Sunday, September 30, 2018

இலங்கையில் ஆனந்த கொமாரசாமி . பென்னிகுவிக் ......

இலங்கையில் ஆனந்த கொமாரசாமி . பென்னிகுவிக் ......
————————————————
இன்று (30-9-2018)கொழும்பு நகரில் பல்வேறு நண்பர்களை சந்தித்துவிட்டு, சர்வதேச புத்தக கண்காட்சியை பார்த்துவிட்டு திரும்பியபோது, ஆளுமை ஆனந்த கொமாரசாமி மாவத்தை(சாலையில்) விக்டோரியா பார்க் அருகில் அற்புதமான கலைஞர்களின் கைவண்ண சித்திரங்களைக் கண்டு மெய்மறந்தோம்.
ஆனந்த கொமாரசமி
சிறந்த கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர், ஆராய்ச்சியாளர், நூலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களில் வாழ்ந்தவர். 
அந்தக் காலத்தில் விடுதலை (சுதேசிய) உணர்வால் உந்தப்பெற்று சமூக சீர்திருத்தச் சங்கத்தை (1905) நிறுவினார். அதன் சார்பில் Ceylon National Review என்னும் இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகச் பணியாற்றினார். 1906 ஆம் ஆண்டு சூன் நாலாம் நாள் முதன் முதலாக யாழ்ப்பாணம் சென்றார். அங்கு உரையாற்றும்போது "நமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பினை உலகில் வேறெங்கும் காணமுடியாது....எம்மவர் விஞ்ஞானக் கல்வியையும் கைத்தொழிற்கல்வியையும் நாடுகின்றனர். இவை அவசியமானவையே! ஆனால் இவை எல்லாம் பண்பாடு என்னும் அடிப்படையிலிருந்து வரவேண்டும்..." எனக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் அவருக்கு வித்தியா விநோதன் என்னும் பட்டம் அளிக்கப்பட்டது.
அவர் பெயரிலேயே இந்த தெரு அமைத்துள்ளது . கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் அளவில் ஓவிய கலைத்தொகுப்புகளை காண்பவர்கள் கண்களுக்கு மிக ரம்மியமாக உள்ளது. விட்டோனியல என்ற ஆங்கிலேய கலைஞர் தான் முதன் முதலாக இத்தகைய கலைகளை அறிமுகப்படுத்தினார். அவரின் நினைவாக இந்த சதுக்கம் பெயரிடப்பட்டுள்ளது.
கொழம்பில் பிரதான தெருவான காலே தெருவின் ஒரு பகுதியில் முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் பெயரில் ஒரு தெரு உள்ளது. அவர் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த போது அரசு அதிகாரியாக சில காலம் இலங்கையில் பணியாற்றினார். இலங்கையில் அவரது நினைவாக ஒரு தெரு உள்ளபோது தமிழகத்தின் நீர்ப்பாசனத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவருக்கு நினைவாக நாம் தலைநகர் சென்னையில் எதுவும் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு வெளிப்படுகிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30/09/2018

Image may contain: 1 person

Image may contain: indoor

Image may contain: outdoor


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...