம்பு
மட்டிக்கொம்பு
மாடக்கொம்பு
முன்கொம்பு
விரிகொம்பு

மாட்டின் லட்சணங்கள்
----------------------
சிறியவை ஐந்து - தலை, கொம்பு, தாடி, கோசம், வால்
பெரியவை ஐந்து - கண், நெஞ்சு, கழுத்து, எலும்புகள், கால்கள்

சுழிகள் (“சுழிசுத்தம்”)
--------------------------
அசைவுச் சுழி - சிமிளுக்கு திமில் உச்சியில் இருப்பது
அஞ்சி சுழி - முன்மண்டையிலிருந்து வால்வரை நடுமுதுகையொட்டி ஐந்து சுழிகள் இருப்பது விசேஷம்.
அஞ்சிசுழி மாடு கெஞ்சினாலும் கிடைக்காது.
இடிமேல்இடி கொடைமேல்க் கொடை - இந்தச்சுழி நெற்றியில் கீழும் மேலுமாக இருப்பது. இந்த மாடு வைத்துக்கொண்டிருப்பவர்கள் சிலருக்கு கஷ்டத்துக்கு மேல் கஷ்டங்கள் தொடர்ந்து வருகிறது. சிலருக்கோ அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம் வந்து குவிகிறது என்கிறார்கள்.
கால் விலங்கு - முன்முழங்காலின் அடிப்பாகத்தில் இருக்கும் சுழி
டமானச் சுழி - முதுகில் இரண்டு சுழிகள் இட வலப்புறமாக இரக்கும்
நச்சுழி - முதுகில் ஒரு சுழி, நல்ச்சுழி
பட்டரைச் சுழி - சிமிளக்குப் பின்பக்கம் இருக்கும்
பறவைச் சுழி - முன்கால்களின் தோள் புஜத்தில் இருபுறமும் இருக்கும். இந்த மாடு வேகமாய் இருக்கும்
பாசிபந்து - கொம்புக்கு பின்னால் பிடரியில் ஒரு சுழி இரப்பது இயற்கை. இதில் இரண்டு இருந்தால் பாசிப்பந்து சுழி
பாடைச் சுழி - முதுகில் இரண்டு சுழிகள் முன்னும் பின்னுமாக இருப்பது
பிடரிச் சுழி - கொம்புக்குப் பின்னால் இருக்கும் இயற்கைச் சுழி
பிடரி விலங்கு - கொம்புக்குப் பின்னால் இரு சுழிகள் முன்னும் பின்னுமிருப்பது.
பூரான் சுழி 1 - கொம்பு முதுகில் வலதுபுறம் ஒரு சுழியும் நச்சுழியும் இருப்பது
பூரான் சுழி 12 - முதுகில் இடதுபுறம் ஒரு சுழியும் நச்சுழியும்
பெண்டிழந்தான் - வாலின் அடியில் தானவாய் ஓரத்தில் இருக்கும் சுழி.
மண்டை விலங்கு - முன்நெற்றியில் இடவலமாக இரு சுழிகள் இருப்பது
முளை பிடுங்கி - முன்கால் ஒன்றிலோ இரண்டிலுமோ கும்பிற்கு மேலே சுழி சுழித்து மேல்நோக்கி இருப்பது
மேக்காச் சுழி - சிமிளுக்கு முன்பக்கமாக இருப்பது
நிர்க்குத்து - நீர்த்தாரைக்கு நேராக முதுகில்இருப்பது. இதை தட்டினால் மாடு நீர்விடும் என்பார்கள்
நெத்திச்சுழி - நெற்றியில் ஒரு சுழி இருப்பது

மாட்டின் வயது பற்றி
--------------------
காளைக்கன்று மூன்று வருடங்கள் கழித்துப் பல்ப்போடும். பல்ப் போட்டிருச்சா? என்று கேட்பார்கள் இது காளையின் ஒரு பிரயாத்தைக் குறிப்பது.
கீழ்வாயில் பால்ப்பற்கள் உதிர்ந்து இரண்டு பற்கள் முளைக்கும். இதைத்தான் பல்ப் போட்டிருக்கிறது என்பது. பிறகு அதை ஒட்டி வருசத்துக்கு இரண்டு இரண்டு பற்கள் முளைக்கும். நாலு வருசங்களில் 8 பற்கள் போட்டுவிடும். இதை கடை தேறீச்சி என்பார்கள்.

இதன்பிறகு, ஒவ்வொரு வருடத்தையும் ஒருசோடு அல்லது உழவு என்று குறிப்பிடுவார்கள். ஒங்க மாட்டுக்கு இப்போ வயசு ரெண்டு உழவு இருக்குமா? என்று வினவுவார்கள்.

சந்தையில் மாட்டை விலை பேசும்போது,,,
----------------------------------------------------
சம்சாரிகளின் மாட்டை தரகர்களும் வியாபாரிகளும் கைபோட்டு விலை பேசுவார்கள். கைகளை துணியால் மூடிக்கொண்டு,
ஐந்து விரல்களைக் கூட்டிப் பிடித்தால் 500 ரூபாய், அதையே ஒரு குலுக்கு குலுக்கினால் 1000 ரூபாய் என்றும், விரல்களிலுள்ள ஒவ்வொரு வரையும் 10 ரூபாய் என்றும் அவர்களுக்குள் ஒரு நிர்ணயம் உண்டு.
இவ்வளவுண்ணா கொடுத்துறலாமா
இல்லெ; இதுக்கு குறைஞ்சி முடியாது
சரி; இதே இப்பிடிவச்சி முடிங்க
இந்த மாதிரி பேச்சொலி தான் மற்றவர்களுக்கு கேட்குமே தவிர விலை தெரியாது.

இப்படி இவர்கள் மாட்டின் விலையைப் பேசும்போது உச்சரிக்கும் சில ஒலிக்குறிப்புகள்

தட்டை
தாளு
சவடு

இவைகள் என்ன தொகையைக் குறிக்கும் என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-10-2019.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
#நாட்டு_மாடுகள்

வில்லுப்பாட்டு



--------------------
தமிழகத்தின் தென் மாவட்டங்களான விருதுநகர்,நெல்லை, தூத்துக்குடி, குமரி போன்ற மாவட்டங்களில் வில்லுப்பாட்டு, திருவிழாக் காலங்களில் கோவில்களில் நடத்தப்படுகிறது. இதில் சாதாரண மக்களுக்கு புரியும் வகையில், பேச்சு மொழியில் கடவுள்களின் வரலாற்றை இசைப்பார்கள். கிராமங்களில் சிறு தெய்வங்களுக்கு நடத்தப்படும் கொடை விழாக்களில் வில்லுப்பாட்டே பிரதானமாக இருக்கும். 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரசப் புலவர் இதனை உருவாக்கியவர் என்றும், அருதக்குட்டிப் புலவரே வில்லிசையை தருவித்தவர் என்றும் இரு கருத்து நிலவுகிறது. வில்லுப்பாட்டின் எளிமை, இனிமை போன்றவை நம்மை ஈர்க்கும். வில்லிசைக் குழுவில் வலது பக்கப் பாட்டுக்காரர், பின்பாட்டுக்காரர், குடம் அடிப்பவர், ஆர்மோனியம் வாசிப்பவர், தபேலா இசைப்பவர், ஜால்ரா அடிப்பவர், ஒடுக்கு அடிப்பவர் என ஏழு பேர் அங்கம் வகிப்பர்.

வில்லை வளைச்சு
அம்பை மாட்டினா
சொல்லும் செயலாகும் - தம்பி
சொல்லும் செயலாகும்
என்ற நாட்டார் பாடல், இக்கலைக்கு வில்லுப்பாட்டு என்று பெயர் வர காரணமாக கூறுகிறது.

வில்லுப்பாட்டுக் கலைக்குத் தேவைப்படும் கருவிகளில் மூலக்கருவியாக கருதப்படுவது விற்கதிராகும். இது பனங்கம்பு, பிரம்பு அல்லது முங்கில் வகைகளால் செய்யப்படுகிறது. இதன் இரண்டு முனைகளிலும் வண்ணத் துணிகள் கட்டப் பட்டிருக்கும். இந்த இரண்டு முனைகளைவும் இழுத்து நாண் கட்டப்பட்டு, இரு பக்கமும் பக்கத்திற்கு நான்கு என இரும்பு வளையம் பொறுத்தப் பட்டிருக்கும். கதைகளை ஆவேசமாக வெளிப்படுத்த உதவுவது உடுக்கு கருவி. 
சிறு தெய்வக் கதைகளே பெரும்பாலும் பாடப்படுகிறது. அய்யனார், நீலி, சுடலைமாடன்; மேலும் சீதா கல்யாணம், கிருஷ்ணன் கதை; கலப்பு மணம், சாதி தீங்கை  சொல்லும் முத்துப்பட்டன், தோட்டுக்காரியம்மன், வன்னியடி மறவன் போன்ற சமுதாயக் கதைகளும்; ராஜாக்கள் கால கதைகளில் ஐவர் ராஜாக்கள் கதை, இரவிக் குட்டிப் பிள்ளை போர் போன்றவை அதிகமாக பாடப்படுகின்றன. கோவில்களில் மட்டுமே பாடப்பட்டு வந்த இக்கலை, பின்பு பொது மேடைகளிலும் பாடப்பட்டது. பொதுவுடைமை மேடைகளில் பிரசார சாதனமாக இக்கலை பயன்படுத்தப்பட்டது.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தோவானை சுந்தரம் பிள்ளை, புன்னார்குளம் கோலப் பிள்ளை போன்றவர்களால் வில்லுப்பாட்டு திரைப்படத் துறையிலும் தன் தடம் பதித்தது. கலைவாணர் தனது வில்லுப்பாட்டில் பழைய உடுக்கு, குடம் போன்றவற்றை தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக ஆர்மோனியம், டோலக், பம்பை, கிளாரினட் பயன்படுத்தியதுடன், வில்லுப்பாட்டுக்கே உரிய சோக ரசத்தை மாற்றி, தன்னியல்பான நகைச்சுவையாக பாடினார். சாத்தூர் பிச்சைக் குட்டியின் வில்லிசைக்கு தனி மவுசு உண்டு. நட்சத்திரக் கலைஞர் அவர். பழைய பாரம்பரியத்துடன் நவீன உத்திகளை வில்லுப்பாட்டில் புகுத்தியவர் செவல்குளம் தங்கையா புலவர் ஆவார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சீடர் சுப்பு ஆறுமுகத்தின் வில்லுப்பாட்டு குழு, தற்பொழுது நவீன வில்லுப்பாட்டுக் குழுவாக திகழ்கின்றது. கலைமாமணி ராஜலட்சுமி, நெல்லை பாக்கிய லட்சுமி, சுப்பராயபுரம் வேல்கனி போன்ற பெண் கலைஞர்களும் புகழ்பெற்று விளங்குகிறார்கள். வில்லிசையில் இன்னும் பல கலைஞர்களை நினைவு கூறவேண்டும்.

 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPostings
#KSRadhakrishnanPostings

தீபாவளி

கல்லூரியில் பியூசி புகுமுக வகுப்பு சேர்வதற்கு முன் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படிக்கிற காலம் வரை கிராமத்தில் 

 என்பதில் ஒரு நாட்டமும் ஆர்வமும் அதிகமாக இருந்தது.  எண்ணெய் வைத்து தலை  குளித்து விடியலில் புது துணிகளை அணிவது வாடிக்கை. எங்கள் கிராமத்தில் பொண்ணு டெய்லர் என்பவர் காஜா போட்டுக் கொண்டிருக்கிறேன், தைத்து கொடுத்து விடுகிறேன் என்று தன்னைச் சுற்றி பத்திருபது பேர் சூழ்ந்திருக்க சொல்லிக் கொண்டேயிருப்பார். ஆனால் தீபாவளி முடிந்த இரவு வரை புது துணிகள் சிலருக்கு தைத்துக் கொடுக்க முடியாததால் ஏமாற்றத்தில் அவர்கள் அவரை சபித்துக் கொண்டே போவதை எல்லாம் பார்த்ததுண்டு.

தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே துணிகளை கொடுத்து விடுவது வாடிக்கை. கிராமத்தை பொறுத்த வரையில் அதிரசம், முறுக்கு, சீடை தான் செய்வார்கள், மற்ற இனிப்பு வகைகள் கிராமத்தில் கிடையாது. இந்த முறுக்கு சீடையில் வெண்ணையும் நெய்யும் போடாமல் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயில் சுட்டால் மணமும் ருசியும் அதிகமாக இருக்கும். வெண்ணையில் சுடும் போது அந்த ருசி இருப்பதில்லை. பலரிடம் இந்த விஷயம் எடுபடவில்லை. கல்லூரிக்கு சென்ற பின் வேறு ஒன்றிலும் அக்கறை இல்லாமல் புது திரைப்படங்கள் என்ன வந்துள்ளன என்பதில் தான் ஆர்வம் இருக்கும். அப்போதெல்லாம் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலத்தில் தான் அதிக்கப்படியான திரைப்படங்கள் வெளியாகும். அந்த திரைப்படங்கள் நூறு நாட்களை தாண்டி வெள்ளி விழாவும் கொண்டாடியதுண்டு. தீபாவளி மலர் கல்கி, கலைமகள், அமுதசுரபி தான் அப்போது கண்ணில் படும். தீபாவளி அன்று *#ராஜா__வந்திருக்கிரார்*என்ற
கு.அழகிரிசாமியின் கதையில்
தீபாவளி அன்று வீடு  தேடிவரும் சிறுவன் .....கரிசல் பூமியின் கிராமத்து தீபாவளி....பற்றி முதன்முதலாக 1972ல் படித்ததாக நினைவு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-10-2019.

#KSRPostings
#KSRadhakrishnanPostings 

படம் -விகடன் தீபாவளி மலர் -2019.

*#ராஜா__வந்திருக்கிரார்* -கு.அழகிரிசாமி. தீபாவளி அன்று வீடு தேடிவரும் சிறுவன் .... கரிசல் பூமி கிராமத்து தீபாவளி......

*#ராஜா__வந்திருக்கிரார்*
-கு.அழகிரிசாமி.
தீபாவளி அன்று வீடு  தேடிவரும் சிறுவன் .... கிராமத்து தீபாவளி......

————————————————
(மேலுள்ள அட்டையில் உள்ளது சென்னையில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த HOE& Co வெளியிட்ட டயரி தாளில் கு.அழகிரிசாமி எழுதிய கதைகள். HOE& Co வழக்கறிஞரர்களுக்காக நீண்ட டயரியும் இது போன்ற பொதுமக்களுக்கான வெளியிட்ட டயரியில் தமிழ் ஆங்கிலம் தெலுங்கு கன்னடம்  மொழிகளில் நாட்குறிப்பு இருக்கும். இந்த HOE& Co நிறுவனம் சென்னை பாரிமுனையில் உள்ள பந்தர் தெருவில் இருந்தது. அதற்கு மேல் ராஜா வந்திருக்கிறார் என்பது கி.ராவால்  எழுதப்பட்டது. இந்த 97 வயதிலும் முப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய இந்த எழுத்தைப் போலவே கோணலில்லாமல், நடுக்கமில்லாமல் தெளிவாக எழுதுகிறார்.

