Saturday, November 28, 2020

 


#தமிழகத்தின்_முதல்_அமைச்சராக #இருந்த_பி_எஸ்_குமாரசாமி_ராஜா
———————————————-



|இன்று பி.எஸ். குமாரசாமிராஜா அவர்கள் 122-வது பிறந்தநாள் |

எளிமை, நேர்மை, உண்மை ஆகிய மூன்று அருங்குணங் களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்து வாழ்ந்த அரசியவாதி யார்? "

எத்தனையோ பேர் இருந்து உள்ளார்கள், அதில் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த பி.எஸ். குமாரசாமி ராஜாவைப் பற்றிச் சொல்கிறேன்.

மிகப் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் பி.எஸ்.கே. இன்று நீங்கள் ராஜபாளையம் போனால், அங்கு இருக்கும் காந்தி கலைமன்றம் அவர் வாழ்ந்த வீடு. பொது மக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்துச் சென்று விட்டார் பி.எஸ்.கே.

காந்தி பலமுறை அவரது வீட்டுக்கு வந்துள்ளார். போராட்டக் காலத்தில் காமராஜர் இங்கு வந்து தங்குவார். ஓராண்டு காலம் கடலூர் சிறையில் இருந்தவர். இத்தகைய பாரம்பரியமும் பணமும் இருந்தாலும் எளிமை, நேர்மை, உண்மை மூன்றையும் கடைப் பிடித்தவர்.

ஒன்றுபட்ட சென்னை ராஜதானியின் முதலமைச்சராக அவர் ஆனபோது, 'இதற்கான திறமையோ, யோக்கியமோ, எனக்கு இல்லை’ என்று சொன்னவர். 1952 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக இடங்களில் தோற்ற போது, 'இந்தத் தோல்விக்கு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். அதற்காக எந்தத் தண்டனை வேண்டும் ஆனாலும் எனக்குக் கொடுங்கள்’ என்று சொன்னவர்.

அவரது சேவையைப் பயன்படுத்திக்கொள்ள பிரதமர் நேரு நினைத்தார். ஒரிஸ்ஸா கவர்னர் பதவியைத் தந்தபோது, பி.எஸ்.கே. ஏற்கவில்லை. கட்டாயப்படுத்தி ஏற்க வைக்கப்பட்டார். அங்கும் அவரால் இருக்க முடிய வில்லை. 'நாட்டின் செல்வம் வடக்கே கொள்ளை போகிறது’ என்று ஒரு விழாவில் இவர் பேச, அவர்கள் விளக்கம் கேட்க, உடல்நிலையைக் காரணம் காட்டி, பதவியைவிட்டு விலகி ராஜபாளையம் வந்துவிட்டார். இப்படி எத்தனை பேரால் இருக்க முடியும்..?

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...