Monday, April 11, 2016

Theories of Democracy - கட்டுப்பாடான ஜனநாயக குடியரசு

Theories of Democracy என்ற நூலை படித்தபோது மக்களாட்சியின் மாண்பும், அதன் வகைகளும், குடியாட்சியின் போக்கும் அதன் அணுகுமுறையும் விரிவாக ஆய்வுபூர்வமாக தெரிந்துகொள்ள முடிந்தது. குடியாட்சியில் எப்படி உரிமைகள் முக்கியமோ, குடிகளின் கடமைகளும் முக்கியம். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களின் பொறுப்புகளை சொல்கின்ற வகையில் Directive Principles of State Policy என்று இடம்பெற்றுள்ளது. கென்னடி சொன்னதைப்போல நாடென்ன உனக்கு செய்தது என்று நினைக்காமல் நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று நினைத்துப்பார் என்ற வகையில் கடமைகளை நேர்மையாக செய்யவேண்டும். ஜனநாயகம் கிரேக்கத்தில் பிறந்து பல வடிவங்களாகி இன்றைக்கு நவீன அணுகுமுறையோடு பல சூழலில் புதிய பரிமாணங்கள் எடுத்துள்ளன. உலகம் வளர்ச்சி அடைய வேண்டும். அமைதியான உலகமாக இருக்க வேண்டும். ஆட்சி முறையில் நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற மக்கள் நல அரசுகள் அமையவேண்டும். அப்படியென்றால் ஒரு சில அவசியமான பொறுப்பான கண்டிப்பான ஆட்சிமுறை அவசியம். உரிமைகள் என்பது நாம் எடுத்துக்கொள்கின்ற காரணிகள் ஆகும். அதற்கும் சில அளவுகோல்கள் உண்டு. அந்த அளவுகோல்களோடு, நம்முடைய கடமைகளும், பொறுப்புகளும் நமக்கென்று சில வரையறைகளை வைத்துக்கொண்டு இருந்தால்தான் ஜனநாயகம் வெற்றி அடையும் என்று அறிவியல் பூர்வமாக இன்றைக்கு புதிய கோட்பாடுகளை சொல்லிவருகின்றனர். இது குறித்தான விரிவான பதிவுகளை Theories of Democracy யில் படிக்க முடிந்தது. நோய் வந்தால் கசப்பான மருந்துகளை எடுத்தால்தான் நலமாக முடியும்.

எனவே நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சில கட்டுப்பாடுகளும், ஒழுக்கங்களும் அவசியம். இவை யாவும் மக்களே கடைப்பிடிக்கவேண்டும். அரசு இந்த கட்டுப்பாடுகளை வரையறுக்கும் என்று இல்லாமல் நமக்கு நாமே வரையறுத்துக்கொண்டு நம் உரிமைகளைப் பெறுவது எதிர்கால குடியாட்சிக்கு மாண்பாக இருக்கும் என்று ஒரு சில புதிய சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதை சுயநலமற்ற ஏற்றுக்கொண்ட ஜனநாயக கட்டுப்பாடுகள் என்று நாம் பொருள்கொள்ளலாம். இந்த சிந்தனைகள் எதிர்காலத்தில் உலக நாடுகளில் குடியாட்சியைப் பாதுகாக்க உதவும் என்று அரசியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த கால மன்னர்கள் ஆட்சியில் வரம்புள்ள முடியாட்சி, வரம்பற்ற முடியாட்சி என்ற பிரிவினைகள் இருந்தது போல கட்டுப்பாடான ஜனநாயக குடியரசுகள் எதிர்காலத்தில் தோன்றும் என்று சொல்கின்றன.


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...