Friday, March 13, 2020

சுங்கச்சாவடிகள் #toll_gates

#சுங்கச்சாவடிகள் #toll_gates
—————————————-
சுங்கச்சாவடிகள், தொன்று தொட்டு புழங்கிவந்த மண்ணில் இருந்து சம்பந்தப்பட்ட மக்களை அந்நியப்படுத்தியிருக்கிறது. அவர்கள் அந்த சாலையைப் பயன்படுத்தக்கூட கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கொடுமை வேறெங்கும் உண்டோ?
நாடு முழுவதும் உள்ள 386 சுங்கச் சாவடிகளில் 75 விழுக்காடு தனியாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இந்தியாவில் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அதிகம்.இந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை மேம்பாடு, பராமரிப்பு, கட்டண வசூலிப்பு என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்கிறது. அதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தப்படி தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா? போட்ட முதலீட்டை லாபத்துடன் எடுப்பதற்கான காலக்கெடு என்ன? எப்போது அந்த சாலைகள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் என்ற எந்த வரைமுறையும் இல்லை.



நெடுஞ்சாலைகளில் உள்ள அரசு சுங்கங்களில் 1 கி.மீ தொலைவுக்கு சுங்கம் ரூ.1.40 என்றால், தனியார் நிறுவனம் அதே 1 கி.மீ தொலைவுக்கு ரூ.3 வசூலிக்கிறது. இது எப்படி மாறுபடுகிறது?
சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஒரு சாலையில் ஆண்டிற்கு 1 லட்சம் வாகனங்களுக்கு மேல் சென்றால், அந்த சாலையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை குறைத்து வசூலிக்க வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால் அனைத்து தனியார் சுங்கச்சாவடிகளும் போதிய வாகனங்கள் வருவதில்லை என பொய்க்கணக்குகளை அமைச்சர், உயர் அதிகாரிகள் துணையுடன் சமர்ப்பிக்கின்றனர் என்ற குற்றசாட்டுகளும்  உள்ளன.இதனைக் கண்கானிக்க எந்த ஏற்பாடும் இல்லை.

மக்கள் நல அரசு என சொல்லிக்
கொண்டு இவற்றை நியாயப் படுத்த முடியாது. It is totally against the welfare state principles.

#சுங்கச்சாவடிகள் #toll_gates

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
13-03-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings

http://ksradhakrishnan.in

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...