Friday, January 20, 2023

தமிழகத்தின் எல்லையோரப் பகுதிகளில் #கேரளஅரசு டிஜிட்டல் சர்வே எடுக்கவே இல்லை-தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர்…..



—————————————

 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரிமாநிலங்கள்உருவாக்கப்பட்டன

அதன் நினைவாக கடந்த2023 நவம்பர் 1 ஆம் தேதிதான் கேரள அரசு தமிழகத்தின் எல்லையோரப் பகுதிகளில் டிஜிட்டல் ரீ சர்வே பணியைத் தொடங்கியது. 
 
தமிழகத்தின் எல்லையோரப் பகுதிகளில் கேரள அரசு டிஜிட்டல் சர்வே எடுக்கவே இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது இன்றைய தமிழ் இந்துவில் (20.01.2023) செய்தியாக வெளிவந்திருக்கிறது. 
 
இவர் சொல்வது உண்மையாக இருந்தால், தேனி மாவட்ட விவசாயிகள் எதற்காக இதை எதிர்த்துப் போராட வேண்டும்? இந்தப் பிரச்னை கடந்த 2 மாதங்களுக்கு முன்னால் தீயாக எரிந்தபோது, இதைப் பற்றி சரியாகப் பதில் சொல்லாத வருவாய்த்துறை அமைச்சர், இன்றைக்கு நமது எல்லைப்புறத்தில் கேரள அரசு டிஜிட்டல்  ரீ சர்வேயைச் செய்யவில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. ஏன்... திமுக கூட்டணி கட்சியான மதிமுக போன்ற தோழமைக் கட்சியினரும் கூட கேரள அரசு டிஜிட்டல் ரீ சர்வே நடத்துவதாகச் சொன்னார்கள். அவர்கள் அதைக் குறித்து வெளியிட்ட கருத்துகள் எல்லாம் பொய்யா? தமிழகத்தில் அத்தனை பத்திரிகைகளிலும் இது குறித்து வெளிவந்த செய்திகளும் பொய்யா என்ற கேள்வி எழுகிறது. மென் அண்ட் மேட்டர் என்று புரி  தல் அற்றவரை என்ன சொல்ல? 
 “அய்யா... அம்மா...’’, “இவரை விட்டால் வேறு வழியில்லை...’’, “அவரைவிட்டால் வேறு வழியில்லை’’ என்று வாய்திறப்பது மட்டும்தான் தமிழக அமைச்சர்கள் கடந்த 30 ஆண்டு காலமாகச் செய்துவரக் கூடிய வேலை என்ற அரசியல்நிலை உருவாகிவிட்ட பிறகு, சமகாலப் பிரச்னைகளை அவர்கள் அறிந்து, அவற்றை ஆராய்ந்து, சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய திறமையுடன் அவர்களால் எப்படி செயல்பட முடியும்?

#KSR_Post
20-1-2023.

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...