Sunday, November 29, 2020

#யார்_இந்த_சுந்தரிகள்....... #முள்ளிவாய்க்கால்_துயர_நேரத்தில்_நடந்தது__என்ன?

#எத்தனை_சுந்தரிகள்.......


யார் இந்த சுந்தரிகள்?
#முள்ளிவாய்க்கால்_துயர_நேரத்தில்_நடந்தது__என்ன?
 

ஈழத்தில் முள்ளிவாய்க்கால் துயரங்கள் நடந்து முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.  நவரட்டின திருநாவுக்கரசு என்னுடைய நெருங்கிய நண்பர். முள்ளிவாய்க்கால் போர் நடக்கும்போது என்னுடன் தொடர்பில் இருந்தார். முள்ளிவாய்க்கால் போரில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலை எடுத்து துயரங்கள் நடந்தேறின. இதிகாசங்களில் வரும் பல கிளைக்கதை போல அறியப்படாத நிகழ்வுகள் முள்ளிவாய்க்காலில் நடந்தேறின என்று என்னிடம் திருநாவுக்கரசு குறிப்பாக தந்தார். அதற்கு பிறகு அவர் என்ன ஆனார் என்று என்னால் அறியமுடியவில்லை. அவரைப் பற்றி தெரிந்துக் கொள்ள முயற்சித்தேன், அதுவும் முடியவில்லை. அவர் எனக்கு அனுப்பிய அதே சில  செய்திகள்தான், சமீபத்தில் வெளியான ‘RAW: A History of India’s Covert Operations’ என்ற நூலில் ரா அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

அவர் சொன்ன செய்திகளை வெளியிடலாமா? என்று எனக்கு சிறுதயக்கம் இருந்தது. ஆனால், இன்றைக்கு அதுகுறித்து நூலாகவே வெளிவந்துவிட்டது. அவர் சொன்ன அதே செய்திகள் உள்ள இந்த புத்தகத்திலுள்ளவற்றை முடிந்தளவு மொழியாக்கம் செய்துள்ளேன். எத்தனையோ சுந்தரிகள் தமிழருக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கையில் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் களம் இறங்கியிருந்தனர். இனியும் என்னென்ன நடக்குமோ அறியமுடியவில்லை. அதுகுறித்த முழுமையான, இதுவரை வெளிவராத செய்திகள் இதில் உள்ளன. இந்த நூலில் சொல்லப்பட்ட செய்திகளும், திருநாவுக்கரசு 10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அனுப்பிய செய்திகளையும், இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி அக்கறையும், ஆர்வமும் உள்ளவர்களின் பார்வைக்கு வைக்க வேண்டியது என்னுடைய கடமை. அப்போது 2009இல் டில்லி, சென்னையில் நடந்த  வற்றையும் சொல்ல வேண்டும். சொல்வேன்.  அவ்வளவுதான்.

 

..............

2005, டிசம்பர் 3 அன்று காலையில் கொழும்பு கோட்டை தேநீர் நிலையத்தில் வந்து இறங்கினார் அவினாஷ் சின்ஹா. இலங்கை நகரத்திலேயே  மிகச்சிறந்த காலை உணவு கிடைக்கும் இடம் என பெயர் பெற்ற எச்செலோன் சதுக்கத்தில் உள்ள டச்சு மருத்துவமனை வளாகத்திற்குள்ளே இருந்த நீலமஞ்சள் உணவகத்திற்குள் நுழைந்தார் அவினாஷ். மிகவும் பசியுடன் இருந்த அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பட்டியலை நோட்டமிட்டார். என்ன சாப்பிடலாம் என்பதில் மூழ்கி இருந்த அவினாஷின் சிவப்பு நிற மேஜையை நோக்கி ஐம்பது வயது மதிக்கத்தக்க, சாம்பல் நிற தலைமுடியுடன் ஒருவர் வந்து நின்றார்.

“உன்னை பார்த்தத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்று கூறியதைக் கேட்ட அவினாஷ்  உணவு பட்டியலிலிருந்து விடுபட்டு சற்று தலையை தூக்கிப் பார்த்தார். “நண்பா, கோசலா உன்னைப் பார்த்து எத்தனை வருடமாகிவிட்டது, காலையிலேயே சிங்கம் போன்ற கம்பீரத்துடன் கிளம்பிவிட்டாய்” என்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அவினாஷ். அந்த உணவகத்தின் ஓரத்தில் ஒரு அமைதியான இடத்தில் இருவரும் உட்கார்ந்து தேநீர் அருந்திக் கொண்டே பேசத் தொடங்கினர். இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவான “ரா”( RAW) அமைப்பில் பணியாற்றும் அவினாஷ், கோசலா ரத்நாயக்கைவிட வயதில் சிறியவர். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த அக்டோபரில் கொழும்பு திரும்பியிருந்தார் அவினாஷ். 2002ல் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட செயல்பாட்டாளர் பொறுப்புக்கு கோசலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தசமயத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன், இலங்கை அரசு சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இலங்கையின் வடகிழக்கு பகுதியில் ஒரு தமிழ் இனத்தின்  சுதந்திரத்திற்காக ஆயுதமேந்திய கொரில்லா குழுவான விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கை அரசிடம் போராடி வந்தது.

சர்வதேச அழுத்தம் மற்றும் ராஜதந்திர சூழ்ச்சி காரணமாக இருதரப்பினருக்குமிடையே போடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம், 2002ல் நடந்த உள்நாட்டுப் போரின் திருப்புமுனையாக அமைந்தது. 1976ஆம் ஆண்டு வேலுபிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கிளர்ச்சி அமைப்பு, 1980களின் முற்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொரில்லாப் போரை நடத்தத் தொடங்கியது.

உத்தரபிரதேசத்தில் யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் வைத்து பிரபாகரனுக்கு ரா அமைப்பினர் பயிற்சி அளித்தனர். 2002ல் இந்திய உளவு நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்தாக கோசலா மாறியிருந்த நேரம், பிரபாகரனின் சகாப்தம் இருளில் மூழ்கத் தொடங்கியது. சமாதான பேச்சுவார்த்தையில் பிரபாகரனுக்கு மகிழ்ச்சி இல்லையென்றும், பேச்சுக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்றும் அவினாஷை கோசலா எச்சரித்தார். அது மட்டுமில்லை, தமிழீழ விடுதலைப்புலிகள் விரைவில், ரத்தக்களரிப் போருக்கு மீண்டும் வருவார்கள் என்றும் கணித்திருந்தார். இதுதான் அவினாஷ் மீண்டும் இலங்கை வருவதற்கு காரணம்.

“விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை குடியரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்சேக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லை. பிரபாகரனுக்கும் அவர் மீது நம்பிக்கை இல்லை. அதேசமயத்தில் இலங்கை மண்ணில் பிரபாகரன் ஒரு நிமிடம் கூட வாழ்வதை மஹிந்த ராஜபக்சேவும் விரும்பவில்லை. இப்படி ஒருவருக்கொருவர் வெறுப்பை காட்டிக் கொண்டிருக்கின்றனர். நார்வேயில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தை உறுதியாக தோல்வியடையும், எக்காரணத்தைக் கொண்டும் பிரபாகரன், மஹிந்த ராஜபக்சே  அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டார்” என கோசலா கூறினார்.

இதைக் கேட்டு சிரித்த அவினாஷ், ”அப்படியானால், யுத்தம் மட்டும்தான் இதற்கு தீர்வாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என கேட்டார். ”நானில்லை, குடியரசுத்தலைவர் அப்படி நினைக்கிறார். சர்வதேச அழுத்தம் காரணமாக விடுதலை புலிகளுக்கு மற்றொரு வாய்ப்பை அவர் வழங்கலாம்” என கோசலா கூறினார்.

பல மாதங்கள் கழித்து மீண்டும் போர் தொடங்கியது. இலங்கை ராணுவத் தலைவர் சரத் பொன்சேகாவை குறிவைத்து ஏப்ரல் 2006ஆம் ஆண்டு நடந்த தாக்குதல் குறித்து அவினாஷுக்கு முதலில் கூறியவர் கோசலா. ஆனால், இந்த சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் மறுப்பு தெரிவித்தது. இதற்கு காரணம் விடுதலைப்புலிகள்தான் என மஹிந்த ராஜபக்சே கடுமையாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக புலிகளுக்கு எதிராக விமானப்படைத் தாக்குதல் நடத்தவும் உத்தரவிட்டார். இந்தத் தாக்குதல் இரண்டு நாட்களில் முடிவடைந்தாலும், இதுபோன்ற தாக்குதல் வருவதற்கான தொடக்கமாகவே அமைந்தது. 2006ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை கடற்படைக்கு எதிராக நடந்த தாக்குதலில் புலிகளின் ஒரு கப்பல் சேதமடைந்தது. இதையடுத்து, மற்ற ரோந்து வாகனங்களின் மீது தீ வைக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் கடலையே உள்நாட்டுப் போரின் ஒரு அரங்கமாக மாற்றியது.  புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் உடன்பட்டதாக கோசலா தெரிவித்தார்.   புலிகள் அமைப்பு இலங்கையில் உள்ள தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதால், அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தி, 2006 மே 19ல் வெளிநாடுகளில் இருந்த புலிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

காலம் கடந்துவிட்டது:

 முப்பது, நாற்பது ஆண்டுகளாக இலங்கையை தங்கள் தாய் மண்ணாக நினைத்து வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானதை எண்ணி ”ரா” அமைப்பு கவலையடைந்தது.  2006ஆம் ஆண்டின் பிற்பகுதியில், கொழும்பிலிருந்து முப்பதாயிரம் தமிழர்கள் ராஜதந்திரமாக வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.  ஆனால், ரா அமைப்பு அதன் தலைவரான பி.கே.எச்.தரகனிடம், இந்த மோதலில் குறைந்தபட்சம் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் தமிழர்கள் பிடிப்பட்டதாக தகவல் தெரிவித்தது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களில் ரா அமைப்பு ஊடுருவியுள்ளதாக அவினாஷ் கூறினார்.

 எங்களது மதிப்பீடு உறுதியானதாக இருந்து போர் பெரிதாக வளர்ந்தால், முடிந்தவரை அதிகமான தமிழர்களை வெளியேற்றுவதே எங்கள் முதன்மை நோக்கமாக இருந்தது. ஆனால், அது ஒரு மூடுபனி கனவுபோல் மாறியது. புலிகளின் அழுத்தத்தின் காரணமாக தமிழ் மக்கள் எங்கேயும் செல்லாமல் அங்கேயே தங்க முடிவு செய்தனர். அதனால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என அவினாஷ் கூறினார். புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலால் சர்வதேச நாடுகள் ஆத்திரமடைந்ததால், இலங்கை ராணுவத் தாக்குதலுக்கு ஆதரவு கொடுக்க இந்திய அரசு ஒரு கொள்கை ரீதியான முடிவை எடுத்தது.

