Sunday, September 9, 2018

"பொருநை போற்றுதும்” என்ற தலைப்பில் அன்புக்குரிய டாக்டர். சுதா சேஷைய்யன்...

தினமணி ஏட்டில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வரும் வெள்ளி மணியில் கடந்த ஆறு வாரமாக “பொருநை போற்றுதும்” என்ற தலைப்பில் அன்புக்குரிய டாக்டர். சுதா சேஷைய்யன் அவர்கள் தாமிரபரணியின் கீர்த்தியைப் பற்றி அற்புதமான ஆய்வுக் கட்டுரைகளை கொண்ட தொடரை எழுதி வருகிறார்.
பல செய்திகள், பல தரவுகள், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், இன்றைய நடைமுறைகளை எல்லாம் வைத்து நெல்லையை குறித்து அவர் எழுதி வருவது நெல்லை மண்ணைச் சேர்ந்த எங்களைப் போன்றோருக்கு எல்லாம் பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. டாக்டர். சுதா சேஷைய்யன் அவர்களை வாழ்த்துகின்றோம். இந்த தொடர் முடிந்தவுடன் இதனை நூலாக வெளியிட விரும்புகிறோம்.
 #பொருநை
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08-09-2018

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh