Sunday, April 24, 2016

விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

வ.உ. சிதம்பரனார், முண்டாசுக் கவி பாரதி, ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, டாக்டர் ஜோசப் குமரப்பா, தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, திரு.வி.க., சேலம் வரதராஜுலு நாயுடு, அயோத்திதாச பண்டிதர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, பசும்பொன் தேவர், காயிதே மில்லத், திருச்சி அனந்த நம்பியார், பொதுவுடைமைவாதி தோழர் ஜீவா, சேலம் விஜயராகவாச்சாரியா, பட்டுக்கோட்டை அழகிரி, பாரதிதாசன், பி. ராமமூர்த்தி, மதுரை வைத்தியநாத ஐயர், வேதாரண்யம் சர்தார் வேதரத்னம், ம.பொ.சி., குமரியை தமிழகத்தோடு இணைத்த பி.எஸ். மணி, நேசமணி, செங்கோட்டையை இணைத்த கரையாளர், ராமசாமி படையாச்சி, கக்கன், கோவை ஜி.டி. நாயுடு, தொழிற்சங்கத் தலைவர்கள் சிங்காரவேலர், சக்கர செட்டியார், டாக்டர் தருமாம்பாள், அலமேலுமங்கத் தாயாரம்மாள் (இந்த பெண்மணியை தமிழகம் இதுவரை அறியவில்லை. பெரியாருக்கும், திராவிட இயக்கத்துக்கும் கிடைத்த தலைமகள் ஆவார்) விவசாயிகளின் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு என பல போராளிகளையும், தலைவர்களையும் பெற்றெடுத்த தமிழகத்தில் நேற்று வரை அரைகுறை ஆடையோடு வெள்ளித் திரையில் காட்சியளித்த, வி...ந்....., ந..மீ....., என்ற பல அநமதேயங்கள் திடீரென தோன்றி மக்களுக்கு அரசியலை சொல்லித் தர வந்துள்ளார்கள்.  இவர்கள் சொல்லி மக்கள் வாக்களிக்க வேண்டுமா? இவர்களின் பெயர்களை முழுமையாகக் கூட சொல்ல தகுதியற்றவர்கள்.  இவர்களுக்கு தமிழர்களின் பிரச்சினைகள் தெரியுமா? விவசாயிகள் என்றால் யார் என்று தெரியுமா? நாட்டை உயர்த்திப் பிடிக்கும் தொழிலாளிகள் யார் என்று தெரியுமா? மக்களுக்காக வேகாத வெயிலிலும், மழையிலும், வெள்ளத்திலும், போராடாத இந்த தறுதலைகளை தாய் தமிழகம் தாங்குமா? இப்படியும் தமிழகம் பாழ்படுத்தப்படுகிறது. இந்த ஊழுக்கு கர்த்தா யார்? எதிர்வினைகளே விதைத்தால் எதிர்வினைகள்தான் விதைப்பவர்களுக்கு வரும் என்று இயற்கையின் விதியைக் கூட அறியாமல் சில கேடுகெட்ட ஜென்மங்கள் நடந்துகொள்கிறார்கள். 

இதற்கு நீதி கேட்டு இன்னொரு கண்ணகி எழவேண்டும்.

விதியே விதியே தமிழச் சாதியை 
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? 

- பாரதி

சரியாகத்தான் பேரறிஞர் அண்ணா சொல்லியுள்ளார். "ஏ, தாழ்ந்த தமிழகமே!" 

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...