சிறு பிராயத்தில், கல்லூரியில் பியூசி புகுமுக வகுப்பு சேர்வதற்கு முன் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படிக்கிற காலம் வரை கிராமத்தில் தீபாவளி என்பதில் ஒரு நாட்டமும் ஆர்வமும் அதிகமாக இருந்தது.  எண்ணெய் வைத்து தலை  குளித்து விடியலில் புது துணிகளை அணிவது வாடிக்கை. எங்கள் கிராமத்தில் பொண்ணு டெய்லர் என்பவர் காஜா போட்டுக் கொண்டிருக்கிறேன், தைத்து கொடுத்து விடுகிறேன் என்று தன்னைச் சுற்றி பத்திருபது பேர் சூழ்ந்திருக்க சொல்லிக் கொண்டேயிருப்பார். ஆனால் தீபாவளி முடிந்த இரவு வரை புது துணிகள் சிலருக்கு தைத்துக் கொடுக்க முடியாததால் ஏமாற்றத்தில் அவர்கள் அவரை சபித்துக் கொண்டே போவதை எல்லாம் பார்த்ததுண்டு.

தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே துணிகளை கொடுத்து விடுவது வாடிக்கை. கிராமத்தை பொறுத்த வரையில் அதிரசம், முறுக்கு, சீடை தான் செய்வார்கள், மற்ற இனிப்பு வகைகள் கிராமத்தில் கிடையாது. இந்த முறுக்கு சீடையில் வெண்ணையும் நெய்யும் போடாமல் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயில் சுட்டால் மணமும் ருசியும் அதிகமாக இருக்கும். வெண்ணையில் சுடும் போது அந்த ருசி இருப்பதில்லை. பலரிடம் இந்த விஷயம் எடுபடவில்லை. கல்லூரிக்கு சென்ற பின் வேறு ஒன்றிலும் அக்கறை இல்லாமல் புது திரைப்படங்கள் என்ன வந்துள்ளன என்பதில் தான் ஆர்வம் இருக்கும். அப்போதெல்லாம் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலத்தில் தான் அதிக்கப்படியான திரைப்படங்கள் வெளியாகும். அந்த திரைப்படங்கள் நூறு நாட்களை தாண்டி வெள்ளி விழாவும் கொண்டாடியதுண்டு. தீபாவளி மலர் கல்கி, கலைமகள், அமுதசுரபி தான் அப்போது கண்ணில் படும். தீபாவளி அன்று இந்த ராஜா வந்தார் என்ற கதையை முதன்முதலாக 1972ல் படித்ததாக நினைவு.)
••••
*ராஜா வந்திருக்கிரார்*
கு.அழகிரிசாமி.

எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத் தனமாகக் கேட்டான் ராமசாமி.
செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்; மங்கம்மாள் மூக்கின் மேல் ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டும் கண்ணை இலேசாக மூடிக்கொண்டும் லேசாக யோசனை செய்தாள். அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்றப் பிள்ளைகள்.
அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்திய தேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். செல்லையா அந்த வருடம் இந்திய தேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். இருவரும் படப் போட்டியை ஆரம்பித்து விட்டார்கள்.
ராமசாமி தன் புத்தகத்தை முதலிலிருந்து ஒவ்வொரு தாளாகத் திருப்புவான்; படம் இருக்கும் பக்கத்தைச் செல்லையாவுக்குக் காட்டி, இதோ, இந்தப் படத்துக்குப் பதில் படம் காட்டு என்பான். செல்லையா தன் புத்தகத்தைத் திறந்து அதில் உள்ள ஒரு படத்தைக் காட்டுவான்; பிறகு, இருவருமே புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டுவார்கள். யாராவது ஒருவருடைய புத்தகத்தில் அடுத்த படியாகப் படம் வரும்; உடனே, அந்தப் படத்துக்கு அடுத்தவன் பதில் படம் காட்ட வேண்டும். இவ்விதமாக பதிலுக்குப் பதில் படம் காட்டிய வண்ணம் புத்தகம் முழுவதையும் புரட்டுவார்கள்.எவன் புத்தகத்தில் அதிகப் படங்கள் இருக்கின்றனவோ, அவன் ஜெயித்து விடுவான்; மற்றவன் தோற்றுப் போவான். உடனே ஜெயித்தவன், உனக்குப் படம் காட்ட முடியல்லே! தோத்துப் போயிட்டியே! என்று பரிகாசம் செய்வான். இந்த மாதிரியான படப் போட்டிதான் அன்றும் நடந்து கொண்டிருந்தது.
போட்டி பாதியில் நிற்கிறது. அந்தச் சமயத்தில் ஐந்தாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் வந்துவிட்டார். அந்த கணக்கு வாத்தியார் மிகவும் கெடுபிடியானவர். அவர் வகுப்பில், பையன்கள் வெளியே தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்க முடியாது. தவிரவும் கணக்குப் போடும்போது, பென்சிலும், கையுமாக இருக்க வேண்டும். இதில், படப்போட்டி நடத்துவது எப்படி?
வாத்தியார் வந்ததும் இவருடைய போட்டியும் நின்றுவிட்டது. கடைசியில், சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வெளியே வந்த பிறகு, ஒரு வேப்பமரத்தின் அடியில் நின்று இருவரும் அந்தப் போட்டியை நடத்தினார்கள்.
ராமசாமியின் சரித்திரப் புத்தகத்தில் பாதிதான் தாண்டியிருக்கும்; ஆனால் செல்லையாவின் சிவிக்ஸ் புத்தகம் முடிந்துவிட்டது. செல்லையா தோற்றுப் போய்விட்டான். பக்கத்தில் நின்ற பிள்ளைகள் அவனைக் கேலி செய்தார்கள். தங்கள் அண்ணன் தோற்றுப் போனதைக் கண்டு, தம்பையாவுக்கும் மங்கம்மாளுக்கும் சொல்லமுடியாத வருத்தம்.
அந்த இடத்தை விட்டு எல்லோரும் வீட்டுக்குப் போகப் புறப்பட்டார்கள். நடந்து செல்லும்போதே, படப் போட்டி வேறொரு அவதாரம் எடுக்கத் தொடங்கியது. எங்கள் வீட்டில் அது இருக்கே, உங்கள் வீட்டில் இருக்கா? என்று இருவரும் ஒருவரிடம் ஒருவர் கேட்க ஆரம்பித்தனர். இந்தப் புதுப் போட்டியின் கடைசிப் பகுதியில் தான் ராமசாமி, எனக்கு சில்க் சட்டை இருக்கே, உனக்கு இருக்கா? என்று கேட்டான்.
வேப்ப மரத்தைவிட்டு, அரை பர்லாங் தூரத்திலுள்ள பார்வதியம்மன் கோவில் பக்கமாக வந்தாய்விட்டது. இன்னும் செல்லையாவோ தம்பையாவோ ராமசாமிக்கு பதில் சொல்லவில்லை. ஆனால், மங்கம்மாள் திடீரென்று எல்லோரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு, ராமசாமியின் முன்னாள் வந்து நின்றாள் குழந்தைகள் எல்லோரும் மங்கம்மாவையே கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அவள், ரேகை சாஸ்திரியிடம் காட்டுவது போலக் கையை வைத்துக் கொண்டு, ஐயோ! சில்க் சட்டை எதுக்காம்? ஹூம், லேசாச் சருகு மாதிரி இருக்கும். சீக்கிரம் கிழிஞ்சி போகும். (செல்லையாவின் சட்டையைக் காட்டி) இதுதான் கனமாயிருக்கு. ரொம்ப நாளைக்குக் கிழியாமே இருக்கும். நல்லாப்பாரு! என்று மிகமிகப் பரிகாசமாகச் சொல்லிவிட்டு செல்லையாவின் பக்கத்தில் வந்து நின்றாள்.
ராமசாமி திகைத்து நின்றுவிட்டான். முதல் வகுப்பில் படிக்கும் மங்கம்மாள், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் தன்னை இப்படித் தோற்கடித்து விட்டாளே என்று சங்கடப்பட்டான். பிள்ளைகள் ராமசாமியைப் பார்த்து, தோத்துப் போயிட்டியா! என்று ஏளனம் பண்ணினார்கள்.
மங்கம்மாள் செல்லையாவின் சட்டையைப் பிடித்துக்கொண்டு, அவனை ஒட்டி உரசி நின்று கொண்டாள். நடக்கும் போதும் அப்படியே நடந்து வந்தாள். அவள் மனதிற்குள்ளே ஒரு பெருமிதம்.
ராமசாமி அடுத்து கேள்வியைப் போட்டான்: எங்கள் வீட்டிலே ஆறு பசு இருக்கு; உங்க வீட்டிலே இருக்கா?
இதற்குச் செல்லையா பதில் சொல்லவில்லை; மங்கம்மாளும் பதில் சொல்லவில்லை. தம்பையா, இவுஹதான் பணக்காரராம்! அதுதான் ரொம்பப் பெருமை ஹூம்! பெருமை பீத்திக்கலாம்என்று சொல்லி நிலைமையைச் சமாளிக்க முயன்றான். அது முடியவில்லை. அந்தச் சமயத்தில் செல்லையா, அது சரி, எங்க வீட்டிலே ஒன்பது கோழி இருக்கு, உங்க வீட்டிலே இருக்கா? என்று ஒரு போடு போட்டான்.
ராமசாமியும் தயங்கவில்லை: நாங்கள் உங்களைப் போலக் கோழி அடிச்சுச் சாப்பிட மாட்டோம். நாங்க எதுக்குக் கோழி வளக்கணும்? அதுதான் எங்க வீட்டிலே கோழி இல்லே என்றான்.
அதெல்லாம் சும்மா. ஒன்பது கோழி இருக்கா, இல்லையா? என்று ஒரே பிடிவாதமாகக் கேட்டான் செல்லையா.
ராமசாமிக்கு பதில் சொல்ல முடியவில்லையே என்று கூட வருத்தமில்லை. மற்றப் பிள்ளைகள் எல்லோரும் ஒன்று கூடிக் கொண்டு அவனைப் பரிகாசம் செய்வதை அவனால் தாங்கமுடியவில்லை.அழுகை வரும் போல இருந்தது. அதனால் எல்லோரையும் விட வேகமாக நடக்க ஆரம்பித்தான். மற்றப் பிள்ளைகளும் அதே வேகத்தில் நடந்தார்கள். சிறு குழந்தையாக இருக்கும் மங்கம்மாள் அதே வேகத்தில் நடக்க முடியாது. அதனால் ஓடினாள்.
சிற்சில குழந்தைகள் தங்கள் தங்கள் வீட்டுக்கு நேராக வந்த மாத்திரத்தில் கூட்டத்திலிருந்து விலகி வீட்டுக்குப் போய் விட்டார்கள். கூட்டம் குறையக் குறைய ராமசாமியின் அவமானமும் குறைந்துகொண்டு வந்தது.
மேலத் தெருவுக்குள் நுழையும் போது, ராமசாமியும் அவனுடைய எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூவரும்தான் மிஞ்சினார்கள். ஏனென்றால், அந்தக் குக்கிராமத்துப் பள்ளிப் பிள்ளைகளில், இவர்களுடைய வீடுகள் தான் மேலத் தெருவில் இருந்தன.
ராமசாமியின் வீடு முதலாவதாக வந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டுக்குள்ளே பாய்ந்தான் ராமசாமி. உடனே, வீதியில் நின்ற அந்த மூவரும், தோத்தோ நாயே! என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டும், கையால் சொடுக்குப் போட்டுக்கொண்டும் நின்றார்கள்.
அப்போது வீட்டுக்குள்ளிருந்து ஒரு மீசைக்காரன் தலைப்பாக் கட்டுடன் வெளியே வந்தான். அவன் ராமசாமியின் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன். குழந்தைகள் மூவரும் கிழிந்துபோன அழுக்குத் துணியுடனும், பரட்டைத் தலையுடனும் தெருவில் நின்று, ஒரே குரலில் தோத்தோ நாயே! என்று சொல்வதைப் பார்த்து, சீ, கழுதைகளா! போறீகளா, எண்ணமும் வேணுமா? என்று அதட்டினான். மூன்று பேரும் நாலுகால் பாய்ச்சலில் ஓடிவிட்டார்கள். அவர்கள் போன பிறகு, பிச்சைக்காரக் கழுதை! தோத்தோ! நாயே!கழுதை! என்று தனக்குத் தானே ஏகத்தாளமாச் சொல்லிக் கொண்டு, தன வேலையைக் கவனிக்கப் போனான்.
செல்லையா, தம்பையா, மங்கம்மாள்  மூன்று பேரும் நெஞ்சோடு புத்தகக் கட்டுக்களை அணைத்துக்கொண்டு வீடு சேரும் போது, அவர்களுடைய தாயார் தாயம்மாள் வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தாள்.
மங்கம்மாள் ஒரே ஓட்டமாக ஓடி, அம்மாஎன்று தாயம்மாளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டாள்.
குனிந்து வாசல் தெளித்துக் கொண்டிருந்த தாய் செல்லமாக, ஐயோ! இது என்னடா இது! என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு அழுவது போலச் சிரித்தாள்! அம்மா அழுவதைக் கண்டு மங்கம்மாளுக்கு அடக்க முடியாதபடி சிரிப்பு வந்தது.
ஐயா வந்துட்டாரா அம்மா? என்று தம்பையா கேட்டான். அப்பாவைத் தான் ஐயா என்று அந்த கிராமத்துப் பிள்ளைகள் குறிப்பிடிவார்கள்.
வரலையே! என்று பொய் சொல்லிவிட்டு, பொய்ச் சிரிப்பும் சிரித்தாள் தாயம்மாள்.
நிஜம்மா? என்று கேட்டான் தம்பையா.
நிஜம்ம்ம்மா தான்! என்று சொன்னாள் தாயம்மாள். அப்புறம் சிரித்தாள்.
மங்கம்மாள் விறுவிறு என்று அம்மாவுக்கு முன்னாள் வந்து நின்றாள். வலது கையிலிருந்து புத்தகக்கட்டை இடது கையில் இடுக்கிக் கொண்டாள். வலது கையின் ஆள்காட்டி விரலை மூக்கின் மேலும், புருவங்களுக்கு மத்தியிலும் வைத்துக்கொண்டு, முகத்தையும் ஒரு பக்கமாகத் திருப்பிக்கொண்டு, அம்மா! எனக்குத் தெரிஞ்சு போச்சு! நீ பொய் சொல்றே! ஐயா வந்துட்டாரு! என்று நீட்டி நீட்டிச் சொன்னாள்.
தாயம்மாளுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பல்லை இறுகக் கட்டிக்கொண்டு, போக்கிரிப் பொண்ணு! என்று மங்கம்மாளின் கன்னத்தைக் கிள்ளினாள்.
செல்லையா மிகவும் ஆழமான குரலில், ஐயா வரல்லையாம்மா? என்று கேட்டான். அவன் குரலில் சோகம் ததும்பி, ஏமாற்றம் இழையோடியிருந்தது.
தாயம்மாள் வீட்டிற்குள் நுழைந்தாள். மூளையிலிருந்த ஒரு ஜாதிக்காய்ப் பொட்டியைச் சுட்டிக்காட்டி, அந்தப் பெட்டியைத் திறந்து பாரு மங்கம்மா என்றாள்.
மூவருமே ஓடிப்போய்ப் பெட்டியைத் திறந்தனர்.
பெட்டிக்குள்ளே இருந்த ஜவுளிப் பொட்டணத்தை வெளியே எடுத்து அவிழ்த்துப் பார்த்தனர். மறுநாள் விடிந்த பிறகு ஆரம்பமாகும் தீபாவளி, குழந்தைகளுக்கு அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. ஒரே குதூகலம்! ஒவ்வொரு துணியாக எடுத்து, இது யாருக்கு இது யாருக்கு என்று இனம் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பொட்டணத்தில் இரண்டு மல் பனியன்களும், இரண்டு கால் சட்டைகளும், ஒரு பாவாடையும், ஒரு பச்சை நிறமான சட்டையும், ஒரு நான்கு முழ ஈரிழைச் சிட்டைத் துண்டும் இருந்தன.
துண்டைத் தவிர மற்ற உருப்படிகள் இன்னின்னாருக்குத்தான் என்று குழந்தைகளே பங்கு போட்டுவிட்டார்கள். துண்டுயாரைச் சேருவது என்று தெரியவில்லை உடனே செல்லையா கேட்டான்: துண்டு யாருக்கும்மா?
ஐயாவுக்கு என்றாள் தாயம்மாள்.
அப்படின்னா உனக்கு? என்று மங்கம்மாள் கேட்டாள்.
தாயம்மாள் சிரித்துக்கொண்டு, எனக்குத் தான் ரெண்டு சீலை இருக்கே இன்னும் எதுக்கு? எல்லோரும் புதுத்துணி எடுக்க நாம் என்ன பணக்காரரா?
ஐயாவுக்கு மட்டும் பிறகு புதுத்துண்டு எதுக்காம்? என்றாள் மங்கம்மா.
வாயாடி! வாயாடி! ஐயாவுக்கு ஒரு துண்டுகூட இல்லே. துண்டு இல்லாமே எத்தனை நாளைக்குப் பழைய வேட்டியை உடம்பிலே போட்டுக்கிட்டு அலையறது? என்று சொல்லிவிட்டு, மங்கம்மாளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள் தாய்.
அந்தி மயங்கி, இருட்டத் தொடங்கியது. விளக்கேற்றுவதற்காகத் தாயம்மாள் எழுந்தாள்.
விளக்கேற்றிவிட்டுக் குழந்தைகளை வெந்நீரில் குளிப்பாட்டி விட்டாள். ஐப்பசி மாதமானதால் அநேகமாக நாள் தவறாமல் மழை பெய்திருந்தது. பூமி குளிர்ந்து ஜில்லிட்டு விட்டது. காற்றும் ஈரக்காற்று. இதனால் வெந்நீரில் குளித்துவிட்டு வந்த குழந்தைகளை ஈரவாடை அதிக வேகத்துடன் தாக்கியது. எல்லோரும் குடுகுடு என்று முற்றத்திலிருந்து வீட்டுக்குள்ளே ஓடி வந்து விட்டார்கள்.
குழந்தைகள் சாப்பிடும்போதுதான், அவர்களுடைய அப்பா பக்கத்துக் கிராமத்துக்கு ஒரு தூர பந்துவின் திடீர் மரணத்தை முன்னிட்டுச் சென்றிருப்பதாகவும், மறுநாள் மத்தியானத்துக்குள் வந்துவிடுவார் என்றும், வரும்வரை காத்திருக்காமல் குழந்தைகளோடு தீபாவளி கொண்டாடி விடவேண்டும் என்று அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் என்றும் தாய் தெரிவித்தாள்.
சாப்பாடு முடிந்தது. ராப் பாடம் படிக்க மாடக்குழியில் இருந்த அகல் விளக்கைத் தூண்டிவிட்டுக் கொண்டு அதன் முன்னால் மூன்று பெரும் உட்கார்ந்தார்கள்.
தாயம்மாள் சாப்பிட்டுவிட்டு, எச்சில் கும்பாக்களைக் கழுவ முற்றத்துக்கு வந்தாள். முற்றத்தின் மூலையில் கொஞ்ச தூரத்துக்கு அப்பால் ஒரு முருங்கை மரம் உண்டு. அதன் நிழலில் கருப்பாக ஓர் உருவம் தெரிந்தது. பக்கத்து வீட்டு நாயாக இருக்கும் என்று நினைத்து உள்ளே வந்துவிட்டாள்.
மண் தரையில் முந்தானையை விரித்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு, குழந்தைகள் உரக்கச் சத்தம்போட்டுப் பாடம் படிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் தாய். சிறிது நேரத்தில், தரை என்னமாக் குளுருது! ராத்திரி எப்படிப் படுத்துக்கிடுறது? என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். அவளுடைய உடம்பு அவளுடைய ஸ்பரிசத்துக்கே ஜில் லென்றிருந்தது.
தம்பையா, அண்ணனைப் பார்த்து, துணைக்கு வர்ரயா? என்று கூப்பிட்டான். இருட்டானதால் வீட்டு முற்றத்துக்குப் போய் ஒன்றுக்குப் போய்விட்டுவர அவனுக்கு பயம். செல்லையா துணைக்குப் போனான். இந்தச் சிறுவர்களின் கண்ணிலும் முருங்கை மரத்தடியில் இருந்த கருப்பு உருவம் தென்பட்டது. அதைப் பார்த்து பயந்து போகாமல் இவர்கள் தைரியமாக நின்றதற்குக் காரணம், ராமசாமியின் வீட்டை நோக்கிப் போகும் இரண்டு பேர் இரண்டு பெட்ரோமாக்ஸ் விளக்குகளைக் கையில் எடுத்துக் கொண்டு போனதுதான். ஆள் நடமாட்டமும் விளக்கு வெளிச்சமும் சேர்ந்து தைரியம் கொடுத்தன. இருவரும் கருப்பு உருவத்தைக் கூர்ந்து பார்த்தார்கள்.
அது இவர்களைப்போன்ற ஒரு சிறுவனுடைய உருவம்தான்.
உடனே இருவரும் பக்கத்தில் போனார்கள். அப்பொழுது மழை இலேசாகத் தூற ஆரம்பித்தது. அதனால் முருங்கை மரத்துக்குக் கீழாகப்போய் நின்று கொண்டு, அந்தச் சிறுவனுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அவனுக்கு வயது எட்டு அல்லது ஒன்பது இருக்கும். அவன் உடம்பில் அழுக்கடைந்த கௌபீனம் ஒன்றைத் தவிர, வேறு உடைகள் கிடையாது, தரையில் உட்கார்ந்தால் குளிரும் என்று, பாதங்கள் மட்டும் தரையில் படும் படியாக அவன் குந்திக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னாள் மூன்று எச்சில் இலைகள். கிராமத்தில் வெண்கலக் கும்பாவில் சாப்பிடாமல், இல்லை போட்டுச் சாப்பிடுகிற வீடு ராமசாமியின் வீடுதான். அந்த வீட்டின் வாசலிலிருந்துதான் அந்த எச்சில் இலைகளை எடுத்துக் கொண்டு வந்து, அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பருக்கைகளையும் கரி வகைகளையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தான்.
செல்லையாவோ தம்பையாவோ ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கொண்டே நின்றார்கள்.
ஏற்கனவே யாரோ கடித்துச் சுவைத்துத் துப்பிய முருங்கைக் காய்ச் சக்கைகளில் ஒன்றை இலையிலிருந்து எடுத்தான் சிறுவன். அதை இரண்டாம் தடவையாகக் கடிக்க ஆரம்பித்தான்.
சீ! எச்சீ! ஆய் என்று சொல்லிவிட்டுக் கீழே தூ என்று துப்பினான் தம்பையா.
சிறுவன் ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் பழையபடியும் குனிந்து கொண்டான். செல்லையாவுக்குத் திடீரென்று ஏதோ உதயமானது போல், டேய்! ஏண்டா எங்க வீட்டு வாசலிலே வந்து உட்கார்ந்திருக்கே? போடா என்று அதட்டினான்.
சிறுவன் போகாவிட்டாலும் பயந்துவிட்டான்; அதனால் இடது கையால் தலையைச் சொறிந்துகொண்டு, அதிவேகமாக இலையை வழித்தான்.
உங்க வீட்டுக்குப் போயேன் என்றான் தம்பையா.
மழை பலமாகப் பிடித்து விடும்போல இருந்தது.அதற்குள்ளாக அவனை விரட்டிவிட்டு, வீட்டிற்குள் ஓடிவிட வேண்டும் என்று செல்லையாவும் தம்பையாவும் முடிவு கட்டினார்கள்.
போடா இல்லாட்டி உன் மேலே துப்புவேன் என்றான் தம்பையா. சிறுவன் எழுந்திருக்கும் வழியைக் காணோம்.
அவனைக் காலால் மிதிக்க வேண்டுமென்று தம்பையா தீர்மானித்தான்.
மழை சட சட வென்று பெய்ய ஆரம்பித்துவிட்டது.
வெளியே போன குழந்தைகள் மழையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற திகைப்புடன் தாயம்மாள் ஓடிவந்து, செல்லையா! என்று கூப்பிட்டாள்.
ம்ம் என்று பதில் வந்தது.
இருட்டிலே அங்க என்ன பண்றீங்க? என்று சொல்லிக் கொண்டே மரத்தின் பக்கமாக வந்துவிட்டாள். அங்கே வந்து, நின்று யோசிப்பதற்கு நேரமில்லை மழை. ஆகவே, மூன்று பேரையும் அவசர அவசரமாக வீட்டுக்குள்ளே அழைத்துக்கொண்டு ஓடிவந்தாள்.
சிறுவன் விளக்கு வெளிச்சத்தில் வந்து நின்றான். அவனுடைய உடம்பெல்லாம் ஒரே சிரங்கு. தலையில் பொடுகு வெடித்துப் பாம்புச் சட்டை மாதிரி தோல் பெயர்ந்திருந்தது. பக்கத்தில் வந்து நின்றால், ஒரு மாதிரி துர்வாடை. இந்தக் கோலத்தில் நின்றான் சிறுவன்.
இது யாரம்மா? என்று மங்கம்மாள் திகைப்போடு கேட்டாள்.
யாரோ? யார் பெத்த பிள்ளையோ? என்று சொல்லிவிட்டு, மழையில் நனைந்த குழந்தைகளைத் துவட்டப் பழைய துணியை எடுக்கப்போனாள். அவள் மறுபக்கம் திரும்பியதும், தம்பையா அம்மாவுக்குக் கேட்காமல், வாய்க்குள்ளேயே போடா என்று பயமுறுத்தினான்.
செல்லையா, போ என்று அவனைப் பிடித்துத் தள்ளினான்.
இவர்கள் இருவரையும் பார்த்து மங்கம்மாளும் அர்த்தமில்லாமல் போயேன் என்று சிணுங்கிக்கொண்டே சொன்னாள்.
அவ்வளவுதான், திடீரென்று மடை திறந்த மாதிரி கோ வென்று அழுது விட்டான். விஷயம் என்னவென்று தெரியாமல் பதைபதைப்புடன் ஓடி வந்தாள் தாயம்மாள்.
ஏண்டா அழுகிறே? சும்மா இரு. அவனை என்ன சொன்னீங்க நீங்க? என்று தன் குழந்தைகளைக் கேட்டாள்.
அவன் போன்னா, போகமாட்டேங்கிறான் என்று புகார் பண்ணுவதைப் போலச் சொன்னாள் மங்கம்மாள்.
சீ, அப்படி எல்லாம் சொல்லக்கூடாது! நீ சும்மா இரு அழாதேப்பா என்று சொல்லிச் சிறுவனைத் தேற்றினாள்.
சிறுவன் அழுகையை அப்படியே நிறுத்திவிட்டான். ஆனால், பெருமூச்சு விடுவதை மட்டும் அவனால் நிறுத்த முடியவில்லை.
சும்மா இரு தம்பி! அழாதே! என்று இரண்டாவது தடவையும் தாயம்மாள் சொன்னாள்.
பழைய துணியைக் கொண்டு செல்லையாவும் தம்பையாவும் உடம்பைத் துடைத்துக்கொண்டார்கள். உடனே மங்கம்மாள் தம்பையாவைப் பார்த்து. பாவம்! அவனுக்குக் குடு! என்றாள்.
தம்பையா துணியைக் கொடுத்தான்.
நீ சாப்பிட்டாயா? என்று தாயம்மாள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.
அவன் எச்சியைச் சாப்பிடுறான், அம்மா. ராமசாமி வீட்டிலிருந்து எச்சிலையை எடுத்துவந்து சாப்பிடுறான். அசிங்கம்! என்று முகத்தைச் சுளித்துக்கொண்டு சொன்னான் தம்பையா. குழந்தைகள் எல்லோரும் சிரித்தார்கள். இந்தா தம்பையா! இனிமே அப்படிச் சொல்லாதே! என்று அதட்டிவிட்டு, நீ யாரப்பா? உனக்கு எந்த ஊரு? என்று தாயம்மாள் சிறுவனை விசாரித்தாள்.
விளாத்திகுளம் என்றான் சிறுவன்.
உனக்குத் தாய் தகப்பன் இல்லையா?
இல்லை
இல்லையா? என்று அழுத்திக் கேட்டாள் தாயம்மாள்.
உம் செத்துப் போயிட்டாக.
எப்போ, தம்பி?
போன வருஷம் அம்மா செத்துப் போயிட்டா. ஐயா, நான் சின்னப்பிள்ளையாயிருக்கும் போதே செத்துப் போயிட்டாராம்.
உனக்கு அண்ணா தம்பி ஒருத்தரும் இல்லையா?
இல்லை
உடனே தம்பையா கேட்டான்:
தங்கச்சியும் இல்லையா?
இல்லை
பாவம் என்று சொல்லிவிட்டுத் தம்பையா நிறுத்திக் கொண்டான்.
இங்கே எதுக்கு வந்தே? என்று தாயம்மாள் கேட்டாள்.
கழுகுமலைக்குப் போறேன்.
அங்கே ஆரு இருக்கா?
அத்தை என்று பதில் சொன்னான் சிறுவன். அவன் விளாத்தி குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து அந்தக் கிராமம் வரையிலும் வந்திருந்தான். இந்த இருபது மெயில் பிரயாணத்துக்கு நான்கு நாட்களாகிவிட்டன. நான்காவது தினத்தில் தான் இந்தக் கிராமத்தில் வந்து தங்க நேர்ந்தது. அதுவும் பொழுது இருட்டி விட்டதனாலும் பசியும் இருந்ததனாலும் தான் மறுநாள் விடிந்த பிறகு, எட்டு மெயில் தூரம் நடந்து கழுகுமலைக்குப் போனால், அவனுடைய அத்தை தன் வீட்டில் அவனை வைத்துக் கொள்ளுவாளா, விரட்டி விடுவாளா என்பது அவனுக்குத் தெரியாது. அத்தையையும் அவன் பார்த்ததில்லை. எப்படியோ, ஒரு வழியில் அவனுக்கு அவள் அத்தை என்றும், அங்கே போ என்றும் யாரோ சொல்ல, அதை நம்பிக்கொண்டு அந்தச் சிறுவன் விளாத்திக் குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து வந்திருக்கிறான்.
மேற்கண்ட விவரங்களை எல்லாம் சிறுவனுடைய வாய் மொழி மூலமாகவே தாயம்மாள் அறிந்து கொண்டாள்.
உன் பேரு என்ன? என்று கடைசியாகக் கேட்டாள் தாயம்மாள்.
ராஜா என்றான் சிறுவன்.
அப்புறம் அவனுக்குச் சாப்பாடு போட்டார்கள். அவன் சாப்பிட்ட பிறகு, குழந்தைகளுக்குப் படுக்கையை எடுத்து விரித்தாள். மண் தரை ஈரச் சதசதப்புடன் இருந்ததால், வெறும் ஓலைப்பாயை விரித்துப் படுப்பதற்கு இயலாமல் இருந்தது. அதனால், கிழிந்து போய்க் கிடந்த மூன்று கோணிப் பைகளை எடுத்து உதறி விரித்து, அதன் மேல் வீட்டிலிருந்த இரண்டு ஓலைப் பைகளையும் பக்கம் பக்கமாக விரித்தாள். ராஜா தெற்குக் கோடியில் படுத்துக் கொண்டான். அவனுக்குப் பக்கமாகச் செல்லையாவும் அப்புறம் தம்பையாவும் படுத்துக் கொண்டார்கள். தம்பையாவின் உடம்பு இரண்டு பாய்களிலுமே பாதிப்பாதி படிந்திருந்தது. வடகோடியில் தாயம்மாளும் மங்கம்மாளும் படுத்துக் கொண்டார்கள்.
எங்கோ தூரத்தில், ஒரு வீட்டில் சீனிவெடி வெடிக்கும் சப்தம் கேட்டது. தீபாவளி மறுநாளானாலும், யாரோ ஒரு துருதுருத்த பையன் அப்பொழுதே (வேட்டுப்) போட ஆரம்பித்துவிட்டான்.
வேட்டுச் சத்தம் கேட்டதும், எனக்கு மத்தாப்பு என்றாள் மங்கம்மாள்.
எனக்கும் என்றான் தம்பையா.
நம்ம கிட்ட அதுக்கெல்லாம் பணம் ஏது மங்கம்மா? ராமசாமி பணக்காரன். அவனுக்குச் சரி, எவ்வளவு வேட்டுன்னாலும் போடுவான்.
ஊஹும் எனக்கு மத்தாப்பு என்று முரண்டு பண்ணினாள் மங்கம்மாள்.
வம்பு பண்ணாதே. சொன்னாக் கேளு. மத்தாப்பு கொளுத்தினா வயிறு நிறையாதா? காலையிலே உனக்கு தோசை சுட்டுத் தாரேன். நிறையச் சாப்பிடு, மத்தாப்பு எதுக்கு?
மங்கம்மாள் தன் முரண்டை நிறுத்தவில்லை; அழுவதுபோல் சிணுங்க ஆரம்பித்தாள்.
செல்லையா தூங்க ஆரம்பித்தான்.
அப்போது தெருவில் ஆட்கள் நடந்து செல்லும் சந்தடி கேட்டது.
சமீன் வந்து இறங்குறதுன்னா லேசா? என்று தாயம்மாள் தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு, மங்கம்மா! நீ நல்ல பிள்ளை! பிடிவாதம் பண்ணாதே. அடுத்த வருஷம் நிறைய மத்தாப்பு வாங்குவோம். இந்த வருஷம் நாம் எவ்வளவு சங்கடப் பட்டோம்ன்னு உனக்குத் தெரியாதா? என்றாள். அப்புறம் அவளால் சரியாகப் பேச முடியவில்லை. வாய் குழறியது. மங்கம்மாளைப் பார்த்துத்தான் அவள் பேசினாள். ஆனால் அவள் உண்மையில் தன்னுடைய தாயாரிடத்திலோ, தன்னை உயிருக்கு உயிராகப் பேணி வளர்த்த ஒரு கிழவியிடத்திலோ, தான் வருஷக் கணக்கில் அனுபவித்த துயரங்களைக் கண்ணீரும் கம்பலையுமாகச் சொல்லுவது போலவே பேசினாள். ஒரு நீண்ட பெருமூச்சுடன், மங்கம்மாள்! நீ கூட ஒரு நாள் சாப்பாடு இல்லாமெ பள்ளிக்கூடம் போனியே கண்ணு. உன் வயித்துக்குக் கூட அன்னிக்கு ஒருவாய்க் கூளு கெடைக்கல்லையே! (அவளுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.) சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் போது நீ மத்தாப்புக் கேக்கலாமா, கண்ணு? பேசாமப் படுத்துத் தூங்கு என்று தேற்றினாள். மங்கம்மாளைப் பரிவோடு தடவிக் கொடுத்தாள்.
ஒரு மத்தாப்பாவது வாங்கித் தா என்றாள் மங்கம்மாள்.
அழுகையுடனும் துயரச் சிரிப்புடனும் தாயம்மாள் சொன்னாள்: நீ தானே இப்படிப் பிடிவாதம் பண்றே? அந்தப் பையனைப் பாரு அவன் மத்தாப்பு கேக்கிறானா சோறு கிடைக்காமே, எச்சிலைக்கூட எடுத்துத் திங்கறான். அவன் சோறு வேணும்ன்னு கூட அழல்லே; நீ மத்தாப்பு வேனும்னு அழறே மங்கம்மா
மங்கம்மாளுக்கு அவன் மேல் கோவம் வந்துவிட்டது. அவனைப் புகழ்ந்து, தன் கோரிக்கையைத் தாயார் புறக்கணித்துக் கொண்டுவருவது அவளுக்குப் பிடிக்கவில்லை. உடனே, அவனுக்கு ஒரே சிரங்கு! என்று திட்டுவது போலக் கடுமையாகச் சொன்னாள்.
அவனுக்குத் தாய் தகப்பன் இருந்தா அப்படி இருப்பானா? தாயில்லாப் பிள்ளைன்னா யாரு கவனிப்பா? அவனோட அம்மா, முன்னாலே, அவனுக்குத் தீபாவளிக்குப் புதுவேட்டி, புதுச்சட்டை எல்லாம் வாங்கிக் குடுத்திருப்பா! மத்தாப்பும் வாங்கிக் கொடுத்திருப்பா. இப்போ, அவன் அதை எல்லாம் நினைச்சுக் கேக்கிறானா பாரு.
இப்போ அவன் தூங்கிட்டான். காலையில் கேப்பான் என்று சொல்லிவிட்டு மங்கம்மாள் சிணுங்கினாள்.தாயம்மாளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வாயாடி என்று சொல்லி மங்கம்மாளின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினாள்.
தாயம்மாளுக்குத் திகைப்பாக இருந்தது. எதை மூடிக்கிறது? ஊம்? என்று ஒரு கணம் யோசித்தால். அப்புறம், என் பிள்ளைகளை விடவா அந்தப் பீத்தல் பெரிசு? என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய், மறு நாள் கட்டிக்கொள்வதற்காக துவைத்து உலர்த்தி மடித்து வைத்திருந்த  உண்மையில் பீத்தல் இல்லாத நாட்டுச் சேலையை எடுத்துக்கொண்டு வந்து ராஜா உட்பட உல்லோருக்கும் சேர்த்துப் போர்த்தினாள்.
மங்கம்மாளைப் பார்த்து, சரி, படுத்துக்கோ காலையிலே எப்படியும் வாங்கித் தாரேன் என்று சொல்லி அவளை உறங்கப் பண்ணுவதற்கு முயன்றாள்.
மூன்றாவது தடவையாகவும் சீனவெடியின் சப்தம் கேட்டது.
தாயம்மாள் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்: இன்னிக்கு அங்கே யாரும் தூங்கமாட்டாக போலிருக்கிறது! ஊம், அரண்மனைக் காரியம்! ஆளு போறதும் வாரதுமா இருக்கும். ராமசாமியும் தூங்காம வேட்டுப் போடுறான்!
ராமசாமியின் அக்காளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டவன் ஒரு ஜமீன்தாரின் மகன். அந்த வருஷம் தலை தீபாவளிக்காக அவனை அன்று மாலையில் அழைத்து வந்திருந்தார் ராமசாமியின் தகப்பனார். அந்த ஊரில் மட்டுமில்லாமல் அந்த வட்டாரத்திலேயே அவர்தான் பெரிய மிராசுதார். ஜமீன்தாரை, மிகவும் கோலாகலமாக அழைத்து வந்து தீபாவளி நடந்த அநேக தினங்களாகவே அவர் வீட்டில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. தீபாவளிக்கு முதல் நாள்தான் மாப்பிள்ளை வந்து இறங்கினான். அதற்க்கு முன் பத்துப் பதினைந்து நாட்களாக ஒரு நிமிஷத்திற்கு ஒன்பது தடவை, ராஜா வர்றார், சிறப்பாகச் செய்யணும் என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். உண்மையில் வெகு சிறப்பாகத்தான் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன
மங்கம்மா!
பதில் இல்லை; தூங்கிவிட்டாள்.
தாயம்மாளும் அகல் விளக்கை அணைத்துவிட்டுத் தலையைச் சாய்த்தாள்.
முதல் கோழி கூப்பிட்டதும் தாயம்மாள் கண்விழித்து விட்டாள். அப்போது மணி நாலு ஆகவில்லை. நல்ல வேளையாக மழை அப்போதுதான் நின்றிருந்தது சிறு தூவானம் மட்டும் ஓலைக் கூரையில் விழுவது, ஒரே நிதானத்துடன் சோளம் பொரிவது போலக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தத் தெருவில் வேறு சில வீடுகளில் ஏற்கனவே எழுந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடத் தொடங்கி விட்டதற்கு அடையாளமாக வேட்டுச் சப்தமும், வேட்டுச் சப்தத்தைக் கேட்டுப் பயந்து நாய்கள் குரைக்கும் சப்தமும் கேட்டுக் கொண்டிருந்தன.
தாயம்மாள் எழுந்து விளக்கை ஏற்றினாள். பழைய படியும் மழை பிடித்து விடக்கூடாதே என்று அவளுக்கு பயம். அதனால் குழந்தைகளை எழுப்பி, விறுவிறு என்று குளிப்பாட்டிவிட்டு, மற்ற வேலைகளை கவனிக்கலாம் என்று திட்டம் செய்தாள். குழந்தைகளுக்குப் படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. கடைசியில் முனகிக் கொண்டும், புரண்டு படுத்துக்கொண்டும் ஒருவழியாக எழுந்து விட்டார்கள். அவள் ஒவ்வொரு குழந்தையாக எண்ணெய் தேய்த்து விட்டாள். ஆனால் ராஜா மட்டும் எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாது என்று சொல்லித் தூரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காவிட்டால் தோஷம் என்று சொன்னாள். ராஜாவுக்கோ என்ன சொன்னாலும் காதில் ஏறவில்லை.
அரப்புக் காந்தும்; நான் மாட்டேன். என்று பிடிவாதமாகச் சொன்னான் ராஜா.
அரப்புப் போடல்லே; சீயக்காய் போட்டுக் குளிப்பாட்டுறேன். குளிர்ச்சியாயிருக்கும்
ஊஹும்.
தம்பி, சொன்னாக் கேளுடா. என்னை உன் அம்மான்னு நெனைச்சுக்கோ, உனக்குக் காந்தும் படியாக நன் தேய்ப்பனா?  வா, எண்ணெய் தேய்ச்சிக் குளி. இந்தத் தீபாவளியோடே பீடை எல்லாம் விட்டுப்போகும். குளிக்காம இருக்கக்கூடாதப்பா  இப்படி வெகுநேரம் கெஞ்சிய பிறகுதான் அவன் வேறு வழி இல்லாமல் சம்மதித்தான்.
ராஜா எழுந்து வந்து மணையில் உட்கார்ந்தான். அது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம். ஒரு பிள்ளைக்குத் தேச்சி, ஒரு பிள்ளைக்கு தேக்காமல் விடலாமா? என் பிள்ளை குட்டியும் நல்லா இருக்கனுமில்லப்பா! என்று மற்றவர்களுக்குச் சொல்லுவது போலத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டே எண்ணெய் தேய்த்தாள். தாயில்லாக் குழந்தைன்னா இந்தக் கோலம் தான். நான் மூணாம் வருஷம் காய்ச்சலோட படுத்திருன்தேனே, அப்போ கண்ணை மூடியிருந்தா என் குழந்தைகளுக்கும் இந்தக் கதிதானே? அதுகளும் தெருவிலே நின்னிருக்கும்.  இப்படி என்னென்னவோ மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவசர அவசரமாகக் குழந்தைகளைக் குளிப்பாட்டினாள். ஆனால், தாயம்மாள் பயபத்திரமாகச் சீயக்காய்த் தூளைப் போட்டுத் தேய்த்த போதிலும், ராஜா பல தடவைகள் ஐயோ, ஐயோ என்று அழுதுவிட்டான். அவன் அழும்போதெல்லாம் அவள் இன்னிக்கோட உன் சிரங்கு குணமாயிரும் என்று மட்டும் மாறி மாறிச் சொல்லிக்கொண்டே இருந்தாள்.
யாரோ எவரோ? மழைன்னு வந்து வீட்டிலே ஒதுங்கிட்டான். அவனைப் போகச் சொல்ல முடியுமா! அவன் வந்த நேரம், தீபாவளியாப் போச்சு. குழந்தைகளுக்குள்ளே வஞ்சம் செய்யலாமா? பார்க்கிறவுகளுக்கு நான் செய்யறதெல்லாம் கேலியாயிருக்கும். அவுக கேலி செய்தாச் செய்துட்டுப் போகட்டும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் பகவான் துணை செய்வான்.
அவள் தோசை சுட்டுக் கொடுத்தாள். அவளுடைய குழந்தைகள் புதுத் துணி உடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் அவசர அவசரமாகச் சாப்பிட்டார்கள். தம்பையா கடைசித் தோசையைப் பாதியிலேயே வைத்து விட்டு எழுந்துவிட்டான். அவனால் மேற்கொண்டும் இரண்டு தோசைகள் சாப்பிட முடியும். இருந்தாலும் அவசரம்.
தெருவில் ஜன நடமாட்டம் தொடங்கிவிட்டது. மழையும் பரிபூரணமாக நின்றுவிட்டது. உதயத்தின் ஒளி சல்லாத் துணியைப்போல அவ்வளவு மெல்லியதாக ஊரையும் உலகத்தையும் போர்த்தியது.
புதுத் துணிகளுக்கு மஞ்சள் வைத்துச் செல்லையாவும் உடுத்துக் கொண்டான்; தம்பையாவும் உடுத்துக் கொண்டான். மங்கம்மாளும் பாவாடையும் சட்டையும் போட்டுக் கொண்டாள்.
அவன் கௌபீனத்தோடு நின்றான்.
தாயம்மாளுக்குப் பகீர் என்றது. இத்தனையும் செய்தும் புண்ணியமில்லாமல் போய்விட்டதே என்று கலங்கினாள். இந்த மாதிரியான ஒரு கட்டத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. சிட்டைத் துண்டை எடுத்துக் கொடுப்பதா, கொடுக்காமல் இருப்பதா? அவள் மனதுக்குள்ளே வேதனை மிக்க போராட்டம். மாதக் கணக்கில் ஒரு ரூபாய்த் துண்டு இல்லாமல் அவளுடைய கணவன் பட்ட கஷ்டத்தையும், வீதிவழிப் போவதற்குக் கூசியதையும், ஒரு துண்டு வாங்க வழியில்லையே! என்று கணவன் துயரத்துடன் வாய்விட்டுப் புலம்பியதையும் நினைத்துப் பார்த்தாள். இந்தத் துயரத்தின் எதிர்புறத்தில், ஒன்றும் சொல்லாமல், ஒன்றும் செய்யாமல், மெளனமாக நின்று கொண்டிருந்தான் ராஜா.
தாயம்மாளுக்குத் திக்குத் திசை தெரியவில்லை; ராஜாவின் முகத்தை எதற்கோ ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள். ராஜாவோ வெகுநேரமாகக் கண்கொட்டாமல் அவளையே பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்.
என்னைச் சோதிக்கத்தான் வந்திருக்கேடா நீ என்று மனக் கசப்புடன் சொல்வது போலச் சொன்னாள் தாயம்மாள். ஆனால், அவளுக்கும் மனக் கசப்புக்கும் வெகுதூரம். மனதுக்குள் ஏற்பட்ட சிக்கல்களை விடுவிக்கவே இப்படிப்பட்ட ஒரு வாசகத்தை அவள் தூக்கிப் போட்டாளே ஒழிய அவள் சொற்களில் மனக்கசப்பின் நிழல் கூடப் படியவில்லை.
அப்போது மங்கம்மாள் எழுந்துவந்து அம்மாவின் கன்னங்களில் தன் உள்ளங்கைகளை வைத்து, தன் முகத்துக்கு நேராக அவளுடைய முகத்தைத் திருப்பினாள்; அப்புறம் ஏதோ ரகசியத்தைச் சொல்லுவதுபோலச் சொன்னாள்.
பாவம்! அவனுக்கு அந்தத் துண்டைக்குடு அம்மா!
குழந்தை இந்த வார்த்தைகளைச் சொல்லி நிறுத்தினாள். ஒரு நிமிஷம் மௌனம் நிலவியது. பிறகு, திடீரென்று தாயம்மாளின் முகம் கோரமாக மாறியது. முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். அவளுடைய பெருமூச்சும் விம்மலும் வீட்டை அடைத்துக் கொண்டு கேட்டன.
குழந்தைக்கு விஷயம் விளங்கவில்லை. மங்கம்மாள், தான் அப்படிச் சொன்னதர்க்காகத் தான் அம்மா அழுகிறாள் என்று பயந்துவிட்டாள்.
தாய், தன் பலத்தை எல்லாம் பிரயோகித்து அழுகையைத் தொண்டைக் குழியில் அழுத்தினாள், அவள் நெஞ்சு வெடித்துவிடும் போல் விம்மியது. குரலும் அந்த ஒரு நிமிஷத்தில் ஜலதோஷம் பிடித்ததுபோலக் கம்மலாகி விட்டது.
பிறகு தழுதழுத்துக் கொண்டே சொன்னாள்:
தம்பையா!
என்னம்மா!
ஹூம், ராஜாவுக்கு அந்தத் துண்டை எடுத்துக்குடு.
வீட்டு முற்றத்தில் காலைவெயில் அடித்துக் கொண்டிருந்தது. அந்தப் பொன்னொளியில் மஞ்சள் பூசிய முகத்துடன் புத்தாடை தரித்துக்கொண்டு நிற்கும் மங்கம்மாள், அப்போது எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். ஈரம் காய்வதற்கா இருக்கமில்லாதத் தொள தொள என்று சடை போடப் பட்டிருந்ததால், கூந்தல், இரண்டு காதுகளையும், கன்னங்களில் பாதியையும் மறைத்துக் கொண்டிருந்தது. பரவலாகக் கிடக்கும். கூந்தலின் நடுவே இளங்காற்றுப் புகுந்து சிலுசிலுக்கும் போது, சுகமும் கூச்சமும் தாங்க முடியாமல் சிரித்துக் கொண்டே இமைகளைக் குவித்தாள் மங்கம்மாள்.
வெகு நேரமாக, தாயம்மாள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். சந்தர்ப்பவசமாக, அவளுக்கு நேராக மங்கம்மாள் முகத்தைத் திருப்பினாள்.
என் ராஜாத்தி மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா! என்று தன்னை மறந்து இன்பத்துடன் சொல்லிவிட்டாள் தாய். அவ்வளவுதான். குழந்தையின் கையைப் பிடித்து வெகுவேகமாக வீட்டுக்குள்ளே இழுத்துக்கொண்டு வந்து, திருஷ்டிப் பரிகாரமாக அவளுடைய கன்னத்தில் துலாம்பரமாகச் சாந்துப் பொட்டை எடுத்து வைத்தாள்.
அப்புறம் மங்கம்மாள் வீதிக்கு ஓடிவிட்டாள். ராமசாமியின் வீட்டுப் பக்கம் எச்சில் இலைகள் ஏராளமாகக் கிடந்தன. அங்கே நாலைந்து பேர் நின்று பேசிக் கொண்டும், வெற்றிலை பாக்குப் போட்டுத் துப்பிக் கொண்டும் இருந்தார்கள். ராமசாமி நீலநிறமான கால்சட்டையும், அந்த ஊருக்கே புதிய புஷ்கோட்டும் போட்டுக் கொண்டு நின்றான். மங்கம்மாளைப் பார்த்ததும் அவன் பக்கத்தில் ஓடிவந்தான்; மங்கம்மாளும் அவனைப் பார்த்து நடந்தாள். இருவரும் பாதி வழியில் சந்தித்துக் கொண்டனர். சந்தித்த மாத்திரத்தில், மிகவும் சந்தோஷத்துடன் ராமசாமி சொன்னான்
எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கார்!
ஊர்க்காரர்களைப் போல அவனும் தன் அக்காள் புருஷனை ராஜா என்று சொன்னான். ஆனால் அவன் சொன்னதற்குக் காரணம் சந்தோஷம்தானே ஒழிய மங்கம்மாளைப் போட்டிக்கு அழைப்பதற்கு அல்ல. ஆனால், அவளோ வேறுவிதமாக நினைத்து விட்டாள். முதல் நாள் பள்ளிக் கூடத்திலிருந்து வந்தபோது நடந்த போட்டிதான் அவள் ஞாபகத்தில் இருந்தது. அவன் சொன்னதற்குப் பதில் சொல்லி அவனுடைய பெருமையை மட்டம் தட்டவேண்டும் என்று அவள் மனம் துடித்தது.
அதனால் ஒரு அரை அடி முன்னாள் நகர்ந்து வந்து நின்றாள். யாதொரு திகைப்பும், தயக்கமும் இல்லாமல் ராமசாமியைப் பார்த்து, ரேகை சாஸ்திரியிடம் காட்டுவது போலக் கையை வைத்துக் கொண்டு, மிக மிக ஏளனமாகச் சொன்னாள்.
ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கார்? எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கார். வேணும்னா வந்து பாரு.
 எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத் தனமாகக் கேட்டான் ராமசாமி.செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்; மங்கம்மாள் மூக்கின் மேல் ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டும் கண்ணை இலேசாக மூடிக்கொண்டும் லேசாக யோசனை செய்தாள். அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்றப் பிள்ளைகள்.அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்திய தேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். செல்லையா அந்த வருடம் இந்திய தேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான்.

