Monday, November 30, 2020

 


#சமூகநீதி_என_பேசுவது_fashion_என_
#நினைக்கும்_சிலருக்கு....
#இன்றைக்குதெரியவேண்டியசங்கதி
———————————————




#காங்கிரஸ்முதல்வர் #தமிழக_இரும்பு_மனிதர்
#ஓமந்தூர்ராமசாமிரெட்டியார்
••••••••••••••••••••••••••••••••••••••••
சமூகநீதி யைப் பொறுத்தவரை தமிழ்நாடு இந்தியாவுக்கான முன்னோடி மாநிலம்.மெட்ராஸ் ராஜதானியின் 1947 ஆம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக (Premier)பதவியேற்ற பிறகு 1928ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி மொத்த பதவிகள் 14 என்றால் பிராமணருக்கு இரண்டு, கிறிஸ்தவர், முஸ்லிம் ஆகியோருக்கு தலா 1, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தலா 2, பிராமணரல்லாத மற்றவர்களுக்கு ஆறு என்ற விகிதத்தில் வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே ஓமந்தூராரின் சென்னை மாகாண அரசு தான் முதன்முதலாக தனி இடஒதுக்கீடு வழங்கியது.

இந்தியா குடியரசாகி 1950இல் புதிய அரசியல் சாசன சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டு பிராமண மாணவர்கள் வகுப்புவாரி ஒதுக்கீட்டால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒதுக்கீட்டு முறை இந்திய அரசமைப்பு சட்ட விதிகளுக்குப் புறம்பானது என்று வழக்குத் தொடுத்தனர். இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய கமிட்டியில் இடம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், இந்த வழக்கில் வாதிகளின் சார்பில் ஆஜராகி வாதிட்டார். வழக்கின் முடிவில் சென்னை உயர்நீதிமன்றம் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து உத்தரவிட்டது.

சென்னை மாகாண அரசின் மேல்முறையீட்டுக்காக உச்சநீதிமன்றத்தை அணுகியது. அங்கும் தீர்ப்பு அரசுக்கு பாதகமாகவும் வாதிகளுக்கு சாதகமாக இருந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தது. அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில விஷயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆதிக்க சக்திகள் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டத்தில் தடை செய்ய வைத்தனர்.
இவர் எளிமையான, நேர்மையான விவசாய முதல்வர்.
•••••
இரும்பு மனிதர்கள் பலம் பொருந்திய பிரிட்டிஷ் அதிகாரிகள் பலரும் இந்திய அளவில் சர்தார் வல்லபாய் படேல், சென்னை மாகாண அளவில் ஓமந்தூரார் இருவர் மீதும் பயம் கலந்த மரியாதை கொண்டிருந்தனர். இதற்கு அவர்களின் அஞ்சாமையுடன் இருந்த நெஞ்சுறுதியே காரணம்! மெளண்ட் பேட்டன் பிரபு, தன் மனைவியுடன் ஓமந்தூராரைச் சந்தித்த ஒரு தருணம்! இந்த படத்தில் ஓமந்தூரார் எலிசபெத் ராணி சென்னைக்கு வந்த பொழுது வரவேற்ற நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சிக்கு செல்லும்போது கசங்கிய சட்டையுடன் புறப்பட்ட அவரிடம் அதிகாரிகள் "வேறு ஒரு சட்டையை போட்டுக்கொண்டு கிளம்பலாமே?" என்று சொன்னதற்கு "இந்த சட்டையோடு நான் எலிசபெத் ராணியை வரவேற்பது என்றால் வருகிறேன். இல்லையெனில் நான் வரவேற்க வரவில்லை. நான் இப்படித்தான் எதார்த்தமாக இருப்பேன். உங்களுக்காக என்னை மாற்றிக் கொள்ள முடியாது" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதுபோன்ற மனிதர்களை இன்று நாம் பார்க்க முடியுமா?

சில அரசியல் ஜென்மங்களின் கேடு கெட்ட போக்கை பார்க்க விரும்பமல் கடைசியில் இவர் மனம் வெறுத்து வடலூர் வள்ளாளர் அருட் பெரும் ஜோதில் வந்து கலந்து இருந்தார்.
வாழ்க ஓமந்தூரார் புகழ்...

#சமூகநீதி
#ஓமந்தூர்ராமசாமிரெட்டியார்
#மெட்ராஸ்ராஜதானி
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-07-2020

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...