2007-ன் பிற்பகுதியிலும், மே 2009-ன் இடையிலும் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் நடந்த போரில்  இலங்கை அரசு வெற்றி பெற்றதாக அறிவித்து கொண்டது. ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து புலிகள் முகாம்களின் செயற்கைக்கோள் படங்களையும் ரா அமைப்புதான் இலங்கை ராணுவத்துக்கு வழங்கியது.

ரா அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் ஆதரவு இல்லாமல் இலங்கை இராணுவத்தால் விடுதலைப்புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என்று அவினாஷ் கூறினார். இராணுவ வீரர்களை விட புலிகள் அமைப்பில் உள்ளவர்கள் சி்றந்த பயிற்சி பெற்றிருந்தனர். இந்திரா காந்தி அரசாங்கத்தின்போது, இந்தியாவில் புலிகள் அமைப்பின் உயர்மட்ட தலைமைக்கு பயிற்சி அளித்ததோடு, யாழ்ப்பாணத்தில் உள்கட்டமைப்பை வளர்க்கவும் இந்திய முகவர்கள் உதவினர். புலிகளின் கடற்படை பிரிவின் வெற்றிக்காக மூன்று நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவு இருந்தது. நீருக்கடியில் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த குளங்களின் ஆழம் சுமார் நூறு மீட்டர் ஆகும். இதை 1986-ல் அமெரிக்க உளவு பிரிவான சி.ஐ.ஏ-வும் ஒப்புக் கொண்டது. இந்தியாவின் ஆதரவு இல்லாமலும், இலங்கை அரசை எதிர்த்து போராடும் திறன் புலிகளுக்கு இருந்தது. மற்ற குழுக்கள் பேச்சுவார்த்தையில் உடன்பட்டாலும், புலிகள் தங்களுடைய செயல்பாடுகளை தொடர்ந்தது. சுமார் 3,000 உறுப்பினர்களைக் கொண்ட படை வீரர்களை உருவாக்கியிருந்தது விடுதலைப்புலிகள் அமைப்பு. நிகரகுவா மற்றும் கியூபாவிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு புலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சிஐஏ-வின் மதிப்பீடு தவறானது என அவினாஷ் நினைத்தார்.  உத்தரப்பிரதேச காடுகளில் புலிகள் நடத்திய தாக்குதல் பயங்கரமானதாக இருந்தது. அவர்கள் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் பெற்றிருக்கலாம் என்றாலும், அவர்களின் திறமைகள் இந்தியாவைச் சார்ந்தவை என்றும் அவினாஷ் கூறினார்.

1980களில் ரா அமைப்பு இரண்டு பிரிவுகளாக இருந்ததாகவும், அதில் ஒரு பிரிவினர் தனி ஈழத்திற்கான கோரிக்கையை ஆதரித்தும், மற்றொரு பிரிவினர் இலங்கையின் உள்விவகாரங்களில் எந்தவித தலையீடும் இருக்கக் கூடாது என்ற கொள்கையை ஆதரிப்பவர்களாகவும் இருந்தனர் என்பது அவினாஷின் கூற்று. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்த குழு மிகவும் வலுவானது என்பதால், இலங்கை அரசாங்கத்துடனான எங்கள் உறவைக் கடினப்படுத்தும் வகையில் கிளர்ச்சியாளர்களை ஆதரிக்க முடிவு செய்தோம் என்றார்.  ‘ஆனால், நிலையில்லா உலகில் நிரந்தர எதிரிகளுமில்லை, நண்பர்களுமில்லை'. 1987-ல் தனி ஈழம் கோரும் அனைத்து அமைப்புகளும் எதிரிகளாகிவிட்டன. இந்திய அமைதிப் படைகளை(IPKF) அனுப்பியதன் மூலம் நாங்கள் அவமானத்தைச் சந்தித்தோம். போருக்குள் இழுத்துவிடப்பட்டு, நாங்கள் பயிற்சியளித்த அமைப்பின் கைகளினாலேயே எங்களுக்கு பல உயிரிழப்பு சேதங்கள் நடந்தன. ஆனால், 2006 முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்தது. புலிகளை முற்றிலும் அழிக்கும்விதமாக காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் முடிவு இருந்தது.

ரா அமைப்பின் தலைவர் ஏ.கே.வர்மா, இந்திய அமைதிப் படைகள் புலிகளை பலவீனப்படுத்தும் என்றும், அதன்பின்னர் இலங்கை இராணுவத்தின் உதவியுடன், தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாகாண சபை தேர்தல்களை அமைதியாக நடத்தலாம் என்றும் எதிர்பார்த்தார். 1987 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் பிரபாகரனை கைது செய்வதற்காக இந்திய அமைதிப் படை நடத்திய முதல் தாக்குதல் தோல்வியில் முடிந்து பல உயிர் சேதங்கள் ஏற்பட்டன.

இலங்கையுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதும், இலங்கையில் இந்திய அமைதிப் படையினை செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததும் மிகப்பெரிய அரசியல் தவறு என ரா அமைப்பின் அதிகாரி பவன் அரோரா கூறினார். ஏனெனில், ஒரு வருடத்திற்கு முன்புதான் புலிகள் அமைப்புக்கு இந்தியா பயிற்சி அளித்தது. அதனால், இது போன்ற நடவடிக்கைக்கு இந்திய அமைதிப் படை ஏற்றதல்ல. இது சொந்த ஆட்களுடன் போராடுவதுபோல் இருந்தது என அரோரா கூறினார். மேலும், இது போன்ற அமைப்பு இலங்கைக்கு எதிராக இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அமைப்பாகவும் உள்ளன.

தாக்குதலுக்கு பின், நவம்பர் 1987ல் சிஐஏ அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முக்கிய தமிழ் கிளர்ச்சிக் குழுவான புலிகள் அமைப்பை சமாதான உடன்படிக்கைக்கு கட்டுப்படுமாறு கட்டாயப்படுத்தி அந்த அமைப்பை பலவீனமடையச் செய்யலாம் என  இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி நம்பினார். அதேசமயம், அவர்களை ஒரே அடியாக பலவீனப்படுத்தவும் அவர் விரும்பவில்லை. ஏனென்றால், எதிர்காலத்தில் கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக இவர்களை இந்திய நெம்புகோலாக பயன்படுத்த முடியாமல் போய்விடும் என நினைத்தார். எனவே, புலிகளுடன் அரசியல் உரையாடலை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளுடன் புதுடெல்லி தயாராக இருந்தது. இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தியபிறகு அமைதி படையிலிருந்து  இந்திய குழுக்களை பிரித்தெடுக்க முடியும் என ராஜீவ் காந்தி எதிர்பார்த்தார்.  தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையில் இன்னும் வன்முறை வெடிப்புகள் அதிகமாக இருக்கும். இத்தீவிர பிரச்சினையை தீர்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற முடிவுக்கு இந்தியா வரலாம். அதன்பின், இந்தோ-சீனா அல்லது இந்தோ-பாகிஸ்தான் எல்லையில் பதட்டங்கள் போன்ற தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொண்டதாக வாதிட்டு, இந்திய குழுக்களை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குவார் ராஜிவ் காந்தி என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இலங்கையிலிருந்து இந்திய அமைதிக் காக்கும் படையை முழுவதுமாக திரும்பப் பெறுவது உண்மையில் முடியாத ஒன்று. ஆனால், ராஜிவ் காந்தி வழி வந்த வி.பி.சிங் ஊழல் இல்லாத அரசாங்கத்தை உருவாக்குவேன் என்ற வாக்குறுதியை அளித்து 1989ல் தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஆனால், 2006-ன் திட்டமிடல் வேறுபட்டதாக இருந்தது. 1987ஆம் ஆண்டில் மனித புலனாய்வு (HUMTNT) மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவு (TECHINT) ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வலிமைமிக்க புலிகளை தோற்கடிக்க நினைத்து நடத்திய தாக்குதலில், தாங்கள் செய்த தவறுகளிலிருந்து ரா அமைப்பு பாடம் கற்றுக் கொண்டது. ரா அமைப்பு ஆதரவு இல்லாமல் இலங்கை ராணுவத்தால் எதுவும் செய்ய முடியாது.  இருப்பினும், மனித புலனாய்வு பிரிவில் ஏற்பட்ட இழப்பை இந்திய நிறுவனம் தாங்கிக் கொள்ள வேண்டும்.

‘புலிகள் அமைப்பு மட்டுமே எங்களது சொத்துக்களை சேதப்படுத்தவில்லை. இந்த செயலில் இலங்கை இராணுவமும் ஈடுபட்டிருந்தது பின்னர்தான் தெரியவந்தது. 2009ல் இறுதி போர் நடப்பதற்கு முன்னர், யாழ்பாணத்திலிருந்த எங்களது சில முக்கியமான சொத்துக்கள் மாலத்தீவுக்கு சென்ற ஒரு கப்பல் மூலம் வெளியேற்றப்பட்டன.  ஒரு மாதத்திற்கு பிறகு, ரா பிரிவு தங்கள் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கம்போடியாவில் பாதுகாப்பான வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்க வைத்தது. அடுத்தடுத்த மாதங்களில், அனைத்து சொத்துகளையும் பாதுகாக்கும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் மாற்றப்பட்டன.

இலங்கையின் தகவலறிந்தவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியமானதாக இருந்தது’ என்று அவினாஷ் கூறினார்.

விசுவாசத்தின் விலை:

      ‘தி சண்டே லீடர்’ என்ற இலங்கை நாளிதழின் ஆசிரியரான லசாந்தா விக்ரமதுங்கே 2009 ஜனவரி 8ஆம் தேதியன்று காலை 10.15 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்புக்கு தெற்கிலுள்ள ரத்னமாலாவின் அட்டிடியா சாலையில் பட்டப்பகலில் ஒரு பத்திரிகையாளரை இரண்டு பேர் சுட்டுக் கொன்றது ரா அமைப்புக்கு பீதியை ஏற்படுத்தியது. அவர் சிறந்த பத்திரிகையாளர் மட்டுமில்லாமல், இந்திய உளவு நிறுவனத்தின் விசுவாச நண்பராகவும் இருந்துள்ளார். இந்த சம்பவத்தால் உள்நாட்டு போர் தொடங்குவதற்கு முன்பே லசாந்தாவுடன் நட்பு கொண்டிருந்த ரா அமைப்பின் அதிகாரி ஜெவத் ஃபரிதி அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

பல மாதங்களாக லசாந்தா மதுரங்காவுக்கு அரசின் ஆதரவு குழுக்களிடமிருந்து மிரட்டல் வந்ததாகவும், என்னை தாக்க யாரால் முடியும் என லசாந்தா பலமுறை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாகவும் ஃபரிதி கூறினார். லசாந்தாவுக்கு மஹிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே ஆகியோர் மீது சந்தேகம் இருந்தது. ஏனெனில் லசாந்தாவின் செய்திகள் அவர்களது அரசாங்கத்தை விமர்சித்தது மட்டுமில்லாமல், பாதுகாப்புத் துறையில் நடந்த மிகப்பெரிய ஊழல்களையும் அம்பலப்படுத்தியது என்று ஃபரிதி கூறினார்.