 இருவரும் படப் போட்டியை ஆரம்பித்து விட்டார்கள்.ராமசாமி தன் புத்தகத்தை முதலிலிருந்து ஒவ்வொரு தாளாகத் திருப்புவான்; படம் இருக்கும் பக்கத்தைச் செல்லையாவுக்குக் காட்டி, இதோ, இந்தப் படத்துக்குப் பதில் படம் காட்டு என்பான். செல்லையா தன் புத்தகத்தைத் திறந்து அதில் உள்ள ஒரு படத்தைக் காட்டுவான்; பிறகு, இருவருமே புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டுவார்கள். யாராவது ஒருவருடைய புத்தகத்தில் அடுத்த படியாகப் படம் வரும்; உடனே, அந்தப் படத்துக்கு அடுத்தவன் பதில் படம் காட்ட வேண்டும். இவ்விதமாக பதிலுக்குப் பதில் படம் காட்டிய வண்ணம் புத்தகம் முழுவதையும் புரட்டுவார்கள்.எவன் புத்தகத்தில் அதிகப் படங்கள் இருக்கின்றனவோ, அவன் ஜெயித்து விடுவான்; மற்றவன் தோற்றுப் போவான். உடனே ஜெயித்தவன், உனக்குப் படம் காட்ட முடியல்லே! தோத்துப் போயிட்டியே! என்று பரிகாசம் செய்வான். இந்த மாதிரியான படப் போட்டிதான் அன்றும் நடந்து கொண்டிருந்தது.போட்டி பாதியில் நிற்கிறது. அந்தச் சமயத்தில் ஐந்தாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் வந்துவிட்டார். அந்த கணக்கு வாத்தியார் மிகவும் கெடுபிடியானவர். அவர் வகுப்பில், பையன்கள் வெளியே தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்க முடியாது. தவிரவும் கணக்குப் போடும்போது, பென்சிலும், கையுமாக இருக்க வேண்டும். இதில், படப்போட்டி நடத்துவது எப்படி?வாத்தியார் வந்ததும் இவருடைய போட்டியும் நின்றுவிட்டது. கடைசியில், சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வெளியே வந்த பிறகு, ஒரு வேப்பமரத்தின் அடியில் நின்று இருவரும் அந்தப் போட்டியை நடத்தினார்கள்.

