Sunday, January 22, 2023

#பெங்களூரு நாகரத்தினம்மாள்பதிப்பித்த ராதிகாஸாந்தவனமு வந்துவிட்டது என் கனவு நூல்...



————————————————————-

2008ஆம் ஆண்டு, தேவரடியார்கள் பற்றிய ஆய்வுக்காகத் தகவல்கள் தேடியலைந்தபோது, பெங்களூரு நாகரத்தினம்மாள் பதிப்பித்த ராதிகா ஸாந்தவனமு நூல்.

முத்துப்பழனி எழுதிய தெலுங்குக் கவிதைகளை நேரடியாகத் தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம். முதன்முறையாக அகநி அந்தக் கனவை நிறைவேற்றியிருக்கிறது. 
இசையியல் அறிஞர் திரு.பி.எம்.சுந்தரம் நூலை மொழிபெயர்க்க ஒப்புக்கொண்டதுடன், மூலப்பிரதியைத் தேடி ஹைதராபாத் வரை, தனது 87 வயதைப் பொருட்படுத்தாது பயணம் செய்திருக்கிறார். 

முதன்முதலில் (1910ஆம் ஆண்டு) பதிப்பித்த வாவிள்ள ராமசாமி சாஸ்த்ருலு பதிப்பகத்தாரிடமே சென்று, நாகரத்தினம் பதிப்பித்த நூலின் பிரதியைப் பெற்று வந்து, தமிழாக்கம் செய்துள்ளார்.  திரு பி.எம்.சுந்தரம் கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷணாவின் சீடர். தமிழுக்கு இசையியல் ஆய்வு சார்ந்த நூல்களைக் கொடையாகக் கொடுத்தவர்.
கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் இருந்த முத்துப்பழனியின் கையெழுத்தில் இருந்தது.

பிரிட்டீஷ் ஆட்சி நூலைத் தடைசெய்து உத்தரவிட்டது

ராதிகா சாந்தமானாள் (ராதிகா ஸாந்த்வனமு)
தஞ்சை அரசன் பிரதாபசிம்மனின் அரசவையின் நடனமணியான முத்துப்பழனி என்ற கவியரசியால், தெலுங்கு மொழியில் இயற்றப் பெற்ற ’ராதிகா ஸாந்த்வனமு’ என்ற அரும்பெரும் காவியம், இதுவரை ஆங்கிலம் தவிர (அதுவும் முழுமையாகவில்லாமல்) வேறு மொழிகளில் வெளிவரவில்லை. பல ஆண்டுகளுக்குப்பின், இப்போது, முதன்முறையாகத் தமிழில் இசையியல் அறிஞர் பி.எம்.சுந்தரத்தால் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ‘ராதிகா சாந்தமானாள்’ எனும் தலைப்புடன்  அகநி பதிப்பகம் அரிய முயற்சியின் மூலம் வெளிவருகின்றது.
கவிஞர் அ. வெண்ணிலாவுக்கு வாழ்த்துக்கள்

குஜிலிப் பாடலாகப் பதிப்பிக்கப்பட்டிருந்த இந்நூலை, பெங்களூரு நாகரத்தினம்மாள், கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் இருந்த முத்துப்பழனியின் கையெழுத்துப் பிரதியைப் பெற்று, மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, 1910ஆம் ஆண்டு, விரிவான முன்னுரையுடன் சிறப்பான பதிப்பாக வெளியிட்டார். 

கந்துகூரி வீரேசலிங்க பந்துலு போன்றவர்கள் இந்நூலைத் தடைசெய்ய வேண்டுமென்று தொடர்ந்து எழுதியதின் விளைவாக, 584 பாடல்களைக் கொண்ட முத்துப்பழனியின் நூலை அன்றைய பிரிட்டீஷ் அரசு 1912ஆம் ஆண்டு ஆபாச இலக்கியமென்று கூறி தடை செய்தது. 

தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த டங்குடூரி பிரகாசம் ஆட்சிக்காலத்தில் தான் நூல் மீதான தடை நீக்கப்பட்டது. தடைசெய்யப்பட்டு 110 ஆண்டுகள் கடந்த நிலையில், ‘ராதிகா ஸாந்தவனமு’ தஞ்சை மண் காட்சிக்களம் நேரடியாகத் தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 
பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் இந்நூல் குறித்து பத்திரிகைகளில் வெளியான விவாதங்கள், கண்டனங்கள், நூலை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட தனிநபர் குழு, குழுவின் கருத்தின்மீது அரசாங்கம் பிறப்பித்த தடையுத்தரவு ஆகியவற்றுக்கான ஆவணங்களும் நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ளமை முக்கிய முயற்சியாகும். மெட்ராஸ் பிரசிடென்சியில் புத்தகங்கள் மேலான தணிக்கையை முதன்முதலில் சந்தித்த நூல் ராதிகா ஸாந்த்வனமுதான்.
ராதிகா சாந்தமானாள் (ராதிகா ஸாந்தவனமு)

தெலுங்கு மூலம் : முத்துப்பழனி
தமிழில் : பி.எ.சுந்தரம்
அகநி வெளியீடு
பக்கம் ; 312
விலை ; ரூ.450
தொடர்புக்கு ; 94443 60421

#ராதிகாஸாந்தவனம்
#அகநிவெளியீடு அகநி வெளியீடுஅகநி AKANIஅ.வெண்ணிலா
R R Srinivasan@kuttiravathi

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...