Sunday, April 10, 2016

சித்திரை உழவு

சித்திரை உழவு... பத்தரை மாற்று தங்கம் என்பது சொலவடை.....

கிராமத்தில் சித்திரை உழவு என்பது ஒரு முக்கியமான நடப்பாகும். இப்போதெல்லாம் டிராக்டர்கள் வந்துவிட்டன. 60களில் விடியல் நேரத்தில் 6 மணிக்கே இரட்டை மாடுகளை பூட்டிக்கொண்டு ஏரோடு நிலங்களை சித்திரை மாதத்தில் உழச் செல்வது கிராமப் புறங்களில் பக்தியான நடைமுறையாகும்.

சித்திரை பிறக்க இருக்கின்றது. கடுமையான வெயில். இந்த வெயிலிரும் ஒரு சில கிராமங்களில் இரட்டைக் காளைகளை பூட்டிக் கொண்டு டிராக்டர்கள் வைத்திருந்தாலும் சம்பிரதாயத்துக்காக மாட்டு உழவை செய்வது வாடிக்கையாக உள்ளன. பழமையான நடைமுறை இருந்தாலும் நாட்டுப் புறத்தில் அதைக் கடமையாக மேற்கொள்வது பாராட்ட வேண்டும். ஒரு பக்கம் பொதுத் தேர்தல். சித்திரையில் விவசாயத் தொழில்கள் அறுவடைக்குப் பின், தைப் பொங்கலுக்குப் பின் துவங்குகின்ற நேரமாகும்.

ஏப்., மே மாதங்களில் 15 சதவீத கோடை மழை கிடைக்கிறது. மழை பெய்யும் போது நிலத்தின் சரிவிற்கு குறுக்காக 25க்கு 30 செ.மீ., உழவு செய்யும் போது மழைநீர் வழிந்தோடாமல் நிலத்திலேயே சேமிக்கப்படுகிறது. இதனால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு வளமான மேல் மண் பாதுகாக்கப்படுகிறது. கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்பில் மழைநீர் சேமிக்கப்படுகிறது.

போதுமான காற்றோட்டம் கிடைப்பதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மண்ணில் உள்ள ரசாயன உரம், பூச்சிமருந்துகள் சிதைக்கப்படுகிறது. அடுத்த பயிர் சாகுபடிக்கு ஊட்டச்சத்துகள் கிடைப்பது எளிதாகிறது. கோடை உழவால் புழு, பூச்சிகள், கிருமிகள் மற்றும் களைசெடிகளும் அழிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...