2005ல் மஹிந்த ராஜபக்சே தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கோத்தபய ராஜபக்சேவை பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செயலாளராக நியமித்தார். லசாந்தா கொலை செய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், கோத்தபய ராஜபக்சே சம்பந்தப்பட்ட ஒரு பாதுகாப்பு மோசடியைக் கண்டுபிடிக்கும் வேலையில் தான் ஈடுபட்டிருப்பதாக ஃபரிதியிடம் லசாந்தா தெரிவித்திருந்தார். ஆனால், இலங்கை அரசு எப்போது வேண்டுமானாலும் நம்மை தாக்கலாம் என லசாந்தாவை ரா அமைப்பு எச்சரித்திருந்தது. அதேதான் தனக்கும் தோன்றுகிறது என லசாந்தா ஃபரிதியிடம் கூறினார். அந்த பயம் சரியாகத்தான் கணிக்கப்பட்டிருந்தது.

அதனால், வெளியே செல்வதைத் தவிர்க்கும்படி லசாந்தாவிடம் பலமுறை கூறினேன். இந்த வீட்டில் என்னால் இருக்க முடியவில்லை என்றும், அரசு அச்சுறுத்தலுக்கு பயந்து வாழ முடியாது என்றும் லசாந்தா கூறியுள்ளார்.

ஒருநாள் அலுவலகம் சென்று கொண்டிருந்தபோது ஃபரிதிக்கு போன் செய்த லசாந்தா, மோட்டார் சைக்கிளில் இரண்டு பேரும், மற்றொரு வாகனத்தில் இரண்டு பேரும் தன் காரை பின்தொடர்ந்து வருவதாகக் கூறினார். அப்போது அங்கேயுள்ள ஏதாவது ஒரு காவல்நிலையத்துக்கு செல்லும்படி ஃபரிதி கூறினார். இன்று எப்படியும் தான் கொல்லப்படலாம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிய லசாந்தா, என்னால் எந்தவொரு காவல் நிலையத்தையும் பார்க்க முடியவில்லையே, இப்போது நான் என்ன செய்ய என்று கூச்சலிட்டார். காவல் நிலையம் நோக்கி செல்ல வைப்பதற்கு அவர் இருக்கும் பகுதியை தெரிந்துகொள்ள முயற்சிப்பதற்குள்ளே,  “அவர்கள் இங்கே இருக்கிறார்கள்” என்ற லசாந்தாவின் கடைசி வார்த்தையை மட்டுமே கேட்க முடிந்தது. நான் லசாந்தாவை இழந்துவிட்டேன் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது.

லசாந்தா கொலை செய்யப்பட்ட மறுநாள், எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே, லசாந்தா படுகொலை செய்யப்படுவதற்கு இலங்கை உளவுத் துறையே காரணம் என்றும், அவர்கள் கோத்தபய ராஜபக்சேவுக்கு அறிக்கை அளித்ததாகவும் குற்றம்சாட்டினார்.  இது ஒரு அரசியல் தலைவரின் வெறும் குற்றச்சாட்டு என்றாலும், இலங்கையில் செயல்பட்டு வரும் சர்வதேச புலனாய்வு அமைப்பு பின்புலம் கொண்ட பத்திரிகை ஆசிரியரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உத்தரவு கோத்தபயவிடமிருந்து வந்தது உறுதியாக தெரிந்தது. லசாந்தா கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த செய்தி உலகெங்கிலும் உள்ள செய்தித்தாள்களின் தலைப்புச்செய்தியாக இடம்பிடித்தது மட்டுமில்லாமல், இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரைப் பற்றி உலக சமூகத்திற்கு மீண்டும் நினைவூட்டியது.

ஆரம்பம்:

இலங்கையின் பழங்குடியின மக்கள் கடந்த பல்வேறு காலங்களில் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த மக்களின் பண்புக் கூறுகளை அதிகளவில் கொண்டிருந்தனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முறையான தொழிலாளர் இடப்பெயர்வு 1830களில் தொடங்கியது. 1830 மற்றும் 1880களில் தென்னிந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தாலும், அந்த தீவின் நிரந்தர மக்கள்தொகையில் அவர்கள் ஒருபோதும் இணைக்கப்படவில்லை. 1890களில் காபி தொழிற்துறையில் ஏற்பட்ட சரிவு, இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் குடிபெயர்வதிலும் பிரதிபலித்தது. 1931-1946 வரையிலான காலக்கட்டத்தில் குடியேற்றத்திற்கு இந்திய அரசு விதித்தத் தடையைத் தொடர்ந்து இந்திய தொழிலாளர் எண்ணிக்கை கடுமையாக குறைந்தது. தென்னிந்தியாவிலிருந்து வந்த தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தேயிலை மற்றூம் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதையே தேர்ந்தெடுத்தனர். இந்தியாவிலிருந்து குடியேறியவர்களின் வீடுகள் பக்கத்தில் இருந்தாலும், உள்ளூர் மக்களுடன் தொடர்பு இல்லாததாலும் புலம்பெயர்ந்த இந்திய சமூகம் சிலோனிய நிரந்தர மக்கள்தொகையின் தனிப்பகுதியாக உருவெடுத்தது. அதேநேரத்தில், அவர்கள் ஒரு சிறுபான்மையினராக கருதபட்டனர். 1948ல் நாடு சுதந்திரமடைவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, சிலோன் படிப்படியாக பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் பொறுப்பான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக மாறியது, பல விளைவுகளை ஏற்படுத்தியது. சுதந்திரத்திற்குப் பிறகு, இலங்கை அரசு இந்திய மக்களின் உரிமைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பல நிர்வாக மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளை எடுத்தது.

இலங்கையில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து, இந்திய அரசிற்கும், இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. 1947-48ல் நடந்த பேச்சுவார்த்தை உறுதியான முடிவுகளைத் தரவில்லை. 1964ல் எங்களால் முடிந்தளவுக்கு மட்டுமே இந்திய மக்களுக்கு இலங்கையில் குடிமக்கள் என்ற உரிமையை வழங்க முடியும் எனக் கூறி ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், ஒன்பது லட்சத்து எழுபத்தைந்தாயிரம் பேரில் மூன்று லட்சம் மக்களை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது. ஆனால், ஐந்து லட்சத்து இருபத்தைந்தாயிரம் பேரை ஏற்றுக் கொள்ளுமாறு இந்தியா கேட்டுக் கொண்டது. 1974ல் மீதமுள்ள ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேரை தங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

ஆனால், 1978ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும், நாட்டின் அரசியலமைப்பு, அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்றவற்றில் ஏற்படுத்திய முக்கிய மாற்றங்கள் அதன் நிலைமையை மாற்றியது. சுதந்திரம் பெற்றதிலிருந்து செயல்பட்டு வந்த நாடாளுமன்ற வகை அரசியலமைப்பை நிரகாரித்த ஜெயவர்த்தனே ஆட்சி, அரசாங்கத்தின் ஜனாதிபதி, மாநிலத் தலைவர் ஒருவருக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்கும் முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தது.  தமிழர்களின் பிரச்சினைக்கு மட்டும் தீர்வு கிடைக்காமல் இருந்தது. அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுதாபங்கள் மூலம் தமிழ் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் காஸ்டர்ன் மாகாணத்தை இலங்கை அரசு தனிமைப்படுத்தியது.

இந்திய தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எஸ்.தொண்டமானை கேபினட் அமைச்சராக நியமித்து, இந்திய தமிழர்களை இலங்கைத் தமிழர்களிடமிருந்து பிரித்தது. இருப்பினும், நாட்டின் வடக்கு பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்ந்து கவலையை ஏற்படுத்தியது. இளம் பயங்கரவாதிகளால் செய்யப்பட்ட கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் குறித்த விசாரணைகளுக்கு அங்குள்ள மக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டனர். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, உலகம் முழுவதுமிருந்து இலங்கை நிதியுதவி பெற்று வந்தது. 1981ஆம் ஆண்டில் கொழும்பிலிருந்து கிடைத்த ஒரு ரகசிய அறிக்கை மூலமாக இலங்கை நாட்டிற்கு ரூ.17,222 மில்லியன் நிதியுதவி கிடைத்துள்ளது தெரிய வந்தது. அதில் ரூ.14,246 மில்லியன் கடன்களாகவும், ரூ.2,975 மில்லியன் மானியங்களாகவும் பெறப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு நன்கொடையாக, ஜப்பான் ரூ.756 மில்லியன் வழங்கியது. அதேநேரத்தில் அமெரிக்கா தனது புதிய தனியார் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட உதவித் தொகுப்பில் இலங்கையையும் தேர்ந்தெடுந்துள்ளது. அமெரிக்கா, ”தனியார் நிறுவனங்களின் பணியகம்” என்ற ஒரு புதிய அலுவலகத்தை கொழும்பில் திறந்தது. இது உளவு நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னணி என ரா அமைப்பு சந்தேகித்தது. தனியார் முதலீட்டிற்கான ஒரு சூழலை உருவாக்குத்தோடு, இலங்கையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான இடங்களை அடையாளம் காணவும், அதற்கான நிதியுதவியை அளிக்கவும் அமெரிக்க நிறுவனம் தயாராக இருந்தது. இதைத் தொடர்ந்து, வேளாண் வணிகத் திட்டங்கள் மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோராக பணியாற்றக் கூடிய இடைத்தரகர்கள் இலங்கையிலுள்ள அமெரிக்கர்களின் சிறந்த முதலீட்டு வாய்ப்புகளாக அடையாளம் காணப்பட்டனர். ஆனால், இலங்கை தனது நாட்டு பாதுகாப்பு பிடியை கொஞ்ச கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது.

விடுதலைப்புலிகள் இயக்கம்:

வட இலங்கையில் ஐந்து மூத்த காவல்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத செயலால் அச்சமடைந்த அரசு, இரண்டு முக்கிய சட்டங்களை நிறைவேற்றியது. முதலாவது, விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட இயக்கங்கள் இந்த மாதிரியான குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்டால், அவர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் ஜாமீன் வழங்கக் கூடாது. இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்ட விவாதம் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலுள்ள விரோதத்தை மீண்டும் வெளிக்காட்டுகிறது.

தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) தமிழ் மக்களின் ஆதிக்கக் குரலாக இருந்தது. இதற்குக் காரணம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக தமிழ் பேசும் பகுதிகளைக் கொண்ட தனி சுதந்திர பகுதிக்கு அவ்வமைப்பு உறுதியளித்ததே. இருப்பினும், தேர்தலுக்குப் பின்னர் சில முக்கிய பிரச்சினைகளில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறந்து செயல்பட்டதால், TULF அதன் அதிகாரத்தை இழந்தது. மொழி, மதம், இனம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அனைத்து சமூகத்தினரும் நியாயமான முறையில் நடத்தப்படுவார்கள் என ஜெயவர்த்தனே அரசு பலமுறை உறுதியளித்தது.  ஆனால் இதற்கு எதிராக கிழக்கு மாகாணத்தின் பொட்டுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கனகரத்னம் கருவூலத்திற்கு சென்றார். தமிழ் பயங்கரவாதிகள் சிலர் அவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டனர். செப்டம்பர் 7, 1978 இலங்கையின் புதிய அரசியலமைப்பை முறையாக அறிவிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், தமிழீழத்திற்கு சுதந்திரம் கிடைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்புக்கு அருகிலுள்ள ரத்னமாலா விமான நிலையத்தில் ஏர் சிலோனுக்கு சொந்தமான அவ்ரோ விமானத்தை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இளைஞர்கள் வெடித்துச் சிதற வைத்தனர். அதே விமானத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற இரண்டு தமிழ் இளைஞர்களால் இந்த செயல் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது.

காவல்துறைக்கு உதவியாக செயல்படும் அனைவரையும் இளம் பயங்கரவாதிகள் கொடூரமாக கொன்றனர்.  இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, பயங்கரவாத இயக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று TULF அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்தது. இருப்பினும் TULF-ன் இளைஞர் பிரிவு தனி தமிழீழ இனத்தை உருவாக்கும் நோக்கில் பயணித்தனர். வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என்று மூத்த தலைவர்கள் வாதிட்டாலும், அதை கேட்கும் பொறுமையில் இளம் தமிழர்கள் இல்லை. இந்தியா இவையனைத்தையும் எச்சரிக்கையுடன் கவனித்துக் கொண்டிருந்தது. 

இந்தியாவிலிருந்து சென்ற தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்க 1978ஆம் ஆண்டில் தாமஸ் ஆபிரகாம் தலைமையில் உருவாக்கப்பட்ட ‘இந்திய உயரதிகாரிகள் குழு’வில் 39 இந்திய ஊழியர்களும், 72 உள்ளூர் மக்களும் இருந்தனர். ஆனால், தோட்டப் பகுதிகளில் தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்ததையடுத்து, 1981 ஆகஸ்ட் 17அன்று நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 1982 ஜனவரி 16-ல் அவசரநிலை முடிவுக்கு வந்தது. லண்டனில் நடந்ததைக் கொண்டு, நிரந்தரமாக தமிழீழம் அடைய முடியாது என சில தமிழ் சார்பு தலைவர்கள் எண்ணினார். TULF குழுவின் எதிர்ப்பாளர்கள், தங்களை தமிழீழ விடுதலை முன்னணிக் குழு என அழைத்துக் கொண்டனர். ஒரு காலத்தில் தமிழீழத்திற்காக ஏங்கி கொண்டிருந்தவர்கள், இன்று பாராளுமன்றத்தில் சிங்களர்களுக்கு அடிமைகளாக இருக்கின்றனர் என குழுவின் தலைவர்கள் கூறினர்.

இரு குழுக்களுக்கிடையேயான கசப்புணர்வு அதிகமாக இருந்ததால், தங்களின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த ஒருவருக்கொருவர் குறிவைக்கத் தொடங்கினர். சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே பகை அதிகரித்துக் கொண்டிருந்த காலத்தில் இந்திய ஜனாதிபதி சஞ்சீவ ரெட்டி 1982 பிப்ரவரி 2 முதல் 7 வரை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அனுராதாபுரத்தில் நடைபெற்ற இலங்கையின் 34வது ஆண்டு சுதந்திரத் தின விழாவில் சஞ்சீவ ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அங்கு விழாவில் பேசிய இந்திய குடியரசு தலைவர், “இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் செழிப்பு அவர்கள் தத்தெடுத்துக்கொண்ட நாட்டின் செழிப்பில்தான் உள்ளது” என்று குறிப்பிட்டார். இலங்கையை தங்கள் வீடாக மாற்ற முடிவு செய்து அந்நாட்டிற்கு குறிப்பிட்ட பங்களிப்புகளை செய்து வருவதைக் கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

“தொடர்ந்து பல காலங்களாக இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்து, பொதுவான கலாச்சாரத்தையும், பொதுவான நாகரீகத்தையும் மரபுரிமையையும் பகிர்ந்து கொண்டு வருகின்றோம். மேலும் காலம், வெளிநாட்டு ஆட்சியின் மாறுபாடுகளைத் தாண்டி இனிவரும் ஆண்டுகளில் இன்னும் வலுவாக இருநாடுகளும் வளரும் என்று நம்புகிறேன்” என்றார்.

இந்திய ஜனாதிபதி சஞ்சீவ ரெட்டி வந்து சென்ற ஒரு வாரத்தில், அந்தப் பகுதியில் அமைதியை அச்சுறுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்தது. பிப்ரவரி 13அன்று அந்த தீவின் வடக்கில் புலிகள் அமைப்பினர் ஒரு ராணுவ ஓட்டுநரை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், புலிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் பணியாளர்களைத் தூண்டி விடுவதும், ராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதுமே பயங்கரவாதிகளின் நோக்கமாக உள்ளது. பொதுமக்களுடனான உறவை வளர்ப்பதற்கு இலங்கை ராணுவம் சிறப்பு கவனம் செலுத்தி வந்தாலும், ராணுவ தேடல்களின்போது தமிழ் குடியிருப்பாளர்கள் கடினமாக நடத்தப்படுவதாக அரசியல் தலைவர்களிடமிருந்து புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனம் புலிகளுக்கு பயிற்சி அளிப்பதைக் கண்டு இலங்கை பயந்தது. 1982 ஜூன் 1 அன்று இலங்கையின் உயர்மட்ட உளவுத் துறை அதிகாரியான ஆர்.ராஜசிங்கம், இந்தியாவில் இன்னும் முப்பது புலிகள் இருப்பதாகக் கூறினார். சென்னையில் இருந்த ஐந்து புலிகள் மே 19 அன்று கைது செய்ததாக ஜனாதிபதி ஜெயவர்த்தனேயிடம் இவர் கூறினார். உமா மகேஸ்வரன், பிரபாகரன் போன்றோர்களுக்கு இந்தியாவில் அரசியலில் இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையை நவ சாம சமாஜா கட்சி முன்வைத்ததாக இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த “தி டெல்லி மிரர்” செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

தமிழ் சார்பு மாநில தலைவர்கள் வெளிநாட்டில் ஒரு அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்தபோது, ஜூலை மாதம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கியது.  ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நியூயார்க்கில் நடைபெற்ற உலக தமிழ் ஈழம் மாநாட்டில், வெளிநாட்டில் இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இது TULF-ன் ஒரு ராஜதந்திர வெற்றியாக கருதப்பட்டது.  நியூயார்க்கில் பேசிய TULF-ன் பொதுச் செயலாளர் ஏ.அமிர்தலிங்கம், ”என்னுடைய நோக்கங்களிலோ அல்லது நம்பிக்கையிலோ மக்கள் சவால் விட வேண்டாம்” என கேட்டுக் கொண்டார்.

 தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்று எப்போது எனக்கு தோன்றுகிறதோ, அன்றைக்கு அதற்கு நம்பிக்கையான ஒருவரிடம் இந்த பொறுப்பை விட்டு கொடுத்துவிடுவேன். முதலாவது தமிழ் பிரதேசம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இலங்கையின் மற்ற பகுதிகளில் இருக்கும் தமிழ் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குடியேற்றப்பட வேண்டும். இரண்டாவதாக, ஈழத்திற்காக தமிழ் மக்கள் சர்வதேச ஆதரவை தேட வேண்டும் என்று கூறினார்.

நியூயார்க்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வேளையில், யாழ்ப்பாணம் நெல்லியாடியில் நான்கு போலீஸ்காரர்களை புலிகள் சுட்டுக் கொன்றது வடக்கு இலங்கையில் பீதியைக் கிளப்பியது.

இந்த சம்பவம் குறித்து ‘தீவு’ என்ற செய்தித்தாளில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில் பாதுகாப்புப் படையினர் பின்வாங்கினர். பயங்கரவாதிகளால் நடந்த இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடும்போதும், விசாரணையின்போதும் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லியாடி தாக்குதலின் விளைவாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ரோந்துப் பணியை காவல்துறையும், இராணுவமும் சேர்ந்து கூட்டாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஜூலை 25ஆம் தேதி இலங்கை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான முழுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும், யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாதிகளை வெளியேற்றுவதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

1982 ஆகஸ்ட் 11 அன்று தேதியிட்ட ஒரு அறிக்கையில், ரயில்வே வாகனங்கள் மற்றும் வண்டிகளில் வெடிபொருட்கள் அடங்கிய பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பார்சல்கள் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு, அதாவது உள்துறை அமைச்சர், அஞ்சல் மற்றும் தந்தி அமைச்சர், மற்றும் உயர் காவல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 27 அன்று, குடியரசு தலைவர்  தேர்தல் மூலம் மக்களுக்கு ஜெயவர்த்தனே ஒரு வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து தமிழ் தலைவர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். திரிகோணமலையில் ஆகஸ்ட் 30 அன்று பேசிய TULF தலைவர் சிவசிதம்பரம்,  ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழ் மக்களுக்கு ஆர்வமும், அக்கறையும் இல்லை, ஏனெனில் சிங்கள நாட்டில் சிங்கள மக்களை ஆட்சி செய்யும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்தான் இது. சிங்கள ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் தமிழருக்கு ஆர்வம் இல்லை’ என்றார். அரசுடனான உறவை பாதுகாத்து கொள்ளும் வகையில், தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இதை நாட்டின் குடியரசு தலைவரிடம் புகார் செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் கூறினார்.

வங்கதேச சுதந்திர போராட்டத்தின்போது மூன்று மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை போன்று இங்கு எந்தவித சம்பவமும் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால், ஈழம் என்ற தனிப் பகுதியை உருவாக்க யாரும் மீந்திருக்கமாட்டார்கள். அதனால், ஈழத்துக்காக போராடும்போது தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது முக்கியம் என கூறினார்.

“சமீபத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தமிழக முதல்வர் எம்.ஜி.ராமசந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். புலிகள் தற்போது பாதுகாப்பாக இருக்கின்றனர்” என எ.அமிர்தலிங்கம் கூறினார்.

