Thursday, March 19, 2020

நிர்பயா_வழக்கும், #வீரபாண்டிய_கட்டபொம்மன்_வாரிசின் #தூக்கு_தண்டனையும்......

#நிர்பயா_வழக்கும், 
#வீரபாண்டிய_கட்டபொம்மன்_வாரிசின்  #தூக்கு_தண்டனையும்......
———————————————— அனைவருக்கும் வேதனை தந்த நிர்பயா 
வழக்கில் குற்றவாளிகளுக்கு நாளை காலை 5.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது
இதற்காக டெல்லியில் தூக்கு போட ஆட்கள் கிடைக்காமல் மீரட்டிலிருந்து  அழைத்து  வரப்பட இருக்கிறார்கள். அவர்கள்  ஒவ்வொரு தூக்கும்  தலா 15000ரூபாய்உதியமாககொடுக்கப்படவிருக்கிறது. தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஆட்கள் குறைந்து வருவது குறித்து சமீபத்தில் பதிவு செய்திருந்தேன். நான்கு பேரை  தூக்கிலிட பத்து கயிறுகளும் வாங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

இதே போல் 1983 ஆம் ஆண்டு,  ஈழப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்த சமயத்தில்,வீரபாண்டிய கட்டபொம்மன்   வாரிசு   குருசாமி நாயக்கர்  என்பவருக்கு  தூக்கு தண்டனை  விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, சென்னை  உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தாலும்  உறுதி செய்யப்பட்டு, குடியரசு தலைவரால் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இப்போதுள்ள  எந்த தொலைதொடர்பு வசதிகளும் இல்லாத அன்றைய  காலக்கட்டத்தில்  சில வரிகள் அடங்கிய ஒரு தந்தியின்   மூலமாக   இரண்டு நாட்களுக்குள் அவருடைய   தூக்கு  தண்டனை நிறுத்தப்பட்டது.குருசாமிக்கும்  இப்படி  காலை  5.30 மணிக்கதன். சிறைகளில் தூக்கிலிடுவது
காலை 5.30 மணிக்தான். இது வடிக்கை.

அது குறித்து என்னுடைய வலைப்பூவில் நான் எழுதிய பதிவு:
https://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2015/07/blog-post_30.html

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
19.03.2020.
#ksrpost

#தூக்கு_தண்டனை
#நிர்பயா_வழக்கு

No comments:

Post a Comment

#*மர்ம மரணங்கள்*

#*மர்ம மரணங்கள்* —————————-  இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர...