Monday, November 30, 2020

 


#பேரறிஞர்_அண்ணா #தில்லைவில்லாளன்_பேசுவதிலே , #வீரமும்_விவேகமும்_காண்கிறோம்#என்பார்.
#தில்லை_வில்லாளன்
——————————-


மறைந்த தில்லை வில்லாளன் அவர்களிடம் 1981லிருந்து சந்தித்து பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. உயர்நீதிமன்றத்தில் என்னுடன் வழக்கறிஞராகவும் இருந்தார். நியூ லா சேம்பர் கீழ் தளத்தில் அவருக்கு அறையும் இருந்தது. மயிலாப்பூர் சன்னதித் தெருவுக்கு நேராக உள்ள நடுத் தெருவில் இராம. அரங்கன்னல் வீட்டில் தங்கியிருந்தார். இந்த வீட்டில்தான் அவள் ஒரு தொடர்கதை படம் எடுக்கப்பட்டது. நடிகர் ஜெய்கணேஷ் நடித்து பாடிய "தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு" என்ற பாடல் தெருவிலிருந்து பாடும்பொழுது வீட்டிலிருந்து நடிகை சுஜாதா ஜன்னல் திரைச்சீலைகளை மூடும் காட்சி இங்குதான் அப்போது படமாக்கப்பட்டது. சுஜாதாவின் குடும்பம் அரங்கன்னல் வாழ்ந்த வீட்டில்தான் வாழ்ந்ததாக 1974ல் திரைப்படம் எடுக்கப்பட்டது. நான் அடுத்தத் தெருவில் உள்ள சாலைத் தெருவில் 1979லிருந்து வசித்தேன். மாலைப் பொழுதுகளில் தில்லை வில்லாளன் என்னைத் தேடி வந்து பேசிக் கொண்டிருப்பார். அந்த வீட்டில்தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்தார். விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அங்கு வருவார். இவர்களோடு அரங்கன்னல் பேசுவதை விரும்புவார். என்னிடம் அன்போடு பழகுவார். ஒரு சமயம் நானும் அவரும் டெல்லிக்குப் போனபொழுது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது உடனிருந்து அவரை கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காவிரிப் பிரச்சினையைப் பற்றி என்னுடைய கட்டுரை தினமணியில் வந்தபொழுது அதைப் படித்துவிட்டு நான் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசினேன். ஹேமாவதியில் அணை கட்டாதீர்கள். அது எங்கள் தமிழகத்துக்கு எமனைப் போன்று ஏமாவதி என்று பேசினேன் என்று குறிப்பிட்டார். அவரைப் பற்றி எத்தனைப் பேருக்கு இன்றைக்குத் தெரியும்? அண்ணாவின் பயிற்சி பெற்று அவருடைய நம்பிக்கை தளபதியாக இருந்தார். சிதம்பரத்தில் பிறந்த அர்ச்சுனன்தான் தில்லை வில்லாளன். சிதம்பரம்தான் தில்லை. வில்லுக்கு அர்ச்சுனன் என்று சொல்லப்படுவதால் அந்த அர்ச்சுனன் வில்லாளன் ஆனார். அண்ணாவின் திராவிட நாடு இதழில் பணியாற்றியவர். கதை, கட்டுரை, நாடகங்கள் ஆகியவற்றை எழுதியவர். 20 வயதுக்குள் 6 நாவல்களை எழுதி வெளியிட்டவர். பேசும் ஓவியம் என்கிற இவரது நாடகம், ஓவியத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் புரட்சிக்காரனை மேடையில் சித்தரித்தது. அண்ணாவின் படைப்பாற்றல் மிக்க தம்பிகளில் இவரும் ஒருவர். தம்பி, பூமாலை போன்ற பத்திரிகைகளையும் நடத்தினார். வழக்கறிஞரான இவர் தி.மு.க. வின் சார்பில் 1968 முதல் 1976 வரை நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மாதவன், தன்னுடைய எழுத்துக்களுக்கு முன்னோடியாக அண்ணா, கலைஞர், தில்லை வில்லாளன் ஆகியோரது பெயரைக் குறிப்பிட்டதிலிருந்து திராவிட இயக்கத்தில் #தில்லைவில்லாளன் என்ற படைப்பாளி எத்தகைய விதைகளை விதைத்துச் சென்றிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். #பேரறிஞர் #அண்ணா அவர்கள் .. #தில்லைவில்லாளன் பேசுவதிலே , வீரமும் விவேகமும் காண்கிறோம்! என்பார்.


மற்ற கழகத்தின் முன்னோடிகளை ,

சொற் பொழிவாளர்களை பற்றியும்
அவர்களின் பேச்சு நடையை பற்றி
சுவைபட எடுத்து கூறுவார்

தனது தம்பிகளை பற்றி.

நாவலர் நடையில் , தமிழ் இலக்கியம்
ஆட்சி செய்கிறது

கருணாநிதியின் , பேச்சு கலை முரசு'

நடராசன் , பேச்சிலோ எளிமையும்
தோழமையும் சுவை தருகிறது:

கண்ணதாசன் , பேச்சில் காரம் கவிதை
வடிவில் கிடைக்கிறது!

ஆசைத்தம்பியின் , பேச்சில்
அழுத்தந்திருத்தம் அழகு பெறுகிறது!

இளங்கோ , பேச்சில் எதிரியை மடக்கிடும்
முடுக்கு தெரிகிறது!

சம்பத் பேசுகிறார் , சம்மட்டி அடி என்கிறார்
எதிரிகள்!

ச . அமுதன் பேசுகிறார் , பேச்சில்
அமுதென தமிழ் இருக்கும் .

ராமசாமி பேசுகிறார் , எதிரியின் மனமும்
இளகிவிடுகிறது!

சிற்றரசு பேசுகிறார் , சீறி வருவோரும்
சிரித்த படி குழைகின்றனர்!

சத்தியவாணிமுத்து , பேச்சிலே
இனிமையும் சூடும் கலந்து கிடைக்கிறது!

குடந்தை நீல மேகம் , அனுபவத்தை
கொட்டுகிறார்!

மதுரை முத்து , தமிழ் மரபாம் வீரத்தை
விளக்குகிறார்!

கோவை ராசமாணிக்கம் , கோலோச்சும்
வழியைக் கூறுகிறார்!

ப . உ . சண்முகம் பேச்சில் , பண்பும்
பயனும் காண்கிறோம் !

காஞ்சி அண்ணாமலை , கனிவு
பொழிகிறார்!

வட ஆற்காடு முல்லை சக்தி , எண்ண
பண்ணைக்கு வண்ணம் தேடி
அளிக்கிறார்!

பாராங்குசம் , பேசும்போது பாட்டாளி
படை திரளுகிறது!

திருச்சி மணி , பேசும்போது தீ கிளம்பி
தீயோரை கருக்கிவிடுகிறது!

சிவசாமி , பேசும் போது சீறும் மாற்றாரும்
சிந்திக்கின்றனர்!

மதியழகன் , பேச்சு மாணவர் உள்ளம்
எல்லாம் நிறைகிறது!

அலமேலு , அப்பாதுரையின் பேச்சிலோ
ஆர்வம் கொந்தளிக்கிறது!

திராவிட இயக்கத்தின் பொதுக்கூட்டம் .

மாலை நேரபல்கலைகழகம்
என்றளவில் நடந்தது .

பலபேச்சாளர்களைசிந்தனையாளர்கள உருவாக்கியது .

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
26.07.2020

#ksrposts

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...