தமிழ் பிரிவினருக்குள் உருவான பிளவு, அதன் வலிமையை குறைக்கிறது என்று TULF செய்திதொடர்பாளர் கூறினார். அம்பாரா, மட்டக்களப்பு, திரிகோணமலை போன்ற கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் அமைப்புகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தமிழர்கள் முயற்சி செய்து வருகின்றனர். TULF தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற கேள்விக்கு, பலதரப்பட்ட கருத்துக்கள் வருகின்றன.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் 1982, நவம்பர் 12ஆம் தேதியிடப்பட்ட குறிப்பில், “தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியில் தேர்தல் புறக்கணிப்புக்கான அழைப்பு பெரிதாக மக்களால் ஏற்கப்படவில்லை. தற்போது அதன் தலைமையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலும் யாழ்ப்பாண தமிழர்களின் கூடுதல் அரசியல் நடவடிக்கைகளில் மற்றவர்களுக்கு இடம் கொடுப்பதை தடுக்க இயலாது” என்று கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், அக்டோபர் 20ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜெயவர்த்தனே 52.91 விழுக்காடு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ஜெயவர்த்தனேவின் இந்த வெற்றிக்கு தமிழர்களும் ஒரு காரணம் என இந்திய ஆய்வாளர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த தேர்தலில் வாக்களிக்க 2,80,000 தமிழர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். தோட்டத் தொழிலாளர்களின் பெரிய அமைப்பாக இருந்த சிலோன் தொழிலாளர் காங்கிரஸும் ஜெயவர்த்தனே வெற்றிக்குப் பின்னால் இருந்தது. 11 விழுக்காடு மக்கள் தொகையை இலங்கை தமிழர்கள் கொண்டிருந்ததால், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் தேர்தல் புறக்கணிப்பும் ஜெயவர்த்தனே வெற்றிக்கு பயன்பட்டது. தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் தேர்தல் புறக்கணிப்புக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் 46 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன.

நாட்டின் பாதுகாப்பிற்காக இந்திய அரசின் உளவாளிகள் உலகளாவிய செயல்பாடுகளை மிக உன்னிப்பாக கவனித்து வந்தார்கள். மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பில், “கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதுமான பாதுகாப்பு சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. பதட்டம் அதிகரிப்பு, பாதுகாப்பின்மை அதிகரிப்பு, சர்வதேச சூழல் போன்றவை மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியது. இந்தியா மட்டுமல்ல ஆப்கானிஸ்தான், ஈராக், லெபனான் போன்ற நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவி வந்தது. வல்லரசுகளுக்கிடையேயான போட்டியும் மிகவும் தீவிரமாகிவிட்டது.

இலங்கை உடனான உறவு தொடரும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் நம்பியது. அந்த சமயத்தில் முக்கிய பிரச்னைகள் எதுவும் எழவில்லை. இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிவினரின் நிலையற்ற தன்மை குறித்த கேள்வி மட்டுமே இன்னமும் நிலுவையில் உள்ளது.

1983ஆம் ஆண்டில் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு "ரா" அமைப்பு பயிற்சியும் நிதி உதவியும் அளித்தது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தமிழர்களின் தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கை அரசை எதிர்த்து இந்த அமைப்பு போராடியது. 31 வயதான பிரபாகரன் அந்த அமைப்பின் தலைவராக இருந்தார். 3,000 வீரர்களை கொண்ட கிளர்ச்சிப் படைக்கு தலைமை தாங்கினார். இது இலங்கையில் தமிழ் ஆர்வத்தின் பாதுகாவலராக அவர்களைச் சித்தரித்தது.

கிளர்ச்சிப் படைக்கான பயிற்சிக்கு அதிகளவிலான உதவி தமிழ்நாட்டில் இருந்துதான் சென்றது என மத்திய புலனாய்வு அமைப்பு நம்பியது. தீவிரவாத செயல்களுக்காக நிதி அளிக்க கடத்தல் சம்பவங்கள் நடப்பதாகவும் புலனாய்வு அமைப்பு நம்பியது. இலங்கையில் இருந்த கிளர்ச்சி குழுக்களுக்கு தமிழ்நாட்டின் அமைச்சர்களுடன் மிக நெருக்கமான தொடர்பு இருந்ததாக அமெரிக்க ஏஜென்சி கூறியது. புலிகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு ஆதரவளித்தது அமெரிக்கா. இலங்கைக்கும், தமிழர்களுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த இந்தியா பெருமளவில் முதலீடு செய்துள்ளது என்றும் அவர்கள் நம்பினார்கள். இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் தமிழ் கிளர்ச்சி குழுக்களுக்கு ஆயுதங்களும், அடைக்கலமும் வழங்கப்பட்டன.

இலங்கையில் எழுந்துள்ள இனப் பிரச்சினைகள் இந்தியாவின் அரசியல் எதிர்காலத்துக்கு தீவிரமான பிரச்சினைகளை உருவாக்கும் என்று பிரதமர் இந்திரா காந்தி கருதினார். இலங்கையில் நிலைத்தன்மையை ஏற்படுத்த இந்தியா விரும்பியது. அதேசமயம் இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென்ற இந்திய தமிழர்களின் கோரிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்திய தமிழர்களின் வாக்குகளை இழப்பதற்கு தயாராக இல்லாததால் இலங்கை தமிழர்களுக்கு எதிராக இந்தியாவில் இந்திரா காந்தி அரசு செயல்படவில்லை. அது மட்டுமில்லாமல் தமிழ் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்பட்டது இந்தியாவின் ராஜதந்திர மற்றும் ராணுவ விருப்பங்களுடன் இணைந்ததாகப் பார்க்கப்பட்டது. இலங்கையில் வல்லரசுகள் தலையிடுவதைத் தடுக்கவும் இந்திரா காந்தி விரும்பினார். பாகிஸ்தான், வங்க தேசம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியை இலங்கை எதிர்நோக்கியதாகச் செய்தி கிடைத்ததை அடுத்து இந்திய அதிகாரிகள் பதிலளித்தனர்.

இலங்கை வெளியுறவு அமைச்சர், அமெரிக்காவிடம் ஜெயவர்த்தனே அரசுக்கு ஆதரவு கோரினார்.  ஆயுதங்கள், கொரில்லா தடுப்பு பயிற்சிகள் வழங்கவும் அமெரிக்க அரசிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் கோரிக்கை வைத்தார். பின்னர் அமெரிக்காவால் இந்த பரிந்துரைகள் ஒவ்வொன்றாக மறுக்கப்பட்டன. ஜெயவர்த்தனே அதனை மறுத்தார். இலங்கை சமுதாயத்தை பிளவுபடுத்தும் பதட்டங்களை அமைதியாக தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் விரைவாக குறைந்து வருகின்றன.

 

அமெரிக்க உளவுத்துறை சரியாக இருந்தது என்று ஃபரிதி கூறுகிறார். இலங்கை விஷயத்தில் எங்களுக்கு அதிக பங்கு இருந்தது. இந்திராவும் பின்னர் ராஜிவ் காந்தியும் பிராந்திய ஆதிக்கத்தில் இந்த பெரும் முதலீட்டை விட்டுவிடுவதை கற்பனை செய்தும் பார்த்திருக்க மாட்டார்கள். தனித்தமிழ் ஈழம் தொடர்பாக ராஜிவ் காந்தி மிக உறுதியாக இல்லை என்று ஃபரிதி விளக்குகிறார். இந்த விவகாரத்தில் இந்தியா பேச்சுவார்த்தையாளராக மட்டுமே இருக்குமென்று ரா பிரிவு தலைவர் கிரிஷ் சந்திர சக்சேனாவுடனான பேச்சுவார்த்தையிலும் ராஜிவ் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான இலங்கை உறவு வளர்ந்ததால் ரா அதிகாரிகள் அப்போது மகிழ்ச்சியில் இல்லை. ஜெயவர்த்தனே அரசாங்கம் அமைதியாக 2 நாடுகளுடன் உறவுகளை உருவாக்கியுள்ளது. இது இந்தியாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. முழு தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் மையமாக இருந்த சிங்கப்பூரின் வளர்ச்சி பெருவாரியான இந்திய புலம்பெயர் தொழிலாளர்களை ஈர்த்தது. அவர்களில் பலர் வணிகர்கள். அப்போது பார்சிக்கள், பஞ்சாபிகள், மார்வாடிகள் மற்றும் வங்காளிகள் மொத்த விற்பனை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டிருந்தனர். தென்னிந்தியர்கள் பெரும்பாலும் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். மலாயாவின் ஒருசில முன்னேறிய நகர்ப்புற மையங்களில் ஒன்றாக அப்போது சிங்கப்பூர் இருந்தது. அங்கு 7 முதல் 9 விழுக்காடு இந்தியர்கள் இருந்தனர்.

ரா அமைப்பின் உதவியுடன் விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தப் பகுதியில் சொத்துக்களை சேர்த்தது. விடுதலைப் புலிகள்தான் பிரதானமான பிரிவினைவாத தமிழ் அமைப்பாக உள்ளது என அமெரிக்கா மதிப்பீட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த மதிப்பீடு பின்னாளில் விக்கி லீக்ஸில் வெளியானது.

விடுதலைப்புலிகள் அமைப்பு வடக்கு மற்றும் கிழக்கில் யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, வவுனியா உட்பட 5 பிராந்திய தளபதிகள் கட்டமைப்பைக் கொண்டது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் பிரபாகரனுக்குத் தகவல் தெரிவிக்கும் நேரடி தளபதிகள் இருந்தனர்.  5 பிராந்தியங்களும் பல்வேறு துணைப் பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கும் தனித்தனியே தளபதிகள் இருந்தனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 5 என்ற எண் அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது. அதன்படியே பிரபாகரனிடம் வீரர் ஒருவர் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க 5 தளபதிகள் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரையில் பிரபாகரனே அமைப்புக்குள் அதிக ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பார். எல்லாவற்றுக்கும் யாழ்ப்பாணம் முக்கியப் பங்கு வகித்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்களே விடுதலைப்புலிகள் இயக்கத் தரவரிசையில் முக்கியப் பங்காற்றினர்.  விடுதலைப்புலிகள் அதிநவீன வானொலி ஒன்றயும் நடத்தினர்.

விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் ஆயுதம் மற்றும் பிற பொருட்களின் விநியோகங்கள் அந்தந்த பிராந்திய தளபதிகளின் கட்டுக்குள் இருந்தது. அவர்களின் வாயிலாக துணைத் தளபதிகளுக்கு துப்பாக்கிகள் தோட்டாக்கள் விநியோகிக்கப்பட்டன. நம்பிக்கை, அனுபவம் ஆகிய அடிப்படையில் பிராந்திய தளபதிகளை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தேர்ந்தெடுத்தார்.

தமிழ் கிளர்ச்சியாளர்களை ஆதரிக்க வேண்டிய இந்தியாவின் தேவையையும், இலங்கை அரசாங்கத்தையும் ரா அமைப்பு எப்படி ஒரு சேர சமாளித்து வந்தது என்பது பற்றி ஃபரிதி இவ்வாறு விவரிக்கிறார்.

விடுதலைப்புலிகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பு அவர்களுக்கு SA-7 போன்ற ஏவுகணைகள் வழங்கப்பட்டன, இருப்பினும் அவர்கள் வசதிக்கேற்ப அத்தனை ஆயுதங்களும் வழங்கப்படவில்லை. எனினும், விடுதலைப்புலிகள் நவீன ஆயுதங்களைப் பெற சர்வதே ஆயுதச் சந்தையை அணுகியதை புலனாய்வு அமைப்பின் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

1986ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் சோவியத் யூனியனுடன் தொடர்புடையவர்கள் ஆயுத விநியோகம் செய்ததாக புலனாய்வு அமைப்பின் தகவல் மூலம் தெரிய வருகிறது.

