Monday, October 14, 2019

&sfnsn=scwspmo *#மோகமுள்ளில்_வரும் #வெங்கண்ணாவை_போல....*

https://m.facebook.com/story.php?story_fbid=997774650558941&id=832899687046439


&sfnsn=scwspmo
*#மோகமுள்ளில்_வரும் #வெங்கண்ணாவை_போல....*

‘’நேற்றைய வலியின், நாளைய கனவின்,
பசிகளுக்கு இன்றை பரிமாறி, 
பட்டினி கிடந்தே கடக்கிறேன் என்றும்..’’

மோகமுள்ளில் வரும் வெங்கண்ணா பாத்திரத்தை போல நளபாகம், இசை என பலவற்றை பேசுவதை போல; நீண்ட நாட்களாக பழகிய எங்கள் கிராமத்துக்கு பக்கத்து ஊர்  வெங்கண்ணா, வெள்ளந்தி விவசாயி. அவர்தம் மனதில் பட்டதை யதார்த்தமாக உலக அரசியல் வரை பேசுபவர். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு  வீட்டிலிருந்து காரில் அழைத்து சென்றபோது, அடையாறு எல்.பி. சாலை சந்திப்பில் நின்றபோது, டாஸ்மாக் கடையைப் பார்த்து வெங்கண்ணா சொன்னார். "இன்றைக்கு சரஸ்வதி பூஜை. இவ்வளவு கூட்டமாக சாராயக்கடையில் நிற்கின்றனர். அவர்கள் வீட்டு ரேசன்  பொருட்களுக்கு கூட சென்று நின்றிருக்க மாட்டார்கள். அவர்கள் மனைவிமார்களை, குழந்தை குட்டிகளை நிறுத்திவிட்டு, இங்கு வந்து இப்படி குடிக்கிறார்களே. இதில் எப்படி நியாயங்களை பார்க்க முடியும்?" என்று ஆதங்கப்பட்டார். 




வண்டி நகர்ந்து சென்றிருக்கும்போது, ஒருவேளை திருச்சி நகைக்கடையில் திருடியவன் காவலர்களிடம் சிக்கவில்லை என்றால், தேர்தலில் நின்றுவிட்டு, மரியாதைக்குரியவர் ஆகியிருப்பான். நல்லவேளை போலீஸ் பிடித்துவிட்டது. இப்படி பலபேர் போலி கவுரவம் என்ற நிலையில் திருட்டுத்தனமாக இருந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்" என்று கோவில்பட்டி வட்டார கரிசல் காட்டு பாணியில் சொன்னபோது, எவ்வளவு உண்மையாக உள்ளது என்பது மனதில் பட்டது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...