 ராமசாமியின் சரித்திரப் புத்தகத்தில் பாதிதான் தாண்டியிருக்கும்; ஆனால் செல்லையாவின் சிவிக்ஸ் புத்தகம் முடிந்துவிட்டது. செல்லையா தோற்றுப் போய்விட்டான். பக்கத்தில் நின்ற பிள்ளைகள் அவனைக் கேலி செய்தார்கள். தங்கள் அண்ணன் தோற்றுப் போனதைக் கண்டு, தம்பையாவுக்கும் மங்கம்மாளுக்கும் சொல்லமுடியாத வருத்தம்.அந்த இடத்தை விட்டு எல்லோரும் வீட்டுக்குப் போகப் புறப்பட்டார்கள். நடந்து செல்லும்போதே, படப் போட்டி வேறொரு அவதாரம் எடுக்கத் தொடங்கியது. எங்கள் வீட்டில் அது இருக்கே, உங்கள் வீட்டில் இருக்கா? என்று இருவரும் ஒருவரிடம் ஒருவர் கேட்க ஆரம்பித்தனர். இந்தப் புதுப் போட்டியின் கடைசிப் பகுதியில் தான் ராமசாமி, எனக்கு சில்க் சட்டை இருக்கே, உனக்கு இருக்கா? என்று கேட்டான்.வேப்ப மரத்தைவிட்டு, அரை பர்லாங் தூரத்திலுள்ள பார்வதியம்மன் கோவில் பக்கமாக வந்தாய்விட்டது. இன்னும் செல்லையாவோ தம்பையாவோ ராமசாமிக்கு பதில் சொல்லவில்லை. ஆனால், மங்கம்மாள் திடீரென்று எல்லோரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு, ராமசாமியின் முன்னாள் வந்து நின்றாள் குழந்தைகள் எல்லோரும் மங்கம்மாவையே கவனித்துக் கொண்டிருந்தார்கள்.அவள், ரேகை சாஸ்திரியிடம் காட்டுவது போலக் கையை வைத்துக் கொண்டு, ஐயோ! சில்க் சட்டை எதுக்காம்? ஹூம், லேசாச் சருகு மாதிரி இருக்கும். சீக்கிரம் கிழிஞ்சி போகும். (செல்லையாவின் சட்டையைக் காட்டி) இதுதான் கனமாயிருக்கு.

 ரொம்ப நாளைக்குக் கிழியாமே இருக்கும். நல்லாப்பாரு! என்று மிகமிகப் பரிகாசமாகச் சொல்லிவிட்டு செல்லையாவின் பக்கத்தில் வந்து நின்றாள்.ராமசாமி திகைத்து நின்றுவிட்டான். முதல் வகுப்பில் படிக்கும் மங்கம்மாள், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் தன்னை இப்படித் தோற்கடித்து விட்டாளே என்று சங்கடப்பட்டான். பிள்ளைகள் ராமசாமியைப் பார்த்து, தோத்துப் போயிட்டியா! என்று ஏளனம் பண்ணினார்கள்.மங்கம்மாள் செல்லையாவின் சட்டையைப் பிடித்துக்கொண்டு, அவனை ஒட்டி உரசி நின்று கொண்டாள். நடக்கும் போதும் அப்படியே நடந்து வந்தாள். அவள் மனதிற்குள்ளே ஒரு பெருமிதம்.ராமசாமி அடுத்து கேள்வியைப் போட்டான்: எங்கள் வீட்டிலே ஆறு பசு இருக்கு; உங்க வீட்டிலே இருக்கா?இதற்குச் செல்லையா பதில் சொல்லவில்லை; மங்கம்மாளும் பதில் சொல்லவில்லை. தம்பையா, இவுஹதான் பணக்காரராம்! அதுதான் ரொம்பப் பெருமை ஹூம்! பெருமை பீத்திக்கலாம்என்று சொல்லி நிலைமையைச் சமாளிக்க முயன்றான். அது முடியவில்லை. அந்தச் சமயத்தில் செல்லையா, அது சரி, எங்க வீட்டிலே ஒன்பது கோழி இருக்கு, உங்க வீட்டிலே இருக்கா? என்று ஒரு போடு போட்டான்.ராமசாமியும் தயங்கவில்லை: நாங்கள் உங்களைப் போலக் கோழி அடிச்சுச் சாப்பிட மாட்டோம். நாங்க எதுக்குக் கோழி வளக்கணும்? அதுதான் எங்க வீட்டிலே கோழி இல்லே என்றான்.அதெல்லாம் சும்மா.

 ஒன்பது கோழி இருக்கா, இல்லையா? என்று ஒரே பிடிவாதமாகக் கேட்டான் செல்லையா.ராமசாமிக்கு பதில் சொல்ல முடியவில்லையே என்று கூட வருத்தமில்லை. மற்றப் பிள்ளைகள் எல்லோரும் ஒன்று கூடிக் கொண்டு அவனைப் பரிகாசம் செய்வதை அவனால் தாங்கமுடியவில்லை.அழுகை வரும் போல இருந்தது. அதனால் எல்லோரையும் விட வேகமாக நடக்க ஆரம்பித்தான். மற்றப் பிள்ளைகளும் அதே வேகத்தில் நடந்தார்கள். சிறு குழந்தையாக இருக்கும் மங்கம்மாள் அதே வேகத்தில் நடக்க முடியாது. அதனால் ஓடினாள்.சிற்சில குழந்தைகள் தங்கள் தங்கள் வீட்டுக்கு நேராக வந்த மாத்திரத்தில் கூட்டத்திலிருந்து விலகி வீட்டுக்குப் போய் விட்டார்கள். கூட்டம் குறையக் குறைய ராமசாமியின் அவமானமும் குறைந்துகொண்டு வந்தது.மேலத் தெருவுக்குள் நுழையும் போது, ராமசாமியும் அவனுடைய எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூவரும்தான் மிஞ்சினார்கள். ஏனென்றால், அந்தக் குக்கிராமத்துப் பள்ளிப் பிள்ளைகளில், இவர்களுடைய வீடுகள் தான் மேலத் தெருவில் இருந்தன.ராமசாமியின் வீடு முதலாவதாக வந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டுக்குள்ளே பாய்ந்தான் ராமசாமி. உடனே, வீதியில் நின்ற அந்த மூவரும், தோத்தோ நாயே! என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டும், கையால் சொடுக்குப் போட்டுக்கொண்டும் நின்றார்கள்.அப்போது வீட்டுக்குள்ளிருந்து ஒரு மீசைக்காரன் தலைப்பாக் கட்டுடன் வெளியே வந்தான். அவன் ராமசாமியின் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன்.

 குழந்தைகள் மூவரும் கிழிந்துபோன அழுக்குத் துணியுடனும், பரட்டைத் தலையுடனும் தெருவில் நின்று, ஒரே குரலில் தோத்தோ நாயே! என்று சொல்வதைப் பார்த்து, சீ, கழுதைகளா! போறீகளா, எண்ணமும் வேணுமா? என்று அதட்டினான். மூன்று பேரும் நாலுகால் பாய்ச்சலில் ஓடிவிட்டார்கள். அவர்கள் போன பிறகு, பிச்சைக்காரக் கழுதை! தோத்தோ! நாயே!கழுதை! என்று தனக்குத் தானே ஏகத்தாளமாச் சொல்லிக் கொண்டு, தன வேலையைக் கவனிக்கப் போனான்.செல்லையா, தம்பையா, மங்கம்மாள்  மூன்று பேரும் நெஞ்சோடு புத்தகக் கட்டுக்களை அணைத்துக்கொண்டு வீடு சேரும் போது, அவர்களுடைய தாயார் தாயம்மாள் வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தாள்.மங்கம்மாள் ஒரே ஓட்டமாக ஓடி, அம்மாஎன்று தாயம்மாளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டாள்.குனிந்து வாசல் தெளித்துக் கொண்டிருந்த தாய் செல்லமாக, ஐயோ! இது என்னடா இது! என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு அழுவது போலச் சிரித்தாள்! அம்மா அழுவதைக் கண்டு மங்கம்மாளுக்கு அடக்க முடியாதபடி சிரிப்பு வந்தது.ஐயா வந்துட்டாரா அம்மா? என்று தம்பையா கேட்டான். அப்பாவைத் தான் ஐயா என்று அந்த கிராமத்துப் பிள்ளைகள் குறிப்பிடிவார்கள்.வரலையே! என்று பொய் சொல்லிவிட்டு, பொய்ச் சிரிப்பும் சிரித்தாள் தாயம்மாள்.நிஜம்மா? என்று கேட்டான் தம்பையா.

 நிஜம்ம்ம்மா தான்! என்று சொன்னாள் தாயம்மாள். அப்புறம் சிரித்தாள்.மங்கம்மாள் விறுவிறு என்று அம்மாவுக்கு முன்னாள் வந்து நின்றாள். வலது கையிலிருந்து புத்தகக்கட்டை இடது கையில் இடுக்கிக் கொண்டாள். வலது கையின் ஆள்காட்டி விரலை மூக்கின் மேலும், புருவங்களுக்கு மத்தியிலும் வைத்துக்கொண்டு, முகத்தையும் ஒரு பக்கமாகத் திருப்பிக்கொண்டு, அம்மா! எனக்குத் தெரிஞ்சு போச்சு! நீ பொய் சொல்றே! ஐயா வந்துட்டாரு! என்று நீட்டி நீட்டிச் சொன்னாள்.தாயம்மாளுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பல்லை இறுகக் கட்டிக்கொண்டு, போக்கிரிப் பொண்ணு! என்று மங்கம்மாளின் கன்னத்தைக் கிள்ளினாள்.செல்லையா மிகவும் ஆழமான குரலில், ஐயா வரல்லையாம்மா? என்று கேட்டான். அவன் குரலில் சோகம் ததும்பி, ஏமாற்றம் இழையோடியிருந்தது.தாயம்மாள் வீட்டிற்குள் நுழைந்தாள். மூளையிலிருந்த ஒரு ஜாதிக்காய்ப் பொட்டியைச் சுட்டிக்காட்டி, அந்தப் பெட்டியைத் திறந்து பாரு மங்கம்மா என்றாள்.மூவருமே ஓடிப்போய்ப் பெட்டியைத் திறந்தனர்.பெட்டிக்குள்ளே இருந்த ஜவுளிப் பொட்டணத்தை வெளியே எடுத்து அவிழ்த்துப் பார்த்தனர்.

 மறுநாள் விடிந்த பிறகு ஆரம்பமாகும் தீபாவளி, குழந்தைகளுக்கு அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. ஒரே குதூகலம்! ஒவ்வொரு துணியாக எடுத்து, இது யாருக்கு இது யாருக்கு என்று இனம் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.பொட்டணத்தில் இரண்டு மல் பனியன்களும், இரண்டு கால் சட்டைகளும், ஒரு பாவாடையும், ஒரு பச்சை நிறமான சட்டையும், ஒரு நான்கு முழ ஈரிழைச் சிட்டைத் துண்டும் இருந்தன.துண்டைத் தவிர மற்ற உருப்படிகள் இன்னின்னாருக்குத்தான் என்று குழந்தைகளே பங்கு போட்டுவிட்டார்கள். துண்டுயாரைச் சேருவது என்று தெரியவில்லை உடனே செல்லையா கேட்டான்: துண்டு யாருக்கும்மா?ஐயாவுக்கு என்றாள் தாயம்மாள்.அப்படின்னா உனக்கு? என்று மங்கம்மாள் கேட்டாள்.தாயம்மாள் சிரித்துக்கொண்டு, எனக்குத் தான் ரெண்டு சீலை இருக்கே இன்னும் எதுக்கு? எல்லோரும் புதுத்துணி எடுக்க நாம் என்ன பணக்காரரா?ஐயாவுக்கு மட்டும் பிறகு புதுத்துண்டு எதுக்காம்? என்றாள் மங்கம்மா.வாயாடி! வாயாடி! ஐயாவுக்கு ஒரு துண்டுகூட இல்லே. துண்டு இல்லாமே எத்தனை நாளைக்குப் பழைய வேட்டியை உடம்பிலே போட்டுக்கிட்டு அலையறது? என்று சொல்லிவிட்டு, மங்கம்மாளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள் தாய்.அந்தி மயங்கி, இருட்டத் தொடங்கியது. விளக்கேற்றுவதற்காகத் தாயம்மாள் எழுந்தாள்.

 விளக்கேற்றிவிட்டுக் குழந்தைகளை வெந்நீரில் குளிப்பாட்டி விட்டாள். ஐப்பசி மாதமானதால் அநேகமாக நாள் தவறாமல் மழை பெய்திருந்தது. பூமி குளிர்ந்து ஜில்லிட்டு விட்டது. காற்றும் ஈரக்காற்று. இதனால் வெந்நீரில் குளித்துவிட்டு வந்த குழந்தைகளை ஈரவாடை அதிக வேகத்துடன் தாக்கியது. எல்லோரும் குடுகுடு என்று முற்றத்திலிருந்து வீட்டுக்குள்ளே ஓடி வந்து விட்டார்கள்.குழந்தைகள் சாப்பிடும்போதுதான், அவர்களுடைய அப்பா பக்கத்துக் கிராமத்துக்கு ஒரு தூர பந்துவின் திடீர் மரணத்தை முன்னிட்டுச் சென்றிருப்பதாகவும், மறுநாள் மத்தியானத்துக்குள் வந்துவிடுவார் என்றும், வரும்வரை காத்திருக்காமல் குழந்தைகளோடு தீபாவளி கொண்டாடி விடவேண்டும் என்று அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் என்றும் தாய் தெரிவித்தாள்.சாப்பாடு முடிந்தது. ராப் பாடம் படிக்க மாடக்குழியில் இருந்த அகல் விளக்கைத் தூண்டிவிட்டுக் கொண்டு அதன் முன்னால் மூன்று பெரும் உட்கார்ந்தார்கள்.தாயம்மாள் சாப்பிட்டுவிட்டு, எச்சில் கும்பாக்களைக் கழுவ முற்றத்துக்கு வந்தாள். முற்றத்தின் மூலையில் கொஞ்ச தூரத்துக்கு அப்பால் ஒரு முருங்கை மரம் உண்டு. அதன் நிழலில் கருப்பாக ஓர் உருவம் தெரிந்தது. பக்கத்து வீட்டு நாயாக இருக்கும் என்று நினைத்து உள்ளே வந்துவிட்டாள்.மண் தரையில் முந்தானையை விரித்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு, குழந்தைகள் உரக்கச் சத்தம்போட்டுப் பாடம் படிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் தாய். சிறிது நேரத்தில், தரை என்னமாக் குளுருது! ராத்திரி எப்படிப் படுத்துக்கிடுறது? என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். அவளுடைய உடம்பு அவளுடைய ஸ்பரிசத்துக்கே ஜில் லென்றிருந்தது.தம்பையா, அண்ணனைப் பார்த்து, துணைக்கு வர்ரயா? என்று கூப்பிட்டான்.

 இருட்டானதால் வீட்டு முற்றத்துக்குப் போய் ஒன்றுக்குப் போய்விட்டுவர அவனுக்கு பயம். செல்லையா துணைக்குப் போனான். இந்தச் சிறுவர்களின் கண்ணிலும் முருங்கை மரத்தடியில் இருந்த கருப்பு உருவம் தென்பட்டது. அதைப் பார்த்து பயந்து போகாமல் இவர்கள் தைரியமாக நின்றதற்குக் காரணம், ராமசாமியின் வீட்டை நோக்கிப் போகும் இரண்டு பேர் இரண்டு பெட்ரோமாக்ஸ் விளக்குகளைக் கையில் எடுத்துக் கொண்டு போனதுதான். ஆள் நடமாட்டமும் விளக்கு வெளிச்சமும் சேர்ந்து தைரியம் கொடுத்தன. இருவரும் கருப்பு உருவத்தைக் கூர்ந்து பார்த்தார்கள்.அது இவர்களைப்போன்ற ஒரு சிறுவனுடைய உருவம்தான்.உடனே இருவரும் பக்கத்தில் போனார்கள். அப்பொழுது மழை இலேசாகத் தூற ஆரம்பித்தது. அதனால் முருங்கை மரத்துக்குக் கீழாகப்போய் நின்று கொண்டு, அந்தச் சிறுவனுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.அவனுக்கு வயது எட்டு அல்லது ஒன்பது இருக்கும். அவன் உடம்பில் அழுக்கடைந்த கௌபீனம் ஒன்றைத் தவிர, வேறு உடைகள் கிடையாது, தரையில் உட்கார்ந்தால் குளிரும் என்று, பாதங்கள் மட்டும் தரையில் படும் படியாக அவன் குந்திக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னாள் மூன்று எச்சில் இலைகள். கிராமத்தில் வெண்கலக் கும்பாவில் சாப்பிடாமல், இல்லை போட்டுச் சாப்பிடுகிற வீடு ராமசாமியின் வீடுதான். அந்த வீட்டின் வாசலிலிருந்துதான் அந்த எச்சில் இலைகளை எடுத்துக் கொண்டு வந்து, அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பருக்கைகளையும் கரி வகைகளையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தான்.செல்லையாவோ தம்பையாவோ ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கொண்டே நின்றார்கள்.