விடுதலைப்புலிகளுக்கு ஆயுத விநியோகம் செய்யப்படும் வழிகளை ரகசியமாக வைத்திருந்தோம். இலங்கை விமானப் படை விடுதலைப் புலிகளின் ஆயுதக் கிடங்குகள் என சந்தேகிக்கும் இடங்களை தாக்கத் தொடங்கின. இதற்கு பதிலடி கொடுக்க முடியாத விரக்தி நிலையில் புலிகள் இருந்தார்கள்.

பனிப்போரின் பதற்ற காலத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் தங்கள் விரோதப்போக்கு சூழ்ச்சியில் சிக்கும் நாடுகள் வாயிலாக வளர்த்தெடுத்தென. அமெரிக்காவின் வியட்நாம் அரசியல் பிரச்சினையில் தங்கள் சுய லாபத்துக்காக சோவியத் யூனியன் தலையிட்டது.

அமெரிக்காவின் எதிர்ப்பை வளர்க்கும் பணியை சோவியத் யூனியன் முன்னெடுத்து வந்தது. சோவியத்தின் முன்னெடுப்பால் தென் ஆப்பிரிக்க பகுதியின் பூர்வகுடிகள் முன்னேற்றம் அடைந்தனர். அங்கு போர்ச்சுகீசிய காலனி ஆதிக்கம் எத்தியோப்பிய புரட்சியால் வீழ்த்தப்பட்டது.

வரலாற்றிலேயே அமெரிக்க பாதுகாப்பு படைக்கு அதிக அளவில் செலவு வைத்த இந்த மோதல் எத்தனை காலம் நீடித்தது என்பது கவனிக்கப்பட வேண்டியது. அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனின் பொருளாதாரத் திட்டத்தின் காரணமாக அது வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இரு பெரும் சக்திகளின் சமநிலையாக இது பார்க்கப்படுகிறது, இதில் எந்த சக்தி அதிக தியாகங்களை செய்து தங்களை சர்வதேச அளவில் நிலைநிறுத்திக் கொள்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டியது.

அமெரிக்காவுடன் இணக்கமாகிவரும் சீனா, அமெரிக்காவின் உதவியோடு இலங்கை விவகாரங்களில் தலையிடுவது இந்திய உளவாளிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. சோவியத்துடன் எதிர்ப்பில் இருந்த அமெரிக்காவுக்கு சீனாவின் நட்பு மிகவும் அவசியமானதாக இருந்தது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஆயுத ஏற்றுமதி நடந்தது. 1981ஆம் ஆண்டு சீன - சோவியத் எல்லைகளை அமெரிக்கா கண்காணிக்க சீனா அனுமதி வழங்கியது. சீனாவின் தொழில்நுட்ப வல்லுநர்களே இதற்கான உதவிகளை செய்தனர். இது அமெரிக்க - சீனாவின் நட்புறவை அப்பட்டமாக காட்டியது.

தைவான் பிரச்சினைகளில் அமெரிக்கா - சீனா இடையே வேறுபாடு இருந்தது. 1982 ஆகஸ்ட் மாதம் தைவானுக்கு ஆயுத விநியோகம் செய்வது மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்படும் என அமெரிக்கா அறிவித்தது. இதன்பிறகே சீனா நிம்மதி பெருமூச்சு விட்டது. தெற்காசிய நாடுகள் மீதிருந்த அக்கறையே அமெரிக்க - சீன உறவு வலுப்பெற காரணமாக இருந்தது. அண்டை நாடுகளுடனான தனது உறவு பாதித்த பின்பே அமெரிக்க - சீன உறவு பற்றி இந்தியா அறிந்தது.

சோவியத் எதிர்ப்பு காரணமாக தெற்காசிய நாடுகளுடனான தங்கள் உறவை சீனா பலப்படுத்தி வந்தது. அதிபர் சாவோ சியாங்கின் தெற்காசிய நாடுகள் பயணம் இதற்கு உந்துதலாக அமைந்தது.

கிழக்கு ஜெர்மனி, ஆப்கானிஸ்தான், அங்கோலா, கியூபா உள்ளிட்ட இடங்களில் நிலவிய சூழல், இலங்கையை விட்டு முக்கிய சக்திகளை விலகியிருக்கச் செய்தது என பவன் அரோரா தெரிவிக்கிறார். மேலும், ரஷ்யா விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ரகசியமாக சில உதவிகளை செய்தது. ஆனால், தனி ஈழம் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த அது எந்த யோசனையையும் வழங்கவில்லை. மற்றொரு புறம், இலங்கை அரசாங்கம் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த மேற்கத்திய நாடுகளிடம் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து ஆலோசித்தது.

பொருளாதாரச் சூழல் காரணமாக, இலங்கை தெற்காசிய நாடுகளின் அமைப்பில் சேர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. திரிகோணமலையில் உள்ள எண்ணெய் கிடங்கில் அமெரிக்காவுக்கு எண்ணெய் சேமிக்க அனுமதி வழங்கியது, இலங்கையில் மேற்கு சார்பு நடவடிக்கைகள் காரணமாக இந்தியா அதனை எதிர்த்தது. அது மட்டுமல்லாமல் இலங்கையில் இந்தியாவின் திட்டங்கள் எதுவும் சாத்தியமாகவில்லை. ராணுவ தலையீட்டில் தொலைநோக்கு பார்வையில்லை, அந்நிய நாட்டில் போய் கொரில்லா முறையில் போரிட்டது மாபெரும் தவறு.

இலங்கையில் நிலவும் சூழலில் நாம் அமைதியான உறவை தொடர ஸ்திரத்தன்மை அவசியம், அங்கு கிளர்ச்சி செய்வது தேவையில்லாதது என்கிறார் பவன். இலங்கையுடன் இந்தியாவுக்கு வலுவான உறவு அமையும் நிலை இருந்தது. ஆனால், அதற்காக நாங்கள் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருந்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைப்புலிகளால் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார் என சிஐஏ தெரிவிக்கிறது.

கொழும்புவில் இலங்கை அரசு நடவடிக்கைகளால் பயங்கரவாத தாக்குதல் அதிகரிக்கும் சூழல் நிலவியது. அதிபர் ஜெயவர்த்தனே தமிழ் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. விடுதலைப்புலிகள் வலுப்பெறத் தொடங்கினர். யாழ்ப்பாணத்தைத் தலைமையாகக் கொண்டு பல வாரங்கள் இயங்கினர். அப்போது பிற அமைப்பை சேர்ந்தவர்களையும் விடுதலைப்புலிகள் தங்கள் பக்கம் ஈர்த்தனர். சிங்கள மார்க்சியவாதிகள் மூலம் இலங்கை அரசின் பொருளாதாரத்தை முடக்கும் பணிகளையும் அவர்கள் செய்தனர்.

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்ததன் காரணமாக 10 லட்சம் இலங்கை இஸ்லாமியர்கள் தமிழர்களுக்கு எதிராக திரும்பினர். இந்தியாவின் ராணுவ தலையீடு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என இலங்கை அரசு நினைத்தது. இந்தியா இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, வெளிநாட்டு முதலீடுகளை தடுத்து இலங்கை அரசாங்கம் பொருளாதாரம், அரசியலில் இந்தியாவைச் சார்ந்து இயங்கும் சூழலை உருவாக்கியது.

இலங்கையில் இந்திய ராணுவத்தின் செயல்பாடு பற்றி சிஐஏ கணித்தது தவறவில்லை. இந்திய ராணுவம் அங்கு கிளர்ச்சியை ஏற்படுத்த தயார் நிலையில் இருந்ததாக சிஐஏ தெரிவிக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பூர்வகுடி கிளர்ச்சியாளர்களைக் கையாண்டதன் மூலம் இந்திய ராணுவம் கிளர்ச்சியை கையாள பழகியிருந்தது. இலங்கையில் இந்திய ராணுவத்தினர் ஆயுதம் ஏந்தி நிற்பது, சிங்களர்கள், தமிழர்கள் என இரு தரப்புக்கும் அச்சமான விஷயமாகவே இருந்தது. இந்தியப் படை சில பிரதேசங்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்து அமைதியை நிலவச் செய்தது, கொழும்பு ராணுவத்துக்கு ஆறுதலாக இருந்தது.

புது டெல்லி தமிழீழ விடுதலையை எதிர்க்கும் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், சிங்கள ராணுவத்தை எதிர்த்தது போலவே இந்திய ராணுவத்தை தமிழ் போராளிகள் எதிர்க்கக்கூடும். மீண்டும் அப்பகுதிகளில் வன்முறை வெடிக்கும், ஆனால் அதற்கு மத்தியில் இந்திய ராணுவத்தினர் ஆயுதம் ஏந்தி நிற்பார்கள்.

மிக அவலமான உளவு வேலையும், கருணையை காத்தலும்:

ரா உளவுப் பிரிவு செயல்பாடுகள் இலங்கையில் நடைபெற்றது மிகவும் அவலமானது. கிளர்ச்சியை ஆதரித்த இலங்கை அரசின் முடிவு, இந்திய அரசுக்கு சற்று லாபகரமானதாக இருந்தது. 1983ஆம் ஆண்டு கிளர்ச்சியை ஆதரித்த இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய அரசாங்கம் செயல்பட்டது. இதனால் பூர்வகுடி தமிழ் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. இதனால் போர் நீடித்தது. சர்வதேச அமைப்புகள் இலங்கையில் நடக்கும் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எண்ணியது.

இதனால் மஹிந்த ராஜபக்சேவுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆதரவு தெரிவித்தது. எனவே தமிழ்நாட்டில் அதன் கூட்டணி கட்சியான திமுகவின் தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான கருணாநிதி இதற்கு ஆதரவு தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக மஹிந்த ராஜபக்சேவுக்கு திமுக தலைவர் ஆதரவு அளிப்பது குறித்து 2008 அக்டோபர் 27 அன்று அமெரிக்க தூதரகம் கேபிள் விவாதம் ஒன்றை நடத்தியது.

2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு தாக்குதல் நடத்தியபோது, தமிழ் பேசக் கூடிய ஒரு படகு உரிமையாளரும், ஒரு பணிப்பெண்ணும்தான் ரா பிரிவினருக்கு மிகவும் பயனுள்ளவர்களாக இருந்தனர். இந்திய பணிப்பெண் சுந்தரி மூலம் நடைபெற்ற ஆபரேஷன் சத்தோரி குறித்து எந்த ஆவணமும் இல்லை. 50 வயதான தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் அந்தப் பெண் ரா அமைப்பில் இருந்து கொண்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். அந்த சமயத்தில்தான் பாதுகாப்பிற்காக உள்ளூரிலிருந்து தகவல் அளிப்பவர்களைச் சந்தித்து பேசுவதை நிறுத்தி கொண்டது இந்திய உளவு நிறுவனம் என்று அவினாஷ் கூறினார். அதனால், இதற்கு அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான், எங்களுக்கு தேநீர் பரிமாறிக் கொண்டிருந்த சுந்தரியை ஒரு அதிகாரி திடீரென்று கவனித்தார். இவரை வைத்து அந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட சொத்துக்களை ரகசியமாக இடமாற்றுவதுதான் இந்த நடவடிக்கையின் மிகவும் பயமுறுத்தும் செயலாக இருந்தது. நாங்கள் இரு தரப்பிலும் உள்ள சொத்துக்களை காப்பற்ற வேண்டியிருந்தது.  மேலும் இலங்கை உளவு துறையின் பலம் மற்றும் பலவீனங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டி இருந்தது .

