Saturday, September 29, 2018

திரிகோணமலையில் திரிகோணமலை

எங்களால் முடிந்தவரை போராடிவிட்டோம். இனி எங்களுக்கு என்ன நடக்கபோகிறது. இருப்பினும் நாங்கள் சலிப்படையாமல் போராட வேண்டிய நிலையில்.........
————————————————
நேற்று திரிகோணமலையில் திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களைச் சேர்ந்த வட்டார நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணக் குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளூராட்சி பிரதிநிதிகளை சந்தித்து உரையாடி பேசக் கூடிய வாய்ப்பு கிட்டியது.
இந்த கூட்டத்தில் ஈழ நன்பர்கள், நாங்கள் எங்களால் முடிந்தவரை போராடிவிட்டோம். இனி எங்களுக்கு என்ன நடக்கபோகிறது. இருப்பினும் நாங்கள் சலிப்படையாமல் போராட வேண்டிய நிலையில் இருக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்த நிலையில் நான் அவர்களிடம், தாய் தமிழகம் உங்களுக்கு என்றென்றும் உறுதுணையாகவும், உங்களுடைய கவலைகளிலும், எதிர்ப்பார்ப்புகளிலும் தனது பங்களிப்பை நிச்சயமாகச் செய்யும். திரிகோணமலை துறைமுகம் தென்கிழக்கு ஆசியாவின் ஒரு கேந்திர மையமாகும். ஆழ்கடல், வர்த்தகம், தொழில் போன்றவைகளுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் போல இந்த திரிகோணமலை துறைமுகம் அமைந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் திரிகோணமலை துறைமுகத்தில் இடம்பெறத் துடிக்கிறது. இதற்கான நிலஅமைப்பை கொண்ட திரிகோணமலை எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும்.
இந்திரா காந்தி காலத்திலிருந்து திரிகோணமலை துறைமுகத்தையும் நில அமைப்பு ரீதியாக கவனித்தும் வருகிறது. இந்த துறைமுகத்துடன் இந்து மகா சமுத்திரத்தின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதாகும். இந்த துறைமுகம் வழியாக சீனாவின் பட்டு வழி சாலையை (Silky way) ஏற்படுத்தி தனது வர்த்தகத்தை மேம்படுத்தி ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளவும், அதன்வழியே தனது ஆதிக்கத்தை செலுத்தவும் முயற்சித்து வருகிறது. ஏற்கனவே இந்து மகா சமுத்திரத்தில் டீகோகார்சியா தீவு பிரிட்டனிடமிருந்து அமெரிக்காவிற்கு சென்றுவிட்டது. பிரான்சும் இதில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த பிரச்சனைகளுடன் ஈழத்தமிழர் பிரச்சனையையும் சேர்த்து கவனிக்கக்கூடிய நிலையில் உள்ளது.
நீங்களும் போராடி பார்த்துவிட்டீர்கள். உங்களது உரிமைகளையும், பிரச்சனைகளையும் தீர்க்க உங்களது அரசும் முன்வர வேண்டும்.
இந்த நிகழ்வின் போது, இலங்கை எதிர்கட்சித் தலைவர் சம்மந்தனை அவரது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரும் இத்தகைய கருத்தை தான் தெளிவுப்படுத்தினார். அவருக்கும் எனக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம். எனது இல்லத்துக்கு பலமுறை வந்துள்ளார் . அவரை 1980களில் அடிக்கடி சந்திப்பதுண்டு. செல்வநாயகம் ,அமிர்தலிங்கம் காலத்து நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நாட்டின் எதிர்கட்சித் தலைவர் மிக எளிமையாக இருப்பது திரு. சம்மந்தம் அவர்களை பார்க்கும்போது தெரிந்தது. இந்த நிகழ்வின் போது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், கவிஞர் இளையபாரதி, குகதாசன் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஈழ ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29/09/2018
#இலங்கை_பயணம்
#Srilankan_Visit
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29/09/2018
Image may contain: 4 people, people smiling, people standing and indoor

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...