Monday, November 30, 2020

 

#காவல்_மரணங்கள்
——————————



சாத்தான்குளம் காவல் மரணத்திலிருந்து பல தளங்களில் காவல் மரணங்கள் குறித்து விவாதங்கள் நடக்கின்றன. இதுகுறித்து அதிகமாக பேசுபவர்கள், இதேபோல் காவல் மரணங்கள் 1970 முதல் நடந்து வந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


கடந்த 1982-ல் சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு இதேபோன்ற ஒரு துயரம்ஏற்பட்டது.அந்த மரணத்தின்
போதே, காவல் நிலையத்தில் ஏற்படும் மரணங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தேன்.

அதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் (கா) கட்சியின் தலைவராக இருந்த பழ.நெடுமாறன், காவல் மரணங்களைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார்.அப்போது எம்ஜிஆர் ஆட்சி.

அதேபோலவே,1993 கட்டத்தில் ஜெயல்லிதா ஆட்சி காலத்தில் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் பத்மினி என்ற பெண்ணுக்கு நடந்த கொடுமையை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முன்னெடுத்ததையும் பேச வேண்டும்.

இதே மாதிரி கொடுமைகள் இதற்கு முன்பு நடந்திருப்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சாத்தான்குளம் கொடுமையைப் பற்றி இன்றைக்கு சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் என பல்வேறு தளங்களில் பேசும் போது முன்னாள் நடந்த காவல் மரனங்களையும் நினைவில் கொள்ள வேண்டமா?

ஒரு பிரச்சனையை விவாதம் செய்தால் அதன் ஆதியும், அந்தமும் சேர்த்துதான் விவாதிக்க வேண்டும் என்ற புரிதல் பலருக்கு இங்கு இல்லாமல் போய்விட்டது!

இன்றைக்கு வந்த செய்திதாளில் இது குறித்தான விவாத்த்தில் கூட சரியான தரவுகள் இல்லை. அவ்வளதான் அவர்களின் புரிதலும், தெளிவும். என்ன செய்ய?

#காவல்_மரணங்கள்
#custodialdeaths

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-07-2020

#KSR_Posts #KsRadhakrishnan

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...