போர்க்களத்தில் மக்களின்  நடமாட்டத்திற்கு இலங்கை அரசு தடை விதித்தது. இலங்கை அரசாங்கம் மற்றும் புலிகள் என இரு தரப்பினரும் தகவல்  அளிப்பவர்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். விடுதலைப்புலிகளின் ரகசிய உளவுப்பிரிவு  மிகவும் வலுவானது. அதே நேரம் போர்க்களத்தை விட்டு வெளியேறும் எந்த ஒரு தலைவரும் சுட்டுக் கொல்லப்படவேண்டும் என்ற நிலைப்பாடும் இருந்தது. இலங்கை உளவுத்துறையின் பலவீனங்களை ரா பிரிவினர் அறிந்திருந்தாலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராஜபக்சேயின் உளவாளிகள் ஒரு கண்  வைத்திருப்பதை  கவனிக்கத் தவறவில்லை. கோசலா மூலமாக சுந்தரிக்கு போலியான ஆவணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்மூலம் சுந்தரி போர்க்களத்திற்குள் செல்லவும், மோசமாக காயமடைந்தவர்களுக்கு மருத்துமனையில் உதவுவதற்கும் இது பயன்படும். யாழ்ப்பாணத்தை சுற்றி சாதகமற்ற சூழ்நிலை நிலவிவந்தது. இருப்பினும் சுந்தரி தனது மீட்பு பணிகளில் இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்கும் அளவிற்கு பயிற்சி பெற்றிருந்தார்.

சத்தோரி  ஆபரேஷனில்  சுந்தரியின்  பங்கு முக்கியமானது. அவர் ஒரு வழக்கமான உளவாளி இல்லை என்றாலும், தொழில் தெரிந்த உளவாளியாக இருந்தார். ஆம்புலன்ஸ் ஓட்டுநரான அசங்கா மற்றும் விலங்கு ஆர்வலர் ராமானுஜ்  ஆகியோரின் உதவியுடன் கோத்தபய ராஜபக்சேவின் தாக்கவேண்டிய பட்டியலில் இருந்த பல தலைவர்களை சுந்தரியால் மீட்க முடிந்தது. இலங்கை ராணுவத்திற்கு செயற்கைக்கோள் படங்களை எடுத்துக் கொடுத்து ரா பிரிவு உதவியது.  சுந்தரி அசங்கா மற்றும் ராமானுஜ் ஆகியோர் அரசியல் சொத்துக்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றும் பணியை மேற்கொண்டு இருந்தனர். இலங்கை ராணுவம் மற்றும் அதன் உளவுத்துறையிடம் படங்களை கொடுப்பதற்கு முன்னரே, சுந்தரி இருக்கும் புகைப்படங்கள் இருட்டாகப்பட்டன.

இதற்காக கோசலா, இராணுவத்தில் உள்ள சில மூத்த பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்தார், இதனால் மக்கள் பாதுகாப்பாக போர் மண்டலத்திலிருந்து வெளியேற முடியும். கோசலாவின் அதிகாரப்பூர்வ உதவியாளரான அவினாஷ் சிங்கப்பூர், கம்போடியா, மாலத்தீவு மற்றும் புதுடெல்லியில் அமர்த்தப்பட்டுள்ள இந்திய உளவாளிகளுக்கு இது குறித்த அறிக்கையை வழங்கினார். கோத்தபய  ராஜபக்சே மற்றும் அவர்களை பின்பற்றுபவர்களைப் பற்றி அவினாஷுக்கு பயம் இருந்தபோதிலும், கோசலாவின் உதவியுடன் இந்திய நிறுவனம் மக்களை காப்பாற்றும் என்று அவர் நம்பினார் .

சந்தேகத்திற்குரிய எதிரி என்று நினைப்பவர்களை சித்திரவதை செய்வதில் கோத்தபயவுக்கு நிகர் யாரும் இல்லை. இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களை இவ்வளவு நாள் வாழ்க்கையில் பார்த்ததில்லை என அரோரா கூறினார் .

அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஆபத்தான தாக்குதல்களை பார்த்ததற்கான ஒரே ஆதாரம் ஆம்புலன்ஸ் ஓட்டும் அசங்கா என்பவர்தான். 2006ஆம் ஆண்டில் யுத்தம் தொடங்கியபோது, அவர் தென் மாகாணங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். இலங்கை விமானப்படை சிங்கள மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க புலிகளை தாக்க இலக்கு வைத்தது. மனித உரிமை மீறல்கள் நடப்பது உண்மை என்றும், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்க தனது படைகளுக்கு பயிற்சியளிக்கபட்டதாக மஹிந்த ராஜபக்சே அளித்த உறுதிமொழிகள் வெறும் உதட்டளவில் மட்டுமே இருந்தது என்பதை அசங்கா  அறிந்திருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் கோபமடைந்தாலும், ஒரு நாள் வரும் என்ற காத்திருப்போடு இராணுவத்தின் மருத்துவப் பிரிவில் தொடர்ந்து பணியாற்றினார்.

சுந்தரியும், அவரது குழுவின் மீதும் கோத்தபய ராஜபக்சே ஆட்கள் குறிவைத்து வருவதால், அவர்கள் செய்யக் கூடிய வெளியேற்ற பணி முழுமையான ரகசியமாக நடந்தது. அரோராவின்  கூற்றுப்படி  மகிந்த ராஜபக்சே பல சந்தர்ப்பங்களில், தனது புலனாய்வுப் பிரிவினருக்கு பிரபாகரன் இருக்கும் இடம் குறித்து துல்லியமாக தெரியும் என்று கூறினார். ஆனால் உண்மையில் புலிகள் குறித்த தகவல்களுக்கு அவர்கள் இந்திய ஆதாரங்களையே நம்பியிருக்கின்றனர்.

2009 மே மாதம் துப்பாக்கிகளின் சத்தம் இல்லாமல் இருந்தது. ஏனெனில், மே 19 அன்று நாடாளுமன்றத்தில் ராஜபக்சே, இலங்கை அரசு வெற்றி பெற்றதாக அறிவித்தார். அதோடு தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கான முன்னேற்ற நல திட்டங்களையும் அறிவித்தார். தமிழீழத்திற்காக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்வதை புலம்பெயர்ந்தவர்கள் நிறுத்த வேண்டும் என கூறினார். இது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே தான் பார்ப்பதாக ராஜபக்சே தெரிவித்தார். ஏனெனில், பல ஆண்டுகளாக நடந்துவரும் ரத்தகளரிப் போரினால் அம்மக்கள் எதையும் பெறவில்லை. இலங்கை அரசுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல் நடத்தி ஒரு தனி மாநிலம் பெற்று தருவதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து புலிகள் அமைப்பு இலங்கை தமிழ் மக்களை இவ்வளவு காலம் ஏமாற்றியுள்ளது என வாதாடினார். அதனால், புலிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த பகுதியிலுள்ள மக்களுக்கு நல திட்டங்கள் செய்ய முடியாமல் போனது. மக்களும் அதிக இன்னலுக்கு ஆளானர்கள். தமிழ் மக்கள் கிளர்ச்சியர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், இந்த வெற்றியின் மூலம் அவர்கள் பிரதான சமூகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டார்கள் என்றும் ராஜபக்சே கூறினார். இலங்கை ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் குறித்து சர்வதேச குழுக்கள் விமர்சனம் செய்ய தயாராக இருப்பதை அறிந்து வைத்திருந்த ராஜபக்சே, இலங்கை தொலைக்காட்சிகளில் பிரபாகரனின் இறந்த செய்தியும், புகைப்படமும் ஒளிபரப்பப்பட்டதையடுத்து ஒரு பெரிய தாக்குதலை தொடங்கினார்.  எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிட்டு சொல்லாமல், இருபது ஆண்டுகளாக புலிகள் நடத்திய தாக்குதலில் அனைத்து மக்களையும், குறிப்பாக தமிழ் மக்களையும் இலங்கை அரசு அக்கறையுடன் கவனித்து கொண்டது. அதனால், தமிழ் மக்களை நல்ல முறையில் நடத்த வேண்டும் என யாரும் ஆலோசனை கூற தேவையில்லை என கூறினார்.

அரோராவின் கூற்றுப்படி, 2009 ஏப்ரலில் பிரபாகரன் கொலை செய்யப்படுவதற்கு முன், புலிகளின் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என இந்தியா கேட்டுக் கொண்டது. புலிகள் மீது நடத்தப்படும் போரை நிறுத்தக் கோரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஏப்ரல் 24 அன்று கொழும்புக்கு சென்றனர். அவர்களின் வருகையும் முல்லைத்தீவில் இலங்கை ராணுவத்தின் நடவடிக்கையும் ஒத்துபோனது. பிரபாகரனை உயிருடன் பிடிப்பதுதான் அவர்களின் முதன்மை நோக்கம். போர் முடிவடைந்தவுடன், போரினால் சேதமடைந்த இடங்களை சீரமைத்து தருவதாக ராஜபக்சேவிடம் நாராயணன் உறுதியளித்தார். அதற்கு பதிலாக, தான் எந்தவொரு தாக்குதலிலும் ஈடுபடமாட்டேன் என கூறிய ராஜபக்சே, பிரபாகரனும், அவரைச் சேர்ந்த 30 பேரும் இறந்துவிட்டனர் என்ற தகவலை இலங்கை ராணுவத்தின் தலைமை சரத் பொன்சேகா தெரிவிக்கும்வரை தாக்குதலை கைவிடவில்லை. மே மாதத்தில் போர் முடிவடைந்தவுடன், எரித்திரியாவில் புலிகள் ஒரு வலுவான தளத்தை உருவாக்கியுள்ளது என்றும், தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவிலிருந்து படகு கட்டும் பணிக்கு ஆட்களை புலிகள் பயன்படுத்தியுள்ளன என்றும் கோத்தபய கூறினார். இலங்கைக்குள் ஊடுருவிய சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை ரா பிரிவு வழங்கியதாகவும், இலங்கையும் இந்திய உளவு நிறுவனத்தின் உதவியுடன் சில நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் ஒப்புக் கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவை பற்றிக் கூறுவதற்கு இது போதுமானதாக இருந்தது.