 ஏற்கனவே யாரோ கடித்துச் சுவைத்துத் துப்பிய முருங்கைக் காய்ச் சக்கைகளில் ஒன்றை இலையிலிருந்து எடுத்தான் சிறுவன். அதை இரண்டாம் தடவையாகக் கடிக்க ஆரம்பித்தான்.சீ! எச்சீ! ஆய் என்று சொல்லிவிட்டுக் கீழே தூ என்று துப்பினான் தம்பையா.சிறுவன் ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் பழையபடியும் குனிந்து கொண்டான். செல்லையாவுக்குத் திடீரென்று ஏதோ உதயமானது போல், டேய்! ஏண்டா எங்க வீட்டு வாசலிலே வந்து உட்கார்ந்திருக்கே? போடா என்று அதட்டினான்.சிறுவன் போகாவிட்டாலும் பயந்துவிட்டான்; அதனால் இடது கையால் தலையைச் சொறிந்துகொண்டு, அதிவேகமாக இலையை வழித்தான்.உங்க வீட்டுக்குப் போயேன் என்றான் தம்பையா.மழை பலமாகப் பிடித்து விடும்போல இருந்தது.அதற்குள்ளாக அவனை விரட்டிவிட்டு, வீட்டிற்குள் ஓடிவிட வேண்டும் என்று செல்லையாவும் தம்பையாவும் முடிவு கட்டினார்கள்.போடா இல்லாட்டி உன் மேலே துப்புவேன் என்றான் தம்பையா. சிறுவன் எழுந்திருக்கும் வழியைக் காணோம்.அவனைக் காலால் மிதிக்க வேண்டுமென்று தம்பையா தீர்மானித்தான்.மழை சட சட வென்று பெய்ய ஆரம்பித்துவிட்டது.வெளியே போன குழந்தைகள் மழையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற திகைப்புடன் தாயம்மாள் ஓடிவந்து, செல்லையா! என்று கூப்பிட்டாள்.ம்ம் என்று பதில் வந்தது.இருட்டிலே அங்க என்ன பண்றீங்க? என்று சொல்லிக் கொண்டே மரத்தின் பக்கமாக வந்துவிட்டாள். அங்கே வந்து, நின்று யோசிப்பதற்கு நேரமில்லை மழை. ஆகவே, மூன்று பேரையும் அவசர அவசரமாக வீட்டுக்குள்ளே அழைத்துக்கொண்டு ஓடிவந்தாள்.

 சிறுவன் விளக்கு வெளிச்சத்தில் வந்து நின்றான். அவனுடைய உடம்பெல்லாம் ஒரே சிரங்கு. தலையில் பொடுகு வெடித்துப் பாம்புச் சட்டை மாதிரி தோல் பெயர்ந்திருந்தது. பக்கத்தில் வந்து நின்றால், ஒரு மாதிரி துர்வாடை. இந்தக் கோலத்தில் நின்றான் சிறுவன்.இது யாரம்மா? என்று மங்கம்மாள் திகைப்போடு கேட்டாள்.யாரோ? யார் பெத்த பிள்ளையோ? என்று சொல்லிவிட்டு, மழையில் நனைந்த குழந்தைகளைத் துவட்டப் பழைய துணியை எடுக்கப்போனாள். அவள் மறுபக்கம் திரும்பியதும், தம்பையா அம்மாவுக்குக் கேட்காமல், வாய்க்குள்ளேயே போடா என்று பயமுறுத்தினான்.செல்லையா, போ என்று அவனைப் பிடித்துத் தள்ளினான்.இவர்கள் இருவரையும் பார்த்து மங்கம்மாளும் அர்த்தமில்லாமல் போயேன் என்று சிணுங்கிக்கொண்டே சொன்னாள்.அவ்வளவுதான், திடீரென்று மடை திறந்த மாதிரி கோ வென்று அழுது விட்டான். விஷயம் என்னவென்று தெரியாமல் பதைபதைப்புடன் ஓடி வந்தாள் தாயம்மாள்.ஏண்டா அழுகிறே? சும்மா இரு. அவனை என்ன சொன்னீங்க நீங்க? என்று தன் குழந்தைகளைக் கேட்டாள்.அவன் போன்னா, போகமாட்டேங்கிறான் என்று புகார் பண்ணுவதைப் போலச் சொன்னாள் மங்கம்மாள்.சீ, அப்படி எல்லாம் சொல்லக்கூடாது! நீ சும்மா இரு அழாதேப்பா என்று சொல்லிச் சிறுவனைத் தேற்றினாள்.சிறுவன் அழுகையை அப்படியே நிறுத்திவிட்டான். ஆனால், பெருமூச்சு விடுவதை மட்டும் அவனால் நிறுத்த முடியவில்லை.சும்மா இரு தம்பி! அழாதே! என்று இரண்டாவது தடவையும் தாயம்மாள் சொன்னாள்.பழைய துணியைக் கொண்டு செல்லையாவும் தம்பையாவும் உடம்பைத் துடைத்துக்கொண்டார்கள். உடனே மங்கம்மாள் தம்பையாவைப் பார்த்து. பாவம்! அவனுக்குக் குடு! என்றாள்.

 தம்பையா துணியைக் கொடுத்தான்.நீ சாப்பிட்டாயா? என்று தாயம்மாள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.அவன் எச்சியைச் சாப்பிடுறான், அம்மா. ராமசாமி வீட்டிலிருந்து எச்சிலையை எடுத்துவந்து சாப்பிடுறான். அசிங்கம்! என்று முகத்தைச் சுளித்துக்கொண்டு சொன்னான் தம்பையா. குழந்தைகள் எல்லோரும் சிரித்தார்கள். இந்தா தம்பையா! இனிமே அப்படிச் சொல்லாதே! என்று அதட்டிவிட்டு, நீ யாரப்பா? உனக்கு எந்த ஊரு? என்று தாயம்மாள் சிறுவனை விசாரித்தாள்.விளாத்திகுளம் என்றான் சிறுவன்.உனக்குத் தாய் தகப்பன் இல்லையா?இல்லைஇல்லையா? என்று அழுத்திக் கேட்டாள் தாயம்மாள்.உம் செத்துப் போயிட்டாக.எப்போ, தம்பி?போன வருஷம் அம்மா செத்துப் போயிட்டா. ஐயா, நான் சின்னப்பிள்ளையாயிருக்கும் போதே செத்துப் போயிட்டாராம்.உனக்கு அண்ணா தம்பி ஒருத்தரும் இல்லையா?இல்லைஉடனே தம்பையா கேட்டான்:தங்கச்சியும் இல்லையா?இல்லைபாவம் என்று சொல்லிவிட்டுத் தம்பையா நிறுத்திக் கொண்டான்.இங்கே எதுக்கு வந்தே? என்று தாயம்மாள் கேட்டாள்.கழுகுமலைக்குப் போறேன்.அங்கே ஆரு இருக்கா?அத்தை என்று பதில் சொன்னான் சிறுவன். அவன் விளாத்தி குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து அந்தக் கிராமம் வரையிலும் வந்திருந்தான். இந்த இருபது மெயில் பிரயாணத்துக்கு நான்கு நாட்களாகிவிட்டன. நான்காவது தினத்தில் தான் இந்தக் கிராமத்தில் வந்து தங்க நேர்ந்தது. அதுவும் பொழுது இருட்டி விட்டதனாலும் பசியும் இருந்ததனாலும் தான் மறுநாள் விடிந்த பிறகு, எட்டு மெயில் தூரம் நடந்து கழுகுமலைக்குப் போனால், அவனுடைய அத்தை தன் வீட்டில் அவனை வைத்துக் கொள்ளுவாளா, விரட்டி விடுவாளா என்பது அவனுக்குத் தெரியாது. அத்தையையும் அவன் பார்த்ததில்லை.

 எப்படியோ, ஒரு வழியில் அவனுக்கு அவள் அத்தை என்றும், அங்கே போ என்றும் யாரோ சொல்ல, அதை நம்பிக்கொண்டு அந்தச் சிறுவன் விளாத்திக் குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து வந்திருக்கிறான்.மேற்கண்ட விவரங்களை எல்லாம் சிறுவனுடைய வாய் மொழி மூலமாகவே தாயம்மாள் அறிந்து கொண்டாள்.உன் பேரு என்ன? என்று கடைசியாகக் கேட்டாள் தாயம்மாள்.ராஜா என்றான் சிறுவன்.அப்புறம் அவனுக்குச் சாப்பாடு போட்டார்கள். அவன் சாப்பிட்ட பிறகு, குழந்தைகளுக்குப் படுக்கையை எடுத்து விரித்தாள். மண் தரை ஈரச் சதசதப்புடன் இருந்ததால், வெறும் ஓலைப்பாயை விரித்துப் படுப்பதற்கு இயலாமல் இருந்தது. அதனால், கிழிந்து போய்க் கிடந்த மூன்று கோணிப் பைகளை எடுத்து உதறி விரித்து, அதன் மேல் வீட்டிலிருந்த இரண்டு ஓலைப் பைகளையும் பக்கம் பக்கமாக விரித்தாள். ராஜா தெற்குக் கோடியில் படுத்துக் கொண்டான். அவனுக்குப் பக்கமாகச் செல்லையாவும் அப்புறம் தம்பையாவும் படுத்துக் கொண்டார்கள். தம்பையாவின் உடம்பு இரண்டு பாய்களிலுமே பாதிப்பாதி படிந்திருந்தது. வடகோடியில் தாயம்மாளும் மங்கம்மாளும் படுத்துக் கொண்டார்கள்.எங்கோ தூரத்தில், ஒரு வீட்டில் சீனிவெடி வெடிக்கும் சப்தம் கேட்டது. தீபாவளி மறுநாளானாலும், யாரோ ஒரு துருதுருத்த பையன் அப்பொழுதே (வேட்டுப்) போட ஆரம்பித்துவிட்டான்.வேட்டுச் சத்தம் கேட்டதும், எனக்கு மத்தாப்பு என்றாள் மங்கம்மாள்.எனக்கும் என்றான் தம்பையா.நம்ம கிட்ட அதுக்கெல்லாம் பணம் ஏது மங்கம்மா? ராமசாமி பணக்காரன். அவனுக்குச் சரி, எவ்வளவு வேட்டுன்னாலும் போடுவான்.ஊஹும் எனக்கு மத்தாப்பு என்று முரண்டு பண்ணினாள் மங்கம்மாள்.வம்பு பண்ணாதே. சொன்னாக் கேளு.

 மத்தாப்பு கொளுத்தினா வயிறு நிறையாதா? காலையிலே உனக்கு தோசை சுட்டுத் தாரேன். நிறையச் சாப்பிடு, மத்தாப்பு எதுக்கு?மங்கம்மாள் தன் முரண்டை நிறுத்தவில்லை; அழுவதுபோல் சிணுங்க ஆரம்பித்தாள்.செல்லையா தூங்க ஆரம்பித்தான்.அப்போது தெருவில் ஆட்கள் நடந்து செல்லும் சந்தடி கேட்டது.சமீன் வந்து இறங்குறதுன்னா லேசா? என்று தாயம்மாள் தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு, மங்கம்மா! நீ நல்ல பிள்ளை! பிடிவாதம் பண்ணாதே. அடுத்த வருஷம் நிறைய மத்தாப்பு வாங்குவோம். இந்த வருஷம் நாம் எவ்வளவு சங்கடப் பட்டோம்ன்னு உனக்குத் தெரியாதா? என்றாள். அப்புறம் அவளால் சரியாகப் பேச முடியவில்லை. வாய் குழறியது. மங்கம்மாளைப் பார்த்துத்தான் அவள் பேசினாள். ஆனால் அவள் உண்மையில் தன்னுடைய தாயாரிடத்திலோ, தன்னை உயிருக்கு உயிராகப் பேணி வளர்த்த ஒரு கிழவியிடத்திலோ, தான் வருஷக் கணக்கில் அனுபவித்த துயரங்களைக் கண்ணீரும் கம்பலையுமாகச் சொல்லுவது போலவே பேசினாள். ஒரு நீண்ட பெருமூச்சுடன், மங்கம்மாள்! நீ கூட ஒரு நாள் சாப்பாடு இல்லாமெ பள்ளிக்கூடம் போனியே கண்ணு. உன் வயித்துக்குக் கூட அன்னிக்கு ஒருவாய்க் கூளு கெடைக்கல்லையே! (அவளுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.) சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் போது நீ மத்தாப்புக் கேக்கலாமா, கண்ணு? பேசாமப் படுத்துத் தூங்கு என்று தேற்றினாள்.

 மங்கம்மாளைப் பரிவோடு தடவிக் கொடுத்தாள்.ஒரு மத்தாப்பாவது வாங்கித் தா என்றாள் மங்கம்மாள்.அழுகையுடனும் துயரச் சிரிப்புடனும் தாயம்மாள் சொன்னாள்: நீ தானே இப்படிப் பிடிவாதம் பண்றே? அந்தப் பையனைப் பாரு அவன் மத்தாப்பு கேக்கிறானா சோறு கிடைக்காமே, எச்சிலைக்கூட எடுத்துத் திங்கறான். அவன் சோறு வேணும்ன்னு கூட அழல்லே; நீ மத்தாப்பு வேனும்னு அழறே மங்கம்மாமங்கம்மாளுக்கு அவன் மேல் கோவம் வந்துவிட்டது. அவனைப் புகழ்ந்து, தன் கோரிக்கையைத் தாயார் புறக்கணித்துக் கொண்டுவருவது அவளுக்குப் பிடிக்கவில்லை. உடனே, அவனுக்கு ஒரே சிரங்கு! என்று திட்டுவது போலக் கடுமையாகச் சொன்னாள்.அவனுக்குத் தாய் தகப்பன் இருந்தா அப்படி இருப்பானா? தாயில்லாப் பிள்ளைன்னா யாரு கவனிப்பா? அவனோட அம்மா, முன்னாலே, அவனுக்குத் தீபாவளிக்குப் புதுவேட்டி, புதுச்சட்டை எல்லாம் வாங்கிக் குடுத்திருப்பா! மத்தாப்பும் வாங்கிக் கொடுத்திருப்பா. இப்போ, அவன் அதை எல்லாம் நினைச்சுக் கேக்கிறானா பாரு.இப்போ அவன் தூங்கிட்டான். காலையில் கேப்பான் என்று சொல்லிவிட்டு மங்கம்மாள் சிணுங்கினாள்.தாயம்மாளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வாயாடி என்று சொல்லி மங்கம்மாளின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினாள்.தாயம்மாளுக்குத் திகைப்பாக இருந்தது. எதை மூடிக்கிறது? ஊம்? என்று ஒரு கணம் யோசித்தால். அப்புறம், என் பிள்ளைகளை விடவா அந்தப் பீத்தல் பெரிசு? என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய், மறு நாள் கட்டிக்கொள்வதற்காக துவைத்து உலர்த்தி மடித்து வைத்திருந்த  உண்மையில் பீத்தல் இல்லாத நாட்டுச் சேலையை எடுத்துக்கொண்டு வந்து ராஜா உட்பட உல்லோருக்கும் சேர்த்துப் போர்த்தினாள்.மங்கம்மாளைப் பார்த்து, சரி, படுத்துக்கோ காலையிலே எப்படியும் வாங்கித் தாரேன் என்று சொல்லி அவளை உறங்கப் பண்ணுவதற்கு முயன்றாள்.

