Monday, March 23, 2020

உச்ச_நீதிமன்ற_முன்னாள்_நீதிபதிகள்-#அரசியல்_பதவிகளும் ..... (#கடந்த_கால_நிகழ்வுகள்)

#உச்ச_நீதிமன்ற_முன்னாள்_நீதிபதிகள்-#அரசியல்_பதவிகளும் .....
(#கடந்த_கால_நிகழ்வுகள்)
————————————————
சமீபத்தில்  உச்ச நீதிமன்ற (Supreme Court)முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன்  கோகாய் மாநிலங்களவை  உறுப்பினராக எதிர்ப்பகளை மீறி நியமிக்கப்பட்டார். அது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. அவர் பதவியேற்றபோது எதிர்க்கட்சிகள்மாநிலங்களவையி
லிருந்து வெளிநடப்பு செய்ததெல்லாம் உண்டு.

இது புதிதல்ல. பண்டித நேரு காலத்தில் நாடு விடுதலைக்குப் பின் நீதிபதி சையத் பசல் அலி, ஒரிசா கவர்னராக நியமிக்கப்பட்டதை கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன் கடுமையாக எதிர்த்தார். அப்போது தடுப்புக் காவலில் இருந்த கோபாலன், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு மாறாக நேரு நடக்கின்றார் என்ற குற்றச்சாட்டையும் வைத்ததுண்டு. காங்கிரஸ் தலைவராக இருந்த பஹருல் இஸ்லாம், உயர் நீதிமன்றநீதிபதியாகவும் 
பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் அமர்த்தப்பட்டார். இதை கம்யூனிஸ்டுகளும்  சோசலிஸ்டுகளும்  அப்போது எதிர்த்தனர்.

எம். கே. சாக்லா பம்பாய் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. ஆரம்பக் கட்டத்தில் ஜின்னாவோடு இருந்து பாகிஸ்தான் பிரிவினையினை ஏற்காமல் முஸ்லீம் நேஷனலிஸ்ட் பார்ட்டி என்ற கட்சியை ஆரம்பித்தார். நீதிபதி பணிக்காலம் முடிந்தவுடன் நேரு அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். இங்கிலாந்திற்கு இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். சென்னை ராஜதானியில் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர், கேரள நம்பூதரி பாட் அமைச்சரவையில் அமைச்சர், 1965 சட்டமன்ற தேர்தலில் தோல்வி. பின்னால் கேரள உயர்நீதி மன்றம் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார் வீ. ஆர். கிருஷ்ணய்யர்.

திருநல்வேலி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் 1962 மற்றும் 1971 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சேரன்மகாதேவியில் தோல்விக்குப் பின் 1974ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பின் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார்.

குஜராத் தலைமை நீதிபதியாக இருந்த கோகுல கிருஷ்ணனும் திமுகவைச் சார்ந்தவர். அது போல நீதிபதி கற்பக விநாயகம் அதிமுக, நீதிபதி சந்துரு கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர்.

அதைப் போலவே  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஹிதயதுல்லா, இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்புக்கு வர, காங்கிரஸ் மீது விமர்சனத்தை எதிர்க்கட்சியினர் வைத்தனர்.  முன்னாள்  உச்ச  நீதமன்றத்தின் தலைமை நீதிபதிகள் கே.சுப்பாராவ், எச்.ஆர்.கன்னா மற்றும் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.

அவசரநிலை காலத்துக்குப் பின் ஜனதா ஆட்சி அமைந்து மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். பின் சரண்சிங் பிரதமர் ஆகி, அவர் ஆட்சி கவிழ்ந்தது, 1980இல் திரும்பவும்  இந்திரா   காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அன்றைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி, இந்திரா காந்தி வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சிக்கு வந்தது பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்: “You have become the symbol of hope and aspirations of the poor, hungry millions of India, who had so far nothing to hope for and nothing to live for.” அப்போதும் நீதிபதி பகவதி மீதும் விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த 1983இல் இந்திரா காந்தி காலத்தில் பஹருல் இஸ்லாம் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். நீதிபதி தல்வீர் பண்டாரியை கடந்த 2012இல் தி ஹேக்கிலுள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசு   பரிந்துரைத்த  போதும் விமர்சனங்கள் எழுந்தன.  நீதிபதி சதாசிவம் 2014இல் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டதுகடும்கண்டனத்துக்
குள்ளானது.

#உச்ச_நீதிமன்ற_முன்னாள்_நீதிபதிகள்-#அரசியல்_பதவிகளும்
#judges
#Supreme_Court 
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
23.03.2020.
#ksrpost


No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...