காங்கிரஸ் தலைமையிலான அரசு(UPA) இலங்கையில் அதிக முதலீடுகள் செய்திருந்தாலும், அதில் குறைந்தவற்றை மட்டுமே வெளியே எடுக்க முடியும் என அரோரா கூறினார். உள்நாட்டுப் போருக்கு பின்னர் கொழும்புவில் நடந்த இந்தியாவின் பணிகள், இலங்கை அரசாங்கத்தின் மீது ஒரு பிடியை தக்க வைத்து கொள்வதற்கு பயனற்றதாக மாறிவிட்டது. ரா அமைப்பால் சேகரிக்கப்பட்ட தகவல்களை இந்திய தூதரகத்தின் உயரதிகாரி ஒருவர் வெளியே கசியவிட்டுள்ளார். உளவுத் துறையின் தலைவர் கே.சி.வர்மா அவர்களின் தொடர் போராட்டத்திற்கு பின்னரே, அந்த அதிகாரியை பணியிலிருந்து நீக்க முடிந்தது.  வர்மாவின் முன்னோடியான அசோக் சதுர்வேதியும் இலங்கை மீது அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், வர்மா இலங்கையை ரா பிரிவின் கட்டுபாட்டில் வைத்திருக்க விரும்பினார். சீனாவின் வளர்ந்து வரும் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை அளித்தபோது, இந்திய அதிகாரிகள் வேறொரு காரியத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். 2010ஆம் ஆண்டில் இலங்கையில் சீன இருப்பு ஆரம்பிப்பது குறித்து அலட்சியமாக இருப்பது புதுடெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்நாட்டில் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான ஒரு பெரிய ஒப்பந்தத்தை சீனர்கள் கைப்பற்றும் நிலையில் இருக்கின்றனர். ஆனால், இந்த ஒப்பந்தம் எப்படியும் இந்தியர்களுக்கே கிடைக்கும் என உறுதியாக இருந்தனர். வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தூதுக்குழுவுடனான பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பின்போது, இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட ஆவணத்தை பிரதமர் அலுவலகத்துக்கு தொலைநகல் மூலம் ரா நிறுவனம் அனுப்பி வைத்தது. வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 2010 ஜனவரி தேர்தலில் கிடைத்த வெற்றி நாட்டின் நிலுவையிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் புரிந்துணர்வோடு கையாளுவதற்கும், தேசிய நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் ஒரு வரலாற்று வாய்ப்பாக இந்த தேர்தல் வெற்றி அமைந்துள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் ராஜபக்சேவிடம் கூறினார்.

நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றத்திற்காக இந்தியா வழங்கிய ரூபாய் 500 கோடி உள்பட இந்தியாவின் தாராளமான நிதியுதவிகளுக்கு ராஜபக்சே பாராட்டு தெரிவித்தார். மேலும், இடம்பெயர்ந்தோர்களுக்கு நிரந்தரமான குடியேற்றத்துக்கான ஏற்பாடுகள் விரைவில் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.

இரு நாடுகளுக்குமிடையே அமைதியான வார்த்தைகள் பரிமாறி கொள்ளப்பட்டாலும், இவர்களுக்கு இடையேயான உறவு புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் உள்ள அழகான படத்தில் இருப்பதைப் போல் இல்லை என்பது ரா அமைப்புக்கு தெரிந்திருந்தது.  ராஜபக்சே தந்திரமாக இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தானோடும், சீனாவோடும் ரகசியமாக நல்ல உறவு வைத்திருந்தார். சீனாவுடன் உறவை புதுப்பித்துக்கொள்ள எந்த நேரத்திலும் ராஜபக்சே பெய்ஜிங்கிற்கு வரலாம் என ரா பிரிவினர் விழிப்புணர்வோடு இருந்தனர்.

பெய்ஜிங் மற்றும் இஸ்லாமாபாத்தில் கொழும்புவின் திட்டம் குறித்து ரா பிரிவினர் விசாரிக்கத் தொடங்கினர். வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் பணிபுரியும் தொடர்பு பிரிவினர் அளித்த தகவல்படி, உள்நாட்டு போரின்போது இலங்கை ராணுவத்திற்கு சீனா ரகசியமாக ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் வழங்கியதாகவும், தற்போது சீனா, இலங்கையில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கையில் தனது கால்தடத்தை இன்னும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை பெய்ஜிங்கிற்கு உள்நாட்டு போர் வழங்கியுள்ளது.  சீனா, இலங்கை ராணுவத்திற்கு போர் விமானங்களை வழங்கியது மட்டுமில்லாமல், விமானிகளுக்கு இஸ்லாமாபாத்தின் உதவியுடன் பயிற்சியும் அளித்துள்ளது.

சீனர்கள் குறித்து எச்சரித்தபோது, மூத்த அதிகாரி ஒருவர் இதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். சீனர்கள் சாலை அமைக்கட்டும், நாம் அந்த சாலையில் பேருந்துகளை விடுவோம் என கூறினார். இது குறித்து நாங்கள் புகார் அளித்தபோது, உடனடியாக அவர் டெல்லியில் ஒரு சிறிய இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

PAS என்ற குறியீட்டு பெயர் கொண்ட அதிகாரி, ஸ்காட்ச் மீது அதிக விருப்பம் கொண்டவர்.  இலங்கையில் இந்தியாவின் நலன்களை பாதுகாக்கும் அக்கறையை விட விருந்துகளில் கலந்துகொள்வதில்தான் அவருக்கு அதிகம் ஆர்வம். இது குறித்து பலமுறை இந்திய உளவுத் துறை புகாரளித்தது. ஒருமுறை எங்களிடம் அவர் ஆதாரத்துடன் மாட்டிக் கொண்டார். அதனால், அவரை இலங்கையிலிருந்து வெளியேற்றிவிட்டோம் என அவினாஷ் கூறினார்.

இலங்கையுடனான உறவை வலுப்படுத்தவும், சீனாவுக்கு எதிர்ப்பை காட்டுவதற்கும், 2012, ஜனவரியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கொழும்புக்கு வந்தார். முதலில் அரியலை, யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு வீட்டுமனை பத்திரங்களை அளித்தார். பின்பு தென் இலங்கைக்குச் சென்று இந்திய அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தெற்கு ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியை தொடங்கி வைத்தார். ஆனால், இது மிகவும் தாமதமானது. ஏற்கனவே சீனா இலங்கையில் தன்னுடைய பெரிய வேலைகளை ஆரம்பித்து இருந்தது.

விடுதலை புலிகள் இயக்கம் 2.0?               

யாழ்ப்பாணத்திலுள்ள சாம்பல்களிலிருந்து என்ன வெளிப்படும்? இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் எழும்புமா? இலங்கையின் நிலைமையை கண்காணித்து வரும் உளவுத் துறையினர், வெளிநாட்டிலுள்ள மீதமுள்ள புலிகளால் விடுதலை புலிகள் இயக்கம் 2.0 என்பது சாத்தியமாகும் என நம்பினர். சிங்கப்பூர், கம்போடியா, கனடா மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கிளர்ச்சி அமைப்புகள் செயல்பாட்டில் இருப்பதால், அவைகள் மூலம் தமிழீழத்திற்கென்று உளவியல் போர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இலங்கையின் உள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த போதுமானதாக இல்லை. பிரபாகரன் இறப்பு மற்றும் பனிரெண்டு ஆயிரம் புலிகள் கைதுக்கு பின்னர், கம்போடியா, கனடா மற்றும் சிங்கப்பூரிலிருந்து புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகலாம் என கிசுகிசுக்கப்பட்டன.

அஜீத் ஷா என குறியீடு பெயர் கொண்ட உளவாளி 2015ஆம் ஆண்டு கம்போடியாவுக்கு சென்றார். அவர் அனுபவமிக்க செயல்பாட்டாளர். உள்நாட்டு போருக்கு பின், புலிகள் இயக்கத்தின் தலைவர்களை களையெடுக்கும் பணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீதமிருந்த புலிகள், புது வாழ்க்கையை தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும்,  அவர்களால் நடத்தப்பட்டு வந்த பள்ளிகளில் தமிழீழம் பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு வரலாறாக மாறியுள்ளது. இலங்கையில் அவ்வியக்கத்தை தரைமட்டமாக்கிய ஆறு ஆண்டுகளிலேயே, அவ்வியக்கம் பாடப்புத்தகத்தின் ஒரு பகுதியாக இடம்பிடித்துவிட்டது என ஷா கூறினார்.

அவர்கள் மீண்டும் எழுச்சியை கட்டமைக்க வல்லவர்கள் அல்ல. ஆனால், இது தமிழீழ பிரச்சினையை சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உயிர்ப்போடு வைத்திருக்க எடுக்கும் முயற்சியேயாகும். இவையெல்லாம் இலங்கைக்கு உண்மையான அச்சுறுத்தல்களே இல்லை என ஷா கூறினார்.

ஆனால், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்( TGTE) என அறியப்படும் சர்வதேச அமைச்சகம், சொந்த நாடு, வீடு, சுயநிர்ணய உரிமை போன்ற அரசியல் அடிப்படை கொள்கைகளின் அடிப்படையில் தமிழர்களுக்கு சுதந்திரத்தை வாங்கி தருவதை நோக்கமாக கொண்டிருந்தது. நியூயார்க்கில் செயல்பட்டு வரும் இந்தக் குழு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலுள்ள தமிழ் மக்களின் நீதிக்காக போராடுவதாக கூறியது. மேலும், தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கவும் ஏற்பாடு செய்தது.

2009 உள்நாட்டு போருக்கு பின், இலங்கைத் தீவில் உள்ள தமிழ் மக்கள் போல உலகளவில் பல நாடுகளில் வாழும் மில்லியன் தமிழர்களைக் கொண்டு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE).

132 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையே சர்வதேச அளவில் இரண்டு முறை தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த அரசாங்கம் இரு சட்டமன்றங்களையும், ஒரு அமைச்சரவையையும் கொண்டது. இது பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு நாடாளுமன்றங்களில் இதன் நாடாளுமன்ற கூட்டங்களை நடத்தியது.  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு, அதன் அரசியல் நோக்கங்களை அமைதியான வழிமுறைகளில் மட்டுமே உணர வேண்டும் என்று கட்டளையிடுகிறது. TGTE-யின் பிரதமர் நியூயார்க்கைச் சேர்ந்த வழக்கறிஞர் விசுவநாதன் ருத்ரகுமாரன். 2006 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராக மஹிந்த ராஜபக்சே மற்றும் அவரது அரசாங்கம் செய்த அட்டூழியங்களுக்கு நீதி கேட்டு அழுத்தம் கொடுக்கும் குழுவாக TGTE இருந்தது. மீதமிருக்கும் புலிகள் குறைந்தளவில் எரிச்சலூட்டக்கூடிய நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். ஆனால், அவர்களால் ஒரு பிரதேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது.

முள்ளிவாய்க்கால் தாக்குதல் நடந்த நேரத்தில் டெல்லியிலும், சென்னையிலும், கொழும்புவிலும் என்ன நடந்தது என்பதை நான் அறிந்தவற்றை விரைவில் சொல்கிறேன்.....(தொடரும்).

 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-11-2020.
 #rமுள்ளிவாய்க்கால் துயர நேரத்தில் நடந்தது என்ன?  
#KsRadhakrishnan
#KSR_Posts
 

 

 

 

 

 

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...