 மூன்றாவது தடவையாகவும் சீனவெடியின் சப்தம் கேட்டது.தாயம்மாள் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்: இன்னிக்கு அங்கே யாரும் தூங்கமாட்டாக போலிருக்கிறது! ஊம், அரண்மனைக் காரியம்! ஆளு போறதும் வாரதுமா இருக்கும். ராமசாமியும் தூங்காம வேட்டுப் போடுறான்!ராமசாமியின் அக்காளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டவன் ஒரு ஜமீன்தாரின் மகன். அந்த வருஷம் தலை தீபாவளிக்காக அவனை அன்று மாலையில் அழைத்து வந்திருந்தார் ராமசாமியின் தகப்பனார். அந்த ஊரில் மட்டுமில்லாமல் அந்த வட்டாரத்திலேயே அவர்தான் பெரிய மிராசுதார். ஜமீன்தாரை, மிகவும் கோலாகலமாக அழைத்து வந்து தீபாவளி நடந்த அநேக தினங்களாகவே அவர் வீட்டில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. தீபாவளிக்கு முதல் நாள்தான் மாப்பிள்ளை வந்து இறங்கினான். அதற்க்கு முன் பத்துப் பதினைந்து நாட்களாக ஒரு நிமிஷத்திற்கு ஒன்பது தடவை, ராஜா வர்றார், சிறப்பாகச் செய்யணும் என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். உண்மையில் வெகு சிறப்பாகத்தான் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தனமங்கம்மா!பதில் இல்லை; தூங்கிவிட்டாள்.தாயம்மாளும் அகல் விளக்கை அணைத்துவிட்டுத் தலையைச் சாய்த்தாள்.முதல் கோழி கூப்பிட்டதும் தாயம்மாள் கண்விழித்து விட்டாள். அப்போது மணி நாலு ஆகவில்லை. நல்ல வேளையாக மழை அப்போதுதான் நின்றிருந்தது சிறு தூவானம் மட்டும் ஓலைக் கூரையில் விழுவது, ஒரே நிதானத்துடன் சோளம் பொரிவது போலக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தத் தெருவில் வேறு சில வீடுகளில் ஏற்கனவே எழுந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடத் தொடங்கி விட்டதற்கு அடையாளமாக வேட்டுச் சப்தமும், வேட்டுச் சப்தத்தைக் கேட்டுப் பயந்து நாய்கள் குரைக்கும் சப்தமும் கேட்டுக் கொண்டிருந்தன.தாயம்மாள் எழுந்து விளக்கை ஏற்றினாள்.

 பழைய படியும் மழை பிடித்து விடக்கூடாதே என்று அவளுக்கு பயம். அதனால் குழந்தைகளை எழுப்பி, விறுவிறு என்று குளிப்பாட்டிவிட்டு, மற்ற வேலைகளை கவனிக்கலாம் என்று திட்டம் செய்தாள். குழந்தைகளுக்குப் படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. கடைசியில் முனகிக் கொண்டும், புரண்டு படுத்துக்கொண்டும் ஒருவழியாக எழுந்து விட்டார்கள். அவள் ஒவ்வொரு குழந்தையாக எண்ணெய் தேய்த்து விட்டாள். ஆனால் ராஜா மட்டும் எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாது என்று சொல்லித் தூரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காவிட்டால் தோஷம் என்று சொன்னாள். ராஜாவுக்கோ என்ன சொன்னாலும் காதில் ஏறவில்லை.அரப்புக் காந்தும்; நான் மாட்டேன். என்று பிடிவாதமாகச் சொன்னான் ராஜா.அரப்புப் போடல்லே; சீயக்காய் போட்டுக் குளிப்பாட்டுறேன். குளிர்ச்சியாயிருக்கும்ஊஹும்.தம்பி, சொன்னாக் கேளுடா. என்னை உன் அம்மான்னு நெனைச்சுக்கோ, உனக்குக் காந்தும் படியாக நன் தேய்ப்பனா?  வா, எண்ணெய் தேய்ச்சிக் குளி. இந்தத் தீபாவளியோடே பீடை எல்லாம் விட்டுப்போகும். குளிக்காம இருக்கக்கூடாதப்பா  இப்படி வெகுநேரம் கெஞ்சிய பிறகுதான் அவன் வேறு வழி இல்லாமல் சம்மதித்தான்.ராஜா எழுந்து வந்து மணையில் உட்கார்ந்தான். அது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம். ஒரு பிள்ளைக்குத் தேச்சி, ஒரு பிள்ளைக்கு தேக்காமல் விடலாமா? என் பிள்ளை குட்டியும் நல்லா இருக்கனுமில்லப்பா! என்று மற்றவர்களுக்குச் சொல்லுவது போலத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டே எண்ணெய் தேய்த்தாள்.

 தாயில்லாக் குழந்தைன்னா இந்தக் கோலம் தான். நான் மூணாம் வருஷம் காய்ச்சலோட படுத்திருன்தேனே, அப்போ கண்ணை மூடியிருந்தா என் குழந்தைகளுக்கும் இந்தக் கதிதானே? அதுகளும் தெருவிலே நின்னிருக்கும்.  இப்படி என்னென்னவோ மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவசர அவசரமாகக் குழந்தைகளைக் குளிப்பாட்டினாள். ஆனால், தாயம்மாள் பயபத்திரமாகச் சீயக்காய்த் தூளைப் போட்டுத் தேய்த்த போதிலும், ராஜா பல தடவைகள் ஐயோ, ஐயோ என்று அழுதுவிட்டான். அவன் அழும்போதெல்லாம் அவள் இன்னிக்கோட உன் சிரங்கு குணமாயிரும் என்று மட்டும் மாறி மாறிச் சொல்லிக்கொண்டே இருந்தாள்.யாரோ எவரோ? மழைன்னு வந்து வீட்டிலே ஒதுங்கிட்டான். அவனைப் போகச் சொல்ல முடியுமா! அவன் வந்த நேரம், தீபாவளியாப் போச்சு. குழந்தைகளுக்குள்ளே வஞ்சம் செய்யலாமா? பார்க்கிறவுகளுக்கு நான் செய்யறதெல்லாம் கேலியாயிருக்கும். அவுக கேலி செய்தாச் செய்துட்டுப் போகட்டும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் பகவான் துணை செய்வான்.அவள் தோசை சுட்டுக் கொடுத்தாள். அவளுடைய குழந்தைகள் புதுத் துணி உடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் அவசர அவசரமாகச் சாப்பிட்டார்கள். தம்பையா கடைசித் தோசையைப் பாதியிலேயே வைத்து விட்டு எழுந்துவிட்டான். அவனால் மேற்கொண்டும் இரண்டு தோசைகள் சாப்பிட முடியும். இருந்தாலும் அவசரம்.தெருவில் ஜன நடமாட்டம் தொடங்கிவிட்டது. மழையும் பரிபூரணமாக நின்றுவிட்டது.

 உதயத்தின் ஒளி சல்லாத் துணியைப்போல அவ்வளவு மெல்லியதாக ஊரையும் உலகத்தையும் போர்த்தியது.புதுத் துணிகளுக்கு மஞ்சள் வைத்துச் செல்லையாவும் உடுத்துக் கொண்டான்; தம்பையாவும் உடுத்துக் கொண்டான். மங்கம்மாளும் பாவாடையும் சட்டையும் போட்டுக் கொண்டாள்.அவன் கௌபீனத்தோடு நின்றான்.தாயம்மாளுக்குப் பகீர் என்றது. இத்தனையும் செய்தும் புண்ணியமில்லாமல் போய்விட்டதே என்று கலங்கினாள். இந்த மாதிரியான ஒரு கட்டத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. சிட்டைத் துண்டை எடுத்துக் கொடுப்பதா, கொடுக்காமல் இருப்பதா? அவள் மனதுக்குள்ளே வேதனை மிக்க போராட்டம். மாதக் கணக்கில் ஒரு ரூபாய்த் துண்டு இல்லாமல் அவளுடைய கணவன் பட்ட கஷ்டத்தையும், வீதிவழிப் போவதற்குக் கூசியதையும், ஒரு துண்டு வாங்க வழியில்லையே! என்று கணவன் துயரத்துடன் வாய்விட்டுப் புலம்பியதையும் நினைத்துப் பார்த்தாள். இந்தத் துயரத்தின் எதிர்புறத்தில், ஒன்றும் சொல்லாமல், ஒன்றும் செய்யாமல், மெளனமாக நின்று கொண்டிருந்தான் ராஜா.தாயம்மாளுக்குத் திக்குத் திசை தெரியவில்லை; ராஜாவின் முகத்தை எதற்கோ ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள். ராஜாவோ வெகுநேரமாகக் கண்கொட்டாமல் அவளையே பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்.என்னைச் சோதிக்கத்தான் வந்திருக்கேடா நீ என்று மனக் கசப்புடன் சொல்வது போலச் சொன்னாள் தாயம்மாள். ஆனால், அவளுக்கும் மனக் கசப்புக்கும் வெகுதூரம்.

 மனதுக்குள் ஏற்பட்ட சிக்கல்களை விடுவிக்கவே இப்படிப்பட்ட ஒரு வாசகத்தை அவள் தூக்கிப் போட்டாளே ஒழிய அவள் சொற்களில் மனக்கசப்பின் நிழல் கூடப் படியவில்லை.அப்போது மங்கம்மாள் எழுந்துவந்து அம்மாவின் கன்னங்களில் தன் உள்ளங்கைகளை வைத்து, தன் முகத்துக்கு நேராக அவளுடைய முகத்தைத் திருப்பினாள்; அப்புறம் ஏதோ ரகசியத்தைச் சொல்லுவதுபோலச் சொன்னாள்.பாவம்! அவனுக்கு அந்தத் துண்டைக்குடு அம்மா!குழந்தை இந்த வார்த்தைகளைச் சொல்லி நிறுத்தினாள். ஒரு நிமிஷம் மௌனம் நிலவியது. பிறகு, திடீரென்று தாயம்மாளின் முகம் கோரமாக மாறியது. முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். அவளுடைய பெருமூச்சும் விம்மலும் வீட்டை அடைத்துக் கொண்டு கேட்டன.குழந்தைக்கு விஷயம் விளங்கவில்லை. மங்கம்மாள், தான் அப்படிச் சொன்னதர்க்காகத் தான் அம்மா அழுகிறாள் என்று பயந்துவிட்டாள்.தாய், தன் பலத்தை எல்லாம் பிரயோகித்து அழுகையைத் தொண்டைக் குழியில் அழுத்தினாள், அவள் நெஞ்சு வெடித்துவிடும் போல் விம்மியது. குரலும் அந்த ஒரு நிமிஷத்தில் ஜலதோஷம் பிடித்ததுபோலக் கம்மலாகி விட்டது.பிறகு தழுதழுத்துக் கொண்டே சொன்னாள்:தம்பையா!என்னம்மா!ஹூம், ராஜாவுக்கு அந்தத் துண்டை எடுத்துக்குடு.வீட்டு முற்றத்தில் காலைவெயில் அடித்துக் கொண்டிருந்தது. அந்தப் பொன்னொளியில் மஞ்சள் பூசிய முகத்துடன் புத்தாடை தரித்துக்கொண்டு நிற்கும் மங்கம்மாள், அப்போது எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். ஈரம் காய்வதற்கா இருக்கமில்லாதத் தொள தொள என்று சடை போடப் பட்டிருந்ததால், கூந்தல், இரண்டு காதுகளையும், கன்னங்களில் பாதியையும் மறைத்துக் கொண்டிருந்தது. பரவலாகக் கிடக்கும்.

 கூந்தலின் நடுவே இளங்காற்றுப் புகுந்து சிலுசிலுக்கும் போது, சுகமும் கூச்சமும் தாங்க முடியாமல் சிரித்துக் கொண்டே இமைகளைக் குவித்தாள் மங்கம்மாள்.வெகு நேரமாக, தாயம்மாள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். சந்தர்ப்பவசமாக, அவளுக்கு நேராக மங்கம்மாள் முகத்தைத் திருப்பினாள்.என் ராஜாத்தி மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா! என்று தன்னை மறந்து இன்பத்துடன் சொல்லிவிட்டாள் தாய். அவ்வளவுதான். குழந்தையின் கையைப் பிடித்து வெகுவேகமாக வீட்டுக்குள்ளே இழுத்துக்கொண்டு வந்து, திருஷ்டிப் பரிகாரமாக அவளுடைய கன்னத்தில் துலாம்பரமாகச் சாந்துப் பொட்டை எடுத்து வைத்தாள்.அப்புறம் மங்கம்மாள் வீதிக்கு ஓடிவிட்டாள். ராமசாமியின் வீட்டுப் பக்கம் எச்சில் இலைகள் ஏராளமாகக் கிடந்தன. அங்கே நாலைந்து பேர் நின்று பேசிக் கொண்டும், வெற்றிலை பாக்குப் போட்டுத் துப்பிக் கொண்டும் இருந்தார்கள். ராமசாமி நீலநிறமான கால்சட்டையும், அந்த ஊருக்கே புதிய புஷ்கோட்டும் போட்டுக் கொண்டு நின்றான். மங்கம்மாளைப் பார்த்ததும் அவன் பக்கத்தில் ஓடிவந்தான்; மங்கம்மாளும் அவனைப் பார்த்து நடந்தாள். இருவரும் பாதி வழியில் சந்தித்துக் கொண்டனர். சந்தித்த மாத்திரத்தில், மிகவும் சந்தோஷத்துடன் ராமசாமி சொன்னான்எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கார்!ஊர்க்காரர்களைப் போல அவனும் தன் அக்காள் புருஷனை ராஜா என்று சொன்னான். ஆனால் அவன் சொன்னதற்குக் காரணம் சந்தோஷம்தானே ஒழிய மங்கம்மாளைப் போட்டிக்கு அழைப்பதற்கு அல்ல. ஆனால், அவளோ வேறுவிதமாக நினைத்து விட்டாள்.

 முதல் நாள் பள்ளிக் கூடத்திலிருந்து வந்தபோது நடந்த போட்டிதான் அவள் ஞாபகத்தில் இருந்தது. அவன் சொன்னதற்குப் பதில் சொல்லி அவனுடைய பெருமையை மட்டம் தட்டவேண்டும் என்று அவள் மனம் துடித்தது.அதனால் ஒரு அரை அடி முன்னாள் நகர்ந்து வந்து நின்றாள். யாதொரு திகைப்பும், தயக்கமும் இல்லாமல் ராமசாமியைப் பார்த்து, ரேகை சாஸ்திரியிடம் காட்டுவது போலக் கையை வைத்துக் கொண்டு, மிக மிக ஏளனமாகச் சொன்னாள்.ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கார்? எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கார். வேணும்னா வந்து பாரு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-10-2019.

#KSRPostings
#KSRadhakrishnanPostings


கணேச மூர்த்திகள் ….. பெண்கள் பொது வெளியில் தேவையற்று சிரிக்க கூடாது .ஆண்கள் பொது வெளியில் அழக்கூடாது.

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்!    பெண்கள் பொது வெளியில்  தேவையற்று சிரிக்க கூடாது .ஆண்கள் பொது வெளியில...