Sunday, March 29, 2020

கரோனா

#கரோனா
—————-
கரோனா வைரஸ் Covid-19 புல்லட் டிரெயினைப் , Wi-fi போல வேகமாக பரவி வருகின்ற இத்தருணத்தில் Social Distancing, தனித்திருத்தல் என்ற வார்த்தைகள் இன்றைக்கு பயன்படுத்தப்பட்டு கவனமாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய காலம்.  

கரோனா வைரஸ்,இரண்டாம் கட்டத்துக்கு தமிழகம் நகர்கிறது. கேரளம்,மராட்டியம் நிலை மோசம். டில்லி. ஜார்க்கண்ட, ம.பி  போன்ற மாநிலங்களில்  நிலைமை அச்சுறுத்துகிறது.நாம்  இந்த அலட்சியத்துக்கு நாம் கொடுக்கப்போகும் விலை என்ன? அடுத்து வரும் துயரம் மிக்க நாள்களை எவ்வாறு கடக்கப்போகிறோம்?

ஒவ்வொரு தொற்றுநோய் கிருமிக்கும் முக்கியமாக இரண்டு குணங்கள் உண்டு. முதலாவது தொற்று பரவு விகிதம் எனப்படும் R0 (ஆர் நாட் என உச்சரிப்பார்கள்), கிருமி தொற்று உள்ள ஒருவர் இயல்பாக சராசரியாக எவ்வளவு பேருக்கு இந்தக் கிருமித் தொற்றை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதே தோற்று பரவல் விகிதம். 



நாவல் கரோனா வைரஸ் கிருமி தொற்று உள்ளவரிடமிருந்து வெறும் 6 அடி தொலைவு தான் செல்ல முடியும். எனவேதான் பலர் ஒன்றுகூடி சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், கொரோனா ரஸ் பரவாமல் இருக்க ஒருவருக்கு ஒருவர் இடையிலான இடைவெளி சுமாராக ஒரு மீட்டர் இருக்க வேண்டும் என கூறுகிறார்கள். காற்றில் பரவும் தட்டம்மை 100 மீட்டர் வரை பரவும். இரண்டாவதாக எவ்வளவு நேரம் ஓம்புயிருக்கு வெளியே அந்த வைரஸ் சிதையாமல் செயல்படும் தன்மை கொண்டிருக்கும் என்பது. தட்டம்மை பலமணிநேரம் உயிர்ப்புடன் இருக்கும். ஆனால் கொரோனா வைரஸ் காற்றில் வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே செயலூக்கத்துடன் இருக்கும். எனவே இரண்டு தன்மையையும் சேர்த்து பார்க்கும் போது கொரோனா வைரசை விட தட்டம்மை சதவிகிதம் கூடுதலாக இருக்கும் என கூறத்தேவையில்லை. இது சராசரி என்பதை நினைவில் கொள்க. சிலர் மிக பரப்பர்கள் (சூப்பர் சஸ்பிரெட்டர்கள்) என அழைக்கப்படுகின்றனர். தென்கொரியாவில் மத நிறுவனத்தை சார்ந்த ஒரு தனிப் பெண் மட்டும் 37 பேருக்கு கொரோனா வைரைசை தொற்று செய்துள்ளார்.  சராசரியை விட கூடுதல் மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு உள்ளவர்கள் கூடுதல் நபர்களுக்கு கிருமியை பரப்புவார்கள்.

இதை தொலைக்காட்சியில் இந்தியா முழுவதும் பார்க்கும் பொழுது பல இடங்களில் சற்றும் சிந்திக்காமல் மக்கள் நடமாடுவது நல்லதல்ல. ஆங்கிலத் தொலைக்காட்சியில் பார்த்த பொழுது காவல்துறையினர் மக்களை திரும்பப் போகச் சொல்லித் தாக்குகின்றார்கள்.  அதுபோல காவல் துறையும் இதுபோல வருகின்றவர்களை அன்போடு அழைத்துப் பேசி இது போன்ற நேரங்களில் கவனமாக இருங்கள், உங்கள் நலனுக்காகத் தான் சொல்கின்றோம் என கனிவோடு சொல்லலாம்.  காவல்துறையும் சில இடங்களில் கடுமையாக நடந்துக் கொண்டிருக்கிறது என ஆங்கிலச் செய்திகளில் வடமாநிலங்களில் புலப்பட்டது. 
எப்படியும் தனிமைப் படுத்திக் கொண்டு நம்மை நாமே காத்துக் கொண்டால் தான் இந்த நிலையில் இருந்து விடுபட முடியும். தன்னலத்தோடு நாட்டின் நிலையினையும் காப்பதற்கான பொறுப்பு நமக்கிருக்கிறது என்ற பார்வையோடு ஊரடங்குச் சட்டம், இன்றைய சிக்கல்களைத்  தீர்க்க அவரவருக்கு கடமையும் பொறுப்பும் இருக்கிறது என்பதை உணர்ந்தால் தான் இதிலிருந்து நாம் விடுபட முடியும்.  உலகத்தைப் பொறுத்த வரையில் வல்லரசு நாடுகள் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருக்கும்போது இந்த நோய்க் கொடுமையிலிருந்து மீள்வதற்கு அனைவருடைய பங்களிப்பும் முக்கிய காரணியாகும். 

கொரானா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில்  திருமண மண்டபத்தில் நடப்பதாக இருந்த திருமணங்கள் எளிமையான முறையில் வீட்டிலேயே நடக்கிறது. மணமக்களின் உறவினர்கள் மொத்தம் 30 பேர் மட்டுமே கலந்துக் கொண்ட இந்த திருமணத்தின் மொத்த செலவே 5000  ரூபாய்  தான்  என்பது ஆச்சரியமான விடயம். பகட்டான பணத்தை அதிகம் விரையும செய்து நடக்கும் திருமணங்கள் நல்லதா? உத்தமர் காந்தி வீட்டு திருமணம் வெறும்
10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
நேரு, படேலுக்கு அழைப்பு இல்லை.

மக்கள் இங்கே மாறாதவரை எதுவும் மாற சாத்தியமில்லை.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...